Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவார்'- ஜோசிய கணிப்பை ட்விட்டரில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ட்விட்டரில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா

ஜோசிய கணிப்பை ட்விட்டரில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா

பட மூலாதாரம், TWITTER

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனை தோற்கடித்துவிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என ஜோசியத்தில் கணிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் முக்கிய தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் பைடனுக்கும் டிரம்புக்கும் கடுமையான போட்டி நிலவும், ஆனால் இறுதியில் டிரம்பே வெற்றி பெறுவார் என ஜோசியத்தில் கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-54835641

  • கருத்துக்கள உறவுகள்

இது Trump க்குத் தெரியுமா 😂

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

இது Trump க்குத் தெரியுமா 😂

Image may contain: 1 person

ட்ரம்ப்... கவலையுடன், சாரத்துடன் இருப்பதால்... அவருக்கு தெரியாது எண்டு நினைக்கிறன். :grin: 🤣

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person

ட்ரம்ப்... கவலையுடன், சாரத்துடன் இருப்பதால்... அவருக்கு தெரியாது எண்டு நினைக்கிறன். :grin: 🤣

மூன்றாம் உலக நாடுகளில் உள்ளவர்கள் எந்த உயரத்திற்குப் போனாலும் சிலவற்றை கைவிட விரும்புவதேயில்லை. அதில் மகிந்திராவின் ஜோசியமும் Trump ன் சாறமும் சில... 😂😂

இவையின்ற லட்ச்சணத்தில சீனாவுக்கு சவால் என்று ஊளை வேறை!

  • கருத்துக்கள உறவுகள்

இவரை பிடித்து வெளுக்கோணும்😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

இவரை பிடித்து வெளுக்கோணும்😂😂😂

நீங்களும் ட்ரம் வரும் எனும் கூட்டமா யார் அந்த நாட்டில் வந்தாலும் வெளிவிவகார கொள்கை மாறாது அக்கு .

ஜனநாயகம் எனும் சுத்து மாத்து  உள்ளுக்குள் தங்களை வளர்க்கும் சர்வாதிகாரம் .

இலவச விசுக்கோத்து தின்று பட்டம் எடுத்தவர்களுக்கு அவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
On ‎08‎-‎11‎-‎2020 at 00:50, பெருமாள் said:

நீங்களும் ட்ரம் வரும் எனும் கூட்டமா யார் அந்த நாட்டில் வந்தாலும் வெளிவிவகார கொள்கை மாறாது அக்கு .

ஜனநாயகம் எனும் சுத்து மாத்து  உள்ளுக்குள் தங்களை வளர்க்கும் சர்வாதிகாரம் .

இலவச விசுக்கோத்து தின்று பட்டம் எடுத்தவர்களுக்கு அவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு .

டிரம்ப் வர வேண்டும் என்றா, நானா? ...கமலா ஜனாதிபதியாய் வந்தால் கூட எதுவும் மாறாது ...ஆனால் கோத்தா சகோதரர்கள் நினைத்தால் மாற்றலாம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, ரதி said:

டிரம்ப் வர வேண்டும் என்றா, நானா? ...கமலா ஜனாதிபதியாய் வந்தால் கூட எதுவும் மாறாது ...ஆனால் கோத்தா சகோதரர்கள் நினைத்தால் மாற்றலாம் 

மை டியர் சிஸ்டர்!வண்  குவைச்சன்?
என்னத்தை?
எதை?
மாத்துவினம்? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

டிரம்ப் வர வேண்டும் என்றா, நானா? ...கமலா ஜனாதிபதியாய் வந்தால் கூட எதுவும் மாறாது ...ஆனால் கோத்தா சகோதரர்கள் நினைத்தால் மாற்றலாம் 

அந்த தெளிவு இருந்தால் சரி கெனியா வம்சாவளி அமெரிக்கா  ஜனதிபதி ஆகி கெனியா வுக்கு செய்த நன்மை என்ன என்று தேடினால் புரியும் அதைவிட்டு கமலாக்காவால் இந்தியாவுக்கு விடிவு வந்தது போல் குதிக்கினம் மோட்டு  கூட்டங்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

Bild

இன்னுமும் இந்தாள்  நினைக்குது வடகிழக்கு தமிழரை முட்டாள்கள் என்று .

இந்தாளுக்கு யாராவது  போன் அடித்து சொல்லிடுங்க உங்கடை கொழும்பு வீட்டை அரசு உடமை யாக்கி விட்டுது என்று அதோட தமிழருக்கு விடிவு செய்தி வரும் .

