Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் தலைசிறந்த உளவு அமைப்பு.அதன் சிறப்பம்சங்களும் தோற்ற வரலாறும்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொசாட் - உலகின் தலைசிறந்த உளவு அமைப்பு.அதன் சிறப்பம்சங்களும் தோற்ற வரலாறும்.

மொசாட். கேட்ட உடனேயே லேசாக அடிவயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும் பெயர்.
உலகின் அதிபயங்கர உளவு அமைப்பு.

இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார். 

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர் வரை இருக்கலாம் என்பது உறுதிப்படுத்தப் படாத தகவல்.

அத்தனை பெரும் உளவாளிகள்.

ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள்.
மொசாத் அமைப்பிற்கு உலகெங்கிலும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு பக்கத்தில் ஒரு மொசாத் இருந்தால்கூட ஆச்சரியமில்லை.

உலகத்தில் இருக்கும் அத்தனை உளவு நிறுவங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தைவிடவும் பல மடங்கு அதிகமானது மொசாத்தின் சம்பளம்

உலகத்தில் உளவு அமைப்புகளுக்காக வரையறுக்கப்பட்ட வரம்புகளைக் காட்டிலும் மிக மிக அதிக அதிகாரத்தைக் கொண்டிருப்பது மொசாத் மட்டுமே.

இஸ்ரேலில் மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கூட ஒரு மொசாத் ஏஜெண்ட், தமது தேசத்தின் எதிரி என்று கருதக்கூடியவர்களைக்கொல்லுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

அரசியல் கொலைகளை அதிகாரபூர்வமாகச் செய்வதற்கு மொசாத் அமைப்பிற்கு அனுமதி இருக்கிறது என்றால் மிகையாகாது.

இந்த உளவு அமைப்பில் உலகத்தில் உள்ள எவரும் சேரலாம்.

யூதர்களுக்கு முன்னுரிமை உண்டு.

ஆனால், அவர்கள் அளிக்கும் பயிற்சிகள் பரம ரகசியமாக வைக்கப்படும்.

கை கால்களை கட்டி கடலில் போட்டால் கூட நெஞ்சை வைத்தே நீத்தி கரைசேர்வது உள்ளிட்ட பயிற்சிகள் கொடுக்கப்படும்.

மொசாட் இஸ்ரேலின் உளவுப்படை. மொசாட்டுக்கென்று தனியாக அலுவலகம் (அறிவிக்கப்பட்டது) எதுவும் கிடையாது.

அரசாங்க வேலைக்கு ஆளெடுப்பு என செய்திதாளில் செய்தி மட்டுமே வரும்.

அதற்கு செல்லும் நபருக்கு, தான் மொசாட் பணிக்குத்தான் செல்கிறோம் என்று கூடத் தெரியாது. இது எல்லா நாடுகளிலும் கிளை விரித்துப் பரவியுள்ளது.

இஸ்ரேலுக்கு தீங்கு விளைவிக்க நினைத்தாலேஅந்த நாட்டின் நிம்மதியை கெடுக்கும் மொசாட்.

அமெரிக்காவின் மேற்பார்வையில் உருவானது மொசாட். பின் நாளில் குருவுக்கே தண்ணி காட்டும்  சிஷ்யனாக வளர்ந்தது.

ஒரு நபரை அவரின் அனுமதியில்லாமல் அவருக்கே தெரியாமல் தன் உளவு வேலைக்கு பயன்படுத்திக் கொள்ளும் திறைமை மொசாட் உளவாளிகளுக்கு  உண்டு.

மொசாட்டில் ஒருவர் சேருவது என்பது சாதாரண விஷயம் இல்லை. பல கட்ட சோதனைகள் இருக்கும்.

பல்வேறு விதமான பயிற்சிகள் என இருக்கும். உலகின் பல மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும்.

எந்தக் கடினமான சூழ்நிலையையும் மிக சாமர்த்தியமாக சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும்.
இந்த சோதனைகளில் பங்கேற்கும் போதே பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டும். இந்த சோதனைகளில் வெற்றி பெற்றுவிட்டால் உளவுக்காக அமர்த்தபடுவார்கள். இல்லையென்றால் அதோடு அவனின் கதை முடிந்தது..

பாகம் 1.

