Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநா தீர்மானம் சம்மந்தமாக நாட்டின் ஜனாதிபதி சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார் - கருணா அம்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கற்பகதரு said:

இவனை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து, தனது மெப்பாதுகாவலராக கூடவே வைத்திருந்து பின்னர் தென் தமிழீழத்துக்கே பொறுப்பாக்கி தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டார் —- யாரவர்?

துரோகங்களாலும், நம்பி கெட்டதாலும் வீழ்ந்த பூமி அது.

பாலர் வகுப்பு கேள்விகளை இனிமேல் சபை முன்  வைக்காதீர்கள்.

  • Replies 142
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

ஆதாரத்திற்கு அப்படியான நிறுவனங்கள்/ கழகங்களின் பெயர்களை சொல்லுங்கள். :grin:

கெட்டித்தனமாக இருப்பதனால்தான் மேற்குநாடுகளில் சுதந்திரமாக வியாபாரம் செய்கின்றார்கள்.  

5 minutes ago, Kapithan said:

பங்குதாரராக முடியவில்லை என்கின்ற கோபமோ... 😂

சுருட்டியவர்கள் பங்குதாரர்களாக சேர்ப்பார்களா என்ன! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, கிருபன் said:

கெட்டித்தனமாக இருப்பதனால்தான் மேற்குநாடுகளில் சுதந்திரமாக வியாபாரம் செய்கின்றார்கள்.  

சுருட்டியவர்கள் பங்குதாரர்களாக சேர்ப்பார்களா என்ன! 

கேட்ட கேள்விக்கு பதில் வேண்டும். இல்லையேல் இந்த திரியிலிருந்து விலகுகின்றேன் என பகிரங்கமாக எழுதுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

புலிகளால் நன்னடத்தை தண்டனை வாங்கியவர்கள் தான் இன்றுவரைக்கும் .....அவர்களின் கொள்கை விரோதிகளாக இருக்கின்றார்கள்........இது நான் அறிந்த/தெரிந்த வரையில்.....

புலிகள் தண்டனை கொடுக்கும் காலத்திற்கு முன்னரயே யூரோப்புக்கு எஸ் ஆகியிருந்தாலும் எல்லாம் தெரிந்துதான் வைத்திருக்கின்றீர்கள்😁

1 minute ago, குமாரசாமி said:

கேட்ட கேள்விக்கு பதில் வேண்டும். இல்லையேல் இந்த திரியிலிருந்து விலகுகின்றேன் என பகிரங்கமாக எழுதுங்கள்.

கேட்ட கேள்வி கேணைத்தனமானது. அதுக்கு கொடுத்த பதிலே கெளரவமானது😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, கிருபன் said:

புலிகள் தண்டனை கொடுக்கும் காலத்திற்கு முன்னரயே யூரோப்புக்கு எஸ் ஆகியிருந்தாலும் எல்லாம் தெரிந்துதான் வைத்திருக்கின்றீர்கள்😁

எனது கூடப்பிறந்த அண்ணரும் எனது மாமனாரும் புலிகளினால் தண்டனை பெற்றவர்கள்.
இருட்டு அறை.....
அவர்களது அனுபவம் எனக்கு படிப்பினை.

ஆனால் வெளியே வந்த பின் காட்டிக்கொடுக்கவுமில்லை....எரிச்சலடையவுமில்லை. நியாயமான பக்கமே நின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கருணா அம்மான் ஒரு தனி மனிதர் என்று சொல்லியதும், கருணா அம்மான் இல்லாத புலிகள் முடிந்ததும் கண்முன்னால் நிகழ்ந்ததுதானே. 

கருணா அம்மான் பிரிந்ததனால் அவர் புலிகளின் வெற்றிகளுக்கு பங்களித்ததை வரலாற்றில் இருந்து நீக்கவும் முடியாது.

