Jump to content

நீங்களும் ஐந்தே நிமிடத்தில் செய்யலாம் சுவையான எலுமிச்சை சாதம் Lemon Rice

nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கவே ஆசையாக இருக்கு உங்கள் எலுமிச்சை சாதம்,  உடுப்பியில் சாப்பிட்ட சுவை மாதிரி  வேறு எங்கும் கண்டதில்லை

நன்றி பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நன்றாக இருக்கிறது,சாப்பிட மிக நன்றாக இருக்கும் என்று தெரிகிறது.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nige said:

அருமையான செய்முறைக்கு நன்றி..!

15 hours ago, உடையார் said:

பார்க்கவே ஆசையாக இருக்கு உங்கள் எலுமிச்சை சாதம்,  உடுப்பியில் சாப்பிட்ட சுவை மாதிரி  வேறு எங்கும் கண்டதில்லை

நன்றி பகிர்வுக்கு

தாங்கள் கூறுவது 

சித்ரான்னம்(கர்நாடகம்) தோழர் .. அதன் செய்முறை வேறு ; நிகே அவர்களின் செய்முறையோடு கூடுத்தலாக தக்காளி வெங்காயம் சேர்ப்பார்கள் 

அத்தோடு சோற்றை வடித்து அதோடு கலவையை சேர்ப்பது இல்லை . பொங்கல் போல சோற்றுடன் ஒன்றாக கலந்து கொதிக்க வைப்பார்கள் .. சுவை அந்த மாதிரி இருக்கும் ..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nige said:

எனக்கு மிக இலகுவான சமையல் செய்முறை பகிர்வுக்கு நன்றி நிகே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, யாயினி said:

எனக்கு மிக இலகுவான சமையல் செய்முறை பகிர்வுக்கு நன்றி நிகே.

மிக இலகுவான செய்முறையாக இருந்தாலும் சுறுசுறுப்பாய் எழுந்து சோம்பல் முறித்து  சுடுதண்ணி வைக்க வேண்டுமே...அந்த முதல்படிதானே மிகவும் கஷ்டமானது.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

மிக இலகுவான செய்முறையாக இருந்தாலும் சுறுசுறுப்பாய் எழுந்து சோம்பல் முறித்து  சுடுதண்ணி வைக்க வேண்டுமே...அந்த முதல்படிதானே மிகவும் கஷ்டமானது.....!  😁

எது முதல்படி?🤔

  1. சுடுதண்ணி வைப்பது
  2. சோம்பல் முறிப்பது
  3. சுறுசுறுப்பாக எழும்புவது

லெமன் ரைஸ் நல்லாக இருக்கு. நான் வருஷத்தில ஒன்றிரண்டு நாள் அம்மன் கோயிலுக்குப் போவதே லெமன் சாதத்தை பஞ்சாமிர்தத்துடன் குழைத்து சாப்பிடத்தான்😋. வீட்டில் செய்ய வெளிக்கிட்டால் 200 பர்சண்ட் நாத்திகன் ஆகிவிடுவேன்🤨

Link to comment
Share on other sites

17 hours ago, உடையார் said:

பார்க்கவே ஆசையாக இருக்கு உங்கள் எலுமிச்சை சாதம்,  உடுப்பியில் சாப்பிட்ட சுவை மாதிரி  வேறு எங்கும் கண்டதில்லை

நன்றி பகிர்வுக்கு

மிக இலகுவான செய்முறை செய்து அசந்துங்கள். சுவை அட்டகாசமாய் இருக்கும். நன்றி உடையார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

மிக இலகுவான செய்முறையாக இருந்தாலும் சுறுசுறுப்பாய் எழுந்து சோம்பல் முறித்து  சுடுதண்ணி வைக்க வேண்டுமே...அந்த முதல்படிதானே மிகவும் கஷ்டமானது.....!  😁

