Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

P2P பொலிகண்டியில் இருந்து பொத்துவிலுக்கு வந்திருந்தால் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன்! - பிள்ளையான் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரஞ்சித் said:

2010 அல்லது 2011 என்று நினைக்கிறேன். இனவழிப்புப் போர் முடிந்த ஒருவருடம் அல்லது அதற்குச் சற்று அதிகமாகக் கூட  இருக்கலாம். மட்டக்களப்பில் உயர்நீதிமன்றக் கட்டிடம் ஒன்றைத் திறந்துவைத்த அப்போதிருந்த சட்டமாதிபர் சரத் என் சில்வா  உரையாற்றியிருந்தார். அவர் குறிப்பிட்ட விடயங்கள் மிக முக்கியமானவை என்பதால் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

வடக்கு மாகாண மக்களும் மட்டக்களப்பு வாழ் மக்களும் கலாசார ரீதியிலும், சரித்திர ரீதியிலும் வேறுவேறானவர்கள். ஆகவே வடக்குத் தமிழர்களோடு மட்டக்களப்புத் தமிழர்கள் சேர்ந்துவாழத் தேவையில்லை என்றும், அதனாலேயே வடக்கும் கிழக்கும் பிரிந்து இயங்கவேண்டும் என்று தாம் கருதியதாலேயே இணைந்திருந்த இரண்டையும் பிரித்துவிட்டதாகவும் அவர் கூறினார். அதுமட்டுமல்லாமல், கிழக்கு பிரிந்திருப்பது அப்பகுதி மக்களுக்கே பிரயோசனமானதென்றும்,  கிழக்கினைக் கிழக்குத் தமிழர்களே ஆளவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஏறக்குறைய மட்டக்களப்பின் பிரசித்திபெற்ற தமிழரான நல்லையா கூட வடக்குத் தமிழரிடம் மிகத் தெளிவாக, நாம் சேர்ந்து வாழமுடியாது, கிழக்கிற்கும் வடக்கிற்கும் இருக்கும் பிரச்சினைகள் வேறு வேறானவை. உங்களுக்காக நாங்கள் போராடவியலாது. உங்களின் பிரச்சினையினை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள், எங்களுடைய பிரச்சினைகளை நாம் சிங்களவருடன் சேர்ந்து தீர்த்துக்கொள்வோம் என்று கூறியதாக படித்த நினைவு.

நான் மட்டக்களப்பில் குறைந்தது 3 வருடங்கள் தொடர்ச்சியாக வாழ்ந்திருக்கிறேன். அதற்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று தடவைகள் சென்று வந்திருக்கிறேன். அங்கிருந்த காலத்தில் எனது பட்டப்பெயர் "பாணி" (யாழ்ப்பாணி என்பது சுருக்கப்பட்டது). ஆனால், நான் இதுபற்றிக் கவலைப்பட்டது கிடையாது. நகைச்சுவைக்காகவே என்னை அழைக்கிறார்கள் என்று இருந்துவிட்டேன். இடையிடையே "எச்சில் கையால் காகம் கூடத் துரத்த மாட்டிங்கடா நீங்கள்" என்றும் கூறிச் சிரிப்பார்கள். 

ஓரிரு வருடங்களின் எனது இயற்பெயரைப் பாவிக்கத் தொடங்கிவிட்டார்கள், அவ்வப்போது செல்லமாக அடேய் பாணியென்று அழைப்பார்கள், நானும் மகிழ்வாக ஏற்றுக்கொள்வேன். இது விடுதியில் நடந்தது.

ஆனால் பாடசாலையில் (மிக்கேல் கல்லூரி) வேறுபாடு இருப்பதை உணர்ந்தேன். சிலர் வேண்டுமென்றே என்னை ஒதுக்குவதாக எனக்குத் தெரிந்தது, என்னுடன் பேசுவதை ஒரு சிலர் வேண்டுமென்றே தவிர்த்தார்கள், அவர்களின் பார்வையிலிருந்த ஏளனமே என்னைக் கூணிக்குறுக வைத்தது. நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன் என்பதைத்தவிர எனக்கும் அவர்களுக்கு பிணக்கெதுவும் இருந்ததில்லை. வீதியால் போகும்போது மறித்து பகிடிவதை செய்வது, ஊரைக் கிண்டலடிப்பது, தடக்கி விழுத்துவது, முகத்தில் அறைவதென்று ஒரு குழுவாக இதைச் செய்தார்கள். எனது சித்தியிடம் படித்த இன்னொரு மாணவன் அதில் தலையிட்டு, "அவனை ஒண்டும் செய்யவேண்டாம், எனக்குத் தெரிந்தவன் தான்" என்று கூறியபின் என்மீது பகிடிவதை செய்வதை விட்டார்கள். இதில் வேதனை என்னவென்றால் என்னைப் பகிடிவதைக்கு உட்படுத்தியவர்கள் என்னோடு ஒரே வகுப்பில் படித்தவர்கள்தான். நான் மட்டக்களப்பிலிருந்து வெளியேறும்வரை அவர்கள் என்னை வெறுத்ததன் காரணம் தெரியவில்லை, நான் விளங்கிக்கொண்ட ஒற்றைக் காரணத்தைத் தவிர.

ஆனால், இவையெல்லாவற்றையும்விட ஏதோவொன்று இருக்கிறது. யாழ்ப்பாணத்தவர்களை வெறுக்கவும், அவர்களுடன் சேர்ந்து வாழ்வதை வெறுக்கவும், சிங்களவர்களுடன் வாழ்வது யாழ்ப்பாணத்தவருடன் வாழ்வதைக் காட்டிலும் இலகுவானது என்று சொல்லவும் ஒரு காரணம் இருக்கிறது. வெறுமனே மட்டக்களப்பிற்கு வந்து எமது வேலைகளைப் புடுங்கிக் கொண்டார்கள் என்பதையோ அல்லது வியாபாரம் என்றுவந்து எமது சொத்துக்களை அபகரித்தார்கள் என்பதையோ ஏற்றுக்கொள்ளக் கஷ்ட்டமாக இருக்கிறது. ஆனால் இவைதான் யாழ்ப்பாணத்தான் கிழக்கில் வெறுக்கப்படக் காரணம் என்றால், சிங்களவர்கள் கிழக்குத் தமிழர்களுக்குச் செய்த, இன்றும் செய்துவருகிற அக்கிரமங்களும் அநியாயங்களும் இதைவிடப் பலமடங்கு அதிகமானவை. ஆகவே , காரணம் நிச்சயமாக இவையல்ல. 

யாழ்ப்பாணத்தான் மீதான வெறுப்பும், அவனது அரசியலுக்கெதிரான எதிர்ப்பும் இருந்தபோதும் எதற்காக அவனுடன் ஆயுதப்போராட்டம் ஒன்றில் கருணாவோ அல்லது ஏனையவர்களோ இணைந்திருந்தார்கள் என்பது ஒரு புதிராகவே இருக்கிறது. தமது பிரதேசமும் சிங்களத்தால் காவுகொள்ளப்படுகிறதென்பதும், சிங்களவனைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தானுக்கும் மட்டக்களப்பானுக்கும் வேறு வேறானவர்கள் இல்லை, இருவருமே தமிழர்கள் என்றுதான் அவன் அழித்தான் என்பதும் அவர்களால் புரிந்துகொள்ளப்பட்டதால்தான் அவர்கள் சேர்ந்து போராடினார்களோ என்று எண்ணுகிறேன். அப்படியானால், யாழ்ப்பாணத்தனை விட சிங்களவன் நல்லவன் என்னும் நியாயப்படுத்தல் அடிபட்டுப் போய்விடுகிறது. 

இது ஒரு புரியாத புதிர்தான். 

2010 சட்டமா அதிபர் சொல்லுவதற்கு முன்னரே தமிழ் அரசியல் வாதிகள் சொல்லிவிட்டார்கள் கிழக்கு தமிழர்கள் மீதோ வடக்கு தலமைகள் ( அரசியல்) தலைவர்கள் கரிசனை கொள்ளவில்லையென அது இங்குள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்றும் ஆனால் அப்படி பட்டவர்களையும் ஒன்றிணைத்தது தமிழர் போராட்டமும் தலைவர் பிரபாகரனும் . யாழ்ப்பாணத்தவர்களுக்கு செல்ல பெயர் பாணி என்றாலும் ஒரு நாளைக்கெண்டான அவன் யாழ்ப்பாணிடா என்று சொல்வார்கள் கிழக்கில் அதே போல மட்டக்களப்பாரை யாழில் மட்டக்களப்பான் கொ... டை கடிப்பான், பாயோட ஒட்ட வைப்பான் என யாழ்ப்பாணியும் சொல்வார்கள்  இப்பவும் சொல்வார்கள் சொல்லி திரியுறார்கள் இது பகிடிக்குத்தானே .

