Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாஜக விரைவில் தொடங்கப்படும்... சிவசேனை தலைவர் சச்சிதானந்தன் தடாலடி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ.... தற்போதுள்ள, சூழ்நிலையில்...
தமிழ் அரசியல் கட்சிகளை நம்பி பிரயோசனம் இல்லை.

சிங்களவனுக்கு... "கயிறு கொடுக்க"  சச்சிதானந்தம்  ஐயா தான், 
சரியான ஆளாக இருக்கிறார் என்பது எனது கணிப்பு.

பா.ஜா.க. வில் எனக்கு, உடன்பாடு இல்லை என்றாலும்,
அவசரத்துக்கு... அதை பாவிக்க வேண்டி இருக்குது.    

Bildergebnis für மறவன்புலவு சச்சிதானந்தம்

சச்சியருக்கு முதல் துவேச பிக்கர் களத்திலை இறங்கீட்டார் கண்டியளோ...😎

  • Replies 54
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

Bildergebnis für மறவன்புலவு சச்சிதானந்தம்

சச்சியருக்கு முதல் துவேச பிக்கர் களத்திலை இறங்கீட்டார் கண்டியளோ...😎

ஆஹா... எங்கை இருந்து எல்லாம், இந்தக் காணொளிகளை எடுக்கிறீர்கள். 👍🏼

பா.ஜ.க. என்றவுடன்... சிங்களவன் பயந்துதான் போனான். 😁

இனி...  சச்சி ஐயாவை வைத்து, அவனை வெருட்டிக் கொண்டு இருக்க வேணும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

பாரதிய ஜனதா கட்சி தொடர்பில் மக்கள் குழப்பம் அடைய வேண்டாம்- இந்து சமயப் பேரவை

1613628526_br-1-copy.jpg
 21 Views

பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் அமைவது தொடர்பில் மக்கள் குழப்பமடைய தேவையில்லை என இந்து சமயப் பேரவையின் தலைவர் சக்தி கிரீவன் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் பாரதிய ஜனதா கட்சி ஆரம்பிக்கப்படும் என்ற கருத்து நிலவி வருவது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சக்தி கிரீவன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைய நாட்களில் பத்திரிகை ஊடகங்களில் பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் அமைப்பது தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் ஒரு விடயத்தை கூற விரும்புகின்றேன் இந்த கட்சியானது இந்து சமயத்துடன் நேரடியாக தொடர்பு படுவதன் காரணமாகவும் நானும் ஒரு இந்து மதத்தின் முக்கிய பதவியில் இருப்பதன் காரணமாக சில விடயங்களை நான் பதிவிட வேண்டி உள்ளது.

அதிகாரிகளும் அரசியல் தலைமைகளும் சொல்கிறார்கள்  இலங்கையிலே பாரதிய ஜனதா கட்சி அமைக்க முடியாது என கூறுகிறார்கள் அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது.  இந்தியாவிலேயே இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியை இங்கே அமைக்க முடியாது அது இந்திய திருநாட்டிற்குரிய கட்சி ஆனால் இங்கே அமையப் போகின்ற கட்சியானது இலங்கை திருநாட்டினுடைய அரசியலமைப்புக்கு ஏற்புடையதான ஒரு கட்சி தான் இங்கேஅமைய இருக்கின்றது என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எப்படி அமெரிக்க காங்கிரஸ் இங்கே இலங்கை காங்கிரஸ் என்று பதிவு செய்கிறார்களோ அதே போல் சீன கம்யூனிஸ் இங்கே பதிவு செய்கிறார்களோ அதேபோலத்தான் இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் என்ன சொல்லப்படுகிறதோ அந்த அரசியலமைப்புச் சட்டஅனைத்து ஏற்பாடுகளுக்கும் உட்பட்டுத்தான் இந்த கட்சி பதிவு செய்யப்படும் என்பதை  இங்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

இந்த விடயம் சம்பந்தமாக அரசியல் தலைவர்களோ அல்லது சமயத் தலைவர்கள் குழப்பமடைய தேவையில்லை பல கருத்துக்களை கூறுகின்றார்கள் நேற்று பத்திரிகையில் வெளி வந்திருந்தது வீதிகளிலே  கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இந்த கட்சி ஆரம்பித்தால் இங்கே குழப்பம் ஏற்படும் என போராட்டம் செய்திருக்கிறார்கள். இந்த பாரதிய ஜனதா கட்சியானது எந்த இனத்தையோ மதத்தையோ சிதைக்கும் அமைப்பாக இருக்காது என்பதை சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

இந்த பாரதிய ஜனதா கட்சியினுடைய தேவை என்னவென்றால் தர்மத்தை நிலைநாட்டுவது இது இலங்கையிலோ அல்லது மாலைதீவிலோ அல்லது நேபாளத்திலோ அல்ல உலகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி அமைய வேண்டும் என்பது தான் உண்மை.

என்னை போன்றவர்களுடைய விருப்பமாகும் நாங்கள் ஆன்மீகவாதிகள் அரசியலோடு இணையபோவதில்லை நாங்கள் எந்த அரசியல் கட்சிகளிலும் அங்கம் வகிக்கப் போவதில்லை இலங்கையிலேயே பாரதிய ஜனதா கட்சியை ஆரம்பிக்க உள்ளவர் என்னை சந்தித்து ஆசி பெற்று சென்றார் அவரிடன் நான் கேட்டேன் நீங்கள்  இலங்கை அரசியல் யாப்பு கேற்றவாறா இந்த கட்சியை ஆரம்பிக்கவுள்ளீர்கள் என கேட்டேன் அதற்கு அவர் தெளிவாக கூறினார் எந்தவித மாறுபாடும் இன்றி இந்திய திருநாடு தர்ம ரீதியில் ஒத்துப் போகுமே தவிர இந்திய திருநாடு எந்த விடயங்களில் தலையிட முடியாது.

