Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் இணையத்தில் பெண்களின் நிலமை...

யாழ் இணையத்தில் பெண்களின் நிலமை! 65 members have voted

  1. 1. யாழ் இணையத்தில் பெண்களிற்கு சம உரிமை இருக்கின்றதா?

    • ஆம்!
      37
    • இல்லை!
      25
    • தெரியவில்லை!
      3

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து நீக்கப்பட்டுள்ளது : தூயவன் <_<:D:D:(

Edited by தூயவன்

  • Replies 120
  • Views 12.7k
  • Created
  • Last Reply

பெண்களுக்கு பிரச்சினைகள் இருந்தால் நேரடியாகவோ இல்லை தனிமடல் மூலமாகவோ சம்பந்தபட்டவருக்கு அறியப்படுத்துங்கள். அதற்க்கும் அவர் மறுக்கும் பட்சத்தில் தனி திரி திறந்து அல்லது மட்டுறுத்தினர்களிடம் தெரிவியுங்கள். இங்கே ஆண் பெண் பால் ரீதியாக பிரச்சினைகள் இருப்பதாக தெரிவதில்லை. தற்போது எந்த விதமான தனிமனித தாக்குதல் கருத்துக்களை கூட நிர்வாக விட்டு வைப்பத்தில்லை. உடனேயே தூக்கிவிடுகிறது. அதற்க்கு முன்னர் ஒன்று புரிந்து கொள்ளவேண்டும். ஒன்று சேர்ந்தால்தான் பலம். பெண்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு திரி ஆரம்பியுங்கள். அங்கே எல்லோரும் முதலில் ஒற்றுமையாக கருத்தாடுங்கள். சிலவேளைகளில் நான் கூட நக்கல்கள் பண்ணுவதுண்டு. பெண்கள் என்ற ரீதியில் நக்கல் பண்ணுவதில்லை. நட்பு என்ற ரீதியிலேதான் நக்கல்கள் பண்ணுவதுண்டு. அதுவும் பிடிக்கவில்லை என்றால் செய்வதில்லை. நட்பாக சீண்டல்கள் பண்ணுவதையும் வேணுமென்றே பண்ணுவதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஆணுக்கு பெண் சளைத்தவல் இல்லை. யாராவது நக்கல் பண்ணி சீண்டும் போது நீங்களும் பதிலடி கொடுங்கள். தயவு செய்து ஆண் பெண் என்று பிரித்து பார்க்காதீர்கள் எல்லோரும் ஒரே போல் யாழ் உறவுகளே

ஏன் தாயகப் பறவைகளில் கூடப் பல இடங்களில் ஆண்கள் பெண்களை அடிமையாக்குகின்றார்கள் என்றும், ஆணாதிக்க சமுதாயம் என்றும் எதற்கு எடுத்தாலும் ஒரு திட்டுச் செய்து எழுதுவதைப் பார்த்திருக்கின்றேன்..

ம்ம்ம் தூயவன் அண்ணா,

அது அங்க நடப்பது.!விருப்பனாவை அங்க போய் பேசுங்கோ.. திட்டுங்கோ..அதை இங்க சொல்லி இங்க எழுதும் பெண்களை ஏன் வீணாச் சீண்டுவான் ?

நாங்கள் எந்தத் தலைப்பிலாவது அதை தொடர்பு படுத்தி எழுதுறமா ?

Edited by அனிதா

கேள்வி : பெண்களுக்கு யாழில் சமஉரிமை இருக்கிறதா

பதில் : ஆம். இருக்கிறது...

சமஉரிமைக்கு எங்கே களங்கம் வந்தது யாரால்.. ஆணாலா பெண்ணாலா.. ஆணால் என்றால்..

எங்கே எப்போது..எவ்வகையில்.. யாரால்.. தயவு செய்து பட்டியலிடுங்கள்.. அதில் அடங்கியவர்கள்

பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்..(பட்டியலிட யாராவது தயாரா)

  • தொடங்கியவர்

அனைவருக்கும் மீண்டும் வணக்கம்!

இதுவே இந்த தலைப்பில் இங்கு நான் எழுதுகின்ற கடைசிக் கருத்து. ஏனெனில், சொல்லவேண்டிய செய்திகளை ஏற்கனவே சொல்லிவிட்டேன் என நினைக்கின்றேன். தொடர்ந்தும் நான் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை பதில் எழுதினால் அது பிழையான விளைவுகளையே இங்கு ஏற்படுத்தும்.

நான் கூறிய கருத்துக்களில் ஏதாவது பிழைகள் இருந்தால் கள உறவுகள் அதை மன்னித்துக்கொள்ளவும்.

இது முக்கியமாக பெண்களின் பிரச்சனை, களத்தில் உள்ள பெண்கள் இந்த தலைப்புபற்றி உங்கள் விவாதங்களை, எண்ணங்களை தொடர்ந்து முன்வைக்கவும்.

அனைத்து கள உறவுகளும் கூறும் அபிப்பிராயங்களின் அடிப்படையில் ஆராய்ந்து நிருவாகம் தேவையான நடவடிக்கைகளை (அவ்வாறு ஏதாவது இருந்தால்) எடுக்கவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

கருத்துக்கள் கூறிய, மற்றும் கூறப்போகும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றிகள்!

'எப்பொருள் எத்தன்மை தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப அறிவு!

நன்றி! வணக்கம்! <_<

எல்லோருக்கும் வணக்கம் வணக்கம்...................

நாம தான் வந்துட்டொமல..........

சரி மாப்பி நீங்க சொல்வது மாதிரி நீதி,நியாயம் என்று யாழில நீங்கள் வைத்திருக்கும் பாசத்தை போல தான் 3நாட்களுக்கு வரை நானும் அறியாமல் வைத்திருந்தேன் என்றூ சொல்ல முடியாது அடிட் ஆகீ போயிருந்தேன் என்று சொல்லலாம்................இறுதியாக நடந்த விவாதத்தில் நாரதர் அங்கிள் சொன்னார் இதை விட நமக்கு வெளியில் ஒரு வாழ்கை இருக்கு............அதில் போய் நியாயம்.நீதி என்று போரடினால் நல்லாதிருக்கும் என்பது என் கருத்து.............ஆனாலும் நீங்க தொடங்கியதை பிழை என்று சொல்லமாட்டேன்.........இங்கே உள்ள பலர் பேச பயபிட்டு தனியாக சொல்லுவார்கள் என்பது எனக்கு தெறியும் அந்த வகையில் தான் நீங்க செய்திருப்பீர்கள் என்று நினைகிறேன்.....................

