Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
BOWLING O M R W ECON WD NB
DL Chahar 4 0 48 0 12.00 2 0
Washington Sundar 4 0 35 0 8.75 1 0
SN Thakur 4 0 39 1 9.75 1 0
T Natarajan 4 0 20 2 5.00 0 0
YS Chahal 4 0 51 1 12.75 1 0

 

2.pngAUS
194/5
(19.4/20 ov, target 195)
195/4

இன்று நடந்து முடிந்த  20 போட்டியில் 
நடராஜன் 4 ஓவர்கள் பந்துவீசி 20 ரண்கள் கொடுத்து 2 விக்கட்டுகள் எடுத்துள்ளார்.

 

  • Replies 111
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-12-06-21-44-35-911-com-a 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Screenshot-2020-12-06-21-44-35-911-com-a 

புரட்சி ஏன் இரண்டு பேருமே மேலேயே பார்க்கிறார்கள்?

ஒருவர் வேகப்பந்து வீச்சாளர்
மற்றவர் சுழற்பந்து வீச்சாளர்.கூடவே கொஞ்சம் அடித்து விளையாடவும் கூடியவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

புரட்சி ஏன் இரண்டு பேருமே மேலேயே பார்க்கிறார்கள்?

 

ஆண்டவனுக்கு நன்றி சொல்லத்தான் ..!

55 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒருவர் வேகப்பந்து வீச்சாளர்
மற்றவர் சுழற்பந்து வீச்சாளர்.கூடவே கொஞ்சம் அடித்து விளையாடவும் கூடியவர்.

நடராஜன் கொஞ்சம் துடுப்பாட்டதிலும் கவனம் செலுத்த வேண்டும் .. 

50 - 30/2 , 70 - 50/3 

முறையே ,

50 ரன்கள் பேட்டிங்கில் , பந்து வீசி 30 ரன் கொடுத்து 2 விக்கெற் எடுப்பது ..

70 ரன்கள் பேட்டிங்கில் , பந்துவீசி 50 ரன் கொடுத்து 3 விக்கெற் எடுப்பது 

இது தான் சகலதுறை ஆட்டக்காரருக்கு கிந்திய அணியில் கணக்கில் எடுப்பது ..

"ரொபின் சிங்" என்பவர் நீண்ட நாட்களாக அணியில் இடம்பிடித்தார்..

icoXXI.jpg

அணியில் தவிர்க்க முடியாத சக்தியாக நீண்ட நாட்கள் இடம் பெற வாழ்த்துவம் தோழர்..👍

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆண்டவனுக்கு நன்றி சொல்லத்தான் ..!

நடராஜன் கொஞ்சம் துடுப்பாட்டதிலும் கவனம் செலுத்த வேண்டும் .. 

50 - 30/2 , 70 - 50/3 

முறையே ,

50 ரன்கள் பேட்டிங்கில் , பந்து வீசி 30 ரன் கொடுத்து 2 விக்கெற் எடுப்பது ..

70 ரன்கள் பேட்டிங்கில் , பந்துவீசி 50 ரன் கொடுத்து 3 விக்கெற் எடுப்பது 

இது தான் சகலதுறை ஆட்டக்காரருக்கு கிந்திய அணியில் கணக்கில் எடுப்பது ..

"ரொபின் சிங்" என்பவர் நீண்ட நாட்களாக அணியில் இடம்பிடித்தார்..

icoXXI.jpg

அணியில் தவிர்க்க முடியாத சக்தியாக நீண்ட நாட்கள் இடம் பெற வாழ்த்துவம் தோழர்..👍

அவ‌ர் தன‌க்கு ப‌ட்ட‌ தூக்கி அடிக்க‌ தெரியாது என்று சொல்லி இருக்கிறார் , கொஞ்ச‌ம் த‌ன்னும்  ப‌ட்டிங் செய்தா ந‌ல்லா இருக்கும் ,  பெடிய‌னை ப‌ற்றி தான் எல்லா ஊட‌க‌ங்க‌ளிலும் செய்தி , இந்தியா அணியில் நிர‌ந்த‌ இட‌ம் பிடிப்பார் என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு , பொறுத்து இருந்து பாப்போம் , 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அவ‌ர் தன‌க்கு ப‌ட்ட‌ தூக்கி அடிக்க‌ தெரியாது என்று சொல்லி இருக்கிறார் , கொஞ்ச‌ம் த‌ன்னும்  ப‌ட்டிங் செய்தா ந‌ல்லா இருக்கும் ,  பெடிய‌னை ப‌ற்றி தான் எல்லா ஊட‌க‌ங்க‌ளிலும் செய்தி , இந்தியா அணியில் நிர‌ந்த‌ இட‌ம் பிடிப்பார் என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு , பொறுத்து இருந்து பாப்போம் , 

