Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மஹர சிறைச்சாலை கலவரத்தால் 8 பேர் உயிரிழப்பு! முடுக்கி விடப்பட்டுள்ள விசாரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹர சிறைச்சாலை கலவரத்தால் 8 பேர் உயிரிழப்பு! முடுக்கி விடப்பட்டுள்ள விசாரணை

இரண்டாம் இணைப்பு

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கைதிகள் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 35 காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்பத்தினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 43 பேர் காயமடைந்துள்ளனர் என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹர சிறைச்சாலையில் மேலும் கைதியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து, கைதிகள் சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர்.

இதையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் சிறப்பு பணிக்குழு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், மகரா சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது ஏற்பட்ட தீயை அணைக்க பல தீயணைப்பு வீரர்கள் மற்றும் வாகனங்களும் நிறுத்தப்பட்டன.

இந் நிலையில் மஹர சிறைச்சாலை அமைதியின்மை குறித்து விசாரணை நடத்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே குழுவொன்றை நியமித்துள்ளார்.

இதேவேளை, குழப்பத்தின் போது, உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது ராகமவில் அமைந்துள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளதுடன், மேலும் 43 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

எனினும் இந்த அனர்த்தத்தில் இரண்டு சிறை அதிகாரிகள் உட்பட 35 பேர் மாத்திரம் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹர சிறைச்சாலையில் தற்போதுவரை குழப்பமான நிலையே உள்ளதாகவும், நிலைமைகயை கட்டுப்படுத்த அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிறைச்சாலை திணைக்களம் கூறியுள்ளது.

மஹர சிறைச்சாலையில் 183 கைதிகள் முன்னதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் 1,091 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
 

https://www.ibctamil.com/srilanka/80/155258

 

  • கருத்துக்கள உறவுகள்

போதைப்பொருள் மாத்திரையே மஹர சிறைச்சாலை கலவரத்திற்கு காரணம்- விமல்

 

மகர சிறைச்சாலையில் கலவரம் ஏற்படுவதற்கு கைதிகள் மத்தியில் வழங்கப்பட்ட போதைமாத்திரையே காரணம் என அமைச்சர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாiலியல் இடநெருக்கடி காரணமாக கலவரம் வெடிக்கவில்லை மாறாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள சிலரே இதற்கு காரணம் என அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

maharapr6-300x162.jpg
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சதுர என்ற குற்றவாளி சரத என்ற போதைப்பொருளை வெலிக்கடைசிறையில் உள்ளவர்களுக்கு வழங்கியுள்ளார் என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சில நாட்களிற்கு முன்னர் வெலிக்கடை சிறையில் உள்ள கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள விமல்வீரவன்ச குறிப்பிட்ட போதைப்பொருளை பயன்படுத்திய வெலிக்கடை கைதிகள் கொலை செய்யுமளவிற்கு பாதிக்கப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

mahara-medialk-300x169.jpg
இது குறித்து சிறைச்சாலை புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் வெலிக்கடைசிறைக்குள் அந்த போதைப்பொருள் மேலும் செல்வதை தடுத்து விட்டனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் மஹர சிறையில் அந்த போதைமாத்திரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தங்களுடைய போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாத குழுவினர் சிறைக்குள் திட்டமிட்ட கொலைகள் இடம்பெறுவதாக காண்பிப்பதற்காக மரணங்களை உருவாக்க முயன்றுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2012 வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகள் இடம்பெற்றஅதேசூழல் தற்போதும் இலங்கையில் காணப்படுகின்றது என்பதை காண்பித்து ஜனாதிபதிக்கு அவப்பெயரை உருவாக்குவதும இந்த கலகத்தின் நோக்கம் எனவும் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் மாத்திரையே மஹர சிறைச்சாலை கலவரத்திற்கு காரணம்- விமல் – Thinakkural

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வசதிக்கு ஏற்ப போதைப்பொருள், கொரோனா, பயங்கரவாதம் எதையாவது சொல்லி தப்பித்துக் கொள்ளுங்கள். யாராவது எதிர்த்துக் கேள்வி கேட்கவா போகிறார்கள்?  

