Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரிக்கெட் போட்டியின் முதல் தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் போட்டியின் முதல் தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானர்.

Screenshot-2020-12-22-14-39-20-402-org-m

வானொலி வர்ணனையால் புகழ் பெற்ற, அப்துல் ஜப்பாருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

கிரிக்கெட் போட்டியின் முதல் தமிழ் வர்ணனையாளராக பணியாற்றி, ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து, புகழ் பெற்ற அப்துல் ஜப்பார் உடல் நலக்குறைவால் காலமானர். அவருக்கு வயது 81.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் வானொலி வர்ணனையால் ஏராளமானோர் ஈர்க்கப்பட்டனர். அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அவர், தமிழ்நாடு-கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டிக்கு வானொலியில் முதல் வர்ணனை செய்தார். 80-களில் அவரின் வர்ணனை புகழ்பெற்று திகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து தொலைகாட்சிகளிலும் வர்ணனையாளராகப் பணியாற்றினார்.

hqdefault.jpg

‘அழைத்தார் பிரபாகரன்’ என்ற தலைப்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை சந்தித்ததைப் பற்றி, அவர் எழுதிய நூல் வாசர்களால் விரும்பிப் படிக்கப்படும் நூலாக இருந்து வருகின்றது. இந்நிலையில், அப்துல் ஜப்பாரின் மறைவுக்கு அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அப்துல் ஜப்பாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “வானொலியில் விளையாட்டு வர்ணனைகளுக்குப் புதிய அழகியலைச் சேர்த்தவரும், உலகத் தமிழரிடையே அன்றாடம் அழகிய தமிழ் பேசிய ஒலிபரப்பாளருமான சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் மறைந்தார். அஞ்சலி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://tamil.news18.com/news/tamil-nadu/first-tamil-commentator-abdul-jabbar-passed-away-sur-383403.html

டிஸ்கி

கண்ணீர் அஞ்சலிகள் ..😢

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். 🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....! 

  • கருத்துக்கள உறவுகள்

அழகு தமிழில் அசத்தல் வர்ணணை... மறைந்தார் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்!

அப்துல் ஜப்பார்

இவருடைய அழகு தமிழ் வர்ணணைக்கு எம்ஜிஆர், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் எனப்பலரும் ரசிகர்கள்.

தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்புக்கு முந்தைய வானொலி காலத்தில் தமிழ் கிரிக்கெட் வர்ணணைக்குப் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. வானொலி ரசிகர்களைத் தன் அழகு தமிழ் வர்ணணையால் கவர்ந்த அப்துல் ஜப்பார் இன்று காலை மறைந்தார். அவருக்கு வயது 81.

சாத்தான்குளத்தைச் சேர்ந்தவரான அப்துல் ஜப்பார் 1980-களில் இந்தியா விளையாடிய பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு தமிழில் வர்ணணை செய்துள்ளார். அப்போது வானொலியில் கிரிக்கெட் வர்ணணை செய்துகொண்டிருந்த பலருமே ஆங்கில வார்த்தைகளை கலந்துபேசுவது வழக்கம். ஆனால், அப்துல் ஜப்பாரின் வர்ணணையில் துளி ஆங்கிலம் கலக்காது. அழகு தமிழில், தெள்ளத்தெளிவான தமிழ் உச்சரிப்பில், பரபரப்பான தருணங்களை தன் கணீர்குரல் மூலம் ரசிகர்களுக்கு கடத்தியவர் அப்துல் ஜப்பார்.

 

இவருடைய அழகு தமிழ் வர்ணணைக்கு எம்ஜிஆர், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் எனப்பலரும் ரசிகர்கள். பிரபாகரன், அப்துல் ஜப்பாரை தமிழீழத்துக்கு நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். இந்த அனுபவத்தை புத்தகமாகவும் எழுதியிருக்கிறார் அப்துல் ஜப்பார். சில ஹாக்கி போட்டிகளுக்கும் தமிழில் வர்ணனை செய்திருக்கிறார்.