பையா இவரால் நீண்டநாள் நிலைக்க முடியாது.
இப்பவே வயது 29.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, ஈழப்பிரியன் said:

பையா இவரால் நீண்டநாள் நிலைக்க முடியாது.
இப்பவே வயது 29.

29 ஒரு பெரிய வயதே???? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா இவரால் நீண்டநாள் நிலைக்க முடியாது.
இப்பவே வயது 29.

5-6 ஆண்டுகள் சிறப்பாக விளையாடினால் போதும் என்று நினைக்கிறேன்.

அவர் சாதனைகள் செய்வது அவரது கிராம, மாவட்ட, மாநில இளையோர் முன்மாதிரியாக கொள்வர். தன்னுடைய கிராமத்திலேயே பயிற்சி மையம் தொடங்கியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பாடு கொடுக்கவே முடியாத நிலைமை ..

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பையா இவரால் நீண்டநாள் நிலைக்க முடியாது.
இப்பவே வயது 29.

இவருக்கு பொறாமை🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

பையா இவரால் நீண்டநாள் நிலைக்க முடியாது.
இப்பவே வயது 29.

மூத்த‌வ‌ரே இவ‌ரை முன்னாள் இந்தியா வீர‌ர்க‌ளுட‌ன் இவ‌ரின் வ‌ய‌தை ஒப்பிட்டு பார்த்தா , இவ‌ர் இன்னும் இந்தியா அணியில் குறைந்த‌து 8 வ‌ருட‌ம் த‌ன்னும் விளையாட‌லாம் ,  100 ஒரு நாள் போட்டிய‌ இந்த‌ 8 வ‌ருட‌த்தில் க‌டந்திட‌லாம் , இந்தியா அணி இவ‌ரை 20ஓவ‌ர் விளையாட்டில் தான் அதிக‌ம் ப‌ய‌ன் ப‌டுத்துவின‌ம் , பெடிய‌ன் முத‌ல் விளையாடின‌ 20ஓவ‌ர் போட்டியில் குறைந்த‌ ஓட்ட‌ம் தான் கொடுத்தார் , பில்ட‌ர்க‌ள் விட்ட‌ த‌வ‌றால் 5 ஓட்ட‌ம் இவ‌ரின் ஓவ‌ரில் தேவை இல்லாம‌ போய் விட்ட‌து , 

ப‌ல‌ரின் ம‌ன‌தில் இட‌ம் பிடிச்ச‌து என்றால் அது ந‌ட‌ராஜ‌ன் தான் 

5 hours ago, குமாரசாமி said:

29 ஒரு பெரிய வயதே???? 🤣

அப்ப‌டி போடு தாத்தா , 29 எல்லாம் ஒரு வ‌ய‌தா , இப்ப‌ தான் ந‌ல்ல‌ துடியாட்ட‌மாய் விளையாடுகிற‌ வ‌ய‌து , டில்சான் 40 வ‌ய‌து வ‌ர‌ விளையாடின‌வ‌ர் இல‌ங்கை அணியில் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

இவருக்கு பொறாமை🤣

 

1 hour ago, பையன்26 said:

மூத்த‌வ‌ரே இவ‌ரை முன்னாள் இந்தியா வீர‌ர்க‌ளுட‌ன் இவ‌ரின் வ‌ய‌தை ஒப்பிட்டு பார்த்தா , இவ‌ர் இன்னும் இந்தியா அணியில் குறைந்த‌து 8 வ‌ருட‌ம் த‌ன்னும் விளையாட‌லாம் ,  100 ஒரு நாள் போட்டிய‌ இந்த‌ 8 வ‌ருட‌த்தில் க‌டந்திட‌லாம் , இந்தியா அணி இவ‌ரை 20ஓவ‌ர் விளையாட்டில் தான் அதிக‌ம் ப‌ய‌ன் ப‌டுத்துவின‌ம் , பெடிய‌ன் முத‌ல் விளையாடின‌ 20ஓவ‌ர் போட்டியில் குறைந்த‌ ஓட்ட‌ம் தான் கொடுத்தார் , பில்ட‌ர்க‌ள் விட்ட‌ த‌வ‌றால் 5 ஓட்ட‌ம் இவ‌ரின் ஓவ‌ரில் தேவை இல்லாம‌ போய் விட்ட‌து , 

