Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!"

Featured Replies

வசம்பரே. யாழில் உண்மை சொல்லும் ஒரே ஒரு நபர் நீங்கள் தானாமே? சரி அப்படியெண்டால் சிவாஜி படம் எப்படி? இன்று முதல் ஷோ பார்த்தாச்சாமே? யாழ்.கொம்மில் சிவாஜி படத்தை முதல் முதலாக பார்த்த பெருமை இந்த வசம்புவையே சாரும் என்று படம் பார்த்து வெளியே வரும்பொழுது டீ விக்கிற பையனுக்கு சொல்லி பெருமை பட்டதாக அறிந்தேனே??? சரி எப்படி இசை? எப்படி சங்கரின் கமரா? ரஜனினின் விக் ஒருக்காலும் களரவே இல்லையா? நம்ம ஷ்ரேயா எப்படி இருக்கிறாங்க?? :D

அப்ப மகேஸ்....??? :angry: :angry: :angry: :D:D:D

  • Replies 217
  • Views 23.4k
  • Created
  • Last Reply

வசம்பரே. யாழில் உண்மை சொல்லும் ஒரே ஒரு நபர் நீங்கள் தானாமே? சரி அப்படியெண்டால் சிவாஜி படம் எப்படி? இன்று முதல் ஷோ பார்த்தாச்சாமே? யாழ்.கொம்மில் சிவாஜி படத்தை முதல் முதலாக பார்த்த பெருமை இந்த வசம்புவையே சாரும் என்று படம் பார்த்து வெளியே வரும்பொழுது டீ விக்கிற பையனுக்கு சொல்லி பெருமை பட்டதாக அறிந்தேனே??? சரி எப்படி இசை? எப்படி சங்கரின் கமரா? ரஜனினின் விக் ஒருக்காலும் களரவே இல்லையா? நம்ம ஷ்ரேயா எப்படி இருக்கிறாங்க?? :D

ஐயகோ டொண்ணுக் கண்ணா உம் புறக்கணிப்பு இப்போ புலம்பல் நிலையை எட்டி விட்டதா?? :D:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மகேஸ்....??? :angry: :angry: :angry: :D:D:D

அது ஒரு ஒராமா இருந்துட்டு போகட்டுமே யார் வேனாமெண்டது.... :angry:

ஐயகோ டொண்ணுக் கண்ணா உம் புறக்கணிப்பு இப்போ புலம்பல் நிலையை எட்டி விட்டதா?? :D

இருக்காத பின்ன, சிவாஜியை புறக்கணி எண்டு முதன் முதலா சவுண்ட் விட்டவங்க எல்லாம் சோமாலியா இருக்கிற லண்டன் தியேட்டரில முதல் ஷோ பார்க்க நாக்கை தொங்க போட்டுக்கொண்டு இருக்காங்க, நாம லேட்டா புறக்கணிக்க சொன்னாலும், அதை பார்க்கிறதில்லை எண்ட முடிவோட இருக்கம். ஆனால் அதில நீர் மாத்திரம் புறக்கணி எண்டு சொல்லவுமில்லை, புறக்கணிக்க வேண்டாமெண்டு சொல்லவுமில்லை, நடு நிலைமையா (நிக்கிறன் எண்ட நினைப்பில) படத்தை பார்த்திட்டீர், அதுதான் இந்த புலம்பல்.... :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

இதுபற்றிய கருத்து ஏற்கெனவே பதிவு செய்துவிட்டேன் இருந்தாலும் இந்தத் தலைப்பு தொடர்வதால் மீண்டும் கேட்கின்றேன், இந்தத் தலைப்பு இப்போது அவசியமா?

மு.கு: நான் தியேட்டரில் படம் பார்பதில்லை.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த படத்தை புறக்கனிக்க ஒரு வழி இருக்கிறது, தரமான இணைய தரவிறக்கத்துக்கான இணைப்பை மிகவிரைவில் புலம்பெயர் தமிழருக்கு கொடுத்துவிடுங்கள், ஆர்வமிகுதியில் வேகமாக தரவிறக்கி பார்ப்பார்கள்.

கமரா கொப்பியில் ஒருக்கா படத்தை பார்த்தாலே ஒறிஜினல் கொப்பியில் படம்பார்க பஞ்சிப்படும் சனம் ஒருக்கா இனையத்தில் பார்த்துவிட்டால் தியேட்டருக்கு போக எண்ணாது. இதனால் பணம் போட்டு தியேட்டரில் போடுபவர் அடுத்த தடவை காசு கொடுத்து எடுக்க தயங்குவார். அவர் கொடுக்கும் காசுதான் தயாரிப்பாளருக்கு போகிறது. இணையத்தில் பார்ப்பது திருட்டு விசிடியில் பார்ப்பது போன்றதுதான். ஆனால் ஈழத்துக்கு ஆதரவாக படம் எடுப்பவர்களுக்கு நாம் தியேட்டரில் படம்பார்த்து அவர்களுக்கு எமது ஆதரவை தெரிவிக்கவேண்டும். நல்ல சினிமாக்களை எப்போதும் நாம் ஆதரிக்கவேண்டும் சினிமா என்பது ஒரு அற்புத சாதனம். அதில் நாம் மேலும் முன்னேறவேண்டும். தமிழர்களை ஏமாற்றுவோரை புறக்கனிப்போம்.

எங்கே பார்ப்போம் விரைவாக சிவாஜியை தரவிறக்க இணைப்பைதாருங்கள், ஆர்வப்படுவோர் இணையத்தில் பார்க்கட்டும், தியேட்டரில் படம் எடுத்து போடுபவர் தலையில் துண்டை போடட்டும். அடுத்ததடவை துட்டு போட்டு படம் எடுத்து போட்டால் சனம்வருமா? என தலையை உருட்டட்டும். :D:D:D

Edited by சித்தன்

அட நீங்களொன்று அவர் மற்:றவர்களை வரவேண்டாமென எழுதியதே தான் மட்டும் போய் கூத்தடிக்கலாமென்று எண்ணியே. :angry: :angry:

