Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறந்துபோன இணை; உடலருகில் அமர்ந்து துக்கம் அனுசரித்த அன்னப் பறவையால் 23 ரயில்கள் காத்திருப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

அண்ணெய்  அது அவர்கள் நாடு சீமான் அந்த நாட்டுக்காரர் அங்கு அவர்கள் என்ன செய்தாலும் எங்களுக்கு ஒன்றும் இல்லை 

பெரும்ஸ்,

உப்பிடி பார்த்தா... யாழில் தமிழக, உலக செய்திகள் என்ற பகுதியே இருக்க கூடாது🤣. தனியே ஊர்புதினம் மட்டும். 

  • Replies 61
  • Views 6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

பெரும்ஸ்,

உப்பிடி பார்த்தா... யாழில் தமிழக, உலக செய்திகள் என்ற பகுதியே இருக்க கூடாது🤣. தனியே ஊர்புதினம் மட்டும். 

சீமான் அவர்களால் எங்களுக்கு என்னபாதிப்பு ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

சீமான் அவர்களால் எங்களுக்கு என்னபாதிப்பு ?

நான் எங்க பாஸ் சீமானால எங்களுக்கு பாதிப்பு என்று எழுதினான்?

அவரால் எங்களுக்கு பாதிப்பும் இல்லை ஆதாயமும் இல்லை, எப்போதும் வரப்போவதும் இல்லை.

சீமானை, British National Party, AfD, Front Nationale, Britain First, Steve Banon, Mary Lepen, ராஜபக்ஸ, கிட்டதட்ட அத்தனை சிங்கள அரசியல்வாதிகள் ..... இவர்கள் எல்லாரையும் நான் எதிர்க்க ஒரு காரணம்தான்.... இனவாதம், இனத்தூய்மைவாதம்.

இனத்தூய்மைவாதம் எங்கே எழுந்தாலும் அது என் இனத்தில் இருந்தே என்றாலும் எதிர்க்க படவேண்டியது, இதில் சமரசத்துக்கு இடமில்லை.

இவ்வாறு சிங்கள மக்கள் எதிர்த்து இருந்தால் இலங்கை இரத்த காடாக மாறி இராது.

நாளை தமிழ் நாடும் மாறக்கூடாது.

ஒரு தமிழனாகவும், தனிப்பட்டும் அந்த கரிசனை எனக்கு தமிழ்நாடு மீது உண்டு.

இங்கே எழுதும் பலர் அவர்களாகவே அவர்களை அறியாமலே ஒத்து கொள்ளும் விடயம்.

அவர்கள் சீமானை ஆதரிப்பது எமக்கு ஏதாவது நடக்கும் என்ற ஒற்றை சுயநல எதிர்பர்ப்பில் மட்டுமே.

அவர்களுக்கு தமிழ் நாடு நாசாமாய் போனாலும் அங்கே ஒட்ட முடியாத சாதிய பிளவுகள் வந்தாலும், சங்கிகள் ஆட்சிக்கு வந்தாலும் கவலை இல்லை.

சுருங்க சொல்லின், தமிழ் நாடு நாசமாய் போனாலும் பரவாயில்லை சீமான் வந்து எமக்கு ஏதும் நடக்குமா? என்பதுதான் முக்கியம்.

என்னை பொறுத்தவரை

1. சீமான் வந்தாலும் அப்படி எமக்கு ஒன்றும் நடவாது

2. அப்படி நடப்பதே ஆயினும் தமிழ்நாட்டை நாசாமக்கிதான் அது நடக்கும் என்றால், அப்படி நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பதை போல கடைந்தெடுத்த சுயநலம் வேறு இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பெருமாள் said:

சீமான் அவர்களால் எங்களுக்கு என்னபாதிப்பு ?