மறுபடியும் வேறு விதமாக கேள்விகள்.

மொசாட் அவ்வளவு பயங்கரமானதா.?

இல்லவே இல்லை!!

 அதிஅதி பயங்கரமானது.

உலகத்தில் வீசப்படும் ஒவ்வொரு குப்பைப் பேப்பரும், பழைய கம்ப்யூட்டர்களும் ஆராயப்படும்.

எனது இந்தப் பதிவு, முந்தைய பதிவிலிருந்து, அதன் லைக், கமெண்ட் வரை தோண்டிவிடுவானுக.

24 மணி நேரமும் காலை ஆட்டிக் கொண்டே இருக்கும் வேட்டை நாய்.

இன்னும் ஒரு அழகான விடயம்.

மொசாட்டை வடிவமைப்பு செய்தது ஒரு பெண்!!

பல்லாண்டுகள் அந்த தேசத்தின் பிரதமர்.

ஜெயா போல, இந்திரா போல, சுப்பீரியர் பர்சனாலிட்டி!!

இது இப்படித் தான் கேள்வி கேட்கும்,
சந்தேகப்படும் நபர்கள் வரலாற்றில் தேவை இல்லை.

ஜெகோவா. உங்களுக்கு ஒரு விருந்தாளி.

தனது மொசாட்டுக்கு உலகத்தில் யார் வேண்டுமானாலும் உளவாளியாக வரலாம் என வெப்சைட் வைத்து உள்ள ஒரே ஒரு உளவு அமைப்பு அதுதான்.

டபிள் செக், ட்ரிபிள் செக், க்வாட்ரோ செக், பென்டா செக், க்யுனோ செக், நேனோ செக்..என பலகட்டப் பரிசோதனை நிகழும்.

நிழல் தவறாக அசைந்தாலும், உங்கள் பரம்பரை அத்திப் பட்டியில் புதைக்கப்பட்ட அஜீத் குடும்பம் தான்.

அப்ப, மற்ற நாடுகளின் உளவு அமைப்புகள்.??

சிம்பிள். அமெரிக்கா 9|11

பிரான்ஸ், பெல்ஜியம், இந்தியா.

உலகம் முழுவதும் குண்டு வெடிப்பு.
ISIS. உலகம் முழுவதும் வெறியாட்டம்.!!

இதுவரை,

இஸ்ரேலில்,

குண்டு எல்லாம் இல்லை. பட்டாசு வெடித்தது என்று செய்தி பார்த்து இருக்கிறீர்களா.??

அதுதான் மொசாட்!!

அதனால் தான் அது மொசாட்.!!

பாகம் 2

சரி.. இதுவரை நீங்கள் சொன்ன மொசாட்டை எவனுமே ஜெயித்ததில்லையா.?

ஆம். ஒரே ஒருவர் உண்டு!!

அவன் இன்று உயிரோடு இல்லை என்கின்றனர். ஆனால் பிணத்தைக் காட்டவில்லை. 

தப்பித்தவறி மீண்டும் உயிரோடு வந்தால்??

அவர்களிடமும், மற்றும் அவர்களது பரம எதிரிகளிடமும், அதாவது பாலஸ்தீன போராளிகளிடமும் ஒரே நேரத்தில் தன் வீரர்களைப் போர் பயிற்சி பெற வைத்தவர்.
கொரில்லா என்ற திடீர்த் தாக்குதல் என்ற உத்தியில்,

தற்கொலைப்படை என்ற ஒன்றை உருவாக்கி, உலகத்தை அதிரச் செய்தவர்!!

மனித வெடிகுண்டு என்ற  ஒருபோர் உத்தியைக்கையாண்ட முதல் போராளி இயக்கம்.

செக்கோஸ்லோவேக்கியா இரண்டாகப்பிரிக்கப்பட்டு,

செக் ரிபப்ளிக் மற்றும் ஸ்லோவேக்கியா எனப்பிரிந்த போது அதில் ஒரு நாட்டிலிருந்து இஸ்ரேலியத் தயாரிப்பு விமானத்தைக் கொண்டு வந்து, அதைவைத்து ஒரு விமானப் படை உருவாக்கியவர்.

அதைவைத்தே அந்த நாட்டுத் தயாரிப்பு  விமானங்களைச்சுக்கு நூறாக்கியவர்.

