Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரயில் நிலையத்தின் பெயரை சமஸ்கிருதம் கலந்து எழுத முயற்சி - எதிர்ப்புகளால் மாற்றிய நிர்வாகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரூரில், ரயில் நிலையத்தின் பெயரை சமஸ்கிருதம் கலந்த தமிழில் மாற்றி எழுதியதால் எழுந்த எதிர்ப்பை அடுத்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் மீண்டும் தமிழில் எழுதியுள்ளது.

தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் நடைமேடைகளில் சிமெண்டால் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள் இரும்பால் மாற்றப்பட்டு வருகின்றன.

அப்படி மாற்றும் பொழுது கரூர் மாவட்டம் மகாதானபுரத்தில் உள்ள ரயில் நிலையத்திலும் கான்கிரீட்டால் அமைக்கப்பட்ட பெயர் பலகைகள் இரும்பால் மாற்றப்பட்டன.

அப்போது மகாதானபுரம் என்று இருந்த தமிழ் எழுத்துக்களை மாற்றி மஹாதானபுரம் என சமஸ்கிருத எழுத்துகளை பயன்படுத்தி எழுதியிருந்தனர்.

இது குறித்து அறிந்த தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், தமிழில் இருந்த பெயர்பலகையில், தமிழில் எழுத்துக்களை மாற்றி சமஸ்கிருத எழுத்து கலந்த தமிழில் எழுதியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ் ஆர்வலர்கள் பலரும் மத்திய அரசு தமிழில் இருந்த பெயர் பலகையில், சமஸ்கிருத எழுத்துக்கள் கலந்த தமிழில் எழுதியுள்ளது. இது சமஸ்கிருத திணிப்பு என குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், மகாதானபுரம் ரயில் நிலையம் உள்ள கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சிவகாம சுந்தரி தென்னக ரயில்வேயில் இந்த சமஸ்கிருத திணிப்பை கண்டித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்தார்.

இதையடுத்து, தென்னக ரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் மகாதானபுரம் ரயில்நிலையத்தில் மஹாதானபுரம் என மாற்றப்பட்ட பெயர் பலகைகளில். ரயில்நிலையத்தில் இருந்த பெயர் பலகைகளில் ஒரு சில பலகைகளில் மட்டும் பழையபடி தமிழ் எழுத்துக்களில். மகாதானபுரம் என மாற்றி எழுதியுள்ளனர்.

கரூரில் ரயில் நிலையத்தின் பெயரை சமஸ்கிருதம் கலந்து எழுத முயற்சி - எதிர்ப்புகளால் மாற்றிய நிர்வாகம் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இந்த மெண்டல் சீமானால் வந்த வினை .😁 அவனவன் எங்கு தமிழ் மொழி அவமதிக்கபடுது  என்று போனும் கையுமா அலையிறாங்கள் .😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

எல்லாம் இந்த மெண்டல் சீமானால் வந்த வினை .😁 அவனவன் எங்கு தமிழ் மொழி அவமதிக்கபடுது  என்று போனும் கையுமா அலையிறாங்கள் .😄

இதாலை தான் எனக்கு சீமானை கண்ணிலையும் காட்டக்கூடாது. உலக அரசியல் என்னவெண்டு தெரியாத கூட்டங்கள் அதுகள்..😂
அதை விட மரங்கள் நடட்டாம். குளங்கள் ஏரியளை தூர் வாரட்டாம். தமிழருக்கு ஒரு தேசம் வேணுமாம். 😁

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இதாலை தான் எனக்கு சீமானை கண்ணிலையும் காட்டக்கூடாது. உலக அரசியல் என்னவெண்டு தெரியாத கூட்டங்கள் அதுகள்..😂
அதை விட மரங்கள் நடட்டாம். குளங்கள் ஏரியளை தூர் வாரட்டாம். தமிழருக்கு ஒரு தேசம் வேணுமாம். 😁

உதைத்தான் ஊமைக்குத்தெண்டு சொல்லுறது !