எனினும் இலங்கையில் தர்ம நிலைநாட்டுவதற்காகவும் ஆன்மீக ரீதியாக தொடர்புகளை மாத்திரம் பேணுமே தவிர அரசியல் ரீதியாக இந்தியாவில் இருக்கும் பா.ஜ.க  கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இருக்காது.

எனவே இது ஒரு போலியான ஒரு மாய கருத்தினை மக்கள் மத்தியிலே விதைத்திருக்கின்றார்கள் எனவே அப்படி ஒருக்காலும் நடக்க மாட்டாது இந்திய திரு நாட்டில் இருக்கின்ற ஆட்சியை பொருத்தவரைக்கும் அவர்கள் பிறிதொரு நாட்டிலே ஆக்கிரமிப்பு செய்வதற்கு விரும்பாதவர்கள் அப்படியான ஒரு எண்ணம் அவர்களுக்கு இல்லை.

அவர்கள் இலங்கையில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சமாதானமாக வாழ வேண்டும் இந்து மதமும் பௌத்த மதமும் சரிநிகர் சமனாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள் இதுதான் உண்மை இதை விடுத்து தேவையற்ற கருத்துக்களை பரப்பி மக்களை குழப்ப வேண்டாம் என நாம் மிகவும் தாழ்மையாக தெரிவித்துக்கொள்கின்றேன்

இந்த கட்சி  இந்து மக்களுக்கு மட்டுமே  ஆரம்பிக்கப்படும் எனவும் கூறுகிறார்கள் அது பொய்யான விடயம் இது அனைத்து மதத்தவர்களும் இந்த கட்சியில் இணைந்து கொள்ள முடியும் எனவே குறித்த கட்சியின் இங்கே ஆரம்பிப்பது தொடர்பில் யாரும் குழப்பமடைய தேவையில்லை“ என்றார்.

https://www.ilakku.org/?p=42503

  • கருத்துக்கள உறவுகள்

ஆக,

Sri Lanka BJP ஆரம்பிக்கப் படுவது உறுதியாகிறது. ம்ம்ம்ம்ம்ம்ம். 🤥

அப்படியானால், 

யார் யாரெல்லாம் அக்கட்சியின் உறுப்பினர்களாகலாம்...

1) 

2)

3)

4)

யார் யாரெல்லாம் அக்கட்சியின் உறுப்பினராக முடியாது..

1)

2)

3)

எது எப்படியோ..

தமிழர் நாம்(கவனிக்க; நாம் தமிழர் அல்ல..😜) மேலும் சிதறுண்டு போவது உறுதி..

☹️

  • கருத்துக்கள உறவுகள்

பிஜேபி தொடங்கப்பட்டால், முதலில் இணைவது சிங்கள தலைவர்கள் ஆகத்தான் இருக்கும்.

சிங்களவர்கள், போத்துக்கேயர் வந்த போது, அவர்களுடன் சேர்ந்தார்கள். பெயரை கூட  மாற்றினார்கள்.

லாஸ்காரின் படைகளுக்கு சிங்களவரின் இருந்து ஆள் பிடித்து கொடுத்தவர்கள் மற்றும் யாழ் இராச்சியத்தாய் போத்துக்கேயர் கைப்பற்றும் முயதர்சியிசில் எடுபிடி வேலை செய்தவர்களுக்கு போத்துக்கேயர் கொடுத்த பட்டமே Don (டொன்) என்பதாகும்.

 பக்கசாக்களின் வம்சமும் Don ஆகும். இப்போதைய சிங்கள அரசியல் / முதளித்துவ வம்சங்கள்  எல்லாமே Don வம்சமாகும்.      

மதத்தை மாற்றிய போத்துக்கேயருடன் பேரம் பேசிய சிங்கள வம்சங்களிற்கு, பிஜேபி உடன் பேரம் பேசுவது அவ்வளவு கடினம் அல்ல.

மதம் என்பதை பேரத்தில் இருந்து நீக்கிய ஒல்லாந்தருடனும், பிரித்தானியருடனும் சிங்களம் மிகவும் இலகுவாக பேரம் பேசியது.  
 
ஆனால், தமிழரிற்கு, வறட்டு கெளரவத்தை தள்ளிவைத்தால், ஓர் இடைவெளி தெரிகிறது. தீவினுள் சமயத்தை நாம் பார்த்துக்கொள்வோம் என்ற அடிப்படையில் பேரம் வைக்கலாம்.   
 
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kadancha said:

தெளிவில்லாமல் இருக்கிறது. புரியும்படியாக.. 🙏

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

ஆளாளுக்கு உசுப்பேத்தி உசுப்பேத்தி இலங்கையில் தமிழ் மக்களின் இருப்புக்கே கொள்ளி வைச்சிட்டு போய் சேர்ந்திட்டாங்க. நானும் போய் சேர முதல் புதுசா இன்னொரு  கொள்ளி வைச்சுட்டு போனா தானே என்கட்டை வேகும்   என்று மறவன்புலவு  நினைச்சுட்டார்.