நீங்கள் குறிபிட்டு இருந்தீர்கள் வாழ்கை என்பது சீரியஸ் என்று இந்த கருத்தை நான் ஏற்று கொள்ளமாட்டேன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை நாம எப்பவும் ஜாலியா தான் எடுப்போம் அதை மாதிரி தான் யாழிலையும்.........அதற்காக நான் செய்வது பிழை என்றும் நீங்கள் செய்வது பிழை என்று நானோ,நீங்களோ குறிபிடவில்லை..........

அடுத்ததாக நீங்கள் குறிபிட்டு இருந்தது வாச்கர்கள் வாற அரட்டை பகுதியில் நாங்கள் நாகரீகமாக கதைக்க வேண்டும் என்று...............கேட்கிறேன் நாங்கள் இடத்தில் நாகரீகமற்ற முறையில் கதைத்து கொண்டோம் என்பதை சொல்லுங்கோ.........அத்தோடு நான் சொல்வது என்னவென்றா வாசகர்கள் அந்த பகுதியை பார்வையிடமுடியாது ஒன்லி கருத்துகள உறுப்பினர் பகுதி அரட்டைகளம் என்பது உங்களுக்கு தெறிந்திருக்கும்...........

அடுத்ததாக அரட்டைகளத்தில் கருத்து எழுதுற ஆட்களுக்கு எச்சரிக்கை வழங்கி இருந்தீங்கள் ஆண்கள் பெண் பெயரில் எழுதுகிறார்கள் கவனம் என்று............மாப்பி அங்கே அரட்டை அடிக்கிறவர்கள் எல்லாருக்கும் யார் என்ன என்று தெறியும் நல்ல சகோதரத்துவத்துடனும்,நட்புடன

ம்ம்ம் தூயவன் அண்ணா,

அது அங்க நடப்பது.!விருப்பனாவை அங்க போய் பேசுங்கோ.. திட்டுங்கோ..அதை இங்க சொல்லி இங்க எழுதும் பெண்களை ஏன் வீணாச் சீண்டுவான் ?

நாங்கள் எந்தத் தலைப்பிலாவது அதை தொடர்பு படுத்தி எழுதுறமா ?

நல்ல கேள்வி...!! எங்க தூயவன்...??? ஆகா..... எழுதின கருத்தையும் அழிச்சிட்டு, ஆள் ஓடி ஒளிஞ்சிட்டார்.... :P :P :P

வாக்கெடுப்பிற்கான கேள்வி தெளிவாக இல்லை. யாழ் களம் ஆண்கள் பெண்கள் என்று பாகுபாடுடன் நடந்து கொள்வது இல்லை. இங்கே இருக்கும் சில உறுப்பினர்கள் அப்படி நடந்து கொள்ளக்கூடும்.

இந்தத் தலைப்பில் கருத்து எழுதியவர்களில் இதுவரை யாரும் பெண்களை தாக்கியோ, தரக்குறைவாகவோ, கிண்டலாகவோ கருத்து எழுதவில்லை, ஒருவரைத் தவிர.

அந்த ஒருவர் இந்தத் தலைப்பை ஆரம்பித்த கலைஞன்

கலைஞன் இப்படி எழுதுகிறார்

"மகளிரை என்பக்கம் இழுப்பதற்காகவோ அல்லது அவர்களை ஐஸ் வைப்பதற்காகவோ நான் இந்த கருத்தாடலை தொடங்கவில்லை. ஐஸ் வைப்பது எனது நோக்கமாக இருந்திருந்தால் கவிதைப் பூங்காட்டில் காதலைப்பற்றி தேனொழுக கவிதைகள் எழுதி ஒட்டி இருப்பேன்."

இதன் மூலம் பெண்களின் சிந்தனை ஒரு வட்டத்திற்குள் நிற்கிறார்கள் என்றும், காதல் கவிதை போன்ற விடயங்களில் மயங்கிவிடுகிறார்கள் என்றும் கலைஞன் குறிப்பிடுகிறார்.

(பெண்கள் பற்றிய இந்தக் குற்றச்சாட்டு உண்மை என்று நானும் நம்புகிறேன்) ஆனால் பெண்களின் பரிதாபநிலை பற்றி தலைப்பை ஆரம்பித்த கலைஞன் இப்படி பெண்களைப் பற்றி கிண்டலாக எழுதியது ஆச்சரியமாக இருக்கிறது.

இது தொடர்பான என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை எழுதுகிறேன்.

தலைப்பை யாழ்களத்தின் பரிதாப நிலமை என்று மாற்றியிருக்கலாம் என்று தோன்றுகிறது. காரணம் இங்கே பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் மட்டுமல்ல. ஆண்களும் தான்.

ஆனால் அதற்காக பெண்கள் மீத தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்று நான் கூற வரவில்லை. ஆனால் அந்தத் தாக்குதல்கள் பெண்கள் என்பதற்கானதா என்று சொல்லவும் முடியவில்லை.

இந்த இடத்திலே பெண்களால் தனிப்பட்ட முறையிலே பாதிக்கப்பட்டதாலோ என்னவோ பெண்களை எள்ளி நகையாடும் ஒருவர் அல்லது இருவர் இருப்பதும் உண்மையே. (பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் உங்களில் பலருக்கு சட்டென்று அவருடைய புதிய முகம் ஞாபகத்திற்கு வந்திருக்கும்.)

உண்மையிலே கள உறவுகள் செய்ய வேண்டியது என்னவென்றால் அந்த நபர்களை இனங்கண்டு அவர்களது பதிவுகளை முற்றாகப் புறக்கணித்து அது தொடர்பான கருத்துக்களைப் பதியாமல் விடுவதே. காரணம் இவர் போன்றவர்கள் பக்கம் பக்கமாக எழுதுவது மற்றவர்களைச் சீண்டித் தாங்கள் களத்தில் பேசப்படும் நபராகத் திகழ்வதற்கே.

அடுத்ததாக இது போன்றவர்கள் தனியே பெண்கள் தொடர்பான தவறான கருத்துக்களை முன்வைக்கின்றனர் என்றும் சொல்ல முடியாது.

தேசியம், சமயம் என்று அந்த விடயமானாலும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் தொடர்புபடுத்துவது போன்று சில விடயங்களைப் புகுத்தி கருத்தின் போக்கையே திசைதிருப்பி அலட்டிக் கொண்டிருக்கின்றனர். இங்கே சங்கடத்துடன் என்றாலும் ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். இது போன்றவர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு நேரமின்னையாலோ அல்லது வேறு காரணத்தாலோ நிர்வாகவும் தவறி வருகிறது.

இது போன்ற தவறான கருத்துக்களை உடனடியாக நீக்கி உறவுகள் மனம் நோவதை தவிர்க்கலாம்.

அத்துடன் களத்தின் பல விடயதானம் கொண்ட பகுதிகளுக்குள்; நடக்கும் அரட்டைகளும் (கருத்துடன் சம்பந்தப்படாத) களத்தில் ஒரு தொய்வு நிலை ஏற்படுவதற்குக் காரணமாய் இருக்கிறது என்பதும் என்னுடைய கருத்து.

