Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலைக் கடன்களை கழிப்பது பயணக் கட்டுப்பாட்டில் தவறா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்.றொசாந்த் 

காட்டுக்குள் ஓர் ஒதுக்குப்புறமாக சென்று, காலை கடனை முடித்து விட்டு, வீடுக்குத் திரும்பிக்கொண்டிருந்தவர் மீது இராணுவத்தினர், தாக்குதல் நடத்தியுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. அவர் மீது கேபிளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பன்புலவு பகுதியை சேர்ந்த ஒருவர் மீதே நேற்றைய (7) தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில், தாக்குதலுக்கு உள்ளானவர் கருத்துரைக்கையில்,

உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புன்னாலைக்கட்டுவன், வடக்கு கப்பன் புலவு பகுதியில் வசிக்கும் சுமார் 10 குடும்பங்கள் மலசல கூட வசதிகள் அற்ற நிலையில் வசித்து வருகின்றோம்.

“இது குறித்து பலதடவைகள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். பல நன்கொடையாளர்கள் , அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றிடமும் மலசல கூடங்களை கட்டி தருமாறு கோரியுள்ளோம். ஆனால், இதுவரை எமக்கு எவரும் கட்டி தர நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.

இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் சுமார் 10 குடும்பங்களும் வீடுகளுக்கு சற்று தொலைவில் உள்ள பனங்காணிக்கு சென்றே காலை கடன்களை முடிக்கிறோம் என்று தெரிவித்த அவர், இதனால்  பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றோம். இரவு நேரங்களில் இயற்கை உபாதைகளுக்கு முகம் கொடுத்தால் அந்த காணிக்கு செல்வதற்கு அச்சம் காரணமாக பலரும் சிரமங்களை எதிர்கொண்டு உள்ளனர் என்றார்.

இதேவேளை, காலைக்கடன்களை அதிகாலையில் முடித்து விட்டு திரும்ப வேண்டிய நிலையில் உள்ளோம். சற்று வெளிச்சம் வந்தாலும் வீதிகளில் மக்கள் நடமாட்டம் காணப்படும். அதனால் காலை கடனை முடிக்க முடியாத நிலைக்கு உள்ளாவோம் என்றார்.

வீடுகளுக்கு மலசல கூடங்கள் இல்லாதமையால் , பல சிரமங்களுடனேயே வாழ்ந்து வருகின்றோம். 

இந்த நிலையில் நேற்றைய தினம் காலை கடனை முடித்து விட்டு வீடு திரும்பும் போது , வீட்டுக்கு அருகில் இராணுவத்தினர் என்னை வழிமறித்து பயணத்தடை அமுலில் உள்ள நேரம் எங்கே சென்று வருகின்றாய் என விசாரித்தனர். 

அதன் போது நான் ,காலைக் கடனை முடித்து விட்டு வருகிறேன் என அவர்களுக்கு விளக்கம் சொல்ல முற்பட்ட போது எனக்கு பின்னால் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கேபிள் கம்பியால், தாக்கி "ஓடு, ஓடு " என விரட்டினார் என தெரிவித்தார்.

அத்துடன், பயணக்கட்டுப்பாடுகள் அமுல் உள்ளன. ஆனால், அக்காலப்பகுதியில் காலைக்கடனை கழிப்பது தவறா? எனவும் அவர், எங்களிடம் வினவினார்.

Tamilmirror Online || காலைக் கடன்களை கழிப்பது பயணக் கட்டுப்பாட்டில் தவறா?

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை இன்றும்

பனங்காணிக்கு சென்று காலை கடன்களை முடிக்கும் அளவுக்கு  வைத்திருப்பவர்கள் யார்???

  • கருத்துக்கள உறவுகள்

பயனக் கட்டுப்பாடு தான்.ஊரடஙகு இல்லை.மக்கள் ஓரளவு வீதிகளில் நடமாடுகிறார்கள்.

ஊரில் ஒரு சாதாரண மலசலக் கூடத்தை கட்ட எவ்வளவு செலவாகும்?

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிழலி said:

ஊரில் ஒரு சாதாரண மலசலக் கூடத்தை கட்ட எவ்வளவு செலவாகும்?

சரியாக நினைவில்லை நிழலி 2010 இல் இரெண்டு பிற் அடிக்க மட்டும் எனக்கு 80 ஆயிரம் செலவழிந்ததாக நியாபகம்.  

Just now, goshan_che said:

சரியாக நினைவில்லை நிழலி 2010 இல் இரெண்டு பிற் அடிக்க மட்டும் எனக்கு 80 ஆயிரம் செலவழிந்ததாக நியாபகம்.  

அப்படி என்றால் 2.5 இலட்சத்துக்கு ஒரு சாதாரண மலசலக் கூடத்தை கட்டி முடிக்கலாம் என நினைக்கின்றேன். 10 குடும்பங்களுக்கு 25 இலட்சம் போதும். 