  • கருத்துக்கள உறவுகள்

12 hours ago, குமாரசாமி said:

இதாலை தான் எனக்கு சீமானை கண்ணிலையும் காட்டக்கூடாது. உலக அரசியல் என்னவெண்டு தெரியாத கூட்டங்கள் அதுகள்..😂
அதை விட மரங்கள் நடட்டாம். குளங்கள் ஏரியளை தூர் வாரட்டாம். தமிழருக்கு ஒரு தேசம் வேணுமாம். 😁

எனக்கும் சீமானைப் பிடிக்காது. தமிழனுக்குத் தமிழ்மொழி வேணுமாம். முதலில் தமிழனாக இருந்து கொண்டு மற்ற மொழிகளையும் கற்றுக்கொள் என்றும் கத்துகிறார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பிழம்பு said:

தமிழ் ஆர்வலர்கள் பலரும் மத்திய அரசு தமிழில் இருந்த பெயர் பலகையில், சமஸ்கிருத எழுத்துக்கள் கலந்த தமிழில் எழுதியுள்ளது. இது சமஸ்கிருத திணிப்பு என குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், மகாதானபுரம் ரயில் நிலையம் உள்ள கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சிவகாம சுந்தரி தென்னக ரயில்வேயில் இந்த சமஸ்கிருத திணிப்பை கண்டித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்தார்.

இதுக்கில எங்க சீமான் வந்தார்.

15 hours ago, பெருமாள் said:

எல்லாம் இந்த மெண்டல் சீமானால் வந்த வினை .😁 அவனவன் எங்கு தமிழ் மொழி அவமதிக்கபடுது  என்று போனும் கையுமா அலையிறாங்கள் .😄

பெருமாள், தனித்தமிழ் என்பதை முதன் முதலில் கொண்டு வந்தவர் மறைமலை அடிகளார் அல்லவா. திராவிடக் கட்சிகள், முக்கியமாக திமுக தான் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தது மட்டுமன்றி செம்மொழியாக தமிழ் பிரகடனப்படுத்த வேண்டும் என்றும் கோரி அது நிறைவேற்றப்பட்டது. பாடசாலைகளில் தமிழ் மொழி கட்டாயமாக படிப்பிக்க வேண்டும் என்று கருணாநிதி சட்டமே கொண்டு வந்தவர். ஆனால் அவ்வாறு கட்டாயமாக்கப்படுவது அடிப்படை மனித உரிமை மீறல் என்று வழக்கு தொடுக்க உயர் நீதிமன்றமும்  அதை ஏற்று அந்த சட்டத்தினை இல்லாமல் ஆக்கியது.

இப்ப இந்த சமஸ்கிருத சேட்டை எல்லாம் பிஜேபி க்களது சேட்டை. பிஜேபி தன் தேர்தல் விஞ்ஞாபனத்தினைக் கூட பழைய தமிழ் எழுத்து வடிவில் தான் வெளியிட்டு இருக்குது. அதாவது திராவிட இயக்கங்களால், பெரியாரிசத்தால் முன் வைக்கப்பட்டு அமுலுக்கு வந்த எழுத்து சீர்திருத்தத்தை எல்லாம் கைவிட்டு விட்டு, பழைய எழுத்து முறையில் சமஸ்கிருத வார்த்தைகள் எல்லாம் சேர்த்து வெளியிட்டு இருக்கு. 

பிஜேபி அதிமுக கூட்டணி வெல்லுமாயின் இது மேலும் தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

தமிழ் மொழி செம்மொழியாகியதன் பயன் என்னவென்று இதுவரை எனக்கு விளங்கவில்லை நிழலி. ஐந்தாயிரம் ஆண்டுக்கள்  பழமையான மொழிக்கே அந்த அந்தஸ்த்து என்ற விதியை தமிழுக்கு கிடைத்த பெருமையை பொறுக்க முடியாமல் மத்தியில் கொள்ளுப்பட்டு  2000 ஆண்டுகளே  ஆன  திராவிட மொழிகளுக்கும் தற்போது செம்மொழி அந்தஸ்த்து கொண்டுள்ளன.இது எப்படி என்றால் தமிழுக்கு உள்ள பழமையும் செழுமையும் பெருமையும் உள்ள மொழிக்கு அருகில் நேற்று தோன்றிய மொழிகளும் ஒரே வகுப்பில் கொண்டுவந்து  உள்ளார்கள் எமக்கு தருவது போல் தந்து தனது  தகப்பனின் மொழிக்கும் அந்தஸ்த்தை கொடுத்துள்ளார் முத்துவேல் கருணாநிதி .

