Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுவர் விடுதலை: `உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும்!'- ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் !

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தமிழ் சிறி said:

சோனியா காந்தி... எழுவரை விட சம்மதித்தாலும், தமிழக காங்கிரஸ்காரர் எதிர்ப்பார்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே மத்திய அரசின் கைகளில் தான் தங்கியுள்ளது. மக்களின் நலன்களுக்காக பாடுபடும் அரசுகளிடம் எதையும் எதிர்பார்க்கலாம்
கட்சிகளின் நலன்களுக்காக மக்களை பாவிக்கும் அரசியல்வாதிகளிடமிருந்து
எதையும் எதிர்பார்க்க முடியாது
   
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, வாத்தியார் said:

எல்லாமே மத்திய அரசின் கைகளில் தான் தங்கியுள்ளது. மக்களின் நலன்களுக்காக பாடுபடும் அரசுகளிடம் எதையும் எதிர்பார்க்கலாம்
கட்சிகளின் நலன்களுக்காக மக்களை பாவிக்கும் அரசியல்வாதிகளிடமிருந்து
எதையும் எதிர்பார்க்க முடியாது
   
என்னை உறுப்பினர்களை முட்டாள் ஆக்க எத்தனிப்பதாக நீங்கள் அபாண்டம் கூறியதன் பின் உங்களிடம் உரையாடுவதை தவிர்கவே விரும்பினேன்.

ஆனால் இவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு, கையில் நெய் இருக்க வெண்ணைக்கு அலைவனேன் என எதிர்கட்சியில் இருக்கும் போது கருணாநிதியே கேட்டுள்ளார்.

ஆக விடுவிக்கும் அதிகாரம் இருந்தும் சுடாலின் நாடகம் ஆடுவதே உண்மை.

தீரா விட அனுதாபிகளும் எல்லாம் மத்திய அரசு கையில் என்று சால்ஜாப்பு சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

சோனியா காந்தி... எழுவரை விட சம்மதித்தாலும், தமிழக காங்கிரஸ்காரர் எதிர்ப்பார்கள் போலுள்ளது.

கடவுள் சம்மதித்தாலும் மதகுரு பூசாரி அனுமதிக்க மாட்டார் என்று தமிழில் பழமொழி இருக்கிறது.

 அரசன்/Arasan

எங்கள் தந்தை நாட்டு ராணுவம் வந்துவிட்டது எங்களை பாதுகாக்க என்று மகிழ்ச்சியுடன் வரவேற்ற தமிழர்களை 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழகன் said:

என்னை உறுப்பினர்களை முட்டாள் ஆக்க எத்தனிப்பதாக நீங்கள் அபாண்டம் கூறியதன் பின் உங்களிடம் உரையாடுவதை தவிர்கவே விரும்பினேன்.

ஆனால் இவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு, கையில் நெய் இருக்க வெண்ணைக்கு அலைவனேன் என எதிர்கட்சியில் இருக்கும் போது கருணாநிதியே கேட்டுள்ளார்.

ஆக விடுவிக்கும் அதிகாரம் இருந்தும் சுடாலின் நாடகம் ஆடுவதே உண்மை.

தீரா விட அனுதாபிகளும் எல்லாம் மத்திய அரசு கையில் என்று சால்ஜாப்பு சொல்வார்கள்.

கோபம் வேண்டாம் தமிழகன்.
அரசியலில் ஒவ்வொருவரும் தங்கள் விமர்சனத்தை வைப்பார்கள்.
எனக்காகவோ உங்களுக்காகவோ யாழ் களம் இல்லை. அது தமிழர்களின் விடிவிற்காக என்றும் இருக்கும் இருக்க வேண்டும்

நானும் உங்களின் கருத்துக்களிற்கான பதில்களை சுய தணிக்கைக்கு உட்படுத்துகின்றேன்
சிறப்பு .......  