ப‌ல‌ரின் ம‌ன‌தில் இட‌ம் பிடிச்ச‌து என்றால் அது ந‌ட‌ராஜ‌ன் தான் 

அப்ப‌டி போடு தாத்தா , 29 எல்லாம் ஒரு வ‌ய‌தா , இப்ப‌ தான் ந‌ல்ல‌ துடியாட்ட‌மாய் விளையாடுகிற‌ வ‌ய‌து , டில்சான் 40 வ‌ய‌து வ‌ர‌ விளையாடின‌வ‌ர் இல‌ங்கை அணியில் 

நடராஜன் தொடர்ந்தும் விளையாடினால் சந்தோசமே.
இந்திய அணியில் விளையாட்டு மாத்திரம் ஆளைத் தக்க வைக்காது.
ஆரம்பம் முதல் நடராஜனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பலரில் நானும் ஒருவனாக இருக்கிறேன்.
அடுத்த ஐபிஎல் இல் முன்னரைவிட கூடுதலான கோடிக்கு விலை போவார்.
இவரது ஒரு பேட்டியில் பணம் இல்லாததால் 2 வருடம் வெறும் காலுடன் விளையாடிதாக கூறியிருந்தார்.

6 hours ago, குமாரசாமி said:

29 ஒரு பெரிய வயதே???? 🤣

 

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலக கோப்பைக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து நடராஜன்: கேப்டன் விராட் கோலி

டி20 உலக கோப்பைக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து நடராஜன்:  கேப்டன் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 நிலைகளிலான போட்டிகளில் விளையாடி வருகிறது.  இதில், ஒரு நாள் போட்டி தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.  இதனை தொடர்ந்து நடந்த இருபது ஓவர் போட்டியில் இடதுகை பந்து வீச்சாளர் நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்திய அணியின் முகமது சமி மற்றும் பும்ரா விளையாடாத நிலையில் நடராஜன் தனக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தினார்.  தனது அறிமுக போட்டியிலேயே அவரது அற்புதமான ஆட்டம் வெளிப்பட்டது.

இதுபற்றி கூறிய விராட் கோலி, பும்ரா மற்றும் சமி இல்லாத சூழலில் சிறந்த முறையில் நடராஜன் விளையாடினார்.  நெருக்கடியான நிலையில் உண்மையில் நின்று விளையாடினார்.  சர்வதேச அளவில், நடைபெற்ற போட்டியில் சிறந்த ஆட்டத்தினை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

அவர் மிக தேர்ந்தவராக, கடின உழைப்பு மற்றும் பணிவு கொண்டவராகவும் இருக்கிறார்.  அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.  இடதுகை பந்து வீச்சாளர் என்பவர் எப்பொழுதும் அணிக்கு கிடைக்க கூடிய ஒரு சொத்து.  இதேபோன்று களத்தில் அவரது ஆட்டம் தொடர்ந்து வெளிப்பட்டால், அடுத்த ஆண்டு நடைபெறும் சர்வதேச டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு சிறந்த ஒன்றாக இருக்கும் என கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/09021238/Natarajans-assets-for-the-T20-World-Cup--Captain-Virat.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் நாயகன் விருது கோப்பையை நடராஜன் கையில் வழங்கி அழகு பார்த்த ஹர்திக் பாண்ட்யா

தொடர் நாயகன் விருது கோப்பையை நடராஜன் கையில் வழங்கி அழகு பார்த்த ஹர்திக் பாண்ட்யா

சிட்னி:

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

ஒருநாள் போட்டி தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி, தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டியில் பங்கேற்றது. கான்பெர்ராவில் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்திலும், சிட்னியில்  நடந்த 2-வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தியது.