அப்துல் ஜப்பார்
 
அப்துல் ஜப்பார்

கிரிக்கெட் காதலனாக, தமிழ் நேசனாக, வர்ணணை உலகில் எல்லோரின் மனங்களையும் கவர்ந்த அப்துல் ஜப்பாரின் புகழ் என்றும் அழியாது

 

https://sports.vikatan.com/cricket/iconic-tamil-cricket-commentator-abdul-jabbar-passed-away-in-sathankulam

ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

அழைத்தார் பிரபாகரன்’ நூலை எழுதிய அப்துல் ஜபார் காலமானார்.

 
e34ad283-25af-44d2-bcf0-97522cdaeaf1-696
 4 Views

‘அழைத்தார் பிரபாகரன்’ நூலை எழுதிய சாத்தான் குளம் திரு அப்துல் ஜபார் அவர்கள் இன்று (22.12.2020) காலை மாரடைப்பால் காலமானார். தமிழ் நாட்டில் பிறந்து இலங்கை வானொலி வாயிலாக பிரபலமடைந்த அப்துல் ஜபார், இலங்கை இந்திய மற்றும் தமிழ் நாடு அரசின் விருதுகளையும் பெற்றவர்.

கடந்த நாற்பதுகளிலே தமிழகத்தில் இருந்து வாணிபம் செய்யும் நோக்கில் அப்துல் ஜபார் அவர்களின் தந்தையார் இலங்கைக்கு சென்றிருந்தார். சிறுவனாக இருந்த அப்துல் ஜபார் வீட்டில் ஒரே மகன் என்பதால் அவரையும் தன்னுடனேயே அழைத்துச் சென்றிருந்தார். கொழும்பில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அப்துல் ஜபாருக்குக் கிடைத்தது.

இவரது ஊடகப் பயணத்தில் முதல் பகுதி இலங்கை வானொலியில் தொடங்கியது. 14 ஆண்டுகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகள், நாடகங்கள் வழியாக திறன் வாய்ந்த ஊடகராக இயங்கும் வேளை, சிறீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் விளைவாக மீண்டும் இந்தியா திரும்பினார். அங்கே பல்வேறு நிகழ்ச்சித் தயாரிப்புடன், நாடக நடிப்பிலும் ஈடுபட்டார். பின்னர் இந்திய வானொலி வழியாக தமிழ் கிரிக்கெட் வர்ணனையில் தனி முத்திரையை பதித்திருந்தார்

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் அழைப்பின் நிமித்தம் ஈழத்திற்கு சென்று தேசியத் தலைவரை நேரில் சந்தித்தார்.

 

 

153282e8-b7f4-411f-a9d6-fc475e8c41cf.jpe

தேசியத் தலைவர் வே . பிரபாகரன் அவர்கள் மீது அதீத பற்றுக் கொண்டவர் . தமிழர்களுக்கு ஈழ தேசம் மிக விரைவில் கிடைக்க வேண்டும் என தன் குரலால் ஊடகம் மூலம் உலகிற்கு எடுத்துக் கூறியவர். வாராந்தம் இந்தியக் கண்ணோட்டம் என்ற தொகுப்பை இரு தசாப்தங்களைக் கடந்து புலம்பெயர் வானொலிகளுக்காக ஆரம்பத்தில் இருந்த அதே துடிப்போடு வழங்கியவர் .

இஸ்லாமியப் பெருமக்களின் புனித நோன்பு காலச் சிறப்புப் பகிர்வு, அரசியல் கருத்தாடல், தமிழக மற்றும் இந்தியத் தேர்தல் காலத்தில் நேரடிப் பகிர்வுகள் என்று புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் இயங்கும் வானொலிகளுக்கான அவரின் பங்களிப்பை நீண்ட காலம் வழங்கி வந்தார். ஐரோப்பியத் தமிழ்ச் சமூகம் IBC தொலைக் காட்சியின் அங்குரார்ப்பண வைபவத்தில் இவருக்கு ‘வாழ் நாள் சாதனையாளர்’ விருது வழங்கிக் கெளரவித்தது.

இறுதியாக நிதர்சனம் ஊடகத்திற்கு 2020 மாவீரர் நாள் சிறப்பு நிகழ்ச்சிக்காக மாவீரர்களின் அர்ப்பணிப்பு, தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் வீர வரலாறு பற்றியும் நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். இதுவே அவரின் இறுதி நேர்காணலாகவும் அமைந்தது. அந்த நேர்காணலில் தலைவரை தான் சந்தித்தது பற்றி உணர்வுபூர்வமாக கூறியிருந்தார்.

