Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கு தள்ளுபடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கு தள்ளுபடி!

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கு தள்ளுபடி!

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில், முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து அரசிதழில் வெளியிடக்கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முருகனுக்கு அழகு, திறமை, அறிவு என பல பெயர்கள் உள்ளதுபோல், தமிழ் கடவுள் என அழைப்பதை எவ்வாறு அரசிதழில் வெளியிட முடியும், என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பல மொழி, மதம், நம்பிக்கையை கொண்ட மக்கள் வசித்து வரும் சூழலில், இதுபோல் அறிவிப்பது இயலாதது என தெரிவித்த நீதிபதிகள், தேசத்தின் மதச்சார்பின்மையை பாதிக்கும் என்பதால், அரசிதழில் வெளியிட உத்தரவிட முடியாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

http://athavannews.com/முருகனை-தமிழ்-கடவுளாக-அற/

  • Replies 98
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான தீர்ப்பு 

சிறந்த தீர்பபை வழங்கிய நீதிபதிகளுக்கு பாராட்டுக்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

சிறப்பான தீர்ப்பு 

34 minutes ago, tulpen said:

சிறந்த தீர்பபை வழங்கிய நீதிபதிகளுக்கு பாராட்டுக்கள். 

தவறான தீர்ப்பு. தமிழ்க் கடவுள், முருகனை.... 🙏🏽

ஆரிய வந்தேறிகள், உரிமை கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது.

சுப்றீம் கோட்டுக்கு போய்... இந்த வழக்கை வென்று காட்டுறம். 👍🏼

28 minutes ago, தமிழ் சிறி said:

தவறான தீர்ப்பு. தமிழ்க் கடவுள், முருகனை.... 🙏🏽

ஆரிய வந்தேறிகள், உரிமை கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது.

சுப்றீம் கோட்டுக்கு போய்... இந்த வழக்கை வென்று காட்டுறம். 👍🏼

நல்லூர் முருகனுக்கும் ஆரிய முறைப்படி தானே வழிபாடு நடைபெறுகிறது. கந்த புராணம் ஆரிய நூலின் பொழிபெயர்ப்பு தானே. 

ஆனால் நீதிபதிகள் கூறியது மதச்சார்பின்மை பற்றி.  இந்துத்துவாவை அரச மதமாக திணிக்க முற்படும் நாட்டில் நீதிபதிகள் துணிச்சலாக இதை அறிவித்த‍தால் பாராட்டினேன். அவ்வளவு தான். 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, tulpen said:

ஆனால் நீதிபதிகள் கூறியது மதச்சார்பின்மை பற்றி.  இந்துத்துவாவை அரச மதமாக திணிக்க முற்படும் நாட்டில் நீதிபதிகள் துணிச்சலாக இதை அறிவித்த‍தால் பாராட்டினேன். அவ்வளவு தான். 

மதச்சார்பின்மையா? இதுக்கும் அதுக்கும் என்ன தொடர்பு?

சும்மா சகலத்தையுமே விட்டுப்போட்டு இருக்க முடியுமா?

தமிழன் கறியை பறித்து, இந்திய கறி ஆக்கி, இப்ப, பிரித்தானியாவில் கேள்வி எழும்ப, முழிசிக்கொண்டு இருக்கிறார்கள்.

முருகன் தமிழ் கடவுள் இல்லை என்பதில் என்ன சந்தோசம்?

புரியவில்லை! அப்படியானால், பௌத்த தமிழனின் ஆதி இடங்களை, சிங்களவன், தனது என்று சொந்தம் கொண்டாடி வருவது சரியானதா?

Edited by Nathamuni

5 minutes ago, Nathamuni said:

மதச்சார்பின்மையா? இதுக்கும் அதுக்கும் என்ன தொடர்பு?

சும்மா சகலத்தையுமே விட்டுப்போட்டு இருக்க முடியுமா?

தமிழன் கறியை பறித்து, இந்திய கறி ஆக்கி, இப்ப, பிரித்தானியாவில் கேள்வி எழும்ப, முழிசிக்கொண்டு இருக்கிறார்கள்.