ஆனால் மட்டக்களப்புக்கு வந்த பலர் மீண்டும் இடம் திரும்ப முயற்ச்சிப்பதில்லை என்ன காரணமென தெரியல அந்த இடத்தினதும் மக்களனிதும் சிறப்பு அது என நான் நினைக்கிறன் . அடையாள அட்டை பிரிவில் சில பிறப்பு சான்றிதழ்களை பார்க்கும் போது தந்தை வழி யாழ்ப்பாணமாகத்தான் இருக்கும் பெண் மட்டக்களப்பாக இருக்கும் .

இன்னுமோர் உதாரணம் துரோகத்தின் நாட் காட்டிக்கு அப்பால் கிழக்கு பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்   புலிகள் கைக்குள் மீண்டும் வருகிறது ஆனால் அங்கே நிலைகொள்ள போதுமான படையணிகள் இல்லை வன்னியிலிருந்து மீண்டும் புலிகள் வருகிரார்கள் சண்டை ஆரம்பிக்கிறது வாகரை பிடிக்கப்பட்ட பின்னர் ஆயுத பலமும் ஆள் பலமும் இல்லாத புலிகள் பின்வாங்க வடக்கிலிருந்து வந்த படையணிக்கு கிழக்கு நிலப்பரப்பு தெரிய வாய்ப்பில்லை நடு நிலையில் இருக்க ஒரு மாடு மேய்க்கும் மட்டக்களப்பு வாசி அவர்களை காட்டு வழி காட்டி அனுப்பிவிடுகிறார் அதன் பின்னர் அவர் 7 வருட சிறைக்கு தள்ளப்படுகிரார்  அவர் நினைத்து இருந்தால் அத்தனை பேரையும் காட்டி கொடுத்திருக்கலாம் யாழ்ப்பாணிகள் என  ஆனால் அப்படி செய்யவில்லை மக்கள் யாழ்ப்பாணி , மட்டக்களப்பான் என நினைத்ததில்லை மாறாக  மக்கள் மனதில் விதைப்பது ஒன்று அரசியல் வாதியாக இருக்கும் , அல்லது பிரிந்து சென்று தன்னைக்காப்பாற்றிக்கொள்ள நினைத்த போராளியாக இருக்கும் .

இவ்வளவு சம்பவமும் உங்களுக்கு நடந்திருக்கு பாருங்க 😃

21 hours ago, கிருபன் said:

பொலிகண்டியில் இருந்து பொத்துவில் என்று போயிருந்தால் புள்ளையான் கோஷ்டி வெருகலைத்தாண்டியவுடன் எல்லா யாழ்ப்பாணியளையும் (முக்கியமாக ஜீப்பில் போகும்  மேட்டுக்குடிகளை) படுவான்கரைக் பக்கம் சாய்ச்சுக்கொண்டு போயிருப்பார்கள்! போடவேண்டியவர்களைப் போட்டு, கப்பம் வேண்டக்கூடியவர்களிடம் கப்பம் வாங்க லைசன்ஸ் இருக்குத்தானே இப்பவும்!

அப்படி போட்டக்கூடிய ஒன்றும் இல்லை அவர்களே ஆளையாள் போட்டுக்கொள்கிறார்களே ஆளாளுக்கு ஒரு கருத்து 😎

14 hours ago, அக்னியஷ்த்ரா said:

இல்லையா பின்ன கருணா,பிள்ளையானின் அடியை பின்பற்றியெல்லோ கிழக்கு மாகாணசபையை 
முஸ்லிம்களுக்கு தாரை வார்த்தவங்கள் எங்கட கூத்தமைப்பினர், நீங்க யாழ்ப்பாண மேட்டுக்குடி ஜீப்வண்டிகாரர்கள்  கிழக்கு மாகாணத்தவர்களை விட பேய்காய்கள் வெட்டி ஓடுவீங்கள் என்று பார்த்தால் நீங்களும் கிழக்கு முஸ்லிம்களிடம் அவிஞ்சது தான் மிச்சம், மாறி மாறி அவிஞ்சு போட்டு வந்து  யாரோட அவியல் பெஸ்ட்டு என்று புளித்த ஏப்பம் விட்டுக்கொண்டு நிக்கிறியள்      

ஹாஹா எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் விட்ட பிழையை அப்படியா சொல்ல வருகிறீர்கள் முஸ்லீம்களிடம் கொடுத்தது யார் என்பதற்க்காகவே அடுத்த தேர்தலில் கூட்டமைக்கு கும்மியது மக்கள்தான் என்பது ஐயாக்கு தெரியும் ஆனால் சொல்ல மாட்டார் . 

  • Replies 73
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

"யாழ்" என்று இணையத்திற்கு பெயர் வைத்து விட்டு, அதில் எழுதுபவர்களிடம் மேலாதிக்க கருத்தை எதிர்பார்க்காமல் என்னத்தை எதிர் பார்ப்பது.
இங்கே எழுதியிருப்பவர்களது பெரும்பான்மையான  கருத்தை வாசித்தாலே பிரதேசவாதமும் ,மேலாதிக்கமும் தலை தூக்குது ...இதில் அடுத்தவரை குற்றமும் சொல்லி ,நக்கலடித்துக் கொண்டு 
எப்பவும் தூண்டி விடுவதும்,உசுப்பேத்துவதும் நாங்களாய்த் தான் இருப்போம் ...அதை கேட்டு விட்டு மற்றவர்கள் பொத்திக்கிட்டு பொறுமையாய் இருக்க வேண்டும்  என்பது உங்களது குணம் ...எதிராய் யாரும் கதைத்தால் பிரதேசவாசம் 
 
யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டுவிற்கு போகாத ஒருவரால்தான் இப்படியொரு கேவலமான கருத்தை எழுத முடியும் ...நீங்கள் கூட இங்குள்ள பலரை சந்தோசப்படுத்த எழுத  தொடங்கிட்டீர்கள் போல...நடத்துங்கள்  😠

கிணறு வெட்ட பல பூதங்கள் வெளிவருது அப்படியா ரதி 🤔

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

"யாழ்" என்று இணையத்திற்கு பெயர் வைத்து விட்டு, அதில் எழுதுபவர்களிடம் மேலாதிக்க கருத்தை எதிர்பார்க்காமல் என்னத்தை எதிர் பார்ப்பது.
இங்கே எழுதியிருப்பவர்களது பெரும்பான்மையான  கருத்தை வாசித்தாலே பிரதேசவாதமும் ,மேலாதிக்கமும் தலை தூக்குது ...இதில் அடுத்தவரை குற்றமும் சொல்லி ,நக்கலடித்துக் கொண்டு 
எப்பவும் தூண்டி விடுவதும்,உசுப்பேத்துவதும் நாங்களாய்த் தான் இருப்போம் ...அதை கேட்டு விட்டு மற்றவர்கள் பொத்திக்கிட்டு பொறுமையாய் இருக்க வேண்டும்  என்பது உங்களது குணம் ...எதிராய் யாரும் கதைத்தால் பிரதேசவாசம் 
 
கருத்துக்களம்Image result for யாழ் வாத்தியம்

யாழ் என்றால் யாழ்ப்பாணத்து இணையம் என்று அர்த்தம் அல்ல.

நீங்கள் சொல்லும் யாழை பிரதிநிதித்துவ படுத்துவதென்றால் நந்தி கொடியையோ, யாழ்மாவட்ட வாசிகளல்லாதோரின் மனசில் உள்ளபடி பனங்கொட்டையையோ இல்லை பனங்காயையோ படமாக போட்டிருக்கலாம்.

இவர்கள் அர்த்தபடுத்திய யாழ் ‘ குழலினிது யாழினிது’ என்று வருமே அதில் வருகின்ற மீட்டும் யாழ். தமிழர்களை அடையாளபடுத்தும் அவர்கள் மீட்டிய முதல் இசைகருவி.

அதில் மேல் நரம்பை மீட்டினால் யாழ்ப்பாணம் என்றோ கீழ் நரம்பை மீட்டினால் மட்டக்களப்பு என்றோ ஒலி எழும்பாது. அந்த யாழுக்கு பிரதேசவாதம் தெரியாது.

யாழ்ப்பாணம் யாழ் இரண்டுக்கும் வித்தியாசம் என்னவென்று புரியாது மேல்குடி கீழ்குடி என்று கொந்தளித்துவிட்டு, அடுத்தவர்கள் பிரதேசவாதம் பேசுகிறார்கள் என்று சொல்கிறீர்களே.