யாழ் களத்தில் பெண்களின் 'பரிதாப நிலை' என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. (பெண்ணாக இருந்த அனுபவம் <_< )

யாழ் களத்தில் ஆக்கற் களத்திலேயே பெரும்பாலான பெண்களின் பதிவுகளைக் காணக்கூடியதாக உள்ளது.

கவிதை, கதை, சமயல்... போன்றவற்றுடன் நின்றுவிடாமல் ஏனைய பகுதிகளிலும் பெண்கள் கருத்தாடலில் கலந்துகொள்ள வேண்டுமென்பது எனது விருப்பம். யாழின் பலமாகக் கருதப்படும் செய்திப் பகுதியிலும் சிந்தனைக்களம், அறிவியற்களம் போன்றாவற்றிலும் பெண்களின் பங்கு மிகக் குறைவு. கறுப்பி அக்கா பெருமளவில் செய்திகளைத் தொகுத்து வழங்கினாலும், அவர் தனது கருத்துக்களைப் பதிவது குறைவு.

ஒருவேளை இதைத்தான் பெண்களின் பரிதாப நிலை எனக் கூறப்பட்டுள்ளதோ ?

எழுதினால் வாயாடி என்ற முத்திரை தந்துடுவார்கள். இருப்பினும் பின்னர் எழுதுகின்றேன். இப்போதைக்கு விடைபெறுகின்றேன். நானும் ஆமாம் என்றே வாக்கு

போட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்வி...!! எங்க தூயவன்...??? ஆகா..... எழுதின கருத்தையும் அழிச்சிட்டு, ஆள் ஓடி ஒளிஞ்சிட்டார்....

உள்ளேன் ஐயா:D:(:D

கருத்தை எழுதிப்போட்டு, திரும்ப வந்து அழிப்பதற்கிடையில் மேற்கோள் வந்திட்டுது. அவர்களின் கணனி வேகத்தோடு என்னால் போட்டி போட முடியவில்லை. <_<

தாயகப்பறவையைப் பற்றிச் சொன்னால் வாங்கிக் கட்டுவேன் என்று யோசிச்சனான். ஆனாலும் விதி விடல்லையே!... B)

ஆனா ஏன் அதைச் சொன்னே்ன என்றால், ஆண்கள் என்றால் அப்படித் தான் இருப்பார்கள். பெண்கள் என்றால் இப்படித் தான் இருப்பார்கள் என்பதே. தவிர எனக்கும் தாயகப்பறவைகளுக்கும் எவ்வித கோபமும் கிடையாது. அதன் வெற்றியில் பெருமைப்படும் ஆட்களில் ஒருவனாக நானும் இருப்பேன். :D

வலைஞன் அண்ணா ம்மற்றும் நிர்வாகத்தினர் பக்க சார்பாக நடந்துள்ளனர் இந்த தலைப்பில் பெரும்பாலான கருத்துகள் வெட்டபட்டிருகின்றன.ஒரு மட்டுறுத்துணர் தாறுமாறாக ஒரே பதமுடைய பல கருத்துகளை வெட்டியிருபதானது பரவலான ஊகத்தை வலுபடுத்தி உள்ளது .

இங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் என பாகுபடுத்தி யாழில் குழப்பத்தை உண்டாக்கும் நோக்கத்துடன் இவ்தலைப்பு போடபட்டிருப்பதாக கருத வேண்டி உள்ளது இந்த தலைப்பை வைத்துகொண்டு ராதாவால் தொடங்கப்பட்ட தலைப்பு முதலில் மூடப்பட்டு அதன் பின் தூக்கப்பட்டதானது நிர்வாகம் இந்த தலைப்பை அங்கீகரிகின்றதோ என எண்ன தோன்றுகின்றது

அனித்தாவும் சகியும் சீண்டல்கள் நடந்ததாக எழுதி இருந்தார்கள் என்னை பொறுத்தவரையில் நான் அனைத்து உறுப்பினர்களுக்கும் நக்கலாக பதில் எழுதி இருகின்றேன்.ஆதிவாசி,சின்னப்ப

சகியை கேசரி விசயத்தில் கொஞ்க்கிரீட் கிண்டுவதாகவும் அனித்தாவை பாட்டி எனவும் அழைத்திருக்கின்றேன் இவை ஒரு சகோதரனாக பாவித்து எழுதியவை எந்தவித சீண்டலும் உள்நோக்கமும் இல்லாமல் எழுதி இருந்தேன் ஆனால் சகியும் அனித்தாவும் பெண்கள் மீது சீண்டல்கள் நடப்பதாக எழுதி இருந்தார்கள் அப்படி நான் எழுதியவை சீண்டலாக அனித்தாவுக்கும் சகிக்கும் தென்பட்டிருப்பதாக நான் சந்தேகிப்பதால் இனிமேல் அனித்தாவுடனும் சகியுடனும் எந்தவித நட்புரீதியிலான கருத்தை பதிவிடுவதை இத்துடன் நிறுத்தி கொள்கின்றேன்

ஈழவன் சார்,

உங்க கூட........... நான்............ யாழ்ல......... உங்க கருத்துக்கு பதில் எழுதினதா எனக்கு ஞாபகம் இல்லை ....... (உலக நடப்பில் எழுத்யிருக்கம் போல ) ஆனா நீங்க என்னைப் பாட்டி எண்டு சொன்னீங்களா ................. ? எந்த தலைப்பில் ....................?

ஹா ஹா அப்படி சொல்வதால் சீண்டுவது என்று அர்த்தமா................. ? என்ன இது சின்னப்புள்ளை தனமால்ல இருக்கு! நீங்கள் அப்படி அழைப்பதால் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை ! :P ;)

ஜமுனா & வானவில் கூட அபப்டித்தான் கூப்பிடுவினம். அது சீண்டல் இல்லை ஈழவன் ....... புரிஞ்சுக்கோங்க ! சீண்டலுக்கும் பகுடியா இப்படி அழைப்பதுக்கும் வித்தியாசம் உண்டு ! :P புரிந்து கொள்ளுவீங்க எண்டு நினைக்கிறன்........ !

நன்றி !!!!!

