Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமோ நமோ சீனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து / அலசல் | சிவதாசன்

இலங்கை முகாமிற்குள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் மூலம் தலையை நுழைத்த சீன ஒட்டகம் இப்போது துறைமுக நகரத்தில் நிரந்தரப் படுக்கை அமைத்துவிட்டது. ராஜபக்சக்களுக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாழ்த்துக்கள். இதை இவ்வளவு இலகுவில் சாத்தியமாக்கிய 69,000 சிங்கள மக்கள், சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், முப்படைகள், இந்தியா, மேற்கு நாடுகள் அத்தனை பேருக்கும் அனுதாபம்.

இந்நாளுக்கான திட்டம் பல வருடங்களுக்கு முன்னரே, இலங்கைக்கு வெளியே தீட்டப்பட்டது என்பதில் சந்தேகப்பட இடமில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னால், ராஜபக்சக்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் என நம்பத் தேவையில்லை. நன்றாகத் திட்டமிட்டு, செவ்வனே முடிக்கப்பட்ட இத் திட்டத்திற்கான ஒட்டுமொத்தமான ‘ஸ்கிறிப்டும்’ இலங்கையில் எழுதப்படவில்லை. இத நடைமுறைச் சாத்தியமாக்கியது மட்டுமே இலங்கை.

ராஜபக்சக்களின் மீளமர்த்தலுக்கு அப்பால் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வு, 20 வது திருத்தம். இப்படியொரு அரசியலமைப்பு திருத்தத்தை, அதுவும் சில நாட்களுக்குள் உருவாக்க, தற்போதுள்ள ராஜபக்ச முகாமில் எவருமில்லை. அது யாரால் உருவாக்கப்பட்டது என்பதை நீதியமைச்சர் அலி சப்றி பாராளுமன்றத்தில் கூற மறுத்துவிட்டிருந்தார். தற்போது வரையப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ள துறைமுகநகரச் சட்ட வரைவு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டது என்கிறார்கள். இச் சட்டமூலத்தில் சுமார் இருபத்தைந்து அரசியலமைப்பு முரண்பாடுகள் இருக்கிறது என்பதைக்கூட, உலகப் புகழ் பெற்ற சட்டப் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸ் கூட் பார்க்கவில்லை என்றால் – do as you are told- கட்டளை அவ்வளவு பலமாக இருந்திருக்க வேண்டும் அல்லது முதுகெலும்புகள் அதி பலவீனமாக இருந்திருக்க வேண்டும்.

நிறைவேறி விட்டது. சீனாவில் பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருக்கும். விரைவில் துறைமுக நகரத்தில் சீனக் கொடி பட்டொளி வீசிப் பறக்கப் போகிறது. சீனம், சிங்களம், ஆங்கில மொழிகளில் வீதிப் பதாகைகள் பிரமாண்டமாக எழுப்பப்படப் போகின்றன. மதத் தலைவர்களைச் சமாதானமாக்க துறைமுகத்திலேயே அதி உயரமான புத்த விகாரையும், ஆயிரம் கால் புத்த கலாச்சார மண்டபமும் கண் விழித்து மூடுவதற்குள் நிர்மாணிக்கப்பட்டுவிடும்.

துறைமுக நகரத்தால் தமிழருக்கு நேரடியாக எந்தவித இலாப நட்டமுமில்லை. சிங்களவர்களைப் போலவே அவர்களும் அங்கு வெளிநாட்டுக்காரர் தான். 99 வருடங்களுக்குள் சீனர் இலங்கையின் இரண்டாவது பெரும்பான்மை இனமாக வந்துவிடுவர். அதி முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சொர்க்கம் அவர்களுக்கு தங்கத் தட்டில் வைத்துப் பரிசளிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிரதியுபககாரமாக ராஜபக்ச பரம்பரையினருக்கு துறைமுக நகரத்தில் மாட மாளிகைகள் பரிசாகக் கிடைக்கலாம். ஒரு காலத்தில் (உயிரோடு இருந்தால்) ராஜபக்சக்கள் மக்களின் கல்லெறிகளிலிருந்து தப்பி வாழ அது அடைக்கலத்தையும் வழங்கலாம். ராஜபக்சக்களின் எடுபிடிகளுக்கு ஓரமாக நின்று தெரு வியாபாரம் செய்ய சீனா இடமொதுக்கிக் கொடுக்கலாம். அங்கு முக்கிய தெருவியாபாரிகள் சீனராகவே இருப்பர்.

கடந்த சில மாதங்களாக, குறிப்பாக 20 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி தனது சர்வ வல்லமையை மீளப்பெற்ற பின்னர், இராணுவத் தளபதிகளின் அமைதி ஒரு விடயத்தைச் சொல்கிறது. சிங்கள கடுந்தேசியவாதிகளின் இரைச்சல் பெரும்பாலும் இல்லையென்றாகிவிட்டது. மதத் தலைவர்கள் தாங்கள் விட்ட மகா தவறை நினைத்து மண்டையில் குத்திக்கொள்கிறார்கள்.

சிங்கராஜா வன அழிப்பை நேரில் சென்று பார்த்த பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்தின சொன்ன விடயம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது. அரசாங்கத்தின் சூழல் கட்டுப்பாடுகளையும் மீறி வன அழிப்பை ஏவி விடுவது அரசியல்வாதிகள் தான், என அவர் தனது இயலாமையை வெளிக்காட்டியிருந்தார். அதன் பிறகு அவரது வழமையான ‘தேசிய பாதுகாப்பு’ கர்ச்சிப்புகள் குறைந்துவிட்டன. காரணம் அக் குறிப்பிட்ட வன அழிப்பு, அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சீன தொழிற்பேட்டைக்கு நீர், மின் வழங்கலுக்காக இரண்டு பாரிய நீர்த் தேக்கங்களை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. அவர் சிங்களத் தேசியவாதி, சீனத் தேசியவாதி அல்ல.

இதர விடயங்களில் போல, சீனா எவ்விடயத்தையும் கால தாமதப்படுத்துவதில்லை. அவர்களது தேவைகளை ராஜப்கசக்கள் துரிதமாகச் செய்துகொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். துறைமுக நகரத்தில் இராணுவத்துக்கு எந்தவித அக்கறையுமில்லை; அதனால் இலாபமுமில்லை. மியன்மாரில் போல அதிகாரத்தைக் கைப்பற்றும் முனைப்புகள் அவர்களிடமில்லை. துறைமுக நகரம், அம்பாந்தோட்டை என சீன இராணுவம் குடிவந்த பின்னர் தான் அவர்கள் விழித்துக்கொள்வார்கள்.

