Jump to content

வெறிகொண்டு உயரும் பிட்காயின் மதிப்பு... முதலீடு செய்யலாமா? #Bitcoin


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெறிகொண்டு உயரும் பிட்காயின் மதிப்பு... முதலீடு செய்யலாமா? #Bitcoin

Bitcoin

Bitcoin

உலக அளவில் பிட்காயின்கள் அதிகப் புழக்கத்தில் இருப்பது சீனாவில்தான். அடுத்த இடத்தில் இருப்பது இந்தியாவில். ஆனால், பிட்காயின்கள் குறித்து இன்னும் இங்குத் தெளிவான வரைமுறைகள் வகுக்கப்படவில்லை. கிரிப்டோகரன்ஸி வர்த்தகம் சட்டவிரோதம் இல்லை என்று மட்டுமே கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த பிட்காயின் மோகம் கடந்த ஓரிரு ஆண்டுகளாக கொஞ்சம் குறைந்திருந்தது. ஆனால், இப்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பிட்காயின் பற்றிய பேச்சு அடிபடத்தொடங்கியிருக்கிறது. இப்படி கிரிப்டோகரன்சி மீண்டும் ட்ரெண்டாக காரணம், என்றுமில்லாத அளவுக்கு பிட்காயினின் மதிப்பு சடசடவென உயர்ந்து கொண்டிருப்பதுதான்.

முதல்முறையாக இரண்டு நாட்களுக்கு முன் 23,000 டாலர் மதிப்பை எட்டியது ஒரு பிட்காயினின் மதிப்பு. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 17 லட்சம் ரூபாய். இந்த ஆண்டு மட்டும் சுமார் 220% உயர்ந்திருக்கிறது. திடீரென பிட்காயின் மதிப்பு இந்த வருடம் உயரக் காரணம் என்ன, இப்படியான கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யலாமா?

Bitcoin
 
Bitcoin

இதற்கு முன் பிட்காயின் எப்படியானது என்பதை பார்ப்போம். பிட்காயின் எப்படி உருவானது என்பதில் இன்னும் சில குழப்பங்கள் நீடிக்கவே செய்கிறது. ஆனால், சடோஷி நக்காமோட்டோ என்ற புனைபெயர் கொண்ட ஒருவர்தான் இந்த கிரிப்டோகரன்சி முறையை வடிவமைத்திருக்கிறார். 2008-ல் உலகமெங்கும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது இந்த புதிய எலெக்ட்ரானிக் கரன்ஸி முறைக்கான திட்டத்தை விளக்கும் வெள்ளை அறிக்கையை இவர் வெளியிட்டார். Peer-to-peer முறையில் நடுவில் எந்த ஒரு பொருளாதார அமைப்போ, வாங்கியோ குறுக்கிடாமல் ஒருவரிடமிருந்து ஒருவர் பரிமாறிக்கொள்ளும் முறையாக இதை அவர் வடிவமைத்திருந்தார். பிரபல டோரென்ட் பதிவிறக்க முறையைப் போன்றதுதான் இது. நடுவில் சர்வர் என்று ஒன்று இருக்காது. ஒருவர் தேவையான ஃபைலை பதிவிறக்கிய பின் அவர் கணினியே seeder ஆக மற்றவர்களுக்கு அந்த ஃபைலை பதிவிறக்க உதவும். இதே போன்றதொரு முறையில் பரிவர்த்தனை ஒன்றைத் தொடங்குவதே பிட்காயினின் திட்டம்.

 

bitcoin.org தளத்தில் குறிப்பிட்டிருப்பது இதுதான்,

"nothing more than a mobile app or computer program that provides a personal Bitcoin wallet and allows a user to send and receive Bitcoins with them"

அதாவது இன்று நாம் பயன்படுத்தும் பணப் பரிவர்த்தனை மொபைல் ஆப்/இணையதளம் போன்றதுதான் பிட்காயின். உங்களுக்கு பிட்காயின் வாலட் ஒன்று வழங்கப்படும். அதைக்கொண்டு உங்களால் பிட்காயினை அனுப்பவும் பெறவும் முடியும். பொதுவாக ஒரு பிட்காயின் அதன் முகவரி கொண்டு அடையாளம் கொள்ளப்படும். 26 முதல் 35 ஆங்கில எழுத்துகள் மற்றும் எண்களைக் கொண்டிருக்கும் இந்த முகவரி. '1' அல்லது '3' என்ற எண்ணில் இந்த முகவரி தொடங்கும். இது வெளிப்படையாக வெளியில் தெரியாது. ஆனால், ஒரு பிட்காயின் அல்லது அதன் பகுதியை இதைக் கொண்டுதான் குறிக்க முடியும். பிட்காயின் வைத்திருப்பவர்களுக்கு ஒரு 'Private Key' தரப்படும். அதைக் கொண்டுதான் வாலட்டை திறக்க முடியும்.

Bitcoin
 
Bitcoin

ஒரு நாட்டின் அரசால் வழங்கப்படும் டாலர், ரூபாய், யென் போன்ற கரன்ஸிகளுக்கு மாற்றாகவே இந்த கிரிப்டோகரன்சிகள் கொண்டுவரப்பட்டன. உலகமெங்கும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒற்றை கரன்ஸியாக இருக்கவேண்டும் என்ற நோக்கில்தான் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்ஸிகள் உருவாகின. இப்போதுதான் ரூபாயும் கூட டிஜிட்டல் ஆகிவிட்டதே எனக் கேட்கிறீர்களா?

 

டிஜிட்டல் கரன்ஸிக்கும் பிட்காயின் போன்ற க்ரிப்டோகரன்ஸிக்கும் வித்தியாசம் உண்டு. இப்போது டிஜிட்டலாக நாம் செய்யும் பரிவர்த்தனைகளில் நிஜ கரன்ஸியை டிஜிட்டல் வடிவில் பரிமாறிக்கொள்வோம். அதாவது, 100 ரூபாய் நோட்டை கையில் எடுத்துச் செல்லாமல் டிஜிட்டலாக பரிவர்த்தனை செய்கிறோம். ஆனால், 100 ரூபாய் என்பது தாளாலான நோட்டுதான். ஆனால், க்ரிப்டோகரன்ஸி எனப்படுபவை முழுமையான டிஜிட்டல் கரன்ஸி. அவை டிஜிட்டலாக உருவாக்கப்பட்டு, டிஜிட்டலாகப் புழக்கத்தில் விடப்படுபவை.