  • கருத்துக்கள உறவுகள்
On ‎09‎-‎11‎-‎2020 at 21:31, குமாரசாமி said:

மை டியர் சிஸ்டர்!வண்  குவைச்சன்?
என்னத்தை?
எதை?
மாத்துவினம்? 

எங்களுக்கு நாடோ அல்லது தீர்வோ தருவது உலக நாடுகளின் கையில் இல்லை ...அவர்கள் ஒரு போதும் எமக்கான தீர்வை பெற்று தர மாட்டார்கள் ...இலங்கையின் அமைவிடம் அப்படி ...ஆனால் சிங்களவர்களோ,புத்த பிக்குகளோ அல்லது கோத்தா சகோதரர்களோ நினைத்தால் எமக்கான தீர்வை தரலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

பைடனோ, கமலாக்காவோ தீர்வு தர முதல் ஈழத்தமிழர்கள் இது வரை தங்கள் தீர்வுக்காக செய்தது என்னவென்று தேடிப் பார்த்தால் ஒன்றும் இல்லை! தெரிந்தோ தெரியாமலோ விட்ட பிழைகளையே சாதாரணமாகப் பேச முடியாத நிலையை முதலில் மாற்ற வேண்டும்! அது வரை எதுவும் நகராது! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
48 minutes ago, ரதி said:

எங்களுக்கு நாடோ அல்லது தீர்வோ தருவது உலக நாடுகளின் கையில் இல்லை ...அவர்கள் ஒரு போதும் எமக்கான தீர்வை பெற்று தர மாட்டார்கள் ...இலங்கையின் அமைவிடம் அப்படி ...ஆனால் சிங்களவர்களோ,புத்த பிக்குகளோ அல்லது கோத்தா சகோதரர்களோ நினைத்தால் எமக்கான தீர்வை தரலாம் 

 அன்புள்ள தங்கச்சி! 😁
செல்வநாயகம் காலத்திலும் தமிழர்களால் ஆலோசனையும் தீர்வுகளும் முன் வைக்கப்பட்டது...
அமிதலிங்கம் சம்பந்தன் காலத்திலும் வேண்டுதல்களும் ஆலோசனைகளும் முன் வைக்கப்பட்டது...
இயக்கங்கள் ஆரம்பிக்கும் போதும் காரணங்கள் விளக்கப்பட்டது.
விடுதலைப்புலிகள் காலத்தில் இன்னும் உக்கிரமாக  ஆயுதம்/அரசியல் மூலமாக தமிழர் பிரச்சனை சொல்லப்பட்டது.
விடுதலைப்புலிகள் மௌனத்திற்கு பின் பல கட்சிகள் மூலமும் தமிழர் பிரச்சனைகள் சொல்லப்பட்டு வருகின்றது.

ஆனால் இதுவரை எதுவுமே கண்ணுக்கு தெரியவில்லை......

சிங்களவர்களும் புத்த பிக்குகளும் மகிந்த சகோதரர்களும் தமிழர் விடயமாக நினைக்க என்ன செய்ய வேண்டும் தங்கச்சி???????? 😎

1 hour ago, Justin said:

பைடனோ, கமலாக்காவோ தீர்வு தர முதல் ஈழத்தமிழர்கள் இது வரை தங்கள் தீர்வுக்காக செய்தது என்னவென்று தேடிப் பார்த்தால் ஒன்றும் இல்லை! தெரிந்தோ தெரியாமலோ விட்ட பிழைகளையே சாதாரணமாகப் பேச முடியாத நிலையை முதலில் மாற்ற வேண்டும்! அது வரை எதுவும் நகராது! 

ஜஸ்ரின் ஈழத்தமிழ் மக்கள் என்று பார்த்தால் அரசியல் விடயத்தில் தமது கடமைகளை சரியாகவே செய்தார்கள் என்று தான் கூறவேண்டும். தொடர்ச்சியாக அரசின் சலுகைகளை நிராகரித்து தமிழரசு / விடுதலை கூட்டணிக்கு ஏகோபித்த ஆதரவை எல்லா தேர்தல்களிலும் காட்டி தமது பங்களிப்பை செய்த‍துடன் பின்னர் ஆயுத போராட்டம் தொடங்கியபின்னரும் இயக்கங்களில் நம்பிக்கை வைத்து தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் பாரியளவு பங்களிப்பை வழங்கினர். இயக்கம் கைகாட்டிய இடங்களுக்கு எல்லாம் அவர்களில் நம்பிக்கைவைத்து இடம் பெயர்ந்தனர்.  