பாஸ்,

இப்பதான் நாற்சந்தியை பார்த்தேன். என்ன பாஸ் இது, எவ்வளவு சொல்லியும் கேளாமை. புது வருசமும் அதுவா.☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

🤣 அரசியல் தெளிவின்மையை பயன்படுத்தி கட்டுகதைகள் கூறி தம் விம்பத்தை பெருக்கும் ஒருவர் நிச்சயம் தெளிவை உருவாக்க வல்லவர்தான் 🤣

நான் சீமானை முற்று முழுதாக வரவேற்க/ விரும்ப காரணம்  தமிழ்நாட்டுக்கு,தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல அரசியல் திட்ட கொள்கைகளை சொல்வதால் நடைமுறையில் செய்து காட்டுவதால் மட்டுமே.

  அவரது ஈழம் கொள்கைகள் எனக்கு இரண்டாம் பட்சமே.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

அருகில் இருந்து அழுத அன்னத்தை ஆத்துல விட்டாச்சுது, அமரரான அன்னத்தை ஆழப்  புதைச்சாச்சுது ........!  🦢 

குட்டி கவிதை மாதிரி இருக்கே 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

நான் சீமானை முற்று முழுதாக வரவேற்க/ விரும்ப காரணம்  தமிழ்நாட்டுக்கு,தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல அரசியல் திட்ட கொள்கைகளை சொல்வதால் நடைமுறையில் செய்து காட்டுவதால் மட்டுமே.

  அவரது ஈழம் கொள்கைகள் எனக்கு இரண்டாம் பட்சமே.

எனக்கு அவரின் கொள்கையில் ஏற்பில்லாதவை 2 மட்டும். 

1. இனத்தூய்மைவாதம்

2. திராவிட கொள்கையை, இந்துதுவாவுடன் சமன் செய்து இரண்டும் ஒன்றுதான் என நிறுவ முயற்சிப்பது. திராவிட வழி வந்த இயக்கங்களின் தவறை கொள்கையின் தவறாக சித்தரிப்பது, கூட்டமைப்பின் தவறுக்காக தமிழ் தேசிய அரசியல் பிழை என்பதை போன்றது. திராவிட அரசியல் காலமாற்றத்தில் தமிழ் தேசிய அரசியலாக பரிணாமிக்க வேண்டும். என் ஆசையும் அதுதான். அதை செய்ய கூடிய நிலையில் இருந்தும், சீமான் திராவிடம் v தமிழ் தேசியம் என்ற இல்லாத சண்டையை உருவாக்குகிறார். மொழி வழி மாநில பிரிவின் பின், திராவிட அரசியலின் அடுத்த கட்டமே தமிழ் தேசிய அரசியல் என்ற நிலையை சீமான் எடுப்பதற்கு அவருக்கு எந்த தடையும் இல்லை. திமுக, அதிமுகவை ஏன் திக வை எதிர்க கூட திராவிட கொள்கையை எதிர்க்க தேவையில்லை.

இவர்கள் எல்லாம் திராவிட கொள்கையை மடைமாற்றிய திருடர்கள், நான்தான் பெரியாரின் பேரன், திராவிட கொள்கையை இந்த திருடர்களிடம் இருந்து மீட்டு அதன் அடுத்த கட்டமான தமிழ் தேசிய அரசியலாக பரிணமிக்க வைப்பதே எனது அரசியல் என்ற நிலைபாட்டை சீமான் இலகுவாக எடுத்திருக்கலாம். 

ஆனால் அப்படி ஒரு நிலை எடுக்காமல், திராவிட அரசியலை புறம் தள்ளி, தமிழ் நாட்டை பெரியார் நீக்கம் செய்ய நினைப்பதில்தான் - இவர் சங்கிகளின் ஏஜன் என்ற சந்தேக பொறி விழுகிறது. தொடரும் செயல்கள், மாறி மாறி பேசுவது இந்த சந்தேகத்தை வலுவாக்குகிறது. 

இந்த இரு பெரும் ஆபத்துகளோடு (தமிழ் நாட்டில் வாழ்பவர்களை சாதி வாரியாக இப்போ இருப்பதிலும் பெரிதாக பிரித்து விடுவது, பெரியாரை நீக்கி சங்கிகளை வர விடுவது) அவரின் பசுமை கொள்கைகள் உட்பட்ட கொள்கைகளால் வரும் நன்மை, மிக சிறியது.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னப் பறவையே இனத்தூய்மை காக்குது. இதில தமிழன் மட்டும் எல்லாத்துக்கையும் கலந்து காணாமல் போகனுமாம்.

