Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

என்ன வன்னியர் தமிழ்நாட்டில் சம்பல் இல்லையா? ஒரு வேளை கேரளத்து பக்கம் இருக்குமோ? 😁

மதுரையில்  அப்பம் கூட சாப்பிட்டு இருக்கிறன்  90 களில்  இப்ப இல்லையாக்கும்  அதிகாலையில் தான் கிடைக்கும் எந்த வீதி என்பது மறந்து விட்டது. பகிடி என்னவென்றால் அப்பம் என்று வேற ஒரு பதார்த்தம் தந்தார்கள் நம்ம பருத்தித்துறை ஓடக்கரை  அப்பம் வேறை வகை .

  • Replies 146
  • Views 13.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    மிகச் சரியான பதில் கோசான்,  வாழ்த்துக்கள்..! 🙏🌹   உங்களுக்கும் வாழ்த்துக்கள் கு.சா..!  🙏🌹   ஈழத்தில் இன்னும் நிறைய நுணுக்கமான இடங்கள் உள்ளன.. சாவகாசமா நேரமிருக்கும்போது

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    முழுப் படமும் போட்டாச்சுது..! இந்த சிலை 1982ம் ஆண்டு நிறுவப்பட்டு, யுத்த காலத்தில் அழிந்து மீண்டும் 14-04-2021 ல் 'மறவன்புலவு க.சச்சிதானதன்' அவர்களால் திறக்கப்பட்டது. சலிப்பை தவிர்க்க இது

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    வாழ்த்துக்கள், திரு.பெருமாள்.. மிகச் சரியாக ஊகித்துள்ளீர்கள்..! (I am @ desert site, reply in the evening)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

மதுரையில்  அப்பம் கூட சாப்பிட்டு இருக்கிறன்  90 களில்  இப்ப இல்லையாக்கும்  அதிகாலையில் தான் கிடைக்கும் எந்த வீதி என்பது மறந்து விட்டது. பகிடி என்னவென்றால் அப்பம் என்று வேற ஒரு பதார்த்தம் தந்தார்கள் நம்ம பருத்தித்துறை ஓடக்கரை  அப்பம் வேறை வகை .

பூரி மாரி இருந்ததே?🤣. நான் ஊரில் அப்பம் மாரி தமிழ் நாட்டில் காணேல்ல.

ஆனால் கேரளத்தில் உண்டாக்கும்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

மதுரையில்  அப்பம் கூட சாப்பிட்டு இருக்கிறன்  90 களில்  இப்ப இல்லையாக்கும்  அதிகாலையில் தான் கிடைக்கும் எந்த வீதி என்பது மறந்து விட்டது. பகிடி என்னவென்றால் அப்பம் என்று வேற ஒரு பதார்த்தம் தந்தார்கள் நம்ம பருத்தித்துறை ஓடக்கரை  அப்பம் வேறை வகை .

பெருமாள், நீங்கள் சாப்பிட்ட பலகாரம் நிச்சயம் 'ஊத்தப்பம்' என நினைக்கிறேன்.

வீடுகளில் இந்த அப்பம், புட்டு, கடலைக் கறி எல்லாம் யாரும் தினமும் செய்து சாப்பிடுவது கிடையாது. இவைகள் தமிழ்நாட்டின் தினசரி உணவு வகைகளில் அடங்கா. சுற்றுலா இடமென்றால் ஓட்டல்களில் சிலவேளைகளில் கிடைக்கும்.

வீடுகளில் எப்பொழுதாவதுதான் செய்து சாப்பிடுவது உண்டு. கடலைக் கறி கேரளத்தில் மட்டுமே கிட்டும்.

1 hour ago, goshan_che said:

பூரி மாரி இருந்ததே?🤣. நான் ஊரில் அப்பம் மாரி தமிழ் நாட்டில் காணேல்ல.

ஆனால் கேரளத்தில் உண்டாக்கும்🤣

There you are.