சரி, ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு கடையில் பொருட்கள் வாங்கி வங்கிக் கணக்கு மூலம் பணம் செலுத்துகிறீர்கள் என எடுத்துக்கொள்வோம். 100 ரூபாய் செலுத்தவேண்டும் என்றால் அந்த கடை உங்கள் கணக்கிலிருந்து 100 ரூபாயை வங்கியிடம் கேட்கும். அந்த வங்கி அந்த தொகை உங்களிடம் இருப்பில் இருக்கிறதா என்று பார்த்து அந்த தொகையைக் கடைக்கு அனுப்பிவைக்கும். அனைத்தும் டிஜிட்டல் என்பதால் எல்லாம் நொடிகளில் நடந்துவிடுகிறது. பரிவர்த்தனைகள் மற்றும் பேலன்ஸ் தொகை கணக்குகளை வங்கிகள் பராமரிக்கும். இப்படி ஒரு அமைப்பே தேவையில்லை என்கின்றன கிரிப்டோகரன்ஸிகள்.

Bitcoin
 
Bitcoin QuoteInspector.com

பிட்காயினில் ஏற்படும் அனைத்து பரிவர்த்தனைகளும் பிளாக்-செயின்(block-chain) முறையில் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டிருக்கும். இதில் ஒன்றை மட்டும் மாற்றுவது முடியாத காரியம். மொத்த சங்கிலியிலும் அது மாற்றத்தை உண்டாக்கும். இதனால் இதில் முறைகேடுகள் நடக்கவோ, திருட்டுகள் நடக்கவோ வாய்ப்பில்லை. முன்பு சொன்னது போல டோரன்ட் பதிவிறக்கத்துக்கு தேவைப்படுவது போல இந்த சங்கிலியை வைத்திருக்கப் பல கணினிகள் தேவைப்படும். இதற்குத் தேவையான கம்ப்யூட்டிங் திறனைக் கொடுப்பதன் மூலம் நீங்களும் சங்கிலியின் ஒரு பகுதியாக மாறுவீர்கள். உலகமெங்கும் இப்படி இந்த சங்கிலியில் பலரும் இருப்பார்கள். இவர்களின் கணினிகள் அனைத்தும் சேர்ந்துதான் ஒரு பரிவர்த்தனையை உறுதிப்படுத்தும். இப்படி சங்கிலியில் ஒரு பங்காக இருப்பதால் என்ன பயன் கிடைக்கும்? இதைச் செய்வதற்கு அவ்வப்போது புது பிட்காயின் உருவாக்கப்பட்டு உங்களுக்குச் சன்மானமாக அது தரப்படும். இப்படி பிட்காயின் பெறுவதை 'பிட்காயின் மைனிங்' என்பார்கள். இப்படி இருப்பதால்தான் பிட்காயினை 'Global decentralised currency' என்கிறார்கள்.

இன்னும் விரிவாக பிட்காயின் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள கீழ்க்காணும் கட்டுரைகளைப் படியுங்கள்.

சரி, தொழில்நுட்ப பின்னணியில் மூழ்கிப் போகாமல் விஷயத்துக்கு வருவோம். ஏன், என்றுமில்லாத அளவு பிட்காயின் மதிப்பு சடசடவென உயர்ந்துவருகிறது?

பிட்காயினை ஒருவர் மூன்று வழிகளில் பெற முடியும். ஒன்று கம்ப்யூட்டிங் வசதிகள் கொண்டு 'பிட்காயின் மைனிங்' செய்து புதிய பிட்காயின்களை பெறலாம். இல்லை, ஏற்கெனவே பிட்காயின் வைத்திருக்கும் ஒருவரிடமிருந்து அதை வாங்கலாம். இது அல்லாமல் தற்போது பிட்காயின்களை பரிமாறிக்கொள்ளப் பங்குச்சந்தை போன்று 'Bitcoin Exchange' அமைப்புகளையும் சில நிறுவனங்கள் உருவாக்கி வைத்திருக்கின்றன. இதில் பணம் கொடுத்து பிட்காயின்களை உங்களால் பெற முடியும். இப்படி பங்குச்சந்தை போன்ற ஒரு கட்டமைப்புக்குள் வந்துவிட்டதால் ஒரு பிட்காயினுக்கு பண மதிப்பு ஒன்று நிர்ணயிக்கப்பட்டது. இது டிமாண்ட் சப்ளை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும்.

Bitcoin
 
Bitcoin

டிமாண்ட் அதிகரித்திருப்பதால் இப்போது பிட்காயினும் வரலாறு காணாத வளர்ச்சியை கண்டுவருகிறது. பிட்காயினுக்கென இன்னொரு அம்சமும் உண்டு, புதிய பிட்காயின்களை குறிப்பிட்ட அளவுதான் உருவாக்க முடியும். தனிநபர் ஒருவர் மட்டும் அதிகப்படியான பிட்காயின்களை உருவாக்கி லாபம் பார்க்க அனுமதிக்காது பிட்காயின் ப்ரோடோகால். மொத்தமாகவே உலகமெங்கும் 2.1 கோடி பிட்காயின்கள் மட்டுமே மொத்தமாக உருவாக்க முடியும். அதுதான் லிமிட். இப்போதுவரை 1.85 கோடி பிட்காயின்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. இதனால்தான் டிமாண்ட் அதிகரிக்க மதிப்பும் எகிறுகிறது.

ரூபாய்க்கு பைசா இருப்பது போல பிட்காயினிலும் பகுதியாகப் பரிவர்த்தனைகள் செய்ய முடியும். பிட்காயினின் மிகக் குறைந்த பின்னம் 'சடோஷி'(Satoshi) என்று அழைக்கப்படுகிறது.

இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் இன்னும் சில விஷயங்களும் பிட்காயின்களின் இந்த வரலாறு காணாத வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கின்றன. உலகின் முன்னணி பணப் பரிவர்த்தனை சேவையான PayPal தொடங்கி நம்மூர் வங்கிகள் வரை வெளிப்படையாக இல்லையென்றாலும் மறைமுகமாக கிரிப்டோகரன்ஸிகளுக்கு அதன் முடிவுகள் மூலம் பச்சைக்கொடி காட்டியிருக்கின்றன. எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி, யெஸ் பேங்க் போன்ற வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை வங்கிக் கணக்குகளின் மூலம் கிரிப்டோகரன்ஸி வர்த்தகத்தில் ஈடுபட அனுமதித்துள்ளன.

2018-ல் ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் கிரிப்டோகரன்சி பரிமாற்ற கணக்குகளை முடக்கியது இந்திய வங்கிகள். கிரிப்டோகரன்சிக்கான பரிவர்த்தனைகளை அப்போது தடைசெய்திருந்தது மத்திய ரிசர்வ் வங்கி. உச்சநீதிமன்றம் இந்த தடையை நீக்குமாறு இந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இதனால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்திருந்த பணத்தையும், காப்பீடு முதலீடுகளையும் பிட்காயின் பக்கம் திருப்ப ஏற்கெனவே குறைவான இருப்பு இருக்கும் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளன. 2010-களின் தொடக்கத்தில் ஒரு டாலருக்கு உங்களால் பல பிட்காயின்களை பெற்றிருக்க முடிவும்.