உள்ளேன் ஐயா:D:(:D கருத்தை எழுதிப்போட்டு, திரும்ப வந்து அழிப்பதற்கிடையில் மேற்கோள் வந்திட்டுது. அவர்களின் கணனி வேகத்தோடு என்னால் போட்டி போட முடியவில்லை. <_< தாயகப்பறவையைப் பற்றிச் சொன்னால் வாங்கிக் கட்டுவேன் என்று யோசிச்சனான். ஆனாலும் விதி விடல்லையே!... B) ஆனா ஏன் அதைச் சொன்னே்ன என்றால், ஆண்கள் என்றால் அப்படித் தான் இருப்பார்கள். பெண்கள் என்றால் இப்படித் தான் இருப்பார்கள் என்பதே. தவிர எனக்கும் தாயகப்பறவைகளுக்கும் எவ்வித கோபமும் கிடையாது. அதன் வெற்றியில் பெருமைப்படும் ஆட்களில் ஒருவனாக நானும் இருப்பேன். :D

:P

Edited by அனிதா

அனித்தாவும் சகியும் சீண்டல்கள் நடந்ததாக எழுதி இருந்தார்கள் என்னை பொறுத்தவரையில் நான் அனைத்து உறுப்பினர்களுக்கும் நக்கலாக பதில் எழுதி இருகின்றேன்

வாங்கோ ஈழவன்! வணக்கம்!

நீங்கள் என்னோட கருத்தை வடிவாக தான் வாசித்தீர்களா? இல்லை நான் மறந்து போய் டச்சில் எழுதி விட்டேனா?

மீண்டும் ஒரு முறை உங்கள் பார்வைக்கு......... (நீளமா இருக்கும் தான்..ஆனா என்ன செய்வது)

தலைப்பை விட்டு அவரோட எண்ணம் நல்லதே!

........

இங்கு விளையாட்டாக சீண்டி கதைப்பது வேறு வேணுமென்று நினைத்து வைத்து பழி வாங்க கதைப்பது வேறு. அப்படி கதைத்து தான் பலரை இழந்து விட்டோம்.

நான் இங்கு பெண்கள் அடிமைபடுத்தபடுகிறார்களோ இல்லை சமமாக கருதவில்லை என்றோ சொல்ல வரவில்லை. ஊக்குவிக்கும் அண்ணாக்கள், நண்பர்களும் இருக்கிறார்கள்.

ஆனா சில சமயங்களில்...சிலரால்..சிலரின் கருத்துக்களால் தாக்கபடுகிறார்கள். தொடக்கம் கூட ஆண்களின் கருத்துக்களாகவே இருக்கின்றது. இப்படி ஆண்கள் பெண்களால் தாக்க தொடங்குவது குறைவு..ஏன் இல்லை என்றே சொல்லலாம்..

இதுவே நம் யாழில் உள்ள வித்தியாசம்..என்று நான் நினைக்குறன்.............

.............

இங்கு இந்த தலைபில் பதிவிட்ட உறுபினர்களில் அனித்தாவும் சகியுமே இத்தலைப்பின் கருவுடன் ஒத்துபோயுள்ளனர் அதேவளை பெண் உறுபினர்களான தூயா வெண்ணிலா இத்தலைப்பின் விடயங்களுக்கு எதிராக கருத்து பதிந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நீங்கள் ஏன் கருத்துக்களை சரியாக வாசிக்காமல் எழுதுகிறீர்கள்?

நாங்கள் சொல்வது எங்கள் தா.பற்வைகள் பற்றியது!

அதை நக்கல் நடித்தவர்களை பற்றியது!

வேறு யாழில் அவர் நக்கல் பண்ணினார்...இவர் கிண்டலடித்தார் எண்டு அழுதோமா? இல்லை சமம் இல்லை அல்லது கீழத்தரமா இருக்கென்று சொன்னோமா? அப்படி சத்யமாக இல்லை!

ஒண்டு தெரியுமா?

இதையே மேலே சொன்னே. திரும்பவும் எழுதுறீங்க. ஒரே விடயத்தை திரும்ப திரும்ப சொல்ல உங்களுக்கு அலுக்குதோ இல்லையோ எனக்கு அலுக்குது.

தயவு செய்து இதற்கு மேலும் வீணாக கதைக்காதீர்கள்.

தூயா சொல்லி இருந்தார்.. " தா.பறவைகள் மீதான கருத்துக்களை கண்டிக்கனும்" எண்டு.

அதையே தான்

அனிதா வெளியாக சொல்லாமல் " பெண்களை பற்றி எழுதி இருக்காங்க தனக்கு எதிர்த்து கதைக்க துணிவில்லை" என்றார்.

அதே...விடயத்தையே நான் உதாரணமாக காட்டி சொன்னேன்.

இதுக்கு மேல் விளக்கமா சொல்ல எனக்கு தெரியவில்லை.

அப்படி நான் எழுதியவை சீண்டலாக அனித்தாவுக்கும் சகிக்கும் தென்பட்டிருப்பதாக நான் சந்தேகிப்பதால் இனிமேல் அனித்தாவுடனும் சகியுடனும் எந்தவித நட்புரீதியிலான கருத்தை பதிவிடுவதை இத்துடன் நிறுத்தி கொள்கின்றேன்

இங்கு பல அண்ணாக்கள் இருக்கினம். ஏன் இப்பவும் இதை பற்றி வாதாடி விட்டு மறுபடியும் நக்கல் அடித்து கதைச்சுக்கிட்டு தான் இருக்கம்.

அப்படி கதைக்காமல் இத்தோடு அதை சேர்த்து கதைக்காமல் விடுவது...அது உங்கள் விருப்பம்! ஆனால் இவை எப்பவோ என்றோ விளையாட்டாக கதைத்து சிரித்த விடயங்கள். கொங்கிரீட் எண்டு சொல்ல நான் என்ன எங்கப்பாவை கூட்டியாந்து உங்களை பேச சொன்னேனா? சின்ன பிள்ளை போல கதைக்கிறீங்களே?

எதற்கு அதை இதுக்குள் இழுக்கிறீர்கள்? அது வேறு. இது வேறு.

அதை புரிந்து கதையுங்கள்!

......................

நான் இனி இத் தலைப்பில்எழுத வேண்டாம் என்று இருந்தேன். ஆனால் இப்படி எல்லாம் எழுத வாசிச்சுட்டு போக முடியல.

இவ்வளவு சொல்கிறீர்கள். தா.பறவைகள் பற்றி நக்கலாக எழுதிய கருத்துக்களை பற்றி சொன்னேன். அதை யாரும் எழுதியது பிழை எண்டீர்களா? இல்லை...எப்பவோ கொங்கிரீட் எண்டதையும், பாட்டி எண்டதையும் இப்போ கொண்டு வந்து கதைக்கிறீர்களே?

........

நானும் நக்கல் அடிச்சிருக்கேன். அண்ணாமார், நண்பர்களை ஆனா அது அனைவருக்கும் தெரிஞ்சதே. அத்தோடு கோவத்தில் சிலரை நான் எழுதி இருக்கேன். அதுவும் தொடக்கம் அவர்களே! ஆனாலும் அப்படி இனி எந்த கருத்துக்களும் என்னால் வைக்கப்படமாட்டாது!