நான் நினைக்கின்றேன் இக் குடும்பங்கள் விளிம்பு நிலையில் வாழும் அல்லது சாதீய அடுக்குகளில் ஏறெடுத்தும் பார்க்க தேவையற்ற பிரிவில் இருப்பதனால் தான் இந்த 25 இலட்சத்தை கூட ஒதுக்க மனம் இல்லாமல் உள்ளூர் அமைப்புகளும் நிறுவனங்களும் உள்ளன என.

4 hours ago, விசுகு said:

இவர்களை இன்றும்

பனங்காணிக்கு சென்று காலை கடன்களை முடிக்கும் அளவுக்கு  வைத்திருப்பவர்கள் யார்???

பதில் கூறுவது சரியா தெரியவில்லை ஆனால் நீங்கள் என்ற படியால் தெரிந்த விஷயம் அதனால் எழுதுகிறேன், சுடலை மற்றும் கிணறு (10குடும்பத்துக்கு 1கிணறு) திருத்தும் பணிகள் ஆரம்பித்தோம். கட்டிய சுவர் உடைக்கப்பட்டது, கிணற்றில் ஓயில்ஊத்தப்பட்டது விசாரித்தால் யாருக்கு கட்ட தொடங்கினோம்மோ அவர்கள் தான் அதை செய்தார்கள் , இப்போது அதைப்பற்றி கதைப்பதுஇல்லை

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

அப்படி என்றால் 2.5 இலட்சத்துக்கு ஒரு சாதாரண மலசலக் கூடத்தை கட்டி முடிக்கலாம் என நினைக்கின்றேன். 10 குடும்பங்களுக்கு 25 இலட்சம் போதும். 

நான் நினைக்கின்றேன் இக் குடும்பங்கள் விளிம்பு நிலையில் வாழும் அல்லது சாதீய அடுக்குகளில் ஏறெடுத்தும் பார்க்க தேவையற்ற பிரிவில் இருப்பதனால் தான் இந்த 25 இலட்சத்தை கூட ஒதுக்க மனம் இல்லாமல் உள்ளூர் அமைப்புகளும் நிறுவனங்களும் உள்ளன என.

நீங்கள் சொல்லும் கணக்கு சரியாகத்தான் படுகிறது. 

@விசுகு@appan அண்மையில் கட்டுமானப்பணி செய்திருப்பதால் சரியான தரவை சொல்ல கூடும்.

நீங்கள் சொல்லும் காரணம் சரியாகவே படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிழலி said:

ஊரில் ஒரு சாதாரண மலசலக் கூடத்தை கட்ட எவ்வளவு செலவாகும்?

60-70 ஆயிரம் முடியுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையான செய்தியாக இருக்கின்றது. இவ்வளவு ஏழ்மையில் இந்த மக்கள் உள்ளார்களா? அல்லது 
வேறேதும் காரணமா?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, appan said:

பதில் கூறுவது சரியா தெரியவில்லை ஆனால் நீங்கள் என்ற படியால் தெரிந்த விஷயம் அதனால் எழுதுகிறேன், சுடலை மற்றும் கிணறு (10குடும்பத்துக்கு 1கிணறு) திருத்தும் பணிகள் ஆரம்பித்தோம். கட்டிய சுவர் உடைக்கப்பட்டது, கிணற்றில் ஓயில்ஊத்தப்பட்டது விசாரித்தால் யாருக்கு கட்ட தொடங்கினோம்மோ அவர்கள் தான் அதை செய்தார்கள் , இப்போது அதைப்பற்றி கதைப்பதுஇல்லை

நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம்.. 

இரு வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன், ஏழாலை, புன்னாலைகட்டுவன் பகுதிகளில் உள்ள மிக மிக பின்தங்கிய பகுதிகளைப்பற்றி வந்த முகநூல் பதிவை எங்களது பல்கலை கழக பழைய மாணவர் viber chatல் போட்டு “ இவ்வளவு பின்தங்கிய பகுதிகளாக .. கசிப்பு, இளவயது திருமணம், பாடசாலைக்கு போவதில்லை, சுகாதாரமின்மை etc என்ன நடக்கிறது?” என ஒருவர் கேட்க..  

அந்தப்பகுதிகளில் சமூக நல உத்தியோகத்தர்களாகவும், field officers , பிரதேச சபைகளில் வேலை செய்பவர்கள் கூறியது “ உங்களுக்கென்ன தெரியும் நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் இவர்களின் நடவடிக்கைகளை மாற்ற.. நீங்கள் என்னடாவென்றால் ஒன்றுமே செய்யவில்லை என கூறுகிறீர்கள் என கோபப்பட” chat groupல் கொஞ்ச நாள் ஒரே கருத்து மோதல்கள்தான்.. 