தமிழன் தமிழ் நாட்டை ஆளனும்.. வந்தவர் எல்லாம் வாழலாம்.. என்பது எப்படி இனத்தூய்மை வாதம் என்று யாருக்காவது புரியுது?!

பிரிட்டனை.. பிரிட்டிஸார் தான் ஆள முடியும். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளனும். அப்படி இருந்தும் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் மொழி பேசும்.. பிறமொழியர்கள் தான் தமிழ் நாட்டை திராவிட நாடாக்கி சீரழிச்சிருக்கிறார்கள். தமிழ்நாடு மாத்திரமே.. வேற்றுமொழியாளர்கள் தன்னை ஆள அனுமதித்த ஒரேஒரு மாநிலம். தமிழன் காட்டிய சகிப்புத்தன்மையும்.. பரந்தமனப்பான்மையுமே அவன் இன்று அனுபவிக்கும் அடிமை நிலைக்கு முக்கிய காரணம்.

இதனால் தான் சொன்னார்கள்.. தனக்குப் பின் தான் தானம். முதல் நம் மண்ணை மக்களை கவனிப்பம். அப்புறம் மாற்றானைப் பற்றி யோசிப்பம். 

இதன் பின்னும்.. சீமான் பேசுவது இனத்தூய்மை வாதம் என்போரை என்னென்று அழைக்கலாம். 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பாஸ்,

இப்பதான் நாற்சந்தியை பார்த்தேன். என்ன பாஸ் இது, எவ்வளவு சொல்லியும் கேளாமை. புது வருசமும் அதுவா.☹️

கலைத்தால்  நல்லதுதானே நிறைய நேரம் கிடைக்கும் பாஸ் இந்த வ்ருடம் வாங்கிய 27 புத்தகம் ஒன்று கூட முடிக்கவில்லை எல்லாம் நுனிப்புல் மேய்ச்சல் தான் .

கோபம் என்பது அவசியம் தமிழனுக்கு தேவை 😁

5 minutes ago, nedukkalapoovan said:

அன்னைப் பறவையே இனத்தூய்மை காக்குது. இதில தமிழன் மட்டும் எல்லாத்துக்கையும் கலந்து காணாமல் போகனுமாம்.

அன்னப்பறவை இனத்தூய்மை காத்ததா?😀 அது தான் இவுலகில் அன்னம் என்ற பறவையே இன்று இல்லை. தமிழ் இலக்கியங்களில் மாத்திரம்  வாழ்ந்து விட்டு தனது  இனத்தூய்மைவாத முட்டாள்த்தனத்தினால் இவுலகில் இருந்து காலாவதியாகி விட்டது. 

2 minutes ago, பெருமாள் said:

கோபம் என்பது அவசியம் தமிழனுக்கு தேவை 😁

இருக்கலாம் ஆனால் மனிதனுக்கு அது  தேவையில்லை

 மனித முன்னேற்றத்துக்கு அது எதிர் மறையானது.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

இருக்கலாம் ஆனால் மனிதனுக்கு அது  தேவையில்லை

 மனித முன்னேற்றத்துக்கு அது எதிர் மறையானது.  

நான்  சொன்னது தமிழர்களுக்கு .

26 minutes ago, பெருமாள் said:

நான்  சொன்னது தமிழர்களுக்கு .

நான் சொன்னது மனிதர்களுக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

British என்பது ஒரு இனம் (ethnicity/race) அல்ல. Nationality.  
English, Welsh, Scottish வட அயர்லாந்தில் Irish. இவைதான் பிரிட்டனில் உள்ள இனங்கள்.

இந்த இனங்களுக்கு வெளியானவரும் பிரதமர் ஆகியுள்ளனர்.

பென்சமீன் டிஸ்ரேலி (1804) பிரித்தானிய பிரதமர் பிறப்பால் யூதன் (ethnic Jew). பின்னர் மதத்தால் கிறிஸ்தவர். ஆனால் இனம் யூதம்தான்.