அப்படி வைத்ததற்கு மன்னிக்கவும். அதற்காக தொடர்ந்து வைக்கப்படும் என்றால்... மிச்சம் எனக்கு தெரியாது. <_<

பெண்கள் பொங்கி எழணும் என்பீர்கள்..

எழுந்தால் என்ன சும்மா கருத்து சொன்னாலே வாயாடிப்பட்டம் இலவசமா கிடைக்கும்! இதுக்கும் கிடைக்கும். திரும்ப திரும்ப ஒரே பட்டம் பெறுவது நினைக்க எனக்கு சும்மா புல்லரிக்குது... :P

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சுண்டல பற்றியா கதைக்கிறிங்க..ஓஓஓ சீண்டல பற்றியா? என்ன கொடுமை சார். இது...

என்ன சுண்டல பற்றியா கதைக்கிறிங்க..ஓஓஓ சீண்டல பற்றியா? என்ன கொடுமை சார். இது...

இவ்வளவு நேரமும் பாஸ்வேர்டை தொலைத்து தேடி போட்டு இப்ப வந்து என்ன கொடுமையாம் நானும் சொல்லுவேன் தானே லக லக லக லக.................. :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நடக்குது இங்க? எனக்கென்றால் புரியலை.

தலைப்பு எனக்கு பிடிக்கலை.பரிதாப நிலையில பெண்கள் இல்லை என்று நான் நினைக்கிறன்.

ஒரு கருத்து மட்டும் சொல்லலாம் என்று நினைக்கிறன். தாயக பறவைகள் பத்தி எழுதின கருத்துக்கள் நானும் பார்த்தேன். அதுக்காகதான் யாழ் இல பெண்கள் பரிதாப நிலையில இருக்காங்க என்று சொல்லுறீங்களா? அது ஒருவரோட தனிப்பட்ட கருத்து என்று நான் நினைக்கிறேன். மற்றும் படி நக்கல் அடிக்கிறது, இதெல்லாம் சகஜமா நடக்கிறதுதானே.

உண்மையை சொல்லோனும் என்றால் தாயகபறவை பதிவை நான் பார்க்கவில்லை என்ன எழுதப்பட்டிருந்தது என எனக்கு தெரியாது சீண்டல் என்னும் போது நான் உங்களோடு பழகிய விதத்தை எடூத்தீர்களோ எனப்பட்டது தவறாயின் என்னை மன்னிக்கவும்

உண்மையை சொல்லோனும் என்றால் தாயகபறவை பதிவை நான் பார்க்கவில்லை என்ன எழுதப்பட்டிருந்தது என எனக்கு தெரியாது சீண்டல் என்னும் போது நான் உங்களோடு பழகிய விதத்தை எடூத்தீர்களோ எனப்பட்டது தவறாயின் என்னை மன்னிக்கவும்

இது முதலே தெரிஞ்சிருந்தால் இப்படி கை நோக எழுதி இருக்க மாட்டேன் :(

Edited by பிரியசகி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள உறவுகளூக்கு வணக்கம்,

இப்போதுதான் இந்த இழையைப்பார்க்கும் வாய்ப்புக்கிட்டியது. அடியேன் இன்னும் வாக்குப்பதியவில்லை.

ஆண்/பெண் என்ற பேதம் தவிர்த்து கருத்துக்களோடு மட்டும் மோதினால் பல ஆக்கபூர்வமான படைப்புக்களை எதிர்நோக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் எவரேனும் அதில் அக்கறைகாட்டியதாகத் தெரியவில்லை.

கலைஞன் அவர்களே, உங்களின் சிந்தனை, ஆக்கபூர்வமான படைப்புகள் யாவும் இங்குள்ள எல்லா உறவுகளூம் அறிவோம்.

'பெண்களைத்தாக்கிப்பேசும்போ?ு" யாரோ ஒரு பெண்ணால் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்" போலும் என்று அவரைப்பற்றி நினைத்துக்கொள்வேன்.! ஆகவே அவருக்கு அறிவுரை சொல்வதால் என் நேரம் வீண் என்று விட்டுவிடுவேன்.

பெண்கள் தனிப்பட்ட ரீதியில் மிக மோசமாகத் தாக்கப்பட்டிருந்தால் 'நிர்வாகத்திடம்' நேரடியாக முறையிடுவது சாலச் சிறந்தது!.

ஒரு ஒரே ஒரு கணம் எம் தாயகப் போராளிகளை நினைத்தால் ஆணையோ/ பெண்ணையோ மட்டமாக நினைக்க மனசு வராது!. ஆனால் அந்த அந்தத் தலைப்புகள் வந்தால் உணர்ச்சிவசப்படுகின்றோமே தவிர நாம் எம்மை சீர்படுத்திக்கொள்ளவோ, சரிபடுத்திக்கொள்ளவோ முனைவதில்லை சற்றேனும் முயல்வதும் இல்லை என்பது வேதனைக்குரியது!.

இப்படி ஓர் தலைப்பைத் தொடங்கியதற்கே 'கலைஞனுக்கு" இத்தனை அம்புகளா?! யோசிக்க வேண்டிய விடயம்!.

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தில் பெண்களிற்கு சம உரிமை இருக்கின்றதா?

ஆம்! [ 32 ] [60.38%]

இல்லை! [ 19 ] [35.85%]

தெரியவில்லை! [ 2 ] [3.77%]

அநேக கள உறவுகள் தெளிவாக உள்ளனர் என்று நினைக்கையில் உவகையாக உள்ளது.

இங்கு பிரச்சனைகள் சில ஆண் பெண் என்ற வேறுபாட்டுக்கு அப்பால் இருந்தன.. இருக்கின்றன..! அவற்றை கள உறவுகள் அனைவரும் அனைவரையும்... தலைப்புக்களில் ஏற்படும் மாறுபட்ட கருத்துக்களுக்கு... அப்பால் நட்புறவோடு அணுகும் போதே அகற்றுவது சாத்தியப்படும். கள உறவுகள் ஒருவரை இன்னொருவர் புறக்கணிக்கனும்.. துரத்தனும்.. விரட்டனும் என்று போதிப்பது கள உறவுகளிடையே பிரச்சனைகளை பேண விரும்புதலாகவே நோக்கப்படனும்.

