Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஐ.நா மனித உரிமைப் பேரவையின் காணொளி! - அமைச்சர் தினேஸ் கடும் எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஊரில் மிச்சம் இருக்கும் தமிழ் இளைஞ்ர்களை இல்லாமல் செய்வதற்கு ஏற்பாடு செய்கிறீர்கள் போல 🙃

போர் முடிவுக்கு வந்து 12 வருடங்கள் கழிந்த பின்னரும் நான் சொல்லித்தான் சிங்களத்துக்கு இந்த விடயம் தெரியவரப்போகிறது என்ற உங்களது சிங்களம் பற்றிய கணிப்பு வார்த்தை இல்லை சகோதரி எழுத?

  • Replies 66
  • Views 4.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

போர் முடிவுக்கு வந்து 12 வருடங்கள் கழிந்த பின்னரும் நான் சொல்லித்தான் சிங்களத்துக்கு இந்த விடயம் தெரியவரப்போகிறது என்ற உங்களது சிங்களம் பற்றிய கணிப்பு வார்த்தை இல்லை சகோதரி எழுத?

விசுகர்! கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கிற ஆக்கள் இஞ்சை இருக்கினம்.
வெளிப்படையாக எழுதுகின்றோம். அது சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பகலவன் said:

இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு படுகொலைசெய்யப்படிருந்தமை

வடக்கை இராணுவம் கைப்பற்றியபின் வடக்கில்  மறைந்திருந்த பல போராளிகள் காட்டிக்கொடுக்கப்பட்டும், தேடுதல் மூலமும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இதில் பல அனுபவம் நிறைந்த போராளிகளும், தளபதிகளும் கொல்லப்பட்டிருந்தனர் என நினைக்கும் போது நெஞ்சு கனக்கிறது. அவர்களின் மறைந்த வாழ்வு, உணவு, தண்ணீர் தட்டுப்பாடு  பல பிரச்சனைகள் மத்தியிலும் நம்பிக்கையுடன் இருந்தார்கள். அதைவிட ஒட்டுக்குழுக்களின் அட்டகாசம்.  திறந்த சிறைச்சாலையில் பயணக் கட்டுப்பாடுகளை போட்டு, கேட்போர் இல்லாமல் வீதியில் சுடப்பட்டு  சரிந்த இளைஞர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

வடக்கை இராணுவம் கைப்பற்றியபின் வடக்கில்  மறைந்திருந்த பல போராளிகள் காட்டிக்கொடுக்கப்பட்டும், தேடுதல் மூலமும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இதில் பல அனுபவம் நிறைந்த போராளிகளும், தளபதிகளும் கொல்லப்பட்டிருந்தனர் என நினைக்கும் போது நெஞ்சு கனக்கிறது. அவர்களின் மறைந்த வாழ்வு, உணவு, தண்ணீர் தட்டுப்பாடு  பல பிரச்சனைகள் மத்தியிலும் நம்பிக்கையுடன் இருந்தார்கள். அதைவிட ஒட்டுக்குழுக்களின் அட்டகாசம்.  திறந்த சிறைச்சாலையில் பயணக் கட்டுப்பாடுகளை போட்டு, கேட்போர் இல்லாமல் வீதியில் சுடப்பட்டு  சரிந்த இளைஞர்கள்.

அண்ண,

நான் இஞ்ச கனக்க எழுத விரும்புறதில்ல. கப்பலால, காயப்பட்டு வந்த ஆக்களில கன பொடியளுக்கு என்ன நடந்தது எண்டும் அதுக்கு முன்னுக்கு நிண்டு எல்லாத்தையும் செய்தது யார் யார் எண்டு எழுதினா கன ஆக்கள் பின்னங்கால் புறடியில அடிபட ஓடோணும் கண்டியளோ. வவுனியா தடுப்பு முகாமுக்க என்ன நடந்தது எண்டும் எல்லாருக்கும் தெரியும். 

அதனால இஞ்ச ஒட்டுக் குழுக்களுக்கு வரிஞ்சுகட்டிக் கொண்டு நிக்கிறவ கொஞ்சம் நிதானிச்சு நடக்கிறது நல்லம் எண்டு நினைக்கிறன்.

வம்புடன்...