இதை புலிகள் இயக்கததிலிருந்த எந்தவெரு தளபதியினாலும் செய்திருக்க முடியும்..கருணாவால் மட்டும் முடியுமென்பது சரியல்ல..ஆனால். அவன் தான்  செய்திருக்கிறான்.. வெற்றியில் ஒவ்வொரு வீரனுககும் பங்கு உண்டு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, கிருபன் said:

புலிகள் தண்டனை கொடுக்கும் காலத்திற்கு முன்னரயே யூரோப்புக்கு எஸ் ஆகியிருந்தாலும் எல்லாம் தெரிந்துதான் வைத்திருக்கின்றீர்கள்😁

இன்னுமொரு கொசுறு தகவல்.
இந்திய ராணுவம் கூட அவர்களை விட்டு வைக்கவில்லை. வயல் வெளியில்  தண்ணீருக்குள் படுத்தி வாட்டி எடுத்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, கிருபன் said:

புலிகள் தண்டனை கொடுக்கும் காலத்திற்கு முன்னரயே யூரோப்புக்கு எஸ் ஆகியிருந்தாலும் எல்லாம் தெரிந்துதான் வைத்திருக்கின்றீர்கள்😁

கேட்ட கேள்வி கேணைத்தனமானது. அதுக்கு கொடுத்த பதிலே கெளரவமானது😂

ஆதாரம் கேட்டால் உங்கள் பாசையில் அது கேணைத்தனம்.:cool:

கேணைத்தனம்  ஒரு நாகரீகமற்ற சொல் என உங்கள் வகையறா நண்பர்கள் இங்கே போர்க்கொடி தூக்கிய போது கோமாவில் இருந்தீர்களா? 😂 அந்த திரியில் பல கருத்துக்கள் அகற்றப்பட்டு சில கருத்துக்கள உறவுகளுக்கும் எச்சரிக்கை புள்ளி வழங்கப்பட்டிருந்ததை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.🙃

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பைத்தியக்காரமான எழுத்துக்கள் என்று வரலாற்றின் போக்கை தட்டிக் கழித்து அப்பால் போகமுடியாது. கருணா அம்மானின் ஒருங்கிணைப்பின் கீழ்தான் பல புகழ்பெற்ற தளபதிகள் இயங்கினர். 

உண்மை ...அந்தப் புகழ்பெற்ற தளபதிகள்  கருணா  இல்லை .கருணா ஒரு சிறந்த செயல் வீரனென்றல்...புலிகளை விட்டுப்பிரிநதபின் பல வெற்றிகளை குவித்துதிருக்கவேண்டும்.  அரசியல்ரீதியாக...இதுவரை அவன்எதுவும் செயயவிலலை 

எனவே தனிப்பட்ட கருணா திறமையற்றவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Kandiah57 said:

உண்மை ...அந்தப் புகழ்பெற்ற தளபதிகள்  கருணா  இல்லை .கருணா ஒரு சிறந்த செயல் வீரனென்றல்...புலிகளை விட்டுப்பிரிநதபின் பல வெற்றிகளை குவித்துதிருக்கவேண்டும்.  அரசியல்ரீதியாக...இதுவரை அவன்எதுவும் செயயவிலலை 

எனவே தனிப்பட்ட கருணா திறமையற்றவன்.

அதே....அதே....அதே....அதே....அதே....அதே....!!!!!

ஒரு போராட்டத்திலிருந்து விலகி மாற்றுக்கருத்து வைப்பவர்கள் 2009 பின் என்ன செய்கின்றீர்கள்? செய்ததை சொல்லுங்கள்?   அது புலம்பெயர் மாணிக்கங்களாய் இருந்தாலும் சரி.......புலம்பெயரா மாணிக்கங்களாய் இருந்தாலும் சரி...
பதிலை சொல்லுங்கோ?