துறைமுக நகரத்தை ஒரு துபாய், சிங்கப்பூர் எனப் படம் காட்டி ராஜபக்ச தரப்பு விற்றிருக்கிறது. இதில் கொள்ளை கொள்ளையாகப் பணம் சம்பாதிக்கப் போகிறவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர். அவர்கள் தமது இலக்கிலிருந்து மாறவில்லை. சேசெல்ஸ் போன்ற நாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் பணத்தையும், நாட்டை விற்றதற்காக சீனா கொடுத்த ‘கமிசன்’ பணத்தையும் பக்கத்தில் கொண்டுவந்து வைத்திர்ப்பதே அவர்களது திட்டம். அதில் அவர்கள் குடும்பமாக, சகோதரர்களாக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

துறைமுக நகரம், மகாபாரதத்தில் வரும் ஒரு அரக்கு மாளிகை மட்டும்தான். அது தனவந்தரின் விளையாட்டுத் தளமாகவே இருக்கும். அது சகல தரப்பினரும் வந்து குடித்து, கூத்தியாடி, சூதாடிச் செல்ல களமமைத்துக் கொடுக்கும் சொர்க்கம். லொஸ் ஏஞ்சலிஸ் எப்படி அமைதியாக அரேபிய முடிக்குரியவர்களை அழைத்து அவர்களின் பணத்தைப் பிடுங்குகிறதோ அப்படியான ஒன்றாகவே இதுவும் இருக்குமென நம்பலாம். அங்குள்ள கண்ணாடி மாளிகைகளின் குடியிர்ப்பாளர்களில் பலர் கவர்ச்சியான சீன, கொரிய பெண்களாக இருக்கலாம். இங்கு கிடைக்கும் இலாபம் ராஜபக்சக்கள் சொலவதைப் போலவோ அல்லது கூசா தூக்கும் கப்ரால், பீரிஸ் போன்றோர் சொல்வதைப் போலவோ இலங்கையின் பொருளாதாரத்துக்கு அள்ளிக் கொட்டும் என எதிர்பார்க்கத் தேவையில்லை.

துறைமுக நகரத்தின் நாணயம் சீனாவின் யுவானாக இருக்குமென ஆரம்பத்தில் கூறப்பட்டது. பின்னர் அது ‘டொலராக’ மாற்றப்பட்டது என்கிறார்கள். திருவாளர் ‘ஹிட்லர்’ அமுனுகம கூறியதைப் போல பசில் ராஜபக்ச ‘நாட்டின் நன்மைக்காகவே திடீரென அமெரிக்கா செல்ல வேண்டி வந்தது’ என்பது துறைமுக நகரத்தால் ‘பயப்பட எதுவுமில்லை’ என அமெரிக்காவைத் தாஜா பண்ணுவதற்காகவாக இருக்கலாம். எனவே அமெரிக்காவைக் குஷிப் படுத்த ஏதாவது விட்டுக்கொடுப்புகளுடன் அவர் நாடு திரும்பலாம்.

துறைமுக நகரத்தை ஒரு front ஆக மட்டுமே சீனா பாவிக்கும். அதன் நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் அங்கு முதலீட்டாளர்களைக் கொண்டு வருவதற்கு அதை ஒரு ‘சிங்கப்பூராகக்’ காட்டியே ஆக வேண்டும். ஹொங்க் கொங் போல இறுக்கமாக அங்கு இருக்க முடியாது. கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் பொன் முட்டை தரும் வாத்து. அதை எப்படி வளர்த்துப் பெருக்குவதென்று சீனாவுக்குத் தெரியும். இவ் விடயத்தில் இந்தியாவின் வழமையான நெளிவுகளை (சுளிவுகள் அல்ல!!) அது தனக்குச் சாதகமாகப் பாவிக்கும். அதே வேளை சீனாவின் military-industrial complex அம்பாந்தோட்டை தான். அங்கு நீண்டகாலக் குடியிருப்பிற்கு சீனா தயாராகிவிட்டது. அதுதான் சீனாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை. அவுஸ்திரேலியாவில் இருக்கும் அமெரிக்காவின் இரகசிய பிரதேசமான அலிஸ் ஸ்பிறிங்ஸ் போலவே சீனாவுக்கு அம்பாந்தோட்டை என்பது மட்டும் இப்போதைக்குப் போதுமானது.

இந்தியா பல தடவைகளில் பல அணில்களை ஏறவிட்டுப் அண்ணாந்து பார்த்து வீணி வடித்திருக்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும்படி இலங்கை முதலில் இந்தியாவிடம் தான் கேட்டிருந்தது. இந்தியா அதற்கு இணக்கம் தெரிவிக்காமல், கிழக்கு கொள்கலன் முனையத்தில் மட்டும் தன் கண்களை வைத்திருந்து இறுதியில் அந்த அணிலும் ஏமாற்றிவிட்டது. இப்போது துறைமுக நகரத்தில் இவ்வளவும் நடக்கிறது ஆனால் அது கும்பமேளாவில் cowமியக் கோஷ்டிகளுக்குக் களமமைத்துக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. வாரணாசி உறுப்பினராகிவிட்ட மோடி வெண்தாடியுடன் தன்னை ஒரு சிவனாகவே நினைத்துப் பரவச நிலைக்குச் சென்றுவிட்டார். இலங்கை நிரந்தரமாகவே இந்தியாவின் கைகளிலிருந்து விடுபட்டுப் போய்க்கொண்டிருக்கிறது.

