Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்!

Featured Replies

அது எமது கருத்தல்ல.. வலைப்பூ ஒன்றி வாசித்த ஆக்கம் ஒன்றில் இருந்ததை சுட்டிக்காட்டினம். ஏலவே இங்கு பாரதி எதையோ எலும்மிச்சை அளவில் உருட்டி உண்டதை யாரோ கண்டது என்பது போல வந்த கதைக்கு இன்னொரு கதை அது..!

அவை கதைகள்.. மட்டுமே..! நிஜங்களின் பிரதிபலிப்பல்ல..! எமது நிலைப்பாட்டில் அவை எந்த மாற்றங்களையும் தராது என்பதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது மேலே..!

நீங்கள் ஏதோ நாங்கள் பாரதி பற்றிய கட்டுக்கதைகளை நம்பி திரிவம் என்று எதிர்பார்க்கிறீர்களா.. அது சான்றுகள் இல்லாதவரை சாத்தியமில்லை..!

பாரதியை சிறுமைப்படுத்தும் பணிகளில்.. அதுவும் ஒரு கதை.. எனபதால்..அதுவும் இணைக்கப்பட்டுள்ளது..!

Edited by வேலவன்

  • Replies 126
  • Views 36.2k
  • Created
  • Last Reply

தமிழ்தங்கை! கண்ணம்மா என்பது "சரஸ்வதி" என்பதை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?

"சரஸ்வதி" என் காதலி என்று சொன்னால் பிரம்மா கோபித்துக் கொள்ள மாட்டாரா? :lol::D:D

தமிழ்தங்கை! கண்ணம்மா என்பது "சரஸ்வதி" என்பதை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?

"சரஸ்வதி" என் காதலி என்று சொன்னால் பிரம்மா கோபித்துக் கொள்ள மாட்டாரா? :D:D:D

இதோ நீங்கள் தான் பிரம்மா, சரஸ்வதி என்று மதவாதம் ஆரம்பிக்கிறீர்கள். பிறகு எவராவது 28 வயது மணியம்மையை 70 வயது பெரியார் எப்படி சமாளித்தார் என்று ஆரம்பிக்க, தலைப்பை விட்டு விவாதம் எங்கோ சென்று விட!!! இது எல்லாம் தேவை தானா??? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்தங்கை! கண்ணம்மா என்பது "சரஸ்வதி" என்பதை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?

"சரஸ்வதி" என் காதலி என்று சொன்னால் பிரம்மா கோபித்துக் கொள்ள மாட்டாரா? :D:D:D

<<

உங்களுக்கெல்லாம் குறும்பு ரொம்ப்பத்தான் அதிகம்!! :lol: ஆகவே உங்க மொழியிலேயே சொல்றன் அண்ணா.

எண்ணும் எழுத்தும் " கண்' எனத்தகும்

அப்போ கண் என்றால் கல்வி!! கல்வித் தெய்வம் யாரு?!! நாம் எல்லாம் சின்ன வயசில் என்ன படிச்சிருக்கோம்? கல்வித்தெய்வம் கலைவாணி/ சரஸ்வதி/கலைமகள் என்றுதானே..

கண் = கல்வி

அம்மா-கல்வியின் அதிபதி..

ஆகவே கண்ணம்மா யாரு?!! இப்போ புரிஞ்சுருக்குமே அண்ணா?! :D

திரைப்படத்தின் பெயரை கடைசியில் சொல்லி முடிக்கிற பழைய படங்கள் மாதிரி சொன்னதுக்கும் கருத்துக்கும் ஓரளவு முடிச்சுப்போட்டாச்ச்சு :D :D :D

வெற்றிவேல்! "சரஸ்வதி" என்று தமிழ்தங்கை குறிப்பிட்டதால்தான் நான் பிரம்மா பற்றிக் குறிப்பிட்டேன். இதற்குள் பெரியார் வரவேண்டிய அவசியம் இல்லை.உண்மையில் இந்துமதத்தைப் பற்றி கருத்துச் சொன்னால் கூட அதற்குள் பெரியார் வரவேண்டிய தேவை இல்லை.