பொரிஸ் ஜான்சன் - பாட்டன் ஒரு துருக்கியர். 

அது மட்டும் அல்ல, பிரித்தானிய அரச குடும்பத்தில் கூட இப்போதைய ராணியின் தாயார் மட்டுமே Scottish. இதை தவிர்ந்த ராணியின் மூதாதைகள் எல்லாம் ஜேர்மன் இனத்தவர்கள்.

அவர்களின் குடும்ப பெயரே Saxe-Coburg-Gotha 1ம் யுத்த காலத்தில் மன்னர் மக்கள் ஜேர்மனுடன் போர் புரியும் மக்கள் கடுப்பாவார்கள் என்பதால் அரச ஆணை மூலம் இதை Windsor என மாற்றினார்.

ஆகவே பிரிட்டனில் இனதூய்மைவாத அடிப்படையில் தலைமை தேர்வு இல்லை.

குடியுரிமைக்கும் (nationality/citizenship) இன அடையாளத்துக்கும் (ethnicity/race) இடையான வேறுபாட்டை விளங்கி கொண்டால், இதை இலகுவாக விளங்கலாம்.

இவ்வளவு காலம் யூகேயில் வாழ்ந்த பின்னும் British என்பது ஒரு இன அடையாளம் இல்லை என்பதை விளங்க முடியாதவ்ர்களுக்கு, இனத்தூய்மைவாத அரசியல் என்றால் என்ன என்று விளங்காதது வியப்பல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

1 hour ago, nedukkalapoovan said:

தமிழன் தமிழ் நாட்டை ஆளனும்.. வந்தவர் எல்லாம் வாழலாம்.. என்பது எப்படி இனத்தூய்மை வாதம் என்று யாருக்காவது புரியுது?!

இது சார்ந்து தான் இனத்தூய்மை வாதம் கேள்விப்படுத்தப்பட்டுள்ளது.

1 hour ago, nedukkalapoovan said:

பிரிட்டனை.. பிரிட்டிஸார் தான் ஆள முடியும். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளனும். அப்படி இருந்தும் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் மொழி பேசும்.. பிறமொழியர்கள் தான் தமிழ் நாட்டை திராவிட நாடாக்கி சீரழிச்சிருக்கிறார்கள். தமிழ்நாடு மாத்திரமே.. வேற்றுமொழியாளர்கள் தன்னை ஆள அனுமதித்த ஒரேஒரு மாநிலம். தமிழன் காட்டிய சகிப்புத்தன்மையும்.. பரந்தமனப்பான்மையுமே அவன் இன்று அனுபவிக்கும் அடிமை நிலைக்கு முக்கிய காரணம்.

இது தேசியம்.. மற்றும்.. மொழிசார்ந்து பேசப்பட்டுள்ளது.

பிரிட்டிஷார் என்பது அவர்களது தேசியம். அந்த தேசிய அடையாளம் உள்ளவர்கள் மட்டுமே பிரிட்டனை ஆள முடியும். அப்படியே தான் மொழிசார்.. தேசியங்களும் கூட. உதாரணம் பிரஞ்ச். பிரஞ்ச் சாராதோர் பிரான்ஸை ஆள முடியாது. இவற்றை தூய தேசிய வாதம் என்று சொல்ல முடியாது. 

அதேபோல்.. தமிழ்நாட்டை தமிழன் ஆளனும் என்பது மொழித் தேசியம். தமிழருள் பல இனங்களின் கலப்பு உள்ளது. இனத்தூய்மை இங்கு எங்குள்ளது.

இவைதான் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளனவே தவிர..

அது விளங்காமல் அண்ணர் அடிச்சு விடுறார்.. தானே எல்லாம் அறிந்தோன் சபையோன் கணக்கில். இந்தத் தலைக்கனம் தான் தமிழரை மாரடிக்க வைத்துள்ளது மாற்றானிடத்தில். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, goshan_che said:

பொரிஸ் ஜான்சன் - பாட்டன் ஒரு துருக்கியர். 