மேற்கு நாடுகளைப் பொறுத்த வரையில், பைடன் நிர்வாகம் பலத்த ஏமாற்றத்தைத் தருகிறது. உலகத்தில் அமெரிக்கா என்றொரு நாட்ட இறைவன் படைத்தது இஸ்ரேலைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே என அவர் தீர்க்கமாக நம்புகிறார். பாலஸ்தீனத்தில் எண்ணற்ற குழந்தைகள் கொல்லப்பட்ட்போது இரங்கமுடியாத இப் பிறவிக்கு விமோசனமில்லை. கைவிட்ட கேஸ். ஒபாமா காலத்தில் கோதாபயவுடன் ‘டீல்’ போட்டு தமிழர்களைக் கொன்றொழித்ததில் அவர் கைகளிலும் இரத்தக் கறையுண்டு. எனவே துறைமுக நகரத்தில் வானத்தைத் தொடும் ஒரு அழகான கண்ணாடி மாளிகையில் அமெரிக்காவின் கொடியொன்றையும் சீனா பறக்க விடும். அதோடு அவர் மனக்குளிர்ந்து விடுவார்.

இவையெல்லாவற்றுக்கும் மாறாக, எனக்கும் கனவு காண உரிமையுண்டு என்ற வகையில் – இந்தியாவிலும், அமெரிக்காவிலும் கொஞ்சம் முதுகெலும்புள்ள தலைமைகள் வந்தால், அவர்கள் துறைமுக நகரத்தின்மீது பொருளாதாரத் தடை விதித்தால் (economic sanctions) – அங்கு வணிகம் செய்பவர்களும், முதலீடு செய்பவர்களும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிடுவார்கள். இதனால் அங்கு சீனாவும், சீனாவின் நண்பர்களும் மட்டுமே வியாபாரம் செய்யலாம். சீனா உலகின் தொழிற்சாலையாக மட்டுமே இருக்க முடியுமே தவிர நுகர்வோராகவும் இருக்க முடியாது. உலக வர்த்தகம் இன்றி அதனால் சீவிக்க முடியாது. எனவே துறைமுக நகரம் அதன் சுடுகாடாக அமைய வாய்ப்புண்டு.

போர்களை விட உலகில் அதிக அழிவுகளைக் கொண்டுவருவது பொருளாதாரத்தடை. ஈரான், ஈராக், வெனிசுவேலா என்று எண்ணற்ற நாடுகள் சமகாலத்தில் மண்டியிட்டமைக்கு வானத்திலிருந்து பொழிந்த குண்டுகள் காரணமல்ல, வயிறுகள் வெந்தமையே காரணம். மக்கள்தான் இத் துன்பங்களை அனுபவிக்கப் போகிறவர்கள். துறைமுக நகரத்தின் மக்கள் சாதாரண மக்களல்ல என்ற வகையில் – who cares?.

எனவே எனது எதிர்ப்பார்ப்பு? ஜே.வி.பி. தலைமையிலான மூன்றாவது புரட்சி – அரிவாளையும் சுத்தியலையும் எறிந்துவிட்டு, யதார்த்தமான உண்மையான, கற்பனைகளுடன் கூடாத அணுகுமுறைகளுடன் கூடிய மூன்றாவது எழுச்சி, மக்கள் சக்தியாக உருவெடுக்கும். இலங்கையில் ஜனநாயகம் தப்பிப் பிழைக்குமானால், புத்த மகாசங்கங்களின் அனுசரணையுடன், ஆச்சரியப்படத்தக்க வகையில் இராணுவத்தின் அனுசரணையுடன், மக்கள் சக்தி ஆட்சியமைக்கும். புலிகளை வென்ற கதையும், தமிழர்களை வென்ற கதையும் இன்னும் சில தசாப்தங்களுக்கு எடுபடவும் முடியாது; எடுக்கப்படவும் கூடாது.

தமிழர்களைப் பொறுத்தவரையிலும், தீவிர தமிழ்த் தேசியம் தற்காலிகமாகவேனும் கிடப்பில் போடப்பட்டு உள்ளூர் உற்பத்தியான ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றுக்குத் தயாராக இருக்க வேண்டும். அனுரகுமார திசநாயக்கா அமரவன்ச அல்ல. அவரது தலைமையில் ஜே.வி.பி. பல நிதர்சனங்களை உணர்ந்திருக்கிறது. அவரோடு கற்றவர்களும், பண்புள்ளவர்களும் நிற்கிறார்கள். சஜித் பிரேமதாசவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் வாக்களித்த தமிழ் மக்கள் ஒரு முறை அநுரகுமாரவிலும் காசைக் கட்டிப் பார்க்கலாம். குதிரை வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வெளிநாடுகள் மூலம் தமிழருக்குத் தீர்வு? பைடனோடு அந்த நம்பிக்கை அறவே இல்லாமற் போய்விட்டது. ஐ.நா. நல்லதொரு தடிதான் ஆனால் அதை யார் வைத்திருப்பது என்பதைப் பொறுத்தே பலன் அமையும். நமக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை.

தலைப்பு ‘தி ஐலண்ட்’ பத்திரிகையில் லூசியன் ராஜகருணாநாயக்கவின் கட்டுரையிலிருந்து திருடப்பட்டது – Title: Courtesy: The Island / Lucien Rajakarunanayake.

https://www.marumoli.com/நமோ-நமோ-சீனா/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தலைப்பு ‘தி ஐலண்ட்’ பத்திரிகையில் லூசியன் ராஜகருணாநாயக்கவின் கட்டுரை  – Title: Courtesy: The Island / Lucien Rajakarunanayake.

இந்த கட்டுரையின் ஆங்கில மூலத்தை தந்துவ முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்த கட்டுரையின் ஆங்கில மூலத்தை தந்துவ முடியுமா?

ஹீ ...ஹீ .....காதிலே பூ கந்தசாமி.
 
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, zuma said:

ஹீ ...ஹீ .....காதிலே பூ கந்தசாமி.
 
காதில பூ கந்தசாமி உங்களுக்கும் பிடிக்குமா? அற்புதன் ரமேஸ்தான் அந்த பெயரில் எழுதியது என நினைக்கிறேன்.

நீங்கள் கொழும்பு பத்திரிகைகள் படிப்பவர்தானே? நீங்களாவது இந்த தி ஐலண்ட் இனது என சொல்லபடும் கட்டுரையின் ஆங்கில மூலத்தை தந்துதவ முடியுமா?

2 hours ago, goshan_che said:

இந்த கட்டுரையின் ஆங்கில மூலத்தை தந்துவ முடியுமா?

மேலும் கீழும் கோடுகள் போடு, அது தான் ஓவியம்.