Bitcoin
 
Bitcoin

இப்போது உலக அளவில் பிட்காயின்கள் அதிகப் புழக்கத்தில் இருப்பது சீனாவில்தான். அடுத்த இடத்தில் இருப்பது நாம்தான். ஆனால், இன்னும் இங்குத் தெளிவான வரைமுறைகள் வகுக்கப்படவில்லை. கிரிப்டோகரன்ஸி வர்த்தகம் சட்டவிரோதம் இல்லை என்று மட்டுமே கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம்.

க்ரிப்டோகரன்சி தொடர்பான எந்தவொரு சட்டமும் இந்தியாவில் இல்லாத நிலையில், அதை ரிசர்வ் வங்கியால் தடைசெய்ய முடியாது
உச்ச நீதிமன்றம்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், சவுதி அரேபியா உள்ளிட்ட 10 நாடுகள் க்ரிப்டோகரன்சியைத் தடை செய்திருக்கின்றன. சீனா, இந்தோனேசியா, நேபாளம் உள்ளிட்ட சில நாடுகளில் க்ரிப்டோகரன்சியை வைத்திருக்கலாம். ஆனால், வணிகப் பயன்பாட்டுக்கோ வேறு வகையான நேரடிப் பணப் பரிமாற்றங்களுக்கோ அவற்றைப் பயன்படுத்தத் தடை விதித்திருக்கின்றன. ஆனால் ஜப்பான், சிங்கப்பூர், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 15 நாடுகள் க்ரிப்டோகரன்சியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்திருக்கின்றன. இவை தவிர, மற்ற நாடுகள் எந்த விதமான தடையும் அமல்படுத்தவில்லை. அதே நேரம், அதைப் பயன்படுத்துவது சட்டப்பூர்வமான ஒரு விஷயம் என அங்கீகரிக்கவும் இல்லை.

முன்பு சொன்னது போல பிட்காயின் முறையை ஆரம்பித்தவர்கள் இதை ஒரு முதலீட்டு முறையாகப் பார்க்கவில்லை. தற்போது நடைமுறையில் இருக்கும் பணத்திற்கு மாற்றாகவே பார்த்தனர். ஆனால், மக்களின் போக்கு இதை ஒரு முதலீடாக மாற்றியிருக்கிறது. இருந்தும் பொருளாதார நிபுணர்கள் பிட்காயினில் முதலீடு செய்யலாம் எனப் பரிந்துரைக்கத் தயங்கவே செய்கின்றனர்.

திடீர் ஏற்ற இறக்கங்களும் காரணம். டிசம்பர் 2017-ல் பிட்காயினின் மதிப்பு 18,000 டாலர் இருந்தது. இது 2018 டிசம்பரில் வெறும் 3200 டாலராகச் சரிந்தது. மீண்டும் ஜூலை 2019-ல் 10,000 டாலர் மதிப்பைத் தொட்டது. அடுத்து 2020 மார்ச்சில் மீண்டும் 5,500 டாலராக சரிந்தது. இப்போது 20,000 டாலர் மதிப்பைக் கடந்திருக்கிறது. இப்படி வெறும் சப்ளை டிமாண்டை மட்டும் வைத்து மதிப்பு இப்படி கன்னாபின்னாவென ஏறி இறங்குவதால் யாராலும் தைரியமாக கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்யலாம் எனச் சொல்ல முடியவில்லை.

பொருளாதார நிபுணர்கள் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கிரிப்டோகரன்சிகள் பற்றிக் குறிப்பிடுகின்றனர். தங்கம், பணம் போன்று பிட்காயினுக்கு பின் நிஜ உலகில் எந்த பொருளோ, சொத்தோ கிடையாது. அதனால் முறையாக அரசு அமைப்புகள் இதை ஒழுங்குபடுத்தினால் மட்டுமே நிலையான முதலீட்டு விஷயமாக பிட்காயின் மாறும்

 

https://www.vikatan.com/technology/tech-news/surge-in-bitcoin-value-why-should-you-invest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப 20 ஈரோவுக்கு ஒரு பங்கு வாங்கியிருந்தன் எண்டால் இப்ப 20000 மதிப்பு...😎

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த Bitcoin உள்ள இன்னொரு பிரச்சனை, இதன் விளங்கமுடியாத பெயர்கள்.. முழுமையாக acronymsம் jargonம் கொண்டதால் பெயர்களை இலகுவில் விளங்கிக்கொள்ளவது கடினம்..  😰.. 

மிகவும் தளம்பலான சந்தையை கொண்டதால் நம்பி முதலீடு செய்வது இலாபம் என கூறமுடியாது.. ஆகையால் என்னைப்பொறுத்தவரை பாதுகாப்பான முதலீடு என்பதில் Shaquille O’Neal கூறிய கருத்துடன்தான் உடன்படமுடிகிறது..

“O'Neal says his investing style is simple: He invests only in assets that he believes can change people's lives. "I heard Jeff Bezos say one time [that] he makes his investments based on if it's going to change people's lives”

 

https://www.google.com.au/amp/s/www.cnbc.com/amp/2021/09/10/why-nba-legend-shaquille-oneal-hasnt-invested-in-crypto.html

NBA legend Shaquille O'Neal explains why he hasn't invested in crypto

Published Fri, Sep 10 2021 8:59 AM EDTUpdated Fri, Sep 10 2021 3:36 PM EDT
 
Jade Scipioni
@JADESCIPIONI
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/12/2020 at 12:42, குமாரசாமி said:

அப்ப 20 ஈரோவுக்கு ஒரு பங்கு வாங்கியிருந்தன் எண்டால் இப்ப 20000 மதிப்பு...😎

ஒரே இரவில்.. பிட்காயின் செல்லாது என்று சொல்லிட்டா.. எல்லா மதிப்பும் அம்பேல்.

ஒரு காலத்தில் தங்க நாணயங்கள் மக்களிடம் இருந்தன.. அதைப் பறிக்க.. வெறும். கடதாசிக்கு பெறுமதி அளித்து தங்கத்தை மக்களிடம் இருந்து அபகரித்துவிட்டார்கள். இப்ப இங்கிலாந்தில்.. பிரித்தானியாவை பல முறை குளிப்பாட்டி எடுக்கக் கூடிய அளவுக்கு தங்கம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்ப கடதாசியும் போய் கையால் தொட்டுணரக் கூட முடியாத டிஜிட்டல் காயினுக்கு பெறுமதி கூட்டி வைச்சிருக்குது. இது எதை எதை எல்லாம் பறிக்கப் போகுதோ யார் அறிவார். ஆனால் நிச்சயம் கறுப்புப் பணம்.. வெள்ளைப் பணம் எல்லாத்தையும் பறிக்கும்.

கடைசியில்.. அதையும் பெறுமதி இழப்புச் செய்துவிட்டால்...??!