முருகன் தமிழ் கடவுள் இல்லை என்பதில் என்ன சந்தோசம்?

புரியவில்லை? அப்படியானால், பௌத்த தமிழனின் ஆதி இடங்களை, சிங்களவன், தனது என்று சொந்தம் கொண்டாடி வருவது சரியானதா?

முருகன் தமிழ்கடவுள் என்று தொண்டை கிழிய கத்திவிட்டு நல்லூர் கோவிலில் சென்று சமஸ்கிரத‍த்தில் கைகட்டி ஆரிய வழிபாடு நடத்துவதை நிறுத்தலாமே. அதை விட்டு இங்கு வந்து கறியை களவெடுத்தான். சம்பலை களவெடுத்தான் என்று அன்னதான மடங்களில் பேசும் புரளி கதைகளை விட்டால்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

முருகன் தமிழ்கடவுள் என்று தொண்டை கிழிய கத்திவிட்டு நல்லூர் கோவிலில் சென்று சமஸ்கிரத‍த்தில் . அதை விட்டு இங்கு வந்து கறியை களவெடுத்தான். சம்பலை களவெடுத்தான் என்று அன்னதான மடங்களில் பேசும் புரளி கதைகளை விட்டால்.

ஒன்று புரிந்து பேசுங்கள். அல்லது விளங்கப்படுத்துங்கள்.

சும்மா, காலம்காத்தலை, டென்ஷன் ஆகி, ஒன்றுக்கொன்று முரணாக பேசி அலம்பறை பண்ணாதேள்...

தமிழ் கடவுள், முருகனை, சிவபெருமானின் இரண்டாவது மகன், பிள்ளையாரின் தம்பி எண்டதை ஏற்றுக் கொண்டால், சமஸ்கிருதத்தினையும் ஏற்றுக் கொள்ளவேண்டியது தான். 

அதனை மறுப்பதன் முதல் படி தான் இந்த வழக்கு. சிறப்பான தீர்ப்பு என்று சொல்லிக்கொண்டே, நல்லூர் முருகன் குறித்து, எதிர் பக்கம் போய் நின்று... கைகட்டி ஆரிய வழிபாடு நடத்துவதை நிறுத்தலாமே.... என்று குதர்க்கம் பேசினால் என்ன அர்த்தமாம்?

கறி குறித்த விளக்கம் அருமை. நன்னா சொன்னேள் போங்கோ... 

7 minutes ago, Nathamuni said:

முதலாவது கருத்து நீதிபதிகளின் தீர்ப்பு என்பது அரசாணை வெளியீடு பற்றியது. அவ்வாறு அரசாணை வெளியிட முடியாது என்பது  நியாயமானது. அதனால் அதை பாராட்டினேன்.  

இரண்டாவது கருத்து, முருகன் தமிழ் கடவுள் என்று அடிக்கடி கூறுபவர்கள் அந்த முருகனுக்கு சம்ஸ்கிரகத்தில் பூசை செய்வது தவறு என்று தெரியவில்லை.   ஒருவனுக்கு ஒருவன் தமிழ் பண்பாடு என்றால் தமிழருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய தமிழ் கடவுள்  அப்படி இல்லை என்ற முரண்பாட்டை சுட்டிக்காட்ட கூடாதா? 

அரசிதழில்?

14 minutes ago, Knowthyself said:

அரசிதழில்?

அரசிதழ்  என்பது இலங்கையில் “வர்த்தமானி” என்று நினைக்கிறேன்.  அரசின் பிரகடனங்களை உத்தியோகபூர்வமாக வெளியிடும் இதழ். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

முதலாவது கருத்து நீதிபதிகளின் தீர்ப்பு என்பது அரசாணை வெளியீடு பற்றியது. அவ்வாறு அரசாணை வெளியிட முடியாது என்பது  நியாயமானது. அதனால் அதை பாராட்டினேன்.  