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கிருபன் said:

புலிகள் தண்டனை கொடுக்கும் காலத்திற்கு முன்னரயே யூரோப்புக்கு எஸ் ஆகியிருந்தாலும் எல்லாம் தெரிந்துதான் வைத்திருக்கின்றீர்கள்😁

நீங்கள் அரைக் காற்சட்டையுடன் பிளேன் பிடித்து எஸ் ஆன பிறகும், எல்லாம் தெரிந்து வைத்திருப்பது போலவே 😆

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

இவனை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து, தனது மெப்பாதுகாவலராக கூடவே வைத்திருந்து பின்னர் தென் தமிழீழத்துக்கே பொறுப்பாக்கி தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டார் —- யாரவர்?

1 hour ago, Kapithan said:

typical கற்பகதரு.

தியாகத்தை அசிங்கப்படுத்தவும், துரோகத்தைக் கொண்டாடவும் வேறு யாரால் முடியும்.. 😂😂

வன்னியை விட்டு வெளியேற pass கிடைக்காத கோபத்தில் போராட்டத்திற்கு எதிராக விடம் கக்கும் அதே இழி பிறவிகளின் ஆத்திரம் பிரபாகரன் மீது திரும்புவது வழமை.. 😂😂

யாரப்பா அந்த இழிபிறவி வன்னியன்? 😃

57 minutes ago, குமாரசாமி said:

இந்த கேள்வி  என் மனதில் கன நாட்களாகவே இருந்தது. இப்போதும் கேட்பமா என நினைத்து விட்டு......ஏன் பொல்லாப்பு என இருந்து விட்டேன் 🤣

புலிகளால் நன்னடத்தை தண்டனை வாங்கியவர்கள் தான் இன்றுவரைக்கும் .....அவர்களின் கொள்கை விரோதிகளாக இருக்கின்றார்கள்........இது நான் அறிந்த/தெரிந்த வரையில்.....

அப்படியானவர்களின் சகவாசம் அதிகம் போல தெரிகிறதே? 😄

39 minutes ago, குமாரசாமி said:

எனது கூடப்பிறந்த அண்ணரும் எனது மாமனாரும் புலிகளினால் தண்டனை பெற்றவர்கள்.
இருட்டு அறை.....
அவர்களது அனுபவம் எனக்கு படிப்பினை.

ஆனால் வெளியே வந்த பின் காட்டிக்கொடுக்கவுமில்லை....எரிச்சலடையவுமில்லை. நியாயமான பக்கமே நின்றார்கள்

ஐயோ அண்ணை, உதை கவனிக்கவில்லை - கோவிக்க கூடாது. குடும்ப விஷயத்தில நான் தலையிடுவதில்லை. 

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இதுவும் வரலாறுதான்..

அம்மான் இல்லாவிட்டால் 1997/1998 இலும் போராட்டம் முடிந்திருக்கும்..

புலிகளின் எதிர்த்தாக்குதல்[தொகு]

அதுவரை தங்களது போராட்ட வரலாற்றில் மிகநீண்ட மறிப்புச்சமரைச் செய்திராத தமிழீழ விடுதலைப்புலிகள் ஜெயசிக்குறு நடவடிக்கையை எதிர்த்து நீண்டகால கடுமையான மறிப்புச்சமரைச் செய்தனர். விடுதலைப்புலிகள் தமது அனைத்து வளங்களையும் வன்னியில் ஒருங்கிணைத்து இம்முறியடிப்புச்சமரைச் செய்தனர். கிழக்கு மாகாணத்திலிருந்து அப்போதைய விடுதலைப்புலிகளின் தளபதியும் பின்னாளில் பிரிந்து சென்றவருமான கருணா அம்மானின்தலைமையில் நூற்றுக்கணக்கான போராளிகள் வன்னிக்கு வந்திருந்தனர். புலிகளின் எதிர்ப்புச்மருக்கான ஒருங்கிணைப்புத் தளபதியாக கேணல் கருணா அம்மான் செயற்பட்டார். நேரடிக் களமுனைத் தளபதிகளாக கேணல் தீபன், கேணல் ஜெயம் ஆகியோர் செயற்பட்டனர்.