பிரதேசவாதம் என்பது தேசவிடுதலைக்காக பல ஆயிரம்பேர்களாய் அணிவகுத்து போராடி மாவீரர்களாகி விழுப்புண் பெற்ற தென் தமிழீழ போராளிகளிடம் இருந்ததில்லை, அப்படி இருந்திருந்தால் கருணா பிள்ளையான் பிரிவுக்கு முன்னரே  தலைமைக்கு கட்டுபடாமல் அவர்கள் பெரும் படையணியாக தனியே போயிருப்பார்கள். 

தலைமையை நேரேபோய் சந்திக்க பயந்து தமது உயிருக்காகவும் உல்லாச வாழ்வுக்காகவும் படையணிகளையும் கலைத்துவிட்டு   இயக்கத்தை உடைத்துக்கொண்டு வெளியே போனவர்கள், தமது செயலுக்கு  பலமான ஒரு காரணம் தேடி அவர்கள் போர்த்திக்கொண்ட புடவைதான் பிரதேசவாதம்.

கிழக்கு மக்களோ போராளிகளோ மாவீரர் குடும்பங்களோ பிரதேசவாதம் என்ற ஒன்றை முழுதாய் நம்பியிருந்தால் 

மீண்டும் மீண்டும் எதுக்கு ஜீப்பு வண்டிக்காரர்களை பெரும்பான்மையுடன் வெற்றிபெற வைக்கிறார்கள்? ஒரு சிலர் இழுத்துவிடும் பிரதேசவாத தேரை அங்குள்ள மக்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதே அதன் அர்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் விழங்குது ஏன் மொட்டுச் சிங்களவன் என்டு சொல்வது என்டு.தனி ஈழம் கேட்ட உடனயே கொடுத்திருந்தால் ஒரு தோட்டா செலவு இல்லாமல் தமிழரை வெற்றி கொன்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Kadancha said:

கருணா, பிள்ளையான் மற்றும் அவர்களின் குழாம் சொல்வதை விடுங்கள், அவர்களுக்கு வேறு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது.

ஆனால், கிழக்கில் உள்ள சமூக அங்கீகார நிலையில் உள்ளவர்கள் சொல்வது என்பது, ஏறத்தாழ முழு கிழக்கு தமிழ் சமூகம் சொல்வதாகும்.

ஏனெனில் இன்று நல்லையாவை பற்றி கேள்விப்படுகிறேன், பல கிழக்கு  பல்கலைக்கழக  சமூக உறுப்பினர்கள், வியாபாரத்தில் உள்ளவர்கள் என்று  கிழக்கு பல சமூக மட்டத்திலும்  இது போன்றதொரு கருத்து மற்றும் பார்வை இருக்கிறது.

அதாவது, வடக்கு மக்கள், குறிப்பாக யஸ்ஹ்பாணிகள், கிழக்கு மக்கள் பொருளாதார விருத்தியை சூறையாடி, வளர்ந்து விட்டார்கள் என்று.

அனால், கிழக்கில் இருந்து ஏ ன் தொல்பொருள் ஆய்வுக்கு பெயரளவிலாவது தம்மை இணைக்கும் படி கோரிக்கை விடுக்கவில்லை என்று தெரியவில்லை. இதுவும் பொருளாதார விருத்தியின் அடிப்படை என்று அவர்களுக்கு (கிழக்கு  பல்கலைக்கழக  சமூகம்) தெரியவில்லையா? 

நீங்கள் சொல்வது சரிதான்....
மக்களோடு மக்களாக இருந்த பிரதேசவாதத்தை( அனேகமாக பகிடியாகவும் வன்மம் இல்லாமலும்) அரசியலுக்காக பிரயோகிப்பதாலேயே பல பிரச்சனைகள் வருகின்றன. மட்டக்களப்பு பகுதிகளில் இன்று பேசு பொருளாக்கி விட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kadancha said:

கருணா, பிள்ளையான் மற்றும் அவர்களின் குழாம் சொல்வதை விடுங்கள், அவர்களுக்கு வேறு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது.

ஆனால், கிழக்கில் உள்ள சமூக அங்கீகார நிலையில் உள்ளவர்கள் சொல்வது என்பது, ஏறத்தாழ முழு கிழக்கு தமிழ் சமூகம் சொல்வதாகும்.

ஏனெனில் இன்று நல்லையாவை பற்றி கேள்விப்படுகிறேன், பல கிழக்கு  பல்கலைக்கழக  சமூக உறுப்பினர்கள், வியாபாரத்தில் உள்ளவர்கள் என்று  கிழக்கு பல சமூக மட்டத்திலும்  இது போன்றதொரு கருத்து மற்றும் பார்வை இருக்கிறது.

அதாவது, வடக்கு மக்கள், குறிப்பாக யஸ்ஹ்பாணிகள், கிழக்கு மக்கள் பொருளாதார விருத்தியை சூறையாடி, வளர்ந்து விட்டார்கள் என்று.

அனால், கிழக்கில் இருந்து ஏ ன் தொல்பொருள் ஆய்வுக்கு பெயரளவிலாவது தம்மை இணைக்கும் படி கோரிக்கை விடுக்கவில்லை என்று தெரியவில்லை. இதுவும் பொருளாதார விருத்தியின் அடிப்படை என்று அவர்களுக்கு (கிழக்கு  பல்கலைக்கழக  சமூகம்) தெரியவில்லையா? 

கடைஞ்சா ...ரஞ்சித் அண்ணை சொன்னார் என்று சும்மா நீங்களும் சகட்டு மேனிக்கு கடையாதீர்கள் 
என்னுடைய அம்மாவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டதாரி தான் (கலைப்பீடம் புவியியல் விசேடம் 1979 உற்சேர்க்கை), பல்கலையில் "கொச்சிக்கா" அணி என்றுதான் எனது அம்மாவையும் அவரது நண்பிகளையும் 
மற்றைய யாழ் மாணவர்கள் அழைப்பார்களாம், எல்லாவற்றிலும் ஒதுக்கி மட்டக்களப்பு மாணவர்களை ஒரு தனி அணியாகவே திரள வைத்துவிடுவார்களாம், பகிடி வதைகளிலும் விசேட கவனிப்பு இந்த "கொச்சிக்கா" அணிக்கு உண்டு,அவற்றில்  சிலவற்றை இங்கே எழுத முடியாது, பிரதேசவாதத்தை மட்டக்களப்பில் இருந்து யாழ் சென்றவர்களும் அனுபவித்திருக்கிறார்கள். 
இன்னுமொன்று இது எனது அனுபவம், எனது நண்பன் ஒருவன் இருக்கிறான் அவனது அப்பா "பாணி " அம்மா "கொச்சிக்கா" , அப்பா வேளாளர் கோவில் வண்ணக்கர் குடி என்று நண்பன் சொல்வான், அப்பா "கொச்சிக்காயை" மணந்ததால் முழு குடும்பமே அவரை கழட்டி விட்டுபோட்டினம் அவருக்கு ஏகப்பட்ட சகோதரங்கள்  , அவனோட அப்பாவின் மரணத்தில் தான் பிரிந்த குடும்பம் ஒன்றுசேர்ந்து வந்து சகோதரங்களுடைய பிள்ளைகளை கண்ணார கண்டினம், அப்போது அவனோட சித்தியின் மக்கள் என்று இரண்டு பெடியளை கூட்டி வந்தான், நாங்கள் ஊரிலிருக்கும் போது பின்னேரங்களில்  கூட்டமாக போய் மாட்டு பாபத்,இறைச்சி, கிழங்கு பொரியல், கோழி லெக் பீஸ் என்று மொத்தோ மொத்து என்று மொத்துவது வழக்கம், கூட்டி வந்த இரண்டு பெடியளும் எங்களோட இருந்து சாப்பிடாமல் தள்ளிப்போய் வேறு மேசையில் இருக்கினம் ,நண்பனும் அவர்களுக்கு தனியாக எடுத்துப்போய் வைத்துவிட்டு வந்தான், என்னடா மச்சி ஏன் நம்ம மேசையில் இடமிருக்கு தானே ஏன் அங்க போய் இருக்கினம் என்று கேட்டால் கண்ணடித்து விட்டு பிறகு சொல்கிறேன் எண்டு சொன்னான், 
அடுத்த நாள் என்னுடைய வீட்டிற்கு அவர்களில் ஒருத்தனை கூட்டிக்கொண்டு வந்திருந்தான் ஆனால்  அந்த பொடியன் வெளியிலேயே நிக்கிறான் நானும் போய் உள்ள வாங்கோ என்று கூப்பிட்டேன் சிரித்துவிட்டு  உள்ள வரவில்லை, நம்ம நண்பன் போய் உடனே போய் நம்மடை ஆக்கள் தான் உள்ள வா எண்டதும் தான் வீட்டிற்குள் வந்தான்,பிறகு தான் தெரிந்தது ஆஹா இது அது இல்ல என்று 
இப்பிடி ஒவ்வொருத்தருக்கும் ஏகப்பட்ட அனுபவம் உண்டு

