Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசியல் குட்டையில் இறங்கி, சேறாக்கும் அனந்தி எழிலன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
தாயக அரசியலில் ஆனந்தி, சிவாஜிலிங்கம் போன்றவர்கள் தான் உணர்ச்சி அரசியல் செய்பவர்கள், அவர்களுக்கே சீமான் பற்றி தெளிவு இருக்குது என்பதனை நினைத்து பெருமை படுகின்றேன்.
Vadivelu Hugs GIF - Vadivelu Hugs Comfort GIFs
  • Replies 58
  • Views 4.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

அவர் அப்பாவி என்பதால் தான் திமுக வின் முகவர் வலையில் சிக்கினார்

நானும் அதையேதான் நினைக்கிறேன்  இதே ஆனந்தி அக்கா ஒருமுறை திமுகாவின் கனிமொழியிடம் போனில் கதைத்த பின்பே தனது கணவரை இலங்கை படைகளிடம் ஒப்படைதேன் என பேட்டி அளித்தவ ஆனால்  கடைசியாக அந்த கதையை பற்றி இல்லாமல் சீமான் எதிர்ப்பு வாத காணொளிகள் வந்துள்ளன .

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

இலங்கையில் இருப்பவர்கள் சீன்மானை கண்டுகொள்வதில்லை. புலம்பெயர் நாடுகளில் தங்களையும் தங்கள் சந்ததியையும் நிலைப்படுத்தியவர்கள்தான் குளிர் அடிக்கும்போதெல்லாம் ஊருக்குப் போகவேண்டும், ஆனால் தமிழீழம் கிடைக்காமல் நிரந்தரமாக போகமுடியாதே என்ற அங்கலாய்ப்பில் இருப்பவர்கள்தான் தமிழகத்தில் தமிழ்த்தேசிய ஆட்சி வந்தால் அப்படியே தமிழீழம் கிடைக்கும் என்ற கனவில் உள்ளவர்கள்.

தமிழகத்தில் உண்மையான தமிழ்த்தேசியம் மற்றைய இனங்கள் மீதான வெறுப்பில் கட்டமைக்கப்படாமல் வரவேண்டும். ஆனால் அதை வரவிடாமல் செய்வதே இப்ப சீமானுக்கு கொடுக்கப்பட்ட வேலை. 

மிகவும் உண்மை
இலங்கை வடக்கு/ கிழக்கோ அல்லது மலையக மக்களோ இவரை 5 சதத்திற்கும் கணக்கொடுப்பதில்லை.
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இலங்கை வடக்கு/ கிழக்கோ அல்லது மலையக மக்களோ இவரை 5 சதத்திற்கும் கணக்கொடுப்பதில்லை.

அதனால் தான் சிங்களவன் போட்டு ஈழத்தமிழர்களை  கரிக்கட்டையாக்கும்போதும்,
இந்தியாவே காப்பாற்று என்று கந்தகப்புகையினில் கதறும்போதும் , தமிழ்நாட்டு மக்கள் 
மானாட மயிலாட சன்டீவியில் பார்த்துக்கொண்டு சச்சீன் 200 ஆவது செஞ்சுரி  அடிப்பாரா மாட்டாரா என்று 
ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ரிசர்ச் பண்ணிக்கொண்டிருந்தவை, அங்கு நமக்காக தீக்களிக்கும் அளவுக்கு ஆதரவு இருக்க அவர்களது எந்த பிரச்சினைக்காவது நீங்கள்  இருந்த இடத்திலிருந்து எழும்பி எட்டியாவது பார்த்திருக்கிறீர்களா...?  

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

அனந்தி சசிதரன், முன்னாள்... யாழ். கள உறுப்பினர் என்பது, எத்தனை பேருக்கு தெரியும். 🤔

எனது.... பார்வையில்,  அவர், ஒரு  "விளம்பரப் பிரியர்" என்றே நினைக்கின்றேன். :grin:

மற்றும் படி... அவரின் கருத்துக்களை, தூக்கி...  "குப்பை வாழிக்குள்"  போட வேண்டியவை. 🤣

இது ச‌ரியான‌ ப‌தில்
காமெடியா எழுதினாலும் உண்மையை எழுதி இருக்கிறீங்க‌ள் 😀😁

5 hours ago, பெருமாள் said:

நானும் அதையேதான் நினைக்கிறேன்  இதே ஆனந்தி அக்கா ஒருமுறை திமுகாவின் கனிமொழியிடம் போனில் கதைத்த பின்பே தனது கணவரை இலங்கை படைகளிடம் ஒப்படைதேன் என பேட்டி அளித்தவ ஆனால்  கடைசியாக அந்த கதையை பற்றி இல்லாமல் சீமான் எதிர்ப்பு வாத காணொளிகள் வந்துள்ளன .

