Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய டெஸ்ட் வரலாற்றில் குறைந்த ஸ்கோர்; முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IND vs AUS டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய டெஸ்ட் இன்னிங்ஸ் வரலாற்றில் மிகவும் குறைந்த ஸ்கோர்

19 டிசம்பர் 2020, 05:56 GMT
Adelaide Test: India's lowest score in an innings in Test history, team India reduced to 36 runs

பட மூலாதாரம், EPA

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் மறக்க முடியாத டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒன்றாக தற்போதைய டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸ் இருக்கப் போகிறது. அதற்கு காரணம் இந்தியாவின் மோசமான பேட்டிங்.

இரண்டாம் இன்னிங்சில், 21.2 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, 36 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்தியா. இரண்டாம் இன்னிங்சை இந்தியா முடித்தபோது ஆஸ்திரேலிய அணியைவிட 89 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது.

வெறும் 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 21 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இரண்டரை நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது.

இன்றைய வெற்றியால் நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ஸ்கோர்

இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இன்னிங்சில் எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர் 36 தான்.

பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3வது நாள் ஆட்டம் இன்று நடந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்தியா மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

முகமது ஷமி காயம் காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் ஆனதால் இந்தியா ஆட்டத்தைத் தொடர முடியவில்லை.

எனவே இந்தியா 10 விக்கெட்டுகளையும் இழப்பதற்கு முன்பே இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸை இவ்வளவு குறைவான ரன்களில் முடித்துக்கொள்வது இதுவே முதல்முறை. 

முன்னதாக 1974-ம் ஆண்டில் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை 42 ரன்களுக்கு இழந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது அதைவிட குறைவான ஸ்கோரை பதிவு செய்துள்ளது. 46 ஆண்டுகளுக்கு பிறகு அப்படி ஒரு மோசமான ஆட்டத்தை இந்தியா இன்று வெளிப்படுத்தியுள்ளது.

1955ஆம் ஆண்டு ஆக்லாந்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 26 ரன்கள் எடுத்ததே இதுவரை டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் எடுக்கப்பட்ட மிகவும் குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது.

மூன்று பேர் டக் அவுட் 

ஆட்டத்தின் முதல் நாளன்று டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்ய தேர்வு செய்தது.

முதல் இன்னிங்சில் இந்தியா 244 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இரண்டாவதாக பேட் செய்த ஆஸ்திரேலியா 191 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது மூன்றாவது நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்சை பேட் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது. 

ஆஸ்திரேலியாவுக்காக பந்து வீசிய ஜோஸ் ஹசல்வூட் ஐந்து விக்கெட்டுகளையும், பேட் க்யூமின்ஸ் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

புஜாரா, ரகானே அஸ்வின் ஆகிய மூவரும் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர். 

இந்தியாவுக்காக களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 

IND vs AUS டெஸ்ட்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்தபட்ச இன்னிங்ஸ் ஸ்கோர்

பட மூலாதாரம், GETTY IMAGES

ஏற்கனவே முடிந்துள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றியுள்ளன. 

தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.

மயங்க் அகர்வால் இன்று எடுத்த ஒன்பது ரன்கள்தான் இந்திய பேட்ஸ்மேன்களில் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 

மயங்க் அகர்வால் இன்றைய ஆட்டத்தில் 1000 டெஸ்ட் ரன்களைக் கடந்தார். தனது 19வது டெஸ்ட் இன்னிங்சில் இதை எட்டியுள்ள மயங்க் அகர்வால், 1000 டெஸ்ட் ரன்களை வேகமாகக் கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். 

14 இன்னிங்சில் கடந்த வினோத் காம்ப்ளி மற்றும் 18 இன்னிங்சில் கடந்த செதேஸ்வர் புஜாரா இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி: இந்தியா பரிதாபத் தோல்வி - இணையத்தில் கடும் விமர்சனத்துக்கு ஆளான மோசமான பேட்டிங்

india-loses-first-day-night-test-against-aussie ஆட்டத்தின் ஸ்கோரைக் காட்டும் மைதானத்தில் இருந்த ஸ்கோர் பலகை.
 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த முதல் (பகலிரவு) டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இன்னும் 2 நாட்களுக்கும் அதிகமாக மீதமிருக்க, வெறும் 90 ரன்கள் என்கிற வெற்றி இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா ஆட்டமிழந்த அதே 21 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோ பர்ன்ஸும், மாத்யூ வேடும் 70 ரன்களை எட்டும் வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்

வேட் 33 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். அடுத்து ஆட வந்த லபுஷானே 6 ரன்களுக்கு அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால், இந்த விக்கெட்டுகளால் ஆஸ்திரேலியாவுக்கு எந்த விதமான பின்னடைவும் ஏற்படவில்லை. 21 ஓவர்களில் இலக்கை எளிதாக எட்டி அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக, இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. வெறும் 36 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து இரண்டாவது இன்னிங்ஸை முடித்துக்கொண்டது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சைக் கையாள முடியாமல் திணறிய இந்திய வீரர்கள் களமிறங்கிய வேகத்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

இதுவரை இந்திய அணி எடுத்திருப்பதில் மிகக் குறைந்த டெஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோர் இது என்பதால் இணையத்தில் இந்திய அணியின் பேட்டிங் சராமாரியாக விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், அணித் தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் கடின உழைப்பு அத்தனையும் வெறும் 20 ஓவர்களில் மிக மோசமான பேட்டிங்கால் வீணாகிப் போனது என்று விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து இந்திய அணியின் வீரர்கள் தேர்வு, பேட்டிங் ஆடிய விதம், கோலியின் தலைமை எனப் பல அம்சங்கள் குறித்துப் பிரபலங்கள், ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் கடுமையாகச் சாடிப் பதிவிட்டு வருகின்றனர்.