ஏற்கனவே யாழ்களத்தில் நான் எழுதியது கருணாவை போட்டு கும்மியெடுத்தது  இன்னும் இருக்கும்,  இப்போதும் சொல்கிறேன், கிழக்கு மாகாணத்தவர்கள் தூரநோக்கற்று அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு முஸ்லிம்களிடம் காணிகளை விற்றதும்,  அளவுக்குமீறிய குடிபழக்கத்தினால் நாசமாக போனதுமே முதற்காரணம், மட்டக்களப்பு காந்தி பார்க் பக்கத்தில் வலம்புரி என்று யாழ்ப்பாண தமிழர் நடத்திய கடை ஒன்று இருந்தது, வழியில் எவ்வளவு முஸ்லீம் கடைகள் இருந்தாலும் அவரிடம்தான்  நிறைய மட்டு  தமிழர்கள்
பொருட்களை வாங்குவார்கள், இவரை காலி செய்தது கருணாவின் பிரதேச வாதம் 
அதுபோன்றே சண்முகா ஸ்டோர்ஸ் மட்டக்களப்பு சின்னாஸ்பத்திரி சுற்றுவட்டத்திற்கருகில் இப்பவும் இருக்கிறார்கள்  (இவர்களை கருணா குழு காலி பண்ண முயற்சித்தும் கொடுக்க வேண்டியதை கொடுத்து தப்பித்து கொண்டார்கள் ) சாதாரண பலசரக்கு கடையாக இருந்தவர்கள் இன்று பல்பொருள் அங்காடியாக மாறி அருகிலேயே Sun fancy என்று fancy கடையொன்றையும் துவங்கி வளர்ந்து நிற்கிறார்கள்,
அதிகமான மட்டு தமிழர்கள் இவர்களிடம் தான் கொள்வனவு செய்வது எத்தனையோ முஸ்லீம் கடைகள் குறைந்த விலையில் பொருட்களை தர தயாராக இருந்தும், முதலில் இவர்களிடம் தான் செல்வது இவர்களிடம் இல்லாவிட்டால் மட்டுமே வேறு கடைக்கு போவது,

மட்டு தமிழர்கள் தெளிவாக தான் இருக்கிறோம், இன்று கருணாவிற்கும் பிள்ளையானுக்கும் வாக்கு போட்டது 
அவர்களின் செயலை ஆதரித்தல்ல எமது முதற்பிரட்சினையான முஸ்லிம்களால்  காணிகள் விழுங்குப்படுதலையும், பொருளாதாரம் படிப்படியாக சூறையாடப்படுதலையும் யாரால் வினைத்திறனாக தடுக்க முடியுமோ அவர்களே அவசரத்தேவை, கூத்தமைப்பு வினைத்திறனாக செயலாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பிலேயே கிழக்கு மக்கள் இவ்வளவு காலமும் அவர்களை நம்பினார்கள், அவர்களது செயலோ 
கருணா, பிள்ளையானுக்கு ஒரு படி மேலே போய் முஸ்லிம்களிடம் சரணாகதியே அடைந்துவிட்டார்கள்,
எம்மை பொறுத்தவரை வியாழனோ, கருணாவோ,பிள்ளையனோ அவர்களிடம் மக்கள் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றால் நாமே முன்னின்று தூக்கியெறிவோம், அதுவே கூத்தமைப்பிற்கும் நடந்தது, இன்னுமொருவகையில் கூத்தமைப்பு செய்ய வேண்டிய அரசியலை பற்றி அவர்களுக்கு ஒரு பாடம் நடத்தப்பட்டுள்ளது, அதனை கிழக்கு மாகாணம் தெளிவாகவே செய்துள்ளது 

வடக்கிற்கும் இதே நிலை வரும் போது அதன்  தாற்பரியம் அவர்களுக்கு புரியும், இந்திய சோப்பு போடுதல் அரசியலின் இறுதி வருவிளைவு எந்த இடத்தில் எமது மக்களை கொண்டு போய் விடுமென்பது, அப்போது நேரம் கடந்திருக்கலாம், சுடலை ஞானமும் வரலாம்   

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தானுக்கும் மட்டக்களப்பானுக்குமிடையிலான பிரதேசவாதம் இருந்துவிட்டுப் போகட்டும். நாம் தமிழராய் ஒன்றிணையும்போது அதற்கான முக்கியத்துவமோ தேவையோ இருபக்கத்திலும் இல்லாமல்ப் போய்விடும்.

நான் பிரிந்திருந்தால் தனித்தனியே அழிக்கப்பட்டுவிடுவோம். தமிழராய் ஒரு அணியாய் இருப்பதே எமது இருப்பிற்கு முக்கியமானது. சுமார் 30 வருடங்களாக ஒருவன் வந்தான், பிரதேச எல்லைகளை நிலத்திலிருந்தும், மனங்களிலிருந்தும் பிடுங்கி எறிந்து எம்மை ஒன்றாக்கினான். அவன தலைமையின் கீழ் ஒருமித்த தாயகத்திற்காய்ப் போராடினோம். இன்று அவனில்லை, மீண்டும் எல்லைகளைப் போட்டுக்கொண்டு நிற்கிறோம்.

எம்முடன் ஒன்றாகப் பயணித்த சிலர் தாம் செய்வது தெரிந்தும், தமது புதிய தலைவர்கள் பின்னால் சென்று நிற்கிறார்கள். தாம் நிற்பது தவறானவர்கள் பின்னால்  என்பது அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. எமது ஒற்றுமைக்கு எதிரானவர்கள் பின்னால் தாம் நிற்பதும் இவர்களுக்குத் தெரியாமல் இல்லை. ஏதோவெல்லாம் காரணங்க்கள். 

சிலவேளை சரியான தலைமை ஒன்று உருவாகும்வரை இவர்கள் காத்திருக்கலாம்.

நாங்கள் ஒன்றாகப் பயணிப்பது காலத்தின் தேவை. உணர்வார்கள் என்று நம்புகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

கடைஞ்சா ...ரஞ்சித் அண்ணை சொன்னார் என்று சும்மா நீங்களும் சகட்டு மேனிக்கு கடையாதீர்கள் 
என்னுடைய அம்மாவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டதாரி தான் (கலைப்பீடம் புவியியல் விசேடம் 1979 உற்சேர்க்கை), பல்கலையில் "கொச்சிக்கா" அணி என்றுதான் எனது அம்மாவையும் அவரது நண்பிகளையும் 
மற்றைய யாழ் மாணவர்கள் அழைப்பார்களாம், எல்லாவற்றிலும் ஒதுக்கி மட்டக்களப்பு மாணவர்களை ஒரு தனி அணியாகவே திரள வைத்துவிடுவார்களாம், பகிடி வதைகளிலும் விசேட கவனிப்பு இந்த "கொச்சிக்கா" அணிக்கு உண்டு,அவற்றில்  சிலவற்றை இங்கே எழுத முடியாது, பிரதேசவாதத்தை மட்டக்களப்பில் இருந்து யாழ் சென்றவர்களும் அனுபவித்திருக்கிறார்கள். 
இன்னுமொன்று இது எனது அனுபவம், எனது நண்பன் ஒருவன் இருக்கிறான் அவனது அப்பா "பாணி " அம்மா "கொச்சிக்கா" , அப்பா வேளாளர் கோவில் வண்ணக்கர் குடி என்று நண்பன் சொல்வான், அப்பா "கொச்சிக்காயை" மணந்ததால் முழு குடும்பமே அவரை கழட்டி விட்டுபோட்டினம் அவருக்கு ஏகப்பட்ட சகோதரங்கள்  , அவனோட அப்பாவின் மரணத்தில் தான் பிரிந்த குடும்பம் ஒன்றுசேர்ந்து வந்து சகோதரங்களுடைய பிள்ளைகளை கண்ணார கண்டினம், அப்போது அவனோட சித்தியின் மக்கள் என்று இரண்டு பெடியளை கூட்டி வந்தான், நாங்கள் ஊரிலிருக்கும் போது பின்னேரங்களில்  கூட்டமாக போய் மாட்டு பாபத்,இறைச்சி, கிழங்கு பொரியல், கோழி லெக் பீஸ் என்று மொத்தோ மொத்து என்று மொத்துவது வழக்கம், கூட்டி வந்த இரண்டு பெடியளும் எங்களோட இருந்து சாப்பிடாமல் தள்ளிப்போய் வேறு மேசையில் இருக்கினம் ,நண்பனும் அவர்களுக்கு தனியாக எடுத்துப்போய் வைத்துவிட்டு வந்தான், என்னடா மச்சி ஏன் நம்ம மேசையில் இடமிருக்கு தானே ஏன் அங்க போய் இருக்கினம் என்று கேட்டால் கண்ணடித்து விட்டு பிறகு சொல்கிறேன் எண்டு சொன்னான், 
அடுத்த நாள் என்னுடைய வீட்டிற்கு அவர்களில் ஒருத்தனை கூட்டிக்கொண்டு வந்திருந்தான் ஆனால்  அந்த பொடியன் வெளியிலேயே நிக்கிறான் நானும் போய் உள்ள வாங்கோ என்று கூப்பிட்டேன் சிரித்துவிட்டு  உள்ள வரவில்லை, நம்ம நண்பன் போய் உடனே போய் நம்மடை ஆக்கள் தான் உள்ள வா எண்டதும் தான் வீட்டிற்குள் வந்தான்,பிறகு தான் தெரிந்தது ஆஹா இது அது இல்ல என்று 
இப்பிடி ஒவ்வொருத்தருக்கும் ஏகப்பட்ட அனுபவம் உண்டு