இப்பத்தையான் பொம்புளை பிள்ளையளுக்கு லெமன் றைஸ் பெப்பர் றைஸ்  கைவந்த கலை (அதுதான் தஞ்சம்) 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தந்த முருக்கங்காய் குழம்பு சமையல் முறை செய்துபார்த்துவிட்டேன். அருமையாக வந்தது.
சரி நாளைக்கு ஒரு லெமன் சாதம் செய்து பார்க்கிறேன். 
உங்கள் சமையல் குறிப்பில்; சோறு "முட்டாமல்" தனி தனியாக வரும் என்று கூறி இருந்தீர்கள் போல இருக்கிறது. அது முட்டாமலா .. அல்லது ஒட்டாமலா? :)

Link to comment
Share on other sites

13 hours ago, suvy said:

பார்க்க நன்றாக இருக்கிறது,சாப்பிட மிக நன்றாக இருக்கும் என்று தெரிகிறது.....!   👍

செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.மறக்காமல் உங்கள் பதிலை என் channel இலும் எழுதிவிடுங்கள். மிக மிக நன்றி உங்கள் கருத்து பகிர்வுக்கு...

Link to comment
Share on other sites

7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமையான செய்முறைக்கு நன்றி..!

தாங்கள் கூறுவது 

சித்ரான்னம்(கர்நாடகம்) தோழர் .. அதன் செய்முறை வேறு ; நிகே அவர்களின் செய்முறையோடு கூடுத்தலாக தக்காளி வெங்காயம் சேர்ப்பார்கள் 

அத்தோடு சோற்றை வடித்து அதோடு கலவையை சேர்ப்பது இல்லை . பொங்கல் போல சோற்றுடன் ஒன்றாக கலந்து கொதிக்க வைப்பார்கள் .. சுவை அந்த மாதிரி இருக்கும் ..👌

நீங்கள் இந்த உணவுவிடயம் சம்மந்தமான ஒரு நூலகம் போல் தெரிகிறது. நன்றி உங்கள் கருத்து பகிர்வுக்கு.. முடிந்தால் என் channel இலும் உங்கள் கருத்தை எப்பவாவது பதிவிடுங்ஙள்....

6 hours ago, யாயினி said:

எனக்கு மிக இலகுவான சமையல் செய்முறை பகிர்வுக்கு நன்றி நிகே.

நன்றி யாயினி.. நானும் சமைக்க பிடிக்காவிட்டால் lemon rice தான் செய்வேன். எத்தனை முறை சாப்பிட்டாலும் அலுக்காது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nige said:

செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.மறக்காமல் உங்கள் பதிலை என் channel இலும் எழுதிவிடுங்கள். மிக மிக நன்றி உங்கள் கருத்து பகிர்வுக்கு...

அதெல்லாம் நேற்றே செய்து சாப்பிட்டாச்சுது.....மேலும் நான் உங்கள் யூ டியூப் பதிவுகளுக்கு  👍 போடுகிறது வழக்கம். ஆனால் கோயில் மேளம் மாதிரி இங்குதான்  கருத்துக்கள் எழுதுவது.....!   😁

9 hours ago, Sasi_varnam said:

நீங்கள் தந்த முருக்கங்காய் குழம்பு சமையல் முறை செய்துபார்த்துவிட்டேன். அருமையாக வந்தது.
சரி நாளைக்கு ஒரு லெமன் சாதம் செய்து பார்க்கிறேன். 
உங்கள் சமையல் குறிப்பில்; சோறு "முட்டாமல்" தனி தனியாக வரும் என்று கூறி இருந்தீர்கள் போல இருக்கிறது. அது முட்டாமலா .. அல்லது ஒட்டாமலா? :)

இதென்ன விளையாட்டு சசியர் முட்டாமல் ஒட்டாமல் என்று "உதிரி உதிரி "யாக, "கச்சானும் கோதும்" போல "ஓடும் புளியம்பழமும்" போல என்றுதான் சொல்ல வருகிறா.அதுக்குதான் ஒரு கரண்டி எண்ணை தண்ணிக்குள் விடுகிறது.........!  😁

Link to comment
Share on other sites

4 hours ago, suvy said:

அதெல்லாம் நேற்றே செய்து சாப்பிட்டாச்சுது.....மேலும் நான் உங்கள் யூ டியூப் பதிவுகளுக்கு  👍 போடுகிறது வழக்கம். ஆனால் கோயில் மேளம் மாதிரி இங்குதான்  கருத்துக்கள் எழுதுவது.....!   😁