மக்கள் கோவணத்தோடு ஆண்டியாவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

O'Neal says his investing style is simple: He invests only in assets that he believes can change people's lives. "I heard Jeff Bezos say one time [that] he makes his investments based on if it's going to change people's lives”

இதை நீங்கள் நம்புகிறீகள் என்றால் - decentralised finance எதிர்கால வங்கி பரிவர்தனையை, நாணய பரிவர்த்தனையை, அதன் மூலம் மக்களின் வாழ்வை மாற்றும் என்பதையும் நம்புவீர்கள் என நினைக்கிறேன்.

அப்படியாயின் நீங்கள் மேலே சொன்ன investment principle ற்குள் கிரிப்டோவும் வந்து விடும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட பிட் காய்னின் ஆரம்பகாலத்தில் யாழில் யாரோ ஒருவர் இணைத்திருந்த ஒரு கட்டுரைய அல்லது அவரே எழுதியதாக இருக்கலாம் நான் வாசித்திருந்தேன். முற்றிலும் நம்பமுடியாததாக இருந்ததால் அப்படியே மறந்துபோனேன். பின்பு ஒருநாள் நான் வாழும் நாட்டின் பிரதான தொடரூந்து நிலையத்தில் இருக்கும் ஒரு சீனாக்காரனின் கோப்பிக்கடையில் பிட் காய்னிலும் பணப்பரிவர்த்தனை செய்யலாம் என ஒரு அறிவித்தல் இருந்த்ததைக் கவனித்து அப்பாலே சென்றுவிட்டேன்,

சரி விடையத்துக்கு வருகிறேன் 

அதேகாலத்தின் என்னிடம் சேமிப்பிலிருந்த காசில் நூறு கிராம் இருபத்துநாலு காரட் தங்கத்தை வாங்கினேன் அதன் அப்போதைய விலை கிட்டத்தட்ட 760 யூரோக்கள் இந்த நாட்டில் இருபத்து நாலு காரட் தங்கத்தை பிஸ்கட்டாக வாங்கினால் விற்பனை வரி கிடையாது காரணம் அப்படியான முதலீட்டுத் தங்கம் ஆபரணமில்லாதவிடத்தில் பணத்துக்கு ஈடாகவே கணிக்கப்படும்.

பின்பு நான் பிட் காயினப்பற்றி பிரபலமாக அறிந்தபோது நான் வாங்கிய தங்கத்தின் விலைக்கு பதினாறு சென்ருக்கு ஒரு ஒஇட் காயினை வாங்கியிருக்கலாம். நீங்களே கூட்டிக்கழித்துப்பாருங்கள் அப்போ நான் எவ்வளவு காயினை வாங்கியிருக்கலாம் என.

அதன்பின்பு பிட் காயின் பதினாறாயிரம் டாலருக்குமேல் எகிறும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர் விகடன் வார இதழில் நான் கிரிப்டோ வர்த்தகத்தில் ஈடுபடுகிறேன் ஆனால் பிதாயின் இப்போ விலை அதிகம் ஆகையால் இரிடியம் போன்ற விலை குறைந்த கிரிப்டோ முதலீட்டில் ஈடுபடுகிறேன் அதனால் ஒரு சிறிது இலாபமும் பெறுகிறேன் எனக் கூறியிருந்தார். அதையும் கவனிக்காது விட்டுட்டன். இப்பொ அதன் விலை 3374 டாலர்.

அதே நேரம் ஒரு எஸ்தோனியன் சபையர் கரன்சி என ஒன்று வந்திருக்கு அதை வாங்கு என்றான் நான் கிட்டத்தட்ட நூறு யூரோக்கள் செலவுசெய்து ஒரு சில ஆயிரம் காயிஙளை வாங்கி மறந்தே விட்டேன். இப்பொ அதன் விலை கிட்டத்தட்ட ஆயிரம் டாலர்களுக்கு மேலாகிவிட்டது. 

கண்டபடி முதலீடு செய்யாதீர்கள் முயன்று பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

இதை நீங்கள் நம்புகிறீகள் என்றால் - decentralised finance எதிர்கால வங்கி பரிவர்தனையை, நாணய பரிவர்த்தனையை, அதன் மூலம் மக்களின் வாழ்வை மாற்றும் என்பதையும் நம்புவீர்கள் என நினைக்கிறேன்.

அப்படியாயின் நீங்கள் மேலே சொன்ன investment principle ற்குள் கிரிப்டோவும் வந்து விடும் ?

இங்கே நீங்கள் கூறும் இடைத்தரகர்கள், வங்கிகள் இல்லாமல் செய்யப்படும் பரிவர்த்தனை.. இது எத்தனை வீதம் நடைமுறையில் உள்ளது? இதனால் வரும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? .. எல்லாவற்றையும் பார்த்தால் இன்னமும் நம்பிக்கை வரவில்லை .. ஆனால் மக்களின் வாழ்க்கையை மாற்றும்.. 

cryptoவையே நாடுகள் நடைமுறைப்படுத்த யோசிக்கும் பொழுது இன்னமும் இந்த Defi பற்றி நம்பிக்கை ஏற்படவில்லை..  on the note இன்றும் கூட Bitcoin 8% dropped.. 

இன்றுவரை நான் பாதுகாப்பான முதலீடு என நம்புவது அசையா சொத்துகளையே.. அது ஒரு license ஆக அல்லது காணியாக கூட இருக்கலாம்.. ஆனால் என்னளவில் என் முதலுக்கு மோசம் வரமாட்டாது.
அதனால்தான் Shaquille O’Nealன் முதலீட்டு முறைகளை நம்புகிறேன் என்றேன்.    

@Elugnajiru  எனது nephew இந்த Bitcoin investment ல் உற்சாகமாக ஈடுபடுவதை அறிந்துகொண்டேன்.. அவர் மூலம் முயற்சித்து பார்க்கலாம்.. நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இங்கே நீங்கள் கூறும் இடைத்தரகர்கள், வங்கிகள் இல்லாமல் செய்யப்படும் பரிவர்த்தனை.. இது எத்தனை வீதம் நடைமுறையில் உள்ளது? இதனால் வரும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? .. எல்லாவற்றையும் பார்த்தால் இன்னமும் நம்பிக்கை வரவில்லை .. ஆனால் மக்களின் வாழ்க்கையை மாற்றும்.. 

cryptoவையே நாடுகள் நடைமுறைப்படுத்த யோசிக்கும் பொழுது இன்னமும் இந்த Defi பற்றி நம்பிக்கை ஏற்படவில்லை..  on the note இன்றும் கூட Bitcoin 8% dropped.. 

இன்றுவரை நான் பாதுகாப்பான முதலீடு என நம்புவது அசையா சொத்துகளையே.. அது ஒரு license ஆக அல்லது காணியாக கூட இருக்கலாம்.. ஆனால் என்னளவில் என் முதலுக்கு மோசம் வரமாட்டாது.
அதனால்தான் Shaquille O’Nealன் முதலீட்டு முறைகளை நம்புகிறேன் என்றேன்.    

@Elugnajiru  எனது nephew இந்த Bitcoin investment ல் உற்சாகமாக ஈடுபடுவதை அறிந்துகொண்டேன்.. அவர் மூலம் முயற்சித்து பார்க்கலாம்.. நன்றி. 