ஏற்கனவே யாழ்களத்தில் நான் எழுதியது கருணாவை போட்டு கும்மியெடுத்தது  இன்னும் இருக்கும்,  இப்போதும் சொல்கிறேன், கிழக்கு மாகாணத்தவர்கள் தூரநோக்கற்று அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு முஸ்லிம்களிடம் காணிகளை விற்றதும்,  அளவுக்குமீறிய குடிபழக்கத்தினால் நாசமாக போனதுமே முதற்காரணம், மட்டக்களப்பு காந்தி பார்க் பக்கத்தில் வலம்புரி என்று யாழ்ப்பாண தமிழர் நடத்திய கடை ஒன்று இருந்தது, வழியில் எவ்வளவு முஸ்லீம் கடைகள் இருந்தாலும் அவரிடம்தான்  நிறைய மட்டு  தமிழர்கள்
பொருட்களை வாங்குவார்கள், இவரை காலி செய்தது கருணாவின் பிரதேச வாதம் 
அதுபோன்றே சண்முகா ஸ்டோர்ஸ் மட்டக்களப்பு சின்னாஸ்பத்திரி சுற்றுவட்டத்திற்கருகில் இப்பவும் இருக்கிறார்கள்  (இவர்களை கருணா குழு காலி பண்ண முயற்சித்தும் கொடுக்க வேண்டியதை கொடுத்து தப்பித்து கொண்டார்கள் ) சாதாரண பலசரக்கு கடையாக இருந்தவர்கள் இன்று பல்பொருள் அங்காடியாக மாறி அருகிலேயே Sun fancy என்று fancy கடையொன்றையும் துவங்கி வளர்ந்து நிற்கிறார்கள்,
அதிகமான மட்டு தமிழர்கள் இவர்களிடம் தான் கொள்வனவு செய்வது எத்தனையோ முஸ்லீம் கடைகள் குறைந்த விலையில் பொருட்களை தர தயாராக இருந்தும், முதலில் இவர்களிடம் தான் செல்வது இவர்களிடம் இல்லாவிட்டால் மட்டுமே வேறு கடைக்கு போவது,

மட்டு தமிழர்கள் தெளிவாக தான் இருக்கிறோம், இன்று கருணாவிற்கும் பிள்ளையானுக்கும் வாக்கு போட்டது 
அவர்களின் செயலை ஆதரித்தல்ல எமது முதற்பிரட்சினையான முஸ்லிம்களால்  காணிகள் விழுங்குப்படுதலையும், பொருளாதாரம் படிப்படியாக சூறையாடப்படுதலையும் யாரால் வினைத்திறனாக தடுக்க முடியுமோ அவர்களே அவசரத்தேவை, கூத்தமைப்பு வினைத்திறனாக செயலாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பிலேயே கிழக்கு மக்கள் இவ்வளவு காலமும் அவர்களை நம்பினார்கள், அவர்களது செயலோ 
கருணா, பிள்ளையானுக்கு ஒரு படி மேலே போய் முஸ்லிம்களிடம் சரணாகதியே அடைந்துவிட்டார்கள்,
எம்மை பொறுத்தவரை வியாழனோ, கருணாவோ,பிள்ளையனோ அவர்களிடம் மக்கள் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றால் நாமே முன்னின்று தூக்கியெறிவோம், அதுவே கூத்தமைப்பிற்கும் நடந்தது, இன்னுமொருவகையில் கூத்தமைப்பு செய்ய வேண்டிய அரசியலை பற்றி அவர்களுக்கு ஒரு பாடம் நடத்தப்பட்டுள்ளது, அதனை கிழக்கு மாகாணம் தெளிவாகவே செய்துள்ளது 

வடக்கிற்கும் இதே நிலை வரும் போது அதன்  தாற்பரியம் அவர்களுக்கு புரியும், இந்திய சோப்பு போடுதல் அரசியலின் இறுதி வருவிளைவு எந்த இடத்தில் எமது மக்களை கொண்டு போய் விடுமென்பது, அப்போது நேரம் கடந்திருக்கலாம், சுடலை ஞானமும் வரலாம்   

உண்மைகளைக் கூறும் உங்களின் எழுத்தில் ஆழப்பதிந்திருக்கும் நேர்மையும் தமிழரின் ஒற்றுமைக்கு ஏங்கும் குணமும் மகிழ்வையும் ஆறுதலையும் தருகின்றது.

சிறு குறிப்பு; எனது யாழ் பலகலையின் நுழைவு ஆண்டு 1990. அப்போது அங்கு கல்விகற்ற தென் தமிழீழ மாணவர்களுக்கு உங்கள் அக்காவின் அனுபவத்தில் பத்தில் அல்லது நூறில் ஒருபங்கும் ஏற்பட்டிருக்காது என்பது எனது ஆழமான நம்பிக்கை.

(எனக்குரிய முத்திரைகள் முடிவடைந்துவிட்டன 👍)

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி நான் புனைவது அல்ல. இன்னொரு இணையத்தளத்திலிருந்து ஆங்கிலமூலத்தை தமிழில் மொழிபெயர்த்தது. ரதியக்கா கேட்டதுபோல தமிழ்வின்னொ, லங்காசிறியோ, பதிவோ, சங்கதியோ அல்ல. 90 களின் இறுதிப்பகுதியிலிருந்து மிக அண்மைக்காலம் வரைக்கும் வெளிநாட்டுப் ஊடகங்கள் உட்பட பலராலும் மேற்கோள் காட்டப்பட்டு, ஆதாரம் காட்டப்பட்டு, செய்திக்காக தரவிறக்கம் செய்யப்பட்ட ஒரு ஆங்கிலத் தளம். இத்தளத்தில் குறிப்பிடப்பட்டவை உண்மையில் நடந்தவை. ஒரு சில விடயங்கள் செய்தி வெளிவந்த நாளிற்குப் பிறகு தவறென்று விளக்கமளிக்கப்பட்டவை. உதாரணத்திற்கு தனி சுட்டிக்காட்டிய இனியபாரதியின் மரணம் தொடர்பான செய்தி.