இது நானும் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் கேட்டு இருக்கிறேன்

ஆன‌த்தி அக்கா புடுக்கிற‌து எல்லாம் தேவை இல்லா ஆணி ,

புரித‌ல் தெளிவு அறிவு உண்மை நேர்மை ஆன‌ந்தி அக்காவிட‌ம் இருப்ப‌தாக‌ தெரிய‌ வில்லை

2009ம் ஆண்டு இதுக‌ள் துரோக‌த்தை பார்த்த‌ பிற‌க்கும் கூட‌ விழிப்புண‌ர்வு வ‌ர‌ வில்லை என்று தான் இவானின் பேட்டிக‌ள் மூல‌ம் தெரிந்து கொள்ள‌ முடியுது 😕

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

மிகவும் உண்மை
இலங்கை வடக்கு/ கிழக்கோ அல்லது மலையக மக்களோ இவரை 5 சதத்திற்கும் கணக்கொடுப்பதில்லை.
 
இலங்கையில் உங்கள் தமிழீழம் எது என்று கிட்டு அவர்களிடம் கேட்டபோது, சிங்களப்படை எங்கெல்லாம் குண்டுகளைப் போடுகிறதோ அந்த இடங்கள்தான் தமிழீழம் என்றார். 

ரணில் பிரதமராக இருந்தபோது எந்தத் தமிழ் அரசியல்வாதிகளைப் புறந்தள்ளிச் சந்திக்காமல் வெறுத்து ஒதுக்கினாரோ அவர்கள்தான் ஈழத் தமிழருக்குரிய உண்மையான அரசியல்வாதிகள்.   

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:

அவர் அப்பாவி என்பதால் தான் திமுக வின் முகவர் வலையில் சிக்கினார்

இத‌ தான் நான் இந்த‌ திரியில் ஆர‌ம்ப‌த்தில் எழுதின‌து 

திராவிட‌ சூழ்ச்சி வ‌லைக்குள் விழுந்து விட்டா அது ஆன‌ந்தி அக்காவுக்கே ந‌ல்லா தெரியும் ஹா ஹா 😀😁
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இது ச‌ரியான‌ ப‌தில்
காமெடியா எழுதினாலும் உண்மையை எழுதி இருக்கிறீங்க‌ள் 😀😁

இது நானும் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் கேட்டு இருக்கிறேன்

ஆன‌த்தி அக்கா புடுக்கிற‌து எல்லாம் தேவை இல்லா ஆணி ,

புரித‌ல் தெளிவு அறிவு உண்மை நேர்மை ஆன‌ந்தி அக்காவிட‌ம் இருப்ப‌தாக‌ தெரிய‌ வில்லை

2009ம் ஆண்டு இதுக‌ள் துரோக‌த்தை பார்த்த‌ பிற‌க்கும் கூட‌ விழிப்புண‌ர்வு வ‌ர‌ வில்லை என்று தான் இவானின் பேட்டிக‌ள் மூல‌ம் தெரிந்து கொள்ள‌ முடியுது 😕

விருப்பு வாக்கில் இரண்டாவதாக  வந்தவர்  சரியான ஆலோசகர் இன்றி எல்லாத்தையும் போட்டு குழப்பி கொள்கிறா .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வைரவன் said:

எமக்கு சாதமும் சட்னியும் என்று சொன்னால் விளங்குது தானே?

அப்படியே சம்பலும் சோறும் என்றால் தமிழகத்து மக்களுக்கு
விளங்காவிடின் என்ன அதை அவர்கள் கற்றுக் கொள்ளட்டும்.

அதற்காக ஏன் அனந்தி அவர்களின் பாசையில் கதைக்க வேண்டும்?

தேர்தலில் தோற்றுப் போனால் அரசியல் கதைக்க கூடாதோ?
சீமான் இந்த தேர்தலில் தோற்றுத் தான் போகப் போகிறார்
அப்ப இனி அவர் அரசியல் கதைக்க கூடாதோ
மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்று சொல்லுவீர்களோ

சீமானின் மீதான கண்மூடித்தனமான உங்கள் ஆதரவு
அனந்தி போன்றவர்களைக் கூட எதிர்க்க சொல்லுது

உங்கள் இடுப்புபட்டியை இறுக்கிக் கொள்ளுங்கள்
அடுத்த நான்கு வருடங்களிற்குள் இப்படி
நிறைய தாயக மக்களின் பிரதினிதிகள் சீமானை
எதிர்க்க போகின்றார்கள்.

உங்கள் விதண்டாவாதத்தினை, கிருபன் அய்யா ரசிப்பார்.  அவர் உடன் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆக்க பூர்வமாக விவாதிக்க முடியாவிடில், தவிர்ப்போம்.

தமிழக சினிமா தொடங்கிய காலம் முதல், சாம்பாரு, சாதம், சோறு எமக்கு தெரியும், புரியும்.

