Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரெஞ்சு மண்ணில் ஆழக் கால் பதிக்கும் தமிழீழ அரசியல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

ஒரு தொலுக்கன். தமிழ்நாட்டுகு.  இடம்பெயர்தால். வத்தேறியா?.  இல்லையோ?. எனக்கு. இது. புரியவில்லை.  தெரிந்தவர்கள்.  விளக்கம் தரவும்

🤣"செத்தாண்டா சேகரு!" இன்னைக்கு!

  • Replies 109
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

லிபராசன் ஒபேரேசன் காலத்தில் இருந்து மக்கள் இராணுவம் வரும் திசைக்கு 
எதிராகத்தான் ஓடிக்கொண்டு இருந்தார்கள் (நாங்களும் ஓடினோம்)
இது மண்ணுக்கு கீழே வாழும் மண் புழுக்களுக்கு தெரியாமல் இருந்தால் வியப்பில்லை 

கோழியின் செட்டைக்குள் குஞ்சுகள் ஒதுங்கும் 
பாயும் கழுகுக்கு பாசமா புரியும்? 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kandiah57 said:

ஒரு தொலுக்கன். தமிழ்நாட்டுகு.  இடம்பெயர்தால். வத்தேறியா?.  இல்லையோ?. எனக்கு. இது. புரியவில்லை.  தெரிந்தவர்கள்.  விளக்கம் தரவும்

😁

கந்தையா அண்ணா உங்களுக்கு யாரை தமிழ்நாட்டில் பிடிக்கவில்லையோ அவரை வத்தேறி என்று சொல்லிவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

உங்கள் பார்வையில் இருந்து நான் வேறுபடுகிறேன்.

என் பார்வையில்:

1. மேற்கு நாடுகள் நாட்டுக்கு உள்ளும், வெளிநாட்டு அலுவல்களிலும் கைக்கொள்ளும் போக்கு 180 பாகை நேரெதிரானது.

2. வெளிநாட்டு கொள்கையில், நடைமுறையில் நீதி, நியாயம், கருத்துரிமை, ஜனநாயகம், சட்டத்தின் ஆளுமை, மனித உரிமை, பல்லினதன்மை எதுவும் பொருட்டல்ல. அங்கே நாட்டின் (இனத்தின் அல்ல) நலன் மட்டுமே ஒரே நோக்கம்.

3. ஆனால் உள்நாட்டில் அப்படி அல்ல. இங்கே கருத்து சுதந்திரம், ஜனநாயகம், பல்லினதுவம், சட்டத்தின் ஆளுமை எல்லாம் ஒப்பீட்டளவில் நன்றாகவே உள்ளது.

ஆகவே இரெண்டையும் போட்டு குழப்பிகொள்ள கூடாது.

வெளிநாட்டு விவகாரங்களில் ஒரு போதும் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.

ஆனால் உள்நாட்டு விவகாரங்களில் நாம் நிச்சயம் ஒரு ஒப்பீட்டளவில் மேம்பட்ட progressive நிலையிலேயே இருக்கிறோம்.  

இதில் நான் எங்கும் வேறுபடவில்லை .... 
இப்படித்தான் உள்ளதை உள்ளபடியேதான் பார்க்கிறேன் 

உள் என்பது உள்ளே 
வெளி என்பது வெளியே 

அந்த தெளிவு எல்லோருக்கும் நன்றாகவே உண்டு 
விளங்காத வில்லங்கங்கள்தான் இந்த இடது/வலது என்று தொங்குகிறார்கள். 

இங்கு கருத்து எழுதும் சிலர் ட்ராம் ஒரு வலது சாரி என்ற தொனிப்பில்தான் எழுதுகிறார்கள் 
அதை வாசித்தல் சிரிப்பு வருகிறது. ட்ரம் முக்கு வலதும் தெரியாது இடதும் தெரியாது 
அது ஒரு சுத்த கோமாளி ஆனால் நன்றாக ஏமாற்ற தெரியும். ஒரு தேசியவாத வலது சாரி எப்படி 
கோமாளி ட்ரம்பை ஆதரிப்பான்? ஆகவே வலது சாரிகள் அவர்கள் என்பதே ஒரு தெளிவற்ற வாதம். 
இந்த பரப்புரையை இடதுசாரிகள் என்று தம்மை நினைப்பவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Justin said:

ஏனைய நாடுகளில் என்ன நிலையோ அறியேன், அமெரிக்காவிலும் , கனடாவிலும் வலது சாரிகள் "இன்னும்" தென்னாசியர்களை/இந்திய உபகண்டத்திலிருந்து வந்தோரை நோக்கி இனவாத ரீதியாகப் பாயவில்லையென்பதால் சிலருக்கு வலதுசாரிக்காதல் இருப்பது சகஜம்.