ஓ டங்கிற்கு அப்படி வேற ஜடியா இருகோ அது சரி சோமாலியாவில் சிவாஜி படம் போடுறாங்களோ

:angry: :P

வசம்பரே. யாழில் உண்மை சொல்லும் ஒரே ஒரு நபர் நீங்கள் தானாமே? சரி அப்படியெண்டால் சிவாஜி படம் எப்படி? இன்று முதல் ஷோ பார்த்தாச்சாமே? யாழ்.கொம்மில் சிவாஜி படத்தை முதல் முதலாக பார்த்த பெருமை இந்த வசம்புவையே சாரும் என்று படம் பார்த்து வெளியே வரும்பொழுது டீ விக்கிற பையனுக்கு சொல்லி பெருமை பட்டதாக அறிந்தேனே??? சரி எப்படி இசை? எப்படி சங்கரின் கமரா? ரஜனினின் விக் ஒருக்காலும் களரவே இல்லையா? நம்ம ஷ்ரேயா எப்படி இருக்கிறாங்க?? :D

டங்கு ஸ்ரெயா எந்த பக்கம் படத்திலே என்ன சொல்லி இருகிறாங்க தெறியுமோ எந்த பெண் அழகு என்று கேட்க யாழ்பாணத்து பெண்கள் தான் அழகு என்று ஒரு டயலக் என்ன ஒரு கருத்து டங்கு இதை பற்றி நீங்க என்ன நினைகிறீங்க,இவைய பற்றி சங்கருக்கும் நல்லா தான் தெறிந்திருக்கு. :P

அது சரி யார் அந்த பிளாக் சீப் யாழில நடகிறது எல்லாத்தையும் சங்கருக்கு சொன்னது :angry:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இந்த நடவடிக்கைக்கு எந்தவொரு நியாயமான கருத்தும் வைக்காமல் ஒருவரின் தனிப்பட்ட புகழை மழுங்கடிக்கவே முற்பட்டிருக்கின்றார்கள்.

ஐயா வசம்பு,

எதை நியாயமான காரணம் இல்லையென்கிறீர்கள்? இந்த இணைப்பின் ஆரம்பத்திலே சொல்லப்பட்டதெல்லாம் உண்மையே. அதுவே போதுமான காரணமில்லையா? தமிழ்நாட்டுத் தமிழனென்றாலும் சரி, ஈழத்தமிழனென்றாலும் சரி, எல்லோரும் தமிழரல்லவா! தமிழகத்தவரை இந்தமாதிரி ஏமாற்றும் ரஜினியை அவர்கள்தானும் உணர்ந்து கொள்ளாவிட்டாலும் நாமாவது உணர்ந்து செயற்படலாமே?

உங்களுக்கு ஒன்று தெரியுமா? கர்நாடகாவில் பாரம்பரியமாக வசிக்கும் தமிழரில் பெரும்பாலோர் ஈழப்போராட்டத்துக்கு ஆதரவானவர்கள். அவர்கள் கன்னடர்களால் அடித்து விரட்டப்படும்போது இயற்கையாக வேதனையடைகிறேன். கன்னடர்களின் அச்செயல்களுக்கு எதிர்ப்புக் காட்டாத ரஜினியின் படத்தைப் புறக்கணிப்பது எவ்வகையில் தவறாகும்? படத்துக்குப் படம் தமிழன் தமிழன் என்கிறார். செயலில் தமிழனுக்கு எதிரியாக இருக்கிறார்.

ரஜினி என்ற தனிமனிதனுடைய புகழைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அவரது தமிழர் விரோதப்போக்கு கண்டிக்கத்தக்கது. இதற்குமேல் அவரவர் விருப்பம்.

ரொறோன்ரோவில் 5 தியேட்டர்களில் திரையிடப்பட்டிருப்பதாக வானொலி விளம்பரம் கேட்டேன்

வழமையாக தமிழ் படங்கள் 10 டாலர்கள் ஆனால் சிவாஜி படத்துக்கு 20 டாலர்களாம்

நண்பர் ஒருவர் படத்தை பார்த்துவிட்டுவந்து புலம்பிக்கொண்டிருக்கிறார் படம் குப்பையிலும் குப்பை 20 டாலர்களை அநியாயமாக்கவிட்டதாக

அட படம் தொடங்கி 2நாளா நல்லா ஒடி கொண்டிருக்கு இன்னும் நீங்க புறகணிக்கிறீங்களோ.

இது கொஞ்சம் கூட நல்லா இல்லை இந்த கூற்றை நீங்கள் படம் தாயரிக்கும் போதே எம்ம்வர்களிடம் சொல்லி இருந்தால் அதற்கேற்ப மாற்று நடவடிக்கை எடுத்து இருக்கலாம்,ஆனால் பட உரிமையை எம்ம்வர்கள் பல்கோடி செலவில் வாங்கிய பின் இவ்வாறு செய்வது எம்ம்வர்களுக்கு தான் இழப்பு என்பதை இன்னுமா உங்களுக்கு புரியவில்லை,இதனால் பாதிக்க போவது ரஜனியோ,சங்கரோ இல்லை பட உரிமையை வாங்கிய நம்ம்வர்கள் தான்

:angry: :angry:

இந்த படத்தை புறக்கனிக்க ஒரு வழி இருக்கிறது, தரமான இணைய தரவிறக்கத்துக்கான இணைப்பை மிகவிரைவில் புலம்பெயர் தமிழருக்கு கொடுத்துவிடுங்கள், ஆர்வமிகுதியில் வேகமாக தரவிறக்கி பார்ப்பார்கள்.

கமரா கொப்பியில் ஒருக்கா படத்தை பார்த்தாலே ஒறிஜினல் கொப்பியில் படம்பார்க பஞ்சிப்படும் சனம் ஒருக்கா இனையத்தில் பார்த்துவிட்டால் தியேட்டருக்கு போக எண்ணாது. இதனால் பணம் போட்டு தியேட்டரில் போடுபவர் அடுத்த தடவை காசு கொடுத்து எடுக்க தயங்குவார். அவர் கொடுக்கும் காசுதான் தயாரிப்பாளருக்கு போகிறது. இணையத்தில் பார்ப்பது திருட்டு விசிடியில் பார்ப்பது போன்றதுதான். ஆனால் ஈழத்துக்கு ஆதரவாக படம் எடுப்பவர்களுக்கு நாம் தியேட்டரில் படம்பார்த்து அவர்களுக்கு எமது ஆதரவை தெரிவிக்கவேண்டும்.