அவர் பெயர் #கரிகாலன்.

அவருக்கு மற்றொரு பெயர் உண்டு.

ஆம். எம் தலைவர்!!

வேலுப்பிள்ளை_பிரபாகரன்.

இஸ்ரேலிய ஆயுதங்களும், இந்திய ரேடார்களும் பயனின்றிப் போன இடம்.
#கட்டுநாயக விமான தளம்.

மொசாட்கள் மோப்பம் பிடிக்காமல் கோட்டை விட்ட இடம்.

உலகத்தில் மொசாட் தோற்ற இடம் அது.

அதன் பெயர் ஈழம். அதுவே எங்கள் சகோதர தேசம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தற்கொலைப் படையை முதலில் உருவாக்கினார்கள் என்று என்ன நோக்கத்திலோ இந்த சமூகவலைப் பதிவர் சொல்ல அதை நாங்களும் குதூககலமாகப் பரப்பி சர்வதேச நாடுகளில் தடையை நியாயப் படுத்துவது மாதிரி இருக்கு!

ஜப்பானின் கமிகாசி வீரர்கள், இரண்டாம் உலகப் போரிலேயே தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். 

நவீன காலத்தில் தற்கொலைத் தாக்குதலை பேரழிவு ஆயுதமாக்கியது இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள், 1981 இல். பின்னர் ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகள்  தற்கொலைத் தாக்குதல்களை தொடர்ந்து இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிராக செய்து வந்தன (இஸ்ரேலில் பட்டாசு கூட வெடிக்கவில்லையாம் என்று ஆய்வாளர் சொல்கிறார்!😎).

2001 இல் விசேட தடைப்பட்டியலில் புலிகள் அமைப்பை அமெரிக்கா சேர்ப்பதற்கு ஹமாஸ், ஹிஸ்பல்லா வழி வந்த தற்கொலைத் தாக்குதல்களும் ஒரு பிரதான காரணம்! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள இராணுவமும்,சிங்கள பொதுமக்களும் வியந்து  பாராட்டும் ஒரு விடுதலை இயக்கத்தை ஒரு சில தமிழர்களும்,ஒரு சில ஒட்டுக்குளுவன்களும் தூற்றுவதில் வியப்பேதும் இல்லை.

அமெரிக்காவுக்குள் குண்டு என்று  ஒருவர் மனதுக்குள் முணுமுணுத்தாலே CIAக்கு இடிமுழக்க சத்தத்தில் கேட்குமாம்.உடனே உசாராகி விடுவார்களாம். அதே போல் இங்கும் எங்கேயாவது ஒரு இடத்தில் புலி,பிரபாகரன்,சீமான் என்ற சொல் வந்தால் போதும் சிலிர்த்து விடுவார்கள். 

Why do we get goosebumps? | Popular Science

******

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முஸ்லிம்களின் எதிர்ப்பால்(அரசில்) மொசாட் வெளியேற்றப்பட்டது. 

இத்தனை ஆயுதங்கள் வைத்திருந்தும் அமெரிக்காவால் தலபானை அழிக்க முடியவில்லை. அவர்களை பயங்கரவாதிகள் பட்டியலில் போட்டார்கள். அவர்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக மோசமான கட்டுரை. இதற்குள் விடுதலைப் புலிகளை வலிந்து இழுத்தது மிகப் பெரிய அயோக்கியத்தனம்... 😡

சுருக்கமாகச் சொன்னால் இந்தக் கட்டுரை ஒரு குப்பை.. இதற்குப் பதில் எழுதுவதே நேர விரயம்.... 😫

 😏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

புலிகள் தற்கொலைப் படையை முதலில் உருவாக்கினார்கள் என்று என்ன நோக்கத்திலோ இந்த சமூகவலைப் பதிவர் சொல்ல அதை நாங்களும் குதூககலமாகப் பரப்பி சர்வதேச நாடுகளில் தடையை நியாயப் படுத்துவது மாதிரி இருக்கு!

ஜப்பானின் கமிகாசி வீரர்கள், இரண்டாம் உலகப் போரிலேயே தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். 