தமிழர்களுக்குள் ஒருவரை ஒருவர் ஒதுக்க முற்பட்டதால் தான் இன்று பல பிளவுகள்..! பிரிந்திருந்து எதிரிக்கு கூட அரிவருடுகின்றனர். அந்தத் தவறை யாழ் களமும் செய்யக் கூடாது. ஒரு மனிதனுக்குள் ஒரு விடயம் தொடர்பாக எழும் அவனுடைய கருத்தியலுக்கு நாம் மதிப்பளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அவனுடைய கருத்தியல் எமது நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டிருப்பினும். அவனுடைய கருத்தியல் நிலைப்பாட்டின் தவறை உணர வைக்க நாம் அவனின் கருத்தியலை புரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். அவ்வாறன்றி கருத்தாளர்களை கருத்துக்களின் பெயரால் துரத்தி அடித்தல்.. விரட்ட எத்தனித்தல்.. புறக்கணிக்க அறை கூவுதல்.. நிச்சயம் களத்துக்கு மட்டுமல்ல.. தமிழர்களுக்கும் அவர்களின் ஒற்றுமை பலத்தை பேண உதவாது..!

பெண்கள் ஆண்கள் என்ற பிரிவினைக்கு அப்பால் சமூகத்தில் நடக்கும் தவறுகளை அதை எந்த மனிதன் செய்தாலும் சுட்டிக்காட்ட வேண்டும். பெண்களுக்கும் சில பலவீனங்கள் இருக்கும்.. ஆண்களுக்கும் இருக்கும். அதனால் பாதிக்கப்படுவது ஆணாக இருக்கும் போது அதைச் சுட்டிக்காட்டுதல் அல்லது சமூகம் பாதிப்படும் போது அதை சுட்டிக்காட்டுதலை பெண்கள் எதிர்ப்பு என்ற நிலையில் நோக்காது.. பெண்களின் தவறுகளுக்கான காரணங்களையும் தீர்வுகளையும் தேட முற்பட வேண்டும். பெண்கள் ஆண்கள் தொடர்பான அவர்களின் செயற்பாடுகளில் கருத்தாளர்களிடையே பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். நாம் அனைத்தையும் வெளிக்கொணர சந்தர்ப்பம் அளிக்கும் பட்சத்தில் மட்டுமே சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வை தேட கலந்துரையாட முடியும்..! முன்மொழிவுகளைச் செய்ய முடியும். அப்படியான விவாதங்களில் ஒருவரின் கருத்தின் அடிப்படையில் அதுதான் அவரின் மாறாத நிலைப்பாடு என்று தீர்மானிக்க முடியாது. குறித்த விடயத்தில் குறித்த நேரத்தில் குறித்த அறிவுடன் அதுதான் அவரின் நிலைப்பாடாக இருக்கும். அதில் தவறு இருப்பின் அதைச் சுட்டிக்காட்டி தீர்வுகளை மாற்றங்களைக் காணலாம். இதில் ஆண் பெண் என்ற பாகுபாட்டு ரீதியான மோதல்களைத் தவிர்த்து வளமான கருத்துப் பகிர்வுகளே அவசியம்.

தாயகப்பறவைகள் குறித்த பதிவில்.. தாயகப்பறவைகளை இங்கு விளம்பரப்படுத்துவதில் எமக்கும் உடன்பாடில்லை. நாம் கருத்துக்களை வைத்து கருத்துக்களைப் பிறப்பிக்க இங்கு வந்துள்ளோமே தவிர விளம்பரக் களமாக இதைப் பாவிப்பது தாயகப்பறவைகளுக்கே பலவீனம். எந்த ஒரு தளத்தின் வெற்றியும் அது கொண்டிருக்கும் உள்ளடகத்தில் தான் தங்கி இருக்கிறதே அன்றி விளம்பரத்தில் அல்ல. அந்த வகையில் தாயகப்பறவைகள் மீதான யாழ் களத்தில் வந்த விமர்சனங்களில் தப்பிருப்பதாக நோக்க முடியவில்லை. அவ்விமர்சனங்கள் பெண்களுக்கு எதிரானது என்றுமில்லை. காரணம் தாயகப்பறவைகள் ஆண்களின் ஆக்கங்களையும் அரவணைத்துக் கொண்டு தமிழ் தேசிய தளத்தில் பெண்களின் உணர்வுகளை புகலிடத்தில் இருந்து கொண்டு சமூகத்துக்கு கொண்டு செல்ல முனைகின்றன. பெண்களின் நிர்வாகத் தலைமையில் அதை செய்ய விரும்புகின்றனர் என்பது புலப்படுகிறது.

யாழில் இருக்கும் சோழியான் அண்ணா.. நிதர்சன் போன்றவர்கள் தனித்து தளங்களை நடத்துகின்றனர். அவர்கள் தங்கள் தளங்களின் விளம்பரக் களமாக யாழைப் பாவிப்பதை தவிர்த்துள்ளனர். பரஸ்பர இணைப்புப் பகிர்வுகள் மட்டும் யாழின் முகப்பில் உள்ளது. தமிழமுதமும் வன்னித்தென்றலும் இன்று பலர் பார்வையிடும் அளவுக்கு வளர்ந்துள்ளன. பலர் ஆக்கங்களை இணைத்தும் வருகின்றனர். அந்த நிலையை எட்ட தாயகப்பறவைகள் முயல வேண்டுமே ஒழிய தங்கள் மீதான விமர்சனங்களை பெண்கள் மீதான விமர்சனமாக்கி பரிதாப அனுதாபம் தேட முனையக் கூடாது. அது அவர்களின் தோல்விக்கான அறிகுறியாகவே நோக்கப்படும். அது தாயகப்பறவைகளின் வளர்ச்சிக்கே தடையாகும். தாயகப்பறவைகளின் வளர்ச்சியில் விருப்பமில்லாத சில சக்திகளும் உள்ளனர் என்பதற்கு அங்கு அடாவடித்தனத்தில் ஈடுபடும் சில சக்திகளை காணலாம். அதை வெல்ல வேண்டின்.. தாயகப்பறவைகள் தங்களிடையே ஒத்துழைப்பையும் உழைப்பையும் மேம்படுத்த வேண்டுமே தவிர விமர்சனங்களை தவறான கோணத்தில் கொண்டு சென்று பெண்கள் மீதான பழிப்பாக்கி அனுதாபம் தேட முனையக் கூடாது.

யாழில் பெண்கள் தொடர்பான அவர்கள் செய்யும் சமூகக் குற்றங்களை வெளிக்கொணரும் வகையில் நெடுக்காலபோவன் ஆகிய நாம் பல செய்திகளை தந்துள்ளோம். அது சமூக விழிப்புணர்வு வேண்டியே தவிர பெண்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் அல்ல. அதேபோல் ஆண்கள் தொடர்பான அவர்களின் சமூகக் குற்றங்களை சொல்லவும் பலர் இங்கிருக்கின்றனர். ஆனால் பெண்கள் தொடர்பான பல விடயங்கள் பெண்களால் மறைப்பட்டுவதால் தான் நாம் சமத்துவமான அணுகுமுறைகள் பேணப்படும் வகையில் அவற்றைத் தருகின்றோம். அதை பெண்கள் மீதான இழிவுபடுத்தலாக நோக்கின் அது மிகவும் பிற்போக்கான நிலை என்றே கூறுவோம்.