நீ சொன்னால் காவியம். ஓவியம் என்றால் என்னவென்று தெரிந்தவர் இல்லையடா. குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அது தான் தொல்லையடா.😂

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

காதில பூ கந்தசாமி உங்களுக்கும் பிடிக்குமா? அற்புதன் ரமேஸ்தான் அந்த பெயரில் எழுதியது என நினைக்கிறேன்.

நீங்கள் கொழும்பு பத்திரிகைகள் படிப்பவர்தானே? நீங்களாவது இந்த தி ஐலண்ட் இனது என சொல்லபடும் கட்டுரையின் ஆங்கில மூலத்தை தந்துதவ முடியுமா?

இக் கட்டுரையை எழுதியவர்  சிவதாசன் என்பவர் ஆவர், தலைப்பு  மாத்திரம் ‘தி ஐலண்ட்’ பத்திரிகையில் லூசியன் ராஜகருணாநாயக்கவின் கட்டுரையிலிருந்து திருடப்பட்டது என குறிப்புடுள்ளார்.https://www.marumoli.com/நமோ-நமோ-சீனா/

இங்கு நாதமுனி, யாழ் களத்தில் மூலம் கொடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை விதியையும் மீறி, கட்டுரை ஆசிரியர் இட்ட தலைப்பையும் மாற்றியுள்ளார் ( நமோ நமோ சீனா…) அத்துடன் திருடப்பட்டது எனற சொல்லையும் நீக்கியுள்ளார். இந்த கூகுள் காலத்தில் மற்றவன்  தலையில் மிளகாய் அரைக்க பாக்கின்றார்.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
லூசியன் ராஜகருணாநாயக்கவின் கட்டுரை
 
Namo, Namo, Cheena!
********************************************************************
(The Island - Light Refractions by Lucien Rajakarunanayake)
The Island cartoon yesterday by Jeffrey Kelaart stuck more than a nail in my heart.
The Ceylon Chamber of Commerce now offers its members the opportunity to purchase AstraZeneca Covid vaccines for Rs, 5,000 each. This is the alarm that most of those, like me, have obtained the first dose of its many weeks, and nearly two months ago, face today.
Are we moving to a huge fraud – a Vaccine Black Market – as the country suffers the swelling spread of the Covid pandemic?
Meanwhile, the GMOA, which has been largely silent on the questionable actions of the government and official health authorities on the Covid issues, has also called for a National Vaccine Strategy in the current crisis. Timely no doubt. An action that should have been thought of by the government, at least when the second wave of the pandemic began last year. What we see today is not any Vaccine Strategy, but a vastly growing Vaccine Fraud – in keeping with the political dominance of the Raja Vasala.
This Vaccine Fraud is the stuff of husbands of Health Power, Ministers of Official Communication, and performers on the political stages of this government. This Vaccine Fraud or Ennath Vanchava will soon dominate the social structure of the country, giving a new meaning to the Saubhagyaye Dekma that is guiding the entire structure of governance today.
With the Colombo Port City Act adopted by a simple majority in parliament, after many items contrary and threatening to the Constitution being suitably altered, thanks to the Supreme Court, we are now in process unveiling the actual politico-economic strategies of this government. A two-day debate for such an important piece of legislation, giving just two days – from the seven days allowed under the law – to file objections in the Supreme Court, and the absence of any wide public discussion and debate on it, shows the government’s overall contempt for democracy.
Far away in Beijing, there must have been a Chinese celebration on the passage of this Act, with plenty of fire-crackers and loud cheers from key members of the Chinese Communist Party. We may soon learn that the Chinese Communisty Party would also donate another 500,000 of a Chinese vaccination to Sri Lanka. Sri Lankans will have to keep a watch as to when the Chinese flags are fully raised over the Colombo Port City, and the Chinese language dominates the name boards, signboards and street signs of this place.
The stuff in the draft law on the Colombo Port City gives the impression it may not have been drafted in Sri Lanka. How could the Attorney General’s Department and/or the Legal Draftsman’s Department have brought in more than Twenty-five violations or clear departures of the Constitution of Sri Lanka? Did the learned in law in the government and the Cabinet of Ministers not know of these huge, and dangerous departures from the Constitution?
Would the learned lawyer and President’s Counsel, Ali Sabry, the Minister of Justice, have missed so many violations of our constitutional process? Or was it silence, to make way for the anti-constitutional thinking of the power that manipulates government policy today – the fingertips of Saubhagyaye Dekma?
We head Professor of Law, Minister G.L. Peiris, who is Minister of Education, tell parliament that this Bill could be passed with a simple majority. He was certainly trying to educate MPs, but how come he glossed over the multiple violations of the Constitution that the original Bill carried?
To get back to the Vaccine Fraud or Ennath Vanchava that we see developing within the government, the Port City Act adopted with such speed and lack of public discussion has all the promise of a huge and disastrous Governmental Fraud – an Aandukrama Vanchava – which moves far away from the democratic principles and processes this country has tried to maintain, with much failures and difficulties since independence in 1948.
The violations of the democratic process we have seen under Sirimavo Bandaranaike, and much worse under J. R. Jayewardene, are now taken to a situation of disaster. Let’s not forget that the Pro-Chinese Port City Law is a complete departure from democracy, launched by the 20th Amendment to the Constitution.
This is a huge fraud in the governmental process, paving the way for a Beijing dominated, Sino-Lankan governance, where Sri Lankan will do much more for China than the Belt and Road Project. It may not be very far when we sing ‘Namo, Namo Cheena”, when we should be singing Namo, Namo, Matha.
The dawn of the Cheena Saubhagyaye Dekma!
 
  • nunavilan changed the title to நமோ நமோ சீனா
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, zuma said:

இக் கட்டுரையை எழுதியவர்  சிவதாசன் என்பவர் ஆவர், தலைப்பு  மாத்திரம் ‘தி ஐலண்ட்’ பத்திரிகையில் லூசியன் ராஜகருணாநாயக்கவின் கட்டுரையிலிருந்து திருடப்பட்டது என குறிப்புடுள்ளார்.

https://www.marumoli.com/நமோ-நமோ-சீனா/
இங்கு நாதமுனி, யாழ் களத்தில் மூலம் கொடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை விதியையும் மீறி, கட்டுரை ஆசிரியர் இட்ட தலைப்பையும் மாற்றியுள்ளார் ( நமோ நமோ சீனா…) அத்துடன் திருடப்பட்டது எனற சொல்லையும் நீக்கியுள்ளார்.