  • கருத்துக்கள உறவுகள்

கைதிகளைப் பாதுகாக்க முடியாவிட்டால் அரசு எதற்கு? சிறை முன் கதறியழும் மக்கள்

 
mahara-99.png
 8 Views

மஹர சிறைச்சாலை கைதிகளின் குடும்பத்தவர்களின் சிறைச்சாலைக்கு முன்னாள் திரண்டு கதறியழுவதையும், வேதனையில் துடித்ததையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களின் பேசுபொருளாக மாறியுள்ளன.

மஹர சிறைக்கைதிகளின் குடும்பத்தவர்கள் தங்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் சிறைச்சாலை முன்னாள் நின்று கதறி அழுவதையும் மன்றாடுவதையும் காண்பிக்கும் பல படங்கள் வெளியாகியுள்ளன.

மஹர சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒருவரின் குடும்பத்தை சேர்ந்த பெண்ணொருவர் பொலிஸ்உத்தியோகத்தரின் காலில் விழுந்து மன்றாடுவதை காண்பிக்கும் மனதை உருக்கும் படமொன்று குறித்து பதிவிட்டுள்ளனர்.

வடக்குகிழக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் கதறல்களையும் மஹர சிறைச்சாலையின் முன்னாள் சிறைக்கைதிகளின் உறவினர்களின் கதறல்களையும் ஒப்பிட்டும் கருத்துக்கள் பதிவாகியுள்ளன.

பொலிஸ் உத்தியோகத்தரின் காலில் பெண்ணொருவர் விழுந்து கதறும் படம் எனது இதயத்தை பிளக்கின்றது என பதிவிட்டுள்ள பத்திரிகையாளர் ரசிக்கா ஜயக்கொடி சிறைச்சாலையில் உள்ளவர்களை பாதுகாக்க முடியாவிட்டால் அரசாங்கங்கள் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார்.

997.jpegநாங்கள் தோல்வியடைந்த நாடாக மாறிவிட்டோம், பொலிஸ் அதிகாரியொருவரின் காலில் விழுந்து இந்த தாய் கதறியழும் படம் சிறைச்சாலை கலவரம் குறித்து அனைத்தையும் தெரிவிக்கின்றது என ரசிக்கா ஜெயக்கொடி பதிவிட்டுள்ளார்.

கண்ணீர் தொடர்ந்து வெளிப்படுகின்றது,கண்கள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன,அழுகுரல்கள் பெரிதாகின்றன காதுகள் மூடப்பட்டுள்ளன என பதிவிட்டுள்ள ஒருவர் வடக்குகிழக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் படங்களையும் மஹரசிறை முன்னாள் கைதிகளின் தாய்மார்கள் கதறியழும் படத்தையும் பதிவிட்டுள்ளார்.

ஒவ்வொரு வருடம் கடக்கும் போதும் புதிதாக கண்ணீர் விட்டு அழும் தாய்மார்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றனர் என தர்சா பஸ்டியன் பதிவிட்டுள்ளார்

அவர்களின் பாசத்திற்குரியவர்கள் சிறைக்கைதிகளாகயிருக்காலம் ஆனால் மரணிக்க்கவேண்டிய அளவிற்கு என்ன குற்றமிழைத்தார்கள் என பிரசாத் வெலிகும்புர என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்

வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கிகளை பயன்படுத்துமாறு யார் உத்தரவிட்டது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் சிறுபான்மையினத்தவர்களை போல சிங்கள சிறைக்கைதிகள் சிங்கள பாட்டாளி வர்க்கத்தினர் மாற்றுக்கருத்துடைய சிங்களவர்கள் சமஸ்டி முறைக்கு ஆதரவான சிங்களவர்கள் அனைவரினது உயிர்களும் அரசாங்கத்தினை பொறுத்தவரை அவசியமில்லாதது எனவும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று பலர் மஹரசிறையின் முன்னாள் கைதிகளின் உறவுகள் கதறும்காட்சிகள் தங்களை மிகவும் வேதனைப்படுத்திவிட்டன என பதிவிட்டுள்ளனர்.

