Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியிலும் சிவாஜி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்து மனோகரா திரையரங்கில் அரங்கு நிறைந்த காட்சிகளாக தினமும் 3 காட்சிகள் ஓடுகிறது. இதை படித்து விட்டு அரசின் சதி திட்டமிட்ட செயல் எனவெல்லாம் கருத்தெழுதுவீர்கள்.

ஆனால் உறுதிப்படுத்தப் பட்ட செய்திகளின் படி வன்னியின் மினி சினிமா கொட்டகைகளிலும் சிவாஜி சனத் திரளுடன் ஓடுகிறது. வன்னியில் திரைப்படங்களுக்குத் தடை கிடையாதென்பதும் தணிக்கை செய்யப்பட்ட பின்னர் வெளியிடப் படுகின்றன என்பதும் நீங்ககள் அறிந்ததே..

வன்னியில் ஓடும் சினிமாக்களால் பெருமளவு பொருளாதாரம் தமிழக சினிமாவிற்கு கிடைக்காது. எனினும் கொள்கை ரீதியாக புறக்கணித்தல் என்பது இங்கே அடிபட்டுப் போகிறதே..

எனக்கென்னமோ அவர்கள் தெளிவாக இருப்பது போலத் தெரிகிறது..

அரோகரா சிவாஜியை புறக்கணிப்போமா இன்னும்.கடவுள் அருள் கொடுத்தாலும் பூஸாரி கொடுக்கமாட்டான் என சொல்லுவது இதைத்தானா:P

புறக்கணியுங்கள் என்பது நாமாக எழுப்பிய கோசம்தான். இதற்கும் அவர்களிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. பிறகு எதற்கு கவலை அங்கு ஓடுகின்றது இங்கு ஓடுகின்றது. அவர்கள் அறிக்கை விட்டார்களா ? புறக்கணியுங்கள் என்று...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புறக்கணியுங்கள் என்பது நாமாக எழுப்பிய கோசம்தான். இதற்கும் அவர்களிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. பிறகு எதற்கு கவலை அங்கு ஓடுகின்றது இங்கு ஓடுகின்றது. அவர்கள் அறிக்கை விட்டார்களா ? புறக்கணியுங்கள் என்று...........

அதுவும் சரிதான்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடி!! மேலிடத்தின் தெளிவும் உறுதியும் நமக்கெல்லோருக்கும் இருந்திருந்தால். !

எப்பவோ விடிஞ்சிருக்குமே <_<

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் எண்டால் ஈ.பி.டி.பி. போட்டிருப்பாங்கள்.

வன்னியில் ?????

டி.வி.டி.யில் பாத்திருப்பாங்களோ

அப்ப எனி புறகணித்தா ஆட்கள் எல்லாம் வாபஸ் வாங்க போறீங்களா............வசம்பண்ணா இந்த பக்கத்துக்கு இன்னும் வரவில்லை.............எல்லாம் அவன் செயல்.................

:P

வன்னியில் சிறிலங்காப் பொருட்களை மக்கள் வாங்குகிறார்கள். ஆகவே நாங்களும் அவைகளை புறக்கணிக்கத் தேவை இல்லை. :angry:

வன்னியில் சிறிலங்காப் பொருட்களை மக்கள் வாங்குகிறார்கள். ஆகவே நாங்களும் அவைகளை புறக்கணிக்கத் தேவை இல்லை. :angry:

சபேசன் அண்னா அது சிறிலங்கா பொருட்கள் சிவாஜி இந்திய தயாரிப்பு........ :P

வன்னியில் சிவாஜி ஓடியதையும், இங்கு புறக்கணிக்குமாறு கூறியதையும் ஒரே கோணத்தில் பார்ப்பது சரியாகத் தெரியவில்லை.

அங்கே சிவாஜியை புறக்கணிக்க வேண்டிய தேவை இல்லாதிருக்கலாம். இங்கே சிவாஜியை புறக்கணிக்க வேண்டிய தேவை இருந்திருக்கலாம்.

புலத்தில் போராட்டங்களை முன்னெடுப்பது தமிழ் மக்கள் தமது சுய உணர்வுகளால் உந்தப்பட்டே! இதையேன் மேலிடம், கீழிடம் என்று போட்டு குழப்புகின்றீர்கள்?

கலைஞன் அவர்களே,

நான் சொல்ல வந்தது நம்மிடம் உணர்ச்சி வசப்படும் தீவிரம் இருக்கின்றதே தவிர, தெளிவு இல்லை!. என்பதைத்தான்.! புறக்கணித்தோம் என்ற பட்டியலில் ஒரு 1% வருமா?! !