நவீன காலத்தில் தற்கொலைத் தாக்குதலை பேரழிவு ஆயுதமாக்கியது இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள், 1981 இல். பின்னர் ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகள்  தற்கொலைத் தாக்குதல்களை தொடர்ந்து இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிராக செய்து வந்தன (இஸ்ரேலில் பட்டாசு கூட வெடிக்கவில்லையாம் என்று ஆய்வாளர் சொல்கிறார்!😎).

2001 இல் விசேட தடைப்பட்டியலில் புலிகள் அமைப்பை அமெரிக்கா சேர்ப்பதற்கு ஹமாஸ், ஹிஸ்பல்லா வழி வந்த தற்கொலைத் தாக்குதல்களும் ஒரு பிரதான காரணம்! 

அப்படி பார்த்தால், ஷியா பிரிவு 7 ம் நூற்றாண்டில் இருந்து  அலமட் (Alamut) அரண்மனையை தளமாக  கொண்டு ஷியா வழிபாட்ட்டு தலமும், நம்பிக்கை பீடம் எனும் போர்வையில்  இயங்கிய இரகசிய ஷியா கொலை குழு.

12 ம் நூற்றாண்டில், இவர்களின் சக்தியும், வீச்சும் அதி உசகத்தில் இருந்தது.

இவர்கள், இப்போதைய ஸ்பெஷல் forces போன்று இயங்கினர், மறைக்க கூடிய கத்திகளை கொண்டு, தற் கொலைப்படையாக.

விபரங்கள் :

https://www.nationalgeographic.com/history/magazine/2018/11-12/nizari-ismaili-muslim-warriors-medieval-times/

ஆனால், us உம் இரகசிய தற்கொலை படை வைத்து இருந்தது, அதன் கடற்படையில்.  Spanish armada இற்கு எதிராக பாவிக்கப்பட்டது.

ஆனால், us உம் இரகசிய தற்கொலை படை வைத்து இருந்தது, அதன் கடற்படையில்.  Spanish armada இற்கு எதிராக பாவிக்கப்பட்டது.  

பாண்டியரும் தற்கொலை வைத்து இருந்தனர் ஆபத்து தாவிகள் என்ற பெயரில். 

சோழரும் ஆரம்பத்தில் வைத்து இருந்தனர். சோழரின் பலம் மற்றும் சக்தி எழுச்சியை ஆழமாக ஆராய்ந்தால், ஏறத்தாழ US ஐ போலவே, அன்றைய நிலையில் இருந்தது.   
   
புலிகள், தற்கொலை படை என்பதை வேறு, இதுவரையில் கண்டிராத  பரிமாணத்திற்கு கொண்டு சென்றனர்,  வரலாற்று தடத்தை அடிப்படையாக வைத்து.
 
ஆரும் உளறி கொட்டுவதை படிப்பதை விட இது சம்பந்தமான புத்தகங்களை படிக்கலாம்
netflix  ல மொஸாட் மற்றும் அதன் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நிறைய தொடர்கள் உள்ளன அவற்றை பார்க்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

அப்படி பார்த்தால், ஷியா பிரிவு 7 ம் நூற்றாண்டில் இருந்து  அலமட் (Alamut) அரண்மனையை தளமாக  கொண்டு ஷியா வழிபாட்ட்டு தலமும், நம்பிக்கை பீடம் எனும் போர்வையில்  இயங்கிய இரகசிய ஷியா கொலை குழு.

12 ம் நூற்றாண்டில், இவர்களின் சக்தியும், வீச்சும் அதி உசகத்தில் இருந்தது.

இவர்கள், இப்போதைய ஸ்பெஷல் forces போன்று இயங்கினர், மறைக்க கூடிய கத்திகளை கொண்டு, தற் கொலைப்படையாக.

விபரங்கள் :

https://www.nationalgeographic.com/history/magazine/2018/11-12/nizari-ismaili-muslim-warriors-medieval-times/

ஆனால், us உம் இரகசிய தற்கொலை படை வைத்து இருந்தது, அதன் கடற்படையில்.  Spanish armada இற்கு எதிராக பாவிக்கப்பட்டது.

ஆனால், us உம் இரகசிய தற்கொலை படை வைத்து இருந்தது, அதன் கடற்படையில்.  Spanish armada இற்கு எதிராக பாவிக்கப்பட்டது.  

பாண்டியரும் தற்கொலை வைத்து இருந்தனர் ஆபத்து தாவிகள் என்ற பெயரில். 