எனக்கும் 100% நம்பிக்கை என சொல்ல முடியாது. ஆனால் portfolio diversification இல் ஒரு அங்கமாக கொஞ்சம் இதையும் தொட்டுக்கலாம் என நம்புகிறேன்.

உங்கள் மருமகனிடம் கேட்டதை எம்மிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏத்தி, ஏத்திக் கொண்டு போய் முறிக்கப் போறாங்கப்பா....

பப்பாவில் ஏத்திற கதை தான்...

ஒருவனை ஏமாத்த வேணும் என்றால்... அவன் ஆசையை தூண்டணும்.....

தூண்டுகிறார்கள்… 🤑

News, within the last 3 hrs 🤗

Crypto Markets Suddenly Lose $250 Billion In Value As Evergrande Turmoil Pummels Bitcoin, Ethereum And Other Major Cryptocurrencies

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 “Be fearful when others are greedy and greedy when others are fearful.” 
- Warren Buffett - 

ஆனால் கிரிப்டோ எல்லாருக்கும் ஏற்றது அல்ல. இது பொதுவாகவே எல்லா பங்கு வர்தகத்திலும் சொல்வதுதான், ஆனால் கிரிப்டோவில் விலை ஏற்ற இறக்கம் மிக அசாதாரணமானது (high volatility). So you need balls of steel. 

விலை கூடும் போது விற்பதும் குறையும் போது வாங்குவதும்தான் கேம். அதற்கு fundamental, technical analysis தெரிந்திருக்க வேண்டும். அல்லது தெரிந்தவர்கள் சொல்வதை கிரகிக்கவாவது வேண்டும்.  

தவிர நாணய மாற்று போல, கிரிப்டோவில் தனியே technical ஐ வைத்து மட்டும் கணிப்பதும் கடினம்.

இன்றைக்கு வெளியே இருந்து நியூஸ் வாசித்த பலருக்கு கிரிப்டோ மார்கெட்டில் 250 பில்லியன் இழப்பு என்பதுதான் தெரியும்.

ஆனால் மார்கெட் peak இல் வித்து விட்டு, bottom க்கு காத்திருப்பவர்களை பற்றி தெரியாது.

#கல்லாதது உலகளவு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

London stock exchange ல் வேலை செய்திருக்கின்றேன்.

இந்த பங்கு சந்தை யாவாரத்தில் இரு பக்கமும் கமிசன் பணம் பார்க்கும், traders மற்றும் trading floor கொண்டு இயங்கும் பெரும் வங்கிகளே பணம் பார்க்கின்றன.

ஏனெனில், அவர்கள் கணிதவியலில் (actuarial) புலிகள். 

(நம்மவர்கள் பலர், இந்த துறையில் கணிதம், Warwick பல்கலை போய் படித்து வருகிறார்கள். படிப்பு என்பதிலும் பார்க்க, இயற்கையான விவேகம், வேகமான மன கணக்கியல் என்பதே கைகொடுக்கும் என்பது எனது அபிப்பிராயம்)

கண்ணால் பார்த்துக்கொண்டே, மனம் கணக்கு போட வேண்டும். அதுவும் மிக துல்லியமாக.

தவறு, பெரும் பண நட்டத்தில் முடியும். 

எனக்கு தெரிந்து, இந்த பங்கு சந்தையில் பெரும் பணம் ஈட்டிய Sobers, Buffett போன்றோர், தாமே சிறந்த traders களை சம்பளத்துக்கு வைத்து இயங்குகிறார்கள். 

மேலும், அவர்களின் செல்வத்தின் ஒரு பகுதி, asset striping மூலமும் வருகிறது.

அதனை சாதாரண பங்கு சந்தையில் பணம் பண்ண முயல்பவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.

ஒருவர், இழக்க, ஒருவர் லாபம் அடைவதே பங்கு சந்தை.

அதில் பணம் பண்ணுவது, ஒரு முழு நேர வேலை. ஒரு சக வேலை நண்பர், £6,000 னை மதிய உணவு நேரம் EGG bank என்று முன்னர் இருந்த ஒன்றில் போட்டார். மாலை போகும் போது, அவ்வளவும் காலி.

பெரும் சோகத்தில் இருந்த அவரை தேத்தி அனுப்ப பெரும் பாடகியது. அடுத்த நாள் வருவாரோ என்று கவலைப்பட்டேன்.

அன்று தான் நினைத்தேன், இந்த பக்கமே தலை வைத்தும் படுக்க கூடாது என்று.

விசயம் தெரிந்தாலும், உங்களுக்கு சொல்லி தர மாட்டார்கள். சொல்லி தருவதாக காட்டினாலும், நீங்கள் இழப்பதை உள்ளூர விரும்புவார்கள். ஏனெனில் அதனூடாக லாபம் பெறுவார்கள்.

நீங்களாக அதனை அறிய, பெரும் பணத்தினை இழக்க வேண்டி இருக்கும். விரக்தி தான் அடைவீர்கள்.

மேலே சொன்ன traders உடன் பேசி இருக்கிறேன். அவர்கள் சொன்னது இதுதான்: வித்தை தெரியாவிடில், withdraw பண்ணி விடுங்கள்.

If you don't know the game, then withdraw. Don't gamble! 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த விளையாட்டும் பிறக்கும் போதே அந்த விளையாட்டில் கில்லி என்று யாரும் பிறப்பதில்லை.

ஒரு விசயத்தை, அவதானித்து, கற்று அதன் பின் இறங்கி விளையாடினால்தான் அது நமக்கு சரி வருமா இல்லையா என்பது தெரியும்.

அதை தவிர முன்னர் போல் இப்போ முழுக்க முழுக்க traders ஐ நம்பி இருக்க வேண்டியதும் இல்லை. சந்தையில் எத்தனையோ சாதனங்கள் உள்ளன.  

Day trading வேறு long term investment வேறு.

Day trading செய்வது மிக கடினமானது ஆனால் மிக குறைந்த மூளை செலவை கொண்டே நீண்ட கால முதலீடுகளை செய்யலாம். எல்லா முதலீடுகளையும் ஒரே இடத்தில் கொட்டாமல் - பென்சன், அசையா சொத்துகள், இவற்றுடன் ஒரு பகுதியை இப்படி பங்குகளில் முதலிடலாம்.

அதே போல பங்குகளையும் ஒரே இடத்தில் வாங்காமல் வெவ்வேறு துறைகள் (different industries), வெவ்வேறு நிறுவனக்களில் முதலிடலாம்.

அதையும் விட ரிஸ்க் குறைய என்றால் - index tracking funds இல் போடலாம்.

Stocks and shares ISA என யூகேயில் அரசே குறித்த அளவு வரி விலக்கும் தரும்.

