Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழ்நெட்" இணையத்தளத்தை முடக்கியது சிறிலங்கா

Featured Replies

"தமிழ்நெட்" இணையத்தளத்தை முடக்கியது சிறிலங்கா

[செவ்வாய்க்கிழமை, 19 யூன் 2007, 22:07 ஈழம்] [செ.விசுவநாதன்]

"தமிழ்நெட்" இணையத்தளத்தை சிறிலங்கா அரசாங்கம் முடக்கியுள்ளது என்று "தமிழ்நெட்" இணையத்தளம் அறிவித்துள்ளது.

"சுயாதீனமான குழுவைச் சேர்ந்தவர்களால் இலங்கையின் வடக்கு - கிழக்கு செய்திகளை கடந்த 10 ஆண்டுகளாக நாம் வெளியிட்டு வருகிறோம். சிறிலங்காவில் எமது இணையத் தளத்தை முடக்கி "தமிழ்நெட்" இணையத்தளத்துக்கு 10 ஆம் ஆண்டு பரிசை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியுள்ளது. இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை" என்றும் தமிழ்நெட் கருத்துத் தெரிவித்துள்ளது.

"தமிழ்நெட்" முடக்கப்பட்டது குறித்து உள்ளுர் இணைய சேவையாளர்களிடம் எமது படிப்பாளர்கள் கேட்டபோது சிறிலங்காவின் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கமைய முடக்கியிருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் "ஈழநாடு" நாளிதழை தீக்கிரையாக்கினர். இணைய உலகம் உருவான பின்பு முதல் முறையாக "தமிழ்நெட்" இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டிருப்பது குறித்து விசாரணைகள் நடத்த அனைத்துலக ஊடக அமைப்பினர் வருகை தர உள்ள நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இத்தகைய செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது.

அனைத்துலகத்தின் முன்பாக- ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் முன்பாக- மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்துவோரின் முன்பாக இந்த விடயத்தை "தமிழ்நெட்" முன்வைக்கிறது" என்றும் தனது செய்தியில் "தமிழ்நெட்" தெரிவித்துள்ளது.

ஒரு ஊடக நிறுவனத்தின் ஊடக சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் மட்டுமே சிறிலங்கா அரசாங்கம் பறித்திருக்கவில்லை. ஆண்டாண்டு காலமாய் சிங்களப் பேரினவாதம் மேற்கொண்டு வரும் இனச்சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றின் ஒரு அங்கமாகவே "தமிழ்நெட்" முடக்கத்தை "புதினம்" இணையத்தளமும் கருதுகிறது. சிங்களப் பேரினவாதத்தின் இந்த அப்பட்டமான ஒடுக்குமுறைக்கு எதிரான குரலில் "புதினம்" தன்னையும் இணைத்துக் கொள்கிறது.

புதினம்

Edited by thileep

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகச் செய்திக்கு பதிலளிக்கத் தெரியாதவர்கள்கள், மக்களைக் கிணற்றுத் தவளையாக்கி முடக்கச் சிந்திக்கின்றார்கள்

Sri Lanka blocks TamilNet

TamilNet has completed 10th year of its web publication on 7th June 2007. TamilNet is a globally based news agency, run by an independent group of persons, to cover news and views related especially to the North and East of Sri Lanka. TamilNet has earned its credibility for news reporting and has become an indispensable news source to opinion makers worldwide. Not surprisingly, the Government of Sri Lanka has thought of rewarding the TamilNet on its 10th anniversary by clandestinely blocking it to the public of Sri Lanka.

Readers from Sri Lanka have informed TamilNet that local internet service providers have indicated that the access block was implemented by directives from "higher authorities."

Even though the Sri Lankan state has a history behind it for silencing the voice of the Tamil public from the time it burnt down the Eezhanaadu newspaper office in 1981 in Jaffna, this is the first time, after the advent of Internet, it has moved to block access to a transnational website such as TamilNet.

