Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநா தீர்மானம் சம்மந்தமாக நாட்டின் ஜனாதிபதி சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார் - கருணா அம்மான்

Featured Replies

விடுதலைப்புலிகளில் இருந்து கருணா பிரிந்தது தமிழரைப் பொறுத்தவரை ஒரு  துரதிஷரமான சம்பவமே. ஆனால் கருணா பிரியாமல் இருந்திருந்தால் முள்ளிவாய்காலில் அல்லது ஆனந்த புரத்தில் வீரகாவியமான கருணா அம்மான் என்று இங்கு போற்றிப் புகழப்பட்டிருப்பார். ஏனென்றால் விடுதலைப் புலிகளின் தோல்வியில் பெரும் பங்கு வகித்தது அவர்களின் இராணுவ ரீதியான தவறுகள் அல்ல.  சரியான உலக அரசியல் பார்வை இல்லாத அவர்களின் அரசியல் தவறுகளே.  

தோல்விக்கு பழி போட பலிக்கடாக்கள் தேவைப்படுகிறார்கள். அந்த பலிக்கடாகளில் ஒருவரே இந்த கருணா என்பவர். விட்டால் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜோர்ச் வாஷிங்டன் வரை  இந்த பட்டியல்  நீண்டு செல்லலாம் 😂( அவர் தமிழரை அழிக்க போட்ட பிளான் தான் ஒபாமா காலத்தில் நிறை வேறியதாக பாரிசாலன்கள் கூறினால் அதை நம்பும் கூட்டமும் உண்டு.) 

Edited by tulpen

  • Replies 142
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

அப்படியானால், ஏன் அந்த தாயை வசைபாடினீர்கள்? 

இந்த பெரும் தலைவருக்கே மாத்தையாவும், கருணாவும், பிள்ளையானும், கே.பி.யும் எப்படியாவார்கள் என்று தெரியவில்லை. குழந்தை வளர்ந்து இப்படியாகும் என்று அந்த தாய்க்கு தெரியவில்லை என்று வசைபாடி இருக்கிறீர்களே? கொஞ்சம்கூட யோசிக்க மாட்டிர்களோ? 

விளங்கவில்லைபோலும்.

பரவாயில்லை, இன்னொருமுறையில் புரியவைக்கலாம் என்று நினைக்கிறேன்.

தாய்க்கு தனது பிள்ளை கெட்டவன் என்று தெரிந்தாலும் விலத்திவைக்கமுடியாது. 

ஆனால், தலைவரைப் பொறுத்தவரையில் 2004 வரை கருணாவின் சுயரூபம் தெரிந்திருக்கவில்லை.

நீங்கள் தனது பிள்ளை கெட்டவன் என்று தெரிந்தபின்னரும் தள்ளிவைக்க முடியாத தாயையும், தனக்குக் கீழிருப்பவனின் உண்மை சொரூபம் தெரியாமலேயே வளர்த்த தலைவரையும் ஒப்பிடுகிறீர்கள்.

இதைவிடப் புரியவைக்க முடியாது. வரவில்லையென்றால் விட்டுவிடுங்கள்.

"யோசிக்கமாட்டீர்களோ" என்னும் எனது கேள்வி சுட்டுவிட்டதுபோல, நான் செய்வதற்கொன்றுமில்லை. 

53 minutes ago, கிருபன் said:

கருணா அம்மான் இரத்தக் களரியை விரும்பவில்லை என்று சொல்லியிருந்தாரே கந்தையா அண்ணை. சண்டை ஆரம்பிக்க போராளிகளை வீட்டுக்கு அனுப்பியிருந்தாரே..  

அரசியலில் அம்மான் இருப்பது தன்னைப் பாதுகாக்கத்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியமாச்சே.

உங்களின் அறியாமையினை நினைத்து சிரிக்கத்தான் முடிந்தது.

புலிகளுடன் போராடாமல், 2004 இல் போராளிகளை வீட்டுக்கு கருணா அனுப்பியதாகச் சொல்வதை நம்புகிறீர்களே?