  • கருத்துக்கள உறவுகள்

குடியரசு தலைவரின் ஒப்புதலின்றி மாநில அரசே எழுவரை விடுதலை செய்யலாம்  – கி வீரமணி

511701.jpg
 24 Views

குடியரசுத் தலைவர் அளவுக்கு செல்லாமலேயே பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை மாநில அரசே விடுதலை செய்ய அதிகாரம் உள்ளது என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை முடிவெடுத்தது. அந்த பரிந்துரை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும் இதுவரையில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எழுவரை அரசியல் அமைப்பு சட்டத்தின் 161ம் பிரிவின் கீழ் முந்தைய அரசு விடுதலை செய்திருந்தால், இத்தனை காலதாமதமும், குழப்பங்களும் ஏற்பட்டிருக்காது.

இது தொடர்பாக அரசியல் அமைப்பு சட்டத்தின் 161ம் பிரிவு மாநில அரசுக்கு விரிவான அதிகாரத்தை வழங்கியுள்ளது.

எழுவர் விடுதலை தொடர்பாக பற்பல காலகட்டங்களில் காரணங்களும், சாக்குபோக்குகளும் கூறப்பட்டது.  பேரறிவாளனை விடுதலை செய்வதில் எங்களுக்கு மறுப்பு இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் குடியரசு தலைவரிடமே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளதாக ஆளுநர் ஏற்படுத்திய தடையின் காரணமாக குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளது முறையான நடவடிக்கை.

அரசியல் அமைப்பு சட்டத்தின் 161ம் பிரிவின் படி அமைச்சரவை மீண்டும் முடிவெடுத்து எழுவரை விடுதலை செய்ய தாராளமாக இடம் உண்டு.  அது சட்டப்படி சரியான நடவடிக்கையாக அமையும்” என்றார்.

மேலும் 1996ம் ஆண்டு அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுவிக்க கலைஞர் தலைமையிலான அரசு முடிவெடுத்ததையும், ஆளுநர் அதனை திருப்பி அனுப்பிய போது அரசியல் அமைப்பு சட்டத்தின் 161ம் பிரிவின் கீழ் கலைஞர் அரசு அவர்களை விடுவித்ததையும் கி.வீரமணி சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.ilakku.org/?p=50395

  • கருத்துக்கள உறவுகள்

7 தமிழர்களை விடுதலை செய்ய கூடாது – குடியரசுத் தலைவருக்கு சுப்பிரமணியசுவாமி கடிதம்

subramanian-swamy45-1564317260.jpg
 19 Views

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்யக்கூடாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்புவதாக தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கு தமிழீழ ஆதரவாளர்கள் ஒருமித்த குரலில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், 7 தமிழர்களை விடுதலை செய்யக் கூடாது என்பதில் எப்போதுமே விடாப்பிடியாக இருப்பவர் சுப்பிரமணிய சுவாமி. இப்போதும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள அவர், தனது ருவிட்டர் பதிவில் ராஜீவ்காந்தியை தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்ததாக உச்ச நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என்று  குடியரசுத் தலைவருக்கு நான் கடிதம் அனுப்புகிறேன். ராஜீவ்காந்தி மட்டுமல்லாது இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 18 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். இவ்வாறு ஒரு பதிவில் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

newproject19-1621601842.jpg

இதை தொடர்ந்து மற்றொரு பதிவில் ராஜீவ் காந்தி குடும்பம் மட்டுமே, குற்றவாளிகளை மன்னிப்பதற்கு முடியாது என்று கூறி உள்ளார் சுப்பிரமணியம் சுவாமி.

https://www.ilakku.org/?p=50421

  • கருத்துக்கள உறவுகள்

எழுவர் விடுதலையில் மாநிலத்தின் அதிகாரத்தை காவு கொடுப்பதா? சீமான் கடும் சீற்றம்

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%
 1 Views

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் அரசியல்சாசனத்தின் 161-வது பிரிவைப் பயன்படுத்தவேண்டும். அதனால் இடையூறு வந்தால் தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு தரும். இவ்விடயத்தில் மாநிலத்தின் அதிகாரத்தை காவு கொடுக்க முடியாது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக இந்திய ஜனாதிபதிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை அவர் தெரிவித்திருக்கின்றார். இதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களை விடுவிக்கக்கோரி குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதியிருக்கும் தமிழக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது.

