Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`வால் ஸ்ட்ரீட் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?' - #GameStop கேங்ஸ்டர்ஸ் `சம்பவம்' செய்தது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை பெரிய தரகு நிறுவனங்கள்தான் திட்டமிட்ட பங்கு பரிவர்த்தனைகளை நடத்தி அதிக லாபம் அடைவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், ரெட்டிட் மூலம் இணைந்த சிறு முதலீட்டாளர்கள் குழு கூட்டணி அமைத்து பெரிய தரகு நிறுவனத்தை வீழ்த்தியிருப்பது மிகப் பெரிய அதிர்ச்சியுடன் பார்க்கப்படுகிறது.

அத்அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் கேம்ஸ்டாப் (GameStop). இது வீடியோ கேம்கள் மற்றும் அது தொடர்பான பொருள்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கான காரணிகளும் பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. இந்த நிறுவனத்தின் பங்கு அமெரிக்க பங்குச் சந்தையில் கடந்த ஆண்டு இறுதியில் 16 அமெரிக்க டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வந்தது.

 

இதுபோன்ற சிறிய நிறுவனங்களை பெரிய பங்கு வர்த்தகர்கள் பொய்யான டிமாண்டை உருவாக்கி விலையேற்றத்தை உருவாக்குவது வழக்கம். அந்த நிறுவனத்தின் பங்கு அதிக விலைக்கு உயர்ந்தவுடன் அதை நல்ல விலைக்கு விற்று லாபம் பார்ப்பார்கள். அதிக விலைக்கு வாங்கிய சிறு முதலீட்டாளர்கள் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திப்பார்கள். இதுபோன்று பங்கு விலையில் அதிக ஏற்ற இறக்கங்களைப் பெரிய நிறுவனங்களில் செய்ய முடியாது. சிறிய நிறுவனங்கள்தான் அவர்களின் இலக்காக இருக்கும்.

கேம்ஸ்டாப் நிறுவனத்தை இதற்காகப் பெரும் வர்த்தகர்கள் தேர்ந்தெடுத்தனர். கேம்ஸ்டாப் பங்கின் விலை ஜனவரி 21 அன்று 43 டாலர் என்னும் அளவுக்கு வர்த்தகமாகி வந்தது.

பங்குச் சந்தையில் வர்த்தகர்கள் பங்கை வாங்கி அதன் பிறகு, அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பார்கள். இது ஒரு வகை. மற்றொரு வகையில் தினசரி வர்த்தகத்தில் ஒரு பங்கின் விலை ஏறும் என்று நினைத்து, பங்குகளை முதலில் வாங்கி பிறகு விற்பதுபோல, ஒரு பங்கின் விலை இறங்கும் என்று நினைக்கும்போது பங்குகளை முதலில் விற்றுவிட்டு, பின்பு விலை குறைந்த பின் வாங்கி லாபம் பார்ப்பார்கள். இது தினசரி வர்த்தகத்தின் ஒரு வழிமுறை ஆகும். அதே சமயம், நாம் முதலில் விற்றுவிட்டு, பின் வாங்கும்போது விலை குறைவாக இருந்தால் லாபகரமாகவும், விலை ஏற்றத்தில் இருந்தால் நஷ்ட மாகவும் முடிய வாய்ப்புண்டு. இதற்கு ஷார்ட் டிரேடிங் என்று பெயர்.

அதன்படி ஜனவரி 22-ம் தேதி பெரிய பங்கு தரகு நிறுவனம் (Hedge Fund Group) அதிக அளவில் கேம்ஸ்டாப் பங்குகளை முதலில் விற்கத் தொடங்கியது. இந்த ஊரடங்கு காலத்தில் அமெரிக்க பங்குச் சந்தையில் அதிக அளவு சிறு முதலீட்டாளர்கள் ஈடுபடத் தொடங்கினர். சிறு முதலீட்டாளர்களின் மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டு மொத்த கணக்குகளில் 15 சதவிகிதம் என்ற அளவில் இருந்தது. அது 20 சதவிகிதமாக 2020-ம் ஆண்டு உயர்ந்துள்ளது.