https://www.ilakku.org/கைதிகளைப்-பாதுகாக்க-முடி/

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and shoes

சிங்கள பொலிசாரால் சிறையில் கொல்லப்பட்ட
சிங்கள இளைஞனின் சிங்கள தாயொருவர்
சிங்கள பொலிசாரின் காலில் விழுந்து மன்றாடுகிறார்.
சிங்கள கோத்தபாயாவுக்கு வோட்டு போட்டவர்களுக்கு
இந்த நிலை நிச்சயம் வரும் என்று எமக்கு தெரியும்.
ஆனால் இந்தளவு விரைவாக வரும் என எதிர்பார்க்கவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

மஹர சிறைச்சாலையில் நடந்தது என்ன? - கைதிகளின் வன்முறைக்கான காரணம்

 

மஹர சிறைச்சாலையில் நடந்தது என்ன? - கைதிகளின் வன்முறைக்கான காரணம்

 

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது சிறைச்சாலை வைத்தியசாலையில் மருந்துகளை வைத்திருந்த கட்டிடத்தை உடைத்து சில மருந்துகளை கைதிகள் அருந்தியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (கட்டுப்பாட்டு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வன்முறையில் ஈடுபட்ட கைதிகளினால் சிறைச்சாலையின் பல்வேறு சொத்துக்களுக்கு சோதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் 2,750 கைதிகள் உள்ளதாகவும் அவர்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 1600 கைதிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உணவு உண்ணும் இடத்தில் ஒன்றுகூடிய குறித்த 1600 கைதிகளும் கதவுகளை உடைத்து வௌியில் வந்து தங்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது சிறைச்சாலை அதிகாரி மற்றும் மேலும் சில அதிகாரிகள் கலந்துரையாட சென்றுள்ள போதிலும் கைதிகள் அவர்களை சுற்றிவளைத்து தாக்க முற்பட்டுள்ளதுடன் கற்களை வீசி எறிந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதிகளுக்கு அறிவுறுத்தி போதிலும் அவர்கள் அடங்காத காரணத்தினால் ரபர் குண்டுகளால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவித்த அவர் இதனையடுத்து சிறைச்சாலையில் மருந்துகள் வைத்திருந்த கட்டிடத்தில் இருந்த மனநோய் சம்பந்தமான மருந்துகள் மற்றும் மேலும் சில மருந்துகளை கைதிகள் பயன்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர்கள் மேலும் வன்முறையில் ஈடுபட்டுள்ளதுடன் சிறைச்சாலையின் பல சொத்துக்களை சேதப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கைதிகளே இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மருந்துகள் வைத்திந்த கட்டிடத்தில் மன அழுத்தம் மற்றும் தூக்க மருந்துகள் 21,000 இருந்ததாகவும் அவற்றை கைதிகள் அருந்தியுள்ளதாகவும் இதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் பித்து பிடித்தவர்கள் போல் நடந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த மருந்துகள் எந்த காரணத்திற்காக எடுத்துவரப்பட்டன என்பன தொடர்பில் விசாரணைகள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 11 பேர் இறந்துள்ளதாகவும் இன்னும் சிலர் கடும் காயங்களுடன் இருப்பதாகவும் அறிய முடிகிறது. இது நிச்சயமாக அரசுக்கு நெருக்கடியை  கொடுக்கும் சம்பவமாகவே பார்க்கப்படுகின்றது. இருந்தாலும் கோட்டா அரசு இதையெல்லாம் கடந்து சென்று விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இறந்தவர்கள் ஏழை எளிய மக்கள்.சிறிது தொகையைக் கொடுத்து வாயை அடைத்துவிடுவார்கள்.அரசுக்கு பாதிப்பேதும் நடக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