டவுட்டுக் கந்தசாமி.😏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கப்பலால, காயப்பட்டு வந்த ஆக்களில கன பொடியளுக்கு என்ன நடந்தது எண்டும் அதுக்கு முன்னுக்கு நிண்டு எல்லாத்தையும் செய்தது யார் யார் எண்டு எழுதினா கன ஆக்கள் பின்னங்கால் புறடியில அடிபட ஓடோணும் கண்டியளோ

தங்களை விட்டு வெளியேற வேண்டாம் என்று கதறிய மக்களின் கோரிக்கைகளையும் நிராகரித்து விட்டு, அரசின் வேண்டுகோளுக்கிணங்க வெளியேறினவை, காயப்பட்டவையை ஏற்ற வந்தவையாம். தமது தவறுகளை மறைத்து,  அரசின் வேண்டுகோளுக்கிணங்க கதையை எழுதலாம். மக்களோடு கலந்த வி. முரளிதரனின் ஆட்கள், புலிகளைப்போல் மக்களிடையே உலாவி புலிகளுக்கெதிராக இராணுவத்தோடு செயற்பட்டு, மக்கள் பதுங்கு குழிக்குள் இருந்துவிட்டிடு ஷெல் 
 ஓய்ந்ததும்  இயற்கை கடனுக்காக, தண்ணீர் எடுக்க வெளியேறும்போது அந்தந்த இடங்களுக்கு ஷெல் அடித்து பொதுமக்களை கொன்று குவிக்க உதவியது ஒட்டுக்குழு. தடுப்பு முகாமில் இருந்த மக்களை புலிகளுக்கெதிராக போதனை செய்து அனுப்பியது ஒட்டுக்குழுவும், இராணுவப்புலனாய்வுக்குழுவும்.  விசேடமாக புலிகளின் கட்டுபாட்டில் இருந்து வந்த வைத்தியர்கள் கொடுத்த செய்தி:  புலிகளின் கட்டுபாட்டில் இருந்தபோது, இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்தபோது, நாட்டை விட்டு வெளியேறிய பின் கொடுத்த தகவல். தமிழ் பாராளுமன்ற உறுப்பினரின் தகவல். இதுவும் அங்கிருந்து வெளியேறியவர்கள் சொன்ன தகவல் தான் நம்புங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

காய்த்த மரத்திற்குத்தான் கல்லெறி விழும். இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கும் மரத்திற்கு கல்லெறிவதால் பயனென்ன?

  • கருத்துக்கள உறவுகள்

 மக்கள் கூடியிருக்கும் இடத்திற்கு ஷெல் அடித்து காயப்பட்டவர்களை உறவினர்  தங்கள் தோள்களில் சுமந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்வரை காத்திருந்து, காயப்பட்டவர்களை கொண்டுசென்றவர்களையும் குறி வைத்து வைத்தியசாலைக்கு ஷெல் அடித்து கொன்று குவித்தவன்,  காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாது என வைத்திய சாலைகளையே தரைமட்டமாக்கியவன்,  காயப்பட்டவர்களை ஏற்றி செல்ல கப்பல் அனுமதித்தவனாம். காயப்பட்டவர்களை தடுப்பதால் புலிகளுக்கு என்ன நன்மை? புலிகளில் சிலரே சரணடைந்த போது மக்களை ஏன் தடுக்கிறார்கள்? கிறிஸ்தவ பாதிரியாரோடு சரணடைந்தவர்கள் எங்கே? விசாரித்துப்போட்டு அனுப்புகிறோம் என்று  உறவினர்களிடம் இருந்து பிரித்தெடுத்து கொண்டு போனவர்களின் நிலை என்ன? செஞ்சிலுவைச் சங்கம் பதில் சொல்லுமா?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:

போர் முடிவுக்கு வந்து 12 வருடங்கள் கழிந்த பின்னரும் நான் சொல்லித்தான் சிங்களத்துக்கு இந்த விடயம் தெரியவரப்போகிறது என்ற உங்களது சிங்களம் பற்றிய கணிப்பு வார்த்தை இல்லை சகோதரி எழுத?