 
இதற்கிடையே, இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு  செய்தது.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் வேட் 80 ரன்னும், மேக்ஸ்வெல் 54 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

187-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை துவக்கியது. தொடக்க வீரர் கேஎல் ராகுல் ரன் எதுவும் இன்றி வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

கேப்டன் விராட் கோலி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. அதிரடியாக ஆடிய விராட் கோலி 85 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது.

ஆனாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20  ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. 

ஹர்திக் பாண்ட்யாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால், அதை பெற்றுக் கொண்ட ஹர்திக், அந்த விருதுக்கு தகுதியானவர் தமிழக வீரர் நடராஜன் என்று கூறி கோப்பையை அவரிடம் வழங்கினார். இதேபோல, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலியும், 20 ஓவர்  தொடருக்கான கோப்பையை நடராஜனிடம் வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/12/09031222/2147398/Tamil-News-Hardik-Pandya-Hands-Man-Of-The-Series-Award.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people sitting

நம்ம, நடராஜன் தான்...
பாசக்கார பயபுள்ள போல... 😍😍😍😍

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பம்பட்டி ரூ சிட்னி ..👍

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கிராமத்திலிருந்து ஒரு தளபதி!

நடராஜன்

நடராஜன்

முதல் போட்டியில், அதுவும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தற்போதிருக்கும் பார்முக்கு நடராஜன் தாக்குப்பிடிப்பது கஷ்டம்தான் என கோலி நினைத்திருக்கக்கூடும்.

பிரீமியம் ஸ்டோரி
தன் கேப்டன்சியைக் காப்பாற்ற சின்னப்பம் பட்டியில் இருந்து, தங்கராசு நடராஜன் என ஓர் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் வருவார் என கோலி கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்!
தமிழ்க் கிராமத்திலிருந்து ஒரு தளபதி!
 

‘கோலி கேப்டன்சியில் இருந்து விலக வேண்டும்’ என்கிற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்த நேரத்தில்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்திருந்தார் கேப்டன் கோலி. டி20 தொடரும் கைவிட்டுப்போனால் அவராகவே கேப்டன்சியில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டுவிடுவார் என ஆரூடங்கள் சொல்லப்பட்ட நிலையில், நடராஜனால் நிகழ்ந்திருக்கிறது அந்த அதிசயம்... அற்புதம்!

ஒருநாள் தொடர் 3-0 என முடிந்து, கோலி அவமானங்களை சுமந்திருந்திருக்க வேண்டிய நேரமது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் ‘எதற்கும் ஒரு முயற்சியாக இருக்கட்டும்’ எனத் தன்னுடைய வழக்கமான பிளேயிங் லெவனைக் கலைத்து நடராஜனை அணிக்குள் கொண்டுவந்திருந்தார் கோலி. அதுவும் முகமது ஷமிக்குப் பதிலாக!

தமிழ்க் கிராமத்திலிருந்து ஒரு தளபதி!
 

முதல் போட்டியில், அதுவும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தற்போதிருக்கும் பார்முக்கு நடராஜன் தாக்குப்பிடிப்பது கஷ்டம்தான் என கோலி நினைத்திருக்கக்கூடும். ஆனால், நடராஜன் ஒன்றும் சாதாரண பெளலர் இல்லையே. வயல்வெளிகளில், கிரிக்கெட் பிட்ச் என்றால் என்னவென்றே தெரியாத முரட்டு மைதானங்களில், டென்னிஸ் பந்துகளில் விளையாடிப்பழகிய எளிய வனுக்கு ஒரு முதல் வாய்ப்பு கிடைத்தால் அது என்னவாக மாறும் என்பதை ஒட்டுமொத்த உலகமே இப்போது வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.

ரன் அதிகம் கொடுக்காமல் எக்கனாமிக்கலாகப் பந்துவீசும் பெளலர்களைவிட, பார்ட்னர் ஷிப்களை உடைக்கும், முக்கிய பேட்ஸ் மேன்களைப் பெவிலியனுக்கு அனுப்பும் பெளலர்களை கேப்டன்களுக்கு ரொம்பவே பிடிக்கும். கோலிக்கு இன்றைய தேதியில் மிகவும் பிடித்த பெளலர் நடராஜனாகத்தான் இருக்கமுடியும்.

தமிழ்க் கிராமத்திலிருந்து ஒரு தளபதி!
 