சம்பல் என்றால் அவர்களுக்கு எப்படி புரியும் எண்டால், மண்டை வெடிக்கிற மாதிரி பதில் போடுகிறீர்கள்.

நீங்கள் வேலை செய்யும் இடத்தில், 'வணக்கம்' என்று சொல்லி புரியாவிடின் அறிந்து கொண்டு வரட்டுமே என்பீர்கள் போலுள்ளது.

அவர்களது ஊடகம், வரும்போது, எப்படி பேச வேண்டும், தயாராதல் என்றால் என்ன என்று வின்ஸ்டன் சர்ச்சில் உவமானதுடன் தொடங்கினேன். ஆனால் அது புரியாத மாதிரியே எழுதுகிறீர்கள். அதனால் தான் சொல்கிறேன், உங்களுடன் விவாதிக்கும் தகுதி எனக்கு இல்லையே என்று கவலையுறுகிறேன்.

****

அதென்ன, இடுப்புப்படி, லூசாக வைத்துக் கொண்டு தான் திரிகிறீர்களா?

மீண்டும் சொல்கிறேன், நமக்கு பொழுது போகவில்லை, சீமானை ரசிக்கிறோம், பார்க்கிறோம். அதுக்காக, சீமான், ஏதோ எமக்கு ஈழம் வாங்கி தருவார் என்ற ரீதியில், அலம்பறை பண்ணும் முட்டாள்கள் அல்ல நாம்.

பயங்கரவாதத்துக்கு என்று சொல்லப்பட்ட, விடுதலைப் போராட்டத்துக்கு காசு கொடுத்தவர்கள் நம்மவர்கள் என்றால், ஒரு ஜனநாயக முயல்வுக்கு, அதுவும் சக தமிழர் முயல்வுக்கு, கொடுப்பவர்கள் கொடுக்கட்டும். நான் கொடுப்பதில்லை, நீங்களும் கொடுக்க மாட்டீர்கள். அவ்வளவுதானே. ஏதோ அவர் இங்கே வந்து, கையில் துப்பாக்கியை தனது, இங்கே போராடு என்று சொல்லுவார் என்கிற மாதிரி, கூப்பாடு போடாமல் போங்கோ வைரவா.

ஏதோ சீமானால் பெரிய பிரச்சனையே வரப்போகுது என்பது போல நீங்க, அலம்பறை பண்ணுவதும்,  நம்ம, முனிவர் ஓடிவந்து லைக் பண்ணுவதும், தலையில் அடித்துக் கொள்ளவே தோன்றுகிறது.

சீனா காரன் கப்பலில் அணு கழிவுகளுடன் வந்து விட்டான். இலங்கையில், சிங்களவனுடன் சேர்ந்து, நமது மக்களின் இருப்பே கேள்விக்குறியாக உலகமே அதுகுறித்து கரிசனை காட்டுகிறது.

மறுபுறம், ராஜபக்சேக்களுள் பெரிய பிரச்னை போகிறது. சம்பக ரணவக்க அடுத்த பௌத்த நலன் காக்கும் தலைவர் ஆக்கும் நிகழ்வுகள், வீரவன்ச முன்னனியில் நின்று செய்கிறார்.

இடையே, இந்தியா, மேற்கு ரணிலை மீண்டும், ரத்தம் ஏத்தி உள்ள இறக்க முயல்கிறது. ரணில் பழைய நணபர், மிலிண்டா மொரகொட டெல்லியினால் தூதராக, முதலில் மறுத்து, இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார். 

இதனிடையே, தமிழர்கள், அங்கும், இங்கும் பார்த்துக் கொண்டு தடுமாறிக் கொண்டு, ஏங்கிக் கொண்டு இருக்கின்றனர்.

இதெல்லாம், என்னை பாதிக்காது, நான் தான் வெளியாலை வந்து விட்டேனே என்ற ரீதியில், நீங்களும், முக்கியமாக, அரசியல்வாதியாக தன்னை கருத்திக் கொள்ளும் இந்த அனந்தியும், சீமான் தான் தலை போற பிரச்சனை என்று அலம்பறை பண்ணுவதை பார்க்க கவலையாக  இருக்கிறது.

தமிழர் தலைவிதி, இவர்கள் எல்லாம், அரசியல் பேச வந்தது.  

இடுப்பு பட்டியை இறுக கட்டுமாறு, இலங்கையில் உள்ள உங்கள் உறவினர்களுக்கு சொல்லி வையுங்கள்.

சீனா, இந்திய போட்டியால், தமிழகத்துக்கு, அகதியாக ஓட வேண்டி இருக்கும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மீண்டும் சொல்கிறேன், நமக்கு பொழுது போகவில்லை, சீமானை ரசிக்கிறோம், பார்க்கிறோம். அதுக்காக, சீமான், ஏதோ எமக்கு ஈழம் வாங்கி தருவார் என்ற ரீதியில், அலம்பறை பண்ணும் முட்டாள்கள் அல்ல நாம்.