நன்றி சுமா,

இந்த கட்டுரை ஒரு டுபாக்கூர் கட்டுரை என்பதும் எதோ ஒரு டுபாகூர் இணையதளத்தில், சிவதாசன் என்பவர் எழுதியது என்பதும் மிக தெளிவாகிறது.

மேலும் திரு சிவதாசன் மிகவும் தந்திரமாக ஐலண்ட், லூசியன் ராஜகருணநாயக்க என பிரபலமான பெயர்களை பாவித்து ஆனால் அதன் இணைய சுட்டியையோ அல்லது கட்டுரையின் தலைப்பையோ தராமல் திருட்டுதனம் பண்ணி உள்ளார்.

நான் துறைமுக நகர சட்ட மூலம் நிறைவேறிய நாளின் பின் வந்த அனைத்து ஐலண்ட் கட்டுரைகளையும் அலசி விட்டேன். இப்படி ஒரு கட்டுரையை காணவில்லை.

ஆனால் நமோ நமோ சீனா என்ற பெயரில் லூசியன் எழுதிய கட்டுரை கிடைத்தது.

அதன் சுட்டி இங்கே.

https://island.lk/namo-namo-cheena/

இப்போது இந்த திரியின் தலைப்பை @nunavilanமாற்றியுள்ளார்.

ஆனால் இங்கே தலைப்பு மட்டும் பிரச்சனை அல்ல.

ஆங்கில கட்டுரையை வாசித்தால் - அதில் இருக்கும் விடயத்தில் 10% கூட தமிழ் மொழிபெயர்ப்பில் இல்லை. 

புதிதாக பலதை சேர்த்து தமது சொந்த கருத்தை எல்லாம் லூசியனின் தலையில் கட்டி உள்ளனர். பலதை வெட்டி உள்ளார்கள்.

ஆங்கில தெரியாத யாரும், இந்த டுபாகூர் தமிழ் கட்டுரையை வாசித்து, பெரும் இனவாத பத்திரிகையாகன ஐலண்ட் கூட சீன பிரசன்னம் பற்றி இப்படி எழுதி உள்ளதே என தப்பாக விளங்க வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் உள் நோக்கம்.

@நியானி இந்த கட்டுரை யாழின் பல விதிகளை மீறுவதாய் படுகிறது.

நான் ஏலவே பலதிரிகளில் சுட்டி காட்டியபடி யாழ் வாசகர்களை முட்டாள்கள் ஆக்கும் பதிவுகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பது என் பலத்த சந்தேகம்.

யாழின் நம்பகதன்மை, உங்கள் வாசகர்கள் முட்டாளாக்க படக்கூடாது என்பதை மனதில் கொண்டு இந்த கட்டுரையை என்ன செய்யலாம் என தீர்மானிக்க வேண்டுகிறேன். 

ஆங்கிலம் வாசிக்க வராத வாசகர்களை முட்டாள் ஆக்க இடமளியாமையும், யாழின் நம்பகதன்மையை பேணுவதையும் உங்கள் முதல் கடமை என் உணர்ந்து செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

1 hour ago, zuma said:

இக் கட்டுரையை எழுதியவர்  சிவதாசன் என்பவர் ஆவர், தலைப்பு  மாத்திரம் ‘தி ஐலண்ட்’ பத்திரிகையில் லூசியன் ராஜகருணாநாயக்கவின் கட்டுரையிலிருந்து திருடப்பட்டது என குறிப்புடுள்ளார்.https://www.marumoli.com/நமோ-நமோ-சீனா/

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

நன்றி நுணா,

இப்போ நீங்கள் செய்திருக்கின்ற திருத்தம்(கள்) சிவதாசன் தலைப்பை மட்டும் திருடி மிகுதியை தான் எழுதியுள்ளார் என்பதை தெளிவாக்குகிறது.

முந்திய பதிப்பு ஒட்டு மொத்த கட்டுரையே ஐலண்டில் லூசியன் எழுதியது என்பது போல தோற்றத்தை கொடுத்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

இக் கட்டுரையை எழுதியவர்  சிவதாசன் என்பவர் ஆவர், தலைப்பு  மாத்திரம் ‘தி ஐலண்ட்’ பத்திரிகையில் லூசியன் ராஜகருணாநாயக்கவின் கட்டுரையிலிருந்து திருடப்பட்டது என குறிப்புடுள்ளார்.https://www.marumoli.com/நமோ-நமோ-சீனா/

இங்கு நாதமுனி, யாழ் களத்தில் மூலம் கொடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை விதியையும் மீறி, கட்டுரை ஆசிரியர் இட்ட தலைப்பையும் மாற்றியுள்ளார் ( நமோ நமோ சீனா…) அத்துடன் திருடப்பட்டது எனற சொல்லையும் நீக்கியுள்ளார். இந்த கூகுள் காலத்தில் மற்றவன்  தலையில் மிளகாய் அரைக்க பாக்கின்றார்.

கனேடியன் சிவதாசனோ..? 🤥

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நன்றி நுணா,

இப்போ நீங்கள் செய்திருக்கின்ற திருத்தம்(கள்) சிவதாசன் தலைப்பை மட்டும் திருடி மிகுதியை தான் எழுதியுள்ளார் என்பதை தெளிவாக்குகிறது.

முந்திய பதிப்பு ஒட்டு மொத்த கட்டுரையே ஐலண்டில் லூசியன் எழுதியது என்பது போல தோற்றத்தை கொடுத்தது. 

சுமா ஏற்கனவே எழுதியுள்ளார். 

Just now, Kapithan said:

கனேடியன் சிவதாசனோ..? 🤥

ஆம். அவரை பற்றி கோசானுக்கு தெரிய நியாயமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

சுமா ஏற்கனவே எழுதியுள்ளார். 

ஆம். அவரை பற்றி கோசானுக்கு தெரிய நியாயமில்லை.

ஆள் பெரிய அப்பாடக்கரோ? கற்பிதனின் மூக்கு நீள்வதை பார்க்க அப்படித்தான் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

படம் தெரியவில்லை கற்பிதன் ஆனால் cut and paste பண்ணி பார்க்க முடிகிறது.