அதற்கு பெயர் ஊத்தப்பம்..தோசையின் இன்னொரு குறுகிய, தடித்த வடிவம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

என்ன வன்னியர் தமிழ்நாட்டில் சம்பல் இல்லையா? ஒரு வேளை கேரளத்து பக்கம் இருக்குமோ? 😁

சம்பல் கிடையாது. :)

சாம்பல் மற்றும் சாம்பார் தான் உண்டு..! 🤭

சாம்பல் பல் துலக்க..பாத்திரங்கள் கழுவ..

சாம்பார் உண்டு மகிழ..

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ராசவன்னியன் said:

சம்பல் கிடையாது. :)

சாம்பல் மற்றும் சாம்பார் தான் உண்டு..! 🤭

சாம்பல் பல் துலக்க..பாத்திரங்கள் கழுவ..

சாம்பார் உண்டு மகிழ..

சம்பல் மலேயா, ஜாவாவில் உள்ளது.

இலங்கையில் கணிசமான மலாய் ஆதிக்கம் உண்டு. ஏற்கனவே ஜம்புக்காய் (Malay apple) பற்றி கதைத்தோம்.

அதேபோல் கச்சான், கடை (கெடே) போன்ற சொற்கள் மலாய் மொழியிலும் உண்டு.

இங்கே இருந்து அங்கே போனதா அல்லது அங்கே இருந்து இங்கே வந்ததா அல்லது வேறு எங்கேயும் இருந்து இரெண்டு பேரிடமும் வந்ததா தெரியவில்லை.

உலக உணவுச் சரித்திரம் விசித்திரமானதும் ஒரு நேர்கோட்டில் அமையாததும்.

சோழர்கள் ஶ்ரீ விஜயவை தோற்கடித்த பின் மலாய் மொழியை அப்போதைய தமிழ் எழுத்துரு கொண்டு எழுதியுள்ளார்கள் ஆகவே இங்கே இருந்து அங்கே போய் மீண்டும் இங்கே வந்திருகவும் கூடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எட்டையாபுர கவிஞருக்கு சிலை நிறுவப்பட்டுள்ள இடம், எங்கென்று ஊகிக்க முடிகிறதா..? 🤔

Untitled.jpg

  • கருத்துக்கள உறவுகள்

  எட்டைய புரத்தில் மகளிர் பல்தொழில் நுட்ப கல்லூரியில் 13-02-2000 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிலாமதி said:

  எட்டைய புரத்தில் மகளிர் பல்தொழில் நுட்ப கல்லூரியில் 13-02-2000 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

தவறான விடை, அம்மணி.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

எட்டையாபுர கவிஞருக்கு சிலை நிறுவப்பட்டுள்ள இடம், எங்கென்று ஊகிக்க முடிகிறதா..? 🤔

Untitled.jpg

பாரதி வழமையான கம்பீரத்தைத் தொலைத்து நிற்கின்ற படியால், யாழ்ப்பாணத் தமிழாராய்ச்சி மகா நாட்டின் போது நிறுவப்பட்ட சிலைகளில் ஒன்றாக இருக்கலாம்!

இல்லாதவிடத்து மட்டக்களப்பிலிருக்கலாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, புங்கையூரன் said:

பாரதி வழமையான கம்பீரத்தைத் தொலைத்து நிற்கின்ற படியால், யாழ்ப்பாணத் தமிழாராய்ச்சி மகா நாட்டின் போது நிறுவப்பட்ட சிலைகளில் ஒன்றாக இருக்கலாம்!

இல்லாதவிடத்து மட்டக்களப்பிலிருக்கலாம்!

இல்லை, தவறான பதில், புங்கை..!