நான் அதை எழுதுவதற்கான காரணத்தை தெளிவாக கூறிவிட்டே எழுதுகிறேன். இவர்கள் இருவரும்போன்றே டக்கிளஸ், கே பி ஆகியோரது துரோகங்களும் மீள பார்க்கப்பட்டுப் பேசப்படவேண்டும். அதையும் செய்வதாக உள்ளேன், பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நாங்கள் ஒன்றாகப் பயணிப்பது காலத்தின் தேவை. உணர்வார்கள் என்று நம்புகிறேன்

ஆம் நாம் ஒன்றாக பயணித்து கூத்தமைப்பிற்கு குத்தி குத்தி ,வருடாவருடம் இரண்டு பொங்கலுக்கு ஒன்று தீபாவளிக்கு ஒன்று என்று  தீர்வு பொதிகள்  ரிலீஸ் பண்ணி இந்தியாவிற்கு சோப்பு போட்டுக்கொண்டு 
மக்கிப்போய் கடைசி மூச்சை இழுக்கும்  மாகாணசபைக்கு CPR  கொடுத்து கொண்டு கிழக்கை முஸ்லிம்களிடமும் ,வடக்கை சிங்களவர்களிடம் அடமானம் வைத்துவிட்டு இரண்டு மாகாணங்களிலும் சிறுபான்மையாகி ஒரு M.P க்கே சிங்கியடிக்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம், 

கூத்தமைப்ப்பிற்கு கிழக்கில்  அடித்த ஒரு  அடியில் எப்படி சொல்ஹெய்மிற்கும் ,ஜெனீவாவின் முன்னாள்களுக்கும்  நெறிகட்டியது, வடக்கும் சேர்ந்து அடித்திருந்தால் பாதுகாப்புச்சபையும் சேர்ந்து ஓலம் போட்டிருப்பார்கள், இந்திய proxy க்களை மட்டும் உங்க அரசியல் அத்தியாயத்தில் இருந்து  தூக்கிவிட்டு அப்புறம்  பாருங்க நந்தசேன மாத்தையாவின் அலறலை, 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டுவிற்கு போகாத ஒருவரால்தான் இப்படியொரு கேவலமான கருத்தை எழுத முடியும் ...நீங்கள் கூட இங்குள்ள பலரை சந்தோசப்படுத்த எழுத  தொடங்கிட்டீர்கள் போல...நடத்துங்கள்  😠

நான் மற்றையோரைக் குஷிப்படுத்த எழுதவில்லை. புள்ளையானின் அப்பட்டமான பிரதேசவாதத்தால் கிழக்கில் (அவருக்கு திருகோணமலையும் கிழக்கில் இல்லை!) நடந்த படுகொலைகளும், தமிழர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளும் எப்போதும் நினைவில் இருக்கும்.

நான் தன்னிறைவான வடமராட்சிப் பிரதேசத்தவன் என்பதால் யாழ்ப்பாண மாவட்டத்தின் பிறபகுதிகளுக்கே போயிருக்கவில்லை.! யாழ்ப்பாண நகருக்கே எண்ணி மூன்று தடவைதான் போயிருக்கின்றேன். பண்ணைப் பாலத்தை பிளேனில் இருந்துதான் பார்த்திருக்கின்றேன்😬

எனக்கு மானிப்பாயும் ஒன்றுதான் மட்டக்களப்பும் ஒன்றுதான்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதுபோன்றே சண்முகா ஸ்டோர்ஸ் மட்டக்களப்பு சின்னாஸ்பத்திரி சுற்றுவட்டத்திற்கருகில் இப்பவும் இருக்கிறார்கள்  (இவர்களை கருணா குழு காலி பண்ண முயற்சித்தும் கொடுக்க வேண்டியதை கொடுத்து தப்பித்து கொண்டார்கள் ) சாதாரண பலசரக்கு கடையாக இருந்தவர்கள் இன்று பல்பொருள் அங்காடியாக மாறி அருகிலேயே Sun fancy என்று fancy கடையொன்றையும் துவங்கி வளர்ந்து நிற்கிறார்கள்,

90 இல் சிறையிலடைக்கப்பட்ட சண்முகம் அவர்களின் மகனின் கடை என்று நினைக்கின்றேன். சண்முகம் ஊருக்கு இளைப்பாற எமது பக்கத்துவீட்டுக்குத்தான் 80களில் வருகின்றவர். சாம் தம்பிமுத்துவும் இடையிடையே கண்ட நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை ஆதரிக்கும் நோக்கம் எனக்குச் சொற்பமும் இல்லை. அவர்களின் சரணாகதி அரசியலும் சுமந்திரன் சம்பந்தன் ஆகியோர் அக்கட்சியை தமது வழியில் இழுத்துச்செல்வதையும் நான் வெறுக்கிறேன். அவர்கள் உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் என்றுகூட நான் ஏற்றுக்கொண்டது கிடையாது. நீங்கள், நான் கூட்டமைப்பின் ஆளென்றுதான் என்மீது குரைக்கிறீர்கள் என்றால், நான் அந்த மரம் அல்ல.

அடுத்தது, எவரை எதிர்த்தாவது சிங்கள ஆக்கிரமிப்புப் பேய்களுக்கு வாக்களித்து எவருக்காவது பாடம் புகட்டலாம் என்று நினைத்தால் எம்மைப்போல் முட்டாள்கள் இருக்கமுடியாது. பேரினவாதம் எமது தாயகத்தில் அரசியல் ரீதியாக காலூன்ற நாம் கொடுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் மீள எம்மால் நிவர்த்திசெய்து, கைப்பற்ற முடியாதவை. எமது தாயகத்தில் ராணுவ ரீதியிலான முற்றான ஆக்கிரமிப்பை கட்டவிழ்த்திவிட்டிருக்கும் சிங்களப் பேரினவாதம் எதிர்பார்ப்பது எமது தாயகத்தில் தனது பேரினவாதத்தின் அரசியல் ரீதியான அங்கீகரிப்பைத்தான். அதைத்தான் இன்று அங்கஜனும், டக்கிளசும், கருணாவும், பிள்ளையானும், அமலும் செய்துகொண்டிருப்பது.

இன்று இவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறோம், இவர்களும் சரிவரவில்லையென்றல், நாளை இவர்களையும் தூக்கியெறிவோம் என்பது பேசுவதற்கு வேண்டுமானால் இலகுவாக இருக்கலாம். தான் உள்நுழைவதற்குச் சிங்களம் ஏற்படுத்திக்கொண்ட வாய்ப்பினை இலகுவில் விட்டுக் கொடுக்காதென்பதை நாம் இன்னமும் உணரவில்லையென்றால்  ஒன்றும் செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் விட்ட பிழையை அப்படியா சொல்ல வருகிறீர்கள் முஸ்லீம்களிடம் கொடுத்தது யார் என்பதற்க்காகவே அடுத்த தேர்தலில் கூட்டமைக்கு கும்மியது மக்கள்தான் என்பது ஐயாக்கு தெரியும் ஆனால் சொல்ல மாட்டார்

எனக்கு கூத்தமைப்பு மேலிருந்த கோபத்தை வெறியாக மாற்றியது இந்த செய்கை தான் 😡

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அடுத்தது, எவரை எதிர்த்தாவது சிங்கள ஆக்கிரமிப்புப் பேய்களுக்கு வாக்களித்து எவருக்காவது பாடம் புகட்டலாம் என்று நினைத்தால் எம்மைப்போல் முட்டாள்கள் இருக்கமுடியாது. பேரினவாதம் எமது தாயகத்தில் அரசியல் ரீதியாக காலூன்ற நாம் கொடுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் மீள எம்மால் நிவர்த்திசெய்து, கைப்பற்ற முடியாதவை. எமது தாயகத்தில் ராணுவ ரீதியிலான முற்றான ஆக்கிரமிப்பை கட்டவிழ்த்திவிட்டிருக்கும் சிங்களப் பேரினவாதம் எதிர்பார்ப்பது எமது தாயகத்தில் தனது பேரினவாதத்தின் அரசியல் ரீதியான அங்கீகரிப்பைத்தான். அதைத்தான் இன்று அங்கஜனும், டக்கிளசும், கருணாவும், பிள்ளையானும், அமலும் செய்துகொண்டிருப்பது.

இன்று இவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறோம், இவர்களும் சரிவரவில்லையென்றல், நாளை இவர்களையும் தூக்கியெறிவோம் என்பது பேசுவதற்கு வேண்டுமானால் இலகுவாக இருக்கலாம். தான் உள்நுழைவதற்குச் சிங்களம் ஏற்படுத்திக்கொண்ட வாய்ப்பினை இலகுவில் விட்டுக் கொடுக்காதென்பதை நாம் இன்னமும் உணரவில்லையென்றால்  ஒன்றும் செய்ய முடியாது.

சரி கூத்தமைப்பிற்கு  மட்டும் குத்தி தேசியத்தின் மீதான  மனஉறுதியை  நிலைநாட்டுவதன் மூலம் 
மேற்கூறியவற்றில்  எதனையாவது கடைந்ததெடுத்த இனவாதியை தலைவனாக கொண்ட நாட்டின் 70 % இனவாதிகளால் தெரிவு செய்யப்பட அரசாங்கத்தில் தடுத்து நிறுத்த முடியும் என்று இன்னும் நினைக்கிறீர்கள் என்றால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. 

உங்களது பிரச்சினை 1. கூத்தமைப்பிற்கு வாக்கு குத்தவில்லை என்பதா....? இல்லை 
2.அமல்,பிள்ளையான் கருணாவிற்கு வாக்கு குத்தியதா ...? 