குளிர் நாடுகளிலை இருந்து, தாயகத்தில் அனல் பறக்கேக்க ஜாலியா விசில் அடித்து கிறிக்கட்  ஸகோர் கேட்டு கிக்  ஆகின  சிறிய கூட்டமும், நாங்கள்  போய் சேர முதல் அந்த கொள்ளிக்கட்டை எரியாதா? எப்ப அதிலை  குளிர் காயலாம் என்று அலைவது தெரியுது. 😂😂

எங்கேயோ  கேட்ட  குரல்

கன நாளைக்கு  கொண்டைய  மறைக்க முடியாது  தானே???

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விசுகு said:

எங்கேயோ  கேட்ட  குரல்

கன நாளைக்கு  கொண்டைய  மறைக்க முடியாது  தானே???

கொஞ்சப்பேருக்கு, பயம் வருகுது.....

ஏன் எண்டு விளங்கவில்லை.... சிங்களவனுக்கு அவனது சொந்த மருந்தையே கசாயமாக கொடுக்கோணும்.

எங்களுக்கு, இழக்க ஒண்டும் இல்லை.... அதாலை... புதுசா முயல வேண்டும்.

இப்ப, அயோத்தி ராமர் கோவிலுக்கு, சோடியா அசோகவன சீதாப்பிராட்டியார் கோவில் வேணுமா, வேணாமா?

  • கருத்துக்கள உறவுகள்

2 minutes ago, Nathamuni said:

கொஞ்சப்பேருக்கு, பயம் வருகுது.....

ஏன் எண்டு விளங்கவில்லை.... சிங்களவனுக்கு அவனது சொந்த மருந்தையே கசாயமாக கொடுக்கோணும்.

எங்களுக்கு, இழக்க ஒண்டும் இல்லை.... அதாலை... புதுசா முயல வேண்டும்.

இப்ப, அயோத்தி ராமர் கோவிலுக்கு, சோடியா அசோகவன சீதாப்பிராட்டியார் கோவில் வேணுமா, வேணாமா?

புலிகளுக்கு பின்னர்........

கொள்கை 

கௌரவம்

நேர்வழி

தர்மம்

அப்படி  எதுவுமே  கிடையாது  எனக்கு

புலிகள்  விட்ட பிழையை  இனியும்  விட ஏலாது  காண்.

யார்  எப்படி  குத்தினாலும் அரிசியானால்  சரி

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

புலிகளுக்கு பின்னர்........

கொள்கை 

கௌரவம்

நேர்வழி

தர்மம்

அப்படி  எதுவுமே  கிடையாது  எனக்கு

புலிகள்  விட்ட பிழையை  இனியும்  விட ஏலாது  காண்.

யார்  எப்படி  குத்தினாலும் அரிசியானால்  சரி

அவ்வளவுதான் விசயம்....

இந்த சிங்களவன் ஒரு காலத்திலையும் எதையுமே பகிரவே போறதில்லை.

பிரிட்டிஷ் காரன் வர முன்னம், வன்னி ராச்சியம், கண்டி ராச்சியம் தமிழன் கையில். சுதந்திரம் சேர்ந்து போராடி, தனக்கு மட்டுமே  எண்டு வைத்திருக்கிறான் சிங்களவன்.

வந்த இந்திய ஆமியையும் சண்டையை போட்டு துரத்தினது தமிழன் ... தனக்கு மட்டுமே சுதந்திரத்தினை வைத்திருக்கிறது சிங்களவன்.

அதாலை.... சீதாபிராட்டி கோவில் தான் சரியான வழி எண்டு நம்ம முனி நினைக்கிறார்.

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

BJP Sri Lanka கிளை தொடங்கினால் இராமர் கோயில் கட்டுற திட்டமெல்லாம் இருக்கிறதா.. அல்லது அதற்காக ஏதேனும் தேவாலயம், பள்ளிவாயல்களை இடிக்கும் திட்டமே.......தும்... 🤥

இல்....ல.... சின்ன சந்தே..க..ம். 
 
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Nathamuni said:

அதாலை.... சீதாபிராட்டி கோவில் தான் சரியான வழி எண்டு நம்ம முனி நினைக்கிறார்.

ஏற்கனவே நுவரேலியாவில சீதா எலிய என்று ஒரு கோவில் இருக்கிறது தாங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறன். இந்தியாவில் நோக்கம் வேறு இந்தியா நினைத்தால் இலங்கையை என்னவும் செய்யலாம் என ஒரு பயமுறுத்தல் அதாவது தீவுப் பகுதி சீனாவுக்கு கொடுக்க போகிறோம் என இலங்கை அறிவித்த பிறகு இந்தியா வைத்த செக் தான் இது காலப்போக்கில் வடகிழக்கை இந்திய மாநிலமாக கூட அறிவிக்கலாம் என அறிக்கை விட்டால் நிலமை மோசமாகலாம் . அது மட்டுமில்லாமல் இனி ஈழத்தமிழர்களை இந்தியா கொஞ்சி விளையாடலாம் மட்டக்களப்பிலும் இந்திய தூதரகம் அமைய இருக்கிறதாம் என்றால் பாருங்கோவன்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

BJP Sri Lanka கிளை தொடங்கினால் இராமர் கோயில் கட்டுற திட்டமெல்லாம் இருக்கிறதா.. அல்லது அதற்காக ஏதேனும் தேவாலயம், பள்ளிவாயல்களை இடிக்கும் திட்டமே.......தும்... 🤥

இல்....ல.... சின்ன சந்தே..க..ம். 
 