ஆமாம். சீமான் “தம்பி” என்றொரு படம் எடுத்திருந்தாரே. அதையும் ரசிக்கவேண்டும்!

இந்தப் படத்தை தந்தை பெரியாருக்கு அர்ப்பணித்திருந்தார்😁 இப்போது தமிழ்நாட்டில் பெரியாரியத்தை ஒழிக்கவேண்டும் என்று நிற்கின்றார்!

2007 இல் யாழில் வந்த பதிவு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

ஆமாம். சீமான் “தம்பி” என்றொரு படம் எடுத்திருந்தாரே. அதையும் ரசிக்கவேண்டும்!

இந்தப் படத்தை தந்தை பெரியாருக்கு அர்ப்பணித்திருந்தார்😁 இப்போது தமிழ்நாட்டில் பெரியாரியத்தை ஒழிக்கவேண்டும் என்று நிற்கின்றார்!

2007 இல் யாழில் வந்த பதிவு!

அய்யா.... 

இன்னமும், சொந்த கருத்தினை ஆணித்தரமாக வைக்காமல், எங்கோயோ இருந்து கொண்டு வந்து ஒட்டு வேலைகள் தானே செய்கிறீர்கள்.

முடிந்தால் சொந்த கருத்துக்களை, சிந்தித்து பதியுங்கள். 

நான் முன்னமே சொல்லி இருக்கிறேன். இவர்கள் கருத்துக்கள் உங்களுக்கு அமைவுடையதாக இருக்கலாம், ஆனால் நான், ஒரு சதத்துக்கு கூட அதுக்கு மதிப்போ, நேரமோ கொடுப்பதில்லை.

தமிழக எழுத்தாளர்களும், மேடை பேச்சாளர்களும், ஒரு போதுமே நிலையான கருத்துக்களை கொண்டவர்கள் இல்லை. பணம் கொடுத்தால், தடாலடியாக மாத்திப் பேசுவார்கள்.

கருணாநிதி குறித்த உங்கள் புரிதலும், நான் தந்த, இணைப்பில், 'கலாரசிகர்' என்று தானே போட்டு இருக்குது, நீங்களே இன்னும் வாசிக்கவில்லையோ, என்ற கருத்தும், என்னை மிகவும் கரிசனை கொள்ள வைத்தது.

நிறைய வாசிக்கிறீர்கள் என்று காட்டிக்கொண்டாலும், விசயங்களை உள்வாங்குவதிலேயோ என்ற கரிசனை உண்டாகின்றது.

மன்னிக்க வேண்டும், உங்கள் கருத்துக்கள், உங்கள் ப்ரொபைல் படத்துக்கு ஒத்துப்போகும், சிறுபிள்ளைத்தனமானவையாக இருக்கின்றனவே.

எனது, கரிசனையினை, தவறாக எடுக்க மாட்டீர்கள் என்றும் எனக்கு தெரியும் .

***

முக்கியமாக, நீங்கள் போட்டு விட் டீர்கள் என்று, அந்த பதிவுக்கு (வாசிக்காமல்) வந்த பின்னூட்டங்களை பார்த்தேன்.

அனைவருமே இவரை போட்டு தாக்குகிறார்களே, நீங்கள் பார்க்காமலா இணைத்தீர்கள்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

நிறைய வாசிக்கிறீர்கள் என்று காட்டிக்கொண்டாலும், விசயங்களை உள்வாங்குவதிலேயோ என்ற கரிசனை உண்டாகின்றது.

உண்மையில் உள்வாங்குவதில்லை😀

புத்திசீவி என்று நீங்கள் நினைத்தால் தவறு என்னில் இல்லை😜

நாதம்ஸ் எதையும் படிக்காமலேயே ஞானக்கண்ணால் அறிந்துகொள்வார் என்றும் தெரியும்😂

சீமான் தம்பி படத்தை பெரியாருக்கு அர்ப்பணித்தாரா இல்லையா? பெரியாரின் சீடராக இருந்து பின்னர் ஞானோதயம் பெற்றவர் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அப்பவே அவர் விடுதலைப் புலிகள் ஆதரவு, தலைவர் பிரபாகரன் என்று தனது வணிக வலையைக் கவனமாகப் பின்னி பின்னர் கட்சியையும் தொடங்கி புலம்பெயர் தமிழர் சிலரில் நன்றாக மிளகாய் அரைத்துக்கொண்டுதான் இருக்கின்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

உண்மையில் உள்வாங்குவதில்லை😀

புத்திசீவி என்று நீங்கள் நினைத்தால் தவறு என்னில் இல்லை😜

நாதம்ஸ் எதையும் படிக்காமலேயே ஞானக்கண்ணால் அறிந்துகொள்வார் என்றும் தெரியும்😂

ஒரு பக்கத்தினை விரைவாக வாசித்த பின்னர், ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி, சிந்தனை செய்யுங்கள். தொடர்ந்து வாசிக்க, தகுதியானதுதானே என்று முடிவு செய்ய உதவும்.