எங்கே பார்ப்போம் விரைவாக சிவாஜியை தவிறக்க இணைப்பைதாருங்கள், ஆர்வப்படுவோர் இணையத்தில் பார்க்கட்டும், தியேட்டரில் படம் எடுத்து போடுபவர் தலையில் துண்டை போடட்டும். அடுத்ததடவை துட்டு போட்டு படம் எடுத்து போட்டால் சனம்வருமா? என தலையை உருட்டட்டும். :D:D:D

அதற்காண நடவடிக்கைகளில் டைகர் வாமொலி இறங்கியுள்ளது :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரங்கன் அவர்களால் முன்வைக்கப்ட்ட கோரிக்கையின் நியாயத்தை பலரும் புரிந்துள்ளதாகவே கருத்துகள் பகிரப்படுகின்றன. இதனால் உந்தப்பட்டவர்களாகி எப்படி இந்தப்புறக்கணிப்பை மேற்கொள்வதென்ற உத்திகளான கருத்துகளைப் பலரும் பதிவிடுகின்றனர்.

- முதலில் கொள்கை முடிவு - சிவாஜி திரையிடப்படுவது தொடர்பான தீர்க்கமான முடிவு

- தகுந்த பிரச்சாரம் அல்லது தெளிவூட்டல்

- சாத்தியமாக்கும் நடைமுறைகள்

சிவாஜி திரைப்படம் ஒரு குறிப்பிட்டகாலத்தில் மட்டும் சலனத்தை ஏற்படுத்தும் வெளியீடாகும். அந்தக் காலம் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

- இப்படித்தை நாம்(புலம்பெயர் தமிழர்கள்) பார்ப்பதாலோ பார்க்கமல் விடுவதாலோ தயாரிப்பலீடுபட்டவர்களுக்கு என்ன கிடைக்கும்? எமக்கு என்ன கிடைக்கும்?

என்னைப் பொறுத்தவரையில்,

மிகப்பெரிய அளவிலான புதிய செயற்கையான பிரச்சாரச் சுனாமியாக சிவாஜி திரைப்படம் தமிழகத்தையும் இந்தியாவையும் ஆட்டிப் படைக்கலாம், ஆனால் ஈழத்தமிழர்களாகிய நம்மை இது என்ன செய்யப்போகிறது?

- தாயகத்தில் மிக உச்சநிலையிலுள்ள அடுத்தகட்ட வெடிப்பு பற்றிய ஆவலுடன் இருக்கும் ஈழத்தமிழனுக்கு இந்தச் சிவாஜி சினிமாவிலுள்ள 'கிளைமாக்ஸ்' என்ன கிளுகிப்பைத் தரப்போகிறது?

- தமிழ்த்திரை வரலாற்றை ஆய்வாகப்பதிவு செய்த தியடோர் பாஸ்கரன் அவர்கள் கூறுகிறார், ''உலகின் சிறந்த திரைப்படங்கள் பல, மிகவும் எளிய உபகரணங்களை வைத்து உருவாக்கப்பட்டவை'' என்று. இது திரைக்கலை இரசனை சார்ந்த பார்வை.

- 'என்ன பணி செய்து எவ்வளவெல்லாம் சம்பாதித்தாலும் நமக்கென்று சுவறுவது நமது கையாலே எடுத்து நம் வாயிலிடப்படும் அந்த நான்கு இட்லிகள் மட்டும்தானே!' எனவாக மிக உணர்ச்சியுடன் வாழ்வின் யதார்த்தத்தைச் சொன்னார் தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா அவர்கள்.

- அண்ணாந்து வாயைப்பிளக்கப் பார்ப்பதால் பூமியில் பதிந்துள்ள நமது கால்கள் பற்றிய நினைவை இழக்க நேரிடலாம். இது எமது இருப்பைக் கேள்விக்குள்ளாக்கிவிடலாம்? வெறும் பொழுதுபோக்கிகளாக வாழத்தலைப்பட்டவர்களல்ல ஈழத்தமிழர்கள்.

- படம் வெளிவரமுன்னரே அதைப் பார்க்காமலே அதீதமான கருத்துகள் எப்படி வெளிவந்தன? ஏன்? யாரது நலனுக்காக வெளிவருகின்றன? எல்லாமே கோடிகளாக எழுதப்பட்டன. இந்தக் கோடிகளை முதலீடு செய்தவர்களும், கோடிகளைச் சந்பாதிக்க நினைப்பவர்களும் தமது வருவாய்க்காக புலம்பெயர் நாட்டிலிருந்து ஒரு தொகையை மதிப்பிட்டிருக்கமாட்டார்கள

பெரும் விளம்பரதாரர்களின் உந்துதலுக்குக் கட்டுப்படும் எமது ஊடகங்கள், இதற்குச் சமாந்திரமான கருத்துகளடங்கிய மக்களின் பொதுப்புத்தி, சினிமா இரசனை மேம்பாடுக்கான தகுந்த பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லையோ என்ற ஆதங்கம் எழவே செய்கின்றது.

சினிமா என்பதை நிராகரிப்பதும், ஒதுக்குவதும் சிதறி பரவி வாழும் தமிழருக்கு ஏதாவது நன்மை பயற்கும் எண்று நினைக்கிறீர்களா...???

இணையங்களில் புத்தகங்களில் வரும் செய்திகளை பட்டி தொட்டி(தமிழகத்தில், வெளிநாட்டிலும் கூட) எல்லாம் படிப்பார்கள் பார்ப்பார்கள் என்பது சாத்தியமானது இல்லை... ஆனால் சினிமா என்பது உயிரோட்டத்தோடு கொண்டு சேர்க்க கூடிய அற்புத சாதனம்....! அதை புறக்கணிக்காமல், அதனூடாக எங்களின் சிதறல்களையும் எல்லாரும் அறிய செய்யுங்களேன்...

எங்களை புறக்கணிக்கு சிவாஜி போண்ற சினிமாவை நாங்கள் புறக்கணிப்பதில் தவறில்லை....!

ரயனி என்ற கன்னட நடிகனை தூக்கி வைத்து கொண்டாடும் தமிழ் உறவுகளே கீழ் இருக்கும் இணையவலை தொடரை வாசித்து பாருங்கள்

http://www.viduppu.net/index.php?subaction...amp;ucat=1&

  • தொடங்கியவர்

நேசன்!

இந்தக் கட்டுரைதான் இங்கு இணைக்கப்பட்டு விவாதம் போய்கொண்டிருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

ரயனி என்ற கன்னட நடிகனை தூக்கி வைத்து கொண்டாடும் தமிழ் உறவுகளே கீழ் இருக்கும் இணையவலை தொடரை வாசித்து பாருங்கள்

http://www.viduppu.net/index.php?subaction...amp;ucat=1&

என்னப்பா இது.. கன்னட ராமசாமி நாயக்கர் தமிழருக்கு பகுத்தறிவு புகட்டலாம் என்றால் ஏன் கன்னட ரஜனிகாந் அதற்கு முயற்சிக்கக் கூடாது. ராமசாமி அரசியல் களத்துக்கால நுழைஞ்சார்.. ரஜனி சினிமாக் களத்துக்கால நுழைஞ்சார்.