கருத்துக்களத்தில் பெண்கள்.. ஆண்கள் மதிக்கபடல்ல என்பது தவறு. எல்லோருக்கும் கள விதி ஒன்றுதான். அப்படி இருக்க கள விதிக்கு உட்பட்டு எவரும் கருத்துப் பகர முடியும். இதில் பெண்கள் பயந்து ஒழியனும் என்றில்ல. அதுவும் புனை பெயர்களில் எழுத.

உலகில் பல பெண் எழுத்தாளர்கள் புனை பெயரில் பல புரட்சிகரமான கருத்துக்களை எழுதியுள்ளனர் எழுதியும் வருகின்றனர். அப்படி இருக்க ஏன் யாழ் களத்தில் பெண்கள் எழுத முடியாம ஒதுங்கிறாங்க.

அதற்கு காரணம் உண்டு. அதற்கான காரணம் யாழ் களத்தில் மித மிஞ்சிப் போயுள்ள அண்ணா தம்பி அக்கா தங்கை பாசப்பிணைப்புத்தான். கருத்துக்களுக்கு வெளியில் அந்தப் பாசப்பிணைப்பு இருக்கனும். அவசியம். ஆனால் கருத்தாடல் எனும் போது தனிமனித கருத்துப் பகர்வில் ஈடுபடும் போது அண்ணா கோவிப்பார் அக்கா கோவிப்பா தங்கை மனக்கஸ்டப்படுவா ஏதாச்சும் தவறான நினைப்பினம் என்று பார்த்துக் கருத்துப்பகர முற்பட்டால் கருத்துக்களை கண்டு பயந்து ஓடவும் ஒதுங்கி இருந்து நோக்கவும் மட்டுமே இடமிருக்கும்.

எம்மைப் பொறுத்தவரை சீரியஸான கருத்துப் பகிர்வுக்கான சந்தர்ப்பகளின் போது அப்படியான அக்கா தங்கை அண்ணா தம்பி உறவு நிலைகள் ஏன் என்ற வினா இருக்கிறது. கருத்தைக் கருத்தாக நோக்கி கருத்துப் பகர முடியாத அந்த அண்ணா அக்கா தங்கை தம்பி உறவுகளுக்குள் என்ன புரிந்துணர்வு இருக்கும்..??!

கருத்துக்களை கருத்துக்களாக நோக்க முடியாத அந்த உறவுகள் வெறும் வார்த்தையளவினதே..! அதற்குப் பயப்பிட்டு கருத்தாடல் செய்யும் நிலை யாழில் அதிகம்..! அதற்கு எம் எஸ் என் தொடர்புகளும் காரணம்.

இப்படிப் பல பின்னணிகள் பொருந்திய இந்த விடயத்தில்.. பெண்கள் ஒதுக்கப்படுகின்றனர்.. வெறுக்கப்படுகின்றனர்.. விரட்டப்படுகின்றனர் என்ற கருத்துக்களும் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்பதுவும் பெண்களுக்காக சில சலுகைகளை பெற்றிட நடக்கும் முயற்சியே அன்றி பெண்கள் தங்கள் துணிவை வளர்க்க என்றில்லை. பெண்கள் எல்லாப் பிரச்சனைகளையும் ஆண்கள் போல சந்திக்கவும் வெல்லவும் முயற்சிக்கனும். சலுகைகள் மேலதிக கள விதிகள் மூலம் தங்களை நிலை நிறுத்த முனைவது தவறான சிந்தனையின் வெளிப்பாடு.

கருத்தாளர்களிடம் பெண்கள் கருத்துப் புரிந்துணர்வுக்காக இந்தத் தலைப்பை முன்வைக்க முனைந்திருப்பின்.. அது தவறல்ல. ஆனால் அவர்கள் தமது நிலை பரிதாபம் என்று சொல்லி அனுதாபம் தேடவும் அதற்காக பெண்களுக்கு ஆதரவுக் கருத்து சொல்ல என்று ஏங்கும் ஆண்கள் கூட்டத்தை பெருக்கவும் நினைப்பது தவறானது. தவறான அணுகுமுறை.. பெண்கள் காலம் காலமாக இந்தத் தவறை தங்கள் துணிச்சல் இன்மை என்ற ஆளுமைத் திறமை இன்மை இன்றி செய்ய முற்படுகின்றனர்..! இது தவறு..! சமூகச் சமுத்துவம் கோரும் பெண்கள் தங்கள் தலைவிதியை தாங்களே தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர ஆண்களின் துணை சலுகை சட்டம் விதி வரும் என்று அனுதாபம் தேடிக் காத்திருக்க முனையக் கூடாது..!

உங்களை தனிப்பட தாக்கினால் திருப்பித் தாக்குங்கள். மரியாதை தர மறுப்பவருக்கு அதையே பதிலாக அளியுங்கள். உங்களை விரட்ட நினைப்பவர்களுக்கு அது தவறென்று அவர்கள் வழியில் சென்றே பாடம் புகட்டுங்கள்..! அது அவர்களை திருந்தச் செய்யும். இங்கு கூட சில பெண்கள் அடாவடித்தனம் செய்தனராம். இன்று அவர்கள் களத்தில் இல்லாது போயினர் என்பதற்காக வருத்தப்படுவதிலும்.. அவர்கள் திருந்த களம் பயன்பட்டிருக்கும் என்று எண்ணுவதே சரி.

களத்தை விட்டு யாரையும் யாரும் விரட்ட முடியாது. கருத்துக்களை துணிவாக நியாயத்தோட எதிர்கொள்பவர்கள் ஓடமாட்டார்கள்..! ஓட வேண்டிய அவசியமும் இல்ல. இதில் ஆண் பெண் என்ற வேறுபாட்டுக்கும் இடமில்லை..!

நெடுக்காலபோவன் பெண்களுக்கு எதிரானவர் என்ற இமேஜ் இங்கு வளர்க்கப்பட்டுள்ளதால்.... இந்தத் தலைப்பு எம்மையும் ஏதோ ஒரு வகையில் சாட முனையலாம். அந்த வகையில் எமது நிலைப்பாட்டை விளக்க வேண்டியது எமது கடமை. அதையே இங்கு தந்துள்ளோம். இதில் பலருக்கு பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நியாமான கருத்து வேறுபாடுகள் வெளி வந்தால் ஏற்றுக்கொள்ளவும் நியாயமற்றவற்றை தூக்கி வீசவும் நாம் தயார்..!

நன்றியுடன் நெடுக்ஸ் தாத்தா. :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பெண்கள் என்று சொல்லப்படுகின்ற கருத்தாளர்களது கருத்து என்னை பொறுத்தவரை ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை எண்ட கதையா இருக்கு.