சோழரும் ஆரம்பத்தில் வைத்து இருந்தனர். சோழரின் பலம் மற்றும் சக்தி எழுச்சியை ஆழமாக ஆராய்ந்தால், ஏறத்தாழ US ஐ போலவே, அன்றைய நிலையில் இருந்தது.   
   
புலிகள், தற்கொலை படை என்பதை வேறு, இதுவரையில் கண்டிராத  பரிமாணத்திற்கு கொண்டு சென்றனர்,  வரலாற்று தடத்தை அடிப்படையாக வைத்து.
 
கடஞ்சா, நான் சொன்னதையே விரிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். தற்கொலைப் படையென்பது புராதன காலத்திலும் இருந்த விடயம் தான். ஜப்பான் காரன் ஆகாயத்தில் இருந்து குண்டு கட்டிக் கொண்டு பாய்ந்ததால் அது பிரபலமானது. 
குண்டைக் கையில் எடுத்து கொண்டு தாங்கியின் கீழ் ஊர்ந்து சென்ற தற்கொலைத் தாக்குதல்கள் முதல் உலகப் போரிலேயே சில நடந்தவை.

எனவே இது ஒன்றும் தமிழர்கள் கண்டு பிடித்த முதல் விடயம் அல்ல! அப்படி ஒரு கதையைக் கிளப்பி விடுபவருக்கு நல்ல நோக்கம் இருக்காது என்பது உங்களுக்கும் புரியாமலிருப்பது ஆச்சரியம்!

தற்கொலைப்படை இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு அதன் மூலம்  எமது போராட்டம் வலிமை அடைந்த போது மகிழ்வாகவும்😀 அதே தற்கொலைப்படை அரசியல்வாதிகளை கொல்ல பயன்பட்டு போராட்டத்தை பயங்கரவாதமாக முத்திரை குத்த பயன்பட்டு அதன் மூலம்  எமது போராட்டத்தை அழிக்க காரணமாக எதிரியால் பயன்பட்ட  போது கவலையாகவும்😞 இருந்த‍து.  அதாவது ஒரு போராட்ட வடிவம்  எமக்கு ஏறு முகத்தையும் அதை விட அதிகமாக இறங்கு முகத்தையும் தந்த‍து தமிழரின் பட்டறிவு. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kadancha said:

அப்படி பார்த்தால், ஷியா பிரிவு 7 ம் நூற்றாண்டில் இருந்து  அலமட் (Alamut) அரண்மனையை தளமாக  கொண்டு ஷியா வழிபாட்ட்டு தலமும், நம்பிக்கை பீடம் எனும் போர்வையில்  இயங்கிய இரகசிய ஷியா கொலை குழு.

12 ம் நூற்றாண்டில், இவர்களின் சக்தியும், வீச்சும் அதி உசகத்தில் இருந்தது.

இவர்கள், இப்போதைய ஸ்பெஷல் forces போன்று இயங்கினர், மறைக்க கூடிய கத்திகளை கொண்டு, தற் கொலைப்படையாக.

விபரங்கள் :

https://www.nationalgeographic.com/history/magazine/2018/11-12/nizari-ismaili-muslim-warriors-medieval-times/

ஆனால், us உம் இரகசிய தற்கொலை படை வைத்து இருந்தது, அதன் கடற்படையில்.  Spanish armada இற்கு எதிராக பாவிக்கப்பட்டது.

ஆனால், us உம் இரகசிய தற்கொலை படை வைத்து இருந்தது, அதன் கடற்படையில்.  Spanish armada இற்கு எதிராக பாவிக்கப்பட்டது.  

பாண்டியரும் தற்கொலை வைத்து இருந்தனர் ஆபத்து தாவிகள் என்ற பெயரில். 

சோழரும் ஆரம்பத்தில் வைத்து இருந்தனர். சோழரின் பலம் மற்றும் சக்தி எழுச்சியை ஆழமாக ஆராய்ந்தால், ஏறத்தாழ US ஐ போலவே, அன்றைய நிலையில் இருந்தது.   
   
புலிகள், தற்கொலை படை என்பதை வேறு, இதுவரையில் கண்டிராத  பரிமாணத்திற்கு கொண்டு சென்றனர்,  வரலாற்று தடத்தை அடிப்படையாக வைத்து.
 
பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து.

இங்கே பந்தி என்பது பந்திப் படை என்றும் ஏறக்குறைய தற்கொலைப் படைக்குச் சமானமானது என்றும் ஒரு பார்வை உண்டு. 

பந்திப்படையில் இருப்பது பெருமையாகவும், கெளரவமாகவும்பார்க்கப்பட்டுள்ளது. இப்படையில் இருந்து போருக்குச் செல்பவர்கள் உயிருடன் திரும்பி வருவது அரிதானதாக கூறப்படுகிறது.

46 minutes ago, tulpen said:

தற்கொலைப்படை இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு அதன் மூலம்  எமது போராட்டம் வலிமை அடைந்த போது மகிழ்வாகவும்😀 அதே தற்கொலைப்படை அரசியல்வாதிகளை கொல்ல பயன்பட்டு போராட்டத்தை பயங்கரவாதமாக முத்திரை குத்த பயன்பட்டு அதன் மூலம்  எமது போராட்டத்தை அழிக்க காரணமாக எதிரியால் பயன்பட்ட  போது கவலையாகவும்😞 இருந்த‍து.  அதாவது ஒரு போராட்ட வடிவம்  எமக்கு ஏறு முகத்தையும் அதை விட அதிகமாக இறங்கு முகத்தையும் தந்த‍து தமிழரின் பட்டறிவு. 

இங்கே சரியான பார்வை என்று ஒன்றுமே இல்லை. ஜப்பானியர்கள் கமிக்காசியாக இறப்பது மேன்மையானதாகக் கருதினார்கள். 

தேவைக்கேற்ப ஒவ்வொரு இனங்களினதும் பார்வை மாறுபடுகிறது.

****

கட்டுரையில் இருப்பது அதை எழுதியவரின் கற்பனையான வெட்டிப் பெருமையை விட ஏதுமில்லை என்பது தான் என் கருத்து. ஈழத்தில் மொசாட் தோற்றது என்பது நகைச்சுவை. ஈழத்தில் மொசாட்டே தோற்றது என்றால் ஈழம்  படு தோல்வியுற்றது ஏன் என்று கேட்டால் இதை விட நகைச்சுவைக்கதைகளை கூறுவார்களே தவிர உண்மை கரணங்களை ஆராயமட்டார்கள்.  இப்படியான நகைச்சுவை கதைகள் எமது எதிர்கால போராட்டத்திற்கு உதவாது. எதிர் மறையான விளைவையே தரும். எதிர் கால சந்ததி  தமது சொந்தப் புத்தியில் போராராடி வெல்லட்டும். 👍👍அதன் பின்னர் அவர்கள் இந்த  வெட்டிப் பெருமை  வீணர்களின் நகைச்சுவை கதைகளை வைத்து comedy film  எடுத்து ஒஸ்கார் விருதுக்கு அனுப்பட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெட்டிப் பெருமை பேசும்  நகைச்சுவை கதைகளை ஆரம்பத்தில் நல்ல நகைச்சுவை கதைகள் என்று படித்து சிரித்தாலும் இப்போது எல்லாம்  மிகவும் அலுத்து விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, Kapithan said:

மிக மிக மோசமான கட்டுரை. இதற்குள் விடுதலைப் புலிகளை வலிந்து இழுத்தது மிகப் பெரிய அயோக்கியத்தனம்... 😡

சுருக்கமாகச் சொன்னால் இந்தக் கட்டுரை ஒரு குப்பை.. இதற்குப் பதில் எழுதுவதே நேர விரயம்.... 😫

 😏

இந்த குப்பையை வாசிக்காமல் சரி விடுவம்.....
வாசித்ததுதான் வேஸ்டு.....அதுக்கு கருத்து எழுதாமல் போயிருந்தாலே நேரம் மிச்சமாயிருக்கும் எல்லோ....? 😁

நேரம் பொன்னான ஆக்கள் ஏன் இப்பிடியான திரிகளுக்குள் எழுதி நேரத்தை பாழாக்குறியள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

இந்த குப்பையை வாசிக்காமல் சரி விடுவம்.....
வாசித்ததுதான் வேஸ்டு.....அதுக்கு கருத்து எழுதாமல் போயிருந்தாலே நேரம் மிச்சமாயிருக்கும் எல்லோ....? 😁