அப்படியானால் 2004 முதல் 2009 வரையான காலப்பகுதியில் கிழக்கிலும் வடக்கிலும் கருணாவினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட, கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன? அதுகூட இரத்தக்களறியைத் தடுக்கத்தான் என்று சொல்கிறீர்களாக்கும்? 

விதண்டாவாதத்திற்கும், உங்களை அறிவாளி என்று காட்டுவதற்கும் பகீரதப் பிரயத்தனம் செய்கிறீர்கள் போலத் தெரிகிறது. தொடர்ந்து முயலுங்கள்.

30 minutes ago, ரஞ்சித் said:

விளங்கவில்லைபோலும்.

பரவாயில்லை, இன்னொருமுறையில் புரியவைக்கலாம் என்று நினைக்கிறேன்.

தாய்க்கு தனது பிள்ளை கெட்டவன் என்று தெரிந்தாலும் விலத்திவைக்கமுடியாது. 

ஆனால், தலைவரைப் பொறுத்தவரையில் 2004 வரை கருணாவின் சுயரூபம் தெரிந்திருக்கவில்லை.

நீங்கள் தனது பிள்ளை கெட்டவன் என்று தெரிந்தபின்னரும் தள்ளிவைக்க முடியாத தாயையும், தனக்குக் கீழிருப்பவனின் உண்மை சொரூபம் தெரியாமலேயே வளர்த்த தலைவரையும் ஒப்பிடுகிறீர்கள்.

இதைவிடப் புரியவைக்க முடியாது. வரவில்லையென்றால் விட்டுவிடுங்கள்.

"யோசிக்கமாட்டீர்களோ" என்னும் எனது கேள்வி சுட்டுவிட்டதுபோல, நான் செய்வதற்கொன்றுமில்லை. 

உங்களின் அறியாமையினை நினைத்து சிரிக்கத்தான் முடிந்தது.

புலிகளுடன் போராடாமல், 2004 இல் போராளிகளை வீட்டுக்கு கருணா அனுப்பியதாகச் சொல்வதை நம்புகிறீர்களே?

அப்படியானால் 2004 முதல் 2009 வரையான காலப்பகுதியில் கிழக்கிலும் வடக்கிலும் கருணாவினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட, கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன? அதுகூட இரத்தக்களறியைத் தடுக்கத்தான் என்று சொல்கிறீர்களாக்கும்? 

விதண்டாவாதத்திற்கும், உங்களை அறிவாளி என்று காட்டுவதற்கும் பகீரதப் பிரயத்தனம் செய்கிறீர்கள் போலத் தெரிகிறது. தொடர்ந்து முயலுங்கள்.

1990 ல் தம்மிடம் ஆயுதமின்றி சரணடைந்த 600 மேற்பட்ட பொலிசாரை சுட்டு படுகொலை செய்த சம்பவத்தில் கருணாவின் பங்கும் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளதே! அது எமது விடுதலைப் போராட்டத்தை உலக அளவில் பாதித்த விடயமல்லவா? சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கையில் கூட அது உள்ளது. அதில் உண்மையாகவே கருணாவின் பங்கும் இருந்ததா?  கருணாவை பற்றி நீங்கள் கட்டுரை எழுதுவதால் ஒரு தகவலுக்காக  உங்களிடம் கேட்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

கடவுளுக்கும் மேலான "கெளரவ" கருணா அம்மாண்...........................

கொழும்பு டெலிகிராப் கட்டுரை : ஆவணி 25, 2015

அரந்தலாவையில் சிங்கள விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட காலத்தில் கருணாவே கிழக்கு மாகாணத்திற்கான புலிகளின் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். அவ்வாறே 1990 இல் புலிகளிடம் சரணடைந்த 600 சிங்கள, முஸ்லீம் பொலீஸாரை இழுத்துச்சென்று சுட்டுக்கொன்றபோதுகூட  கருணாவே கிழக்கு மாகாண விசேட தளபதியாக இருந்தார். இதே காலப்பகுதியில் கருணாவின் கட்டளையின் கீழ் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலைகள், சம்மாந்துறைப் படுகொலை, பல்லியகொடல்ல மற்றும் கொணேகல படுகொலைகள் ஆகியன இடம்பெற்றிருந்தன.