 

https://www.hindutamil.in/news/sports/613408-india-loses-first-day-night-test-against-aussie-1.html

 

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியன் நிலைமை இப்படியா போகணும் .. இஸ்கூல் புள்ளிங்கோ கூட ஏதாவது தடவி கிடவி ரன் சேர்க்கும் ஐயோ பாவம்கள்.! ☺️..😊

IMG-20201219-213127.jpg 

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் இந்த விளையாட்டில் இந்தியாவுக்கு ஒரு மாறாத வடுவை ஏற்படுத்தியதுடன்.....பெரியதொரு சாதனையையே நிகழ்த்தியிருக்கின்றது.....அவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும்......!  🌹

  • கருத்துக்கள உறவுகள்

ரவி சாஸ்த்திரி கோச்சாகவும் விராட்கோலி கேப்டனாகவும் இருக்கும்வரை இந்தியாவால் இந்தியாவில் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் வெல்ல முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணி பட்ட அசிங்கத்திற்கு இவர்கள் தான் காரணம்; கேப்டன் கோலி வேதனை !!

 
இந்திய அணி பட்ட அசிங்கத்திற்கு இவர்கள் தான் காரணம்; கேப்டன் கோலி வேதனை !! 1

 

 

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்துள்ள மிக மோசமான தோல்வியால் ஏற்பட்டுள்ள வேதனையை வார்த்தைகளில் சொல்ல முடியாது என விராட் கோலி வேதனை தெரிவித்துள்ளார்.

 

ஆஸ்திரேலிய அணியுடனான அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ப்ரித்வி ஷாவிற்கு இடம் கிடைக்காது என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

 

இந்த தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி பட்ட அசிங்கத்திற்கு இவர்கள் தான் காரணம்; கேப்டன் கோலி வேதனை !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 74 ரன்களும், புஜாரா 43 ரன்களும் எடுத்திருந்தனர்.

 

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலிய அணி, வெறும் 191 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்திய அணி பட்ட அசிங்கத்திற்கு இவர்கள் தான் காரணம்; கேப்டன் கோலி வேதனை !! 3

இதனையடுத்து 53 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு, ப்ரிதிவ் ஷா 4 ரன்னில் விக்கெட்டை இழந்து மிகப்பெரும் ஏமாற்றம் கொடுத்தார். ப்ரித்வி ஷா தான் சின்ன பையன் அடுத்தடுத்து வரும் அனுபவ வீரர்கள் பார்த்து கொள்வார்கள் என ரசிகர்கள் நம்பிய நிலையில் அடுத்தடுத்து களமிறங்கிய சீனியர் வீரர்களோ ப்ரித்வி ஷாவை விட மோசமாக விளையாடி வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து நடையை கட்டினர். ஒருவர் கூட ஒற்றை இலக்க ரன்னை தாண்டாததால் வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்தது. ஷமி காயம் காரணமாக பேட்டிங் செய்யாததால் ஆல் அவுட்டாகாமல் தப்பித்து கொண்ட இந்திய அணி 36 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

இந்திய அணி பட்ட அசிங்கத்திற்கு இவர்கள் தான் காரணம்; கேப்டன் கோலி வேதனை !! 4

இதனையடுத்து 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 21 ஓவரிலேயே அசால்டாக இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.

இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் கோலி, தோல்வியால் ஏற்பட்டுள்ள வேதனையை வார்த்தையால் வெளிப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணி பட்ட அசிங்கத்திற்கு இவர்கள் தான் காரணம்; கேப்டன் கோலி வேதனை !! 5

இது குறித்து விராட் கோலி பேசுகையில், “வெறும் வார்த்தைகளுக்குள் இந்த உணர்வை வெளிப்படுத்துவது மிகவும் கஷ்டம். 60 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய எங்கள் பேட்டிங் ஆர்டர் அப்படியே சரிந்துவிட்டது. இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டத்தை வெறும் ஒரு மணி நேரத்தில் வீணடித்து விட்டோம். மிகுந்த வேதனையாக உள்ளது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே இன்னும் மாற்றமும், முன்னேற்றமும் தேவை. நாங்கள் கற்று கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என்பதை இந்த டெஸ்ட் போட்டி உணர்த்தியுள்ளது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு அடுத்த போட்டியில் நம் வீரர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறேன். முகமது ஷமிக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் நிலை குறித்து இன்னும் சரியாக தெரியவில்லை. ஸ்கேன் பரிசோதனை முடிவு வந்த பிறகே அவர் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவாரா இல்லையா என்பது தெரியவரும்” என்றார்.

https://tamil.sportzwiki.com/cricket/very-hard-to-put-those-feeling-into-words-says-virat-kohli/?fbclid=IwAR0oWSg4r972xgqsQNZdgmxoTQNIMOr5GbuCPyURrH7SNmbtTbOfW_WAsxA

 

 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த டெஸ்போட்டியில் இந்த சாதனையையும் முறியடித்து 26 க்குள் சுருள அட்வான்ஸ் வாழ்துகள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.