வன்னியில் சிவாஜி படத்திற்கான புறக்கணிப்பு என்று ஒன்று உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்குமேயாய

புறக்கணித்தோம் என்ற பட்டியலில் ஒரு 1% வருமா?! !

எல்லோரும் புறக்கணிக்க மாட்டார்கள் என்பதால் நான் புறக்கணிக்கப் போவதில்லை என பலர் வாதிட்டனர். 1% புறக்கணிக்கப்பட்டிருந்தாலு

உண்மைதான், சிலவேளைகளில் இந்த புறக்கணிப்பு சுமார் 80, 90% வெற்றி பெற்றிருந்தால் புறக்கணிக்குமாறு கூறியவர்கள் பாராட்டப்பட்டிருப்பார்களா?

புறக்கணிப்பு சரியா அல்லது பிழையா என்பது அடுத்த விடயம், ஆனால், தாயக உணர்வுகளால் உந்தப்பட்டு, தாயக நினைவுகளில் வாழ்ந்துகொண்டு தமது சிறு சுகங்களை விட்டுக்கொடுத்த மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் சிவாஜி ஓடியதையும், இங்கு புறக்கணிக்குமாறு கூறியதையும் ஒரே கோணத்தில் பார்ப்பது சரியாகத் தெரியவில்லை.

அங்கே சிவாஜியை புறக்கணிக்க வேண்டிய தேவை இல்லாதிருக்கலாம். இங்கே சிவாஜியை புறக்கணிக்க வேண்டிய தேவை இருந்திருக்கலாம்.

புலத்தில் போராட்டங்களை முன்னெடுப்பது தமிழ் மக்கள் தமது சுய உணர்வுகளால் உந்தப்பட்டே! இதையேன் மேலிடம், கீழிடம் என்று போட்டு குழப்புகின்றீர்கள்?

புகலிடத்தில் உள்ள தமிழர்கள் இப்படத்தை புறக்கணிக்கனும் என்று அறிக்கை விட்ட புகலிட தனி நபர்கள் எந்த நோக்கோட பரப்புரை செய்தவை..??!

தமிழ் தேசியம்.. விடுதலைப் போராட்டம்.. கன்னடன்.. சிவாஜி.. தமிழினத் துரோகி.. இப்படி எல்லாம்.. செய்யச் சொல்லி தமிழீழ உணர்வு சொன்னதா..??! அதனால் தமிழீழத்துக்குப் பயன் என்ன..??!

ஆளாளுக்கு கேட்க யாருமில்லை என்ற உடன புறக்கணி என்பினம்.. பிறகு அமைதியாகிடுவினம்.. இடைல தமிழ் தேசியத்தை.. விடுதலைப் போராட்டத்தை இழுத்திடுவினம்... அப்படி இழுந்திட்டா அதுக்கு புலிகள் ஆதரவு என்ற நிலையை மக்களுக்கு போலியா காட்டிடலாம் என்ற நினைப்பு..???!

சிவாஜியை புறக்கணிக்கச் சொன்னது உணர்வுத் தூண்டலோ என்னவோ.. ஆனால் அதற்குள் செருக்கப்பட்ட காரணங்களுக்கும்.. வன்னிக்கும் எந்தத் தொடர்புமில்ல...! தற்போதைய நிலையில் சினிமா என்பதன் தாக்கம் விடுதலைப் போராட்டத்துக்க.. செய்யக் கூடிய செல்வாக்கு என்பது.. அத்துணை முக்கியமா இப்ப நோக்கப்படல்ல என்பதும் வெளிச்சமாகியுள்ளது.

புகலிடத்தில் தனிப்பட்ட சிலர் எடுக்கும்.. விளம்பர நோக்கிலான.. அல்லது போட்டி அடிப்படையிலான அறை கூவல்களுக்கும்.. வன்னி மண் எதிர்பார்க்கும்.. உணர்வு பூர்வமான பங்களிப்புகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை இனங்காண மக்கள் தயாராகனும்.. விழிப்புணர்பு படனும்..!

புகலிடத்தில் போராட்டத்தின் தற்போதைய தன்மை அறியாத பல தமிழர்கள் பழைய காலக் கனவுகளோடு வாழ்த்து கொண்டிருக்கின்றனர்.