இப்படுகொலைகள் எவையுமே கருணாவின் அனுமதியின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் , இன்றுவரை எந்த சிங்கள, முஸ்லீம் அரசியவாதியோ தமது மக்கள் படுகொலைசெய்யப்படக் காரணமான கருணாவினை கேள்விகேட்க முன்வரவில்லை. அவர்களைப் பொறுத்தவரை தமது அரசியல் லாபங்களுக்காக கருணாவின் பாவங்களை அவர்கள் மன்னித்துவிட்டார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. கருணாவை அரசுடன் இணைத்து செயற்படுவது குறித்து அவர்கள் விருப்பம் கூடத் தெரிவித்திருக்கிறார்கள்.

சிங்கள தலைவர்களைப் பொறுத்தவரையில் பிரபாகரனைக் கொன்று, புலிகளை அழித்து, தமிழரை ஆட்கொள்வதுடன் ஒப்பிடும்போது, கருணாவின் படுகொலைகள் பற்றிப் பேசுவது முக்கியமற்ற ஒரு விடயமாக இருக்கலாம்.  ஆனால், முஸ்லீம் தலைவர்களுக்கு என்னவாயிற்று? தமது மக்களைப் படுகொலைசெய்து, தமது வர்த்தகர்களைப் பணத்திற்காகக் கடத்திச்சென்று கொன்று, காணாமலாக்கிய கருணா மீது ஏன் இதுவரை ஒரு முஸ்லீம் தலைவர் தன்னும் கேள்வி எழுப்பவில்லை? 

https://www.colombotelegraph.com/index.php/hon-karuna-amman-the-one-even-above-the-god/

9 minutes ago, ரஞ்சித் said:

உங்கள் தகவலுக்கு நன்றி. ஆனால் முழுப்பழியையும் கருணா மீது போடுவதை தான் நம்ப முடியவில்லை. தலைமையை மீறி இவ்வளவு செயல்களை கருணா செய்யும் அளவுக்கு புலிகள் இயக்கம் அப்பாவி தனமாக இருந்திருக்கிறது. 30.03.1987 ல் ( இன்று 30.03 2021)  நடைபெற்ற கந்தன் கருணை படுகொலைகளும் தலைமைக்கு தெரியாமல் அருணா செய்துள்ளாரே! 

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு புலித்தலைமை மீது வாந்தி எடுக்காமல் இருக்கமுடியாது கருணாவின் திரிக்குள்  கந்தன் கருணை யை ஏன் இழுக்கினம் என்று புரியவில்லை ஒன்றில் புலி எதிர்ப்பாளர் இல்லை ஆதரவாளர் என்று இருக்கனும் அதை விட்டு ......................................................................ஆதரவாளர் அணி கேட்டால் நானும் புலி என்பது உடனே மற்றையவர்கள் வந்தால் நான் புலி எதிர்ப்பாளர் ங்கோ என்று நிற்பவர்களால் எல்லோருக்குமே கேடு .

41 minutes ago, பெருமாள் said:

இது புலித்தலைமை மீதான வாந்தி அல்ல. இலங்கை தீவில் தமிழ் தேசியத்தை வலுப்பபடுத்தவேண்டிய நிலையில் தமிழ் தேசியத்தை பலவீனபடுத்திய உண்மை சம்பவங்கள் குறித்தான பார்வை இது.  தமிழ் தேசித்தின் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு தமிழ் தேசியம் சர்வதேச ரீதியில் பலவீனமடைய காரணமாக இருந்த 600 பொலிசார் படுகொலை, காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலைகள், சம்மாந்துறைப் படுகொலை, பல்லியகொடல்ல மற்றும் கொணேகல படுகொலைகள் போன்றவை கருணாவால் தன்னிச்சையாக நடத்தபட்டதாக நிறுவ ரஞ்சித் முயற்சி எடுத்த‍தால் கந்தன் கருணை படுகொலையையும் உதாரணமாக கூறவேண்டி வந்த‍து. இன்று அது நடைபெற்ற நாள் என்பதால். மற்றப்படி  எவர் மீதும் குற்றம் சாட்டட அல்ல. 