GameStop store
 
GameStop store AP Photo/Nam Y. Huh, file

அமெரிக்க பங்குச் சந்தை தற்போது உச்ச அளவில் வர்த்தகமாகி வருகிறது. அதற்கு புதிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்ததும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

அங்கு சிறு பங்குச் சந்தை முதலீட்டாளர்களை இணைப்பதற்குப் பல வலைதளங்கள், ஆன்லைன் குழுக்கள் உதவிகரமாக இருக்கின்றன. அதில், ரெட்டிட் (Reddit) என்பது மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் எளிதாக பணம் பார்ப்பதற்கு சிறிய நிறுவனங்களையே அதிகம் விரும்புவார்கள். அதுதான் அதிக ஏற்ற இறக்கம் உடையதாக இருக்கும். ஆனால், பெரும்பாலும் சிறு முதலீட்டாளர்கள் இது போன்ற சிறிய நிறுவன பங்குகளை வாங்கி நஷ்டமடைந்து விரைவாக பங்குச் சந்தையை விட்டுச் சென்று விடுவார்கள். அதனால் இதுபோன்ற முதலீட்டாளர்களை `ராபின்ஹூட் முதலீட்டாளர்கள்' என்று அழைப்பார்கள்.

 

ரெட்டிட் இணைய தளத்தில் இணைந்த சிறு முதலீட்டாளர்கள் கேம்ஸ்டாப் நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவில் விற்கப்படுவதைக் கண்டுபிடித்தனர். அந்தப் பங்கின் போக்கில் ஏற்பட்ட மாறுதல் மூலம் ஒரு பெரிய நிறுவனம் அதிக அளவு ஷார்ட் செய்கிறது என்பதை அறிந்தனர்.

அவர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக்கொண்டு பெரிய தரகு நிறுவனம் விற்ற அனைத்து பங்குகளையும் வாங்கத் தொடங்கினர். பொதுவாக, பெரிய பங்கு வர்த்தகர்கள் அதிக அளவில் பங்குகளை விற்கும்போது பங்கு விலை கடுமையாகக் குறையும். அதனால் அன்று சந்தை முடிவதற்குள் குறைந்த விலையில் விற்ற பங்குகளை வாங்கி அதிக லாபம் பார்ப்பது வழக்கம்.

ஆனால், பெரும் முதலீட்டாளர்கள் விற்ற பங்குகள் அனைத்தையும் சிறு முதலீட்டாளர்கள் கூட்டணி வாங்கத் தொடங்கியது. இதன் காரணமாகப் பங்கின் விலை உயரத் தொடங்கியது.

 
 

7.1 கோடி கேம்ஸ்டாப் பங்குகளை 6 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 43,800 கோடி) என்ற அளவுக்கு பெரிய வர்த்தகர்கள் செயற்கையாகப் பங்குகளை விற்றனர். அத்தனை பங்குகளையும் சிறு முதலீட்டாளர்கள் கூட்டணி வாங்கிவிட்டது.

பங்குச் சந்தையில் இதுபோல பங்குகள் வாங்கும் பொழுது முழு பணமும் கையிருப்பு வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் போதும். அந்தப் பங்கை டெலிவரி எடுக்கும்போது மீதித் தொகையைக் கொடுத்துவிடலாம். வாங்கிய பங்குகளை அன்றே விற்று அந்த வியாபார கணக்கு சரி செய்யப்பட்டுவிடும். அதனால் முழுப் பணமும் செலுத்த வேண்டிய தேவை இருக்காது. லாப நஷ்டங்கள் வித்தியாசத்தைச் செலுத்தினால் போதும். இதை மார்ஜின் டிரேடிங் என்பார்கள்.

அனைத்துப் பங்குகளையும் சிறு முதலீட்டாளர் கூட்டணி வாங்கி விட்டதால் பங்கின் விலை வானத்துக்கும் பூமிக்குமாக உயரத் தொடங்கியது. இதன் காரணமாக ஜனவரி 21 அன்று 43 டாலருக்கு வர்த்தகமான ஒரு பங்கின் விலை 4 நாள்களில் 347 டாலர் என்ற அளவுக்கு உயர்ந்துவிட்டது.

திருடனுக்கு தேள் கொட்டியதுபோல பெரிய பங்கு வர்த்தகர்கள் விழிக்கத் தொடங்கினர். பங்குச் சந்தையின் நிபந்தனைப்படி விற்ற பங்குகளை வாங்கி நேர் செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது போல விலை குறையாமல் எட்டு மடங்கு அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக அதிக விலை கொடுத்து அந்தப் பங்கை வாங்கி தமது கணக்கை முடிக்கும் நிலை ஏற்பட்டது.