ஈழத்தமிழருக்கு தலைமை தாங்கிய தலைமைகளில் தான் தவறு உள்ளது.  அந்த தவறு 1950 களி்ல் இருந்து 2009 வரை தொடர்ந்த‍து.  தற்போது ஈழத்தில் வாழும் மக்களுக்கு எமது பக்கம் தலைவர்களின்  அரசியல் தவறுகள் தெளிவாக தெரிந்திருந்தாலும் தலைக்கு மேலே வெள்ளம் சென்ற நிலையால் இப்போதைய நிலையில் அவர்களாலும் எதுவும் செய்ய முடியாது. புலம் பெயர் நாடுகளில் தியாகம் செய்த இளைஞர்களின்  மாவீர‍ர்களின் தியாகத்தின் பின்னால் தலைமைகளின்   அரசியல் தவறுகளை மறைக்க நினைக்கும் பரிதாப நிலை. 

Edited by tulpen
எழுத்து பிழைத்திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Justin said:

பைடனோ, கமலாக்காவோ தீர்வு தர முதல் ஈழத்தமிழர்கள் இது வரை தங்கள் தீர்வுக்காக செய்தது என்னவென்று தேடிப் பார்த்தால் ஒன்றும் இல்லை! தெரிந்தோ தெரியாமலோ விட்ட பிழைகளையே சாதாரணமாகப் பேச முடியாத நிலையை முதலில் மாற்ற வேண்டும்! அது வரை எதுவும் நகராது! 

சும்மா சக்ட்டுமேனிக்கு எதுவும் சொல்லிவிட்டுப் போகாதீர்கள் Justin. 

எங்களிடையே சனனாயகம் இல்லை அதனால் ஒன்றுமே நடக்காது என்கிறீர்கள். சனனாயகம் இருந்திருந்தால் எல்லாமே நன்றாக நடந்திருக்குமா ? 

சரி. உங்கள் வழிக்கே வருகிறேன். புலிகளுக்கு முன்னரும் சனனாயகம் இருந்தது. தற்போது புலிகள் இல்லாதவிடத்தும் சனனாயகம் இருக்கிறது(என்றே வைத்துக் கொள்வோம் 😀) இப்போதும் முன்னரும் எங்களுக்கு கிடைக்கப்பெற்ற நன்மைகளை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். 

SJV உண்மையை உணர்ந்துதான் "" இனித் தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்"" எனக்கூறினார்.

☹️

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

ஜனநாயகம் என்பது பெரிய விடயம் (அது எமக்குரியதாக இலங்கையில் இருக்கவும் இல்லை!) அதையல்ல நான் பேசுவது! 

முதலில் புலிகளுக்கு முன்னர் நடந்த தவறுகளைப் பேசும் அதே ஆர்வத்தோடு (அதைப் பேச வேண்டும் கட்டாயம்), புலிகள் காலத்திலும் புலிகளுக்கு பின்னாலும் இருக்கும் எங்கள் அணுகுமுறைத் தவறுகள் குறைபாடுகள் பேசப்படுகின்றனவா? இல்லையல்லவா? 

பிறகெப்படி உங்கள் எங்களுக்கு விடிவு வந்திருக்குமா என்ற உங்கள் எடுகோளைப் பரீட்சிப்பது? உதாரணமாக, தாயக அரசியல் வாதிகளில், விடுதலைப் போராளிகளைத் திட்டாமல், ஆனால் தலையிலும் தூக்கி வைக்காமல் ஈழ அரசியல் செய்யும் ஒருவர் வெளிநாட்டில் வந்து எங்கள் புலம்பெயர் தமிழரிடையே அச்சுறுத்தல் இல்லாமல் பேச முடியுமா? 

இதையெல்லாம் நாம் திருத்தாமல், மற்றவன் வெள்ளித்தட்டில் வைத்து எங்களுக்கு எல்லாம் நீட்ட வேணுமென்ற யோசனை ஒரு விதமான சோம்பேறித்தனமென நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/11/2020 at 08:31, குமாரசாமி said:

மை டியர் சிஸ்டர்!வண்  குவைச்சன்?
என்னத்தை?
எதை?
மாத்துவினம்? 

அண்ணோய், உது விளங்கேல்லையே? உவா என்ன சொல்ல வாறா எண்டால், நாங்கள் எல்லாரும் கோத்தாவை ஆதரிச்சால், அவர் எங்களுக்கு எல்லாம் தருவார் எண்டு சொல்லுறா எண்டு நெய்க்கிறன். இப்ப பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் அங்கஜனுக்கும், புரட்சிக்காரன் டக்கிளஸுக்கும் அமலுக்கும் அள்ளி அள்ளிக் குடுக்கேல்லையே? அத மாதிரித்தான் எங்களுக்கும் தருவார் போல. எல்லாம் அவவுக்குத்தான் வெளிச்சம்.