இரண்டாவது கருத்து, முருகன் தமிழ் கடவுள் என்று அடிக்கடி கூறுபவர்கள் அந்த முருகனுக்கு சம்ஸ்கிரகத்தில் பூசை செய்வது தவறு என்று தெரியவில்லை.   ஒருவனுக்கு ஒருவன் தமிழ் பண்பாடு என்றால் தமிழருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய தமிழ் கடவுள்  அப்படி இல்லை என்ற முரண்பாட்டை சுட்டிக்காட்ட கூடாதா? 

முதலில் நீங்கள் ஒரு புரிதலுக்கு வாருங்கள். நீங்களும் குழம்பி, அடுத்தவர்களையும் குழப்பாதீர்கள். 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

தமிழ்க் கடவுள், முருகனை.... 🙏🏽

ஆரிய வந்தேறிகள், உரிமை கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது.

சிறி அண்ணா,  தமிழர்கள் ஒரு பகுதியினர் வேறு கடவுள் அல்லாவை உரிமை கொண்டாடி  ஏற்று கொண்டிருக்கிறார்களே இன்று அல்லா தான் ஒரே ஒரு கடவுள்  கொரோனா வந்தாலும் அல்லா சொன்னபடி தான் அடக்கம் செய்வோம் எரிக்கமாட்டோம் என்றும் நிற்கிறார்களே 🤣 அப்படி நிலைமை இருக்கும் போது முருகனை மற்றவர்கள் உரிமை கொண்டாட முடியாது என்பது நியாயமா?

51 minutes ago, Nathamuni said:

முதலில் நீங்கள் ஒரு புரிதலுக்கு வாருங்கள். நீங்களும் குழம்பி, அடுத்தவர்களையும் குழப்பாதீர்கள். 🤦‍♂️

நான் தெளிவாக தான் எழுதியுள்ளேன். Friday மத்தியானமே  *****

Edited by நிழலி
ஒரு வசை வரி நீக்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

ம்... பாவம்... நல்லா இருந்த மனுசன்....  என்னத்தை சொல்ல...  🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

பல மொழி, மதம், நம்பிக்கையை கொண்ட மக்கள் வசித்து வரும் சூழலில், இதுபோல் அறிவிப்பது இயலாதது என தெரிவித்த நீதிபதிகள், தேசத்தின் மதச்சார்பின்மையை பாதிக்கும் என்பதால், அரசிதழில் வெளியிட உத்தரவிட முடியாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

உண்மையில் இதுபோன்ற விடயங்களை ஊக்குவிக்ககூடாது, ஏனெனில் ஏற்கனவே பல பிரிவுகளாகவும், பல மதநம்பிக்கைகளையும் கொண்டதாக இருக்கும் தமிழர்களை இந்த மாதிரி ஒரு கடவுளிற்கு சார்பாக தீர்ப்பு வழங்கி ஊக்குவிப்பது நல்லதல்ல..

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மையில் இதுபோன்ற விடயங்களை ஊக்குவிக்ககூடாது, ஏனெனில் ஏற்கனவே பல பிரிவுகளாகவும், பல மதநம்பிக்கைகளையும் கொண்டதாக இருக்கும் தமிழர்களை இந்த மாதிரி ஒரு கடவுளிற்கு சார்பாக தீர்ப்பு வழங்கி ஊக்குவிப்பது நல்லதல்ல..

முருகன், தமிழ் கடவுளா, இல்லையா? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

முருகன், தமிழ் கடவுளா, இல்லையா? 🤔

முருகன் தவிர வேறு தமிழ்கடவுள் இல்லையா?

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் மாரையும் "கறி" மாதிரித் தலையில் தூக்கிக் கொண்டு திரியக் கூடாது! 

வேண்டுமானால் ஒன்று செய்யலாம்: அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் உந்தக் கறி, முருகன், பிள்ளையார், இயேசு, நயந்தாரா, நித்தி, அபிநந்தன் மீசை எல்லாவற்றிற்கும் தமிழருக்கு மட்டுமே copyright இருக்கிறது என ஒரு blanket patent பதிவு செய்ய முயலலாம்! 

ஒரு பலனும் கிடைக்காது, ஆனால் யார் பலனைப் பற்றி யோசிப்பது இப்பவெல்லாம்!😂

Edited by Justin
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

முருகன் தவிர வேறு தமிழ்கடவுள் இல்லையா?