இந்துமத எதிர்பாளர்கள் அனைவரும் பெரியார் பற்றாளர்கள் அல்ல.

ஆகவே இந்துமதம் பற்றி பேசினால் பதிலுக்கு பெரியாரை இழுப்பவர்கள், தங்கள் மதத்தின் மீது உண்மையான நம்பிக்கை அற்றவர்களாகவோ, மதம் பற்றி அறியாதவர்களாகவோதான் இருப்பார்கள். இல்லையென்றால் தங்கள் மதம் பற்றிய விளக்கத்தை நேரடியாகவும் தெளிவாகவும் கொடுத்து ஆரோக்கியமான முறையில் விவாதிப்பார்கள்.

சரி! அது கிடக்கட்டும்.

தமிழ்தங்கை! நீங்கள் கண்ணம்மாவை பாரதி தன்னுடைய பாடல்களில் எப்படி பயன்படுத்தி இருக்கிறார் என்பதை ஒரு முறை படித்துப் பாருங்கள்!அதன்பிறகு அவர் சரஸ்வதிதானா என்று சிந்தித்துப் பாருங்கள்!

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே இந்துமதம் பற்றி பேசினால் பதிலுக்கு பெரியாரை இழுப்பவர்கள், தங்கள் மதத்தின் மீது உண்மையான நம்பிக்கை அற்றவர்களாகவோ, மதம் பற்றி அறியாதவர்களாகவோதான் இருப்பார்கள்

இருக்கலாம். ஆனால் இந்து மதம் மீது தங்களின் வெறுப்புணர்வைக் கக்குபவர்களுக்கு அது பற்றிய ஏதாவது அறிவிந்தால் ஆதரிப்பவர்கள் குறித்தக் கதைக்கலாம். வெறுமனே புராணக்கதைகளோடோ, யாராவது ஒருத்தர் சொல்வதைக் கேட்டு வந்து கருத்திடுபவர்களின் கருத்துக்க எவ்வகையில் பதிலளிக்க முடியும்

இங்கே வர்ணாச்சிரமக் கொள்கையைப் பற்றிக் கதைப்பவர்களுக்கு அது பற்றி முழுமையான அறிவு வேண்டாம்... அடிப்படையில் என்ன சொல்கின்றது என்று தெரிந்த ிப்னனர் கதையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பின் ஆரம்ப வடிவம்.. அதன் போக்கு.. என்பன பாரதியை சிறுமைப்படுத்திக் காட்டிட வேண்டும் என்ற நோக்கில் தான் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சி.. இப்போ கஞ்சா தாண்டி.. பிராமணி.. மதவாதி என்று.. தொடரப் போகிறது...!

பாரதி.. பராசக்தியின் பக்தன்..! அவன் கடவுளை நம்பியவன். கடவுளின் பெயரால் நடக்கும் மூடநம்பிக்கைகளை வெறுத்தவன்..சமூகப்பிரிவினைகள வெறுத்தவன்.. தாய் மொழியை.. தனது தமிழ் கலாசாரத்தை கண்ணெனக் காத்தவன்.. ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாட்டுக்கு அப்பால் சமூகம் அதன் உயர்வுக்கு உழைக்க வேண்டும் என்றவன்..பெண்கள் வீட்டுக்க அடைஞ்சு கிடக்காம வளர்ந்து வரும் உலகில் தங்கள் பங்களிப்பை ஆற்ற முன்வர வேண்டும் என்ற அழைப்பை விடுத்தவன்.. பெண்கள் ஆண்கள் சுதந்திர மனிதர்களாக வாழ வேண்டும் என்று அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்தவன்.. பாரதி.. ஒரு தேசியக் கவி மட்டுமன்றி.. அவன் தமிழ் புதுக்கவிதை வடிவத்தின் முன்னோடி..