அவரது மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்பாகும்.

 

https://www.ilakku.org/?p=37722

  • கருத்துக்கள உறவுகள்

துயர்பகிர்கிறேன் ; அப்துல் ஜப்பார் தமிழ் ஊடக உலகில் ஒரு வரலாறு! – எஸ்.கே.ராஜென்

 
  • எஸ்.கே.ராஜென்

ழைக்கும் பொழுதெல்லாம் அன்போடு பேசி, எமது ஐபிசி தமிழ் குடும்பத்தினர் அனைவரின் சுகம் கேட்டு மகிழும் எமது அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள் எமை விட்டுப் பிரிந்து விட்டார்.

%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%இன்று காலை கண்விழித்த வேளை எனது அன்புச்சோதரர் பீ.எச்.அப்துல் ஹமீட் அவர்களது குறுஞ்செய்தி:

“துயரச் செய்தி. ஜப்பார் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.”

பார்த்ததும் மௌனம் மனதை நிறைத்துக்கொண்டது.

எங்கள் மூத்த ஊடகவியலாளர் என்று வாய் இனிக்கக் கூறி உங்களை வானலையில் வரவேற்று மகிழ்வேனே. இனி அவ்வாறு நான் கூறினாலும் உங்கள் அன்பும் பாசமும் பரிவும் அறிவாழம் மிக்க அந்தக் குரலை உயிரோட்டமாகக் கேட்டிட முடியாது போய்விட்டதே!

தங்கள் உடல் உபாதை எதனையும் எள்ளளவும் பொருட்படுத்தாமல் தமிழ் உறவுகளுக்காய் ஊடகப்பணி ஆற்றிவந்தீர்களே!

வைத்தியமனை சென்று திரும்பிய வேளைகளிலெல்லாம் “I am perfectly alright Rajen” என்று கூறுவீர்கள். “பணியை மீளத்தொடங்கிவிட்டேன். சற்று நேரத்தில் நிகழ்ச்சியை அனுப்பி வைக்கிறேன்.” என்பீர்களே!

உங்களை வைத்தியமனையில் அனுமதித்துள்ளார்கள் என்ற தகவலை சகோதரி றூபி குமார் அவர்கள் அறியத்தந்தவேளை, சுகமடைந்து வருவீர்கள் வழமை போன்று “I am perfectly alright Rajen” என்று கூறுவீர்கள். பேசுவோம் என்று காத்திருந்தேன்.. ஏமாற்றம்!

‘ஒரு கேள்வி ஒரு பதில்’ மூலம் இந்தியாவை முழுமையாக உலகதமிழ் உறவுகளின் உள்ளங்களில் பதிய வைக்கும் நுணுக்கமான தகவல் களஞ்சியமாக தாங்கள் படைக்கும் “இந்தியக்கண்ணோட்டம்” இனி எப்படி ஒலிபரப்புவது?

ஐபிசி தமிழ் என்றாலே உற்சாகம் உங்களை நிறைத்துவிடும்.

நாம் இப்பொழுதும் உங்கள் நிகழ்ச்சிக்காகக் காத்திருக்கிறோம்!

மின்சாரத் துண்டிப்பு ஏற்படப்போகிறது என்றதுமே உடனே ஒரு மின்னஞ்சல் “கொஞ்சம் தாமதமாகும், அனுப்பி வைக்கிறேன் பொறுத்தருள்க” என்று, அந்தக் குறுந்தகவலிலும் தமிழில் விளையாடுவீர்களே!

அப்துல் ஜப்பார் அவர்கள் தமிழ் ஊடக உலகில் ஒரு வரலாறு!

உங்கள் தமிழ் உலகநாயகன் உள்ளத்திலும் உங்களைப்பதிய வைத்துள்ளது.

ஜப்பார் ஐயா உங்களை என்றும் மறவோம்! எங்கள் வாழ்க்கைக் காலம் முழுவதும் எம்மோடு நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்.

https://thinakkural.lk/article/100120

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.