மற்றது கண்மூடித்தனமான  புலி ஆதரவு, கண்மூடிதனமான புலி எதிர்ப்பு என்ற இரு கும்பல்களுக்கும் என்னை இழுக்காதீர்கள். ஏனெனில் இந்த இரு கும்பல்களும் இலங்கை தீவில் கெளரவமான தமிழ் தேசியம் வலுப்பெற  தடையாக இருப்பவர்கள் என்பது எனது பார்வை. எதிர்கால சந்த‍தி  இந்த இரு கும்பல்களில் இருந்தும் விலகி அரசியலை கொண்டு செல்வதே தமிழ் தேசியத்தை வலுப்பெற செய்யும் சிறந்த வழிமுறை. 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

ஆக மொத்தம் கருணா ஒருவிதமான குற்றமும் புரியவில்லை என்கிறீர்கள் ஏனென்றால் நீங்களே சொல்கிறீர்கள் "நிறுவ முயற்சிக்கிறார்" எனும் சொற்பதம் அதனால் கந்தன் படுகொலையை இழுக்க வேண்டி வந்தது என்கிறீர்கள் அதாவது கருணா நல்லவர் அந்த கொலைகளை செய்யவில்லை அருணா கொடூரன் .

தீவிர புலி எதிர்ப்பு தீவிர புலி அனுதாபி அல்ல  அப்ப  புலி ஊர்வலத்துக்கு போவீர்கள் ஆக்கும் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

உங்களின் அறியாமையினை நினைத்து சிரிக்கத்தான் முடிந்தது.

புலிகளுடன் போராடாமல், 2004 இல் போராளிகளை வீட்டுக்கு கருணா அனுப்பியதாகச் சொல்வதை நம்புகிறீர்களே?

அப்படியானால் 2004 முதல் 2009 வரையான காலப்பகுதியில் கிழக்கிலும் வடக்கிலும் கருணாவினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட, கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன? அதுகூட இரத்தக்களறியைத் தடுக்கத்தான் என்று சொல்கிறீர்களாக்கும்? 

விதண்டாவாதத்திற்கும், உங்களை அறிவாளி என்று காட்டுவதற்கும் பகீரதப் பிரயத்தனம் செய்கிறீர்கள் போலத் தெரிகிறது. தொடர்ந்து முயலுங்கள்.

அறிவாளி என்று நானே நம்பாதபோது மற்றவர்களை நம்பவைக்க எனக்கு ஒரு தேவையும் இல்லை. 😁

“ஒரு துரோகத்தின் நாட்காட்டி” என்று எழுதிவரும் நீங்கள்தான் கருணா அம்மான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரா அல்லது புள்ளையான் தலைவரா என்பதை ஆராய்ந்து சொல்லவேண்டும். புள்ளையான் கருணா அம்மானை மீறி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவை எப்படிக் கைப்பற்றினார் என்ற கதையும் தெரியாது.

ஆக, புள்ளையான் தலைமைதாங்கிய குழுவின் அட்டூழியங்களுக்கு கருணா அம்மான் பொறுப்பேற்க வேண்டுமென்றால், கருணா அம்மான், புள்ளையான் குழுக்களின் அட்டூழியங்களுக்கு புலிகளின் தலைமையும், தலைவரும் பொறுப்பு என்று லாஜிக் வருதே!!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

ஆனால், தலைவரைப் பொறுத்தவரையில் 2004 வரை கருணாவின் சுயரூபம் தெரிந்திருக்கவில்லை.

நீங்கள் தனது பிள்ளை கெட்டவன் என்று தெரிந்தபின்னரும் தள்ளிவைக்க முடியாத தாயையும், தனக்குக் கீழிருப்பவனின் உண்மை சொரூபம் தெரியாமலேயே வளர்த்த தலைவரையும் ஒப்பிடுகிறீர்கள்.