தருவார்....ஆனா தரமாட்டார்!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

பைடனோ, கமலாக்காவோ தீர்வு தர முதல் ஈழத்தமிழர்கள் இது வரை தங்கள் தீர்வுக்காக செய்தது என்னவென்று தேடிப் பார்த்தால் ஒன்றும் இல்லை! தெரிந்தோ தெரியாமலோ விட்ட பிழைகளையே சாதாரணமாகப் பேச முடியாத நிலையை முதலில் மாற்ற வேண்டும்! அது வரை எதுவும் நகராது! 

நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால், கடந்தகால தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறோம் என்கிற போர்வையில் வெறும் புலியெதிர்ப்பு பிரச்சாரம்தானே பலர் செய்கிறார்கள். 

ஒரு விமர்சனத்தை முன்வைக்கும்போது, மற்றையவர்கள் அதை ஏற்கும்படியோ அல்லது அதன்மேல் கவனம் செலுத்தும்படியோ வைப்பதே சிறந்தது. இங்கு ஒரு சிலரைத்தவிர பெரும்பாலானவர்கள் புலிகள் மேல் மிகுந்த அபிமானம் வைத்திருக்கிறார்கள் என்பதை விமர்சிப்பவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவேதான், புலிகளை ஆதரிப்பவர்கள் கூட, புலிகள் மீதான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் உசாத்துணையான விமர்சனங்களை முன்வைய்யுங்கள். எடுத்தவுடனேயே பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், இனச்சுத்திகரிப்பாளர்கள் என்று கூறிவிட்டு அதனை ஆக்கபூர்வமான விமர்சனம் என்று எப்படி எடுக்கச் சொல்கிறீர்கள்? 

எல்லாவற்றிற்கும் மேலாக புலிகள் போராடியது எமக்காத்தானேயன்றி, தமது வயிற்றுப்பிழைப்பிற்காக அல்லவென்பதை விமர்சிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனடிப்படையிலிருந்துதான் எந்த விமர்சனமும் ஆரம்பிக்கப்படவேண்டும். இதை விடுத்து, தம்மைப் புலிகளிடமிருந்தும், போராட்டத்திடமிருந்தும் பிரித்து, வேறுபடுத்தி, சம்பந்தமற்றவர்கள் போல வெளியே நின்று சகட்டுமேனிக்கு விமர்சிப்பது எந்தப் பலனையும் தரப்போவதில்லை. இப்படிச் செய்பவர்கள் உண்மையிலேயே எதிர்ப்பது புலிகளையல்ல, மாறாக புலிகள் முன்னெடுத்த தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தினையே. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

போர்வை போர்த்தியவர்களிடம் தான் இதை நீங்கள் கேட்க வேண்டும்!

நான் கருதுவது: பிழைகள் விடப் பட்டன, அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் மறுக்கும் போது தான் மீண்டும் மீண்டும் பேச வேண்டி வருகிறது. என்னைப் பொறுத்தவரை போராடிய போராளிகள் மீது மரியாதை வைத்துக் கொண்டே அவர்களை வழி நடத்திய தலைமைகளை விமர்சிக்க முடியும்! ஒன்றைச் செய்தால் மற்றதைச் செய்ய முடியாது என்று நினைப்போர் தான் மாயப் போர்வையொன்றுக்குள் ஒளிந்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

தாயக அரசியல் வாதிகளில், விடுதலைப் போராளிகளைத் திட்டாமல், ஆனால் தலையிலும் தூக்கி வைக்காமல் ஈழ அரசியல் செய்யும் ஒருவர்

சுமந்திரனைச் சொல்கிறீர்களா? அவர்தான் புலிகளையும் அவர்களது போராட்டத்தையும் தான் ஏற்றுக்கொள்ளவில்லையென்று சொல்லிவிட்டாரே? அதுமட்டுமல்லாமல் சிங்கள அரசுகளுக்குச் சார்பான அவரது அரசியல் நடவடிக்கைகள் எமக்குப் பாதகமாக அல்லவா முடிந்திருக்கின்றது? இவர் புலிகளைப் பற்றி பேசாமலேயே இருந்திருக்கலாமே? புலிகளைப் பிடிக்கவில்லையென்றால், சுயேட்சையாக நிற்காமல் எதற்காக புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட தேசியக் கூட்டமைப்பில் இருந்து அரசியல் நடத்தவேண்டும்? 