தாயக்கப்பறவை களம் பற்றி இங்கே விமர்சனம் செய்தவன் என்ற படியினால் அதையே கிங்க் மேக்கரா எடுத்து புலம்பிக்கொண்டு இருக்கும் சிலருக்கு ஒன்றை கூற ஆசைப்படுகிறேன்.

தாயக்கப்பறவைகள் களத்தைப்பற்றிய ஆக்கம் யாழில் பிரசுரமாகி இருந்த படியால்த்தான் அதனைப்பற்றிய விமர்சனம் என்னால் முன்வைக்கப்பட்டது, நிதர்சன்ம்.கொம் பற்றிய செய்திகள் இங்கே பிரசுரிக்கப்பட்ட பொழுது அதற்கு எதிராக எத்தனை பேர் விமர்சனம் செய்தார்கள்? அதற்கு நிர்வாகம் என்ன செய்தது? அதற்க்கு ஒரு நீதி இதற்கு ஒரு நீதியா? நானும் கருத்தாளன் எண்ட வகையில், யாழில் பதியப்பட்ட ஒரு கருத்துக்கு எனது விமர்சனத்தை முன்வைத்தேன், அவ் விமர்சனம் எனது பார்வைக்கு அப்படி தெரிந்தது. அதனால் அதனை முன்வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அதைவிட, தாயகப்பறவைகள் பற்றி இங்கே விமர்சனம் செய்யப்பட்டது எப்பொழுது? ஒரு 2,3 கிழமை இருக்குமா? யாழில் பல மூத்த பெண்குடிகள் எப்பொழுது வெளியேறினார்கள்? அவர்கள் கடைசி கருத்தை எப்பொழுது முன்வைத்தார்கள்? இங்கே முன் வைப்பவர்களீன் கருத்தை பார்த்தால் (பெண்களீன்), தாயகப்பறவைகள் தான் அவர்களை ரொம்ப நோகடிச்சுட்டுது எண்ட மாதிரி இருக்கு.

அன்று நான் முன்வைத்த அந்த கருத்துக்கு எதிர்கருத்து முன்வைக்காமல் பதுங்கியவர்கள், இப்பொழுது எதற்காக தூக்கி பிடிக்கிறார்கள் என்று புரியவில்லை, கருத்தை கருத்தாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள், தாயகப்பறவைகள் ஒரு பொதுக்களம், அதனை பற்றி எங்கும் விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமையுண்டு, அதைப்பற்றி தப்பாக விமர்சனம் செய்ய வேண்டாம் என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை, முடிந்தால் அந்த கருத்துப்பக்கத்தில் முடிந்ததை செய்யுங்கள், (உங்களின் + கருத்தை முன் வையுங்கள், அந்த இணையத்துக்கு செல்பவர்களுக்கு புரியும் உண்மை எது பொய் எதெண்டு)

அதைவிட்டுவிட்டு தாயகப்பறவையை கொண்டுபோட்டார், சூப் வைச்சு குடிச்சுட்டார், எண்டு நொண்டி சாக்கு சொல்லி அனுதாபம் தேட முயற்சி செய்யாதீர்கள். :angry: :angry:

தாயக்கபறவை மாத சஞ்சிகை பற்றிய பகுதிக்குள் நிகழ்ந்த கருத்தாடல்கள் எனக்கு தெரியாதுங்கோ. நான் பொதுவாக சொல்லுறீங்க என்றுதான் இத்தலைப்பின் கீழ் வந்தேன். ஆனால் முந்தி நாரதர் சும்மா பெண்களை சீண்டியவர் தான். அதுவும் ஒரு டீஜே கவிதையைக் கொண்டு வந்து போட்டு. அதில் நானும் பாதிக்கப்பட்டவள் தான். ஏன் சமீபத்தில் தூயா தொடக்கிய தலைப்பான யாழழ குழப்பாதீங்க என்ற பகுதிக்குள்ளும் நியாயத்ததக் கததக்க போய் கோபக்காரி என்ற பட்டம் வாங்கியவளும் நான் தான். ஆனால் தற்போது சாதாரணமாக யாரும் யாரையும் அதாவது பெண்களை கீழ்த்தரமாக நடத்தவில்லை. அப்படி நடத்துகின்றனர் எனில் அதை சுட்டிக்காட்டுங்க. சுட்டிக்காட்டினால் கீழ்த்தரமாக நடத்தியவர்கள் திருந்த இடமுண்டு.

யாழில் ஆண்கள் பெண்கள் தத்தம் கருத்துக்களால் மோதுங்கள் வாதாடுங்கள். இதில் யாருக்கு சம உரிமை கொடுக்கணும். யார் கொடுக்கிறார்கள்? எங்கை கொடுக்கிறார்கள்? எல்லோரும் உங்க உங்க கணணியில் இருந்து தானே எழுதுறீங்க? எல்லோருக்கும் உரிமை இருக்குது தானே யாழில் எழுதுங்கோ. யார் எழுத வேணாம் என்று சொன்னார்கள்.? உங்கள் உங்கள் உரிமையை யாருக்கும் விட்டுக்கொடுக்காதீங்க.

நெடுக் சொன்னது போல கருத்து என வந்தால் உறவுகள் தேவையில்லை, உங்களுக்கேற்ற வகையில் அது பார்வையாளர்களை எவ்வகையில் சென்றடையும் என சிந்தித்து எழுதுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் அழுத்தங்களுக்கு உற்படுகின்றது என்பது உண்மை தான். அதனால் தான்மீண்டும் சொல்கின்றேன். இப்படியான தலைப்புக்களைத் தொடர்ந்து அதிகரிப்பது என்பது தொடர்ந்து பிரச்சனைகளை அதிகரிக்கத் தான் வகை செய்யும்.

ஒரே குடும்பத்திற்குள் இத்தனை பிரச்சனைகள் தொடரத் தேவையில்லை. பேசாமல் தலைப்பைத் தூக்கி விடுங்கள்.

தலைப்புப் போடுகின்றவர்கள் குறைந்தபட்சம் புத்திசாலித்தனத்தோடு, தேவையில்லாத பிரச்சனைகளை அதிகரிக்குமா என்று ஊகித்துப் போடுவதே சரி. சும்மா எடுத்தோம், கவிழ்த்தோம் என சிறிய பிரச்சனையை ஆண் பெண் வாதமாக்கி அதனால் பல மனஸ்தாபங்களைத் தூண்டப் பேரிக்றது.

நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள்.

கொஞ்சநாளைக்கு உறவோசையில் திறக்கப்படும் தலைப்பையும் மட்டறுத்தல் செய்து போடுங்கள். பிரச்சனை கிளப்புவர்களால் நிறையப் பிரச்சனைகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.