ஜோன்சனை துருக்கியில் போய் லெக்சன்  கேக்கச்சொல்லுங்கோ அப்ப தெரியும்... உங்கள் தத்துவமும் சிந்தனைகளும்.

எதையும் கதையும் கதையுங்கள். ஆனால் தமிழினத்தின் அடிமடியில் கை வைக்காதீர்கள்.
துரோக கூட்டங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஜோன்சனை துருக்கியில் போய் லெக்சன்  கேக்கச்சொல்லுங்கோ அப்ப தெரியும்... உங்கள் தத்துவமும் சிந்தனைகளும்.

எதையும் கதையும் கதையுங்கள். ஆனால் தமிழினத்தின் அடிமடியில் கை வைக்காதீர்கள்.
துரோக கூட்டங்கள்.

பச்சை முடிந்து போயிற்று .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அன்னப்பறவை இனத்தூய்மை காத்ததா?😀 அது தான் இவுலகில் அன்னம் என்ற பறவையே இன்று இல்லை. தமிழ் இலக்கியங்களில் மாத்திரம்  வாழ்ந்து விட்டு தனது  இனத்தூய்மைவாத முட்டாள்த்தனத்தினால் இவுலகில் இருந்து காலாவதியாகி விட்டது. 

அப்படின்னா.. மனிதன் குரங்குடன் கலக்கலாமே. கலந்தாலும் வளமான இனமாக முடியாது. முதலில் இனம் என்பதற்கான பதத்தை சரியாக விளங்கிக் கொள்வது அவசியம். 

 மொழித் தேசியம்.. இது தூய்மைவாதம் அல்ல. அந்தந்த மக்களின் தனி மொழிசார் தேசியமாகும். தமிழன் என்பவன்.. ஒரு தமிழ் தேசியம் சார்ந்தவனே அன்றி.. அவன் தனி இனத்தூய்மையானவன் அல்ல. அங்கு இனத்தூய்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழ்நாட்டை.. மொழித் தேசிய பூகோளபிராந்தியத்தை அந்த பிராந்திய மொழிசார்ந்தோன் பெரும்பான்மை மொழி சார்ந்தோன் ஆளனும் என்பது ஒரு தூய்மை வாதமே கிடையாது. அதுதான் உலக தேசியங்களின் அடிப்படையே ஆகும். தேசியம் என்பது பல இனங்களின் ஒருமொழித் தோற்றமாகும். 

Edited by nedukkalapoovan

27 minutes ago, nedukkalapoovan said:

இது சார்ந்து தான் இனத்தூய்மை வாதம் கேள்விப்படுத்தப்பட்டுள்ளது.

இது தேசியம்.. மற்றும்.. மொழிசார்ந்து பேசப்பட்டுள்ளது.

பிரிட்டிஷார் என்பது அவர்களது தேசியம். அந்த தேசிய அடையாளம் உள்ளவர்கள் மட்டுமே பிரிட்டனை ஆள முடியும். அப்படியே தான் மொழிசார்.. தேசியங்களும் கூட. உதாரணம் பிரஞ்ச். பிரஞ்ச் சாராதோர் பிரான்ஸை ஆள முடியாது. இவற்றை தூய தேசிய வாதம் என்று சொல்ல முடியாது. 

பிரெஞ்ச் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சாரகோசி  ஹங்கேரிய இன வம்சாவளி.  Zivilisation அடைந்த மனிதர்கள் இனதூயமைவாதத்தை ஆதரிக்க மாட்டார்கள். காட்டுமிரண்டுகள் தான்  இன தூய்மைவாதத்தை ஆதரிப்பவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, tulpen said:

பிரெஞ்ச் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சாரகோசி  ஹங்கேரிய இன வம்சாவளி.  Zivilisation அடைந்த மனிதர்கள் இனதூயமைவாதத்தை ஆதரிக்க மாட்டார்கள். காட்டுமிரண்டுகள் தான்  இன தூய்மைவாதத்தை ஆதரிப்பவர்கள். 