தனித்தமிழில் என்று அறிவித்து விட்டு ஆங்கில வழி  கல்வி கூடங்களில் பணம் பெற்ற பின் நீதி  மன்றத்தை நாடுங்கள் அவரே  அறிவுரை கூறி இருப்பார் அதனால் அந்த தீர்ப்பால் நீண்டகால நோக்கில் தமிழ் வழி  கல்வி என்பது சிறுத்து போகும் .

அதிமுகவும் பிஜேபியும் வந்தால் நீங்கள்  சொல்வது போல் தான் நடக்கும் ஆனால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும்  உன்னிப்பாக கவனிக்கப்பட்டு தமிழ் அடையும்  பாதக சாதகங்களை எல்லோரும் விவாதிப்பார்கள் ஆனால் திமுக வந்தால் ஏதோ  உலகத்தில் தமிழ் வாழ்வதே  அவர்களினால் போல் மறைமுகமாக தமிழை  அழிப்பார்கள் மற்றும் சாதரண மக்கள் தொடக்கம் வறுமையானவர்கள் இன்னும் மிக மோசமாக முட்டாளாக்கப்பட்டு வறுமையில் தள்ளப்படுவார்கள் அவர்களின் வறுமையை பயன்படுத்தி வட நாட்டு சேட்டு கூட்டம்கள் வறுமையான தமிழர்களை இன்னும் மொட்டையாக்குவார்கள் .

திமுகா இன்னும் ஒரு முக்கியமான தந்திரம் செய்து வைத்துள்ளது .அது என்னவென்றால் ஒரு இலவச பத்திரிகை நடாத்தும் நண்பர் அவரின் மொத்த பத்திரிகையே 500 தான் கருணாநிதியை அவர் சந்திக்க சென்றால் உடனே அனுமதி கவுரவம் அனைத்தும் கிடைக்கும் போட்டோவும் பிடித்து அதை இன்றும் ஹோலில் ஆளுயுரத்துக்கு மாட்டி வைத்து இருக்கிறார் அதே போல் மீடியா சம்பந்தப்பட்டவர்கள் என்று எவராவது போனால் ராஜமரியாதைதான். இதில் புலம்பெயர் முன்னணி இணையத்தில் தான் ஒரு முக்கிய புள்ளி என்று சொல்லிக்கொண்டு திமுகா பெரும்புள்ளிகளுடன் தொடர்பில் இருக்கும் ஆட்களையும் எனக்கு தெரியும் .

2 hours ago, zuma said:

இதுக்கில எங்க சீமான் வந்தார்.

அவர் வரவில்லை அவரை இழுத்துவைத்து கும்முகிரம்  நீங்களும்  வந்து இரண்டு கும்மு  போடுங்க 😄வாங்க வாங்க லேட் பண்ணினாள் ஆள் தப்பிடுவார் .

31 minutes ago, பெருமாள் said:

தமிழ் மொழி செம்மொழியாகியதன் பயன் என்னவென்று இதுவரை எனக்கு விளங்கவில்லை நிழலி. ஐந்தாயிரம் ஆண்டுக்கள்  பழமையான மொழிக்கே அந்த அந்தஸ்த்து என்ற விதியை தமிழுக்கு கிடைத்த பெருமையை பொறுக்க முடியாமல் மத்தியில் கொள்ளுப்பட்டு  2000 ஆண்டுகளே  ஆன  திராவிட மொழிகளுக்கும் தற்போது செம்மொழி அந்தஸ்த்து கொண்டுள்ளன.இது எப்படி என்றால் தமிழுக்கு உள்ள பழமையும் செழுமையும் பெருமையும் உள்ள மொழிக்கு அருகில் நேற்று தோன்றிய மொழிகளும் ஒரே வகுப்பில் கொண்டுவந்து  உள்ளார்கள் எமக்கு தருவது போல் தந்து தனது  தகப்பனின் மொழிக்கும் அந்தஸ்த்தை கொடுத்துள்ளார் முத்துவேல் கருணாநிதி .