https://ta.wikipedia.org/wiki/ஜெயசிக்குறு

ஒன்றை உருவாக்கி, சாதிக்க பலபேரின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது, அதை உருவாக்கி வளர்த்தவர் கூட இந்தளவுக்கு பெருமை பேசவில்லை. ஆனால் பலரின் உழைப்பால் கட்டியெழுப்பியதை உடைத்து அழித்துவிட ஒருவரே போதும் என்பதற்க்கு நல்ல சான்று இணைத்திருக்கிறீகள், நன்றி.

3 hours ago, கிருபன் said:

இலங்கை என்பது உண்மையில் நாணயம் மிக்க தனித்துவமான நாடு. இந்து சமுத்தரப் பிராந்தியத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகவும் இருக்கின்றது.

தன்  சொந்த நாட்டு மக்களின் பிரச்சனையை சுமுகமாக தீர்க்க முடியாமல் உலக நாடுகளை  கூட்டி அழித்து வெற்றி கொண்டாடிவிட்டு பதில் சொல்லத் தெரியாமல் இன்று விழி பிதுங்கி நிற்கும் நாடு, தன் மக்களை அழிப்பதற்கு பல  நாடுகளிடம் கடன் வாங்கி அதை அடைக்க வழிதெரியாமல் நாட்டை பல நாடுகளுக்கு கூறு போட்டு விற்கும் நாடு. இதில தனித்துவம், நாணயம், இறைமை என்கிற வறட்டு கவுரவம் வேறு. குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதை விடுத்து, தானும் பதவியில் அமர்ந்து கொண்டு, நீதிமன்றத்தினால் தண்டனை அளிக்கபட்டவர்களுக்கு விடுதலையும், உயரிய பதவிகளும் அளித்துக்கொண்டும் இருப்பவர்களை ஐ. நா. நம்பவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் தண்டனையை விரும்பாமல் சுக போகம் அனுபவிப்பவர்களே ஆகும்.   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, கற்பகதரு said:

அப்படியானவர்களின் சகவாசம் அதிகம் போல தெரிகிறதே? 😄

நீங்கள் எதை மனதில் வைத்து கேட்கின்றீர்கள் என தெரியவில்லை? இருந்தாலும் சொல்கின்றேன்.
எனது பல நண்பர்கள் புலி எதிர்ப்பாளர்கள். அதிலும் என் ஆருயிர்/குடும்ப நண்பன் ஒரு விடுதலைப்புலிகளின் கொள்கை எதிர்ப்பாளன்.  :)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

இவனை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து, தனது மெப்பாதுகாவலராக கூடவே வைத்திருந்து பின்னர் தென் தமிழீழத்துக்கே பொறுப்பாக்கி தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டார் —- யாரவர்?

ஒருவன் துரோகம் இழைப்பான் என்று தெரிந்தே கூட வைத்திருந்தாரா தலைவர்? கேள்விகேட்கும்போது கொஞ்சம்கூட யோசிக்க மாட்டிர்களோ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கெட்டித்தனமாக இருப்பதனால்தான் மேற்குநாடுகளில் சுதந்திரமாக வியாபாரம் செய்கின்றார்கள்.  

சுருட்டியவர்கள் பங்குதாரர்களாக சேர்ப்பார்களா என்ன! 

அதுதான் இந்த வெறுபோ.. 🤥

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

இவனை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து, தனது மெப்பாதுகாவலராக கூடவே வைத்திருந்து பின்னர் தென் தமிழீழத்துக்கே பொறுப்பாக்கி தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டார் —- யாரவர்?