தலைவருக்கு அவ்வளவு காலமும் அது கூட தெரியவில்லையா? அது மட்டுமா… கே.பி., மாத்தையா போன்றவர்கள் அருகில் இருந்து கூடியாடி வேலை செய்தும் அவர்களை கூட தலைவருக்கு போதியளவு தெரிந்திருக்கவில்லையே? ஈழத்தமிழரின் வாழ்வை பாதித்த இது போன்ற பல விடயங்களும் தலைவருக்கு தெரியவில்லை இல்லையா? வேறு என்னவெல்லாம் தலைவருக்கு தெரிந்திருக்கவில்லை என்றும் எழுதுங்கள்....சர்வதேச அரசியல்? புவிசார் அரசியல்? இராஜதந்திரம்? நிறுவன உளவியல்? தனிமனித உளவியல்? சமுக இயங்குமுறை? ஈழநாட்டின் வரலாறு? சிங்களவரின் சர்வதேச அணுகுமுறை? எல்லாவற்றையும் பற்றி ஒரு தொடரே எழுதலாமே? “தலைவருக்கு தெரியாதவற்றின் நாட்காட்டி” என்றே உங்களுக்கு பிடித்தமான வகையில் பெயரும் போட்டுக்கொள்ளலாம் இல்லையா? தலைவருக்கு அது தெரியவில்லை, இது தெரியவில்லை என்று காட்டி, தலைவரின் அறிவை கேள்வி கேட்க இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, satan said:

ஐயா! விதைத்தவர் தான் விதைத்ததை ஒரே மாதிரியாகத்தான் விதைத்தார். அதில் சிலது பாறையில் விழும் என்று அவர் நினைக்கவில்லை. 

பொறுப்புள்ள விவசாயியாக தெரியவில்லையே? இவை பாறையில் விழுந்த விதைகள் அல்ல, தலைவர் உரமிட்டு ஊட்டிவளர்த்த வீரியமிக்க களைகள். அவை கடைசியில், ஒட்டுமொத்த வயல்வெளிகளையும் நாசம் செய்துவிட்டன. பொறுப்புள்ள விவசாயி இப்படி செய்திருக்க மாட்டார். களைக்கும் விதைக்கும் வித்தியாசம் தெரியாதவர் விவசாயம் செ்ய்கிறேன் என்று வயலுக்குள் இறங்கி இருக்க கூடாது.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

அறிவாளி என்று நானே நம்பாதபோது மற்றவர்களை நம்பவைக்க எனக்கு ஒரு தேவையும் இல்லை. 😁

“ஒரு துரோகத்தின் நாட்காட்டி” என்று எழுதிவரும் நீங்கள்தான் கருணா அம்மான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரா அல்லது புள்ளையான் தலைவரா என்பதை ஆராய்ந்து சொல்லவேண்டும். புள்ளையான் கருணா அம்மானை மீறி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவை எப்படிக் கைப்பற்றினார் என்ற கதையும் தெரியாது.

ஆக, புள்ளையான் தலைமைதாங்கிய குழுவின் அட்டூழியங்களுக்கு கருணா அம்மான் பொறுப்பேற்க வேண்டுமென்றால், கருணா அம்மான், புள்ளையான் குழுக்களின் அட்டூழியங்களுக்கு புலிகளின் தலைமையும், தலைவரும் பொறுப்பு என்று லாஜிக் வருதே!!

நீங்கள் வாசித்த புத்தகங்களின் டிசைன் அப்படி.

சந்திரகாந்தன் குழுவின் அட்டூழியங்களுக்கு கருணாதான் பிள்ளையார் சுழி. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

இது புலித்தலைமை மீதான வாந்தி அல்ல. இலங்கை தீவில் தமிழ் தேசியத்தை வலுப்பபடுத்தவேண்டிய நிலையில் தமிழ் தேசியத்தை பலவீனபடுத்திய உண்மை சம்பவங்கள் குறித்தான பார்வை இது.  தமிழ் தேசித்தின் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு தமிழ் தேசியம் சர்வதேச ரீதியில் பலவீனமடைய காரணமாக இருந்த 600 பொலிசார் படுகொலை, காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலைகள், சம்மாந்துறைப் படுகொலை, பல்லியகொடல்ல மற்றும் கொணேகல படுகொலைகள் போன்றவை கருணாவால் தன்னிச்சையாக நடத்தபட்டதாக நிறுவ ரஞ்சித் முயற்சி எடுத்த‍தால் கந்தன் கருணை படுகொலையையும் உதாரணமாக கூறவேண்டி வந்த‍து. இன்று அது நடைபெற்ற நாள் என்பதால். மற்றப்படி  எவர் மீதும் குற்றம் சாட்டட அல்ல. 