விடிய, விடிய சீதா கதை... விடிஞ்சப்புறம் சீதை ராமருக்கு என்ன முறை கதையாய் கிடக்குது.... 😁

மேலை போய் எல்லாத்தையும் வாசியுங்கோ...  😎

என்ன விசயம் எண்டால், நுவரெலியா அசோகவனத்திலை சீதாப்பிராட்டியார் கோவிலை கட்டி, அயோத்தி ராமர் கோவிலோடை டைரக்ட் லிங்க் கொடுத்தால் தான்... எங்கடை 'இந்து' மதத்திலை எல்லாமே சரியா இருக்கும்.

இதுக்குலை பௌத்தம் எங்கை வந்தது எண்டது தான் இப்ப கேள்வி? 😜

6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஏற்கனவே நுவரேலியாவில சீதா எலிய என்று ஒரு கோவில் இருக்கிறது தாங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறன். இந்தியாவில் நோக்கம் வேறு இந்தியா நினைத்தால் இலங்கையை என்னவும் செய்யலாம் என ஒரு பயமுறுத்தல் அதாவது தீவுப் பகுதி சீனாவுக்கு கொடுக்க போகிறோம் என இலங்கை அறிவித்த பிறகு இந்தியா வைத்த செக் தான் இது காலப்போக்கில் வடகிழக்கை இந்திய மாநிலமாக கூட அறிவிக்கலாம் என அறிக்கை விட்டால் நிலமை மோசமாகலாம் . அது மட்டுமில்லாமல் இனி ஈழத்தமிழர்களை இந்தியா கொஞ்சி விளையாடலாம் மட்டக்களப்பிலும் இந்திய தூதரகம் அமைய இருக்கிறதாம் என்றால் பாருங்கோவன்

அதெல்லாம் சின்ன கோவில்.... காணாது. நாங்கள் நுவரெலியா முழுக்க கிளீயர் பண்ணி பெருசா கட்ட வேண்டும்....

அயோத்தில ராமருக்கு அம்மளவு பெரிசா கட்டும் போது, எங்கட நாட்டிலை இருந்த சீத்தா, தக்காளி தொக்கா...

ராவணன் சிவ பக்தன். இந்து...

சிங்களவன் இடையில வந்தவன்.... 😎

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

அதெல்லாம் சின்ன கோவில்.... காணாது. நாங்கள் நுவரெலியா முழுக்க கிளீயர் பண்ணி பெருசா கட்ட வேண்டும்....

அயோத்தில ராமருக்கு அம்மளவு பெரிசா கட்டும் போது, எங்கட நாட்டிலை இருந்த சீத்தா, தக்காளி தொக்கா...

ராவணன் சிவ பக்தன். இந்து...

சிங்களவன் இடையில வந்தவன்.... 😎

என்னத்தயெண்டாலும் அடிச்சு மூட்டுங்கள் இருக்கிற கோவணமும் காணாமல் போகாமல் இருந்தால் சரி 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

தெளிவில்லாமல் இருக்கிறது. புரியும்படியாக.. 🙏

வரலாற்றில், கலாச்சாரமும், சமயமும் முற்றிலும் வேறான பொதுக்கெயர் வந்த போது, சிங்கள அரச வம்சம் தம்மிடையே இருந்த ஆட்சி போட்டியில் முடியை அடைவதற்கும், அதன் பின் இராச்சியத்தை காப்பதற்கு, யாழ் இராச்சியத்தை கைப்பற்றுவதற்கு பொதுகெயருகு உதவி செய்ததே, சிங்கள அரச வம்சத்தினர் பொதுகெயருடனான பேரம்.

இந்த பேரத்தில், போதுகெயரின் மத மாற்றதை ஏற்று சிங்கள அரச வம்சமும் மதம் மாறியது, பெயரை மாற்றியது. 

லஸ்கரின் (Lascarin) என்பது, குறிப்பாக பொதுகெயர் சிங்கள இராச்சியத்தில் இருந்து திரட்டிய உள்நாட்டு (சிங்கள) கூலிப்படை, யாழ் இராச்சியத்தை கைப்பற்றுவதற்கு, மற்றும் உள்ளூர் கிளர்ச்சியை அடக்குவதடற்கும்.

இந்த lascarine படையை திரடுவதில் உதவி செய்த மற்றும் யாழ் இராச்சியத்தை கைப்பற்றுவதற்கு எடுபிடி செய்த சிங்கள அரச  வம்சத்தில் மற்றும் அதிகார வர்க்கதில் ( aristocracy) பொத்துக்கெயரால் சமூக அங்கீகாரம் வழங்க கொடுக்கப்பட பட்டப் பெயர்  Don  என்பதாகும். Don மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும் பல சமூக, நிர்வாக, வர்த்தக சலுகைகள் போதுகெயர் வழங்கினர்.

ஒல்லாந்தர், ஆங்கிலேயர் உடன் சிங்கள அரச மற்றும் அதிகார வம்சத்தின் பேரம் பொதுகெயரை விட இலகுவாக இருந்தது, ஏனெனில் ஒல்லாந்தர், பிரித்தானியர் மத மாற்றதில் கவனம் செலுத்தவில்லை, மற்றும் விட்டு கொடுத்தே ஆட்சி செய்தனர். பிரித்தானியர் பௌத்த மதத்தை காப்பது என்பது கண்டி இராச்சிய சரண் அடைவு ஒப்பந்தத்தில் பிரித்தானியரால் ஏற்கப்பட்ட நிபநதனை.