Crypto இன்னொரு வகை. அதிலும்DeFi யில் baking, stacking என்று பல விடயங்கள் உள்ளன. ஆனால் high pain, high gain. ஆனால் அதிலும் bag carriers ஆக நீண்டகாலம் காத்திருப்பவர்கள் மிக சொற்ப முதலீட்ட்டில் life changing money எடுதுள்ளார்கள் (பிட்காயினை முதல் 3 வருடத்தில் வாங்கியோர்). 

ஆகவே பங்குகளில் முதலிடுவது என்பது பல பரந்துபட்ட அம்சங்களை கொண்டது. எல்லாருக்கும் எல்லாம் இயலாது. 

ஆனால் இது ஒன்றும் சிதம்பர ரகசியமும் அல்ல. 

கரையில் நின்று காலை நனைக்க பயப்படாமல் ஒல்லி தேங்காயை கட்டி கொண்டு தப்பு தண்ணியில் இறங்கலாம், தப்பில்லை. 

ஆனால் DYOR மிக முக்கியம். Do your own research. முதலிடமுதல் அந்த துறை, வியாபாரம், அதன் கணக்கு வழக்குகள், எதிர்கால திட்டங்கள், வர கூடிய சட்ட மாற்றங்கள் இப்படி பலதை நீங்களாகவே ஆராய்வது மிக முக்கியம். 

யுடியூப்பில் ஆயிரம் வீடியோ போடுவார்கள் - அதை பார்த்து முதலிட்டால் கதை கந்தல்தான்.

A fool and his money are easily parted என்பார்கள். நீங்கள் இப்படி பட்டவராயின் - உங்களுக்கு பங்கு சந்தை ஏற்ற இடமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க ஒரு அண்ணை 300 டொலரை போடு மாதம் 50 டொலர்(30 மாதம் தருவாங்கள் என்றார்) வரும் என்று ஆசை காட்டுறார். சிறுசேமிப்பா இருப்பதை இதில் போட விருப்பமில்லை. விபரம் கிடைச்சால் யாழில போடுறன். என்ன ஏது என்று வியளத்தை சொல்லுங்கோவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஏராளன் said:

இங்க ஒரு அண்ணை 300 டொலரை போடு மாதம் 50 டொலர்(30 மாதம் தருவாங்கள் என்றார்) வரும் என்று ஆசை காட்டுறார். சிறுசேமிப்பா இருப்பதை இதில் போட விருப்பமில்லை. விபரம் கிடைச்சால் யாழில போடுறன். என்ன ஏது என்று வியளத்தை சொல்லுங்கோவன்.

யாழில் தமிழர் பிளாக் செயின் என்று ஒன்றை யாரோ அறிமுகம் செய்தார்களே அதுவா?

அப்படியாயின் அவரை அதை பற்றி ஒரு திரி திறக்க சொல்லுங்கள். 

 

41 minutes ago, goshan_che said:

ஆனால் DYOR மிக முக்கியம். Do your own research. முதலிடமுதல் அந்த துறை, வியாபாரம், அதன் கணக்கு வழக்குகள், எதிர்கால திட்டங்கள், வர கூடிய சட்ட மாற்றங்கள் இப்படி பலதை நீங்களாகவே ஆராய்வது மிக முக்கியம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.babypips.com/learn/forex

இந்த இணையத்தளத்தில் உங்களை பதிவு செய்து (அல்லது செய்யாமலும்) இதில் உள்ள பாடத்திட்டத்தை  இலவசமாக தொடரலாம், குறிப்பாக முக்கியமான விடயங்களை இந்த பாடத்திட்டத்தில் உள்ளடக்குகிறார்கள்.

பங்கு சந்தை வர்த்தகத்தில் 90% தோற்கிறார்கள் என கூறுகிறார்கள்.

https://www.fxcm.com/au/education/traits-successful-traders/

இந்த விகிதாசாரம் வியாபாரத்துறையில் தோல்வியடைவோரின் விகிதாசாரமும் சரியான அள்விலே உள்ளது.

Fundamental analysis இல் பங்கு சந்தை நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை ஆனால் இந்த புத்தகம் படிக்கும் போது ஆர்வமாக இருந்தது உங்களுக்கு உபயோகப்படலாம்.

இதனை இலவசமாக இணையத்திலிருந்தும் தரவிறக்கம் செய்யலாம்.

yahoo finance

google finance

fundamental analysis தகவல்களை இலவசமாகப்பெறலாம்.

முதலீட்டின் பரவலாக்கலாம்

https://www.amazon.com.au/Intelligent-Asset-Allocator-Portfolio-Maximize-ebook/dp/B005XM6NRY

இதனை இலவசமாக இணையத்திலிருந்தும் தரவிறக்கம் செய்யலாம்.

இவை தவிர "beta"பயன்படுத்தி முதலீட்டின் பரவலாக்கலாம்

உதாரணமாக "beta" 2 பங்குகள் மொத்த சந்தை 1 விகிதமாக அதிகரித்தால் குறித்த பங்கு அதனை விட 2 புள்ளி அதிகரிக்கும் என்பார்கள் உதாரணம் கனிய வள பங்குகள் ஆனால் மருத்துவ துறை பங்குகள் 0.5 விகிதம் மட்டும் மாறும், அதனால் அதன் "beta" 0.5

எனக்கு நீண்டகால முதலீட்டில் அனுபவம் இல்லை, அதனால் எனது கருத்து தவறாக இருக்கலாம்.

முதலீடுகளுக்கு ஒரே ஒரு விடயம் முக்கியம் என்பார்கள் " மூலதன பாதுகாப்பு".

பங்கு வர்த்தகத்தில் 90% உளவியல் என்பார்கள், அதற்கு பிறகு பணப்பராமரிப்பு அதன் பின்னரே மற்றதெல்லாம் என்பார்கள்.

https://www.youtube.com/watch?v=blQZ_bF468c

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இங்க ஒரு அண்ணை 300 டொலரை போடு மாதம் 50 டொலர்(30 மாதம் தருவாங்கள் என்றார்) வரும் என்று ஆசை காட்டுறார். சிறுசேமிப்பா இருப்பதை இதில் போட விருப்பமில்லை. விபரம் கிடைச்சால் யாழில போடுறன். என்ன ஏது என்று வியளத்தை சொல்லுங்கோவன்.

பிரமிட் திட்டம். உண்மையில் முதலீடு இல்லை. தள்ளியே இருங்கள்.

முதலீடு நம்பகத் தன்மையை எடைபோடும் எளிமையான முறை - வங்கி - அதுவும் அரச வங்கி வட்டி வீதத்தை விட கூடவாயின், உண்மையாக இருக்கலாம், அனால் risk அதிகம்.
 
அதாவது,   sovereign guarantee for return on investment ஐ விட அதிகமாக return on investment ஆயின், ஆபத்து  அதிகம். 

ஆனால், 300 ஐ போடுங்கள், 50 ம்,அதன் வரும் என்றால், அப்படி உண்மையில் ஓர் முதலீடு உள்ளது என்றால் எல்லோருக்கும் தெரிந்து இருக்கும்.