புலிகளின்மூலம் தனக்கான அடையாளத்தினைப் பெற்றுக்கொண்டபின்னர், அவர்களையே விமர்சித்து, "ஏற்றுக்கொள்ளமாட்டேன்" என்று இன்று பேசினால் மக்கள் எப்படி அவரை வரவேற்பார்கள்? 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இன்று தமிழரின் அரசியல் என்பதில் புலிகளின் தாக்கம் மறுக்கப்பட முடியாத, மறைக்கப்படமுடியாத இடத்தினைப் பெற்றிருக்கிறது. என்னைப்பொறுத்தவரையில், தமிழருக்கான அரசியலை இன்று நடத்துபவர்கள் கட்டாயம் அவர்கள் பற்றிப் பேசியே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறது. ஏனென்றால் புலிகள் என்போர் எமது அக்காள, தம்பி, அண்ணா, கணவன், மனைவி, பிள்ளைகள்  தான் . ஆகவே தமது உறவுகள் பற்றி மக்கள் பேசுவதோ சிந்திப்பதோ தடுக்கப்பட முடியாதது. அதைத் தவிர்த்து அரசியலும் செய்யமுடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரஞ்சித் said:

சுமந்திரன் "புலிகளின் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை" என்று சொன்னாரா? "ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லையென்றார்" அதை எங்கள் அரை குறை மொழிபெயர்ப்பாளர்கள் அவரது இனப்படுகொலை மறுப்பு பற்றிய செய்தி போலவே திரித்தார்கள். இதை நீங்களும் நம்பிக் கொண்டிருப்பது ஆச்சரியம் தான்!

கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப் பட்ட போது சும் இருக்கவில்லை! பிறகு புலிகளின் கட்டுப் பாடு கூட்டமைப்பு மீதிருந்து விலகிய பின்னர் உள்ளே வந்தார். ஒரு இலங்கைத் தமிழராக எந்தத் தமிழ் கட்சியிலும் இருந்து அரசியல் செய்ய அவருக்கு உரிமை உண்டு. இப்படி யார் எந்தக் கட்சியில் இருக்க வேண்டும், தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்று dictate செய்வது தான் தீவிர தமிழ தேசியத்தின் ஒரு மறைத்தன்மை எனக் கருதுகிறேன். 

புலிகள் பற்றிப் பேசித் தான் ஆக வேண்டும் என்பது உண்மை. அது candid ஆக இருக்க வேண்டுமா? அல்லது துதிபாடலாக மட்டுமே இருக்க வேண்டுமா? இந்த துதி பாடல் இல்லாமலே சுமந்திரன் எத்தனை தடவை ஊரில் தேர்தல் வென்றிருக்கிறார் என்று பார்த்தீர்களானால், புலிகளின் legacy எங்களுக்கு அவசியமா இல்லையா என்பதன் பதில் தெரியவரலாம். என்னைப் பொறுத்தவரை அது இன்றியமையாதது அல்ல என நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Justin said:

சுமந்திரன் "புலிகளின் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை" என்று சொன்னாரா? "ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லையென்றார்" அதை எங்கள் அரை குறை மொழிபெயர்ப்பாளர்கள் அவரது இனப்படுகொலை மறுப்பு பற்றிய செய்தி போலவே திரித்தார்கள். இதை நீங்களும் நம்பிக் கொண்டிருப்பது ஆச்சரியம் தான்!

புலிகள் அடையவிரும்பியது ஆயுதப் போராட்டத்தின் வெற்றியொன்றின்மூலமான விடுதலையினையே என்றாகிறபோது, புலிகளின் ஆயுதப்போராட்டத்தை தான் ஏற்கவில்லை என்று சுமந்திரன் கூறுவது, மறைமுகமாக புலிகளை ஏற்கவில்லயென்பதைத்தான் என்று நான் நினைக்கிறேன். புலிகள் ஆயுதப் போராட்டத்தினைத்தவிர வேறு எதையுமே செய்யாதபோது, அவர் புலிகளை எதிர்க்கவில்லை, அவர்களின் போராட்டத்தினைத்தான் எதிர்த்தார் என்பது புரிந்துகொள்ளக் கடிணமானது.

34 minutes ago, Justin said:

கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப் பட்ட போது சும் இருக்கவில்லை! பிறகு புலிகளின் கட்டுப் பாடு கூட்டமைப்பு மீதிருந்து விலகிய பின்னர் உள்ளே வந்தார். ஒரு இலங்கைத் தமிழராக எந்தத் தமிழ் கட்சியிலும் இருந்து அரசியல் செய்ய அவருக்கு உரிமை உண்டு. இப்படி யார் எந்தக் கட்சியில் இருக்க வேண்டும், தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்று dictate செய்வது தான் தீவிர தமிழ தேசியத்தின் ஒரு மறைத்தன்மை எனக் கருதுகிறேன். 