மீண்டும்.. உங்களை நீங்களே தான் காட்டுமிராண்டி என்று கூறுகிறீர்கள்.

தமிழர்கள்.. ஒரு தேசிய மொழி வழித்தோன்றல்கள். தூய இனமல்ல. உங்கள் உதாரணத்தில் வந்தவர்.. ஹங்கேரிய வம்சாவளி ஆகினும்.. பிரஞ்ச் தேசிய அடையாளம் சுமக்காமல்.. பிரான்ஸ் சனாதிபதி ஆகவில்லை.

அதேபோல் தான்.. தமிழ் நாட்டை தமிழ் தேசியம் சார்ந்த அடையாளம் தாங்கியோன் தான் ஆளனும். திராவிட மாயை போர்த்திக் கொண்டு தமிழ் தேசியத்தின் சார்பற்றவர்கள்.. தமிழ் நாட்டை.. தமிழ் தேசிய இனத்தை ஆளக் கூடாது. இதில் எங்கு இனத்தூய்மை வாதம் உள்ளது..??!

Edited by nedukkalapoovan

40 minutes ago, குமாரசாமி said:

ஜோன்சனை துருக்கியில் போய் லெக்சன்  கேக்கச்சொல்லுங்கோ அப்ப தெரியும்... உங்கள் தத்துவமும் சிந்தனைகளும்.

எதையும் கதையும் கதையுங்கள். ஆனால் தமிழினத்தின் அடிமடியில் கை வைக்காதீர்கள்.
துரோக கூட்டங்கள்.

ஜோன்சன் ஏன் துருக்கிக்கு சென்று தேர்தஙில் நிற்க வேண்டும்? கேள்வியில் லொஜிக் இல்லையே? பாட்டன்  துருக்கியர் என்றால் அவர் இங்கிலாந்து வந்து இங்கு  குடியேறியவர். இங்கு  தான் வாழ் முடியும்  இங்கு தான் மக்கள் ஆதரவுடன் நாட்டை ஆளவும் முடியும்.

5 minutes ago, nedukkalapoovan said:

மீண்டும்.. உங்களை நீங்களே தான் காட்டுமிராண்டி என்று கூறுகிறீர்கள்.

தமிழர்கள்.. ஒரு தேசிய மொழி வழித்தோன்றல்கள். தூய இனமல்ல. உங்கள் உதாரணத்தில் வந்தவர்.. ஹங்கேரிய வம்சாவளி ஆகினும்.. பிரஞ்ச் தேசிய அடையாளம் சுமக்காமல்.. பிரான்ஸ் சனாதிபதி ஆகவில்லை.

அதேபோல் தான்.. தமிழ் நாட்டை தமிழ் தேசியம் சார்ந்த அடையாளம் தாங்கியோன் தான் ஆளனும். திராவிட மாயை போர்த்திக் கொண்டு தமிழ் தேசியத்தின் சார்பற்றவர்கள்.. தமிழ் நாட்டை.. தமிழ் தேசிய இனத்தை ஆளக் கூடாது. இதில் எங்கு இனத்தூய்மை வாதம் உள்ளது..??!

தமிழ் நாட்டில் தமிழர்கள் இப்படியான இனத்தூய்மைவாதத்தை ஆதரிக்கவில்லை. சீமான் வகையறாக்கள் மட்டுமே  இனவெறியை கக்குகிறார்கள். மனிதர்களான தமிழரகள் அதை ஆதரிக்கவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தேசியம், மொழி வழி தேசியம், மொழிசாரா தேசியம் என்பவற்றை இனத்தோடு போட்டு குழப்பி கொண்டு அந்த குழப்ப நிலையில் இருந்தே மற்றையவர்களுக்கு வகுப்பு எடுத்தலும் நடக்கிறது.

அவர்கள் தாம் பிடித்த காலுக்கு மூன்றைக்கால் எனும் பேர்வழிகள், என்பதால் இந்த பதில் அவர்களுக்கானதல்ல, ஒரு பொது விளக்கத்துக்கு.

பிரிடிஷ் -மொழி சாரா  தேசியம், இனமல்ல. மொழி வழி தேசியமும் அல்ல.