லண்டனில் மட்டும் பல திரையரங்களில் படம் வெற்றிகரமாக தாயகத்தை சிங்களவனட்ட ஒப்படைச்சிட்டு புலியை திட்டித்திட்டியே அசைலம் அடிச்ச ஈழத்தமிழர்களால் நிரப்பப்படுகிறதாமே..! :

தமிழர்கள் ஒரு இலட்சியப்பற்றில் உறுதியா நிற்பவர்களாக இருந்தால் இருந்த தேசங்களையும் ஆட்சியுரிமைகளையும் இழந்திருக்கவே மாட்டார்கள். காட்டுமிராண்டி சுயநலக் கூட்டத்துக்கு ரஜனிதான் தகுந்த தலைவர்.. நவகால பகுத்தறிவூட்டிப் பெரியார்..! :P :blink:

  • தொடங்கியவர்

இந்தக் கட்டுரை பல இடங்களில் விவாதத்தை தோற்றுவித்துள்ளது.

சிவாஜி படம் பார்க்க இருந்தவர்கள் சிலர் கட்டுரை படித்தபின்பு பார்க்காது விட்டிருக்கிறார்கள்.

அவுஸ்ரேலியாவில் வானொலியில் இது குறித்து விவாதம் நடந்தது. பலர் தாம் "சிவாஜி" படம் பார்க்கும் முடிவை மாற்றி உள்ளதாக குறிப்பிட்டார்கள்.

இவர்களுடைய தொகை அதிகம் இல்லை என்றாலும் ஒரு கருத்துருவாக்கம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு முக்கியமான விடயம்.

"சிவாஜி படப் புறக்கணிப்பு" நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துருவாக்கம் என்பது ஒவ்வொரு ஆக்கம் எழுதப்பட்டு வெளியிடப்படும் போது வரும் ஒரு சாதாரணம்.

புறக்கணிப்போம் சிறிலங்கா என்று கொண்டே சிறீலங்கா பொருட்களின் படங்கள் போட்டு.. சிறீலங்கன் எயார்லைன்சை பிரேரரிக்கும் விளம்பரங்கள் உட்பட.. அனைத்தையும் பிரசரிக்கும் ஓசிப் பேப்பர்களின் வரும் குப்பைகள் தரும் கருத்துருவாக்கமும் அதன் தாக்கமும்... விளம்பரமாகுமே தவிர செயலில் பெரிய மாற்றங்கள் தராது என்பதற்கு லண்டன் திரையரங்குகளில் சிவாஜி படம் பார்க்க குவியும் தமிழர்களை பார்க்கத் தெரியும்.

சான்று வேணும் என்றால் இல்பேட் திரையரங்குக்குப் போய் பாருங்கள்..!

சிவாஜி படத்துக்கு செய்யப்பட்ட ஓசி விளம்பரம்.. உதவி விளம்பரத்துக்காக பக்கம் நிரப்பும்.. ஓசிப் பத்திரிகைகள்..! :lol::blink:

  • கருத்துக்கள உறவுகள்

அட படம் தொடங்கி 2நாளா நல்லா ஒடி கொண்டிருக்கு இன்னும் நீங்க புறகணிக்கிறீங்களோ.

இது கொஞ்சம் கூட நல்லா இல்லை இந்த கூற்றை நீங்கள் படம் தாயரிக்கும் போதே எம்ம்வர்களிடம் சொல்லி இருந்தால் அதற்கேற்ப மாற்று நடவடிக்கை எடுத்து இருக்கலாம்,ஆனால் பட உரிமையை எம்ம்வர்கள் பல்கோடி செலவில் வாங்கிய பின் இவ்வாறு செய்வது எம்ம்வர்களுக்கு தான் இழப்பு என்பதை இன்னுமா உங்களுக்கு புரியவில்லை,இதனால் பாதிக்க போவது ரஜனியோ,சங்கரோ இல்லை பட உரிமையை வாங்கிய நம்ம்வர்கள் தான்

:angry: :angry:

ஏன் படம் வாங்கியவரெல்லாம் சின்ன பபாக்களா? அவர்களுக்கெல்லாம் அறிவில்லை? அவர்களுக்கு இது ஒரு வியாபாரம். அதுவும் சுயநலம் நிறைந்த வியாபாரம். நீங்கள் முதலிலேயே ஆர்ப்பாட்டம் பண்ணியிருந்தால் அவர் அதைவைத்துக்கொண்டு ஏவிஎம் இட்டைப் போய் விலையைக் கொஞ்சம் குறைச்சுக் கேட்டிருப்பார். :blink: இவர்கள் எல்லாம் நட்டப்பட்டால்தான் திருந்துவினம்.

எங்கட ஆக்கள் ஆராவது ஆப்கானிஸ்தானில் தூள் வாங்கியந்து இங்க வித்தால், "அதைப் புறக்கணிக்காதே.. முதலிலேயே அவரிட்டைச் சொல்லியிருந்தால் அவர் நட்டப்படமாட்டாரே" என்று வக்காலத்து வாங்குவீர்கள் போல இருக்கே!! :lol::lol::lol:

என்னப்பா இது.. கன்னட ராமசாமி நாயக்கர் தமிழருக்கு பகுத்தறிவு புகட்டலாம் என்றால் ஏன் கன்னட ரஜனிகாந் அதற்கு முயற்சிக்கக் கூடாது. ராமசாமி அரசியல் களத்துக்கால நுழைஞ்சார்.. ரஜனி சினிமாக் களத்துக்கால நுழைஞ்சார்.

லண்டனில் மட்டும் பல திரையரங்களில் படம் வெற்றிகரமாக தாயகத்தை சிங்களவனட்ட ஒப்படைச்சிட்டு புலியை திட்டித்திட்டியே அசைலம் அடிச்ச ஈழத்தமிழர்களால் நிரப்பப்படுகிறதாமே..! :

தமிழர்கள் ஒரு இலட்சியப்பற்றில் உறுதியா நிற்பவர்களாக இருந்தால் இருந்த தேசங்களையும் ஆட்சியுரிமைகளையும் இழந்திருக்கவே மாட்டார்கள். காட்டுமிராண்டி சுயநலக் கூட்டத்துக்கு ரஜனிதான் தகுந்த தலைவர்.. நவகால பகுத்தறிவூட்டிப் பெரியார்..! :P :blink:

நெடுகுலபூவன் அவர்களே தாங்கள் ராவா அடித்த சரக்கு இன்னும் தெளியவில்லை என்று நினைக்கிறேன், மொட்டைத்தளைக்கும் முழங்காளுக்கும் முடிச்சு போடுகிறீர்கள்.