ஐயா! விதைத்தவர் தான் விதைத்ததை ஒரே மாதிரியாகத்தான் விதைத்தார். அதில் சிலது பாறையில் விழும் என்று அவர் நினைக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

கருணா அம்மான் பிரிந்ததனால் அவர் புலிகளின் வெற்றிகளுக்கு பங்களித்ததை வரலாற்றில் இருந்து நீக்கவும் முடியாது.

மிகத் தவறான கருத்து.

வரலாற்றில் எட்டப்பனுக்கும், காக்கை வன்னியனுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இடம் என்ன?

இவர்கள் கட்டப்பொம்மனின் கீழும், பண்டாரவன்னியனின் கீழும் இருந்தபொழுது இவர்கள் நடத்திய போர்கள் பற்றியோ அல்லது இவர்களின் வெற்றிகள் பற்றியோ எவராவது எங்காவது படித்திருக்கிறீர்களா? வரலாற்றில் இனத்தைக் காட்டிக்கொடுத்த துரோகிகள் என்பதைத்தவிர இவர்களைப்பற்றி வரலாறு வேறு ஏதாவது கூறுகிறதா? 

கருணா மட்டும் விதிவிலக்காவது எப்படி? 

எனக்கு கருணா எனும்போதும் பிள்ளையான் எனும்போதும் மனதில் முதலில் நினவுக்கு வருவது பிரேமினியின் கூட்டுப் பாலியல் வன்புணர்வும் மிருகத்தனமான அவரது படுகொலையுடன் பரராஜசிங்கத்தினதும் ரவிராஜினதும் படுகொலைகள்தான்.

சிலருக்கு கருணா என்றவுடன் மனதில் வருவது ஜயசிக்குறு எதிர்ச்சமர்தான் என்றால், அவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்பதுபற்றிய கேள்வி எழுகிறது. வெள்ளையடிக்கும் கூட்டத்துடன் சேர்ந்துவிட்டாரோ என்னமோ?!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் எதை மனதில் வைத்து கேட்கின்றீர்கள் என தெரியவில்லை? இருந்தாலும் சொல்கின்றேன்.
எனது பல நண்பர்கள் புலி எதிர்ப்பாளர்கள். அதிலும் என் ஆருயிர்/குடும்ப நண்பன் ஒரு விடுதலைப்புலிகளின் கொள்கை எதிர்ப்பாளன்.  :)

உங்கள் நேர்மையும் வெளிப்படையாக எழுதும் துணிச்சலும் நல்ல நட்புக்கு உதாரணம். நன்றி.😃

1 hour ago, ரஞ்சித் said:

ஒருவன் துரோகம் இழைப்பான் என்று தெரிந்தே கூட வைத்திருந்தாரா தலைவர்? கேள்விகேட்கும்போது கொஞ்சம்கூட யோசிக்க மாட்டிர்களோ? 

5 hours ago, ரஞ்சித் said:

தமிழர் இனவரலாற்றில் இதுவரை கண்டிராத துரோகி. இந்தப் பிறப்பே இருந்திருக்கத் தேவையில்லை. இவனைப் பெற்ற தாய் கருத்தரிக்கமலேயே இறந்திருக்கலாம். இவனைப் பெற்று தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டாள்.

கொஞ்சம்கூட யோசிக்க மாட்டிர்களோ?  அந்த தாய்க்கு எப்படி குழந்தை இப்படியாகும் என்று தெரியும்? இந்த பெரும் தலைவருக்கே மாத்தையாவும், கருணாவும், பிள்ளையானும், கே.பி.யும் எப்படியாவார்கள் என்று தெரியவில்லை. குழந்தை வளர்ந்து இப்படியாகும் என்று அந்த தாய்க்கு தெரியவில்லை என்று வசைபாடி இருக்கிறீர்களே? கொஞ்சம்கூட யோசிக்க மாட்டிர்களோ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

ஒருவன் துரோகம் இழைப்பான் என்று தெரிந்தே கூட வைத்திருந்தாரா தலைவர்?