அமெரிக்கன் - மொழி சாரா தேசியம், இனமல்ல. மொழி வழி தேசியமும் அல்ல.

பிரெஞ் - இனம், அதே சமயம் மொழி சார் தேசியம், மொழி சாரா தேசியம் மூன்றும்.

தமிழ் - இனம், மொழிசார் தேசியம். ஆனால்  தமிழர் நிலம் ஒரு நாடாகும் வரை மொழி சாரா தேசியம் இல்லை.

ஒரு காலத்தில் தமிழ் நாடோ, அல்லது இலங்கையின் வட கிழக்கோ தனி நாடாகினால் அப்போது பிரெஞ் போல 3ம்  தமிழுக்கும் பொருந்தும்.

இனி உதாரணமாக இரு நபர்களை பார்ப்போம்

சீமான்

இனம் - தமிழ்

மொழி சார் தேசியம் - தமிழ்

மொழி சாரா தேசியம் - இந்தியன்

ஸ்டாலின்

இனம் - தெலுங்கு (600 களுக்கு முன் ஆந்திராவில் இருந்த வந்த வம்சாவளி) என்று வைப்போம்.

மொழி சார் தேசியம் - தமிழ் (வேறு மொழி ஏதும் பேசுவதாக ஆதாரம் இல்லை, வாழ்கை, படிப்பு முழுவதும் தமிழ் நாட்டில், தமிழ் அல்லது ஆங்கிலத்தில், தமிழ் நாட்டுக்கு வெளியே நினவில் உள்ள மூதாதை யாரும் வாழவில்லை).

மொழி சாரா தேசியம் - இந்தியன்.

இங்கே சீமான் தன்னை தமிழன் என்றும் ஸ்டாலினை தெலுங்கன் என்றும் கூறுவது இன அடிப்படையில் மட்டுமே.

ஆகவேதான் நாங்கள் யாரும் சீமானை தூய-தேசிய அரசியல் செய்வதாக கூறுவதில்லை. அவர் செய்வது இனத்தூய்மை அரசியல். 

மொழி சார் தேசியத்தை, மொழி சாரா தேசியத்தை பிறப்பின் பின் மாற்றலாம் அல்லது மேலதிகமாக பெற்று கொள்ளலாம்.

ஆனால் இன அடையாளத்தை மாற்ற முடியாது. வேணும் என்றால் பிறப்பிலே கலப்பின அடையாளம் பெறலாம்( நடிகர் விஜை தமிழ்-மலையாளி) .

உதாரணமாக,

கோசானுக்கு (இவர் இங்கிலாந்தில் வாழ்பவர்)

இனம் -தமிழ்

மொழி சார் தேசியம் - பிறப்பில் தமிழ், பின்னர் இங்கிலிஷ் (இங்கிலிஷ் இன அடையாளம் வேறு, மொழி சார் தேசியம் வேறு). 

மொழி சாரா தேசியம் - பிரிடிஷ் (முன்னர் சிறி லங்கன்).

மொழி சாரா தேசியமும் குடியுரிமையும் அநேகமாக ஒன்றாய் இருக்கும் ஆனல் எப்போதும் அப்படி இருக்க தேவையில்லை.

யூகேயின் கெட்ட காலம் நாளைக்கு யூகேயின் பிரதமராக கோஷான் வரும் நிலை வந்தால் !

அவரால் வர முடியும். அவர் வர முடியாது என்று வாதாடுபவர்கள் இன அடிபடையில் மட்டுமே வாதாட முடியும். அதுதான் இனத்தூய்மை அரசியல்.

இது கொஞ்சம் சிக்கலான விடயம். இலகுவில் விளங்காது.

ஆனால் சீமான் முன்வைப்பது தேசிய அடையாள அடிப்படையிலான வேறுபாடு அல்ல.

முழுக்க முழுக்க இன அடிப்படையிலான வேறுபாட்டையே.