யாரும் எக்கட்சியிலும் சேரலாம். அதில் எவருமே தலையிட முடியாது. ஆனால், தேசியக் கூட்டமைப்பு புலிகளால் ஒருங்கிணைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதென்பது சுமந்திரன் அறியாதது அல்லவே? அவர் அப்போது அதில் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன, புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது புலிகளால் ஆரம்பிக்கப்பட்டதுதானே? புலிகளின் போராட்டத்தினை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஒருவர், அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, இன்னும் சொல்லப்போனால் அவர்களின் அரசியல் முகம் என்று அறியப்பட்ட ஒரு கட்சியில் சேர்ந்தது என்பது அவர் சொல்வதற்கும், நடந்துகொள்வதற்கும் இடையில் வேறுபாடு இருப்பதைத்தானே? தீவிரத் தமிழ்த் தேசியவாதம் என்று நீங்கள் மேற்கோள் காட்டும் எவருமே எவரையும் ஒரு கட்சியில் சேர்வது பற்றி முடிவெடுக்கப்போவதில்லை. ஆனால், மொத்த இனத்தினதும் இருப்பிற்கு அவர்களது நடவடிக்கைகள் பாதகமாக இருக்கும் என்கிற பட்சத்தில் நிச்சயம் விமர்சிப்பார்கள். இதற்குத் தீவிரத் தமிழ் தேசியவாதிகளாக இருக்கவேண்டும் என்கிற தேவையில்லையே? டக்கிளஸையோ, கருணவையோ, பிள்ளையானையோ அவர்களின் கட்சிகளில் சேருங்கள், அல்லது சேரவேண்டாம் என்று எவருமே சொல்வதில்லை. ஆனால், அவர்களை விமர்சிக்கிறார்கள். இங்கே எவர் எந்தக் கட்சியில் இருக்கவேண்டும் என்பதல்ல பிரச்சினை, என்ன செய்கிறார் என்பது மட்டுமே. 

41 minutes ago, Justin said:

புலிகள் பற்றிப் பேசித் தான் ஆக வேண்டும் என்பது உண்மை. அது candid ஆக இருக்க வேண்டுமா? அல்லது துதிபாடலாக மட்டுமே இருக்க வேண்டுமா? இந்த துதி பாடல் இல்லாமலே சுமந்திரன் எத்தனை தடவை ஊரில் தேர்தல் வென்றிருக்கிறார் என்று பார்த்தீர்களானால், புலிகளின் legacy எங்களுக்கு அவசியமா இல்லையா என்பதன் பதில் தெரியவரலாம்.

அவர் தேர்தல்களில் வென்றார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அவர் வென்ற தேர்தல்களில் தனது உண்மையான கருத்தினை, அதாவது தான் புலிகளை ஏற்கவில்லை அல்லது அவர்களது போராட்டத்தினை ஏற்கவில்லையென்று மக்கள் முன்சென்று அவர் வாக்குக் கேட்கவில்லை. ஒன்றில் அவர்கள் பற்றி அவர் நேரடியாகப் பேசாமல், அவரது கட்சி சார்ந்தவர்கள் புலிகளை ஆதரித்துப் பேசினார்கள், அல்லது அவரே புலிகளை நேரடியாக ஆதரித்துப் பேசினார் (இது 2020 பராளுமன்றத் தேர்தலில் நடந்தது). 

சுமந்திரன் தேர்தல் காலங்களில் பேசுவதற்கும், அதற்கு அப்பாற்பட்ட காலங்களில் பேசுவதற்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறது. புலிகள் மீதான விமர்சனங்கள் தேர்தல் காலத்தில் அவரால் முன்வைக்கப்படுவதில்லை. அதேபோல, தேர்தல் களத்தில் புலிகளை அவர் விருப்பமின்றியே ஆதரித்துப் பேசவேண்டி இருந்திருக்கிறது. புலிகள் தவிர்த்து அரசியல் செய்து வெல்லமுடியுமென்றால், சுமந்திரன் சுயேட்சையாக (ஏனென்றால், கூட்டமைப்பில் ஏனையவர்கள் புலிகளை ஆதரித்தே பேசிவருவதால்) நின்று, புலிகளை நான் ஏற்கவில்லை என்று பகிரங்கமாக மக்களிடம் அறிவித்து வாக்குக் கேட்டிருக்கவேண்டும். அவ்வாறு அவர் கேட்டு வென்றிருந்தால், புலிகள் இல்லாத அரசியல் வெற்றி சாத்தியமா இல்லையா என்று தெரிந்துகொள்ளமுடியும்.  