With this unprecedented move, Colombo has denied the public of Sri Lanka access to independent NorthEast news, development related views and diaspora opinion on Tamil affairs which are otherwise not covered by the local media.

The de facto climate of self-censorship that has already plagued local media in Sri Lanka has now culminated in mischievious infringement into the freedom of global media. The timing of the act, strangely coincides with the scheduled visit of the representatives of Reporters sans frontières (RSF) and Committee to Protect Journalists (CPJ) to Jaffna.

Sri Lanka is plunging into undeclared military dictatorship and shameless ethnic cleansing, with open preparedness to challenge all norms of the International Community.

The TamilNet wishes to place the issue to the conscience of the Global Community and to all those proclaimed guardians of Democracy, Human Rights and Freedom of Expression.

-tamilnet-

It shows the incapability of GoSL the failed state. I wonder whether they may take a "higher decision" to stop all the internet activities very soon. They are now travelling back to the stone ages. Good Luck GoSL and its people. :rolleyes::lol:

Edited by Eelathirumagan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருக்கின்ற எவருக்கும் தமிழ்நெற் போக வேண்டிய தேவை ஏற்பட்டால் இந்த இணையத்தைப் பாவித்துப் போக முடியும்.

http://www.ipfaker.info/

இதில் Enter a URL to visit: என்பதில் தமிழ்நெற்றின் முகவரியை அடித்து go ஐ அழுத்தினால் புதிய ஒரு சாளரம் வரும். அதில் தமிழ்நெற்றைப் பார்வையிட முடியும். :rolleyes::lol:

இதில் உள்ள குறைபாடு என்னவென்றால், சிலவேளைகளில் மிக மெதுவாகத் தான் பக்கங்கள் வரும். இல்லையென்றால் இணையம் தொடர்பில் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் வேறுவழியில்லை. இப்படி ஏதும் வழிகளில் தான் உங்களுக்கு உதவ முடியும். இப்படி நிறைய proxy இணையங்கள் இருப்பதால் அவற்றையும் இது வேலை செய்ய மறுத்தால் தேடிப்பிடியுங்கள். ( மென்பொருட்களும் உபயோகித்துக் கொள்ள முடியும்.)

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நெற் செய்தியோடைகளை வழங்குகிறது. அவற்றை கூகுள் றீடர் போன்ற ஏதாவதொன்றில் இட்டு செய்திகளை அறிந்து கொள்ள முடியும்.

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi...ww.tamilnet.com

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெட் இணையத்தளத்தின் முடக்கம் சிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதத்தின் இன்னொருமுகம்.

Written by Sankathi Canada - Jun 20, 2007 at 01:40 AM

"தமிழ்நெட்" இணையத்தளத்தை சிறிலங்கா அரசாங்கம் இன்றுதொடக்கம் முடக்கியுள்ளது என்று "தமிழ்நெட்" இணையத்தளம் அறிவித்துள்ளது. தமிழ்நெட் இணையத்தளத்தின் முடக்கம் ஐனநாயக நாடு என்று தன்னைப் தானே பறைசாற்றும் சிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதத்தின் இன்னொருமுகம்.

"சுயாதீனமான குழுவைச் சேர்ந்தவர்களால் இலங்கையின் வடக்கு - கிழக்கு செய்திகளை கடந்த 10 ஆண்டுகளாக நாம் வெளியிட்டு வருகிறோம். சிறிலங்காவில் எமது இணையத் தளத்தை முடக்கி "தமிழ்நெட்" இணையத்தளத்துக்கு 10 ஆம் ஆண்டு பரிசை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியுள்ளது. இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை" என்றும் தமிழ்நெட் கருத்துத் தெரிவித்துள்ளது.

"தமிழ்நெட்" முடக்கப்பட்டது குறித்து உள்ளுர் இணைய சேவையாளர்களிடம் எமது படிப்பாளர்கள் கேட்டபோது சிறிலங்காவின் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கமைய முடக்கியிருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் "ஈழநாடு" நாளிதழை தீக்கிரையாக்கினர். இணைய உலகம் உருவான பின்பு முதல் முறையாக "தமிழ்நெட்" இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டிருப்பது குறித்து விசாரணைகள் நடத்த அனைத்துலக ஊடக அமைப்பினர் வருகை தர உள்ள நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இத்தகைய செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது.