பாரதி.. கண்ணன் பாட்டுப் பாடியவன்.. கண்ணம்மா பாட்டுப் பாடியவன்.. பாப்பாப் பாட்டு பாடியவன்..பராசக்திப் பாடல் பாடியவன்.. புரட்சி முழக்கமிட்ட வீரத்தமிழன்.. பாரதி..!

கண்ணம்மா என்பது அவனின் கற்பனைப் பாத்திரம். பாரதிக்கு காதலி கற்பனையில் இருந்திருப்பாள்.. அவன் கவிஞன் ஆச்சே..! நமக்கும் தான் எத்தனை காதலிகள் கற்பனையில்.. ஆனால் நிஜத்தில் உள்ள பெண்கள் போன்றவர்கள் அல்ல.. கற்பனைக் காதலிகள்.. அவர்கள் எம் மனது வடிவமைக்கும் வடிவத்தை பிரதிபலிப்பார்கள்..! :lol:

Edited by nedukkalapoovan

வெற்றிவேல்! "சரஸ்வதி" என்று தமிழ்தங்கை குறிப்பிட்டதால்தான் நான் பிரம்மா பற்றிக் குறிப்பிட்டேன். இதற்குள் பெரியார் வரவேண்டிய அவசியம் இல்லை.உண்மையில் இந்துமதத்தைப் பற்றி கருத்துச் சொன்னால் கூட அதற்குள் பெரியார் வரவேண்டிய தேவை இல்லை.

இந்துமத எதிர்பாளர்கள் அனைவரும் பெரியார் பற்றாளர்கள் அல்ல.

தமிழ் தங்கை கண்ணம்மாவை சரஸ்வதி என்று சொன்னதும் உடனே பிரம்மாவும் வந்து விட வேண்டுமா? இந்து மத எதிர்ப்பாளர்கள் எல்லாம் பெரியார்வாதிகள் இல்லை என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால் இந்த கருத்தை எழுதிய உங்கள் கொள்கைகள் எங்களுக்கு தெரியாததா என்ன? அதனால் தான் நாம் பெரியாரை மேற்கோள் காட்ட வேண்டி வந்தது. அதிலும் நாம் சொன்னது அனுமானத்தின் அடிப்படையில் வந்த ஊகம் அல்ல. கடந்து போன காலங்களில் நடந்து போன சம்பவங்கள் தான்.

பாரதி.. பராசக்தியின் பக்தன்..! அவன் கடவுளை நம்பியவன். கடவுளின் பெயரால் நடக்கும் மூடநம்பிக்கைகளை வெறுத்தவன்..சமூகப்பிரிவினைகள

?? வெறுத்தவன்.. தாய் மொழியை.. தனது தமிழ் கலாசாரத்தை கண்ணெனக் காத்தவன்.. ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாட்டுக்கு அப்பால் சமூகம் அதன் உயர்வுக்கு உழைக்க வேண்டும் என்றவன்..பெண்கள் வீட்டுக்க அடைஞ்சு கிடைக்காம வளர்ந்து வரும் உலகில் தங்கள் பங்களிப்பை ஆற்ற முன்வர வேண்டும் என்ற அழைப்பை விடுத்தவன்.. பெண்கள் ஆண்கள் சுதந்திர மனிதர்களாக வாழ வேண்டும் என்று அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்தவன்.. பாரதி.. ஒரு தேசியக் கவி மட்டுமன்றி.. அவன் தமிழ் புதுக்கவிதை வடிவத்தின் முன்னோடி..

பாரதி.. கண்ணன் பாட்டுப் பாடியவன்.. கண்ணம்மா பாட்டுப் பாடியவன்.. பாப்பாப் பாட்டு பாடியவன்..பராசக்திப் பாடல் பாடியவன்.. புரட்சி முழக்கமிட்ட வீரத்தமிழன்.. பாரதி..!