முக்கியமாக, இந்த மின்னம்பலத்தில் இருந்து வெளியே வாருங்கள். அது, உங்கள் சிந்தனைகளை மறுதலிக்கின்றது. 

குறைந்த பட்சம், பத்திரிகையாளர் நடேசனையாவது பின்பற்றுவோம். 😜

முக்கியமாக, 2021ம் ஆண்டில், 14 வருசத்துக்கு முந்திய பதிவு ஒன்றினை கொண்டு வந்து, சம்பந்த படுத்த முயலும், சிறுபிள்ளைத்தனத்தினை விடுங்கோ.

உங்களை புத்தி சீவி இல்லை என்று நான் ஒருபோதுமே சொல்லவில்லை.

IT துறையில் இருக்கும், உங்களிடம் இருக்கவேண்டிய, லாஜிக் ஆளுமையினை காணோமே என்று தான் அங்கலாய்கின்றேன்.

**

இந்த காரணத்துக்காகவே, நிழலியுடன் விவாதிக்க பிடிக்கும். லாஜிக் உடன் விவாதிப்பார், லாஜிக் முடிந்து விட்டால், பிறகு வாறேன் என்பது போல கிளம்பி போய் விடுவார். பிறகு வந்து நல்ல லாஜிக் உடன் பதிவார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

IT துறையில் இருக்கும், உங்களிடம் இருக்கவேண்டிய, லாஜிக் ஆளுமையினை காணோமே என்று தான் அங்கலாய்கின்றேன்.

புலம்பெயர் தமிழர்களில் தலையில் சீமான் மிளகாய் அரைப்பதை அறிய பெரிய லொஜிக் தேவையில்லை😀 

சீமான் என்ன அரசியல் செய்கின்றார் என்பதை தமிழகத்திலும் தாயகத்திலும் உள்ளவர்கள் புரிந்துதான் இருக்கின்றார்கள்.

ஆனால் தம்பிகளுக்குத்தான் ஒன்றில் புரிவதில்லை. அல்லது புரிந்தாலும் ஏற்றுக்கொள்ள ஆசீர்வதிக்கப்பட்டதால் வந்த விசுவாசம் விடாது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

சீமான், என் தலையில் மிளகாய் அரைப்பதாக நான் நினைப்பதுமில்லை, அந்தளவுக்கு நான் முட்டாளுமில்லை.

நீங்கள் அப்படி நினைப்பதன் காரணம், உங்களது, insecure பீலிங்க்காக இருக்கக்கூடும்.

புலம் பெயர் தமிழர்கள் தலை என்று என் தலையையும் சேர்க்க வேண்டியதில்லை. அவர் அவர்களுக்கு புத்தி இருக்கிறது, நாமும் புத்தி சொல்ல வேண்டிய தேவையும் இல்லை.

மற்றும் படி, தமிழக சினிமா போலவே, இதனையும் ரசித்துக் கடக்கிறேன்.

சும்மா, பல்லே இல்லாத பாம்புக்கு, பயம் காட்டும் வேலை வேண்டாம் என்கிறேன்.

பயப்படவேண்டும் என்று நினைத்தால், கோத்தாவின் மல்லிமாருக்கு (தம்பிகளுக்கு) பயப்படுங்கள்.

லண்டன் தூதரகத்தில், டொரோண்டோ துணை தூதரகத்தில் முழு யாழ்ப்பாண தமிழ் பேசும் ஒரு கூட்டம் வந்து வேலை செய்கிறது. புரிந்தால் நல்லது..

**

முக்கியமாக, உங்களுக்கோ, எனக்கோ, தமிழகத்தில் வாக்குரிமை இல்லை.

2016ல் 1% ஆகவும் 2019ல் 4% ஆகவும் வாக்களித்துள்ள தமிழக மக்கள் மீண்டும் சீமானுக்கு அதே அளவிலோ, கூடுதலாகவோ,  வாக்களித்தால், அதனை தவறு என்று சொல்லும் உரிமையும் நமக்கு இல்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நீங்கள் அப்படி நினைப்பதன் காரணம், உங்களது, insecure பீலிங்க்காக இருக்கக்கூடும்.

இருக்கும்.. இருக்கும். 😁

2 minutes ago, Nathamuni said:

பயப்படவேண்டும் என்று நினைத்தால், கோத்தாவின் மல்லிமாருக்கு (தம்பிகளுக்கு) பயப்படுங்கள்.

லண்டன் தூதரகத்தில், டொரோண்டோ துணை தூதரகத்தில் முழு யாழ்ப்பாண தமிழ் பேசும் ஒரு கூட்டம் வந்து வேலை செய்கிறது. புரிந்தால் நல்லது..