நீங்கள் கூத்தமைப்பின் ஆதரவாளர் இல்லை என்று சொல்வதால் முதல் காரணி இங்கே செல்லுபடியற்றதாகிறது 
 இரண்டாவது காரணிக்கே வருகிறேன் இது பிழை என்று சொல்லும் ஒவ்வொரு வடக்கு மாகாணத்தவரும் கிழக்கு மாகாணத்தவரும் இந்த குற்றத்திற்குரிய தார்மீக பொறுப்பை  ஏற்றுக்கொள்ளவேண்டும் புலிகளின் மௌனிப்பின் பின் எப்போதாவது நீங்கள் ஒரு தகுந்த  மாற்றுத்தெரிவை உருவாக்கும் முயற்சியை எடுத்தீர்களா....? புதிதாக வருபவர்களை எல்லாம் (ஓட்டை சைக்கிள், பக்கிள் ரிம் ) நொட்டை, நொசுக்கல்  சொல்லிச்சொல்லி கூத்தமைப்பிற்கு தாங்கள் விளக்குமாத்தை தங்கள் கட்சியில் நிறுத்தினாலும் வெல்லவைக்கலாம் என்ற தைரியத்தை ஊட்டும் வேலையை செய்த அனைவரும் இந்த குற்றத்தின் காரணகர்த்தா..வாக்களித்தவர்களை பார்த்து கேட்கும் இந்த கேள்வியை ,நமைச்சலை உங்கள் உருவத்தை கண்ணாடியில் பார்த்து தீர்த்துக்கொள்ளுங்கள்.

பொன்சேகாவிற்கு வாக்கு போடுங்கோ என்று சொல்லும்போது நவதுவாரங்களையும் மூடிக்கொண்டு போய் குத்தாமல் அப்போது கூத்தமைப்பின் காலரை பிடித்து கேள்விகேட்டிருந்தீர்கள் என்றால் அன்று எழுந்து நின்று அடித்திருப்பேன் சல்யூட்    

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நான் மற்றையோரைக் குஷிப்படுத்த எழுதவில்லை. புள்ளையானின் அப்பட்டமான பிரதேசவாதத்தால் கிழக்கில் (அவருக்கு திருகோணமலையும் கிழக்கில் இல்லை!) நடந்த படுகொலைகளும், தமிழர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளும் எப்போதும் நினைவில் இருக்கும்.

நான் தன்னிறைவான வடமராட்சிப் பிரதேசத்தவன் என்பதால் யாழ்ப்பாண மாவட்டத்தின் பிறபகுதிகளுக்கே போயிருக்கவில்லை.! யாழ்ப்பாண நகருக்கே எண்ணி மூன்று தடவைதான் போயிருக்கின்றேன். பண்ணைப் பாலத்தை பிளேனில் இருந்துதான் பார்த்திருக்கின்றேன்😬

எனக்கு மானிப்பாயும் ஒன்றுதான் மட்டக்களப்பும் ஒன்றுதான்!

அட நீங்க வேற, சந்திரகாந்தன் முரளீதரன் போலவே தனிக்கும் அக்னிக்கும் திருகோணமலை கிழக்கில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் மெளனிப்பின் பின்னர் அதிர்ச்சியிலிருந்து மீளவே எமதினத்திற்கு நெடுங்காலம் எடுத்தது. நாங்கள் இன்னும் சரியான தலைவர் ஒருவரை தெரிவுசெய்யவில்லையென்பதே உண்மை. அதற்காக சிங்களபேரினவாதத்தையும், அதன் அடிவருடிகளையும் மாற்றுத்தலைமையாக ஏற்றுக்கொள்வதை நியாயப்படுத்த முடியாது. நீங்கள் கூட ஊரிலிருந்து மக்களுக்காக உண்மையிலேயே சேவைசெய்யக்கூடிய, இனத்திற்காக, உரிமைகளுக்காக நிற்கக் கூடிய ஒரு தலைவரை தெரிவுசெய்திருக்கலாம். ஆனால், என்ன செய்தீர்கள்? சிங்களம் காட்டிய கருணாவையும் , பிள்ளையானையும் தலைவர்களாக ஏற்றுக்கொண்டீர்கள். 

சம்பந்தன் பொன்சேக்காவை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது அடிமுட்டாளத்தனம். எம்மை இறுதிவரை தலைமையேற்று அழித்தவனை ஜனாதிபதியாக ஆதரிக்கிறோம் என்று அவர் எடுத்த மிக மோசமான முடிவு எம்மை மிகமோசமாகப் பாதித்ததோடு, பலவீனப்படுத்தியும் விட்டது. இதில் மாற்றுக்கருத்தில்லை.

மீண்டும் சொல்கிறேன். நான் கூத்தமைப்பு அடிவருடியோ அல்லது ஆதரவாளனோ இல்லை. அவர்கள் செய்வதைக் கூட நான் ஏற்றுக்கொள்ளவில்லை. 

ஆனால் கூத்தமைப்பு - கஜேந்திரகுமார் - விக்கி ஆகியோருக்கும் கருணா - பிள்ளையான் - டக்கிளஸ் - அங்கஜன் ஆகியோருக்குமிடையே  மிகத் தெளிவான வித்தியாசம் ஒன்றிருக்கிறது. அதைப் புரிந்துகொள்வது அவசியமானது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

அட நீங்க வேற, சந்திரகாந்தன் முரளீதரன் போலவே தனிக்கும் அக்னிக்கும் திருகோணமலை கிழக்கில் இல்லை.

அட மீரா அண்ணை 
நீங்க வேற தமிழ் தேசிக்காய்களின் கூடாரம் கூத்தமைப்பிற்கு கிழக்கில் தமிழர்களே இல்லை என்றால் பாருங்கோவன் , முஸ்லீம்கள்  ஓட்டு போட்டு  பெற்ற 11 உறுப்பினர்கள் பாருங்கோ அதுதான் முஸ்லிம்களையே இருக்கையில் ஏற்றி அழகு பார்த்தவைகள்  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

புலிகளின் மெளனிப்பின் பின்னர் அதிர்ச்சியிலிருந்து மீளவே எமதினத்திற்கு நெடுங்காலம் எடுத்தது. நாங்கள் இன்னும் சரியான தலைவர் ஒருவரை தெரிவுசெய்யவில்லையென்பதே உண்மை. அதற்காக சிங்களபேரினவாதத்தையும், அதன் அடிவருடிகளையும் மாற்றுத்தலைமையாக ஏற்றுக்கொள்வதை நியாயப்படுத்த முடியாது. நீங்கள் கூட ஊரிலிருந்து மக்களுக்காக உண்மையிலேயே சேவைசெய்யக்கூடிய, இனத்திற்காக, உரிமைகளுக்காக நிற்கக் கூடிய ஒரு தலைவரை தெரிவுசெய்திருக்கலாம். ஆனால், என்ன செய்தீர்கள்? சிங்களம் காட்டிய கருணாவையும் , பிள்ளையானையும் தலைவர்களாக ஏற்றுக்கொண்டீர்கள். 

சரி அடிமுட்டாள்தனத்தை செய்த கூத்தமைப்பை  விடுவோம் 
ஒரு பேச்சிற்கு கிழக்கு மாகாண தமிழரும் கையறு நிலையில் அரசின் அடிவருடிகளை தெரிவுசெய்துவிட்டார்கள், இந்த பதவிகள் ஒன்றும் நிரந்தரமானது இல்லையே அடுத்த தேர்தலில் 
கிழக்கு மாகாண மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும், எதற்காக வாக்களிக்க வேண்டும் 
பதில்களை சளப்பாமல்  clean and clear ஆக தரவேண்டும், நீங்கள் தரும் பதில் நீங்கள் எழுப்பிய கேள்விகள் 
+ கிழக்கு மாகாண மக்கள் பிரத்தியேகமாக சந்திக்கும் பிரச்சினைகள் என எல்லாவற்றிட்கும் ஒற்றை புள்ளியில் தரும் Solution ஆக இருக்க வேண்டும், உதிரியாக ஒவ்வொரு தடவையும் பாராளுமன்றத்திலும் அமைச்சருமாக  உட்காரும் டக்கி மாமவின் பிரதிநிதித்துத்துவத்தை தவிடுபொடியாக்க (காரணம் அவரும் பிள்ளையான் கருணாவின் சேம்  லிஸ்ட்டில் இருப்பதால் ) நீங்கள் செய்த காத்திரமான பங்களிப்பைப்பையும் தரவேண்டும் 

குறைந்தபட்சம் யாழில் குமைந்து குமைந்து எழுதிய ஆக்கங்களையாவது நீங்கள்  தரலாம் ,  ஏனென்றால் கிழக்கு மாகாணத்தானாக எனக்கு  கருணாவிற்கும் பிள்ளையானுக்கும் மட்டும் தான் சிறப்பு தகுதியும் சிறப்பு கவனிப்பும் இருப்பதாக ஒரு பாரபட்சம் சார்ந்த கருத்துருவாக்கம் ஏற்பட்டுவிடக்கூடாது பாருங்கோ     

