Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நாள் அனுஷ்டிக்க முயன்றதாக பாஸ்கரன் அடிகளார் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
f9142e62-dd81-42ad-9507-70707dc24334-960

மாவீரர்களுக்கு குருமடத்தின் முன்னால் நினைவேந்தல் அனுஷ்டிக்க தயாரானதாக குருமட அதிபர் அருட்பணி பாஸ்கரன் அடிகளார் சற்றுமுன் கைது.

யாழ் மடுத்தினார் சிறிய குருமடத்திற்கு முன்பாக அவர் இன்று (27) மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

தீப்பந்தங்கள் அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தார்.

அருட்தந்தை தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கிய நிலையில் , அரசியல்வாதிகள் அதை பின்பற்றி நினைவேந்தலை செய்கையில் ஒரு மத குரு இவ்வாறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒருவர் சடடத்தை மீறுவது சில பவுத்த பிக்குகள் செய்வதைப்போல இருக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தங்களுக்குரிய வளாகத்திற்தானே செய்தார்? மற்றவர்களின் எல்லையிலோ, நிலத்திலோ அடாத்தாக புகுந்து  மக்களை குழப்பி தகராறு செய்யவில்லையே? மக்கள் தங்கள் வீடுகளின் முன்னால் விளக்கேற்றி செய்கிறார்கள். இவர் தான் வாழும் குருமடத்தின் முன்னால் செய்வதில் என்ன தவறு கண்டீர்கள்? இதைப்போய் கலகம் செய்யும் பிக்குகளோடு ஒப்பிடுகிறீர்கள். 

யாரவது போலீசார் ஏன் கைது செய்தார்கள் என்று கூறினால் நல்லது. சிலரின் கருத்துப்படி போலீசார் தவறு செய்தது போல இருக்கின்றது. அப்படியென்றால் மனித உரிமை மீறல் வழக்கொன்று போடலாம். அரசியல்வாதிகளும் நினைவேந்தல் செய்தார்கள். அவர்கள் யாரையுமே கைது செய்யவில்லை. இங்கு எதோ பிரச்சினை இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

மாவீரர்களுக்கு குருமடத்தின் முன்னால் நினைவேந்தல் அனுஷ்டிக்க தயாரானதாக குருமட அதிபர் அருட்பணி பாஸ்கரன் அடிகளார் சற்றுமுன் கைது.

யாழ் மடுத்தினார் சிறிய குருமடத்திற்கு முன்பாக அவர் இன்று (27) மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

தீப்பந்தங்கள் அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தார்.

2 minutes ago, Robinson cruso said:

யாரவது போலீசார் ஏன் கைது செய்தார்கள் என்று கூறினால் நல்லது.

11 hours ago, பிழம்பு said:
 
மாவீரர்களுக்கு குருமடத்தின் முன்னால் நினைவேந்தல் அனுஷ்டிக்க தயாரானதாக குருமட அதிபர் அருட்பணி பாஸ்கரன் அடிகளார் சற்றுமுன் கைது.

குருமடத்தின் முன்னால் செய்ததால்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார். உள்ளே செய்திருந்தால் கைது செய்யப்பட்டிருக்கமாடடார். தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

குருமடத்தின் முன்னால் அவர்கள் வளாகத்தில் என்றுதான்  படம் காட்டுகிறது. இருந்தாலும் வேறொருவருக்கு சொந்தமான நிலத்திலோ, அன்றி அரச காணியிலோ, பொது இடத்திலோ அல்ல. சும்மா அலைந்தவர்கள் கண்டுபிடித்தோம் என்று சிங்களவருக்கு படம் காட்ட சும்மா  நாடகம். வெறுவாய்க்கு இலை கிடைத்த மாதிரி கடைசியில் அடிகளார் கிடைத்தார்.  

5 minutes ago, Robinson cruso said:

குருமடத்தின் முன்னால் செய்ததால்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார். உள்ளே செய்திருந்தால் கைது செய்யப்பட்டிருக்கமாடடார்.