புலிகளைத் தவிர்த்து அரசியல் செய்வதென்பது சாத்தியமானதுதான் என்று நீங்கள் கூறுவது அவர்களை தொடர்ச்சியாக எதிர்த்துவரும் டக்கிளஸ் போன்ற ஒருவருக்கு மட்டுமே பொருந்தும். அவர் எப்போதுமே புலிகளை வசைபாடியே பேசுகிறார். அவரைச் சுற்றியுள்ள சிறு மக்கள் கூட்டம் அவரைத் தொடர்ந்தும் தெரிவுசெய்து வருகிறது. ஆனால், இம்மக்கள் கூட்டம் மொத்தத் தமிழினத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமல்ல. 

அடுத்தது, சிங்களக் கட்சிகளில் இருக்கும் தமிழர்களான அங்கஜன் போன்றோர் தமது பிரச்சாரக் கூட்டங்களில் புலிகளைத் துதிபாடியும், மாவீரர் பாடல்களையும் ஒலிபரப்பியே வாக்குக் கேட்கிறார்கள். 

ஆகவே புலிகள் மக்களின் மனங்களில் இருக்கும்வரை வாக்குக் கேட்பவர்கள் விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் பற்றிக் கட்டாயம் பேசவேண்டியே வரும். 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, எம்மை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களப் பேரினவாதம் தனது அரசியலையே புலிகளையும் அவர்களது போராட்டம் மீதான வெற்றியினையும் வைத்தே செய்துவரும்போது, அதனை முகம்கொடுக்கும் தமிழினம் புலிகளைத் தவிர்த்து அரசியல் செய்வது எங்கணம்? 

இறுதியாக, புலிகளைத் தவிர்த்து தமிழர்கள் அரசியல் செய்யவேண்டிய தேவையென்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

புலிகள் அடையவிரும்பியது ஆயுதப் போராட்டத்தின் வெற்றியொன்றின்மூலமான விடுதலையினையே என்றாகிறபோது, புலிகளின் ஆயுதப்போராட்டத்தை தான் ஏற்கவில்லை என்று சுமந்திரன் கூறுவது, மறைமுகமாக புலிகளை ஏற்கவில்லயென்பதைத்தான் என்று நான் நினைக்கிறேன். புலிகள் ஆயுதப் போராட்டத்தினைத்தவிர வேறு எதையுமே செய்யாதபோது, அவர் புலிகளை எதிர்க்கவில்லை, அவர்களின் போராட்டத்தினைத்தான் எதிர்த்தார் என்பது புரிந்துகொள்ளக் கடிணமானது.

யாரும் எக்கட்சியிலும் சேரலாம். அதில் எவருமே தலையிட முடியாது. ஆனால், தேசியக் கூட்டமைப்பு புலிகளால் ஒருங்கிணைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதென்பது சுமந்திரன் அறியாதது அல்லவே? அவர் அப்போது அதில் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன, புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது புலிகளால் ஆரம்பிக்கப்பட்டதுதானே? புலிகளின் போராட்டத்தினை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஒருவர், அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, இன்னும் சொல்லப்போனால் அவர்களின் அரசியல் முகம் என்று அறியப்பட்ட ஒரு கட்சியில் சேர்ந்தது என்பது அவர் சொல்வதற்கும், நடந்துகொள்வதற்கும் இடையில் வேறுபாடு இருப்பதைத்தானே? தீவிரத் தமிழ்த் தேசியவாதம் என்று நீங்கள் மேற்கோள் காட்டும் எவருமே எவரையும் ஒரு கட்சியில் சேர்வது பற்றி முடிவெடுக்கப்போவதில்லை. ஆனால், மொத்த இனத்தினதும் இருப்பிற்கு அவர்களது நடவடிக்கைகள் பாதகமாக இருக்கும் என்கிற பட்சத்தில் நிச்சயம் விமர்சிப்பார்கள். இதற்குத் தீவிரத் தமிழ் தேசியவாதிகளாக இருக்கவேண்டும் என்கிற தேவையில்லையே? டக்கிளஸையோ, கருணவையோ, பிள்ளையானையோ அவர்களின் கட்சிகளில் சேருங்கள், அல்லது சேரவேண்டாம் என்று எவருமே சொல்வதில்லை. ஆனால், அவர்களை விமர்சிக்கிறார்கள். இங்கே எவர் எந்தக் கட்சியில் இருக்கவேண்டும் என்பதல்ல பிரச்சினை, என்ன செய்கிறார் என்பது மட்டுமே. 

