Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

MSN இல் சாத்திரியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MSN இல் சாத்திரியும் சோழியனும் ...

இந்தவார ஒரு பேப்பரில் வெளிவந்தது

யெர்மனியில் வசிக்கும் எழுத்தாளர் நாடகநடிகர் வில்லிசை கலைஞர் இப்படி பல கலைத்துறையிலும் காலடி பதித்திருக்கும் சோழியன் என்கிற ராஜன் முருகவேல் அவர்களுடன் எம்.எஸ்.என். மெசஞ்சரில் நடந்த ஒரு உரையாடல் அதனை பதிந்துஉங்களிற்கும்போட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை பகுதியிலை பதியிறதுக்கு பதிலாக தவறுதலாக இங்கு பதிந்து விட்டேன் தயவு செய்து வெட்றுத்துனர் யாராவது இதை வெட்டி பொருத்தமான இடத்தில் ஒட்டி விடுங்கோ நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

சரி

சோழியன் அண்ணை பற்றி என்னும் சொல்லவேணும். தமிழமுதம் என்ற ஒரு இலக்கிய இணையத்தைத் திறம்படத் தொடர்ந்து நடத்தி வருகின்றார். அவரின் பணிக்கு நிச்சயம் நல்வாழ்த்துக்கள் உண்டு. அவ்வாறே சாத்திரியண்ணையும், இடைவிடாத படைப்புக்களைத் தளராது செய்து வருகின்றார். எழுத்து, ஒலிஊடகப்படைப்புக்களோடு தொடர்ச்சியாக் கலக்குகின்ற சாத்திரியணணையின் படைப்புக்கள் ஒளிவடிவிலும் வரவேணும் என்று வாழ்த்துகின்றோம்.

எம்எஸ்எனில் இருப்பது பற்றிப் பலர் குறை கூறுகின்றவை. எல்லோரையும் நெருக்கமாக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதனால் நாங்கள் எப்ப பார்த்தாலும் அதில் இருப்பதில் தப்பில்லை என்பதைச் சனம் புரிஞ்சு கொள்ளவேணும். வெட்டிப் பசங்கள் என்று வாயினுள் கறுவக் கூடாது.

எம்எஸ்எனில் நட்பைத் தொடர்ந்து ஊர்க்கதை கதைப்பதற்கு யாரும் விரும்பினால் தனிமடல் போடுங்கோ!:rolleyes:

தமிழ் முறைப்படி எப்படி திருமணம் செய்து வைத்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு அப்புறம் என்ன நடந்திச்சு எண்டு நான் சொல்லட்டுமா?

சாத்திரி: என்ன சோழியன் மனிசி கூப்பிடுறா எண்டீங்க, திரும்பி உடன வந்துட்டியள்

சோழியன்: ஓம்மண்ண, இப்படித்தான் மனிசி எனக்கு வலு பயம், என்ன எண்டு ஒரு மாதிரி சவுண்டை உயர்த்தி கேட்டன், ஒண்டுமில்லைங்க, இரவுக்கு யார் சமைக்கிறது எண்டு கேட்டா.... அதுதான்......

சாத்திரி: என்ன ஒரு மாதிரி இழுக்கிறியள்? இரவில யார் நீங்களோ சமையல்?

சோழியன்: இரவில மட்டுமில்லை அண்ணை, 3 நேரமும் நான் தான்..

சாத்திரி: அப்ப எதுக்கு இரவுக்கு யார் சமைக்கிறது எண்டு கேட்டவா?

சோழியன்: இல்லை அண்ணை, அது வந்து வந்து... ஆ அப்புறன் என்னாச்சு அவையளுக்கு? அதை சொல்லுங்க..

சாத்திரி: கதையை மாத்தாதேங்கோ, உங்கட சுமையை எங்கிட்ட இறக்கி வையுங்கோ, மனசில வைச்சிருக்காதேங்கோ, எதுக்கு சொல்லுறன் எண்டா, எண்ட வீட்டிலையும் நான் தான் 3 நேர சமையல், உடுப்பு தோய்கிறது எண்டு, அதுதான். உங்கட கதையை கேட்க கொஞ்சம் சந்தோசமா இருக்கு.