‘‘ஐபிஎல் பர்பாமென்ஸை வெச்சுலாம் ஒருவரை சர்வதேச கிரிக்கெட்டுக்குக் கொண்டு வரக்கூடாது. வெறும் யார்க்கர் மட்டும் வீசக்கூடிய பெளலரைத் தூக்கிக் கொண்டாடுவதா?’’- நடராஜன் இந்தியாவின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று செய்திபரவிய அந்த நொடி முதலே இப்படி விமர்சனங்கள் பறந்தன. ‘‘இவன்லாம் ஒன்டைம் வொண்டர்ப்பா...’’ என வெளிப்படையாகவே மைக் பிடித்துப் பேசினார்கள் ‘பிரபல’ வர்ணனையாளர்கள். ஸ்டீவ் ஸ்மித்துக்கு நடராஜன் வீசிய அந்த 5 பந்துகளில் அவர்களுக்கான பதில் கிடைத்தது. முதல் மூன்று சர்வதேசப் போட்டிகளில் நடராஜன் எடுத்த 7 விக்கெட்டுகளைவிடவும் ஸ்மித்துக்கு அவர் வீசிய 5 பந்துகள் கொண்டாடப்பட வேண்டியவை.

தமிழ்க் கிராமத்திலிருந்து ஒரு தளபதி!
 

மிகுந்த மனவலிமையும், ஷாட் மேக்கிங்கில் மிகப்பெரிய தெளிவும் கொண்ட உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் சதங்கள் அடித்து, அதுவும் குறைந்த பந்துகளில் அடித்து, பார்மின் உச்சத்தில் இருந்தார் ஸ்மித். மார்னஸ் லாபுசேனை ஐந்தாவது ஓவரின் முதல் பந்தில் வீழ்த்திவிட்டு ஸ்மித்தை பிட்சுக்குள் வரவைத்தார் நடராஜன். முதல் பந்தை எப்போதுமே அடித்து ஆடாமல் டாட் பாலாக ஆடுவது ஸ்மித் ஸ்டைல். நடராஜனின் முதல் பந்தையும் பேட்டால் தொடாமல் விட்டார் ஸ்மித். நடராஜனிடம் இருந்து யார்க்கர் வரும், ஸ்ட்ரெய்ட் பவுண்டரி அடிக்கலாம் எனக் காத்திருந்த ஸ்மித்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விக்கெட் மெய்டன் எடுத்தார் நடராஜன். இவர் ஏற்படுத்திய பிரஷரால் வந்தவேகத்திலேயே அவுட் ஆகிக் கிளம்பினார் ஸ்மித். இந்தியா வெற்றிபெற்றது.

இந்தியா தொடரை வென்ற இரண்டாவது டி20 போட்டியில் நடராஜனின் பங்கு மிக மிக முக்கியமானது. சாஹல், தீபக் சஹார், சுந்தர், ஷ்ரதுல் என மற்ற இந்திய பௌலர்களை வெளுத்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் நடராஜனின் பந்துகளைத் தொடவே முடியவில்லை.

தமிழ்க் கிராமத்திலிருந்து ஒரு தளபதி!
 
தமிழ்க் கிராமத்திலிருந்து ஒரு தளபதி!
 

முந்தைய போட்டியில் யார் சிறப்பாகப் பந்துவீசி அச்சுறுத்தலாக இருக்கி றார்களோ, அந்த பெளலரை டார்கெட் செய்து மொத்தமாக அவரின் தன்னம்பிக்கையைக் காலி செய்வதுதான் ஆஸ்திரேலியர்களின் கேம் பிளானாக இருக்கும். ஆனால், நடராஜனின் நம்பிக்கையை அவர்களால் சிதைக்க முடியவில்லை. அவரின் நான்கு ஓவர்களில் வெறும் 20 ரன்கள்தான் ஆஸ்திரேலிய பேட்ஸ் மேன்களால் எடுக்கமுடிந்தது. டார்சி ஷார்ட் மற்றும் ஹென்ரிக்ஸ் ஆகியோர் தங்கள் விக்கெட்களையும் இழந்திருந் தார்கள். ஷார்ட் அவுட் ஆனது நடராஜனின் ஷார்ட் பாலில். ஹென்ரிக்ஸ் அவுட்டானது கட்டரில். யார்க்கர் மட்டுமே வீசி விக்கெட் எடுக்கக்கூடியவர் என்கிற விமர்சனம் உடைந்தது.