இந்த சிவதாசன் யார்? டிவி புரோகிராம் செய்பவர் என்கிறது டிவிட்டர் அக்கவுண்ட்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says "இலங்கையில் சீனா!! By Nathamuni, 3 hours ago in அரசியல் அலசல் Reply to this topic கருத்துக்கள உறவுகள் Nathamuni 3,165 பதியப்பட்டது 3 hours ago இலங்கை முகாமிற்குள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் மூலம் தலையை நுழைத்த சீன ஒட்ட ஒட்டகம் இப்போது துறைமுக நகரத்தில் நிரந்தரப் படுக்கை அமைத்துவிட்டது. ராஜபக்சக்களுக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாழ்த்துக்கள். இதை இவ்வளவு இலகுவில் சாத்தியமாக்கிய 69,000 சிங்கள மக்கள், சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், முப்படைகள், இந்தியா, மேற்கு நாடுகள் அத்தனை பேருக்கும் அனுதாபம். இந்நாளுக்கான திட்டம் பல வருடங்களுக்கு முன்னரே, இலங்கைக்கு வெளியே தீட்டப்பட்டது என்பதில் சந்தேகப்பட இடமில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னால்,"

May be an image of text that says "yarl.com வெளிநாடுகள் மூலம் தமிழருக்குத் தீர்வு? பைடனோடு அந்த நம்பிக்கை அறவே இல்லாமற் போய்விட்டது ஐ.நா. நல்லதொரு தடிதான் ஆனால் அதை யார் வைத்திருப்பது என்பதைப் பொறுத்தே பலன் அமையும். நமக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. தலைப்பு தி ஐலண்ட்' பத்திரிகையில் லூசியன் ராஜகருணாநாயக்கவின் கட்டுரை -Title: Courtesy: The Island Lucien Rajakarunanayake. Quote கருத்துக்கள உறவுகள் goshan_che +2,353 Posted 2 hours ago .. 3 hours ago, Nathamuni said: இலங்கை முகாமிற்குள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் மூலம் தலையை நுழைத்த சீன ஒட்டகம் இப்போது துறைமுக நகரத்தில் நிரந்தரப் படுக்கை அமைத்துவிட்டது. ராஜபக்சக்களுக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாழ்த்துக்கள். இதை இவ்வளவு"

ஆவணத்திற்காக.....
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணா.... முகப்புத்தக்தில் வந்தது. கட்டுரை பல விடயங்களை சொன்னது. சில பகுதிகள் லூசியன் கட்டுரையில் இருந்து எடுக்கப்படுள்ளது. முதல் பதிவு செய்து மேலதிக விபரங்கள்,  எனது கருத்துக்களுடன் வரு முன்னர், கணனி, சுருண்டு விட்டது. கடவு என்னும் மறந்து விட்டது..... மொபைலில் லாக் இன் பண்ண முடியவில்லை.

******

7 hours ago, zuma said:

இக் கட்டுரையை எழுதியவர்  சிவதாசன் என்பவர் ஆவர், தலைப்பு  மாத்திரம் ‘தி ஐலண்ட்’ பத்திரிகையில் லூசியன் ராஜகருணாநாயக்கவின் கட்டுரையிலிருந்து திருடப்பட்டது என குறிப்புடுள்ளார்.https://www.marumoli.com/நமோ-நமோ-சீனா/

இங்கு நாதமுனி, யாழ் களத்தில் மூலம் கொடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை விதியையும் மீறி, கட்டுரை ஆசிரியர் இட்ட தலைப்பையும் மாற்றியுள்ளார் ( நமோ நமோ சீனா…) அத்துடன் திருடப்பட்டது எனற சொல்லையும் நீக்கியுள்ளார். இந்த கூகுள் காலத்தில் மற்றவன்  தலையில் மிளகாய் அரைக்க பாக்கின்றார்.

அடேங்கப்பா...

ஹலோ சுமா ..வாள்....

என்ன ஓய்... வானத்துக்கும், பூமிக்கும் குதிக்கிறேள்....

முகப்புத்தகத்தில் வந்தது..... கருத்து, நல்லா இருந்தது. ஓட்டினேன். 'திருடப்பட்ட' என்ற சொல் நாகரிகமாக படவில்லை ஓய்.

சரி.... மூலத்தினையும் தேடி.... என்ன விசயம் என்று பார்த்து..... நம்ம கருத்தையும் சேர்த்து, போடலாம் என்றால்..... நம்ம, கம்ப்யூட்டர் சுருண்டு படுத்தே விட்டுது ஓய்....

என்ன.... பெரிய... தலை.... அதில மிளகாய் அரைப்பு.... மொட்டையோ ?

சரி.... அது என்ன டுபாக்கூர்..... அப்பாடக்கர்??
ஒரு சிங்களவரா இப்படி எழுதுவார் என்று... பேராய்வு நடத்தியவர்கள், கட்டுரை சொல்லும் விடயத்தினை ஆய்வு செய்ய வில்லையே, ஏன்? 

திரியை மூடு வகையான சிபாரிசுகள் தானே வந்தன.... சப்பா.... முடியல்ல..... போதனைகள்....

சரி, இந்த வானத்துக்கும், பூமிக்கும் துள்ளி குதிக்கும் பிரயோசனமில்லா வேலையினை விட்டு முன்னால் உள்ள பிரச்சனையை மட்டும் ஆராய்வோமா....

*****

சிங்களவர்கள், என்ன சொல்கிறார்களோ இல்லையோ.... தமிழர் நலன் சார்ந்து கதைக்க போவதில்லை என்பதில் அனைவருமே உறுதியாக நம்புகிறீர்கள் என்பதில் இங்கே பதிவிட்ட அனைவரும் பெரும் நம்பிக்கை கொண்டுளீர்கள் என்று புரிகிறது. 

ஆனாலும், இஸ்லாமியர்களுடன் மோதலா.... ராமநாதன் தேவைப்பட்டார்.

தமிழர்களுடன் மோதலா, கதிர்காமர் தேவைப்பட்டார்.

இந்தியர்களுடன் மோதலா பிரபாகரன் தேவைப்பட்டார்.. (துல்பன்அய்யா, முழுமனதுடன் ஏற்றுக் கொள்வார்).

பிரபாகரனை முடிக்க, கருணா தேவைப்பட்டார்.