வேறு சில உதாரணங்களையும் கூறமுடியும்.. ஆனால் எங்களது சமூகத்தில் உள்ள சில பழக்கவழக்கங்களை, அதில் இருக்கும் சுகாதாரமற்ற தன்மையையும் கூறினால் இலகுவில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அப்படி எல்லாம் இல்லை என்று தான் நான் முன்னமே கேள்விபட்டேன்.
இப்போ மிகவும் கவலையாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

19 hours ago, goshan_che said:

நீங்கள் சொல்லும் கணக்கு சரியாகத்தான் படுகிறது. 

@விசுகு@appan அண்மையில் கட்டுமானப்பணி செய்திருப்பதால் சரியான தரவை சொல்ல கூடும்.

நீங்கள் சொல்லும் காரணம் சரியாகவே படுகிறது. 

நாங்கள் அண்மையில் கோழிக்கூடு தான் கட்டினோம். 

சில விடயங்கள் பொருந்தலாம்.

Edited by விசுகு

5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் அப்படி எல்லாம் இல்லை என்று தான் நான் முன்னமே கேள்விபட்டேன்.
இப்போ மிகவும் கவலையாக இருக்கின்றது.

நீங்கள் ஏற்கிறீர்களா இல்லையா தெரியாது ஆனால் முன்பு எழுதப்பாடாத சட்டம் ஒழுங்கு முறையில் இருந்தது. அதை நினைத்து தான் நாங்கள் ஒழுங்கு செய்தோம் ஆனால் நடந்தது வேறு. இப்ப கட்சியின் தலையீடு உள்ளது

Edited by appan

  • கருத்துக்கள உறவுகள்

காணி சொந்தமில்லாத காரணத்தினாலேயே மலசலகூட வசதிகள் செய்து கொடுக்க முடியவில்லை!

காணி சொந்தமில்லாத காரணத்தினாலேயே மலசலகூட வசதிகள் செய்து கொடுக்க முடியவில்லை!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவான் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு மலசலகூடம் கட்டிக்கொடுக்காதமைக்கு காரணம்,  அவர்கள் வசிக்கும் காணி அவர்களுக்கு சொந்தமில்லை என்பதால் தான் என உடுவில் பிரதேச செயலர் எஸ்.முகுந்தன் விளக்கமளித்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவான் கப்பன்புலவு பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டில் மலசல கூட வசதிகள் இல்லாத காரணத்தால் வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள பனங்காணிக்கு சென்று காலை கடனை முடித்து விட்டு திரும்புகையில் இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

அதேவேளை அங்கு வசிக்கும் குடும்பங்கள் மலசல கூட வசதிகள் அற்ற நிலையில் பெரும் சிரமங்களுடன் வசித்து வருவதாகவும், மலசல கூடங்களை கட்டி தருமாறு அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தன்னார்வ கொடையாளர்கள் என பலரிடம் கேட்டும் மலசல கூடங்கள் கட்டிக் கொடுக்கப்படவில்லை எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் குறித்த செய்தி தொடர்பில் உடுவில் பிரதேச செயலாளர் எஸ்.முகுந்தன் தெரிவிக்கையில்,

கப்பன்புலவு பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவர்களுக்கு உரித்துடையதல்லாத காணிகளில் அரைநிரந்தர அல்லது தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

அரச சுற்று நிரூபங்களின் பிரகாரம் காணி உரித்துடையவர் அல்லாதோருக்கு அல்லது காணி உரிமையை உறுதிப்படுத்தாதவர்களுக்கு கட்டடத்திற்கான உதவிகளை செய்ய முடியாது. அதனாலையே அவர்களுக்கான மலசல கூடங்களை காட்டிக்கொடுக்க முடியவில்லை.

காணியின் உரிமையாளர் அங்கு வசிக்கும் மக்களுக்கு காணிகளை பகிர்ந்து அளிப்பதன் ஊடாகவோ அல்லது அங்கு வசிப்போர் தமது காணி க்கானஉரித்தை உறுதிப்படுத்துவார்கள் ஆயின் அவர்களுக்கு மலசல கூட வசதிகளை செய்து கொடுப்பதற்கு நாம் தயாராகவே உள்ளோம் என தெரிவித்தார்.

https://athavannews.com/2021/1221482

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, appan said:

நீங்கள் ஏற்கிறீர்களா இல்லையா தெரியாது ஆனால் முன்பு எழுதப்பாடாத சட்டம் ஒழுங்கு முறையில் இருந்தது. அதை நினைத்து தான் நாங்கள் ஒழுங்கு செய்தோம் ஆனால் நடந்தது வேறு. இப்ப கட்சியின் தலையீடு உள்ளது

கவலையுடன் ஏற்று கொள்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.