கண்ணம்மா என்பது அவனின் கற்பனைப் பாத்திரம். பாரதிக்கு காதலி கற்பனையில் இருந்திருப்பாள்.. அவன் கவிஞன் ஆச்சே..! நமக்கும் தான் எத்தனை காதலிகள் கற்பனையில்.. ஆனால் நிஜத்தில் உள்ள பெண்கள் போன்றவர்கள் அல்ல.. கற்பனைக் காதலிகள்.. அவர்கள் எம் மனது வடிவமைக்கும் வடிவத்தை பிரதிபலிப்பார்கள்..! :lol:

பாரதி பற்றிய அழகான விளக்கம். வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தங்கை கண்ணம்மாவை சரஸ்வதி என்று சொன்னதும் உடனே பிரம்மாவும் வந்து விட வேண்டுமா?

ஏன் அண்ணாமாரே, பிரச்சனையே இல்லாத ஒரு விடயத்தை பிரச்சனையாக்குகின்றீர்களோ தெரியவில்லை :lol:

சபேசன் அண்ணா வேடிக்கையாக/நக்கலாகச்சொன்னார். கடவுள் கோவித்துக்கொள்ள மாட்டார். அப்படியே கோவித்துக்கொண்டால் அவர் கடவுளும் அல்ல :D!

கண்ணம்மா என்பது கற்பனைப்பாத்திரமேதான். ஆனால் பராசக்தியினை நினைந்தே (சரஸ்வதி, பராசக்தி எல்லாம் ஒண்ணுதானுங்களே). கண்ணம்மா என்று பாடினார். கண்ணம்மா என்பது சரஸ்வதியைக்குறிக்கும் என்பது நான் அறிந்த ஒன்று ஏன் பாரதி என்றாலே கலைவாணி என்றுதான் பொருள் படும்.

கீழே உள்ள முகவரியில் சென்று பார்க்கவும்.

http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

பாரதி¹ (p. 2620) [ pārati¹ ] n pārati . < bhāratī. 1. Sarasvatī; சரசுவதி. (பிங்.) (சிவப். பிர. வெங்கையு. 121.) 2. Goddess Bhairavī; பைரவி. பாரதி யாடிய பாரதி யரங்கத்து (சிலப். 6, 39). 3. Learned person; பண்டிதன். 4. Word; சொல். (யாழ். அக.)

  • கருத்துக்கள உறவுகள்

பாரதியைப் பற்றியும் பாரதியின் கண்ணம்மாவைப் பற்றியும் இங்குள்ள கருத்துக்களைக் பார்த்தால் யானை பார்த்த குருடர்களின் கதைதான் ஞாபகத்தில் வருகின்றது! :):lol:

என்ன பாரதிக்கு சிறு பிராயத்தில் காதலியா??? இது என்னங்க அய்யா புதுக்கதை???

அவருக்கு தான் மிகச்சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டதே அதற்கு முன்பே காதலி இருந்தாள் என்பதெல்லாம் ............... என்னால் நம்பமுடியவில்லை..

அப்ப இதை கொஞ்சம் பாருங்கள்...

கிட்டத்தட்ட பத்து நிமிடக்கள் ஓடும் படம்... நீங்கள் 1;50 நிடத்தில் இருந்து 5நிமிட வரை மட்டுமாவது இதை பொறுமையாக பார்த்தீர்களானால் போதும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரதியைப் பற்றியும் பாரதியின் கண்ணம்மாவைப் பற்றியும் இங்குள்ள கருத்துக்களைக் பார்த்தால் யானை பார்த்த குருடர்களின் கதைதான் ஞாபகத்தில் வருகின்றது! :):lol:

- மிகச் சரியாகக் குறிப்பிட்டடீர்கள். இந்தக் கதையில் நடமாடிய குருடர்களில் ஒருவர் யானையின் சாணத்தைதத் தொட்டு விபரிப்பதாக இருந்தால் எப்படியிருகக்குமோ அப்படி இருக்கு இங்கு நடைபெறும் விவாதம்.