அய்யனார், கருப்பசாமி, சுடலை மாடன்?

தமிழ் கடவுள் முருகனை, பிள்ளயார் தம்பி ஆக்கினது யாருங்கோ? 

தமிழநாடு தாண்டி, முருகன் வட இந்தியாவில் யாருக்கும் தெரியாது என்பதை அறிவீர்களா?

சிவபெருமானின் இரண்டாவது மகன், பிள்ளையாரின் தம்பி என்று வட இந்தியர்கள் யாரிடமாவது சொல்லி, அவர்களது reaction பார்த்திருக்கிறீர்களா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

முதலாவது கருத்து நீதிபதிகளின் தீர்ப்பு என்பது அரசாணை வெளியீடு பற்றியது. அவ்வாறு அரசாணை வெளியிட முடியாது என்பது  நியாயமானது. அதனால் அதை பாராட்டினேன்.  

இரண்டாவது கருத்து, முருகன் தமிழ் கடவுள் என்று அடிக்கடி கூறுபவர்கள் அந்த முருகனுக்கு சம்ஸ்கிரகத்தில் பூசை செய்வது தவறு என்று தெரியவில்லை.   ஒருவனுக்கு ஒருவன் தமிழ் பண்பாடு என்றால் தமிழருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய தமிழ் கடவுள்  அப்படி இல்லை என்ற முரண்பாட்டை சுட்டிக்காட்ட கூடாதா? 

ஊரில் நல்லூரை தவிர மற்றைய முருகன் கோவில்கள் வாய்கட்டி பூசை முறை .

Edited by பெருமாள்

13 minutes ago, பெருமாள் said:

ஊரில் நல்லூரை தவிர மற்றைய முருகன் கோவில்கள் வாய்கட்டி பூசை முறை .

பதில் சொல்ல முடியாவிட்டால் இப்படி ஒரு படு பொய்யை சொல்லி விஷயத்தை முடிகலாம் என்பது உங்கள் பாணி. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

பதில் சொல்ல முடியாவிட்டால் இப்படி ஒரு படு பொய்யை சொல்லி விஷயத்தை முடிகலாம் என்பது உங்கள் பாணி. 

ஊரில் கோவில் பக்கம் போகாத கூட்டங்களுக்கு நாங்க சொல்வது பொய்யாக இருந்தால் அப்படியே இருந்துவிட்டு போகட்டும் .

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

தமிழநாடு தாண்டி, முருகன் வட இந்தியாவில் யாருக்கும் தெரியாது என்பதை அறிவீர்களா?

சிவபெருமானின் இரண்டாவது மகன், பிள்ளையாரின் தம்பி என்று வட இந்தியர்கள் யாரிடமாவது சொல்லி, அவர்களது reaction பார்த்திருக்கிறீர்களா?

அவர்களுக்கு நன்றாகவே தெரியும்..

Lord கார்த்திகேயா என என்னுடன் வேலை செய்யும் வட இந்தியர் சொல்லகேட்டிருக்கிறேன்.. கார்த்திகேயன் என்றது முருகன் இல்லையா?

ஆதி தமிழர்கள் இயற்கையையும் வழிபட்டிருக்கிறார்கள்..

ஏன் வீண் வாதம், யாராவது ஐயனாரையும் தமிழ் கடவுளாக ஏற்க சொல்லி வழக்குபோடவும்..இப்படியே ஒவ்வொரு கடவுளாக வழக்கு போட்டுக்கொண்டு போகவும்..

இங்கே அந்த நீதிபதி கூறியது பல மொழிகள், மத நம்பிக்கைகள் உடைய மக்கள் வாழும் இடத்தில் இந்த மாதிரி அறிவிப்பது சரியானது அல்ல என்பதுதான்

1 minute ago, பெருமாள் said:

ஊரில் கோவில் பக்கம் போகாத கூட்டங்களுக்கு நாங்க சொல்வது பொய்யாக இருந்தால் அப்படியே இருந்துவிட்டு போகட்டும் .

அப்ப அந்த நம்பிகையிலை தான் பொய் சொன்னீங்களா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.