சீ சீ  நீங்கள் சொல்லித் தான் சிங்களவனுக்கு தெரிய வேண்டியதில்லை ...ஆனால் நீங்கள் செய்வது உசுப்பேத்தல் தூங்கி கொண்டு இருந்தவனை தட்டி எழுப்புதல் 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் நடிக்கிறது.

சீனாவின் தயவில் unsc மற்றும் தடைகள் போன்றவற்றை எதிர்கொள்வதற்கு என்ற எண்ணத்தில்  சிங்களம் ஆயத்தம்.

இந்த எதிர்ப்பின் மூலம் சிங்களத்தின், பெறத்துக்கான ஓர் இடைவெளியை உருவாக்குவது சிங்களத்தின்  யுக்தி.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பகலவன் said:

என்னால் சில கருத்துகளை மேற்கோள் காட்ட முடியவில்லை என்பதால் தனித்து எழுதுகிறேன்.

விசுகு அண்ணா, 

ஆயுதங்கள் தொடர்பான இதே கேள்விகள் மக்கள் மத்தியில் இருந்தன. எங்களிடமும் கேட்கப்பட்டன. மக்களிடம் ஆயுதங்கள் தொடர்பான புரிதல் இன்மை, புலிகள் பற்றிய மாய கற்பனைகள் கூட காரணமாக இருக்கலாம்.

இவை புலிகளாலேயே இராணுவ புலனாய்வுத்தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். (புரிதல் இன்மை/மாய தோற்றம்).

எதிரியின் படை வலிமையை (ஆள் மற்றும் ஆயுத) தெரிந்து கொள்வது தான் போரில் முதல் உக்தி. அதை தடுக்க புலிகள் பலவாறு முயன்றனர். சில இணையதளங்களை கூட மிகைப்படுத்தலுக்காக பயன்படுத்தினர்.

சரி, அப்போ ஆயுத புரிதலுக்காக மட்டும்  சிலவற்றை சொல்கிறேன். சுடுகருவிகளும் குண்டுகளும்/வெடிபொருட்களும்/எறிகணைகளும் வேறு வேறானவை. போதுமான சுடுகருவிகள் ( இயந்திர துப்பாக்கிகள் முதல் நீண்ட தூர ஆட்டிலெறிகள் வரை) இருந்தாலும் அவற்றை பயன்படுத்த குண்டுகளுக்கு / வெடிமருந்துகளுக்கு / எறிகணைகளுக்கு பற்றாக்குறை இருந்தது. 

சில உள்ளூர் தயாரிப்பு எறிகணைகள் துல்லியமாக தாக்க தவறின. கிபிர்களில் இருந்து விழும் வெடிக்காத குண்டுகளில் இருந்து வெடிமருந்துகள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். மின்சார விளக்குத்தூண்களில் இருந்த இரும்புக்கம்பிகளை எடுத்து துருவி Spring ஆக மிதிவெடிகளில் பயன்படுத்த தள்ளப்பட்டோம். நீண்டதூர எறிகணைகளின் சுடுகருவிகளை எண்ணை தடவி புதைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம். காலவதியான விமான எதிர்ப்பு ஏவுகணைகளை உலங்கு வானூர்திக்கு கூட எதிராக பயன்படுத்த முடியவில்லை. கடலில் பயன்படுத்தும் ஆயுதங்களையும் சில விமான எதிர்ப்பு கனரக ஆயுதங்களையும், மொக்கன், சாரை என்ற பெயர்களில் தரைத்தாக்குதல்களில் பயம் காட்ட பயன்படுத்தமுடிந்ததே தவிர அவற்றை தொடர்சியாக பயன்படுத்தமுடியவில்லை.

கடைசிகளம் கடற்கரையை அண்மித்து இருந்தமையால் சில நீண்ட தூர ஆட்டிலெறிகளை மண் அணைகளில் ஏற்றி கிடையாக வேதாளம் என்ற பெயரில் கூட பயன்படுத்தி இருக்கிறோம்.

தொடர்ச்சியான இடப்பெயர்வில் குறைந்த நிலப்பரப்பில் ஆட்டிலெறி எறிகணைகளை நகர்த்தும்போது பல விமான தாக்குதலிகளினால் அழிக்கப்பட்டன. அங்கிருந்த போராளிகளின் தலைமைமிதான பற்றும் மக்களைமீதான பற்றுமே குறைந்த வளத்துடன், உண்ண உணவுக்கூட இல்லாமல் மே நடுப்புகுதிவரை போராட்டத்தை கொண்டு சென்றது. 