- :lol:

  • கருத்துக்கள உறவுகள்

- மிகச் சரியாகக் குறிப்பிட்டடீர்கள். இந்தக் கதையில் நடமாடிய குருடர்களில் ஒருவர் யானையின் சாணத்தைதத் தொட்டு விபரிப்பதாக இருந்தால் எப்படியிருகக்குமோ அப்படி இருக்கு இங்கு நடைபெறும் விவாதம்.

- :)

ஆமாம். கடவுளைப் பற்றிச் சிலர் செய்கின்ற விமர்சனத்தைப் பார்க்கின்றபோதும் இவ்வாறன உணர்வு தான் எனக்கு மேலிடுகின்றது.

அட பாவம் பாரதியார் உதை எல்லாம் கேட்க கூடாது என்று தான் அவர் தலைபாகையால இரண்டு பக்க காதையும் மூடி கொண்டு இருகிறார் போல..............

அப்ப வரட்டா.............பாரதியார்..........பாரத

கண்ணுள்ள யாராவது யானையை யானைதான் என்றும், அதற்கான காரணங்களையும் சரியான முறையில் விளக்கிக் கூறினால் நன்றாக இருக்கும்.

என்னுடைய பார்வையில் கண்ணம்மா பக்கத்து வீட்டுப் சிறுமி அல்ல. சரஸ்வதியாக இருப்பதற்கு சந்தர்ப்பமே இல்லை.

கண்ணன் என்கின்ற வாதத்தை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதிலும் சில கேள்விகள் உண்டு.

ஏற்கனவே கண்ணன் என் காதலன் என்று பாரதி பாடி விட்டதால், கண்ணம்மா என்று அவர் வேறு யாரையோதான் குறிப்பிடுகிறார்.

அந்தக் கண்ணம்மா அவர் சிறுபிராயத்தில் சந்தித்த பெண்ணாகவோ, அல்லது குடும்பத்தில் ஏற்பட்ட அவமதிப்புகளை தொடர்ந்து அவர் நினைத்து ஏங்கிய ஒரு கனவுக் காதலியின் கற்பனை வடிவமாகவோ இருக்கும்.

யானைக்கு 6 கால் என்டு சொல்லி மேலதீக விளக்கம் சொல்லத்தான் விருப்பம், தலைவருடைய பாணியில் சொன்னால் மட்டும்தான் இங்கு பலருக்கு விளங்கும்.

கண்ணுள்ள யாராவது யானையை யானைதான் என்றும், அதற்கான காரணங்களையும் சரியான முறையில் விளக்கிக் கூறினால் நன்றாக இருக்கும்.

அப்படி எண்டால் அவர்களின் அறிவுக்கண்ணால் சரியாக பார்க்க கண்ணாடி போட வேண்டி இருக்கும் பறவாய் இல்லையா எண்று கேட்க்க மறக்க வேண்டாம் ...??? B) முதலில் எதை எழுதுவதாக இருந்தாலும் அதை நன்கு அறிந்த பின்னர் எழுதுங்கள்... அதுதான் நல்லது...! கண்ணம்மா என்பது பாரதியின் பிள்ளை பிராயத்து காதலி....!

நான் சொல்வதை மறுப்பவராக நீங்கள் இருந்தால் பாரதியே எழுதிய "சுயசரிதை" எனும் கவியை நீங்கள் படிக்க நேரிடலாம்...! பாரதி வணங்கியது பராசக்தியை அதாவது "காளி" என்பது. அது சரஸ்வதியை குறிப்பது இல்லை...! ஆகவே பரா சக்தி அவரின் காதலி இல்லை...

ஆதிரை திருநாள் ஒண்றில் சங்கரன் கோயில் மண்டபத்தில் அவள் கையில் வைத்திருந்த மையினால் எனக்கு திலகமிட எண்றால்.. அவள் திலகமிட்டதும் நான் மூர்ச்சை உற்றேன் என்கிறார் பாரதி... அதன் பின் அவளை அவர்ஆயுளில் பார்க்கவே இல்லை...!