நெடுகுலபூவன் அவர்களே தாங்கள் ராவா அடித்த சரக்கு இன்னும் தெளியவில்லை என்று நினைக்கிறேன், மொட்டைத்தளைக்கும் முழங்காளுக்கும் முடிச்சு போடுகிறீர்கள்.

இவர் என்ன சொல்ல வாறார்? :blink:

ஏன் படம் வாங்கியவரெல்லாம் சின்ன பபாக்களா? அவர்களுக்கெல்லாம் அறிவில்லை? அவர்களுக்கு இது ஒரு வியாபாரம். அதுவும் சுயநலம் நிறைந்த வியாபாரம். நீங்கள் முதலிலேயே ஆர்ப்பாட்டம் பண்ணியிருந்தால் அவர் அதைவைத்துக்கொண்டு ஏவிஎம் இட்டைப் போய் விலையைக் கொஞ்சம் குறைச்சுக் கேட்டிருப்பார். :lol: இவர்கள் எல்லாம் நட்டப்பட்டால்தான் திருந்துவினம்.

எங்கட ஆக்கள் ஆராவது ஆப்கானிஸ்தானில் தூள் வாங்கியந்து இங்க வித்தால், "அதைப் புறக்கணிக்காதே.. முதலிலேயே அவரிட்டைச் சொல்லியிருந்தால் அவர் நட்டப்படமாட்டாரே" என்று வக்காலத்து வாங்குவீர்கள் போல இருக்கே!! :lol::lol::lol:

அண்ணா இந்த கேள்வியை தான் நானும் கேட்கிறேன் இந்த நடவடிகையை 8 மாசதிற்கு முன் நடத்தி இருந்தா சாத்திபட்டிருக்கலாம் ஆர்பாட்டம் செய்ய திடிரேன படம் வாற நேரம் பார்த்து இந்த நடவடிகையை செய்ய சொன்னால் எப்படி சாத்தியபடும் அவர்கள் ஏற்கனவே விலைக்கு வாங்கி இருபார்களே???நீங்கள் சொல்வது போல சுயவியாபார இலாப நோக்கில் என்று பார்த்தால் இலாபம் அவர்களுக்கு யாரால் ஏற்படுகிறது எங்களாள் தானே அதனால் தானே இலாப நோக்கில் செயற்படுகிறார்கள்,நீங்கள் ஒருவர் இங்கிருந்து சொல்வதன் மூலம் இங்கிருப்பவர்கள் போகாமல் இருக்க போகிறார்களா?கண்டிப்பாக போக போறார்கள் போயிற்றுவந்து என்ன அருமையான படம் என்று விமர்சனும் தருவார்கள்,ஆகவே இதனால் பாதிக்க படபோவது நம்மவர்களின் தொழில் துறைகளே ஆகவே ஒன்றை செய்யும் போது காலம் நேரம் அறிந்து செயற்பட வேண்டும் அதை விடுத்து புறகணி என்று இருந்தா போல சொல்வது வேடிக்கை.

அத்துடன் தூ... இதுக்கும் என்ன சம்மந்தம் தூ... நாட்டுகுள் கொண்டுவரவே முடியாது ஆனால் இது அப்படி இல்லை ஆகவே தூளுக்கும் இதுக்கும் முடித்து போடாதயுங்கோ

இந்தக் கட்டுரை பல இடங்களில் விவாதத்தை தோற்றுவித்துள்ளது.

சிவாஜி படம் பார்க்க இருந்தவர்கள் சிலர் கட்டுரை படித்தபின்பு பார்க்காது விட்டிருக்கிறார்கள்.

அவுஸ்ரேலியாவில் வானொலியில் இது குறித்து விவாதம் நடந்தது. பலர் தாம் "சிவாஜி" படம் பார்க்கும் முடிவை மாற்றி உள்ளதாக குறிப்பிட்டார்கள்.

இவர்களுடைய தொகை அதிகம் இல்லை என்றாலும் ஒரு கருத்துருவாக்கம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு முக்கியமான விடயம்.

"சிவாஜி படப் புறக்கணிப்பு" நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

உங்கள் இணைப்பினால் ஏற்பட்ட விவாதங்கள் பார்க்காமலிருந்தவர்களையும் பார்க்கத் தூண்டியுள்ளதுதான் உண்மை. படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது விழுந்தவன் மீசையில் மண் படவில்லையென்பது போலுள்ளது உங்கள் கருத்து. சிவாஜி திரைப்படம் பற்றிய செய்தியிணைப்பே 12 பக்கங்களைத் தாண்டப் போகின்றது. எனியும் இது பற்றி புலம்பிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு ஏதாவது ஆக்கபூர்வமான வேலைகளைப் பாருங்கள்.

நீங்கள் சொல்வது போல சிட்னியில் 2 புகழ் பெற்ற திரையரங்குகளில் மிகவும் வெற்றிகரமாக ஒடி கொண்டிருகிறது வசபண்ணா ஆனாலும் இவர்கள் என்னும் புறகணிக்கீனம்

:lol::lol:

ஐயா வசம்பு,

எதை நியாயமான காரணம் இல்லையென்கிறீர்கள்? இந்த இணைப்பின் ஆரம்பத்திலே சொல்லப்பட்டதெல்லாம் உண்மையே. அதுவே போதுமான காரணமில்லையா? தமிழ்நாட்டுத் தமிழனென்றாலும் சரி, ஈழத்தமிழனென்றாலும் சரி, எல்லோரும் தமிழரல்லவா! தமிழகத்தவரை இந்தமாதிரி ஏமாற்றும் ரஜினியை அவர்கள்தானும் உணர்ந்து கொள்ளாவிட்டாலும் நாமாவது உணர்ந்து செயற்படலாமே?

உங்களுக்கு ஒன்று தெரியுமா? கர்நாடகாவில் பாரம்பரியமாக வசிக்கும் தமிழரில் பெரும்பாலோர் ஈழப்போராட்டத்துக்கு ஆதரவானவர்கள். அவர்கள் கன்னடர்களால் அடித்து விரட்டப்படும்போது இயற்கையாக வேதனையடைகிறேன். கன்னடர்களின் அச்செயல்களுக்கு எதிர்ப்புக் காட்டாத ரஜினியின் படத்தைப் புறக்கணிப்பது எவ்வகையில் தவறாகும்? படத்துக்குப் படம் தமிழன் தமிழன் என்கிறார். செயலில் தமிழனுக்கு எதிரியாக இருக்கிறார்.