அனைத்துலகத்தின் முன்பாக- ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் முன்பாக- மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்துவோரின் முன்பாக இந்த விடயத்தை "தமிழ்நெட்" முன்வைக்கிறது" என்றும் தனது செய்தியில் "தமிழ்நெட்" தெரிவித்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் ஊடகத்துறையினர் பலரும், பல ஊடகங்களூம் திட்டமிட்ட முறையில் தொடர்ச்சியான முறையில் சிங்கள ஆட்சியாளர்களால் அநாகரிகமானதும் நவின உலக சமூகம் வெட்க்கித்தலை குனியக்கூடிய வன்முறையின் உச்சமாக தமிழ் ஊடக நிறுவனங்களதும் ஊடகத்துறைகளினதும் சுதந்திரங்களையும் கருத்துச் சுதந்திரங்களையும் மட்டுமே சிறிலங்கா அரசாங்கம் பறித்திருக்கவில்லை. ஆண்டாண்டு காலமாய் சிங்களப் பேரினவாதம் மேற்கொண்டு வரும் இனச்சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றின் ஒரு அங்கமாகவே "தமிழ்நெட்" முடக்கத்தை "சங்கதி" இணையத்தளமும் கருதுகிறது. சிங்களப் பேரினவாதத்தின் இந்த அப்பட்டமான ஊடக சுதந்திர ஒடுக்குமுறைக்கு எதிரான குரலில் "சங்கதி" தன்னையும் இணைத்துக் கொள்கிறது.

நன்றி - சங்கதி

சீப்பை ஒளித்து விட்டால் கல்யாணம் நிண்று விடும் எண்று நம்பிறவை நம்பட்டும்.... நம்புற்றவையில இலங்கை அரச தரப்பு முன்னிலையிலை இருப்பது மகிழ்ச்சி...!

போறபோக்கைப் பார்த்தால் யாழ் இணையத்தையும் சிறீ ளங்கா அரசு தடை செய்யும் போல இருக்கின்றதே?

தமிழ்நெட் இலங்கையில் இருந்தா செயற்படுகின்றது? இதை வெளிநாட்டில் இருந்து செயற்படுத்த முடியாதா?

CNN, REUTERS, AFP, BBC, NEY YORK TIMES என அனைத்து மேலை நாட்டு ஊடகங்களும் தமிழ்நெட்டை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடுகின்றன. சிறீ லங்கா அரசின் இந்தச் செயல் கோமாளித்தனமானது என்பதோடு.. பல எதிர்மறையான விளைவுகளை சிறீ லங்கா அரசுக்கு ஏற்படுத்தப்போகின்றது....

மகிந்து சிந்தனை வாழ்க! பாடையில் ஏறும் காலம் மகிந்து மாத்தாயாவுக்கு மிக வேகமாக நெருங்கிக்கொண்டு இருக்கின்றது போல தெரிகின்றது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நெற் செய்தியோடைகளை வழங்குகிறது. அவற்றை கூகுள் றீடர் போன்ற ஏதாவதொன்றில் இட்டு செய்திகளை அறிந்து கொள்ள முடியும்.

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi...ww.tamilnet.com

செய்தியோடை (Rss Feed) களில் ஒருபோதும் செய்திகளின் முழுவடிவத்தையும் பார்க்கமுடியாது.. எனவே Proxyயை பாவித்து செல்வதுதான் சிறந்த வழி.

Edited by Kishaan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாத்தையும் முடக்குங்கோ ஆனால் ஈழத்தமிழர்களின் விடுதலை உணர்வுகளையோ, அல்லது விடுதலைப்போராட்டத்தையோ ஒருத்தராலும் முடக்க முடியாது.