நேரம் பொன்னான ஆக்கள் ஏன் இப்பிடியான திரிகளுக்குள் எழுதி நேரத்தை பாழாக்குறியள்🤣

அப்போ கடுப்பை எப்படித் தானையா காட்டுவது?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இந்த குப்பையை வாசிக்காமல் சரி விடுவம்.....
வாசித்ததுதான் வேஸ்டு.....அதுக்கு கருத்து எழுதாமல் போயிருந்தாலே நேரம் மிச்சமாயிருக்கும் எல்லோ....? 😁

நேரம் பொன்னான ஆக்கள் ஏன் இப்பிடியான திரிகளுக்குள் எழுதி நேரத்தை பாழாக்குறியள்🤣

பெரியவர்..

1) இந்தக் கட்டுரை மிம மிகத் தரம் குறைந்த, மிகப் பிழையான, பொய்யான தரவுகளை ஆதாரங்களாக, நாசூக்காக வாசிப்பவர்களை ஏமாற்றும் நோக்கில் எழுதப்பட்டதாக(நான்) உணருகிறேன். அதனால்தான் கடுமையாக எனது கருத்தை முன் வைத்தேன்.

2) எங்கள் விடுதலைப் போராட்டத்தை ஏன் இதற்குள் இழுக்க வேண்டும்.. ? 

கவனியுங்கள்..

தலைப்பு ..

உலகின் தலைசிறந்த உளவு அமைப்புக்கள்...

அதன் சிறப்பம்சங்கள்...

அவற்றின் தோற்றம்...

மேற்கூறிய ஒன்றேனும் கட்டுரையில் கூற அல்லது உள்ளடக்கப்பட்டுள்ளதா.. ?

கட்டுரையின் உள்ளடக்கத்தில் எத்தனை வீதமான தரவுகள் உறுதிப்படுத்தப் பட்டவை (மிகப் பெரும்பாலான தகவல்கள் ஊதிப் பெருப்பிக்கப்பட்டவை...)

இதற்குள் விடுதலைப் போராட்டத்தை வலிந்து திணிப்பதற்கான காரணம்/தேவை என்ன..?

ஒருவர் மொசாட்டைப் பற்றியோ அல்லது CIA தொடர்பாகவோ அல்லத் KGB தொடர்பாக எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகட்டும். அதையிட்டு நாங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. வாசித்துவிட்டு அத்துடன் அதை மறந்து போகலாம்.

ஆனால் எங்கள் போராடத்தை வலிந்து திணிப்பதற்கான ஏதாவது ஒரு காரணத்தை இந்தக் கட்டுரையில் காட்ட முடியுமா.. ?

யாரை நோக்கி இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.. ?

சற்று யோசியுங்கள். 

(Mossad தொடர்பாக இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னர் Gate Keepers எனும் தொடர் விவரணச் சித்திரம்(Nerflix.. ?) வெளிவந்தது. பல சுவாரசியமான தகவல்கள் அதில் உள்ளன. தேடிப் பாருங்கள். நிச்சயம் விரும்புவீர்கள்))

👍

2 hours ago, ஈழப்பிரியன் said:

அப்போ கடுப்பை எப்படித் தானையா காட்டுவது?

உங்களுக்கும் சேர்த்துத்தான் பதில் மேலே எழுதப்பட்டுள்ளது. புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். 😀

9 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்த வெட்டிப் பெருமை பேசும்  நகைச்சுவை கதைகளை ஆரம்பத்தில் நல்ல நகைச்சுவை கதைகள் என்று படித்து சிரித்தாலும் இப்போது எல்லாம்  மிகவும் அலுத்து விட்டது.

பொதுவாக கதாசிரியர்கள் எழுதும் கற்பனைக் கதைகள் ஆரம்பத்தில் சுவார்ஷியமாக இருந்தாலும் அக்கதைகள்  ஒரே மாதிரி தொடர்ந்தும்  இருந்தால் காலப்போக்கில் அந்த கதைகளை வாசிக்கும் போது சலிப்பு வருவது இயல்பு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரியுக்குள்ளை எங்கடை சாந்தியக்காவும் வந்து போய் இருக்கிறா எண்டேக்கை மொசாட்டிலை ஏதோ விசயம் இருக்கு....😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.