உண்மைதான்... இல்லாவிட்டால் அவர்கள் ரொம்ப  நல்லவர்கள். அடிகளாரிற்தான்  எல்லாப்பிழையும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கிய நிலையில் , அரசியல்வாதிகள் அதை பின்பற்றி நினைவேந்தலை செய்கையில் ஒரு மத குரு இவ்வாறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒருவர் சடடத்தை மீறுவது சில பவுத்த பிக்குகள் செய்வதைப்போல இருக்கின்றது. 

விதண்டாவாதத்திற்குக் கதைக்க வேண்டாம் வங்காலையான். எத்தனைபேருக்குத்தான் நல்ல பிள்ளையாக நடிப்பீர்கள்... 😏

☹️

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினத்தில் கைது செய்யப்பட்ட அருட்தந்தை பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட அருட்தந்தை பிணையில் விடுதலை

https://www.facebook.com/pakalavan.tv/videos/317223439257333

கைது செய்யப்பட்ட அருட்தந்தை பிணையில் விடுதலை

மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த முற்பட்ட புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வரான அருட்தந்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு அருகில் உள்ள புனித மருத்தினார் குருபீடத்துக்கு முன்பாக அவர் நேற்று (28) மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

இளவாலையைச் சேர்ந்தவரும் புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வருமான அருட்தந்தை பாஸ்கரனே இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் புனித மருத்தினார் குருபீடத்துக்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரனின் ஒளிப்படங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னங்களை உள்ளடக்கி அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத் தடை உத்தரவை மீறி நினைவேந்தலை நடத்த முயன்றமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

அருட்தந்தை சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் முன்னிலையாகினார்.

சந்தேக நபர் சார்பில் பிணை விண்ணப்பத்தை முன்வைத்து அவர் சமர்ப்பணம் செய்தார்.

பிணைக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த பொலிஸார், சந்தேக நபருக்கு வெளிநாடுகளிலிருந்து நிதிப் பங்களிப்பு கிடைப்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் மன்றுரைத்தனர்.

அருட்தந்தையை ஒரு லட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு விசாரணை வரும் மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
 
-யாழ். நிருபர் பிரதீபன்-

  • கருத்துக்கள உறவுகள்

சச்சியர் ஓடி ஒழிந்துகொண்டார் போல.. அல்லது இந்திய எசமானர்களின் வழிகாட்டலுக்காக காத்திருக்கிறாரோ...

😂😂

21 hours ago, Kapithan said:

விதண்டாவாதத்திற்குக் கதைக்க வேண்டாம் வங்காலையான். எத்தனைபேருக்குத்தான் நல்ல பிள்ளையாக நடிப்பீர்கள்... 😏

☹️

கப்பி, எனக்கு உங்களைப்போல நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. எதுக்கு, யாருக்காக , ஏன் நடிக்க வேண்டும்? நான் யாரையும் நம்பி இருக்கவில்லை நடிப்பதட்கு? முடியுமென்றால் பதில் எழுதுங்கள், பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள் தீர்த்து வைக்கிறோம்.😜

1 hour ago, Kapithan said:

சச்சியர் ஓடி ஒழிந்துகொண்டார் போல.. அல்லது இந்திய எசமானர்களின் வழிகாட்டலுக்காக காத்திருக்கிறாரோ...

😂😂

அவரை ஏன் இதுக்குள் இருக்கிறீர்கள்? அவர் தான் உண்டு தன் பாடு உண்டு எண்டு தியானத்தில் இருக்கிற மனுஷனை ஏன் குழப்புகிறீர்கள். அப்புறம் விதண்டாவாதத்துக்கு எழுதிறேன் எண்டு சொல்ல வேண்டாம்.😜

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Robinson cruso said:

குருமடத்தின் முன்னால் செய்ததால்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார். உள்ளே செய்திருந்தால் கைது செய்யப்பட்டிருக்கமாடடார். தகவலுக்கு நன்றி.

இது யாழ் பிரதான வீதியில் இருக்கும் மார்ட்டீனார் குருமடம். இதற்கு ஒரு வளாகமும், பிரதான வீதியில் ஒரு பெரிய கதவும் இருக்கிறது. இந்த வணக்க நிகழ்வு அந்தக் கதவின் பின்னல், வளாகத்தில் நடந்திருக்கிறது. எனவே உள்ளே தான் நடந்திருக்கிறது. 