அவர்கள் 2009 இல் இருந்தே வேலை செய்கின்றார்கள்.. பங்குபிரித்தவர்கள், வெளிப்படையாக ஒரு கட்டமைப்பு இல்லாமல் இருப்பவர்களின் அடி, முடியை தேடினால் அவர்களை வழி நடாத்துபவர்கள் கோத்தாவின் ஆட்கள் என்ற கதையும் கேள்விப்பட்டுத்தான் இருக்கின்றேன். 

9 minutes ago, Nathamuni said:

2016ல் 1% ஆகவும் 2019ல் 4% ஆகவும் வாக்களித்துள்ள தமிழக மக்கள் மீண்டும் சீமானுக்கு அதே அளவிலோ, கூடுதலாகவோ,  வாக்களித்தால், அதனை தவறு என்று சொல்லும் உரிமையும் நமக்கு இல்லை.

அதே போல தமிழக மக்கள் அதிமுகவையோ, திமுகவையோ ஆளும் கட்சியாக தெரிவு செய்தால் அவர்களின் அறிவுத்திறனை இழிவு செய்யும் உரிமைகளும் நமக்கு இல்லை. அதையும் புரிந்துதான் இருக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

அவர்கள் 2009 இல் இருந்தே வேலை செய்கின்றார்கள்.. பங்குபிரித்தவர்கள், வெளிப்படையாக ஒரு கட்டமைப்பு இல்லாமல் இருப்பவர்களின் அடி, முடியை தேடினால் அவர்களை வழி நடாத்துபவர்கள் கோத்தாவின் ஆட்கள் என்ற கதையும் கேள்விப்பட்டுத்தான் இருக்கின்றேன். 

2019 நவம்பர் பின்னான பகுதிக்கும், 2020 கொரோனா தொடங்கும் முன்னான காலப்பகுதிக்கும் இடையே, புதிய அமைப்புக்களும், புதிய மூலோபாயங்களும் வந்து சேர்ந்துள்ளன. பெரும் பணமும் இறைக்கப்படுகின்றன.

7 minutes ago, கிருபன் said:

அதே போல தமிழக மக்கள் அதிமுகவையோ, திமுகவையோ ஆளும் கட்சியாக தெரிவு செய்தால் அவர்களின் அறிவுத்திறனை இழிவு செய்யும் உரிமைகளும் நமக்கு இல்லை. அதையும் புரிந்துதான் இருக்கின்றேன்.

கோத்தவினை தெரிவு செய்த சிங்களவர் அறிவுத்திறனை என்ன சொல்வீர்கள்? 🤔

தமிழர்களும் சிலர், வாக்களித்து இருக்கிறார்களே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கோத்தவினை தெரிவு செய்த சிங்களவர் அறிவுத்திறனை என்ன சொல்வீர்கள்? 

சிங்களவர்கள் முழுத்தீவும் தமக்கே சொந்தம் என்ற தம்மதீபக் கொள்கைப்படி வேலை செய்கின்றார்கள். 2015 இல் சிறுபான்மை இனங்களின் ஆதரவுடன் வந்த “நல்லாட்சி” அரசு போல ஒன்று வரக்கூடாது என்று வெளிப்படையாக சிங்கள மக்களின் ஆதரவுடன் மட்டுமே வெல்லவேண்டும் என்று சொல்லி கோத்தா வென்றும் இருந்தார்.  எதிர்காலத்திலும் சிறுபான்மை இனங்கள் கிங்மேக்கராக வரக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி சிறுபான்மை தமிழர்களையும், முஸ்லிம்களையும் அரசியல் பலமில்லாமல் ஆக்கியுள்ளனர்.

சர்வதேச நாடுகள் ஒருபோதும் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற அரசை நேரடியாக அப்புறப்படுத்தாது. தங்கள் நலன்களைத் தக்கவைக்க உறவைப் பகைக்காமல் வேலைசெய்வார்கள். அந்த வகையில் சிங்களவர்கள், குறிப்பாக மொட்டுக் கட்சித் தலைமையும் அதற்கு ஆதரவு கொடுக்கும் அறிவுஜீவிகளும், அறிவுத்திறனுடன் வேலை செய்கின்றனர்.

ஆனால் கோத்தா இராணுவ அதிகாரி போன்று தன்னிச்சையாக நடப்பதும், பொருளாதார நெருக்கடிகளால் சிங்கள மக்கள் சோறும்/பாணும் சம்பலும் மட்டும் சாப்பிடும் நிலைவரும்போது மக்கள் ஆதரவை இழப்பார். அப்படியான நிலையைத் தோற்றுவிக்கத்தான் சில சமூக எந்திரியர்கள் வேலை செய்கின்றார்கள்.  சரிவரும் என்று நினைக்கவில்லை. 

1 hour ago, Nathamuni said:

தமிழர்களும் சிலர், வாக்களித்து இருக்கிறார்களே.