சோழியன்: அதைவிட அண்ணா , ஏனாம் ஹம் கோயில்ல தர்சனம் காரர்ட கடைக்க சனம் பெரிசா குவியல்லையாம்??

சாத்திரி: ஓமப்பா, நம்ம சனத்துக்கு எதாச்சும் ஓசியில குடுத்தால் அங்கதனா போவங்க,

சோழியன்: என்னண்ணை சொல்லுறியள்? அப்ப தீபம் காரர் பஞ்சாமிரதமே குடுத்தவங்க?

சாத்திரி: இல்லை சோழியா, சண்டிவிக்காரர் நம்ம சனத்திண்ட விக்னசை பயன் படுத்தி, ஒரு வருச சந்தா எடுத்தால், ஒரு ரெக்கோடர், ரெலிபோன் புளுரூத் ஹெட் செட் பிறி எண்டு கூவி கூவி வித்தாங்களா, அப்ப நம்ம சனமும் மனசால கணக்கு பார்த்துட்டு அங்க அதை வாங்க நீ பிடி நான் படி எண்டு ஒரே அமளி துமளி.

சோழியன்: சில சனம் பேசிச்சுதாமே தர்சனத்தை?

சாத்திரி: நல்லா இருந்தால் போற்றுவதும், தவறி விழுந்தால் தூற்றுவதும் தான நம்ம இனம்.... சோழிய கொஞ்சம் பொறுங்க வாறன், புட்டு அவிஞ்சுட்டுது போல இறக்கி வைச்சுட்டு வாறன்.... வேனுமெண்டா அங்கால தூயவன் சகோதரிகளோட கதைச்சுக்கொண்டு இருக்கிறன், கொஞ்சம் நேரம் நீங்களும் கதைங்க, இந்தா வந்துடுறன்...

சாத்திரி: very busy (online stuts) :P

  • கருத்துக்கள உறவுகள்

வேனுமெண்டா அங்கால தூயவன் சகோதரிகளோட கதைச்சுக்கொண்டு இருக்கிறன், கொஞ்சம் நேரம் நீங்களும் கதைங்க

:angry: :angry: :rolleyes::rolleyes: :angry: :angry: :D:( :angry: :angry:

Edited by தூயவன்

ஒரு பேப்பரை இப்ப லண்டனிலை கடைகளிலை பாக்க ஏலாமல் இருக்கு... கழுதை கரைஞ்சு கட்டெறும்பு ஆன கதை போல... நேர பற்றாக்குறையாலை இணையத்திலையும் படிக்கிறது முடியுறது இல்லை...

அட பேப்பர் இருந்தால் வழமை போல நிலக்கீழ் ரயிலிலை போகேக்கை படிக்கலாம் எண்டு பாத்தால் கிடைக்கிறதே இல்லை... ஆனா Newslanka எல்லா இடத்திலையும் கிடைக்குது... ஈழமுரசும் கிடைக்கிறதுதான் குறை சொல்லக்கூடாது.....!

:rolleyes::rolleyes: :angry: :angry: :D:( :angry:

பொழுது போகாட்டால்....! தூயவனின் சகோதரிகளோடை கதையுங்கோ எண்டு சொல்லுறதுக்கு சாத்தூக்கு என்ன துணிவு....! :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட MSN செற் பரவாயில்லாமல் இருந்தது.

சாத்திரிக்கு ஊர்வம்பு கதைக்கிறது எண்டால் கொள்ளைப்பிரியம?

சாத்திரீீீீீீீ!!! ஒரு பேப்பரிலபோட்டு ஆர் ஆர் வீட்டை தேடிவந்து உதைக்கப் போறாங்களோ தெரியலையே... இது நல்லாயா இருக்கு?

சபேசன்! தமிழ் முறைப்படி பஞ்சாபி உடுக்குறது மாதிரி.. இதுவும் தமிழ் முறைப்படி கலியாணம்.