Wall Street
 
Wall Street AP Photo/John Minchillo

இதன் காரணமாக அந்தப் பெரிய தரகு நிறுவனத்துக்கு 13 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த நிறுவனம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதுவரை பெரிய தரகு நிறுவனங்கள்தான் இதுபோன்ற திட்டமிட்ட பங்கு பரிவர்த்தனைகளை நடத்தி அதிக லாபம் அடைவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், ரெட்டிட் மூலம் இணைந்த சிறு முதலீட்டாளர்கள் குழு கூட்டணி அமைத்து பெரிய தரகு நிறுவனத்தை வீழ்த்தியிருப்பது அமெரிக்க பங்குச் சந்தையில் மிகப் பெரிய அதிர்ச்சியுடன் பார்க்கப்படுகிறது.

நேற்றைய வர்த்தக முடிவில் கேம்ஸ்டாப் நிறுவன பங்கின் விலை 347.51 என்ற அளவில் 135% ஒரே நாளில் அதிகரித்து முடிவடைந்துள்ளது. இந்த விளையாட்டு இன்னும் முழுமை அடையவில்லை. பெரிய தரகு நிறுவனத்தின் நஷ்டம் வரும் நாள்களில் ஏற்படும் பங்கின் விலைக்கு ஏற்ப மாறலாம்.

 

இந்த விளையாட்டு இப்போது வெள்ளை மாளிகை வரை வந்து நிற்கிறது. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கேம்ஸ்டாப் நிறுவன பங்குகளில் ஏற்பட்ட அதிக மாற்றங்களை அமெரிக்க அரசு உற்று நோக்கி வருகிறது என்று தெரிவித்துள்ளது.

ஆனால், இது பெரிய பங்கு தரகு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்குச் சந்தையில் பெரும்பாலும் பெரிய தரகு நிறுவனங்கள்தான் அதிக அளவில் பரிவர்த்தனைகள் செய்வதால் இந்த நிகழ்வு அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகக் கடந்த இரு நாள்களாக அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் முடிந்து வருகிறது.

சிறு முதலீட்டாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டால் பெரிய தரகு நிறுவனங்களையும் வீழ்த்த முடியும் என்று அமெரிக்காவில் நடந்த நிகழ்வு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

 

இந்தப் பரிவர்த்தனைகள் அனைத்தும் பங்குச் சந்தைகளின் விதிகளுக்குட்பட்டுதான் நடைபெற்றுள்ளன. இந்த நிகழ்வு பங்குச் சந்தையின் மற்றொரு முகத்தை தோலுரித்துக் காட்டியுள்ளது. பங்குச் சந்தை என்பது வியாபாரம். அதில் ஒருவருக்கு ஏற்படும் நஷ்டம் மற்றவருக்கு ஏற்படும் லாபமாகும்.

பங்குச் சந்தையில் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கலாம் என்று சிறு நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து பலர் அதிக நஷ்டம் அடைகின்றனர். பங்குச் சந்தையில் உள்ள ரிஸ்க்கை தெரிந்து அதன் பிறகு, முதலீடு செய்வதே நஷ்டத்தில் இருந்து நம்மைக் காப்பாற்றும். இதை ஒவ்வொரு முதலீட்டாளரும் உணர்ந்து கவனத்துடன் செயல்பட வேண்டும் என்ற பாடத்தை அமெரிக்க நிகழ்வு உணர்த்தியுள்ளது.

`வால் ஸ்ட்ரீட் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?' - #GameStop கேங்ஸ்டர்ஸ் `சம்பவம்' செய்தது எப்படி? | how reddit's wallstreetbets blew up GameStop shares and made millions (vikatan.com)

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே  விவசாயி விக் இணைத்து  இருக்கிறார் ஆங்கிலத்தில்  நன்றி இணைப்புக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

வால் ஸ்ட்ரீட் தகவல்களுக்கு நன்றி.
நேற்று யாழ்களத்தில் ஈசி ஷேர்காரர்கள் என்ற சொல்லை பார்த்து விட்டு பங்கு சந்தை தொடர்பானவர்கள் என்று முதலில் நினைத்து விட்டேன் 😂 பின்பு தான் விளங்கியது அது வேறு என்று.