ரஜினி என்ற தனிமனிதனுடைய புகழைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அவரது தமிழர் விரோதப்போக்கு கண்டிக்கத்தக்கது. இதற்குமேல் அவரவர் விருப்பம்.

கட்டுரையில் ரஜனிகாந் என்ற தனிமனிதனால் ஏற்படும் பண்பாட்டுச் சீரழிவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றைய நடிகர்களின் திரைப்படங்களிலில்லாது ரஜனிகாந்தின் திரைப்படத்தில் மட்டும் அப்படி நீங்கள் எதனைக் கண்டீர்கள் என்று உங்களால் இங்கு குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா??

நீங்கள் சொல்வது போல சிட்னியில் 2 புகழ் பெற்ற திரையரங்குகளில் மிகவும் வெற்றிகரமாக ஒடி கொண்டிருகிறது வசபண்ணா ஆனாலும் இவர்கள் என்னும் புறகணிக்கீனம்

:lol::lol:

நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அவர்கள் இன்னும் புறக்கணிக்கவில்லை. மீசையில் ஒட்டிய மண்ணைத் தட்டிக் கொண்டிருக்கின்றார்கள். :lol::lol:

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

பாபாவுக்கு ஏற்பட்ட கதி சிவாஜிக்கும் ஏற்பட வேண்டும்!-நக்கீரன் (கனடா)-

தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!

தலை மீது சுமக்கின்றான்

அடிமை என்னும் சொல்லை!

எதிரியைத் தலைவனாய் எண்ணுகின்றான்!

எச்சிலை அவன் போடத் தின்னுகின்றான்!

எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்

இசை தெலுங்கானது பாட்டினிலே!

இந்தி கோல் ஓச்சுது நாட்டினிலே!

திசைதோறும் ஆங்கிலம் வாயினிலே!

தீந்தமிழ் எரியுது தீயினிலே

ஒடுங்கி ஒடுங்கி இவன் ஆமையானான்!

உதைத்தாலும் வதைத்தாலும் ஊமையானான்!

நடுங்கி நடுங்கி இவன் வாழ்ந்துவிட்டான்!

நாளுக்கு நாளிவன் தாழ்ந்துவிட்டான்!

உலகெல்லாம் நேற்றிவன் ஆண்டதென்ன?

ஊர் ஊராய் இன்றிவன் மாண்டதென்ன?

மலைபோல நேற்றிவன் எழுந்ததென்ன?

மரம்போல வீழ்ந்தானே வீழ்ந்ததென்ன?

சிந்திக்க வைக்கும் இந்தப் பாடலைப கலைமாமணி குப்புசாமி தனது தேனான குரலில்; பாடும்போது மனதுக்கு தெம்பாக இருக்கும்.

ஆனால் தமிழர்கள் திருந்தவே மாட்டார்கள். ஆயிரம் பெரியார், பதினாயிரம் அண்ணா போன்றோர் வந்தாலும் தமிழர்களைத் திருத்தவே முடியாது.

'தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே உட்காருகின்றார்கள், ஈரத்திலேயே நடக்கின்றார்கள், ஈரத்திலேயே படுக்கின்றார்கள். ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு, உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்படமாட்டான்" என மகாகவி பாரதியார் மனம் நொந்து கூறிய வார்த்தைகள் நூறு ஆண்டுகள் கழித்தும் சரியாகவே இருக்கின்றன!

பிரபாவதி என்ற படத்தில் ஒரு காட்சி. கலைவாணர் என்.எஸ்.கிருஸ்ணன் கீழே படுத்திருந்த அசுரனின் தலையை மிதித்துவிடுவார். உடனே அசுரன் அவரோடு சண்டைக்குப் போவான்.

அதற்கு கலைவாணர் 'இப்படித்தான் வாமன அவதாரத்தில் கிருஷ்ண பரமாத்மா மாபலியின் தலையை தனது காலால் மிதித்தார்" என்பார்.

'அப்படியா? அப்ப இன்னும் மிதி" என்று அந்த அப்பாவி அசுரன் தலையைக் காட்டுவான். அந்த அசுரன் நிலையிலேயே பெரும்பான்மைத் தமிழர்கள் இருக்கிறார்கள்.

திரைப்படம் அறிவியல் உலகுக்கு வழங்கிய நன்கொடை. அதன் வாயிலாக மனித வாழ்வை நல்வழிப்படுத்திப் பகுத்தறிவுச் சிந்தனையைப் பெருக்கலாம். சமத்துவத்தை நிலைநாட்டலாம். குடிமக்கள் சொற்படி ஆட்சி என்ற கோட்பாட்டை நிறுவலாம். ஆனால் இன்று அது பெரும்பாலும் மூட நம்பிக்கைகளை வளர்ப்பதற்கும், தன்னம்பிக்கையைக் குலைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மனித சமுதாயத்;துக்கு இரண்டகம் இழைக்கும் செயலாகும்.

கதாநாயகன் தாத்தா ஆகிப் பேரப்பிள்ளையை எடுத்துக் கொஞ்சுகிறார். இன்னும் சில ஆண்டுகள் போனால் பூட்டப்பிள்ளையையும் கண்டுவிடுவார். அதலானென்ன? அவர் நடித்த படத்தைப் பார்க்கத் தமிழ்நாடு, குறிப்பாகச் சென்னைத் திரையரங்குகளில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறதாம்!

அறுபது அகவைக் கிழவனை 30 அகவை இளைஞனாகக் காட்டத்தான் இப்போது ஒப்பனை வந்து விட்டதே? ஒப்பனையாளர் ரஜினியின் உண்மையான தோற்றத்தை மறைத்து, ரஜினியை மீண்டும் கண்ணெடுத்துப் பார்க்கக் கூடிய 'கதாநாயகன்" ஆக மாற்றிக் காட்டுகிறார். ரஜினியின் நரைத்த தாடியையும் மொட்டந்தலையையும் மறைக்க இங்கிலாந்தில் இருந்து படத்தயாரிப்பாளர்கள் செயற்கை முடி (றுபை) வரவழைத்தார்களாம்!