நீதிமன்றம் விசாரித்தால் தனியார் நிகழ்வென்று நிராகரித்து விடுவார்கள், பார்க்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

கப்பி, எனக்கு உங்களைப்போல நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. எதுக்கு, யாருக்காக , ஏன் நடிக்க வேண்டும்? நான் யாரையும் நம்பி இருக்கவில்லை நடிப்பதட்கு? முடியுமென்றால் பதில் எழுதுங்கள், பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள் தீர்த்து வைக்கிறோம்.😜

முதலில் செய்தியை தெளிவுற வாசியுங்கள். நீதிமன்று கொடுத்துள்ள அறிவுறுத்தலைப் படியுங்கள். பின்னர் கருத்தெழுதுங்கள். சுமந்திரனின் விளக்கத்தைப் படியுங்கள் புரியும். 😏

பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டும் வழக்கத்தை விட்டொழியுங்கள். 😏

கொஞ்சமாவது உணர்வுடன் வாழப் பழகுங்கள். அதன் பின்னர் தமிழன் என்று கூறுங்கள் .. 😏

3 minutes ago, Kapithan said:

அப்பாடா , என்ன அறிவுரை என்ன தமிழ்ப்பற்று. அதுக்குள்ளே தமிழ் துரோகி சுமந்திரனையும் இழுத்துவிடீர்கள். இப்போ யார் பச்சோந்திகள், யார் விதண்டாவாதத்துக்கு எழுதிறதென்று விளங்குது. இந்த மாதிரி உணர்ச்சிவசப்பட்டு எழுதிய ஆயிரம்பேரை கண்டிருக்கிறோம். மத்தபடி எல்லாம் புஷ்வாணம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Robinson cruso said:

1) அப்பாடா , என்ன அறிவுரை என்ன தமிழ்ப்பற்று.

2) அதுக்குள்ளே தமிழ் துரோகி சுமந்திரனையும் இழுத்துவிடீர்கள்.

3) இப்போ யார் பச்சோந்திகள், யார் விதண்டாவாதத்துக்கு எழுதிறதென்று விளங்குது.

4) இந்த மாதிரி உணர்ச்சிவசப்பட்டு எழுதிய ஆயிரம்பேரை கண்டிருக்கிறோம். மத்தபடி எல்லாம் புஷ்வாணம்தான்.

1) நன்றி நன்றி வங்காலையான்

2) சுமந்திரனை இழுக்கவில்லை. அவர் தனக்கு நீதிமன்று கொடுத்த அறிவுரையை கூறியுள்ளார். படியுங்கள் புரியும்.

3) என்னைப் பச்சோந்தி என்று நீங்கள் கூறினால் அதற்கு எனது நன்றிகள். வசிஸ்ரர் வாயால் பாராட்டுப் பெறுவதென்றால் பெரிய விடயமல்லவா.. 😂😂

4) தங்கள் விருப்பபடியே ஆகட்டும் நாதா.. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
On 28/11/2020 at 01:47, Robinson cruso said:

நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கிய நிலையில் , அரசியல்வாதிகள் அதை பின்பற்றி நினைவேந்தலை செய்கையில் ஒரு மத குரு இவ்வாறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒருவர் சடடத்தை மீறுவது சில பவுத்த பிக்குகள் செய்வதைப்போல இருக்கின்றது. 

அரிச்சந்திரனுக்கு பிறகு உங்களைத்தான் பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கொஞ்சமாவது உணர்வுடன் வாழப் பழகுங்கள். அதன் பின்னர் தமிழன் என்று கூறுங்கள்

ஆரம்பத்தில் மொழிப்பற்று, இனப்பற்று, மதப்பற்று எல்லாம் பெருகி ஓட எழுதுவார்கள். விருப்புகளும் குவியும் பின் கொஞ்சம் கொஞ்சமா சொந்தப்புத்தி தலையெடுக்கும். இறுதியில் ஆக்ரோஷமாக வாதாடுவார்கள், எஜமான் விசுவாசம். அவர்கள் எல்லாம் government servant கண்டியளோ! 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நந்தன் said:

அரிச்சந்திரனுக்கு பிறகு உங்களைத்தான் பார்க்கிறேன்.