ஒரு மொழி செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்கு அதன் 'வயதை' மட்டுமே கணக்கிடுவது இல்லை. 1500 இல் இருந்து 2500 வரை காலம் பேசப்படும் மொழியாகவும், தனக்கே உரிய இலக்கிய, இலக்கண வளமும், கலைப்படைப்புகளும், எழுத்து வடிவமும் கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையான மக்கள் தொகையால் பேசப்பட்டு இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் இந்தியாவில் 22 மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

தெலுங்கு (உங்கள் மொழியில் கருணாநிதியின் தகப்பன்) தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட மொழியாக உருவாகி தனக்கேயுரிய எழுத்து வடிவம், இலக்கிய, இலக்கணங்களை கொண்ட, இந்தியாவில் இரண்டாவதாக அதிகம் பேசப்படும் மொழி. கர்னாட சங்கீதத்திலும் முக்கியமாக அதன் தாக்கம் உள்ளது. தெலுகுங்குக்கு அடித்தப்படியாக கன்னடம், ஒரியா, சமஸ்கிருதம், மொழிகளும் இந்தியாவில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளன (இந்தி செம்மொழியா என தெரியவில்லை). இது ஒரு மொழிக்கான அங்கீகாரம். அதன் தொன்மையையும், செழிப்பையும், வளத்தையும் உலகரங்கில் நிறுவுவதற்கான அங்கீகாரம்.

45 minutes ago, பெருமாள் said:

திமுகா இன்னும் ஒரு முக்கியமான தந்திரம் செய்து வைத்துள்ளது .அது என்னவென்றால் ஒரு இலவச பத்திரிகை நடாத்தும் நண்பர் அவரின் மொத்த பத்திரிகையே 500 தான் கருணாநிதியை அவர் சந்திக்க சென்றால் உடனே அனுமதி கவுரவம் அனைத்தும் கிடைக்கும் போட்டோவும் பிடித்து அதை இன்றும் ஹோலில் ஆளுயுரத்துக்கு மாட்டி வைத்து இருக்கிறார் அதே போல் மீடியா சம்பந்தப்பட்டவர்கள் என்று எவராவது போனால் ராஜமரியாதைதான். இதில் புலம்பெயர் முன்னணி இணையத்தில் தான் ஒரு முக்கிய புள்ளி என்று சொல்லிக்கொண்டு திமுகா பெரும்புள்ளிகளுடன் தொடர்பில் இருக்கும் ஆட்களையும் எனக்கு தெரியும் .

பொதுவாக திமுக ஊடகங்களுடன் நல்ல உறவை எப்போதும் வைத்துள்ளது. எம்.ஜி. ஆர் இருக்கும் வரைக்கும் அதிமுக வும் அப்படித்தான் இருந்தது. ஜெயலலிதா அதை தலைகீழாக மாற்றிவிட்டார். பிஜேபி க்கு ஊடகங்கள் என்றாலோ அலர்ஜி. நா.த.க.வினை இப்பதான் ஊடகங்கள் கணக்கெடுக்க தொடங்கியுள்ளனர். 