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, அக்னியஷ்த்ரா said:

குறைந்தபட்சம் யாழில் குமைந்து குமைந்து எழுதிய ஆக்கங்களையாவது நீங்கள்  தரலாம் ,  ஏனென்றால் கிழக்கு மாகாணத்தானாக எனக்கு  கருணாவிற்கும் பிள்ளையானுக்கும் மட்டும் தான் சிறப்பு தகுதியும் சிறப்பு கவனிப்பும் இருப்பதாக ஒரு பாரபட்சம் சார்ந்த கருத்துருவாக்கம் ஏற்பட்டுவிடக்கூடாது பாருங்கோ     

டக்கிளசுக்கெதிராக நான் வைக்கவிருக்கும் விமர்சனத்திற்கு நீங்கள் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கும்

மற்றும்படி, கருணாமீதும் பிள்ளையான்மீதும் வைக்கப்படும் விமர்சனத்திற்கான காரணம் அவர்கள் கிழக்குமாகாணத்தினர் என்பதுதான் என்று நீங்கள் விளங்கிக் கொண்டால் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. நீங்களே சொன்னபடி டக்கிளஸ் இருக்கும் அதே லிஸ்ட்டில்த்தான் கருணா பிள்ளையான் ஆகியோரும் இருக்கின்றார்கள் என்று கூறியபின்னர் நீங்கள் கிழக்கு மாகாணத்தவர்கள் என்பதால்த்தான்  விமர்சனம் வைக்கப்படுகிறது  என்று கூறுவது வேடிக்கை, எனக்குத் தெரிந்தளவிற்கு டக்கிளஸோ அங்கஜனோ கிழக்குச் சார்ந்தவர்களாகத் தெரியவில்லை. ஏனென்றால் விமர்சனம் இவர்கள் எல்லோர்மேலும் வைக்கப்பட்டே வருகிறது. என்ன, எல்லார்மேலும் ஒரேநேரத்தில், ஒரே விதத்தில் வைக்கமுடியவில்லை. துரோகத்தின் அளவு, அது ஏற்படுத்திய பாதிப்பு, அது இன்றுவரை நிகழ்த்திவரும் அழிவுகள் என்பவற்றின் அடிப்படையில்த்தான் யாரை முதலில் விமர்சிப்பது, யாரை அடுத்ததாக விமர்சிப்பதென்ற முடிவிற்கு வரமுடிகிறது. 

நீங்கள் தெரியாமல் கேட்பதால் சொல்கிறேன், நான் கருணாவையோ பிள்ளையானையோ விமர்சிப்பது அவர்கள் கிழக்கு , மன்னிக்கவேண்டும், மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக இல்லை. மாறாக அவர்களின் துரோகமும் அதனால் நாங்கள் அடைந்த வீழ்ச்சியும்தான். இனி இதுபற்றிக் கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, ரஞ்சித் said:

நீங்கள் தெரியாமல் கேட்பதால் சொல்கிறேன், நான் கருணாவையோ பிள்ளையானையோ விமர்சிப்பது அவர்கள் கிழக்கு , மன்னிக்கவேண்டும், மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக இல்லை. மாறாக அவர்களின் துரோகமும் அதனால் நாங்கள் அடைந்த வீழ்ச்சியும்தான். இனி இதுபற்றிக் கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். 

இதுதான் எனது கருத்தும்.

உதிரிக் கேள்விக்கு பதில் வந்துவிட்டது, மெயின் கேள்விக்கு பதிலே வரவில்லை, யாரை அடுத்த முறை கிழக்கு தமிழர் தெரிவு செய்ய வேண்டும்.....?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, அக்னியஷ்த்ரா said:

யாரை அடுத்த முறை கிழக்கு தமிழர் தெரிவு செய்ய வேண்டும்.....?

அம்பிகா சற்குணநாதன்!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அக்னியஷ்த்ரா said:

கடைஞ்சா ...ரஞ்சித் அண்ணை சொன்னார் என்று சும்மா நீங்களும் சகட்டு மேனிக்கு கடையாதீர்கள்

நீங்கள் எழுதியது எல்லாமே நான்  எழுப்பிய கேள்விக்கு பதில்  இல்லை. நான் கடையவும் இல்லை.

எனது கேள்வி மிகவும் குறிப்பான கேள்வி. 

ரஞ்சித் தனது அனுபவத்தையும், ஓர் கருத்தையும் (வேலை வாய்ப்பு, வியாபாரம், சொத்துக்கள் யார்ப்பனத்தவரால் கிழக்கில் அபகரிப்பு) சொல்லி இருந்தார். 

ரசித்தின் கருத்து கிழக்கு தமிழ் சமூகத்தில் விரவியும், ஆழமாகபதிந்தும் உள்ளது, நான் அறிந்தவரையில்.

அப்படி உள்ள கருத்தில் உள்ள யதார்த்த நிலைமைகளை, தனிப்பட்ட அனுபவங்கள் மூலம் வெளியில் கொண்டு வரலாமா என்பதே எனது கேள்வியின் நோக்கம்.  

உங்களின் தனிப்பட்ட  அனுபவத்தை சொல்லுங்கள், எனது கேள்வியின் அடிப்படையில். 

சரி,நீங்கள் சொல்லிய யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் மட்டக்கிளப்பில் அவரது கடையை ஆரம்பித்த  வேளை , வேறு மட்டகிளப்பை சேர்ந்தவர் அப்படிப்பட்ட ஓர் கடையை அதே இடத்தில  தொடங்க முற்பட்டு , அந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கடையை தந்திரமாக தனதாக்கி கொண்டாரா? 

நீங்கள் எழுதியதின் சுருக்கம் 

1) ரஞ்சித் இன் தனிப்பட்ட அனுபவத்திற்கு, உங்களுக்கு தெரிந்த தனிப்பட்ட அனுபவம். 

2) உங்களின் தனிப்பட்ட அனுபவ அடிப்படையில், மட்டகிளப்பு  தமிழர்கள், தமிழர்களின் வியாபாரத்துக்கே ஆதரவு கொடுக்கிறர்கள், அது யாழ்ப்பாண தமிழர்களின் வியாபாரமாக இருந்தாலும்

3) கருணா (குறிப்பிட்ட) யார்லப்பாணத்தவர்களின் வியாபாரத்தை அழித்தார். இதில் தொக்கு நிற்பது, மட்டக்கிளப்பு தமிழ் மக்களுக்கு இதில் பங்கில்லை.     

4) கிழக்கில் தமிழர்கள் அரசியல் பற்றி தெளிவாக உள்ளார்கள். 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

உதிரிக் கேள்விக்கு பதில் வந்துவிட்டது, மெயின் கேள்விக்கு பதிலே வரவில்லை, யாரை அடுத்த முறை கிழக்கு தமிழர் தெரிவு செய்ய வேண்டும்.....?

எதற்காக இதை என்னிடம் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. என்றாலும் முடிந்தவரையில் பதிலளிக்க முயற்சிக்கிறேன்.

யாரைத் தெரிவுசெய்யலாம்?

1. மக்கள் மீது உண்மையாகவே அக்கறை கொண்ட
2. சிங்களப் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்காத
3. சிங்களப் பேரினவாதத்தின் பினாமிகளாக இல்லாத
4. மக்களின் உரிமைகளும், நிலமும் காக்கப்படவேண்டும் என்று கொள்கையளவிலாவது உறுதிபூண்ட
5. தமிழர்களின் ஒற்றுமையே பலம் என்பதை நம்பி ஏற்றுக்கொண்ட
6. தனக்கென்று ஒதுக்கப்படும் நிதியில் மக்களுக்கான அவசிய சேவைகளை முன்னெடுக்கின்ற

ஒருவர் இருந்தால் அவரைத் தெரிவு செய்யுங்கள். அப்படி எவரும் இல்லையென்றால், நீங்கள் நில்லுங்கள்.

உங்கள் பிரதேச மக்களின் நலனில் உண்மையாகவே அக்கறைகொண்ட, அவர்களுக்காக தொடர்ச்சியாக வேலை செய்துவருகிற, மக்களின் உரிமையும் நிலமும் பாதுகாப்படவேண்டும் என்று உண்மையாகவே விரும்புகிற உங்களைப்போன்றவர்கள் இன்றிருக்கும் கருணவையும், பிள்ளையானையும் விட எவ்வளவோ மேலானவர்கள்.

நீங்கள் நின்றால், உங்களுக்கான பிரச்சாரத்தை யாழில் இருந்தே ஆரம்பிக்கலாம். என்ன சொல்கிறீர்கள்? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.