நாளை சீனனுடன் மோதல் வரும்.... அப்போதும் ஒரு இளிச்ச வாய் தமிழன் தேவைப்படுவான்.... வருவான்....

சீனன் ஆண்டால் என்ன.... சிங்களவன் ஆண்டால் என்ன.... எமக்கொரு கவலை இல்லை நிலைமையிலேயே நாம்.

மரத்திலே ஏத்தி விட்டு, மாங்காய் புடுங்க தமிழன் வேணும். மாங்காய் கைக்கு வந்ததும், மரத்திலேயே இரு.... கீழ வந்தால்.... கொண்டுபுடுவேன்.... 

அந்த கொப்பில் இருக்கும்  மாங்காய் முத்தும் வரை, கிளி, காக்காய் கொத்தாமல், அப்படியே பார்த்துக் கொண்டு இரு.... இந்த மாங்காய் சாப்பிட்டு வறேன்.... 

ராமநாதன்.... குதிரை வண்டியில்.... குதிரைகளை அனுப்பி விட்டு.... சிங்களவர்களால் வண்டி இழுத்து செல்லப்பட்டது.

கதிர்காமருக்கு பிரதமர் பதவி கொடுக்க வேண்டும், கொடுப்போம் என்று அவருக்கே அல்வா கொடுக்கப்பட்டது.

இந்தியர்களுடன் போராடி, சுதந்திரத்தினை காத்து தந்த, தைரியம் மிக்க இலங்கையன் பிரபாகரன் என்று, பிரேமதாச.... பூச்சூடினார். 

கருணா... சுதந்திர கட்சியின் முக்கிய உறுப்பினர். பாராளுமன்ற உறுப்பினர்.... பிள்ளையான் சிறை மீட்சி.... பாராளுமன்ற உறுப்பினர்....

இதுதான் தமிழன்... சிங்களவனால் பயன்படுத்தப்படும் விதம்......

இதுவே.... நான் சொல்ல வந்தது மக்களே.... வேலை.....இருப்பதால், மாலை சந்திக்கலாம்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

முகப்புத்தக்தில் வந்தது. கட்டுரை பல விடயங்களை சொன்னது

நானும் நாதமுனியின் வழமையான ஆங்கில கட்டுரைகளை மொழியாக்கம் செய்து தனது கருத்துக்களையும் தெளித்த சொந்த அலசலாக்கும் என்று நினைத்திருந்தேன்.😄

நாதம்ஸ் மூலத்தை இணைக்கமுன்னர் கணணி சுருண்டுபடுத்துவிட்டது. கணணி வேறு அலுப்புக்கொடுக்கின்றது😏

முகப்புத்தகத்தில் வரும் “அரசியல் ஆய்வு”களையும் அரசியல் அலசல் பகுதியில் இணைக்கக்கூடாது என்று களவிதி இருப்பதாக நினைவு.

என்ன கள விதி இருந்தாலும் அதை மீறினாலும், பின்னர் வந்து நா கூசாமல் மாற்றி மாற்றி பொய்யுரைக்கும் துணிச்சலும்,  அதை நம்ப நாலு இளிச்ச வாயர்களும், முட்டு கொடுக்க சிலரும் இருந்தால்  எந்த களவிதியையும் மீறி இங்கு  எதையும் இணைக்கலாம் போலிருக்கிறது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நானும் நாதமுனியின் வழமையான ஆங்கில கட்டுரைகளை மொழியாக்கம் செய்து தனது கருத்துக்களையும் தெளித்த சொந்த அலசலாக்கும் என்று நினைத்திருந்தேன்.😄

நாதம்ஸ் மூலத்தை இணைக்கமுன்னர் கணணி சுருண்டுபடுத்துவிட்டது. கணணி வேறு அலுப்புக்கொடுக்கின்றது😏

முகப்புத்தகத்தில் வரும் “அரசியல் ஆய்வு”களையும் அரசியல் அலசல் பகுதியில் இணைக்கக்கூடாது என்று களவிதி இருப்பதாக நினைவு.

இண்டைக்கு நான் ஒருத்தருக்கு கொஞ்ச காசு bank transfer பண்ண வேண்டி கிடக்கு.

இந்த பாழாய் போன கணனி மக்கர் பண்ணும் என்று பார்த்தா அது gun மாரி நிக்குது.

நீங்கள் IT field தானே, நாங்கள் முட்டு சந்துகுள் மாட்டும் சந்தர்பங்களில் கணனியை மக்கர் பண்ண வைக்க டிப்ஸ் ஏதும் இருந்தால் தந்துதவவும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

நன்றி நுணா.... முகப்புத்தக்தில் வந்தது. கட்டுரை பல விடயங்களை சொன்னது. சில பகுதிகள் லூசியன் கட்டுரையில் இருந்து எடுக்கப்படுள்ளது. முதல் பதிவு செய்து மேலதிக விபரங்கள்,  எனது கருத்துக்களுடன் வரு முன்னர், கணனி, சுருண்டு விட்டது. கடவு என்னும் மறந்து விட்டது..... மொபைலில் லாக் இன் பண்ண முடியவில்லை.

******

அடேங்கப்பா...

ஹலோ சுமா ..வாள்....

என்ன ஓய்... வானத்துக்கும், பூமிக்கும் குதிக்கிறேள்....

முகப்புத்தகத்தில் வந்தது..... கருத்து, நல்லா இருந்தது. ஓட்டினேன். 'திருடப்பட்ட' என்ற சொல் நாகரிகமாக படவில்லை ஓய்.

சரி.... மூலத்தினையும் தேடி.... என்ன விசயம் என்று பார்த்து..... நம்ம கருத்தையும் சேர்த்து, போடலாம் என்றால்..... நம்ம, கம்ப்யூட்டர் சுருண்டு படுத்தே விட்டுது ஓய்....

என்ன.... பெரிய... தலை.... அதில மிளகாய் அரைப்பு.... மொட்டையோ ?

சரி.... அது என்ன டுபாக்கூர்..... அப்பாடக்கர்??
ஒரு சிங்களவரா இப்படி எழுதுவார் என்று... பேராய்வு நடத்தியவர்கள், கட்டுரை சொல்லும் விடயத்தினை ஆய்வு செய்ய வில்லையே, ஏன்? 