இந்த சர்வதேஷநாடுகள் ஏதோ த.ஈ.வி.புலிகளை தடை செய்கிறோம், அதை முடக்கிறோம் இதை முடக்கிறோம் என்று எல்லாம் புடுங்கித்தானே பார்த்தவை.

இறுதியாக என்னாச்சு?மக்களின் ஆதரவு இன்னும் அதிகரித்ததேயன்றி வேறொன்றுமில்லை.

அதாவது எனது கருத்து என்னவென்றால் இந்த தடை, முடக்கம் எல்லாம் சிங்களவனைத் தான் ஆட்டியசைக்குமே ஒழிய தமிழரையல்ல.

போறபோக்கைப் பார்த்தால் யாழ் இணையத்தையும் சிறீ ளங்கா அரசு தடை செய்யும் போல இருக்கின்றதே?

தமிழ்நெட் இலங்கையில் இருந்தா செயற்படுகின்றது? இதை வெளிநாட்டில் இருந்து செயற்படுத்த முடியாதா?

CNN, REUTERS, AFP, BBC, NEY YORK TIMES என அனைத்து மேலை நாட்டு ஊடகங்களும் தமிழ்நெட்டை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடுகின்றன. சிறீ லங்கா அரசின் இந்தச் செயல் கோமாளித்தனமானது என்பதோடு.. பல எதிர்மறையான விளைவுகளை சிறீ லங்கா அரசுக்கு ஏற்படுத்தப்போகின்றது....

மகிந்து சிந்தனை வாழ்க! பாடையில் ஏறும் காலம் மகிந்து மாத்தாயாவுக்கு மிக வேகமாக நெருங்கிக்கொண்டு இருக்கின்றது போல தெரிகின்றது....

நீங்க வேற அடுத்த தடை இவைகுதானே CNN, REUTERS, AFP, BBC, NEY YORK TIMES

தன் காட்டுதார்பாரின் மூலம் எமக்கு நன்மை செய்கிறார் அன்றி தீமை செய்யவில்லை மகிந்த ஆனால் பாதிக்கப்படும் மக்கள்தான் பாவம்.தமிழீழ உருவாக்கத்தை விரைவு படுத்துகிறார் மகிந்த இந்த கால கட்டம் எரித்திரிய போராட்டத்தின் இறுதிகட்டம் போல இருக்குது :blink:

இத்தடை... சிங்கள மக்களுக்கே ஒழிய தமிழருக்கல்ல... :blink:

தமிழீழத்தில் யாரப்பா நித்தியம் இணயத்தில் உலாவுகின்றனர்....

தடைசெய்தால் வேறுவழிகளில் பார்க்க எவ்வளவோ வழிகள் உள்ளது... தமிழருக்கு

ஆனால் சிங்களவருக்கு...... :unsure:

சமர்களில் இலங்கை படைத்தரப்பு சந்திக்கும் படுதோல்விகள் பற்றிய செய்திகள் சிங்கள மக்களை சென்றடைய கூடாது என்பது தான் காரணம். விடுதலைப் புலிகளால் மீட்கப்படும் படையினரது சடலங்களை அவர்களது பெயர், முகவரி, இராணுவ இலக்கம், தேசிய அடையாள அட்டையின் இலக்கம் போன்ற விபரங்களுடன் தமிழ் நெற் பிரசுரித்து வந்தது இது இலங்கை அரசின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பாரிய இடையூறாக இருந்திருக்கும் அது தான் இந்த தடை.

முடக்குதல் என்ற நடவடிக்கை மூலம் இன்னும் பலவற்றை முளைக்கச் செய்கின்றார்கள். எதையும் முடக்க முடியவில்லை. இதையும் முடக்க முடியாது. 2500 ஆண்டுகள் பழமைவாந்த பௌத்த நாகரிகத்தைப் பின் பற்றும் கோமாளிகள் நாகரின் காலத்தை நோக்கிப் பின் நோக்கி வளர்கின்றார்கள். மாட்டுவால் போன்று .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது சீனாவினுடைய "The Great Firewall" ஐ தான் ஞாபகப்படுத்துகிறது.. சீனாவில் எந்த கணனியில் இருந்தும் CNN.com ஐ பார்க்கமுடியாது.. அதை மீறி பார்ப்பவர்களுக்கு 2 வருட கடுங்காவல் தண்டனை.. அதேபோன்றுதான் இதுவும்..