இதை நீங்கள் புரிந்துகொள்ளுவீங்கள் என்று நம்புகிறேன் 

 

புலத்தில் இது சார்ந்து  உழைத்ததால்

வெளியிலிருந்து வருகைகள் அழிக்கப்பட்டு முற்றுகை இறுகிய பின்

குண்டுகளுக்கு / வெடிமருந்துகளுக்கு / எறிகணைகளுக்கு பற்றாக்குறை   தட்டுப்பாடுகள் பற்றி நானும் அறிவேன் தம்பி பகலவன்.

நான் இங்கே  பதிந்த  கருத்து எனது அண்ணருடையது

அதில் எந்த  கலப்படத்தையும் நான் செய்யவிரும்பவில்லை.

அவரது  கருத்தை  அவ்வாறே  பதிந்தேன்.

அதே நேரம் இறுதிநேரம் வரை தலைவரும் புலிகளும் ஏதாவது செய்வார்கள்

மீள்வார்கள்

எங்காவது  பெரும் தாக்குதல் ஒன்று நடக்கும்

அதற்கான சக்தியை  புலிகள் தக்க வைத்திருக்கிறார்கள் என்ற கருத்து 

சாதாரண  மக்கள் மத்தியில்  மாத்திரமல்ல

போராளிகள் தரப்பிலும் இருந்ததும் உண்மை தானே????

நன்றி தம்பி கருத்துக்கும் நேரத்துக்கும்.

வாழ்க  வளமுடன்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2021 at 06:22, Maruthankerny said:

தமிழர்கள் சீனாவுடன் இணைவதும் ஆதரவது தருவதும்தான் எதிரகால இருப்புக்கு 
வலி சமைக்கும்... இனி இந்தியா தந்தை நாடு தாய்நாடு  என்ற பல்லவிகளை மறந்துவிட்டு 
சீனனுக்கு தேவையான உதவிகளை செய்து சீனாவுக்கு ஆதரவாக இருப்பதே நன்று. 

சீனாவை இனி இலங்கையிலிருந்து அகற்றமுடியாது, அத்துடன் அவர்கள் இலங்கை அரசிற்கு உதவுவதே இலங்கையில் கால்பதிக்கவே என நிறையவே செய்திகள் உள்ளன. அப்படியிருக்க எப்படி தமிழர்களுக்கு சீனா உதவும்? 

சில நேரங்களில் சீனா அதிகளவு இலங்கையில் ஆதிக்கம் செலுத்த செலுத்த மேற்குலகமும் இந்தியாவும் தமிழர்களின் பிரச்சனையை தீர்க்க முற்படும் என நினைக்கிறீர்களா?

 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

சீனாவை இனி இலங்கையிலிருந்து அகற்றமுடியாது, அத்துடன் அவர்கள் இலங்கை அரசிற்கு உதவுவதே இலங்கையில் கால்பதிக்கவே என நிறையவே செய்திகள் உள்ளன. அப்படியிருக்க எப்படி தமிழர்களுக்கு சீனா உதவும்? 

சில நேரங்களில் சீனா அதிகளவு இலங்கையில் ஆதிக்கம் செலுத்த செலுத்த மேற்குலகமும் இந்தியாவும் தமிழர்களின் பிரச்சனையை தீர்க்க முற்படும் என நினைக்கிறீர்களா?

 

நல்ல பார்வை.

அதிகாரம் உள்ள தரப்போடுதான் இன்னொரு நாடு ஒப்பந்தங்களைச் செய்யும். அப்படிப்பார்த்தால் இலங்கையில் இன்று அதிகாரத்துடனும், பலத்துடனும் இருப்பது சிங்களவரே. ஆகவேதான் சீனா சிங்களவரோடு நிற்கிறது. சிங்களவரைத் தாண்டி தமிழருக்கு சீனா உதவுவதால் பிரதிபலனாக எதனை அடையமுடியும்? அதிகாரம் இல்லதவர்களிடமிருந்து மீள எதனைப் பெற்றுக்கொள்ளமுடியும்?  ஆகவே, சீனாவை தமிழர்கள் ஆதரிப்பதென்பது பயனற்றது, சீனாவும் அதனை ஒரு துரும்பாகவேனும் மதிக்கப்போவதில்லை.