இது புதுசா இருக்கே 😉😉😊

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சொல்வதில் இவரே அருச்சந்திரனுக்கு அடுத்தவர் என்று சொல்கிறார். அதாவது உண்மையைத்தவிர வேறேதும் பேசாதவர்.

10 hours ago, நந்தன் said:

அரிச்சந்திரனுக்கு பிறகு உங்களைத்தான் பார்க்கிறேன்.

நீங்கள் அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்துக்கு வீடா?

11 hours ago, Kapithan said:

1) நன்றி நன்றி வங்காலையான்

2) சுமந்திரனை இழுக்கவில்லை. அவர் தனக்கு நீதிமன்று கொடுத்த அறிவுரையை கூறியுள்ளார். படியுங்கள் புரியும்.

3) என்னைப் பச்சோந்தி என்று நீங்கள் கூறினால் அதற்கு எனது நன்றிகள். வசிஸ்ரர் வாயால் பாராட்டுப் பெறுவதென்றால் பெரிய விடயமல்லவா.. 😂😂

4) தங்கள் விருப்பபடியே ஆகட்டும் நாதா.. 😂😂

நீங்கள் எல்லாம் வசதிக்காக மற்றவர்களை பயன்படுத்துபவர்கள். ஒரு வேளை சுமந்திரனை துரோகி என்பீர்கள். உங்களுக்கு வசதிப்படும்போது அவர் சொன்னதை கேளுங்கள் என்பீர்கள். இதெல்லாம் பச்சோந்தி செய்யும் வேலைகள். இத்தகு மேல் எழுத ஒன்றுமில்லை.😜

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இது புதுசா இருக்கே 😉😉😊

சிலருக்கு பதில் தெரியாவிடடாள் , புதுசு புதுசா யோசிப்பார்கள். உண்மை சுடத்தானே செய்யும். 😜

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Robinson cruso said:

1) நீங்கள் எல்லாம் வசதிக்காக மற்றவர்களை பயன்படுத்துபவர்கள். ஒரு வேளை

2) சுமந்திரனை துரோகி என்பீர்கள். உங்களுக்கு வசதிப்படும்போது அவர் சொன்னதை கேளுங்கள் என்பீர்கள்.

3) இதெல்லாம் பச்சோந்தி செய்யும் வேலைகள். இத்தகு மேல் எழுத ஒன்றுமில்லை.😜

1) மன்னிக்கவும். உங்கள் கருத்துடன் உடன்பட முடியவில்லை

2) எவரையும் இதுவரை துரோகி என்று கூறியதில்லை. சுமந்திரனின் பல கருத்துக்களுடன் முரண்படுகிறேன்.  Cap. பண்டிதர் வீட்டு நிகழ்வில் கலந்துகொண்டது தொடர்பாக அவர் அளித்த விளக்கத்தை திரும்பவும் ஒருமுறை வாசியுங்கள்.

3) என்னைப் பச்சோந்தி என்பதில் நீங்கள் மகிழ்வடைவீர்களென்றால் எனக்கும் மகிழ்ச்சியே.. 👍

Just now, Kapithan said:

காப்பி , எல்லாம் வாசித்துதான் எழுதினேன். உங்களுக்க ஏற்றபடி மற்றவர்களை பாவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றவர்கள் எதிர்பார்க்கிறமாதிரி கருத எழுத வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படி எதிர்பார்ப்பது தவறு.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Robinson cruso said:

காப்பி , எல்லாம் வாசித்துதான் எழுதினேன். உங்களுக்க ஏற்றபடி மற்றவர்களை பாவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றவர்கள் எதிர்பார்க்கிறமாதிரி கருத எழுத வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படி எதிர்பார்ப்பது தவறு.

நீங்கள் விரும்பியவாறுதான் இதுவரை கருத்து எழுதியுள்ளீர்கள்.

நான் கூறியவுடன் மாறுவதற்கு நீங்கள் மாணாக்கனும் நான் ஆசிரியனும் அல்லவே. 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.