கவனமாக கூர்ந்து பார்த்தால், சிங்கள அரச மற்றும் அதிகார வம்சமே 1911 (அப்போதே சிங்கள பௌத்த மறுமலர்ச்சி ஆரம்பித்தது,   Bimslaw) தமது பெயரை சிங்கள மொழியிலும்,  பௌத்த மதத்துக்கும் மீள தொடங்கி இருந்தனர்.

பொதுக்கெயராலும், ஒல்லாந்தரால், இன்றைய கேரளம், தமிழ் நாட்டில் இருந்து, (வாசனை திரவியம்) கூலி வேலைக்கு கொண்டுவரப்பட்டவர்கள் (பொதுவாக அன்று சாதியில் குறைவாக பார்கப்பட்டவர்கள்), பொதுவாக அவர்களின் சொந்த மதம், மற்றும் தமிழ் பெயருக்கு மீளவில்லை. காரணம், மத மற்றும் பெயர் மாற்றம்  பெரும்பாலும் அவர்களின் சாதியை புதைக்க உதவியது. உதாரணம். Peraraa, Fonseka, Fernando, Pinto (Milinda Morogoda family had changed their name to Sinhala, Morogoda).

இதை பிஜேபி வரவுடன் ஒப்பிட்டால், மதம், கலாசாரம் ஒன்றும் தடை இல்லை. சிங்களம், இலங்கைத் தீவில் உள்ள ஒரு பகுதியான தமிழ் இனத்தை அடகு வைப்பதும், அதை பிஜேபி ஏறுக்கொள்வதும், எல்லாம் வரலாற்றில் நடந்தது போல ஒருங்கு இணைகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kadancha said:

நன்றி கடைஞ்சா. கடைஞ்செடுத்துக் கரைத்துக் குடித்திருக்கிறீர்கள்.. 😂

ஆனால் எனக்குள்ள கேள்வி..

இலங்கைக்கு bjp வந்தால் தமிழ்க் கிறீத்துவர்களின்/முசிலிம்களின் நிலை என்ன. (வகிபாகம்)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

விடிய, விடிய சீதா கதை... விடிஞ்சப்புறம் சீதை ராமருக்கு என்ன முறை கதையாய் கிடக்குது.... 😁

மேலை போய் எல்லாத்தையும் வாசியுங்கோ...  😎

என்ன விசயம் எண்டால், நுவரெலியா அசோகவனத்திலை சீதாப்பிராட்டியார் கோவிலை கட்டி, அயோத்தி ராமர் கோவிலோடை டைரக்ட் லிங்க் கொடுத்தால் தான்... எங்கடை 'இந்து' மதத்திலை எல்லாமே சரியா இருக்கும்.

இதுக்குலை பௌத்தம் எங்கை வந்தது எண்டது தான் இப்ப கேள்வி? 😜

அதெல்லாம் சின்ன கோவில்.... காணாது. நாங்கள் நுவரெலியா முழுக்க கிளீயர் பண்ணி பெருசா கட்ட வேண்டும்....

அயோத்தில ராமருக்கு அம்மளவு பெரிசா கட்டும் போது, எங்கட நாட்டிலை இருந்த சீத்தா, தக்காளி தொக்கா...

ராவணன் சிவ பக்தன். இந்து...

சிங்களவன் இடையில வந்தவன்.... 😎

நீங்கள் எல்லாவற்றையும் நகைச்சுவையாக எடுக்கிறீர்கள். 😀

குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் இந்தியா இதற்கான அடிபோடுகிறது என்று நான் பலமுறை குறிப்பிட்டிருந்தேன். அப்போது கூட எனக்கும் இந்தத் திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றப் போகிறார்கள் என்கின்ற ஐயம் இருந்தது. 

ஆனால் அவர்களின் அகண்ட பாரதம் என்கின்ற திட்டம் தற்போது மெல்ல மெல்ல வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்துவிட்டது. 

உண்மையில் இது மிகவும் முக்கியமான விடயம்.

இந்தச் செய்தி தமிழ்க் கிறீத்திவர்களிடையே பதற்றத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தும் என்பது உண்மை. ஏனென்றால் bjp யின், சச்சியின் கடந்தகால செயற்பாடுகள் இதற்கு சாட்சி.

(இந்தியா சீன பாகித்தான் யுத்தம் நெடுந்தீவிலும் கச்சதீவிலும்தான் ஆரம்பமாகிறதோ தெரியவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையமும் நெடுந்தீவின் கல்லெறி தூரத்திலேயே உள்ளது... 😂)

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

நன்றி கடைஞ்சா. கடைஞ்செடுத்துக் கரைத்துக் குடித்திருக்கிறீர்கள்.. 😂

ஆனால் எனக்குள்ள கேள்வி..

இலங்கைக்கு bjp வந்தால் தமிழ்க் கிறீத்துவர்களின்/முசிலிம்களின் நிலை என்ன. (வகிபாகம்)

அதை தான் முன்பு சொன்னேன். 