மற்றது கண்மூடித்தனமான  புலி ஆதரவு, கண்மூடிதனமான புலி எதிர்ப்பு என்ற இரு கும்பல்களுக்கும் என்னை இழுக்காதீர்கள். ஏனெனில் இந்த இரு கும்பல்களும் இலங்கை தீவில் கெளரவமான தமிழ் தேசியம் வலுப்பெற  தடையாக இருப்பவர்கள் என்பது எனது பார்வை. எதிர்கால சந்த‍தி  இந்த இரு கும்பல்களில் இருந்தும் விலகி அரசியலை கொண்டு செல்வதே தமிழ் தேசியத்தை வலுப்பெற செய்யும் சிறந்த வழிமுறை. 

புலிகள் மீதான அத்தனை குற்றச்சாட்டு மற்றும் தவறுகளை நீங்கள் முழுமையாக இங்கே சுட்டிக்காட்டி தமிழ் தேசியத்தின் தூணாக இருப்பது தெரிகிறது

இவற்றை விட சிங்களத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறுகள் பற்றி உங்கள் கைகள் எதற்காக அடக்கி வாசிக்கின்றன??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, விசுகு said:

இவற்றை விட சிங்களத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறுகள் பற்றி உங்கள் கைகள் எதற்காக அடக்கி வாசிக்கின்றன??

நீங்கள் தனகின படியாலைதான் அவங்கள் அடிச்சவங்கள்.அதாலை நீங்கள் தான் குற்றவாளி.
மற்றும் படி அவங்கள் தங்கப்பவுண்கள். சொக்கத்தங்கங்கள். மட்டக்களப்பு பக்கம் இப்பவும் தமிழர்களை பிக்குகள் தடவி கொஞ்சிக்கொண்டுதான் இருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

பொறுப்புள்ள விவசாயியாக தெரியவில்லையே? இவை பாறையில் விழுந்த விதைகள் அல்ல, தலைவர் உரமிட்டு ஊட்டிவளர்த்த வீரியமிக்க களைகள். அவை கடைசியில், ஒட்டுமொத்த வயல்வெளிகளையும் நாசம் செய்துவிட்டன. பொறுப்புள்ள விவசாயி இப்படி செய்திருக்க மாட்டார். களைக்கும் விதைக்கும் வித்தியாசம் தெரியாதவர் விவசாயம் செ்ய்கிறேன் என்று வயலுக்குள் இறங்கி இருக்க கூடாது.

அப்ப  நீங்க விவசாயம் செய்ய வேண்டியதுதானே ?

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, பெருமாள் said:

அப்ப  நீங்க விவசாயம் செய்ய வேண்டியதுதானே ?

எங்களுக்கு எவனாவது விதைச்சா அதுக்குள்ள களைகளை தேடிப்பிடித்து எப்படி உரமூட்டுவது என்பதில் தான் அனுபவமும் ஆர்வமும் ஈடுபாடும்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, விசுகு said:

எங்களுக்கு எவனாவது விதைச்சா அதுக்குள்ள களைகளை தேடிப்பிடித்து எப்படி உரமூட்டுவது என்பதில் தான் அனுபவமும் ஆர்வமும் ஈடுபாடும்.

நீங்கள் செய்திதை சொல்கிறீர்கள், கருணா வந்த போது கூட்டிக்கொண்டு திரிந்தது களைக்கு உரமூட்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கற்பகதரு said:

நீங்கள் செய்திதை சொல்கிறீர்கள், கருணா வந்த போது கூட்டிக்கொண்டு திரிந்தது களைக்கு உரமூட்டியதுதான்.

அது என் தவறல்ல. ஒருவன் எம்முதுகில் குத்துகிறான் என்றால் அது அவனது திறமையல்ல நாம் அவன் மீது வைத்த நம்பிக்கை. ஆனாலும் அதற்க்காக வருந்துகிறேன்.