"ஆதி ரைத்திரு நாளொன்றிற் சங்கரன்

ஆலயத்தொரு மண்டபந் தன்னில்யாள்

சோதி மானொடு தன்னந் தனியனாய்ச்

சொற்க ளாடி யிருப்ப, ம்ற்றாங்கவள்

பாதி பேசி மறைந்துபின் தோன்றித்தன்

பங்க யக்கையில் மைகொணர்ந்தே,'ஒரு

சேதி! நெற்றியில் பொட்டுவைப் பேன்' என்றாள்

திலத மிட்டனள்;செய்கை யழிந்தனன்"

பிள்ளைக் காதல் எனும் தலைப்பில் பாரதியே தனது காதலை சொல்லுகிறார்... அந்த காதலியைத்தான் சங்கரன் கோயில் "தீர்த்த கரையில் தெற்கு மூலையில் செண்பக தோட்டத்தில் காத்திருந்தால் வருவேன்"......." பாங்கியோடு எண்று சொன்னாய்" "வார்த்தை தவறி விட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி" எண்று தன் சோகத்தை சொன்னார்....!

""பிள்ளைக்காதல்"" எண்று பாரதியே சுயசரிதை கவியில் சொல்கிறார் பாருங்கள்...!

""அன்ன போழ்தினி லுற்ற கனவினை

அந்த மிழ்ச் சொலில் எவ்வண்ணம் சொல்லுகேன்?

சொன்ன தீங்கன வங்குத் துயிலிடைத்

தோய்ந்த தன்று,நனவிடைத் தோய்ந்ததால்;

மென்ன டைக் கனி யின்சொற் கருவிழி:

மேனி யெங்கும் நறுமலர் வீசிய

கன்னி யென்றுறு தெய்வத மொன்றனைக்

கண்டு காதல் வெறியிற் கலந்தனன்.

'ஒன்ப தாயபி ராயத்த ளென்விழிக்

கோது காதைச் சகுந்தலை யொத்தனள்'

என்ப தார்க்கும் வியப்பினை நல்குமால்

என்செய் கேன்? பழியென் மிசை யுண்டுகொல்?

அன்பெ நும்பெரு வெள்ளம் இழுக்குமேல்

அதனை யாவர் பிழைத்திட வல்லரே?

முன்பு மாமுனி வோர்தமை வென்றவில்

முன்ன ரேழைக் குழந்தையென் செய்வனே"

Edited by தயா

சிறுபிராயத்து காதலி என்பது சரியோ பிழையோ, தயாவின் விளக்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

இப்படி சரியான முறையில் விளக்குவதுதான் ஒரு விவாதத்திற்கு அழகு.

  • கருத்துக்கள உறவுகள்

ம். ஆதாரங்களை வைத்து வாதாடிய தலயின் கருத்து மிக அழகு. தொடர்ந்து அவ்வகையில் விவாதங்களைச் செய்ய வாழ்த்துகின்றேன்

சிறுபிராயத்து காதலி என்பது சரியோ பிழையோ, தயாவின் விளக்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

இப்படி சரியான முறையில் விளக்குவதுதான் ஒரு விவாதத்திற்கு அழகு.

ம். ஆதாரங்களை வைத்து வாதாடிய தலயின் கருத்து மிக அழகு. தொடர்ந்து அவ்வகையில் விவாதங்களைச் செய்ய வாழ்த்துகின்றேன்

நண்றி...!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி சபேசன் அண்ணா அவர்கள் உண்மையான நாரதரின் மறுபக்கமோ என்னவோ?ரொம்ப குழப்பிறீங்களே :)

குமாரசாமி! நீங்கள் எழுதியது எனக்கு புரியவில்லை. சற்று விளக்குவீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி! நீங்கள் எழுதியது எனக்கு புரியவில்லை. சற்று விளக்குவீர்களா?

உங்களுக்கு எதையென்று சொல்லவது?மற்றவர்களின் சகல கருத்துக்களிலிலுமே நிஜங்களை பிளவுபடுத்தி அதில் சரிபிழை பிடிப்பவராயிற்ரே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.