47 minutes ago, பெருமாள் said:

அதிமுகவும் பிஜேபியும் வந்தால் நீங்கள்  சொல்வது போல் தான் நடக்கும் ஆனால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும்  உன்னிப்பாக கவனிக்கப்பட்டு தமிழ் அடையும்  பாதக சாதகங்களை எல்லோரும் விவாதிப்பார்கள் ஆனால் திமுக வந்தால் ஏதோ  உலகத்தில் தமிழ் வாழ்வதே  அவர்களினால் போல் மறைமுகமாக தமிழை  அழிப்பார்கள் மற்றும் சாதரண மக்கள் தொடக்கம் வறுமையானவர்கள் இன்னும் மிக மோசமாக முட்டாளாக்கப்பட்டு வறுமையில் தள்ளப்படுவார்கள் அவர்களின் வறுமையை பயன்படுத்தி வட நாட்டு சேட்டு கூட்டம்கள் வறுமையான தமிழர்களை இன்னும் மொட்டையாக்குவார்கள் .

.

திமுக அப்படிச் செய்தால் மற்றயை கட்சிகள், அமைப்புகள் கேள்வி கேட்காதா? அதிமுக ஆட்சி செய்தால் மட்டுமே உன்னிப்பாக கவனிக்கப்பட்டுக் கேள்விகள் கேட்குமா? 

  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கு வம்சாவளியினரின் அரசியற்கட்ட்சியான தி மு க வினர் தமிழினை முன்னிறுத்துவதாக மிகவும் கபடத்தனமான பரப்புரையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முத்துவேல் கருணாநிதியெனும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட , தமிழைக் கற்றுக்கொண்ட ஒருவரின் தமிழ் ஆக்கங்களை அக்கட்சி சான்றுகளாகக் காட்டி வருகிறது. 

கருணாநிதி திருக்குறளுக்கு தமிழில் அர்த்தம் எழுதியதும், இன்னும் சில சரித்திர நாவல்களும் அவரைத் தமிழராக ஆக்கிவிடாது. அப்படிப்பார்த்தால் எத்தனையோ பிறமொழிபேசிய அறிஞர்கள் தமிழைக் கற்று தமிழில் காவியங்கள் படைத்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம்  தமிழினத் தலைவர்கள் என்று தமிழினம் ஒருபோதும் கொண்டாடியதில்லை. 

இங்கே கருணாநிதிக்கு வரிந்துகட்டிக்கொண்டு ஆதரவு வழங்கும் பலர் 2009 முள்ளிவாய்க்காலில் அவர் ஆடிய உண்ணாவிரத நாடகம், போலி யுத்த நிறுத்தம், தமிழகத்தின் குரலை நசுக்கி இனவழிப்பை மறைத்தது, இறுதி நாட்களில் தில்லியில் தவம் கிடந்து மகளுக்கும் வளர்ப்பு மகனுக்கும் பதவிப் பிச்சை கேட்டது, தமிழின அழிப்பை ஆதரித்தது, பிரபாகரன் கொல்லப்படவேண்டும் என்றும், புலிகள் அழிக்கப்படவேண்டும் என்றும் மத்திய அரசுடன் சமரசம் செய்துகொண்டது  என்று பல விடயங்களுக்காக அன்று கருணாநிதியை எதிர்த்து விமர்சித்தவர்கள்.

ஆனால் இன்று அவர் செம்மொழி மாநாடு நடத்தினாராம், தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்தாராம், தெலுங்கனா இருந்தும் தமிழை செழுமைப்படுத்தினாராம் என்று புகழ்ப்பாடல் புனைகிறார்கள்.

2009 முள்ளிவாய்க்காலில் தான் கதறக் கதற் கழுத்தறுத்த தமிழ் இனத்தின் இரத்தக் கறையைக் கழுவித் துடைக்கத்தான் 2010 கருணாநிதி செம்மொழி மாநாடு நடத்தினார் என்பது இந்த மேதைகளுக்கு இலகுவாக மறந்துபோயிற்று.

ஆனால், அவர்கள் கருணாநிதியை ஆதரிப்பதற்கான காரணம் வேறு. அதாவது சீமான் எனும் தமிழனின் அரசியல் அவர்களுக்குச் சற்றும் பிடிக்கவில்லை. ஆகவே அவர் பேசும் விடயங்களை விமர்ச்சிக்கிறார்கள். அதில் ஒரு பங்குதான் இனக்கொலையாளன் கருணாநிதிக்கு வெள்ளையடிப்பது.

நடத்துங்கள் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.