சிலையின் உருவ ஒற்றுமை ஏறிக்குறைய இருப்பதால், இச்சிலை ஈழத்தில் தான் உள்ளது. ஆனால் எந்த ஊரில்..?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் ஆலயத்துக்கு பின் பக்க வீதியில் 

https://www.pathivu.com/2020/12/Barathi.html

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிலாமதி said:

நல்லூர் ஆலயத்துக்கு பின் பக்க வீதியில் 

https://www.pathivu.com/2020/12/Barathi.html

அரசடிச்சந்தி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிலாமதி said:

நல்லூர் ஆலயத்துக்கு பின் பக்க வீதியில் 

https://www.pathivu.com/2020/12/Barathi.html

அம்மணி சிலையின் வடிவமைப்பை உற்று நோக்குங்கள்..

நீங்கள் பதிந்த இணைப்பில் உள்ள சிலை, இரண்டு கைகளையும் கீழே வைத்துக்கொண்டு சில்வர் நிறத்தில் உள்ளது. நான் இணைத்த படத்தில் உள்ள சிலையின் உருவமைப்பும், நிறமும் வேறு.

24 minutes ago, நந்தன் said:

அரசடிச்சந்தி?

இல்லை, நந்தன் தவறான பதில்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2021 at 03:39, ராசவன்னியன் said:

அம்மணி சிலையின் வடிவமைப்பை உற்று நோக்குங்கள்..

நீங்கள் பதிந்த இணைப்பில் உள்ள சிலை, இரண்டு கைகளையும் கீழே வைத்துக்கொண்டு சில்வர் நிறத்தில் உள்ளது. நான் இணைத்த படத்தில் உள்ள சிலையின் உருவமைப்பும், நிறமும் வேறு.

இல்லை, நந்தன் தவறான பதில்.

சார் க்ளூ பிளீஸ்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

சார் க்ளூ பிளீஸ்?

ஊன்றுகோல்.. 🤭

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

ஊன்றுகோல்.. 🤭

எங்கோ செய்தி வாசித்தேன் ஊன்றுகோலுக்கு பதில் பாரதி கையில் புத்தகம் கொடுத்தது - அது கவனத்தை ஈர்த்தது.

யாழ் பொது நூலக வளாகம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

எங்கோ செய்தி வாசித்தேன் ஊன்றுகோலுக்கு பதில் பாரதி கையில் புத்தகம் கொடுத்தது - அது கவனத்தை ஈர்த்தது.

யாழ் பொது நூலக வளாகம்?

ஊன்றுகோலுக்கும், குழிக்கும் இடையே அப்பு..🤭

இதுக்கு மேல் "க்ளூ" கேட்டால் "பசை" தான் கொடுக்கணும்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முழுப் படமும் போட்டாச்சுது..!

இந்த சிலை 1982ம் ஆண்டு நிறுவப்பட்டு, யுத்த காலத்தில் அழிந்து மீண்டும் 14-04-2021 ல் 'மறவன்புலவு க.சச்சிதானதன்' அவர்களால் திறக்கப்பட்டது.

Untitled.jpg

சலிப்பை தவிர்க்க இதுவே கடைசி புதிர்..! 😜

இந்த திரி 3000 பார்வைகளை கடந்துள்ளது என்பதைக் கண்டு மகிழ்ச்சி.

கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ராசவன்னியன் said:

இந்த சிலை 1982ம் ஆண்டு நிறுவப்பட்டு, யுத்த காலத்தில் அழிந்து மீண்டும் 14-04-2021 ல் 'மறவன்புலவு க.சச்சிதானதன்' அவர்களால் திறக்கப்பட்டது.

எங்கையிருந்து உந்த படத்தை எடுத்தியளோ தெரியாது.
தேட வெளிக்கிட்ட இப்படியான படங்கள் தான் வருது. 😁

நீதிகோரி யாழ்ப்பாணத்தில் மாபெரும் எழுச்சிப்பேரணி முன்னெடுப்பு! |  யாழ்புதினம் | Yarlputhinam - Jaffna Breaking News 24x7

இருந்தாலும்.....

 நான் அன்று தொடக்கம்  கவனித்ததிலிருந்து உங்களின் ஈழத்தேடல் உண்மையிலேயே  பாராட்டப்பட வேண்டும். 👍🏽

தொப்புள்கொடி உறவு.👏🏽

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

...இருந்தாலும்.....