அனால், 300 ஐ போட்டு முதலின் பெறுமானம் 50 அதிகரிக்க உள்ள வாய்ப்பிலும், 50 ஐ உங்களுக்கு தருவதத்திற்கான இருக்கும் முதலீடு வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம்.

அல்லது, உங்கலாய் போன்றவர்களிடம் 300 ஐ வாங்கி விட்டு, 50 மதம் உங்களுக்கு தந்துவிட்டு, குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் மூடும் திட்டமாக தான், நீங்கள் சொல்வதில் இருந்து தெரிகிறது, பிரமிட் திட்டம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

எனக்கும் 100% நம்பிக்கை என சொல்ல முடியாது. ஆனால் portfolio diversification இல் ஒரு அங்கமாக கொஞ்சம் இதையும் தொட்டுக்கலாம் என நம்புகிறேன்.

உங்கள் மருமகனிடம் கேட்டதை எம்மிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

 

உண்மை.. எப்படியும் கரையில் நின்று பார்க்காமல் கொஞ்சம் கடலுக்குள்ளும் போகலாம்( எப்படியும் lifeguard காப்பாற்றிவிடுவார்கள்) என்பதுதான் நிலைப்பாடு.. 

21 minutes ago, vasee said:

 

 

இவ்வளவு விடயங்களையும் நேரமெடுத்து இங்கே இணைத்தமைக்கு.. 

Rogue Trader தொடங்கி Charles Ponzi scams வரை தகவல்களை அறிய முடிந்தது

மிக்க நன்றி.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, vasee said:

https://www.babypips.com/learn/forex

இந்த இணையத்தளத்தில் உங்களை பதிவு செய்து (அல்லது செய்யாமலும்) இதில் உள்ள பாடத்திட்டத்தை  இலவசமாக தொடரலாம், குறிப்பாக முக்கியமான விடயங்களை இந்த பாடத்திட்டத்தில் உள்ளடக்குகிறார்கள்.

பங்கு சந்தை வர்த்தகத்தில் 90% தோற்கிறார்கள் என கூறுகிறார்கள்.

https://www.fxcm.com/au/education/traits-successful-traders/

இந்த விகிதாசாரம் வியாபாரத்துறையில் தோல்வியடைவோரின் விகிதாசாரமும் சரியான அள்விலே உள்ளது.

Fundamental analysis இல் பங்கு சந்தை நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை ஆனால் இந்த புத்தகம் படிக்கும் போது ஆர்வமாக இருந்தது உங்களுக்கு உபயோகப்படலாம்.

இதனை இலவசமாக இணையத்திலிருந்தும் தரவிறக்கம் செய்யலாம்.

yahoo finance

google finance

fundamental analysis தகவல்களை இலவசமாகப்பெறலாம்.

முதலீட்டின் பரவலாக்கலாம்

https://www.amazon.com.au/Intelligent-Asset-Allocator-Portfolio-Maximize-ebook/dp/B005XM6NRY

இதனை இலவசமாக இணையத்திலிருந்தும் தரவிறக்கம் செய்யலாம்.

இவை தவிர "beta"பயன்படுத்தி முதலீட்டின் பரவலாக்கலாம்

உதாரணமாக "beta" 2 பங்குகள் மொத்த சந்தை 1 விகிதமாக அதிகரித்தால் குறித்த பங்கு அதனை விட 2 புள்ளி அதிகரிக்கும் என்பார்கள் உதாரணம் கனிய வள பங்குகள் ஆனால் மருத்துவ துறை பங்குகள் 0.5 விகிதம் மட்டும் மாறும், அதனால் அதன் "beta" 0.5

எனக்கு நீண்டகால முதலீட்டில் அனுபவம் இல்லை, அதனால் எனது கருத்து தவறாக இருக்கலாம்.

முதலீடுகளுக்கு ஒரே ஒரு விடயம் முக்கியம் என்பார்கள் " மூலதன பாதுகாப்பு".

பங்கு வர்த்தகத்தில் 90% உளவியல் என்பார்கள், அதற்கு பிறகு பணப்பராமரிப்பு அதன் பின்னரே மற்றதெல்லாம் என்பார்கள்.

https://www.youtube.com/watch?v=blQZ_bF468c

 

நன்றி வசி. மிகவும் பயனுள்ள தகவல்கள்.

 

29 minutes ago, Kadancha said:

பிரமிட் திட்டம். உண்மையில் முதலீடு இல்லை. தள்ளியே இருங்கள்.

முதலீடு நம்பகத் தன்மையை எடைபோடும் எளிமையான முறை - வங்கி - அதுவும் அரச வங்கி வட்டி வீதத்தை விட கூடவாயின், உண்மையாக இருக்கலாம், அனால் risk அதிகம்.
 
அதாவது,   sovereign guarantee for return on investment ஐ விட அதிகமாக return on investment ஆயின், ஆபத்து  அதிகம். 

ஆனால், 300 ஐ போடுங்கள், 50 ம்,அதன் வரும் என்றால், அப்படி உண்மையில் ஓர் முதலீடு உள்ளது என்றால் எல்லோருக்கும் தெரிந்து இருக்கும்.

அனால், 300 ஐ போட்டு முதலின் பெறுமானம் 50 அதிகரிக்க உள்ள வாய்ப்பிலும், 50 ஐ உங்களுக்கு தருவதத்திற்கான இருக்கும் முதலீடு வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம்.

அல்லது, உங்கலாய் போன்றவர்களிடம் 300 ஐ வாங்கி விட்டு, 50 மதம் உங்களுக்கு தந்துவிட்டு, குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் மூடும் திட்டமாக தான், நீங்கள் சொல்வதில் இருந்து தெரிகிறது, பிரமிட் திட்டம்.  

எனக்கும் பிரமிட் போலத்தான் தெரிகிறது. பிரமிட் இலங்கையில் சட்டபடி குற்றம் என நினைக்கிறேன். 

இதையே மல்டி லெவல் மார்கெட்டிங் என்று இன்னொரு வகையிலும் கொண்டுவருவார்கள். 

ஏராளன் “இங்கே” என்பதை நான் யாழ்களம் என விளங்கி கொண்டேன். இப்போ யோசித்து பார்க்க அவர் ஊரில் என்பதை அப்படி சொல்லி இருப்பார் போலுள்ளது.

பிரமிட் என்றால் - கண்ணை மூடி கொண்டு சொல்லலாம் - செய்ய வேண்டாம்.

13 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மை.. எப்படியும் கரையில் நின்று பார்க்காமல் கொஞ்சம் கடலுக்குள்ளும் போகலாம்( எப்படியும் lifeguard காப்பாற்றிவிடுவார்கள்) என்பதுதான் நிலைப்பாடு.. 