இதென்ன விளையாட்டு சசியர் முட்டாமல் ஒட்டாமல் என்று "உதிரி உதிரி "யாக, "கச்சானும் கோதும்" போல "ஓடும் புளியம்பழமும்" போல என்றுதான் சொல்ல வருகிறா.அதுக்குதான் ஒரு கரண்டி எண்ணை தண்ணிக்குள் விடுகிறது.........!  😁

மிக மிக நன்றி உங்கள் கருத்திற்கு சுவி...அதுபோல் நீங்கள் கொடுத்த விளக்கமும் அருமை ... 👍

14 hours ago, Sasi_varnam said:

நீங்கள் தந்த முருக்கங்காய் குழம்பு சமையல் முறை செய்துபார்த்துவிட்டேன். அருமையாக வந்தது.
சரி நாளைக்கு ஒரு லெமன் சாதம் செய்து பார்க்கிறேன். 
உங்கள் சமையல் குறிப்பில்; சோறு "முட்டாமல்" தனி தனியாக வரும் என்று கூறி இருந்தீர்கள் போல இருக்கிறது. அது முட்டாமலா .. அல்லது ஒட்டாமலா? :)

நீங்கள் என் video பார்த்து சமைக்கிறீர்கள் என்பது மிகவும் சந்தோசம்..இதையும் செய்துபார்த்துவிட்டு மறக்காமல் சொல்லுங்கள். அது ஒட்டாமல்தான் ஏதோ வாய்தடுமாறி வந்திட்டுது...sorry 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

இப்பத்தையான் பொம்புளை பிள்ளையளுக்கு லெமன் றைஸ் பெப்பர் றைஸ்  கைவந்த கலை (அதுதான் தஞ்சம்) 😂

நமக்கெல்லாம் இங்க 

தண்ணிச்சோறு +தேங்காய்ப்பால் + வாழைப்பழம்
தண்ணிச்சோறு +தேங்காய்ப்பால்(பூ) + விளாம்பழம் 
தண்ணிச்சோறு +தேங்காய்ப்பால்+ தேசிக்காய் புளி 
தண்ணிச்சோறு+ தேங்காய்ப்பால்+பழப்புளி
தண்ணிச்சோறு + தேங்காய் பூ + பொரித்த கருவாடு 
தண்ணிச்சோறு + சின்ன வெங்காயம் 
தண்ணிச்சோறும் + பழம் கறி இவை அனைத்துக்கும் பல ரைசுகள் (Rice) தோற்று போகிறது  சாமியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நமக்கெல்லாம் இங்க 

தண்ணிச்சோறு +தேங்காய்ப்பால் + வாழைப்பழம்
தண்ணிச்சோறு +தேங்காய்ப்பால்(பூ) + விளாம்பழம் 
தண்ணிச்சோறு +தேங்காய்ப்பால்+ தேசிக்காய் புளி 
தண்ணிச்சோறு+ தேங்காய்ப்பால்+பழப்புளி
தண்ணிச்சோறு + தேங்காய் பூ + பொரித்த கருவாடு 
தண்ணிச்சோறு + சின்ன வெங்காயம் 
தண்ணிச்சோறும் + பழம் கறி இவை அனைத்துக்கும் பல ரைசுகள் (Rice) தோற்று போகிறது  சாமியார்.

ஐயனே! நான் உதையெல்லாம் கண்டு வந்தவன் தான். ஆனால் மேட்டுக்குடியளுக்கு மரியாதை இல்லாத சமாச்சாரங்கள். இப்ப உங்கை இருக்கிற மேட்டுக்குடியள் முந்தினைய விட இப்ப மோசம் எண்டு கேள்விப்பட்டன்.
 புலன்பெயர்ந்த மேட்டுக்குடியள் இப்ப தங்கடை பறணை கொண்டாட்டங்களிலை பழங்கஞ்சியும் பழஞ்சோறும் ஒரு பக்கத்திலை வைச்சு வடிவு பாக்கினமெல்லோ.....அதை விட திருகணையிலை மண்சட்டி வைச்சு  பரிமாறினமாம்.....அடங் கொய்யால :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நமக்கெல்லாம் இங்க 