மஹர சிறைச்சாலை மோதல்- பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

 
%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%B0-01-696x348.p
 18 Views

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் நேற்று உயிரிழந்தனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்து ராகமை மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரே இவ்வாறு உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் 107 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

https://www.ilakku.org/மஹர-சிறைச்சாலை-மோதல்களில/

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nunavilan said:

மனநோய் சம்பந்தமான மருந்துகள் மற்றும் மேலும் சில மருந்துகளை கைதிகள் பயன்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

என்ன மாதிரி கதை  விடுறாங்கள் உவங்கள் கைதிகளை விட மோசமானவங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Comments
 
 
  •  
     
     
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

இதற்கிடையில், உட்கொண்டால் இரத்தத்தை பார்க்க தூண்டும் எனக்கூறப்படும், “ரிவர்ஸ் மாத்திரை” என்ற போதை மாத்திரையை, கைதிகளை உட்கொள்ள வைத்து

அப்படி ஒரு மாத்திரையை இவர்களே உருவாக்கியுள்ளார்களா? ஒருவேளை புலிகளுடனான யுத்தத்தில் இராணுவத்தினருக்கு வழங்க கண்டுபிடித்திருப்பினம். விமலின் அரிய கண்டுபிடிப்புகளுக்கு அளவே இல்லாமற்போயிற்று.

  • கருத்துக்கள உறவுகள்

மஹரசிறையில் கொரோனா பரவியது எப்படி – நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் சஜித்

 

கொரோனா வைரஸ் விதிமுறைகளைமீறி வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சிறைக்கைதிகள் மஹர சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டமையே மஹர சிறையில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

sajith-parl-300x216.jpg
கொவிட்19 தொடர்பான விதிமுறைகளை மீறி வெலிக்கடையிலிருந்து மஹரசிறைச்சாலைக்கு கைதிகள் மாற்றப்பட்டமையே சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் பரவலைஉருவாக்கியது என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக பதற்றநிலை உருவானது இதற்கு காரணமான நபர் ஜனாதிபதியின் வியத்மஹா அமைப்பைசேர்ந்தவர் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
மஹரசிறைச்சாலை கலவரத்திற்கு மறைமுக சக்தியொன்று காரணம் என இந்த நாடாளுமன்றத்தில் முன்னர் தெரிவிக்கப்பட்டது,வேறு சிலர் தங்கள் சொந்த ஆராய்ச்சிகளின் முடிவினை முன்வைத்தனர் போதைமாத்திரையே இதற்கு காரணம் என தெரிவித்தனர் எனவும் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சர்வதேச அரங்கில் நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கான முயற்சிஇதுவென சிலர் குறிப்பிட்டனர் எனவும் அவர்தெரிவித்துள்ளார்

maharapr4-300x162.jpg
எனினும் நிர்வாகத்தில் பாரிய வெற்றிடம் காணப்படுகின்றது என்பது தெளிவாக தெரிகின்றது சிறைக்கைதிகள் தாங்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை அறிவத்ற்காக பிசிஆர் சோதனைகளை மாத்திரம் கோரினார்கள் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் விதிமுறைகளை மீறி வெலிக்கடையிலிருந்து 120 கைதிகள் மஹர சிறைக்கு மாற்றப்பட்டனர் என்பதை அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ள சஜித் பிரேமதாச இந்த கைதிகளிற்கு பொறுப்பாகவுள்ள பிரதி இயக்குநர் வியத் மகாவின் உறுப்பினர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவரே கைதிகளை வெலிக்கடையிலிருந்து மஹரவிற்கு மாற்றினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது அரசியல் அறிக்கையில்லை இது உண்மை என குறிப்பிட்டுள்ள அவர் இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் கொத்தணி உருவானது இந்த துயரம் இதன்காரணமாகவே உருவானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மஹரசிறையில் கொரோனா பரவியது எப்படி – நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் சஜித் – Thinakkural

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.