வறட்டு கௌரவத்தை கட்டி வைத்து விட்டு, பிஜேபி உடன், இலங்கைத் தீவின் உள்ள சமய நிர்வாகத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், பிஜேபி இன் அகண்ட பரத் கொள்கையுடன் இலங்கை தீவில் தமிழ் அதிகாரம் உள்ள பகுதிகள் இருக்கும் என்ற பேரம். இலங்கைத் தீவின் பெரும் பகுதி தமிழர கைக்கு படிப்படியாக வரலாம்.

சிங்களம் சீனப்பட்டு புழு வலைக்குள் முற்றாக சிக்கி விட்டதால் இந்த பேரம் கடினம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kadancha said:

யுத்தம்தான் இறுதியில்.. 

மீண்டும் தமிழன்தான் இரத்தம் சிந்தப்போகிறான் போல தென்படுகிறது. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kapithan said:

யுத்தம்தான் இறுதியில்.. 

மீண்டும் தமிழன்தான் இரத்தம் சிந்தப்போகிறான் போல தென்படுகிறது.

நாங்கள் பேரத்தை வைக்க விட்டால், சிங்களசம் தமிழ் பகுதிகளையும், உரிமைகளையும் பிஜேபி க்கு பேரத்துக்கு  வைக்கும்  (யாழ் இராச்சியத்துக்கு நடந்தது போல, எம்மிடம் இராச்சியம் இல்லாவிட்டாலும்).

இப்பொது சிங்களம் சீனாவை வைத்து பேரத்தை நடத்துகிறது 

வேண்டுமாயின், சிங்கள பகுதியையும் சேர்த்து வைப்போம், ஆனால் அகண்ட பரத்துக்கு, பாரத் படைகளே சிங்களத்தை கையாளவேண்டும் என்று.  

ஏனென்றால், சீனாவை தவிர, உலகத்தின் எல்லா பகுதியும், தெற்காசியாவில் மற்ற நாடுகளை விட, இலங்கை தீவை இந்திய நிலபரப்பின் இணைபிரியா அங்கமாக பார்க்கின்றன.

கிந்தியாவை, சீனாவே ராணுவ கோட்பாட்டில் பிராந்திய சக்தி என்று ஏற்றுக் கொண்டு இருக்கும் நிலையில், வேறு தெரிவுகள்?   

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு 1 - 2 வருடங்களுக்கு முன்  பிஜேபி இன் கொள்கை பற்றி சொல்லி இருந்தேன்.

இலங்கைத் தீவு - பௌத்த பெரும்பான்மை உள்ள  தொன்மையான இந்து பூமி., எனவே இந்து ஆட்சி வருவதே பொருத்தம் என்பது பிஜேபி இன் கொள்கை.

காஷ்மீர் - இப்படியே நோ க்குகிறது பிஜேபி, முஸ்லிம் பெரும்பான்மையுடன்.

எனது கருத்து, இலங்கைத் தீவில் இந்து மற்ற மதங்களை ஊக்குவிக்க இல்லை என்றாலும், ஒடு க்கவில்லை; பௌத்த மதம் மற்ற மதங்களை விட உயர்வானது என்று சொல்லி ஒடுக்கியது போல.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்னத்தயெண்டாலும் அடிச்சு மூட்டுங்கள் இருக்கிற கோவணமும் காணாமல் போகாமல் இருந்தால் சரி 

நீங்கள் இப்படி பயப்படுகிறீர்கள் ஆனால் bjp யின் சாமி பெண்ணின் சேலையை வில்லன் உரிய உரிய சேலை கொடுத்து கொண்டிருந்தவர் என்று நம்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

வரலாற்றில், கலாச்சாரமும், சமயமும் முற்றிலும் வேறான பொதுக்கெயர் வந்த போது, சிங்கள அரச வம்சம் தம்மிடையே இருந்த ஆட்சி போட்டியில் முடியை அடைவதற்கும், அதன் பின் இராச்சியத்தை காப்பதற்கு, யாழ் இராச்சியத்தை கைப்பற்றுவதற்கு பொதுகெயருகு உதவி செய்ததே, சிங்கள அரச வம்சத்தினர் பொதுகெயருடனான பேரம்.

இந்த பேரத்தில், போதுகெயரின் மத மாற்றதை ஏற்று சிங்கள அரச வம்சமும் மதம் மாறியது, பெயரை மாற்றியது. 

லஸ்கரின் (Lascarin) என்பது, குறிப்பாக பொதுகெயர் சிங்கள இராச்சியத்தில் இருந்து திரட்டிய உள்நாட்டு (சிங்கள) கூலிப்படை, யாழ் இராச்சியத்தை கைப்பற்றுவதற்கு, மற்றும் உள்ளூர் கிளர்ச்சியை அடக்குவதடற்கும்.

இந்த lascarine படையை திரடுவதில் உதவி செய்த மற்றும் யாழ் இராச்சியத்தை கைப்பற்றுவதற்கு எடுபிடி செய்த சிங்கள அரச  வம்சத்தில் மற்றும் அதிகார வர்க்கதில் ( aristocracy) பொத்துக்கெயரால் சமூக அங்கீகாரம் வழங்க கொடுக்கப்பட பட்டப் பெயர்  Don  என்பதாகும். Don மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும் பல சமூக, நிர்வாக, வர்த்தக சலுகைகள் போதுகெயர் வழங்கினர்.