டண்ணுக்கு நக்கல் கூடிட்டுது.. வேலையே சமையல் வேலை.. அதுக்கை நின்றுட்டு வீட்டிலையும் சமையல்னா... சோழியான் தலையில சமைடான்னு ஆழமாயா எழுதியிருக்கு.. :rolleyes: எண்டாலும் சாத்திரியை அண்ணை ஆக்கினதுக்கு நிச்சயமா 'டண் வெரிகுட் போய்'னு சொல்லத்ததான் வேணும்! :rolleyes:

எம்எஸ்என்னை பிரயோசனமா பாவிப்பது சோழியான் ஒருத்தன்தான்னு சனம் பேசுது.. அதில நீங்க குளிர்காயாதீங்க தூயவன்.. :P :P

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

எம்எஸ்என்னை பிரயோசனமா பாவிப்பது சோழியான் ஒருத்தன்தான்னு சனம் பேசுது.. அதில நீங்க குளிர்காயாதீங்க தூயவன்..

நீங்கள் அதிக நேரம் எம் கூடவும் எம்எஸ்என்னில் இருந்து கதைக்கின்றதை வைச்சுத் தான் சொல்லுகின்றேன் அண்ணை! :rolleyes::rolleyes:

பொழுது போகாட்டால்....! தூயவனின் சகோதரிகளோடை கதையுங்கோ எண்டு சொல்லுறதுக்கு சாத்தூக்கு என்ன துணிவு....!

அது தானே! அவரின் பொழுது போறதற்கு நாங்களா கிடைச்சோம். :angry: :angry:

பொழுது போகாட்டால்....! தூயவனின் சகோதரிகளோடை கதையுங்கோ எண்டு சொல்லுறதுக்கு சாத்தூக்கு என்ன துணிவு....! :angry: :angry: :angry:

தூயவன், சகோதரிகள்... சாத்ஸ் இடைல கமா போட மறந்துட்டாரு... :P

ஹாஹா டண் அசத்திட்டீங்க.

நல்லாக எம் எஸ் என் ல கதைக்கிறீங்க, ரைப் பண்ணியா இல்லை வொய்ஸ் லயா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:angry: :angry: :rolleyes::lol: :angry: :angry: :(:( :angry: :angry:

hehe

Edited by Ganga

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நேரச்சமயலே பெரும் பாடா இருக்கு. இதுல 3 நேரச்சமயலா :rolleyes: நம்ம பாடு பறவாய் இல்லைப்போல :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

he he நல்லா இருக்கு.. எப்ப பார்த்தாலும் எம் எஸ் என் இல பிசி என்று போட்டு கொண்டு சமையல் பத்தியா கதைக்கிறனீங்க.. இது எனக்கு தெரியாமல் போச்சே.. :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொழுது போகாட்டால்....! தூயவனின் சகோதரிகளோடை கதையுங்கோ எண்டு சொல்லுறதுக்கு சாத்தூக்கு என்ன துணிவு....! :angry: :angry: :angry:

அய்யா சாமி அது நான் எழுதினது இல்லை சாமீ டண்எழுதினது சாமி என்னை வம்பிலை மாட்டாதீங்க சாமி

சாத்திரீீீீீீீ!!! ஒரு பேப்பரிலபோட்டு ஆர் ஆர் வீட்டை தேடிவந்து உதைக்கப் போறாங்களோ தெரியலையே... இது நல்லாயா இருக்கு?

சபேசன்! தமிழ் முறைப்படி பஞ்சாபி உடுக்குறது மாதிரி.. இதுவும் தமிழ் முறைப்படி கலியாணம்.

டண்ணுக்கு நக்கல் கூடிட்டுது.. வேலையே சமையல் வேலை.. அதுக்கை நின்றுட்டு வீட்டிலையும் சமையல்னா... சோழியான் தலையில சமைடான்னு ஆழமாயா எழுதியிருக்கு.. :rolleyes: எண்டாலும் சாத்திரியை அண்ணை ஆக்கினதுக்கு நிச்சயமா 'டண் வெரிகுட் போய்'னு சொல்லத்ததான் வேணும்! :D

எம்எஸ்என்னை பிரயோசனமா பாவிப்பது சோழியான் ஒருத்தன்தான்னு சனம் பேசுது.. அதில நீங்க குளிர்காயாதீங்க தூயவன்.. :P :P