சீனாவில் இதுபோன்று பல "Filter" களை உருவாக்கி சட்டங்களையும் உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Edited by Kishaan

  • கருத்துக்கள உறவுகள்

சமர்களில் இலங்கை படைத்தரப்பு சந்திக்கும் படுதோல்விகள் பற்றிய செய்திகள் சிங்கள மக்களை சென்றடைய கூடாது என்பது தான் காரணம். விடுதலைப் புலிகளால் மீட்கப்படும் படையினரது சடலங்களை அவர்களது பெயர், முகவரி, இராணுவ இலக்கம், தேசிய அடையாள அட்டையின் இலக்கம் போன்ற விபரங்களுடன் தமிழ் நெற் பிரசுரித்து வந்தது இது இலங்கை அரசின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பாரிய இடையூறாக இருந்திருக்கும் அது தான் இந்த தடை.

இப்பிடித்தான் தமிழ் மக்களுக்கு செய்தி போகக்கூடாது என்ற நினைப்பில் 87ல் இந்திய இராணுவம் ஈழமுரசு , நிதர்சனம் போன்ற ஊடகங்களுக்கு குண்டு போட்டு அழித்துவிட்டு சண்டையைத் தொடக்கினவை.

விடுதலைப்புலிகள், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள, புலிகளின் தலைவர்களை உலங்குவானூர்திகளில் கொழும்புக்கு ஏற்றி சென்ற சம்பவ புகைப்படத்தினை முரசொலி பத்திரிகையில் வந்ததினால், இந்தியா இராணுவ அனுசரனையுடன் ஒட்டுக்குழுக்களினால் முரசொலி பத்திரிகை ஆசிரியரின் மகன் அகிலன் படுகொலை செய்யப்பட்டார். இப்படியான சம்பவங்களினால்(ஊடக தணிக்கையினால்) அந்தக்காலத்தில் இந்திய இராணுவத்தினால் ஒரு ஊரில் மேற்கொள்ளப்படும் கொலைகள், கற்பளிப்புக்கள், களவுகள் பக்கத்து ஊருக்கு தெரிவதில்லை.

இப்பொழுதும் தென் தமிழீழத்தில் கருணா குழுவின் தடையினால் தினக்குரல், வீரகேசரி போன்ற ஊடகங்கள் மக்களுக்கு செல்வதில்லை.

யாழ்வினோ சொல்வது போல சிங்கள மக்களுக்கு செய்தி போகக் கூடாது என்று தான் அரசாங்கம் தடை விதித்தாலும், அரசுக்கு எதிரான சிங்களக் கட்சிகளினால் செய்திகள் சிங்களவரை சென்றடையும்.

கொழும்பில் தமிழர் வெளியேற்றம், இந்தியாவின் இரகசிய ஆயுத உதவி, தமிழ் நெட்டின் முடக்கம், 50000 இராணுவ வீரர் சேர்ப்பு இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது அடுத்த சில மாதங்களில் சிறீலங்கா படையினர் பெரும் யுத்தம் ஒன்றிற்கு தயார் செய்கிறார்கள் போல் தான் தெரிகிறது. நன்றாக வாங்கிக்கட்டப் போகிறார்கள்

தமிழ்நெற் செய்தி தளத்தை முடக்குவதற்கு ஹக்கர்ஸ் தேவை என றம்புக்கல கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக தமிழ்நெற்றை கொழும்பில் பார்க்கமுடியாமமல் தடுத்திருக்கிறார்கள்.

"I do not know, but I would love to hire some hackers," Keheliya Rambukwella said, while adding that he had no access to people who could do the job. (AFP)

:blink::)

Sri Lanka's government said it would like to hire hackers to dismantle a pro-Tamil Tiger website, as media groups said access to the site was already blocked.