எதிர்வரும் காலத்தில் புறக்கணிப்புக் கோசங்களுக்குப் பின்னால் மக்களின் ஒத்துழைப்பு மேலும் பலவீனப்படும் நிலையையே தனிநபர்கள் சிலர் ஓசிப் பேப்பர்கள் வழியும் இணைய வழியும் தாந்தோன்றித்தனமாகச் செய்யும் பிரச்சாரங்கள் உருவாக்கியுள்ளன..! யாழ் களமும்.. இவை குறித்து சிந்தக்கனும்..! :(

Edited by nedukkalapoovan

வன்னியில் "சிவாஜி" எந்தத் திரையரங்கில் ஓடியது?

அகன்ற திரையா அல்லது மினிசினிமாவா?

மினி சினிமா என்றால் இணையத்தில் தற்பொழுது இருக்கின்ற அந்த மங்கலான "சிவாஜி" படத்தையா பார்த்தார்கள்?

தகவலை தந்த காவடி இது குறித்து மேலதி விபரத்தை தயவு செய்து தரவேண்டும்!

சிவாஜி (அட யாழ்ப்பாணத்திலயும்..)

கனகாலத்துக்கு பிறகு நண்பர்கள் எல்லாரும் வரச்சொல்லுறாங்களே எண்டு சிவாஜி பாக்கப்போனன். இதில முக்கியமான விசயம் என்னெண்டா இந்தியாவில சிவாஜி திரையிட்ட அண்டே இங்க யாழ்ப்பாணத்திலயும் மனோகரா தியேட்டரில ஹவுஸ் வுல். நான் பாக்கப்போனது ஒரு கிழமை கழிச்சு 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (அப்பத்தானே நேரம் கிடைக்குது) கடைசி காட்சி பாக்க நானும் நண்பனுமா போனம். கடைசிக்காட்சியெண்டா 2.30 மணிக்கு, ஊரடங்கு காட்டின விளையாட்டு. முதற்காட்சி விடியக்காலம 7 மணிக்கு பிறகு 10.30க்காக்கும் கடைசி மத்தியான நேரம்.

முந்தி படத்துக்கு போறெண்டா (நான் அதிகமா படம் பாக்கிறதில்லை) ஒரு முப்பது பேர் மட்டில போவம் அண்டைக்கு ரெண்டு பேர்தான். எங்க ஒருத்தரும் யாழ்ப்பாணத்தில இல்லையே என்ன செய்யிறது. இன்னும் கொஞ்ச நாளில என்னோட படிச்ச ஆக்களில ஒருத்தரை யாழப்பாணத்தில தேடிக்கண்டுபிடிக்கிறெண்டா குதிரைக்கொம்பாத்தான் இருக்கும். இப்பயே ஒரு நாலு ஐஞ்சு பேர்தான் இருக்கினம். மிச்செல்லாரும் ஒண்டு கொழும்பில அல்லது வெளிநாட்டில.

போன அண்டு கூட்டத்துக்கு குறைவில்லை. சங்கக்கடையில மாவுக்கும் அரிசிக்கும் நிக்கிற கியூவ விடவும் பெற்றோல் எடுக்கிறதுக்கு பெற்றோல் ஸ்ரேசனில நிக்கிற கியூவை விடவும் பெரிய கியூ. ஒரு அறுநூறு எழுநூறு பேர் நிண்டமாதிரித்தான் இருக்கு. என்ர நண்பர் காலமயே ரிக்கற்றுக்கு சொல்லி எடுத்து வச்சிருந்தார். அதில ரிக்கற் எடுக்கிற பிரச்சனை இருக்கேல்ல. வழமையா நூறு ரூபா விக்கிற பல்கணி ரிக்கற் அண்டைக்கு நூற்றி அறுபது ரூபா. உள்ள போனா சனமெண்டா அப்படி ஒரு சனம். வழமையா நான் யாழ்ப்பாண தியேட்டர்களில பொம்பிளப்பிள்ளைகளை காணுறது குறைவு. சிவாஜி படத்துக்கு அரைவாசி பொம்பிளைகள் தான்.

படம் ஒண்டுமே விளங்கேல்ல. அவ்வளவு விசிலடியும் சத்தமும். கனகாலத்துக்கு பிறகு (ஏறத்தாள ஒரு வருடம்) ஒரு படம் எண்டா இப்பிடி தானே இருக்கும். பின்னுக்கு மொட்டை சிவாஜி வந்தாப்பிறகு படம் நல்லாயிருந்த மாதிரியிருந்துது. (எனக்கு படத்துக்கு விமர்சனம் சொல்லுற அளவுக்கு ஒண்டும் தெரியாது)

http://oorodi.blogspot.com/2007/06/blog-post_27.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் உறுதிப்படுத்தப் பட்ட செய்திகளின் படி வன்னியின் மினி சினிமா கொட்டகைகளிலும் சிவாஜி சனத் திரளுடன் ஓடுகிறது.