தண்ணிச்சோறு +தேங்காய்ப்பால் + வாழைப்பழம்
தண்ணிச்சோறு +தேங்காய்ப்பால்(பூ) + விளாம்பழம் 
தண்ணிச்சோறு +தேங்காய்ப்பால்+ தேசிக்காய் புளி 
தண்ணிச்சோறு+ தேங்காய்ப்பால்+பழப்புளி
தண்ணிச்சோறு + தேங்காய் பூ + பொரித்த கருவாடு 
தண்ணிச்சோறு + சின்ன வெங்காயம் 
தண்ணிச்சோறும் + பழம் கறி இவை அனைத்துக்கும் பல ரைசுகள் (Rice) தோற்று போகிறது  சாமியார்.

சும்மா தண்ணிச்சோறு தண்ணிச்சோறு என்று எழுதினால் எப்படி தனி...... தென்னந்தண்ணியா , பனந்தண்ணியா, கித்துள்தண்ணியா  என்று விவரமாய் எழுதினால்தானே புரியும்.....!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

திருகணையிலை மண்சட்டி வைச்சு  பரிமாறினமாம்

திருவலை தெரியும். இதென்ன திருகணை? எறிகணை மாதிரி ஒண்டா?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

திருவலை தெரியும். இதென்ன திருகணை? எறிகணை மாதிரி ஒண்டா?🤔

டேய் தம்பி! ஒரிஜினல் யாழ்ப்பாணத்து மேட்டுக்குடி வருது. ஒரு சிரட்டையிலை கள்ளும் பொரிச்ச யப்பான் மீனையும் கொண்டுவா...🤪

வாருங்கோ ஐயா...வாருங்கோ..... உதிலை கிடக்கிறதுதான் திருகணை...😎

திருகணை | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்

https://ourjaffna.com/tradition/திருகணை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

.. உதிலை கிடக்கிறதுதான் திருகணை...😎

திருகணை | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்

https://ourjaffna.com/tradition/திருகணை

இதை நான் கண்ட ஞாபகம் இல்லை! இளக்கயிறு இறுக்கிக்கட்டின மாதிரி இருக்கு!

தென்னந்தும்பிலா செய்கின்றார்கள்?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

இதை நான் கண்ட ஞாபகம் இல்லை! இளக்கயிறு இறுக்கிக்கட்டின மாதிரி இருக்கு!

தென்னந்தும்பிலா செய்கின்றார்கள்?🤔

யூ நோ முருக்கங்காய்? மெல்லிசாய் இடைக்கிடை மொத்தம் மொத்தமாய்  கிறீன் கலரிலை நீட்டாய் இருக்கும்?:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

யூ நோ முருக்கங்காய்? மெல்லிசாய் இடைக்கிடை மொத்தம் மொத்தமாய்  கிறீன் கலரிலை நீட்டாய் இருக்கும்?:cool:

இது நன்றாகத் தெரியும் 😀

இளைமை முறுக்குடன் பொலிகாளையாக இருக்க முருங்கைக்காய் சாப்பிடவேண்டும் சித்தர்கள் சொல்லியதால் அடிக்கடி சாப்பிடுவதுண்டு😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Thinakaran Vaaramanjari: - யாழ்ப்பாணத்து மண்ணை அடையாளப்படுத்தும் பனை

சிறுசெங்குரலி

திருகணை , உறி  எல்லாம் பனம்பொருட்களில் இருந்துதான் செய்வது......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

Thinakaran Vaaramanjari: - யாழ்ப்பாணத்து மண்ணை அடையாளப்படுத்தும் பனை

சிறுசெங்குரலி

திருகணை , உறி  எல்லாம் பனம்பொருட்களில் இருந்துதான் செய்வது......!   😁

பனை எண்டவுடனை தான் அவருக்கு அலர்ஜி வருது.  🤪

Link to comment
Share on other sites

நான் ஒருநாள் இந்த பக்கம் வரேல்ல அதற்குள் தேசிக்காய் சாதம் பனம்பொருடகள் வரையும் போயிற்றே....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.