 

. அதனால் இதுபோன்ற முதலீட்டாளர்களை `ராபின்ஹூட் முதலீட்டாளர்கள்' என்று அழைப்பார்கள்

ராபின்ஹூட்என்பது ஒன் லைன்  மூலம் இலகுவாக பங்கு வர்த்தகம் செய்யும் ஒரு இணைய தளம், இப்போது அமெரிக்கால உள்ளவர்கள் மட்டுமே இதில் கணக்குகளை தொடங்க முடியும் என நினைக்கிறேன்.இதன் மூலமே அதிகளவான புதியவர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனனர்

https://robinhood.com/signup

  உண்மையாக சொல்ல போனால் அமெரிக்கா பங்கு வர்த்தகம் என்பது பொன் முட்டையிடும் வாத்து..சரியான தகவல்கள் மூலம் நல்ல பங்குகளை வாங்குவீர்களானால்  நல்ல லாபம் பெற பெற முடியும்

எனது அனுபவத்தை எழுதுகிறேன் 
ஆரம்பத்தில் சில ஆயிரம் அமெரிக்கா டொலர் முதலீட்டுடன் பெரியளவான முன் அனுபவம் ஏதும் இன்றி பங்கு மார்க்கெட் ல கால் வைத்தேன் 
பயோ நானோ டைனமிக்ஸ் சார்ந்த ஒரு பங்கினை அது சம்பந்தமான செய்தியை பார்த்துவிட்டு காலையில் ஆர்டர் பண்ணினேன்(1share/ 1.36$)க்கு. எனக்கு (1share/1 .86$) கிடைத்தது அன்று இரவு அந்த பங்கு கிட்டதட்ட 1 share/7.32 $ வரை போனது.இப்போது அது 1share/10 -12 $ அளவில் போகிறது நன் வாங்கியது சில நூறு பங்குகள் இதுவே ஆயிரம் அளவுகளில் வாங்கியிருந்தால் எனது லாபங்கள் ஆயிரம்களில் இருந்து இருக்கும். 

எடிட் என்னும் இனொரு மருத்துவத்துறை சார்ந்த பங்கினை 32$க்கு வாங்கினேன்  அது இறுதியாக 96 $  வரை உயர்ந்து இப்போது குறைந்துள்ளது.
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அபராஜிதன் said:

. அதனால் இதுபோன்ற முதலீட்டாளர்களை `ராபின்ஹூட் முதலீட்டாளர்கள்' என்று அழைப்பார்கள்

ராபின்ஹூட்என்பது ஒன் லைன்  மூலம் இலகுவாக பங்கு வர்த்தகம் செய்யும் ஒரு இணைய தளம், இப்போது அமெரிக்கால உள்ளவர்கள் மட்டுமே இதில் கணக்குகளை தொடங்க முடியும் என நினைக்கிறேன்.இதன் மூலமே அதிகளவான புதியவர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனனர்

https://robinhood.com/signup

  உண்மையாக சொல்ல போனால் அமெரிக்கா பங்கு வர்த்தகம் என்பது பொன் முட்டையிடும் வாத்து..சரியான தகவல்கள் மூலம் நல்ல பங்குகளை வாங்குவீர்களானால்  நல்ல லாபம் பெற பெற முடியும்

எனது அனுபவத்தை எழுதுகிறேன் 
ஆரம்பத்தில் சில ஆயிரம் அமெரிக்கா டொலர் முதலீட்டுடன் பெரியளவான முன் அனுபவம் ஏதும் இன்றி பங்கு மார்க்கெட் ல கால் வைத்தேன் 
பயோ நானோ டைனமிக்ஸ் சார்ந்த ஒரு பங்கினை அது சம்பந்தமான செய்தியை பார்த்துவிட்டு காலையில் ஆர்டர் பண்ணினேன்(1share/ 1.36$)க்கு. எனக்கு (1share/1 .86$) கிடைத்தது அன்று இரவு அந்த பங்கு கிட்டதட்ட 1 share/7.32 $ வரை போனது.இப்போது அது 1share/10 -12 $ அளவில் போகிறது நன் வாங்கியது சில நூறு பங்குகள் இதுவே ஆயிரம் அளவுகளில் வாங்கியிருந்தால் எனது லாபங்கள் ஆயிரம்களில் இருந்து இருக்கும். 