மறுபுறத்தில், தமிழர்கள் சீனாவை நோக்கிப் போகிறார்கள் என்றால், தமிழர்களின் அவலங்களைப் பாவித்து தமது பிராந்திய நலன்களைக் காத்துக்கொள்ளத் துடிக்கும் இந்திய மேற்குலகக் கூட்டு தமிழரை இனிமேல் ஏறெடுத்தும் பார்க்க விரும்பப்போவதில்லை. இதனால், சிங்களவருக்கான உதவிகளை சீனாவும், இந்திய மேற்குலகும் ஏட்டிக்குப் போட்டியாக வழங்குவதன் மூலம் இலங்கையைத் தங்கள் தங்கள் பக்கம் சாய்க்கவே விரும்புவார்கள். இதனால் இலங்கை மேலும் பலமடைவதோடு, தமிழர்மீதான அதனது அடக்குமுறை இன்னும் இன்னும் கேட்பாரின்றி அதிகரிக்கும். 

இந்திய மேற்குலகக் கூட்டு இன்று தமிழரின் அவலங்களை தமது நண்மைக்காகப் பாவிக்க விரும்பினால், நாமும் அவர்களை எமது நிரந்தத் தீர்வொன்றிற்காக அழுத்தவேண்டும். எமக்கு நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுத்தாருங்கள், உங்களது பிராந்திய நலன்களுக்காக எம்மைப் பாவிப்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்று நாம் பேரம்பேசுதலே இப்போது செய்யவேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை,  இந்திய - மேற்குலக கூட்டிடமிருந்து விலகி சீனாவினை நோக்கிச் செல்வதே தமிழருக்கு தேவையானது. அதிகரித்துவரும் சீன ஆதிக்கத்தினைத் தடுக்க இந்திய - மேற்குலகக் கூட்டிற்கு தமிழரின் தேவை முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது அதிகமாகத் தேவைப்படும் சூழ்நிலையொன்று உருவாகவேண்டும். இதுவே இதுவரை காலமும் பேரம்பேசும் சக்தியின்றி எடுப்பார் கைப்பிள்ளையாய் நலிந்துவாழும் தமிழருக்கு பேரம்பேசும் சக்தியினைக் மீளக் கொடுக்கும்.

கடந்த காலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களை இக்கூட்டின் காலடியில் போட்டுவிட்டு, ஐ நா விலிருந்து வெறுங்கையாய்த் திரும்பிவந்த நிகழ்வுகள் போல் அல்லாமல், "எமக்குத் தேவை இதுதான், அதை எடுத்துத் தாருங்கள், நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்" என்று பேரம்பேசும் அரசியல்த் தலைமை எம்மில் உருவாகவேண்டும். அதற்கு முதலில் எமக்குள் ஒருமித்த கருத்தும், வேலைத்திட்டமும் மிக அவசியம். "பொத்துவில் முதல் பொலிகண்டி வரை" ஒரு சின்ன முயற்சியே. இது தொடர்ந்தும் பேரெழுச்சியாக மாற்றமடைய வேண்டும். 

பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரஞ்சித் said:

மறுபுறத்தில், தமிழர்கள் சீனாவை நோக்கிப் போகிறார்கள் என்றால், தமிழர்களின் அவலங்களைப் பாவித்து தமது பிராந்திய நலன்களைக் காத்துக்கொள்ளத் துடிக்கும் இந்திய மேற்குலகக் கூட்டு தமிழரை இனிமேல் ஏறெடுத்தும் பார்க்க விரும்பப்போவதில்லை

நான் நினைக்கவில்லை, அப்படி ஒரு நிலை வருமென.. இந்து சமூத்திரத்தில் தங்களது ஆதிக்கம் குறைவதை இலகுவில் ஏற்கமாட்டார்கள்.. 