 

 

இப்போதைக்கு முழு நேர வேலையை விட வேண்டாம்😎🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரமிட் என்றால் தலை வைச்சும் படுக்கமாட்டன். அந்தாள் வீட்டோட இருக்கிறவனுக்கு வருமானம் வர ஏற்பாடு செய்யிறன் என்று அடம்பிடிக்குது. நான் என்ன ஏது விசாரிக்காமல் உதில இறங்கமாட்டன். அந்தாள் பிட்கொயினின் பெயரையும் சொல்லுது, பிறகு ஆளைச் சேர்த்தால் கூட கிடைக்கும் என்றும் சொல்லுது.

ஏற்கனவே 2011/12 இல் 50000 ஆயிரத்தை பங்கு வர்த்தகத்தில் விட்டு அது அப்பிடியே கரைஞ்சு 20000 ஆயிரமா இருந்தது. அந்த புரோக்கர் தம்பி எங்களில பங்கு வாங்கி பழகி இருக்கிறான்! வருசத்தில 300/400 ரூபாக்கு காசோலை வரும். அவ்வளவும் தான்.
விடயம் தெரியாமல் ஒன்றிலயும் இறங்ககூடாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் கேள்விக்கு உண்மையைக் கூறுங்கள் என்றே உறவுகள் அனேகர் பதில் பதிந்திருந்தார்கள், அதிலிருந்து யாழ்உறவுகளிடம் உறைந்துள்ள பொய்யற்ற உள்ளங்களும் வெளிப்படுகிறது, இருந்தும் உண்மை சுடும் என்பதால் என்பேரன் சூடுதாங்கும் பருவம்வந்தபின் அறிந்துகொள்ளட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.  ‘உண்மையில் நான் பொருள்தேடி வரவில்லை, காகித ஆலையில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த எனக்கு வழங்கப்பட்ட சம்பளமே வாழ்கை நடாத்தப் போதுமானது, சிங்ளப் பாடத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் என்பதவி உயர்வைத் தடுத்தது. தொழிலநுட்ப அறிவு குறைந்தவர்களாக மற்றவர்களால் நோக்கப்பட்ட, என் அதிகாரத்தின்கீழ் வேலைபார்த்த சில சிங்களரும், சிங்களமொழி தேர்ச்சி பெற்றவர்களும் என்னை அதிகாரம் செய்யும் நிலை ஏற்படுவதை யேர்மனியில் உள்ள என்நண்பனும் அறிந்து அங்கு வரும்படி அழைத்தார்.  இனக்கலவரம் என்ற பெயரில் தமிழினம் அழிக்கப்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் அகப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய அனுபவங்கள் மனதில் பயத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி புலம்பெயரும் முடிவை உறுதிப்படுத்தியது. அங்செல்வதற்கு எனக்கு அனுகூலமாகி உதவிய நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. சிறிது காலத்தில் பிறந்தமண் திரும்ப எண்ணிய வேளை 83 கலவரம் என் குடும்பத்தை புலம்பெயரவைத்து என்னுடன் வந்து இணையும்  நிலையை ஏற்படுத்தியது. சென்ற மாதம் எங்கள் மூத்த பேத்தியுடன் நானும் மனைவியும் பிறந்தமண் சென்றிருந்தோம், அங்குள்ள இயற்கை நிகழ்வுகளை பேத்தி வீடியோ படம்பிடித்து பதிவுசெய்திருந்தார், மரங்களில் தொங்கும் கனிகளை அணில்கள் இரு கைகள்போன்ற கால்களால்  ஏந்திக் கடிப்பதையும், பறவைகள் கொத்தி உண்பதையும் அவற்றைத் துரத்த அவை பயந்து ஓடிப் பறப்பதையும், காயப்போட்ட வத்தல்களை கொத்தவரும் கோழி மற்றும் அதன் குஞ்சுகளை பெரியம்மா விரட்டுவதையும், கடற்கரையில் அலைகள் வரும்போது சிறுவர்கள் ஓடுவதையும், அலைகள் பின்வாங்கும்போது அவர்கள் அவற்றைத் துரத்திச் செல்வதையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்துத் துள்ளி ரசித்தாராம். இங்கு இவைபோன்ற காட்சிகள் காண்பதற்கு இல்லையே என்ற ஆதங்கம் “சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்” என்ற கேள்வியை கேட்கவைத்துள்ளதுபோல் தெரிகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சிறிசுகளின் கேள்விகளுக்குப் பதில்கூற முடியாது பெரிசுகள் முழிப்பது ஒன்றும் புதுமையல்ல.🤔😳  
    • 1980ம் ஆண்டுகளில் கூட சின்ன மேளம் என்று சொல்வது இலங்கையில் இருந்தது. 1980ம் ஆண்டுகளில் வருடம் தோறும் என்னுடைய ஊர் இந்திரவிழாவில் இப்படியான பெயரில் ஒரு குழுவினர் வந்து நடனம் ஆடுவார்கள். இருவர் தான் மேடையில் இருப்பார்கள், ஆனால் குழுவில் பலர் இருந்தனர். இந்தப் பெயரே ஏறக்குறைய ஒரு வசவுச்சொல் ஆகவே பிறநாட்களில் பயன்பட்டது. அசோகமித்ரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையை எப்போது வாசித்தாலும், ஊரில் இடம்பெற்ற இந்த நடன நிகழ்வுகள் மனதில் வந்து வாட்டும். சமீபத்தில் 'ஜமா' என்றொரு திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பற்றிய எந்த தகவலும் தெரியாமலேயே தான் பார்த்தேன். கலைகளால் மீட்சியா அல்லது அதுவே சிலருக்கு ஒரு பெரும் துன்பமாக முடிகின்றதா என்ற குழப்பம் இன்னும் கூடியது.  
    • மிக்க மகிழ்ச்சி!   தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். 
    • நாடு இருக்கும் நிலையில்... ஒரு வீட்டிற்கு சமைக்க,  16 சமையல்காரரை கேட்டால்... அப்படித்தானே நினைப்பார்கள். 😂
    • ஹன்ரர் பைடனுக்கு சீனியர் பைடன் மன்னிப்புக் கொடுக்க மாட்டார் என நம்புகிறேன். அவர் சிறை போகாமல் பாதுகாக்க பைடன் குடும்பத்திற்கு ஏனைய வழிகள் இருக்கின்றன. செனட்டர் மெனண்டெசுக்கு என்ன நடக்குமெனச் சொல்லக் கடினமாக இருக்கிறது. வன்முறைக் குற்றங்கள் அல்லாமல், ஊழல் மோசடிக் குற்றங்களால் தண்டனை பெற்ற அரசியல் பிரபலங்களுக்கு இரு கட்சிகளின் ஜனாதிபதிகளும் முன்னர் மன்னிப்பு வழங்கியிருக்கின்றனர். ஆனால், மெனெண்டஸ் தன் குற்றங்களுக்கு மன வருத்தம் கூட தெரிவிக்காமல் சமாளிக்கும் ஆளாக இருப்பது, மன்னிப்புப் பெற உதவாது.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.