ஒல்லாந்தர், ஆங்கிலேயர் உடன் சிங்கள அரச மற்றும் அதிகார வம்சத்தின் பேரம் பொதுகெயரை விட இலகுவாக இருந்தது, ஏனெனில் ஒல்லாந்தர், பிரித்தானியர் மத மாற்றதில் கவனம் செலுத்தவில்லை, மற்றும் விட்டு கொடுத்தே ஆட்சி செய்தனர். பிரித்தானியர் பௌத்த மதத்தை காப்பது என்பது கண்டி இராச்சிய சரண் அடைவு ஒப்பந்தத்தில் பிரித்தானியரால் ஏற்கப்பட்ட நிபநதனை.

கவனமாக கூர்ந்து பார்த்தால், சிங்கள அரச மற்றும் அதிகார வம்சமே 1911 (அப்போதே சிங்கள பௌத்த மறுமலர்ச்சி ஆரம்பித்தது,   Bimslaw) தமது பெயரை சிங்கள மொழியிலும்,  பௌத்த மதத்துக்கும் மீள தொடங்கி இருந்தனர்.

பொதுக்கெயராலும், ஒல்லாந்தரால், இன்றைய கேரளம், தமிழ் நாட்டில் இருந்து, (வாசனை திரவியம்) கூலி வேலைக்கு கொண்டுவரப்பட்டவர்கள் (பொதுவாக அன்று சாதியில் குறைவாக பார்கப்பட்டவர்கள்), பொதுவாக அவர்களின் சொந்த மதம், மற்றும் தமிழ் பெயருக்கு மீளவில்லை. காரணம், மத மற்றும் பெயர் மாற்றம்  பெரும்பாலும் அவர்களின் சாதியை புதைக்க உதவியது. உதாரணம். Peraraa, Fonseka, Fernando, Pinto (Milinda Morogoda family had changed their name to Sinhala, Morogoda).

இதை பிஜேபி வரவுடன் ஒப்பிட்டால், மதம், கலாசாரம் ஒன்றும் தடை இல்லை. சிங்களம், இலங்கைத் தீவில் உள்ள ஒரு பகுதியான தமிழ் இனத்தை அடகு வைப்பதும், அதை பிஜேபி ஏறுக்கொள்வதும், எல்லாம் வரலாற்றில் நடந்தது போல ஒருங்கு இணைகிறது.

உங்கள் வரலாற்றுப் புரிதலில் சிறு கவனிப்புகளை அவதானியுங்கள். 

1. 1498ல் கோழிக்கோடு வந்த, போர்த்துகேயர்கள் 6 மாதங்களின் பின்னர் வந்து முதலில் பிடித்தது கொச்சின். அதே காலப்பகுதியில் கிளம்பி வந்த விஜயநகர பேரரசின் பலத்துக்கு ஈடு கொடுக்க முடியாது என்று தெரிந்தவுடன், அவர்களுடன் இணக்கத்துக்கு வந்து வணிக துறையாகவே கொச்சினை வைத்து இருந்தார்கள். 

2. அவர்களது இசைவுடன், சுத்தி பயணித்து,  தமிழ்நாட்டின் சென்னையின் மேல, (இன்றய ஆந்திர எல்லையில்) புலிக்கர்ட் (பழவேட்காடு) என்னுமிடத்தினை பிடித்தது 1502. இது ஒரு வணிக துறையாகவே விளங்கியது.

3. இவ்வாறு சுத்திப் போகின்ற வேளையில், இடையே காணப்பட்ட யாழ்ப்பாண ராஜ்ஜியத்தின் தீவுப்பகுதிகளை. 1499க்கும் - 1501 க்கும் இடையே பிடித்து விட்டார்கள். இதுவே அந்த பகுதியில் இவர்களது முதலாவது காலனி.

4. யாழ்ப்பாண ராஜ்ஜியத்துக்கு சிங்களத்தினால் ஆபத்து வந்த போதெல்லாம், உதவிக்கு வந்தது, தென் தமிழகம். அதுவே விஜயநகர (தெலுங்கு) படையெடுப்பில் சிக்கியதால், போர்த்துகேயர்கள், அதே விஜயநகர பேரரசுடன் வணிக உடன்படிக்கையை எட்டி இருந்ததால், இந்த தீவுப்பகுதி பறிபோனதை, யாழ் ராஜ்ஜிய மன்னன் தடுக்க முடியவில்லை. மேலும், போர்த்துகேயர்களுக்கு, பழக்கப்பட்ட யானைகளை கப்பமாக கொடுத்து, யாழ் ராஜ்யத்தினை, 1614 வரை சங்கலி மன்னன் வரை (போர்த்துக்கேயரின் பின்னான 3வது அரசன்) ஆளக்கூடியதாக இருந்தது.

5. Cais  என்னும் போர்த்துக்கேய சொல்லின் பொருள், துறை (pier). தாம் பிடித்த இடத்துக்கு வைத்த பெயர் அது. இது பின்னர் kayts ஆக ஒல்லாந்தர் மாத்தினர்.

6. நெடுந்தீவு, lha das Vacas (மாடுகளின் தீவு) Island of Cows என்று போர்த்துக்கேயரால் அழைக்கப்பட்டது.  இது பின்னர் Delft  ஆக ஒல்லாந்தர் மாத்தினர். வேலணையின் பழைய பெயர் Leiden.

7. கொழும்புக்கு போர்த்துக்கேயர் போனது 1505. 1597ல் தான் கோட்டை, சீதாவாக்கை இரண்டும் அவர்கள் வசமானது.