அதேநேரம் தவறென்று தெரிந்த பின் என் ஒரு முடி கூட அதற்கு சார்பாக இயங்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

பொறுப்புள்ள விவசாயியாக தெரியவில்லையே? இவை பாறையில் விழுந்த விதைகள் அல்ல, தலைவர் உரமிட்டு ஊட்டிவளர்த்த வீரியமிக்க களைகள். அவை கடைசியில், ஒட்டுமொத்த வயல்வெளிகளையும் நாசம் செய்துவிட்டன. பொறுப்புள்ள விவசாயி இப்படி செய்திருக்க மாட்டார். களைக்கும் விதைக்கும் வித்தியாசம் தெரியாதவர் விவசாயம் செ்ய்கிறேன் என்று வயலுக்குள் இறங்கி இருக்க கூடாது.

2 hours ago, பெருமாள் said:

அப்ப  நீங்க விவசாயம் செய்ய வேண்டியதுதானே ?

செய்ய முயன்றவர்கள் சிலர் இங்கே.

K._Pathmanabha.jpg

https://en.m.wikipedia.org/wiki/Sri_Sabaratnam#/media/File%3ASri_Sabaratnam.jpg

http://dbsjeyaraj.com/dbsj/wp-content/uploads/2018/04/NT.png
 
களை வளர்த்த விவசாயி மற்ற விவசாயிகளை கொன்றளித்ததை வரலாறு மறக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

“....தமிழர் இனவரலாற்றில் இதுவரை கண்டிராத துரோகி. இந்தப் பிறப்பே இருந்திருக்கத் தேவையில்லை. இவனைப் பெற்ற தாய் கருத்தரிக்கமலேயே இறந்திருக்கலாம். இவனைப் பெற்றுதமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டாள்...”

தாயையும், தாய்மை உணர்வையும் மதிக்கும் பக்குவம் உள்ளவர்கள் இங்கு உள்ளீர்கள்.கருணா என்பவர் பற்றி விவாதிக்கலாம்.ஆனால் அவரது தாயைப்பற்றி விமர்சிப்பது தர்மமாகுமா ? கருணா நல்லது செய்திருந்தால் அவரது தாயைப் போற்றி இருக்க மாட்டோம்.ஆனால் கெட்டது செய்துவிட்டார் என்றதும் தாயை இப்படிச்சபிக்கிறோம்.

மாலைப் பொழுதில் அறு மஞ்சலரைத்தே குளித்து வேலை மெனக்கெட்டு விழித்திருந்து சூலாகிப் பெற்றாள் , வளர்த்தாள் பெயருமிட்டாள்பெற்றபிள்ளை            பித்தானால் என் செய்வாள் பின்.

விவாதங்கள் நேர்மையானால்                                       விவாதிப்பு நன்மையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

நீங்கள் செய்திதை சொல்கிறீர்கள், கருணா வந்த போது கூட்டிக்கொண்டு திரிந்தது களைக்கு உரமூட்டியதுதான்.

47 minutes ago, விசுகு said:

அது என் தவறல்ல. ஒருவன் எம்முதுகில் குத்துகிறான் என்றால் அது அவனது திறமையல்ல நாம் அவன் மீது வைத்த நம்பிக்கை. ஆனாலும் அதற்க்காக வருந்துகிறேன்.

அதேநேரம் தவறென்று தெரிந்த பின் என் ஒரு முடி கூட அதற்கு சார்பாக இயங்காது. 

களைக்கு உரமூட்டி வளர்த்து நாடழிய காரணமானவர்களில் ஒருவராகவும் இருந்துவிட்டு, “அது என் தவறல்ல.” என்று எழுத எப்படி மனம் வருகிறது? அதற்கு விளக்கமாக தத்துவங்களும் சொல்கிறீர்கள்? கருணாவை கூட்டிக்கொண்டு திரிந்தது உங்கள் தவறல்ல என்றால், யாரின் தவறு அது? உங்களிடம் அனுப்பி கூட்டிக்கொண்டு திரியச்சொன்னவரின் தவறா? நாங்கள் கருணாவை வளர்த்து விடவும் இல்லை, அதற்கு ஒரு துளி பங்களிக்கவும் இல்லை - நீங்கள் செய்தது இமாலயத்தவறு. மற்றவர்கள்மீது உங்கள் தவறை போட்டுவிட்டு தத்துவம் பேசாமல், தவறு நடந்துவிட்டது, பிழை விட்டுவிட்டோம். எம்மால் மக்களும் நாடும் அழிந்துவிட்டது என்று சொல்லி வருந்துங்கள்- உங்கள் நேர்மையை  ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கற்பகதரு said:

உங்களுடைய நோக்கம் வேறு எங்களது நோக்கம் வேறு.