Tamilnet.com has been blocked for several days on the "advice" of the government, local rights group the Free Media Movement (FMM) said. A Sri Lanka Telecom official confirmed the site was being filtered.

When asked about the decision, the government's spokesman insisted he was unaware of the measure -- but said authorities should expand their arsenal in the long-running ethnic conflict.

"I do not know, but I would love to hire some hackers," Keheliya Rambukwella said, while adding that he had no access to people who could do the job.

London-based Tamilnet.com, which publishes news and opinion about the ethnic conflict in Sri Lanka, confirmed its site was blocked by Sri Lanka Telecom -- the war-torn country's main Internet service provider.

"The de facto climate of self-censorship that has already plagued local media in Sri Lanka has now culminated in mischievous infringement into the freedom of global media," Tamilnet.com said.

The government owns just under 50 percent of Sri Lanka Telecom, which is run by NTT of Japan.

The Sri Lanka-based FMM said it was "deeply disturbed" over what it said was yet another attack on media freedom.

"This is a significant turn in the erosion of media freedom in Sri Lanka and clearly demonstrates the extent to which media is censored," the media group said in a statement.

Some Internet service providers, who have their main offices abroad, still allow access to the website, which is an influential source of Tamil views on the island's separatist conflict that has claimed more than 60,000 lives in 35 years.

The censorship move also coincides with a visit to Sri Lanka by a group of international media rights activists investigating widespread reports of increased attacks on and intimidation of the local media.

Edited by vishal

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களின் நியாயமான போராட்திற்கு கிடைத்த இன்னுமொரு வெற்றி. சிங்கள முட்டாள்களிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கைப்பார்த்தால் பெரிய யுத்தம் இல்லாமலயே இலக்கை அடையலாம் போல இருக்கு.மகிந்தவின் நடவடிக்கையால :P

போற போக்கைப்பார்த்தால் பெரிய யுத்தம் இல்லாமலயே இலக்கை அடையலாம் போல இருக்கு.மகிந்தவின் நடவடிக்கையால :P

சும்மா சொல்ல கூடாது மகிந்தாவின்ட சிந்தனை எல்லாம் நல்லா தான் இருக்கு இவரின்ட சிந்தனையை பார்கும் போது மனுசன் 3வகுப்பு பாஸ் ஆகியிருகிறதே கொஞ்சம் கஷ்டம் தான்

:rolleyes::unsure: :P

தமிழ் நெட் மூலம் வெளி நாட்டு தூதுவர்கள் உண்மைச்செய்திகளை அறிகிறார்கள் என்று அண்மையில்

செய்தி வந்தது. அதன் விளைவு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் இலங்கைக்கு இது ஒன்றும் புதிதில்லை. மனிதர்களின் உயிருக்கே உத்தரவாதம் இல்லை, ஒரு நாட்டு சொல்லுக்கும் கட்டுப்படாத கெடுகுடி சொல் கேளாது...

இந்த தமிழ் நெட் தடையையும் காரணத்தையும் உலகிற்கு கொண்டு வாருங்கள் ஜன நாயக நாட்டின் செயல்கள் உலகிற்கு வரட்டும்.....தமிழ் கார்டியன்.........

திறமையான வெளினாடுகளில் இயங்கும் ஆங்கில இணையங்களை அறிமுகப்படுத்துங்கள்...தமிழ் கார்டியன்..

ஏன் தமிழ் நெட்டை தடைசெய்தோம் என இலங்கை கவலைப்படவைக்க வேண்டும்....

முடியுமா?....

இன்றிலிருந்து தமிழ்வின்.கொம் இனையும் நேரடியாக பார்வையிட முடியவில்லை!

இரும்புத்திரைக்குள் அமிழும் இலங்கை!

அப்படியானால் எல்லா இணையச் செய்திகளைத் தாங்கிவரும் ........... ?

அப்படி ஏதாவது நடந்தால் இதுவே எனது இறுதி பிரியாவிடை (யாழ்களத்தில்)!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.