ஆகவே சீமான் செய்வது இனத்தூய்மைவாத அரசியலே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஜோன்சனை துருக்கியில் போய் லெக்சன்  கேக்கச்சொல்லுங்கோ அப்ப தெரியும்... உங்கள் தத்துவமும் சிந்தனைகளும்.

எதையும் கதையும் கதையுங்கள். ஆனால் தமிழினத்தின் அடிமடியில் கை வைக்காதீர்கள்.
துரோக கூட்டங்கள்.

அண்ணை உதென்ன நேற்று நல்லா கதைச்சு போட்டு இன்டைக்கு பழையபடி துரோக கூட்டம் அது இது எண்டுறியள். புது வரிசமும் அதுவுமா.

சரி கேள்விக்கு வாறன்:

ஜோன்சனின் பாட்டி துருக்கி போய், அங்கேயே வாழ்ந்து மடிந்து, தந்தையும் அங்கே பிறந்து, ஜோன்சனும் அங்கே பிறந்து, ஜோன்சன் 3 தலைமுறையாக துருக்கிய மொழி சார் தேசியத்தையும், மொழி சாரா தேசியத்தையும் கை கொண்டபின், 

100 ஆண்டுகளுக்கு முன் உன் பாட்டி பிரிட்டனில் இருந்து இங்கே வந்தவர் எனவே நீ துருக்கியின் தலைவராக வர முடியாது என்று சொன்னால் - அது நிச்சயமான இனத்தூய்மைவாதம்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோச் நெடுக்கு நாளை வேலை உங்களை  போல் நம்மளை போல் WORK FROM  ஹோம்  அல்ல  இணைத்த  பாட்டு எப்படி ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

கோச் நெடுக்கு நாளை வேலை உங்களை  போல் நம்மளை போல் WORK FROM  ஹோம்  அல்ல  இணைத்த  பாட்டு எப்படி ?

இல்லையெண்டா போல? வந்து எப்படியோ முயலுக்கு மூன்றரைக்கால் என்றுதானே எழுதப்போறார் 🤣.

பாட்டு அந்த மாரி பொஸ். இது சீமானின் மேடையில் முன்பும் பாடின பாட்டுதானே?

ஆனால் இதில் ஆலாபனையள் கூடுதாலாய் சேர்த்து கிடக்கு.

பொஸ் - எனக்கும் தமிழன் எண்ட பெருமை எல்லாம் இருக்கு 🤣. உப்பிடியான பாட்டை கேட்டால் சும்மா முறுக்கும்.

தமிழ் தேசிய அரசியலை அவர் முன் தள்ளுவதிலும், பிரபாகரன் படத்தை, கொடியை தூக்கி பட்டி தொட்டிகளில் பரப்புவதிலும் கூட விருப்பம்தான் (குமாரசாமி அண்ணை தலை சுத்தி விழப்போறார் - ஆனால் நான் இருக்கும் போது அவரை புகழ்ந்துபாடியவர்களைதான் விமர்சித்தேனே ஒழிய, இப்போ அவரை தமிழ்நாட்டில் ஒரு தலைவராக கொண்டு நிறுத்த முயற்சிப்பதில் எனக்கும் ஒப்புத்தான்) . 

பெரியார் கொள்கையை தமிழ் நாட்டில் எதிர்காமல், 600 வருடத்துக்கு முன் ஆந்திராவில் இருந்து வந்த ஒரு தொகை வாக்காளரை பார்த்து கம்பு சுத்தாமல் அரசியலை முன்னெடுத்தால் நான்தான் அவரின் 1ம் ஆதரவாளன்.

முன்பே சொன்னது போல மாறி மாறி கதைத்த மிச்சம் எல்லாத்தையும் விட்டு விடலாம். அரசியல்வாதி என்றால் நாக்கு புரளும்தானே.

ஆனால் இந்த ரெண்டு விசயமும், இவர் கையில் எடுக்க தேவையில்லாத விசயங்கள். இதை கையில் எடுப்பது யாருக்கு அனுகூலமா முடியும் என்று பார்த்தால் கோடு நேரே சங்கிகளிடம் போய் நிற்கிறது. அங்கதான் ஆரம்பமாகுது டவுட்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.