சிவாஜியை புறக்கணிக்கச் சொன்னது உணர்வுத் தூண்டலோ என்னவோ.. ஆனால் அதற்குள் செருக்கப்பட்ட காரணங்களுக்கும்.. வன்னிக்கும் எந்தத் தொடர்புமில்ல...! தற்போதைய நிலையில் சினிமா என்பதன் தாக்கம் விடுதலைப் போராட்டத்துக்க.. செய்யக் கூடிய செல்வாக்கு என்பது.. அத்துணை முக்கியமா இப்ப நோக்கப்படல்ல என்பதும் வெளிச்சமாகியுள்ளது.

சினிமா படம் போட்டு படை திரட்டலாம் என்று யாரும் இங்கு கூறவில்லை! சினிமாவிலாவது எங்கள் செய்திகளை சொல்லி தமிழகத்தில் அல்லது இந்திய அரசியல் ரீதியில் மாற்றத்தை எதிர்பார்த்தோம் அது தப்பா? (அங்கே அரசியலும் சினிமாவும் பின்னிப் பிணைந்தவை என்பது நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை)

புகலிடத்தில் தனிப்பட்ட சிலர் எடுக்கும்.. விளம்பர நோக்கிலான.. அல்லது போட்டி அடிப்படையிலான அறை கூவல்களுக்கும்.. வன்னி மண் எதிர்பார்க்கும்.. உணர்வு பூர்வமான பங்களிப்புகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை இனங்காண மக்கள் தயாராகனும்.. விழிப்புணர்பு படனும்..!

சினிமா எங்கள் இரத்தத்தில் இரண்டாக கலந்துள்ளது அதை மறுக்கவில்லை? ஆனா அது அப்படியேதான் இருக்க வேண்டுமா? உணர்வில் பாதி சினிமா என்றிருப்பதால் தானே தமிழுணர்சி மரத்துப்போய் போராட்டத்தில் இந்த நீட்சி! காவலரணுக்கு அருகில் உள்ள வீட்டில் இருக்கும் பெண்கள் ஒவ்வோரு ராத்திரியையும் பயராத்திரியாய் கழிக்கும் யாழ்ப்பாணத்தில் அரங்கு நிறைந்த சிவாஜி காட்சி எங்வகை விழிப்புணர்ச்சி?

(வன்னித் திரையரங்குகளில் சேகரிக்கப்படும் பணத்தில் ஒரு சதமும் தயாரிப்பாளருக்கு போவதில்லை என்பது ஊரறிந்த ரகசியம். போராட்டத்தில் அரணக நிற்கும் மக்கள் பல்வேறு மன அழுத்தங்களில் இருந்தும் விடுபட ஒரு 3 மணி நேர அவகாசம். அவ்வளவே!)

புலத்தில் சுய உணர்வு என்பது போட்டி அடிப்படையில்தான் இருக்கின்றுது. யார் கோபப்ட்டாலும் பரவாயில்லை. சில விடயங்களில் நாம் புரிநதுகொள்ளவேண்டும். மற்றவன் செய்கின்றான் என்று போட்டிக்கு செய்தல் அன்றி வேறு ஓன்றும் இல்லை

புலத்தில் சிவாஜி படத்துக்கான புரக்கணிப்பு அழைப்பு வெறும் பொழுது போக்கை இல்லாது செய்வதுக்காக கேட்க்க பட்டது அல்ல...! புலம்பெயர் தமிழர் கொள்கை ரீதியில் இந்திய சினிமாத்துறைக்குள் செல்வாக்கு செலுத்த வேண்டி கேட்க்கப்பட்டது....! இந்திய தமிழ் சினிமாக்கள் எல்லாவற்றையும் புறக்கணிக்க வேண்டும் என்பதுக்கும், சிவாஜி படம் ஒண்றை புறக்கணியுங்கள் , என்பதுக்கு நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன...!

சாதரணமாக புலம்பெயர் தமிழர்கள் ஆதரவில் நல்ல வருமானத்தை தரும் தமிழ் திரைப்படங்கள் எனும் பெயர் பெற்று இருக்கும் வேளையில், சிவாஜி திரைப்படத்துக்கான புறக்கணிப்பு என்பது புலம்பெயர் தமிழர் தமிழக சினிமா துறைக்கு சொன்ன செய்தியாக எடுத்து கொள்ளப்பட்ட சாத்தியம் இங்கு நிலைகுலைக்க பட்டு இருக்கிறது....!