வழக்கம் போல் ரஜினியின் இரசிகர் கூட்டம் சிவாஜி கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தார்களாம்! வடபழனி கமலா திரையரங்கில் ரஜினியின் பிரம்மாண்டமான கட் அவுட்டுக்கு 25 லீட்டர் பாலை கொண்டு அபிசேகம் நடைபெற்றது. ஆயிரம் வாலா பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

சில பெருங்குடியினர் பாலுக்குப் பதில் ரஜினியின் கட் அவுட்டுக்கு பீர் அபிசேகம் செய்தார்களாம். ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரில்தான் பீர் அபிஷேகம் நடைபெற்றது. 'ரஜினியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இரசிகைகள் குடங்களில் பாலை எடுத்து வந்து அவற்றை அபிசேம் செய்த காட்சி அனைவரையும் புல்லரிக்க வைத்தது" இப்படி பார்ப்பன ஏடான 'தினமலர்" (யூன் 16, 2007) வருணிக்கிறது.

சரி. சென்னையில் படியாத பாமரர் கூட்டம் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறதென்றால் அமெரிக்காவிலும் அதே கதைதான். வழக்கமாக 10 திரையரங்குகளில் ஓடுவதற்குப் பதில் சிவாஜி படத்தை 50 திரையரங்குகளில் திரையிடத் திட்டமாம்!

கனடா பற்றி கதையில்லை. ஆனால் இங்கும் ரஜினியின் இரசிகர்கள் இருக்கிறார்கள். பால் அபிசேகம் செய்யாவிட்டாலும் இருபது அகவைக் குமரிப்பெண்ணோடு 60 அகவை தாத்தா நடித்த படத்தைப் பார்க்க திரையரங்கை நிரப்பப்போகிறார்கள்.

வழக்கமாக கன்னடத்தில் தமிழ்ப் படங்கள் தமிழ்நாட்டில் 7 கிழமை ஓடின பிற்பாடுதான் திரையிடப்படும். ஆனால் சிவாஜி படத்துக்கு விதிவிலக்கு. காரணம் சிவாஜி கன்னடக்காரர்.

ஆனால் அதே கன்னடத்தில் தமிழர்கள் இரண்டாந்தாரக் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். தமிழர்கள் பெங்களுர் தெருக்களில் தமிழில் பேசினால் கன்னட வெறியர்கள் கன்னத்தில் அறைகிறார்கள்!

திரைப்படத்தில் கூட தமிழ் உரையாடல் மருந்துக்கும் இடம்பெறக் கூடாது. இடம் பெற்றால் திரைச்சீலைகள் கிழிக்கப்பட்டு விடும்! நாற்காலிகள் அடித்து உடைக்;கப்படும்.

எந்த மொழியிலும் விளம்பரம் போடலாம். ஆனால் தமிழ்மொழியில் விளம்பரம் போட்டால் கன்னட வெறியர்கள் தார் பூசி அதனை அழித்து விடுவார்கள்.

தமிழ்நாடு போட்ட பிச்சையில் வயிறு வளர்ந்;த கன்னட நடிக, நடிகைகள் ஒன்று சேர்ந்து தமிழர்களையும் தமிழ்நாட்டின் நலன்களை எதிர்க்கிறார்கள். அங்கு வாழும் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையை நரகமாக்குகிறார்கள்.

1991 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் கன்னடம் 205 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து பெங்களூர், மைசூர், மாண்டியா, சென்னப்பட்டனா உள்ளிட்ட தமிழர்கள் அதிக அளவில் வாழும் பகுதிகளைக் குறிவைத்து கன்னட வெறியர்கள் தாக்கினார்கள். தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பெண்கள் குழந்தைகள் உட்பட 200-க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். சுமார் 10,000 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

வீடுகளையும் சொத்துக்களையும் இழந்த 50,000 தமிழர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தமிழகத்துக்கு ஓடிப் போனார்கள். காவிரி நீரில் ஒரு பகுதியை தமிழ்நாட்டுக்குக் கொடு என்று காவிரி நடுவர் மன்றம் சொல்லிவிட்டதாம். அதற்காக அப்பாவித் தமிழ்மக்கள் கொல்லப்பட்டார்கள்.

கன்னட அரசே மக்களைத் தூண்டிவிட்டு இந்தக் கலவரத்தை தமிழர்களுக்கு எதிராக நடத்தியது. கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் அவரது இரசிகர்கள்தான் தமிழர்களுக்கு எதிராகப் பேரணி நடத்தினார்கள். முழக்கம் எழுப்பினார்கள். கலவரத்துக்கும் தலைமை தாங்கினார்கள். பெங்களுர் தமிழ்ச் சங்கம் விடுத்த அறிக்கை ஒன்றில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் குண்டு வெடித்தால் அய்ரோப்பாவில் அது எதிரொலிக்கிறது, ஈராக்கில் குண்டு விழுந்தால் இசுலாமியர்கள் கொதித்து எழுகிறார்கள். கஷ்;மீரத்துப் பண்டிதர்களுக்குக் கூடக் குரல்; கொடுக்க இந்துத்துவா சக்திகள் இருக்கின்றன. ஆனால் பெங்களூரில் தமிழர்கள் கொல்லப்பட்டாலும் வீடுகள் எரிக்கப்பட்டாலும் வணிக நிலையங்கள் எரியூட்டப்பட்டாலும் தமிழ்ப் படங்களை ஓடவிடாமல் திரையரங்குகளைக் கொளுத்தினாலும் தமிழ்நாட்டுப் பேருந்துகளைத் தடுத்தாலும் தமிழ்நாட்டுத் தமிழன் மூச்சே விடுவதில்லை!

மூச்சுவிடா விட்டாலும் பரவாயில்லை. தமிழ்நாட்டில் உழைத்த பணத்தைக் கர்நாடகத்தில் முதலீடு செய்யும் ரஜினிகாந்தின் கட் அவுட்டுக்குக் கற்பூரம் காட்டிப் பால் அபிசேகம் பீர் அபிசேகம் செய்கிறான்.

அவ்வப்போது வைகோ, மருத்துவர் இராமதாஸ், திருமாவளவன் போன்றோர் கன்னடத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். உண்ணா நோன்பு இருக்கிறார்கள். அவ்வளவுதான்.

காவிரி ஆற்று நீரைத் திறந்துவிடக் கோரி இயக்குநர் பாரதிராசாவும் தமிழ்நாட்டு நடிகர் சங்கத் தலைவருமான விஜயகாந்த் தஞ்சையில் பேரணி நடத்திய போது ரஜனி அதில் கலந்து கொள்ளவில்லை. சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்.