நன்றாக நடிக்கத் தெரிந்திருந்தது. தளபதியாக முன்னேறி, தலைவரின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவராகி, எல்லா தகவல்களும் பெறும்வரை நடித்திருக்கிறார் என்பதற்கு அவர் புலிகளை விட்டுப்பிரிந்தவுடன் விட்ட தலைவரைப்பற்றிய அறிக்கை, அவரின் பொது வாழ்வு என்பன சாட்சி. இது எப்படிப்பட்ட கட்டுப்பாடு நிறைந்த இடம் என்று தெரிந்தவர் இதற்குள் நுழைந்திருக்க கூடாது, இல்லை தெரிந்தவுடன் வெளியேறி இருக்க வேண்டும். இவ்வளவு காலம் தாழ்த்தி வெளியேறியதன் நோக்கம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கற்பகதரு said:

அந்த தாய்க்கு எப்படி குழந்தை இப்படியாகும் என்று தெரியும்?

பெற்ற தாய்க்கே தன் பிள்ளை எப்படிபட்டவன் என்று உணர முடியவில்லை. பலரை, பலவேலைகளை சுமந்த தலைவருக்கு இது துரோகியாக மாறும் என்று எப்படித் தெரிந்திருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

பலரை, பலவேலைகளை சுமந்த தலைவருக்கு இது துரோகியாக மாறும் என்று எப்படித் தெரிந்திருக்கும்?

தம்மால் நிருவகிக்கப்படுபவர்கள், தமக்கு நெருக்கமானவர்கள்,  தாம் நம்பிக்கை வைத்தவர்கள் எப்படியானவர்கள், எப்படி மாறுவார்கள் என்பதை அறியாதவர்கள் வெற்றி பெறுவதில்லை. இந்த வரலாறு புதிதல்ல, நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

அந்த தாய்க்கு எப்படி குழந்தை இப்படியாகும் என்று தெரியும்?

எந்தத் தாயாவது தனது மகன் தவறானவன் என்பதற்காக அவனை ஒதுக்கியிருக்கிறாள் என்று கூறுங்கள், நான் உங்கள் கேள்விக்குப் பதிலளிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

எந்தத் தாயாவது தனது மகன் தவறானவன் என்பதற்காக அவனை ஒதுக்கியிருக்கிறாள் என்று கூறுங்கள், நான் உங்கள் கேள்விக்குப் பதிலளிக்கிறேன்.

அப்படியானால், ஏன் அந்த தாயை வசைபாடினீர்கள்? 

இந்த பெரும் தலைவருக்கே மாத்தையாவும், கருணாவும், பிள்ளையானும், கே.பி.யும் எப்படியாவார்கள் என்று தெரியவில்லை. குழந்தை வளர்ந்து இப்படியாகும் என்று அந்த தாய்க்கு தெரியவில்லை என்று வசைபாடி இருக்கிறீர்களே? கொஞ்சம்கூட யோசிக்க மாட்டிர்களோ? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

உண்மை ...அந்தப் புகழ்பெற்ற தளபதிகள்  கருணா  இல்லை .கருணா ஒரு சிறந்த செயல் வீரனென்றல்...புலிகளை விட்டுப்பிரிநதபின் பல வெற்றிகளை குவித்துதிருக்கவேண்டும்.  அரசியல்ரீதியாக...இதுவரை அவன்எதுவும் செயயவிலலை 

எனவே தனிப்பட்ட கருணா திறமையற்றவன்.

கருணா அம்மான் இரத்தக் களரியை விரும்பவில்லை என்று சொல்லியிருந்தாரே கந்தையா அண்ணை. சண்டை ஆரம்பிக்க போராளிகளை வீட்டுக்கு அனுப்பியிருந்தாரே..  

அரசியலில் அம்மான் இருப்பது தன்னைப் பாதுகாக்கத்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியமாச்சே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.