எழுவரையும் விடுவிக்க மனமில்லாத தமிழக ஆளுநர் அமைச்சரவைத் தீர்மானத்திற்கு ஒப்புதல் தர மறுத்து விடுதலைக்கு முட்டுக்கட்டை போடவும், காலம் தாழ்த்தவுமாகக் கூறிய, ‘குடியரசுத்தலைவருக்குத்தான் அதிகாரமிருக்கிறது’ எனும் மோசடி வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையில் கடிதமெழுதி விடுதலையைக் கோரும் தி.மு.க அரசின் செயல், மாநில உரிமையை மத்திய அரசிடம் பரிகொடுக்கும் செயலாகும்.

ராஜீவ் காந்தியோடு இறந்துபோனவர்களின் குடும்பத்தினர் விடுதலைக்கெதிராகத் தொடுத்த வழக்கு, சி.பி.ஐயின் பல்நோக்கு விசாரணை நிறைவடையாமை எனப் பல்வேறு விவகாரங்களைக் காரணமாகக் காட்டி, ஒப்புதல் தர மறுத்த ஆளுநர் இறுதியாகத்தான், தமக்கு அதிகாரமில்லை என்றுகூறி, குடியரசுத்தலைவர் பக்கம் மடைமாற்றிவிட்டு இந்த மோசடித்தனத்தை அரங்கேற்றுகிறார். இதனை தமிழக அரசு, ஒருபோதும் அங்கீகரிக்கவோ, ஆதரவளிக்கவோ கூடாது என்பதே நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு.

எழுவரையும் விடுவிக்க மாநில அரசுக்கு முழு அதிகாரமிருக்கிறது எனப் பல வழக்குகளில் உச்ச நீதிமன்றமே தெளிவாக வரையறுத்து வழிகாட்டியிருக்கும் நிலையில், விடுதலைக்கு உத்தரவிட்டு மாநிலத்தின் தன்னுரிமையை நிலைநாட்ட வேண்டிய தமிழக அரசு, ஆளுநரின் கூற்றை முழுமையாக ஏற்றுக்கொண்டது போல குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதியிருப்பது, மாநிலத் தன்னாட்சியுரிமையைக் காவு கொடுக்கும் கொடுஞ்செயலாகும். 161வது சட்டப்பிரிவின்படி, எழுவரையும் விடுவிக்கத் தங்களுக்கு உரிமையிருக்கிறது என்பதை நிலைநாட்ட வேண்டிய தமிழக அரசு குடியரசுத்தலைவரிடம் கடிதமெழுதி வேண்டுகோள் வைப்பது மாநில அரசுக்கிருக்கும் அதிகாரத்தைத் தாரைவார்ப்பதற்கு ஒப்பாகும்” எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/?p=50435

15 hours ago, உடையார் said:

இதே போல கடந்த ஆட்சியில் எடப்பாடி எழுவரை விடுதலை செய்யாதது குறித்து பேசும் போது .....கடும் சீற்றம் வரவில்லை. பம்முகிறார்😂

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டாம் – குடியரசுத் தலைவரிடம் சுப்பிரமணிய சுவாமி வேண்டுகோள்

1e2b4d0b1b40071e837c6b532017d53382aba783
 62 Views

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருப்பதை உறுதி செய்யுமாறு பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு அண்மையில் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு எதிராக பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி குடியரசுத் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் பரிந்துரையை நிராகரிக்குமாறு சுப்பிரமணியன் சுவாமி கோரியுள்ளார்.

இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பிய அமைதிப் படையின் ஆயிரக்கணக்கான வீரர்களை விடுதலைப் புலிகள் இயக்கம் கொலை செய்ததாகவும், அந்த இயக்கத்தினர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ள சுப்பிரமணிய சுவாமி, படுகொலையில் தொடர்புடைய பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை எக்காரணம் கொண்டும் விடுதலை செய்யக் கூடாது என்றும், 7 பேரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருப்பதை குடியரசுத் தலைவர் உறுதி செய்யுமாறும் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

7 பேர் விடுதலை குறித்து மத்திய – மாநில அரசுகள் எதிர்காலத்தில் பரிந்துரை அனுப்பினாலும் அதை ஏற்கக் கூடாது எனவும் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

https://www.ilakku.org/?p=50686

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.