எடிட் என்னும் இனொரு மருத்துவத்துறை சார்ந்த பங்கினை 32$க்கு வாங்கினேன்  அது இறுதியாக 96 $  வரை உயர்ந்து இப்போது குறைந்துள்ளது.
 

இப்போ எல்லோரும் செய்யவேண்டிய ஒரு கட்டாய வேலை 
காரணம் இப்போ சிறு குழந்தைகளாக தவழ்ந்துகொண்டு இருக்கும் 
சில கொம்பனிகள்தான் பின்னாளில் உலகை ஆள போகும் கொம்பனிகள்.
இப்போது ஒரு டாலர் கூட பெறுமதி இல்லாதவைகள் இன்னும் 5-10 வருடத்தில் 
$500 வரை செல்ல கூடிய வாய்ப்பு இருக்கிறது. 

க்ளவுட் அண்ட் நெட் செக்குரிட்டி 
டிஜிட்டல் பணம் (க்ரிப்டோ)
ரோபோடிக் 
எலக்ட்ரிக் வாகனம் 
எலக்ட்ரிக் சேகரிப்பும் பாதுகாப்பும் (சூரியன் + காற்றில் இருந்து)
5ஜி நெட்வெர்க் 
ட்ரான் டெக்னாலஜி (Drone Technolgy எதிர்கால பொருள் காவிகள் அவைதான் இன்னும் 10 வருடத்தில் நீங்கள் லொறிகளை காண மாட்டீர்கள்) 
மருத்துவம் (இனி உங்கள் வருத்தங்களுக்கு பெரிதாக மருந்து செய்ய போவதில்லை ... உங்கள் டிஎன்எ வையே மாற்றி அமைக்க போகிறார்கள். செல்களை மாற்றி அமைக்க போகிறார்கள் re-design your DNA and cells) 
குவந்தோம் கொம்ப்யூட்டர்ஸ் 

இவையெல்லாம் இப்போ தவழும் குழந்தை நிலையில் இருப்பன ஆனால் எதிர்கால உலகை ஆழ போகிறவர்கள்  யார் என்ன செய்கிறார்கள் என்று சரியான வாசிப்பு இருந்தால் போதும் 
இந்த சந்தர்ப்பத்தை நாம் நழுவ விட கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகை அல்லது காணொளி பார்த்துவிட்டு எவ்வாறு மூளை அறுவை சிகிச்சை செய்ய முடியாதோ அதே போல் வெற்றிகரமான முதலீட்டாளரக பலவிடயங்கள் உள்ளது அவற்றைக்கருத்திற்கொள்ளாமல் முதலீட்டில் குதித்தால் நீண்டகாலத்தில் பண இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது, இது ஓர் ஆலோசனை அல்ல எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

  GME  என்ற GameStop இல் இரண்டு 100$ படி இன்று வாங்கியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

  GME  என்ற GameStop இல் இரண்டு 100$ படி இன்று வாங்கியுள்ளேன்.

$200 தானே பெரிதாக கவலைப்பட தேவை இல்லை 
  இது இனி ஏறும் மாதிரி தெரியவில்லை. இதற்கு எல்லாம் வழி சமைத்தவர் 
இன்று $13 மில்லியன்களை இழந்து உள்ளார். ஆனாலும் எந்த பங்கையும் விற்கவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

பங்கு வர்த்தகத்தில் ஏற்படும் இழப்புகளை வருமான வரியில் விலக்கு பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு
பொதுவாக வருமான வரித்துறையினர் இரு வகையாகப்பார்க்கிறார்கள்
1. முதலீட்டு வர்த்தகம்
2. தின வர்த்தகம்
தின வர்த்தகத்தில் ஏற்படும் இழப்புகளை முழுமையாக உங்கள் வருமான வரியிலிருந்து விலக்கு பெறலாம், ஆனால் முதலீட்டு வர்த்தகத்தில் ஏற்படும் இழப்புகள் உங்கள் எதிர்கால முதலீட்டு வர்த்தக வருமானத்திலிருந்து விலக்கு வழங்கப்படும், அத்துடன் முதலீட்டு வர்த்தகத்திற்கு வருமான வரியும் குறைவு,நாடுகளுக்கிடையே இதற்கு வேறுபாடு காணப்படலாம், மேலும் இந்த விபரம் ஒரு குத்து மதிப்பான விபரம் அத்துடன் நான் கணக்காய்வாளருமல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.