இதே விஜய நகர பேரரசு, சிங்கள அரச குடும்பங்களுடன் மண உறவு கொண்டதை, போர்த்துகேயம் தடுக்க வில்லை. காரணம் ராஜதந்திர நல்லுறவு.

யாழ்ப்பாண ராஜ்ஜியம் போர்த்துக்கேயருடன் நல்லுறவை 1614 வரை பேணியது. மன்னாரில், 3000 பேரை மதம் மாத்திய விவகாரத்தால், மோதல் உண்டாக, உண்டான போரில் சங்கிலியன் வீழ்ந்தான். போர்த்துக்கேயர் நேரடி ஆட்சி உண்டானது. இடையில் வன்னி ராஜ்ஜியம் இருந்த காரணத்தினால், போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், யாழ்ப்பாண ராசதானியை, சிங்கள ராசதானிகள் உடன்  சேர்க்காது தனியே ஆளவேண்டி இருந்தது. 

8, விஜயநகர பேரசுக்கு மேலே, கோவா பகுதியே போர்த்துக்கேயரின் ஒரேயொரு இந்திய துணைக்கண்ட காலனி. இது வசமானது 1510ல். அதுனுடன் சேர்ந்தே பிடித்த பம்பாய் பகுதியினை, போர்த்துக்கேய இளவரசியினை மணம் செய்த, இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸ் மன்னனுக்கு சீதனமாக கேட்டு வாங்கிய காரணத்தால், இங்கிலாந்து வசமானது. (அதன் காரணமாகவே, கோவாவை, பின்னர், ஆங்கிலேயர்கள் விட்டு வைத்தார்கள்)

9. கிழக்கிந்திய கொம்பனி பதிவு திகதி 31 டிசம்பர் 1600. போர்த்துக்கேயர், டென்மார்க்கர்கள், ஒல்லாந்தர், பிரெஞ்சு என பெரும் பலத்துடன், மும்மரமாக போட்டியில் ஒரு பகுதிக்குள் காலடி எடுத்து வைப்பது சிரமமாக இருந்தது.

இடையே வேறு, இங்கிலாந்தின் உள்நாட்டு சண்டையால், இங்கிலாந்து, மன்னர் ஆட்சி இல்லாமல் 11 வருடம் மக்களாட்சியில் என்னும் பெயரில் ராணுவ ஆட்சியில் இருந்தது.  

மீண்டும் வந்த மன்னரே இரண்டாம் சார்லஸ். 

10. இந்த சீதன விடயம் காரணமாக, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, இந்திய துணைக்கண்டத்தினுள் நுழையும் போது, உரிமையுடன் பம்பாய் வந்து தனது ராஜாங்கத்தினை, (நோகாமல் நொங்கு எடுத்து) ஆரம்பிக்க கூடியதாக இருந்தது. 

10. ஆக, சொல்ல வருவது என்னவென்றால், தீவுப்பகுதியை சேர்ந்த, அடியேன், புங்கையூரான், நந்தன், விசுகர் அனைவரது முன்னோர்களது பூமியானது, அந்தப்பகுதியில் உண்டான முதலாவது ஐரோப்பிய காலனி என்பதே உண்மை.

****

சொல்லவரும் இன்னுமொரு விடயம், ஒரு விடயம் நடக்க வேண்டுமென்றால், அதுவாக எல்லாம் சரியாக பொருந்தி வரும். மேலே இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனிக்கு அமைத்தது போல.

அதேபோல, தமிழரரான எமக்கும் சரியாக பொருந்தி வரும் காலம் நெருங்கி வரும். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்னத்தயெண்டாலும் அடிச்சு மூட்டுங்கள் இருக்கிற கோவணமும் காணாமல் போகாமல் இருந்தால் சரி 

எங்கடை கோவணத்தையும் உறுவிக்கொண்டெல்லே போட்டினம் சிங்களவர்கள். 

அதாலைதான் சொல்லுறன், அவையள் கோவணத்தை உருவினாத்தான், எமக்காவது எதாவது தேறும்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, tulpen said:

ஆளாளுக்கு உசுப்பேத்தி உசுப்பேத்தி இலங்கையில் தமிழ் மக்களின் இருப்புக்கே கொள்ளி வைச்சிட்டு போய் சேர்ந்திட்டாங்க. நானும் போய் சேர முதல் புதுசா இன்னொரு  கொள்ளி வைச்சுட்டு போனா தானே என்கட்டை வேகும்   என்று மறவன்புலவு  நினைச்சுட்டார்.

குளிர் நாடுகளிலை இருந்து, தாயகத்தில் அனல் பறக்கேக்க ஜாலியா விசில் அடித்து கிறிக்கட்  ஸகோர் கேட்டு கிக்  ஆகின  சிறிய கூட்டமும், நாங்கள்  போய் சேர முதல் அந்த கொள்ளிக்கட்டை எரியாதா? எப்ப அதிலை  குளிர் காயலாம் என்று அலைவது தெரியுது. 😂😂

14 hours ago, விசுகு said:

எங்கேயோ  கேட்ட  குரல்

கன நாளைக்கு  கொண்டைய  மறைக்க முடியாது  தானே???

Bildergebnis für புலிகேசி

விசுகர்... கவனித்தீர்களா... :grin:
ருல்ப்பன், பூடகமாக... ஏதோ  சொல்லுறார்.  🤣    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.