அண்டிப் பிழைப்பவர்கள் எப்போதும் இருப்பார்கள்.. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

உங்கள் சொந்த கருத்துக்களுக்கு, மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதனால் தான் சிங்களவன் போட்டு ஈழத்தமிழர்களை  கரிக்கட்டையாக்கும்போதும்,
இந்தியாவே காப்பாற்று என்று கந்தகப்புகையினில் கதறும்போதும் , தமிழ்நாட்டு மக்கள் 
மானாட மயிலாட சன்டீவியில் பார்த்துக்கொண்டு சச்சீன் 200 ஆவது செஞ்சுரி  அடிப்பாரா மாட்டாரா என்று 
ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ரிசர்ச் பண்ணிக்கொண்டிருந்தவை, அங்கு நமக்காக தீக்களிக்கும் அளவுக்கு ஆதரவு இருக்க அவர்களது எந்த பிரச்சினைக்காவது நீங்கள்  இருந்த இடத்திலிருந்து எழும்பி எட்டியாவது பார்த்திருக்கிறீர்களா...?  

ஒரு சிறிய நிலப்பரப்பில் 30க்கு மேற்பட்ட இயக்கங்களாக பிரிந்து தாங்களுக்குள் நீயா நானா பெரியவன் என அடிபட்டு ஒருவரை ஒருவர் படுகொலை செய்து கடைசியில் எஞ்சிய தமிழர்களை கரிக்கட்டை ஆக்கும் நிலமைக்கு கொண்டு வந்தது யார்?  

5 hours ago, கிருபன் said:

புலம்பெயர் தமிழர்களில் தலையில் சீமான் மிளகாய் அரைப்பதை அறிய பெரிய லொஜிக் தேவையில்லை😀 

சீமான் என்ன அரசியல் செய்கின்றார் என்பதை தமிழகத்திலும் தாயகத்திலும் உள்ளவர்கள் புரிந்துதான் இருக்கின்றார்கள்.

ஆனால் தம்பிகளுக்குத்தான் ஒன்றில் புரிவதில்லை. அல்லது புரிந்தாலும் ஏற்றுக்கொள்ள ஆசீர்வதிக்கப்பட்டதால் வந்த விசுவாசம் விடாது!

மாயண்டி குடும்பத்தாருக்கு இது புரியாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, colomban said:

ஒரு சிறிய நிலப்பரப்பில் 30க்கு மேற்பட்ட இயக்கங்களாக பிரிந்து தாங்களுக்குள் நீயா நானா பெரியவன் என அடிபட்டு ஒருவரை ஒருவர் படுகொலை செய்து கடைசியில் எஞ்சிய தமிழர்களை கரிக்கட்டை ஆக்கும் நிலமைக்கு கொண்டு வந்தது யார்?  

மாயண்டி குடும்பத்தாருக்கு இது புரியாது

கட்டுமரம் குடும்பத்துக்கு புரியுமாக்கும் 😜

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

அதை முழுவதும் வாசித்து அவரை இன்னும்   தெரிந்து கொண்டேன் ☹️

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, colomban said:

ஒரு சிறிய நிலப்பரப்பில் 30க்கு மேற்பட்ட இயக்கங்களாக பிரிந்து தாங்களுக்குள் நீயா நானா பெரியவன் என அடிபட்டு ஒருவரை ஒருவர் படுகொலை செய்து கடைசியில் எஞ்சிய தமிழர்களை கரிக்கட்டை ஆக்கும் நிலமைக்கு கொண்டு வந்தது யார்?  

அதுதானே தங்களுக்குள்ள அடிபட்டுக்கொண்டிருந்ததாலை தான் சிங்களவனும், இந்தியாவும்  யாரிடம் தீர்வை கொடுப்பது என்று தடுமாறிக்கொண்டிருந்தவை. எஞ்சிய தமிழர்களா .? .நான் நினைச்சுக்கொண்டிருந்தேன் 
முள்ளிவாய்க்கால் இனக்கொலையும் தங்களுக்குள்ள அடித்துக்கொண்டு செத்ததுதான் என்று, அப்படியில்லை போல...?
 நாங்க தான் மாறி மாறி அடிபட்டுகொண்டிருக்கைக்க உங்கட ஆக்களாவது மனித நேயம் மிக்க ஆக்கள் எலுவா  மிச்சம் இருந்தவைங்களை விட்டுவச்சிருக்கலாமில்ல...போறபோக்கில லட்சக்கணக்கில் அசால்ட்டாக ஆட்டையப்போட்டுவிட்டு 1000, 2000 இற்கு அக்கௌன்ட் எழுதிறீங்க.. 

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2021 at 15:37, வைரவன் said:

எமக்கு சாதமும் சட்னியும் என்று சொன்னால் விளங்குது தானே?

அப்படியே சம்பலும் சோறும் என்றால் தமிழகத்து மக்களுக்கு
விளங்காவிடின் என்ன அதை அவர்கள் கற்றுக் கொள்ளட்டும்.