தமிழ்க் கிராமத்திலிருந்து ஒரு தளபதி!
 

2011 உலகக்கோப்பையை இந்தியா வெல்ல மிக முக்கியக் காரணங்களில் ஒருவர் ஜாகிர் கான். இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜாகிர்கான்தான் தோனியின் பக்கபலமாக இருந்தார். 2021, 2022, 2023 எனத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் மூன்று உலகக்கோப்பைத் தொடர்கள் நடக்கவிருக்கும் நிலையில் இந்தியாவின் கோப்பைக் கனவுகளை நனவாக்கும் முக்கிய வீரராக ‘சின்னப்பம்பட்டி’ நடராஜன் இருப்பார் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்பும்!

 

 

 

https://sports.vikatan.com/cricket/successful-story-of-cricketer-tamilian-t-natarajan

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப வலிச்சா போய் புளியமரத்துல தொங்கிடு | உடனே விழி தமிழா

தம்பி நடராஜன் பற்றி இப்படித்தான் பேசுவார்கள் ஏனென்றால் அவர் தமிழன் வாழ்த்துக்கள் வாழ்க நடராஜன்

 

  • கருத்துக்கள உறவுகள்

நடராஜனுக்கு புகழ் போதை | இவனெல்லாம் ஊடகமா ?

 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, உடையார் said:

நடராஜனுக்கு புகழ் போதை | இவனெல்லாம் ஊடகமா ?

 

பார்ப்பன, மலையாள ஊடகங்கள் தமது ஆற்றாமையை வெளிப்படுத்துவது வழமையானதே. அவர்கள் வழியில் போய் கருத்தால் தாக்கினால் போதுமானது.
நடராஜன் ஆங்கிலம் பேசுவதை கேட்டுள்ளேன். சரளமாக பேசுவாரோ தெரியவில்லை. மற்றுமொரு இந்திய அணி வீரரை Pommie Mbangwa  பேட்டி காணும் போது (யாரென்று நினைவில் இல்லை} கே.எல் ராகுல் மொழிபெயர்த்தார். அப்போ இந்த ஊடகங்கள் அவருக்கு  ஆங்கிலம் தெரியவில்லை என ஏன் கூறவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக நட்டு வளர்கிறார்.முன்பு ரகுமான் ஆஸ்கார வாங்கிய போது எரிந்தது தொடரந்து எரிகிறது.இன்னும் எரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/12/2020 at 14:39, ஈழப்பிரியன் said:

பையா இவரால் நீண்டநாள் நிலைக்க முடியாது.
இப்பவே வயது 29.

நீங்கள் சொல்வது சரிதான். வேகப்பந்து வீச்சை மட்டுமே நம்பி இருக்கும் வீரர் 33 க்கு மேல் தாக்கு பிடித்தாலே அதிசயம்தான். 

தனியே T20 யில் மட்டும் விளையாடினால் கொஞ்சம் நீட்டிக்கலாம்.

ஆனால் நூலில்லாமல் நடராஜ் இதுவரை செய்ததே வாழ்நாள் சாதனைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

நூல், இல்லாதது... ஒன்னே ஒன்னு தான் குறை.

 

Image may contain: 1 person, text that says 'ஒரு பந்து வச்சாளர் விக் வீழ்த்தும்போது, பாராட்டுகள் வரும். ஆனால் விக்கெட் வீழ்த்தும்போது நடராஜன், மட்டும், ஏதோ அவர், இந்நாட்டிற்காக எல்லை யில் நின்று, எதிரிகளை துவம்சம் போல, செய்தது தமிழகத்தில் சிலர், 'பில்டப்' கொடுக்கின்றனர் சமூக வலைதளங்களில், அவரை ஏகத்துக்கும் புகழ்வது, அதிருப்தியை தருகிறது. இது போதாது என, அரசியல் தலைவர் கள், தங்கள் பங்கிற்கு, அவருக்கு வாழ்த்து நடராஜன் ஆஸ்திரேலியாவுல போட்ட யார்க்கர் இங்க வர பதம் பாத்துருக்கு போலயே!'

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.