தென்னிந்திய இளைஞர்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்பதுக்காக, நடிகைகளை துயில் உரியும் சினிமா உலகு, புலம்பெயர் தமிழர்களின் விருப்பையும் வருமானத்துக்காக நோக்க கூடிய சாத்தியம் இல்லாது ஒளிக்கப்பட்டு உள்ளது...!

ஈழத்தமிழர்களுக்காக உரிமையோடு பல மொழிக்காறர்களாலும் இயக்கப்படும் சினிமா உலக்கு கவலை கொள்ளாது... அப்படி கவலை கொள்ள வைக்க்க முடியும் என்பதில் நம்பிக்கை வைப்பதும் வீண் நேரவிரையம்... ஆனால் ஈழத்தமிழர் சம்பந்தமான காட்சிகளை புகுத்தி தமிழக உறவுகளுக்கு தெரிய வைக்கவும், முடிந்தவரையான உண்மையை வெளியே கொண்டு வர செய்திருக்க முடியும்....! ஆனால் இன்னும் ஒரு சந்தர்பத்துக்காக காத்திருக்க வேண்டும்.....!!

இங்கை இருக்கிற சிலரின் கொள்கை விளக்கங்கள் அப்பிடியே உடம்பை சிலிர்க்க வைக்குது.... :(:rolleyes::rolleyes:

Edited by தயா

தயவு செய்து ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!

தாயகத்தில் இருக்கின்ற காரணங்களும் தேவைகளையும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள காரணங்களோடும் தேவைகளோடும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

யாழ்பாணத்திற்கு கொழும்பில் இருந்து பொருட்களை அனுப்புங்கள் என்று கேட்கிறோம்.

கொழும்பில் இருந்து வருகின்ற பொருட்களை புலம்பெயர்ந்த நாடுகளில் புறக்கணியுங்கள் என்று சொல்கிறோம்.

வெறுமனே நோக்குகின்ற போது இதுவும் முரண்பாடாகத்தான் தெரியும்.

ஆனால் இதற்கு காரணங்களும் தேவைகளும் உண்டு.

அதே போன்று புலம்பெயர்ந்த நாடுகளில் சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள் என்று சொல்வதற்கு காரணங்கள் உண்டு.

புலம்பெயர் மக்களின் நலன் சார்ந்து புறக்கணிப்பிற்கான காரணம் சொல்லப்படவில்லை என்ற வாதம் சில வேளை சரியாகவும் இருக்கலாம்.

அதற்காக புறக்கணிப்பதற்கான தேவை இல்லை என்று ஆகிவிடாது.

இங்கு சிவாஜி படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்ப்பதைத்தான் தவிர்க்குமாறு அல்லது புறக்கணிக்குமாறு கூறப்பட்டது. திரையரங்குகளில் சேரும் பணத்தின் பெரும்பகுதி படத்தை தயாரித்தவர்களுக்கு செல்வதை தவிர்ப்பதன் மூலம் எமது உணர்வுகளை அவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காகதான் படத்தை புறக்கனிக்குமாறு கூறப்பட்டது.

ஆனால் படத்தை சீடிகளிலோ அல்லது இணையத்தளங்களிலோ அல்லது மினிசினிமாக்களிலோ பார்ப்பதை தவிர்க்குமாறு ஒருவரும் சொல்லவில்லை. இவற்றினால் எதுவித பணமும் தயாரித்தவர்களை சென்றடையவாய்ப்பில்லை.

ஆகவே தாயகத்தில் மினிசினிமாக்களில் பார்ப்பதையோ அல்லது இங்கு தொலைக்காட்சியில் பார்ப்பதையோ யாரும் புறக்கனிக்குமாறு கூறவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான் காரணமெனின் படத்தைத் தயாரித்தவர்களுக்கும் நடித்தவர்களுக்கும் பணம் போய்ச் சேர்ந்து விட்டதே.. வெளிநாடுகளில் வாங்கியோருக்கு நட்டத்தை ஏற்படுத்தலாம்

குறுக்கால போவான் ஒரு கேள்வி பதில் எழுதியிருந்தார். அதாவது முழுவதுமாக மொத்த தமிழ் சினிமாவையும் புறக்கணிப்பது குறித்து. சிடியில் பார்த்தல் மினியில் பார்த்தல் என்ற கதையளை விட்டு போட்டு உணர்வு ரீதியாக பார்க்காது இருத்தல்.