அதற்காக ஏன் அனந்தி அவர்களின் பாசையில் கதைக்க வேண்டும்?

தேர்தலில் தோற்றுப் போனால் அரசியல் கதைக்க கூடாதோ?
சீமான் இந்த தேர்தலில் தோற்றுத் தான் போகப் போகிறார்
அப்ப இனி அவர் அரசியல் கதைக்க கூடாதோ
மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்று சொல்லுவீர்களோ

சீமானின் மீதான கண்மூடித்தனமான உங்கள் ஆதரவு
அனந்தி போன்றவர்களைக் கூட எதிர்க்க சொல்லுது

உங்கள் இடுப்புபட்டியை இறுக்கிக் கொள்ளுங்கள்
அடுத்த நான்கு வருடங்களிற்குள் இப்படி
நிறைய தாயக மக்களின் பிரதினிதிகள் சீமானை
எதிர்க்க போகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக தலைமைகளை விமர்சித்தல் ஈழ தமிழர்களுக்கு ஆரோக்கியமில்லை – சபா குகதாஸ்

12-17.jpg
 99 Views

தமிழக தலைமைகளை விமர்சிப்பது ஈழத் தமிழர்களுக்கு ஆரோக்கியமானதல்ல என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவா் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தாயகமாக கொண்டு வாழும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு ஆதரவான பக்கபலமான தேசம் என்றால் அது இந்தியாவின் தமிழ்நாடு தான். அங்கு வாழ்கின்ற எட்டுக் கோடி தொப்பிள் கொடி சொந்தங்களும் அவர்களின் அரசியல் தலைமைகளும் ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்கு முக்கியமானவர்கள்.

ஈழத் தமிழர்களுக்கும் அவர்களது தேசியப் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு தற்போதைய பூகோள அரசியல் சூழ்நிலையில் தென் ஆசிய நாடுகளின் வல்லரசாக விளங்கும் இந்தியாவின் மத்திய அரசினால் மட்டுமே முடியும். அதனை சரியான பொறிமுறை ராஐதந்திரத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள ஈழத் தமிழ்த் தலைமைகள் இன்றுவரை ஒன்றுபடவில்லை.

இவ்வாறு இருக்கும் போது இந்திய மத்திய அரசிற்கான தொடர்ச்சியான அழுத்தங்களை பிரையோகிக்க தமிழக தலைமைகளை கூட்டாக கையாள ஈழத் தமிழர்களின் தலைமைகள் இன்றுவரை முயற்சிக்கவில்லை என்ற வேதனையான இடைவெளி தொடர்கிறது.

இவ்வாறு நிலைமை இருக்க தற்போது ஈழத் தமிழர் மத்தியில் சில அரசியல்வாதிகள் ஊடகங்களின் பசிக்கு தமிழக அரசியல் தலைமைகளை கால சூழ்நிலையை கருத்தில் கொள்ளாது விமர்சிப்பது ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய பயணத்திற்கு ஆரோக்கியமானதாக ஒருபோதும் அமையமாட்டாது.

ஈழத் தமிழர்கள் தொடர்பான பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசிற்கு தொடர் அழுத்தத்தை கொடுக்கக் கூடிய சக்தியாக விளங்குவது தமிழக தலைமைகளும் மக்களும் தான் இவ்வாறான நிலையில் ஒரு பலமாக இருக்கும் மக்கள் திரட்சியை கொண்ட தமிழகத்தை விமர்சிப்பதை ஈழத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்திய மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டை ஒரு பலமாக சக்தியாக இருப்பதை விரும்பாமல் துண்டுகளாக பிரித்து கையாள முயற்சிக்கும் போது ஈழத் தமிழர்களாகிய நாமும் அந்த நிகழ்ச்சி நிரலில் சென்று விடக்கூடாது. சிங்கள பெருந்தேசியவாதத்தில் இருந்து ஈழத் தமிழர்களை ஒரு இனமாக பாதுகாக்க இன்று உள்ள பலமான தமிழகமே தேவை அதுமட்டுமல்ல ஈழத் தமிழர் விடையத்தில் ஒன்றுபட்ட பலமான தமிழக தலைமைகளே அவசியம்.

இன்று ஈழத் தமிழர் அரசியல் தரப்பில் உள்ள தலைமைகள் அதனை கையாளத் தவறினாலும் சில ஆண்டுகளுள் இதை சிறப்பாக முன்னெடுக்கக் கூடிய இளைய அரசியல் தலைமைகள் ஈழத்தில் வளர்ந்து வருகின்றார்கள் அவர்கள் கையாளக் கூடியவாறு தமிழக தலைமைகளை விமர்சிப்பதை தவிர்த்து வழிவிடுங்கள்”  என்றா

https://www.ilakku.org/?p=48211

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.