 ஒரு தனி மனிதனின் பிறள்வாள் எதற்காக தொடங்கினோமோ அதெல்லாம் முடிந்து விட்டதாக சொல்லும் உங்கள் அபத்தமான குறிக்கோள்களை உங்கள் வட்டத்துக்குள் வைத்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

செய்ய முயன்றவர்கள் சிலர் இங்கே.

K._Pathmanabha.jpg

https://en.m.wikipedia.org/wiki/Sri_Sabaratnam#/media/File%3ASri_Sabaratnam.jpg

http://dbsjeyaraj.com/dbsj/wp-content/uploads/2018/04/NT.png

எப்படி பத்மநாபா இந்திய இராணுவத்துடன் இணைந்து செய்ததா???? 😁

6 hours ago, பெருமாள் said:

ஆக மொத்தம் கருணா ஒருவிதமான குற்றமும் புரியவில்லை என்கிறீர்கள் ஏனென்றால் நீங்களே சொல்கிறீர்கள் "நிறுவ முயற்சிக்கிறார்" எனும் சொற்பதம் அதனால் கந்தன் படுகொலையை இழுக்க வேண்டி வந்தது என்கிறீர்கள் அதாவது கருணா நல்லவர் அந்த கொலைகளை செய்யவில்லை அருணா கொடூரன் .

தீவிர புலி எதிர்ப்பு தீவிர புலி அனுதாபி அல்ல  அப்ப  புலி ஊர்வலத்துக்கு போவீர்கள் ஆக்கும் ?

மிக தெளிவாக “ கருணா தன்னிச்சையாக செய்ததாக நிறுவ முயற்சிக்கிறார்”,  என்று தமிழில்  எழுதியும் அதன் கருத்தை இப்படி திரிப்பது நேர்மையல்ல. அதாவது அவை கருணாவால் மட்டும்  தன்னிச்சையாக செய்யப்பட்டதல்ல என்பது தான் அந்த தமிழ் வாக்கியத்தின் பொருள். தமிழ் வசனங்களை வாசித்து அதன் பொருளை கிரகித்துக்  கொள்வது சிறந்த கருத்தாடலுக்கு மிக அவசியமானது. 

இங்கு நாம் எல்லோரும்  எமது பார்வையிலான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்கிறோம்.  எமது கருத்துக்களை வாசித்து அப்படியே ஏற்றுக்கொள்ளாமல்  மேலதிக தேடலுடன் வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 

6 hours ago, விசுகு said:

புலிகள் மீதான அத்தனை குற்றச்சாட்டு மற்றும் தவறுகளை நீங்கள் முழுமையாக இங்கே சுட்டிக்காட்டி தமிழ் தேசியத்தின் தூணாக இருப்பது தெரிகிறது

இவற்றை விட சிங்களத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறுகள் பற்றி உங்கள் கைகள் எதற்காக அடக்கி வாசிக்கின்றன??

முன்னர் பல தடவை குறிப்பிட்டது தான். இருந்தாலும் புரிந்தும்   புரியாதது போல் நீங்கள் ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்பதால்  மீண்டும் கூறுகிறேன். 

இது முழுக்க முழுக்க தமிழ் வாசகர்கள் தளம். எமது வீட்டுக்குள் எமது சொந்த தவறுகளால் எமக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்துதான் கருத்து தெரிவிப்பதும் விவாதிப்பதும்  வினை திறனானது. அதுவே எம்மை யோசிக்க வைக்கும்.  சிங்களவர் எவரும் இதனை வாசிக்காத போது அவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை இங்கு வைப்பது வினைதிறனானதல்ல. வேற்று மொழி நண்பர்கள் வாசிக்கும் தளமும் அல்ல. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.