இளித்த வாய்த் தமிழர்கள் தமிழர் அல்லாத நடிகர் - நடிகைகளுக்கு கோயில் எழுப்பிக் கும்பிடுகிறான்! தமிழரல்லாத நடிக, நடிகைகளுக்கு தலையிடி என்றால் தீக்குளிக்கிறான். காவடி எடுக்கிறான். தனது கைவிரல்களை மட்டுமல்ல கைகளையும் வெட்டிக்கொண்டு தனது பக்தியைக் காட்டுகிறான்!

ரஜினி பெரிய நடிகர் இல்லை. நடிகர் கமல்காசனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் உறைபோடக் கூடக் காணாது.

ஆனால் மருத்துவர் இராமதாஸ் சொன்னது போல பீடியை மேலே எறிந்து வாயில் கவ்வுவது, தலைமுடியை தடவி விடுவது போன்ற சேட்டைகளை படியாத - பகுத்தறிவற்ற இரசிகர் கூட்டம் இரசிக்கிறது. கைதட்டி மகிழ்கிறது.

ரஜினி தமிழ்நாட்டில் மூடத்தனத்தை வளர்ப்பதில் முன்னணியில் நிற்கிறார். இமயமலையில் அவர் அடிக்கடி போய் தரிசித்து ஆசி பெற்று வரும் பாபாவின் அகவை 2000 ஆண்டாம்! திருமூலர் காலந்தொட்டு உயிரோடு வாழ்ந்து வருகிறாராம்! படியாத பாமரன் கூட இப்படி விசர்த்தனமாகப் பேசமாட்டான்.

அந்த சகாவரம் பெற்ற பாபாவின் பெயரில் எடுத்த படம் பலத்த தோல்வியைச் சந்தித்தது. திரையரங்குகளை விட்டு ஓடிப் போய்விட்டது.

சிவாஜி படத்தில் நடித்த ரஜனி சரி, அதனைத் தயாரித்த ஏவிஎம் குழுமமும் சரி. இரண்டுக்கும் தமிழ் உணர்வு, தமிழ்ப்பற்று அறவே கிடையாது.

தமிழகத்தையும் தமிழீழத்தையும் ஆழிப்பேரலை (சுனாமி) தாக்கியபோது பேரழிவு ஏற்பட்டது. உயிர்களும் உடைமைகளும் அழிவுற்றன. ஆனால் ரஜினி சரி, ஏவிஎம் குழுமமும் சரி அந்த மக்களின் கண்ணீரைத்துடைக்க ஒரு துரும்பைத்தன்னும் தூக்கிப் போடவில்லை.

தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ நெடுமாறன் நடைப்பயணம் மேற்கொண்டு தமிழீழ மக்களுக்கு ஒரு கோடி பெறுமதியான உணவும் உடையும் மருந்தும் சேகரித்தார். ஆனால் அதனை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப எடுத்த முயற்சி வெற்றிபெறவில்லை. இந்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. அறப்போர் நடத்தியும் இந்திய அரசு இதுவரை அசைந்து கொடுக்கவில்லை.

தமிழக நீதிமன்றங்களில் தமிழ்மொழியில் வழக்குரைக்கச் சட்டம் இயற்றியும் அதனை செல்லாக்காசாக்கி விட்டது இந்திய மத்திய அரசு! அதே நேரம் இராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார் இங்கெல்லாம் இந்திதான் நீதிமன்ற மொழி!

கோடி கோடியாக பொருள் தேடிய ரஜினி ஒரு பள்ளிக்கூடம் கட்டவில்லை. ஒரு கல்லூரி கட்டவில்லை. ஏழைகளுக்கு ஒரு மருத்துவமனை கட்டிக்கொடுத்தது கிடையாது. சம்பாதித்த பணத்தை அய்ந்து நட்சத்திர கோட்டல்களில் கன்னடத்தில் முதலீடு செய்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தமிழீழ மக்கள் சிங்களப் படையினரின் தொடர் தாக்குதலால் கண்ணீரில் மிதக்கிறார்கள். மொத்தம் 300,000 மக்கள் வீடு, வாசல்களை விட்டோடி ஏதிலி முகாம்களில் தஞ்சம் அடைந்தார்கள். இந்த மனித அவலத்தை ரஜினியோ ஏவிஎம்மோ கண்டு கொள்ளவில்லை.

கன்னடன், தமிழன் என்று பிரித்துப் பேசலாமா என்று சிலர் கேட்கிறார்கள். பேசக்கூடாததுதான். ஆனால் அவர்கள் பேச வைக்கிறார்களே!

கன்னடருக்கு திராவிட தேசிய உணர்வோ நம்பிக்கையோ இல்லாது இருக்கும் போது தமிழன் மட்டும் எதற்காக திராவிட தேசியம் பேச வேண்டும்?

பெங்களுரில் திருவள்ளுவருக்குச் சிலை திறப்பதை கன்னடர் எதிர்க்கிறார்கள். வள்ளுவர் சிலை சாக்குகளால் கட்டி எங்கோ ஒரு மூலையில் வைத்திருக்கிறார்கள். பாவம் வள்ளுவர்.

தமிழ்நாட்டில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னட மொழியின் முதல் பெண் கவிஞர் அக்கமகாதேவிக்கு சென்னையில் சிலை வைக்க கன்னடர்கள் முன்வந்தால் அதனைத் தமிழர்கள் ஒருபோதும் எதிர்க்கமாட்டார்கள்.

தமிழர்களே முன்னின்று தங்கள் செலவில் சிலை வைத்துவிடுவார்கள்! அது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனப் பேசும் தமிழர்களது பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று விளக்கம் வேறு கொடுத்து விடுவார்கள்.

காவிரி தண்ணீர் சிக்கல், வள்ளுவர் சிலை திறப்பு, காவிரிக் கலவரத்தில் கன்னடத்தில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட தமிழர்கள் எனப் பட்டியல் நீளுகிறது.

தமிழ் மக்களுக்கோ, தமிழினத்துக்கோ, தமிழ் மொழிக்கோ ஒரு எள்முனை ஆதரவையும் நல்காத ரஜினி மற்றும் ஏவிஎம் தயாரித்து வெளியிட்டுள்ள சிவாஜி படத்தை புலம்பெயர்ந்த தமிழ் உணர்வாளர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் தமிழ்த் தேசியத்தை நேசிப்பவர்கள் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலமே அவர்களுக்குப் பாடம் படிப்பிக்க முடியும்.

நன்றி - தமிழ்நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.