அவர் தேர்தல்களில் வென்றார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அவர் வென்ற தேர்தல்களில் தனது உண்மையான கருத்தினை, அதாவது தான் புலிகளை ஏற்கவில்லை அல்லது அவர்களது போராட்டத்தினை ஏற்கவில்லையென்று மக்கள் முன்சென்று அவர் வாக்குக் கேட்கவில்லை. ஒன்றில் அவர்கள் பற்றி அவர் நேரடியாகப் பேசாமல், அவரது கட்சி சார்ந்தவர்கள் புலிகளை ஆதரித்துப் பேசினார்கள், அல்லது அவரே புலிகளை நேரடியாக ஆதரித்துப் பேசினார் (இது 2020 பராளுமன்றத் தேர்தலில் நடந்தது). 

சுமந்திரன் தேர்தல் காலங்களில் பேசுவதற்கும், அதற்கு அப்பாற்பட்ட காலங்களில் பேசுவதற்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறது. புலிகள் மீதான விமர்சனங்கள் தேர்தல் காலத்தில் அவரால் முன்வைக்கப்படுவதில்லை. அதேபோல, தேர்தல் களத்தில் புலிகளை அவர் விருப்பமின்றியே ஆதரித்துப் பேசவேண்டி இருந்திருக்கிறது. புலிகள் தவிர்த்து அரசியல் செய்து வெல்லமுடியுமென்றால், சுமந்திரன் சுயேட்சையாக (ஏனென்றால், கூட்டமைப்பில் ஏனையவர்கள் புலிகளை ஆதரித்தே பேசிவருவதால்) நின்று, புலிகளை நான் ஏற்கவில்லை என்று பகிரங்கமாக மக்களிடம் அறிவித்து வாக்குக் கேட்டிருக்கவேண்டும். அவ்வாறு அவர் கேட்டு வென்றிருந்தால், புலிகள் இல்லாத அரசியல் வெற்றி சாத்தியமா இல்லையா என்று தெரிந்துகொள்ளமுடியும்.  

புலிகளைத் தவிர்த்து அரசியல் செய்வதென்பது சாத்தியமானதுதான் என்று நீங்கள் கூறுவது அவர்களை தொடர்ச்சியாக எதிர்த்துவரும் டக்கிளஸ் போன்ற ஒருவருக்கு மட்டுமே பொருந்தும். அவர் எப்போதுமே புலிகளை வசைபாடியே பேசுகிறார். அவரைச் சுற்றியுள்ள சிறு மக்கள் கூட்டம் அவரைத் தொடர்ந்தும் தெரிவுசெய்து வருகிறது. ஆனால், இம்மக்கள் கூட்டம் மொத்தத் தமிழினத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமல்ல. 

அடுத்தது, சிங்களக் கட்சிகளில் இருக்கும் தமிழர்களான அங்கஜன் போன்றோர் தமது பிரச்சாரக் கூட்டங்களில் புலிகளைத் துதிபாடியும், மாவீரர் பாடல்களையும் ஒலிபரப்பியே வாக்குக் கேட்கிறார்கள். 

ஆகவே புலிகள் மக்களின் மனங்களில் இருக்கும்வரை வாக்குக் கேட்பவர்கள் விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் பற்றிக் கட்டாயம் பேசவேண்டியே வரும். 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, எம்மை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களப் பேரினவாதம் தனது அரசியலையே புலிகளையும் அவர்களது போராட்டம் மீதான வெற்றியினையும் வைத்தே செய்துவரும்போது, அதனை முகம்கொடுக்கும் தமிழினம் புலிகளைத் தவிர்த்து அரசியல் செய்வது எங்கணம்? 

இறுதியாக, புலிகளைத் தவிர்த்து தமிழர்கள் அரசியல் செய்யவேண்டிய தேவையென்ன? 

புலிகளை முன்வைத்து தமிழர்கள் அரசியல் செய்ய வேண்டிய தேவை இல்லை என்பதே என் கருத்து! தவிர்த்தால் வெற்றி கிடைக்குமா? கிடைக்கலாம் கிடைக்காமல் போகலாம்! 50/50. புலிகளை முன்வைத்து அரசியல் செய்து மேற்கு நாடுகளுடன் இந்தியாவுடன் வெற்றிகரமாக உறவைப் பேண முடியுமா? இது சந்தேகம் தான்! எனவே, வெற்றி வாய்ப்பு இங்கே 50/50 ஐ விட குறைவு என்று கருதுகிறேன்! 

முற்றாக தூக்கிப் போட்டு விடுங்கள் என்ற கோரிக்கை, கட்டாயமெல்லாம் கிடையாது! ஆனால், புலிகளின் லெகசியை தூக்கி நிறுத்துவது பிரதானமான ஒரு கொள்கையாக இருப்பது இப்போது எமக்குப் பாதகம் என நினைக்கிறேன். இதனால் புலிகளின் பங்களிப்பை நானோ ஏனைய தமிழர்களோ மறந் விட்டோம் என்பது அர்த்தம் அல்ல!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.