சோழியன் எனக்கு நீண்ட நாள் ஆசை இப்ப நிறை வேறிட்டுது அடி விழுந்ததும் எனக்கு மெயில் போடுங்கோ இல்லாட்டி வீடியோ சாட்டிலை வந்து எங்கையெங்கை அடி விழுந்திருக்கெண்டு காட்டுங்கோ அப்பதான் எனக்கு நிம்மதி :lol::(:(

Edited by sathiri

அய்யா சாமி அது நான் எழுதினது இல்லை சாமீ டண்எழுதினது சாமி என்னை வம்பிலை மாட்டாதீங்க சாமி

மனிசி முனிமாவோடையே கதைக்கவே யோசிக்கிற நீங்கள். .. தூயவன் சகோதரியளோடைகத்திக்கிறதை பற்றி சொல்லி இருப்பியள்....??? :blink::unsure::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடா........நான் நினைச்சன் எனக்குமட்டுந்தான் புட்டவிக்கிற,சோறு சமைக்கிற பிரச்சனை இருக்கெண்டு :unsure: இப்பவல்லே தெரியுது உங்கை எத்தினை பேர் அடுப்படிக்கை நிண்டு மாரடிக்கினமெண்டு ;) நல்லகாலம் உடுப்புக்கள் எல்லாம் நான் தோய்க்கிறேல்லை எல்லாம் மெசின் தான் :blink:

அப்பாடா........நான் நினைச்சன் எனக்குமட்டுந்தான் புட்டவிக்கிற,சோறு சமைக்கிற பிரச்சனை இருக்கெண்டு :unsure: இப்பவல்லே தெரியுது உங்கை எத்தினை பேர் அடுப்படிக்கை நிண்டு மாரடிக்கினமெண்டு ;) நல்லகாலம் உடுப்புக்கள் எல்லாம் நான் தோய்க்கிறேல்லை எல்லாம் மெசின் தான் :blink:

தாத்தாவை நினைகும் போது பாவமா இருகுது எல்லாருக்கு இப்படி ஒருத்தர் கிடைத்தா எப்படி இருக்கும்

:unsure: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாத்தாவை நினைகும் போது பாவமா இருகுது எல்லாருக்கு இப்படி ஒருத்தர் கிடைத்தா எப்படி இருக்கும்

:unsure: :P

தாடியும் மீசையும் வைச்சுக்கொண்டு எக்கச்சக்கமான இளிச்சவாய் போய்ஸ் திரியினம் :rolleyes: .உலகத்திலை உப்புடியான ஆக்களுக்கு பஞ்சமே வராது :P .உங்களுக்கெண்டு ஒருஅரை லூசு மாட்டாமலே போகப்போது :lol: .பெரிசாய் யோசிக்காதேங்கோ :lol:

தாடியும் மீசையும் வைச்சுக்கொண்டு எக்கச்சக்கமான இளிச்சவாய் போய்ஸ் திரியினம் :unsure: .உலகத்திலை உப்புடியான ஆக்களுக்கு பஞ்சமே வராது :P .உங்களுக்கெண்டு ஒருஅரை லூசு மாட்டாமலே போகப்போது :( .பெரிசாய் யோசிக்காதேங்கோ :lol:

ஆமாம் தானே எல்லா இழித்த வாய் தானே அது சரி.................தாத்தா என்னுமே தன்ட உலகத்திலே இருகிறாரு :P

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான் கல்யாணம் கட்டியும் யார் பெரியது என்று அடிபட்டு சந்தோசமில்லாமல் இருக்கினம். விட்டுக் கொடுத்து நடந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான் கல்யாணம் கட்டியும் யார் பெரியது என்று அடிபட்டு சந்தோசமில்லாமல் இருக்கினம். விட்டுக் கொடுத்து நடந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

உண்மைதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5 வருசத்திற்கு பிறகு தூசு தட்டிய கந்தப்புவிற்கு நன்றிகள். பி்ள்ளைகளை வெளிநாட்டில் அடித்து வளக்கவேணும் என வாதாடுபவர்களிற்கு இந்த குடும்பமும் ஒரு உதாரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.