 

20 minutes ago, ரஞ்சித் said:

இலங்கை,  இந்திய - மேற்குலக கூட்டிடமிருந்து விலகி சீனாவினை நோக்கிச் செல்வதே தமிழருக்கு தேவையானது. அதிகரித்துவரும் சீன ஆதிக்கத்தினைத் தடுக்க இந்திய - மேற்குலகக் கூட்டிற்கு தமிழரின் தேவை முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது அதிகமாகத் தேவைப்படும் சூழ்நிலையொன்று உருவாகவேண்டும். இதுவே இதுவரை காலமும் பேரம்பேசும் சக்தியின்றி எடுப்பார் கைப்பிள்ளையாய் நலிந்துவாழும் தமிழருக்கு பேரம்பேசும் சக்தியினைக் மீளக் கொடுக்கும்.

கடந்த காலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களை இக்கூட்டின் காலடியில் போட்டுவிட்டு, ஐ நா விலிருந்து வெறுங்கையாய்த் திரும்பிவந்த நிகழ்வுகள் போல் அல்லாமல், "எமக்குத் தேவை இதுதான், அதை எடுத்துத் தாருங்கள், நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்" என்று பேரம்பேசும் அரசியல்த் தலைமை எம்மில் உருவாகவேண்டும். அதற்கு முதலில் எமக்குள் ஒருமித்த கருத்தும், வேலைத்திட்டமும் மிக அவசியம். "பொத்துவில் முதல் பொலிகண்டி வரை" ஒரு சின்ன முயற்சியே. இது தொடர்ந்தும் பேரெழுச்சியாக மாற்றமடைய வேண்டும். 

பார்க்கலாம்

அப்படியொரு பேரம்பேசும் சக்தி வருமா? 

காலம்தாழ்த்தினாலும், இந்த சிறுமுயற்சிக்கு பலன் கிடைக்காமல் போகாது என நம்புகிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பிரபா சிதம்பரநாதன் said:

நான் நினைக்கவில்லை, அப்படி ஒரு நிலை வருமென.. இந்து சமூத்திரத்தில் தங்களது ஆதிக்கம் குறைவதை இலகுவில் ஏற்கமாட்டார்கள்.. 

நிச்சயமாக இல்லை பிரபா. தமது கையைவிட்டு இப்பிராந்தியம் சீனாவின் கைகளுக்குள் போவதை அவர்கள் விரும்பப்போவதில்லை.

 

1 minute ago, பிரபா சிதம்பரநாதன் said:

அப்படியொரு பேரம்பேசும் சக்தி வருமா? 

காலம்தாழ்த்தினாலும், இந்த சிறுமுயற்சிக்கு பலன் கிடைக்காமல் போகாது என நம்புகிறேன்..

சூழ்நிலையொன்று உருவாகிவருகிறது. அதனை எமக்குச் சாதகமானமுறையில், பேரம்பேசும் துரும்பாக மாற்றக்கூடிய தலைமையே இப்போது தேவை. குறைந்த ஒருமித்த தலைமையாவது வேண்டும். தமிழர்கள் பிரிந்திருப்பதே பேரம்பேசலினைப் பலவீனமாக்கி, எதிரிக்கு எமக்குள் மீண்டும் பிளவுகளை ஏற்படுத்த சந்தர்ப்பத்தை அளித்துவிடும்.

முடிந்தால் பொத்துவிலில் இருந்து பொலிகண்டிவரை என்கிற பிரதான திரியில் அஹஸ்த்தியன் தற்போது இணைத்திருக்கும் காணொளியைப் பாருங்கள். அது ஒரு செய்தியைச் சொல்கிறது. இங்கு காணும் மக்கள் எழுச்சி புலிகளின் காலத்திற்குப் பிறகு இப்போதுதான் தெரிகிறது. 

தூரத்தில் நம்பிக்கையின் ஒளியொன்று மின்மினிப் பூச்சிபோலத் தெரிகிறது. அது சுடர்விட்டு எரியவேண்டும். எரிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

எமக்கு நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுத்தாருங்கள்,

இந்தியாவில். தமிழர்கள். (தமிழ்நாடு) இருக்கும் வரை இப்படி ஒரு தீர்வு கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை" ஒரு சின்ன முயற்சியே. இது தொடர்ந்தும் பேரெழுச்சியாக மாற்றமடைய வேண்டும். 

இதில் வந்த தலைவர்களை ஒர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதன். மூலம் மிண்டும் பல பிரிவுகளாகப் பிரிககமுடியும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.