திரியை மூடு வகையான சிபாரிசுகள் தானே வந்தன.... சப்பா.... முடியல்ல..... போதனைகள்....

சரி, இந்த வானத்துக்கும், பூமிக்கும் துள்ளி குதிக்கும் பிரயோசனமில்லா வேலையினை விட்டு முன்னால் உள்ள பிரச்சனையை மட்டும் ஆராய்வோமா....

*****

சிங்களவர்கள், என்ன சொல்கிறார்களோ இல்லையோ.... தமிழர் நலன் சார்ந்து கதைக்க போவதில்லை என்பதில் அனைவருமே உறுதியாக நம்புகிறீர்கள் என்பதில் இங்கே பதிவிட்ட அனைவரும் பெரும் நம்பிக்கை கொண்டுளீர்கள் என்று புரிகிறது. 

ஆனாலும், இஸ்லாமியர்களுடன் மோதலா.... ராமநாதன் தேவைப்பட்டார்.

தமிழர்களுடன் மோதலா, கதிர்காமர் தேவைப்பட்டார்.

இந்தியர்களுடன் மோதலா பிரபாகரன் தேவைப்பட்டார்.. (துல்பன்அய்யா, முழுமனதுடன் ஏற்றுக் கொள்வார்).

பிரபாகரனை முடிக்க, கருணா தேவைப்பட்டார்.

நாளை சீனனுடன் மோதல் வரும்.... அப்போதும் ஒரு இளிச்ச வாய் தமிழன் தேவைப்படுவான்.... வருவான்....

சீனன் ஆண்டால் என்ன.... சிங்களவன் ஆண்டால் என்ன.... எமக்கொரு கவலை இல்லை நிலைமையிலேயே நாம்.

மரத்திலே ஏத்தி விட்டு, மாங்காய் புடுங்க தமிழன் வேணும். மாங்காய் கைக்கு வந்ததும், மரத்திலேயே இரு.... கீழ வந்தால்.... கொண்டுபுடுவேன்.... 

அந்த கொப்பில் இருக்கும்  மாங்காய் முத்தும் வரை, கிளி, காக்காய் கொத்தாமல், அப்படியே பார்த்துக் கொண்டு இரு.... இந்த மாங்காய் சாப்பிட்டு வறேன்.... 

ராமநாதன்.... குதிரை வண்டியில்.... குதிரைகளை அனுப்பி விட்டு.... சிங்களவர்களால் வண்டி இழுத்து செல்லப்பட்டது.

கதிர்காமருக்கு பிரதமர் பதவி கொடுக்க வேண்டும், கொடுப்போம் என்று அவருக்கே அல்வா கொடுக்கப்பட்டது.

இந்தியர்களுடன் போராடி, சுதந்திரத்தினை காத்து தந்த, தைரியம் மிக்க இலங்கையன் பிரபாகரன் என்று, பிரேமதாச.... பூச்சூடினார். 

கருணா... சுதந்திர கட்சியின் முக்கிய உறுப்பினர். பாராளுமன்ற உறுப்பினர்.... பிள்ளையான் சிறை மீட்சி.... பாராளுமன்ற உறுப்பினர்....

இதுதான் தமிழன்... சிங்களவனால் பயன்படுத்தப்படும் விதம்......

இதுவே.... நான் சொல்ல வந்தது மக்களே.... வேலை.....இருப்பதால், மாலை சந்திக்கலாம்...

உங்கள் கணினி பழுதடிந்ததையிட்டு மனம் வருந்துகின்றேன். உங்கள் முகநூல் மூலத்தை கொடுப்பதன் மூலம் உங்கள் நன்பகதன்மையை நாங்கள் அறியமுடியும்.
கீழ் உள்ள இணைப்பில் யாழ் கள விதிமுறைகள் உள்ளன, ஆற அமர இருந்து படிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

நீங்கள் IT field தானே, நாங்கள் முட்டு சந்துகுள் மாட்டும் சந்தர்பங்களில் கணனியை மக்கர் பண்ண வைக்க டிப்ஸ் ஏதும் இருந்தால் தந்துதவவும்.

இது பெரிய வேலையே!! கோப்பிக் கப்பை லாப்ரொப் கீபோர்ட்டில் தட்டினால் காணும்! ஆனால் என்னிடம் கொம்பென்ஷேசன் கேட்கவரவேண்டாம். எதுக்கும் OneDrive அல்லது வேறு Cloud backup எடுத்துவைத்த பின்னர் மக்கர் பண்ணச் செய்ய முயற்சியுங்கள்😜

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

spacer.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, zuma said:

உங்கள் கணினி பழுதடிந்ததையிட்டு மனம் வருந்துகின்றேன். உங்கள் முகநூல் மூலத்தை கொடுப்பதன் மூலம் உங்கள் நன்பகதன்மையை நாங்கள் அறியமுடியும்.
கீழ் உள்ள இணைப்பில் யாழ் கள விதிமுறைகள் உள்ளன, ஆற அமர இருந்து படிக்கவும்.

ஒரு கோஷ்டியாக இயங்கக்கூடாது என்பதும் களவிதி  தானே....  அது எப்படி, இங்கே பதித்தவர்கள் எல்லோரும்....(கபித்தான் தவிர) ஒரே நேர் கோட்டில் இணைபவர்களாக உள்ளனரே.... 🤔

நோக்கம் தான் என்ன? நிர்வாகம் கவனித்துக்கொண்டு தான் இருக்கும். 🙏

இங்கே நிர்வாகம், வேண்டியதை செய்து நகர்ந்து விட்டது.

மினக்கடாமல், வேறு வேலையை பாருங்கள். மிக்க நன்றி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

ஒரே நேர் கோட்டில் இணைபவர்களாக உள்ளனரே.

யாழ் களத்துக்கு மிகமிகச் சாதாரணமான அறிவுத்திறன் கொண்ட  மாங்கா மடையர்கள்தான் வருகிறார்கள் என்று நீங்கள் கருதினால் இப்படித்தான் தெரியும்😂

16 minutes ago, Nathamuni said:

இங்கே நிர்வாகம், வேண்டியதை செய்து நகர்ந்து விட்டது.

அப்படியே முகப்புத்தக மூலத்தையும் நிர்வாகம் கொடுத்திருக்கலாம்😃

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.