 நான் அன்று தொடக்கம்  கவனித்ததிலிருந்து உங்களின் ஈழத்தேடல் உண்மையிலேயே  பாராட்டப்பட வேண்டும். 👍🏽

தொப்புள்கொடி உறவு.👏🏽

நன்றி கு.சா. 🙏

சில வருடங்களுக்கு முன் உயர்மின்னழுத்த கருவிகள் பரிசோதனைக்காக ஒரு தொழிற்நுட்ப கலந்தாய்வு நடைபெற்றது. அதில் சில நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.அதில் ஒரு ஈழத்தமிழரும், இந்தியா, பாகிஸ்தான் மாநிலங்களை சார்ந்தவர்களும் தாங்கள் வேலை செய்துவரும் நிறுவனங்களின் சார்பாக கலந்து கொண்டிருந்தனர். தேநீர் இடைவேளையில் வராந்தாவில் நின்று நாங்கள் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தோம்.

பேசி முடிந்தவுடன் மறுபடியும் பரிசோதனை கூடத்துக்கு திரும்பும் முன், ஒரு இந்தியர் (இவர் முன்னரே எனக்கு பழக்கமானவர், குஜராத்தை சேர்ந்தவர்)என்னிடம் வந்து, "ஏன் சார், நாம் பேசிக்கொண்டிருக்கும்போது அந்த நண்பரிடமே அதிக அக்கறையெடுத்து பேசிக்கொண்டிருந்தீர்களே, அவர் சிறீலங்கன்தானே, நாம் இந்தியர்களில்லையா..? எங்களிடம் தானே அதிகம் பேசியிருக்க வேண்டும்..?" என உரிமையுடன் தட்டிக்கேட்டார்.

நான் சிரித்துக்கொண்டே "May be blood is thicker than water sir.." எனக் கூறி சமாளித்தேன்..சிரித்தேன்..

அதற்கு மேல் ஒரு கேள்வி கேட்டாரே பார்க்கலாம், அதற்கு நான் பதிலே சொல்லவில்லை..! ஏனெனில் தர்க்கநீதியாக சிலமுறை இப்படியான கேள்விகளை இந்தியர், பாகிஸ்தானியர்களிடம் சந்தித்துள்ளேன்.

கு.சா குறிப்பை படித்தவுடன், ஏனோ அந்த அனுபவத்தை இங்கே எழுதவேண்டுமென தோன்றியது..!

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

சார் க்ளூ பிளீஸ்?

விடையை சொல்லி திரியை முடிக்கிறேன்..!

இந்த சிலை கைதடி சந்தியருகேயுள்ளது. அதாவது கைதடி சந்தியிலிருந்து நாவற்குழி செல்லும் வழியில் நிறுவப்பட்டுள்ளது.

அதற்குதான் ஊன்றுகோல் (கைதடி) குழி (நாவற்குழி) என கீழேயுள்ளபடி பூடகமாக சொன்னேன்..👇👇

5 hours ago, ராசவன்னியன் said:

ஊன்றுகோலுக்கும், குழிக்கும் இடையே அப்பு..🤭

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

விடையை சொல்லி திரியை முடிக்கிறேன்..!

இந்த சிலை கைதடி சந்தியருகேயுள்ளது. அதாவது கைதடி சந்தியிலிருந்து நாவற்குழி செல்லும் வழியில் நிறுவப்பட்டுள்ளது.

அதற்குதான் ஊன்றுகோல் (கைதடி) குழி (நாவற்குழி) என கீழேயுள்ளபடி பூடகமாக சொன்னேன்..👇👇

உங்கள் கேள்வியை விட உங்கள் க்ளூ அற்புதம்👏🏾👏🏾👏🏾. வேற லெவல்👌.

தொடர் முடிஞ்சது கவலைதான் -ஆனால் சலிப்பு தட்ட கூடாது என்பதும் சரியே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.