ஆனால் இணையத்தில மங்கல் படம் என்று தெரியுமளவிற்கு ஆர்வக் கோளாறில் உள்ள எமக்கு அது சரிவருமா எனத் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா படம் போட்டு படை திரட்டலாம் என்று யாரும் இங்கு கூறவில்லை! சினிமாவிலாவது எங்கள் செய்திகளை சொல்லி தமிழகத்தில் அல்லது இந்திய அரசியல் ரீதியில் மாற்றத்தை எதிர்பார்த்தோம் அது தப்பா? (அங்கே அரசியலும் சினிமாவும் பின்னிப் பிணைந்தவை என்பது நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை)

தமிழகத்தில் உள்ளது போல.. சினிமா எங்களின் விடுதலைப் போராட்டத்தில் செல்வாக்குச் செய்யும் நிலை இல்லை. அந்த நிலை கடந்து போயாயிற்று. மக்கள் சினிமாவுக்கு போராட்டத்துக்கும் இடையில் வேறுபாட்டை தெளிவாக உணர்கிறார்கள். தமிழகத்தில் கூட சினிமா முற்று முழுதாக எமது போராட்ட உண்மைகளை அரசியல்வாதிகளோடு சேர்ந்து மறைத்த போதும் தமிழகத்திற்கு உண்மைகளைக் கொண்டு சென்றனர். இந்தியச் சினிமா இன்று வரை இந்தியப்படைகள் ஈழத்தில் செய்த அட்டூழியங்கள் பற்றி மறந்தும் ஒரு படத்தை வெளியிட்டதில்லை..! ஆனால் தமிழகத்தில் இந்தியப்படைகள் செய்த அட்டூழியம் வெளிக்கொணரப்பட்டதுதான்..!

புலிகள் சினிமாவை தடை செய்தும் மக்கள் அதன் ஆர்வத்தில் விலகாத காரணத்தால் தான் மறு தணிக்கைகளுடன் சினிமா அனுமதிக்கப்பட்டது. புறக்கணி சினிமா என்று புலிகள் என்றும் சொன்னதில்லை..!

ஆனால் நிச்சயமாக சினிமாத் துறையுடனான சிநேகித பூர்வ உறவுகள் எமது போராட்டம் பற்றிய உண்மைகளை காவிச் செல்ல சினிமாவையும் ஒரு ஊடகமாக (மேலதிகமாக) பாவிக்க முடியுமே அன்றி.. சினிமாவை நம்பி எமது போராட்டம் இல்லை.. அதை முதலில் புகலிடத்தில் உள்ள தமிழர்கள் புரிஞ்சுக்கனும்..!

சினிமா எங்கள் இரத்தத்தில் இரண்டாக கலந்துள்ளது அதை மறுக்கவில்லை? ஆனா அது அப்படியேதான் இருக்க வேண்டுமா? உணர்வில் பாதி சினிமா என்றிருப்பதால் தானே தமிழுணர்சி மரத்துப்போய் போராட்டத்தில் இந்த நீட்சி! காவலரணுக்கு அருகில் உள்ள வீட்டில் இருக்கும் பெண்கள் ஒவ்வோரு ராத்திரியையும் பயராத்திரியாய் கழிக்கும் யாழ்ப்பாணத்தில் அரங்கு நிறைந்த சிவாஜி காட்சி எங்வகை விழிப்புணர்ச்சி?

(வன்னித் திரையரங்குகளில் சேகரிக்கப்படும் பணத்தில் ஒரு சதமும் தயாரிப்பாளருக்கு போவதில்லை என்பது ஊரறிந்த ரகசியம். போராட்டத்தில் அரணக நிற்கும் மக்கள் பல்வேறு மன அழுத்தங்களில் இருந்தும் விடுபட ஒரு 3 மணி நேர அவகாசம். அவ்வளவே!)

வன்னிக்குள் வந்த பிரதிகளின் மூலம்.. எங்கிருந்து வந்தது. அது காசு கொடுத்து வாங்காமல் கள்ளக்கடத்தலால் வந்ததா..??! மூலப்பிரதியையும் கொழுப்பில் உள்ள வர்த்தகர்கள் தான் பெருந்தொகை கொடுத்து வாங்கி பிரதிகளை பணத்துக்கு விற்றிருப்பர். அதன் மூலம் சினிமாத்துறைக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே இருக்கும்.!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.