கனடாவின். முன்னாள். பிரதமர். ஒருவர்  கூறியுள்ளார். கனடா. குடியேறிகளால்  உருவாக்கப்பட்டநாடு என்று.  . 1840களில்(சரியான ஆண்டு தெரியாது) அமெரிக்காவில். (அப்போது. அமெரிக்கா எனப் பெயரிடப்படவில்லை) 13 இடங்களில் பெரிய பிரித்தானியாவால்....பிரித்தானியார்கள்.  குடியேற்றப்பட்டார்கள். பின்னர்   இந்த. குடியேறிகள்.  வாஷிங்டன். தலைமையில். பிரித்தானியாருடன். போரிட்டு. அமெரிக்காவை. உருவாக்கினார்கள்.   ஆபிரிக்காவிலிருந்து கருப்பர்களும். குடியேற்றப்பட்டார்கள். எனவே  அமெரிக்காவும். ஒரு. குடியேற்றநாடுதான். ஆகவே.  அமெரிக்கா...கனடாவில்....குடியேறியெனப் பிரச்சனை வர வாய்ப்புக்குறைவு.. 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kandiah57 said:

ஒரு தொலுக்கன். தமிழ்நாட்டுகு.  இடம்பெயர்தால். வத்தேறியா?.  இல்லையோ?. எனக்கு. இது. புரியவில்லை.  தெரிந்தவர்கள்.  விளக்கம் தரவும்

"கந்தன் மரத்தால் வீழ்ந்தான்"

இறந்தகாலமா? எதிர்காலமா? என்று தெரியாவிடின் தமிழ் மொழி படிக்கவேண்டும் 
இது கருத்துக்களம் தங்கள் கருத்துக்களை மட்டுமே பகிர முடிகிறது 

ஆனால் ஒரு திரி தமிழ் மொழி கற்க என்று திறக்க வழி  இருக்கிறது.

"ஒருவன் வந்தேறினால்"
ஏறினாரா? இறங்கினாரா? என்பது தமிழில் தெளிவாக மேலேயே இருக்கிறது 

(இதற்கு பதில் எழுத ஒன்றும் இல்லை ஒரு வேளை  அறியாமை இருப்பின் உதவலாம் எனும் நோக்கில் மட்டுமே எழுதினேன். மற்றும்படி அலட்டல்களை தொடர்வது என்பதை ஒரு ஓரமாக செய்யலாம்) 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

இதில் நான் எங்கும் வேறுபடவில்லை .... 
இப்படித்தான் உள்ளதை உள்ளபடியேதான் பார்க்கிறேன் 

உள் என்பது உள்ளே 
வெளி என்பது வெளியே 

அந்த தெளிவு எல்லோருக்கும் நன்றாகவே உண்டு 
விளங்காத வில்லங்கங்கள்தான் இந்த இடது/வலது என்று தொங்குகிறார்கள். 

இங்கு கருத்து எழுதும் சிலர் ட்ராம் ஒரு வலது சாரி என்ற தொனிப்பில்தான் எழுதுகிறார்கள் 
அதை வாசித்தல் சிரிப்பு வருகிறது. ட்ரம் முக்கு வலதும் தெரியாது இடதும் தெரியாது 
அது ஒரு சுத்த கோமாளி ஆனால் நன்றாக ஏமாற்ற தெரியும். ஒரு தேசியவாத வலது சாரி எப்படி 
கோமாளி ட்ரம்பை ஆதரிப்பான்? ஆகவே வலது சாரிகள் அவர்கள் என்பதே ஒரு தெளிவற்ற வாதம். 
இந்த பரப்புரையை இடதுசாரிகள் என்று தம்மை நினைப்பவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள் 

எனக்கு அமெரிக்க அரசியலின் தட்ப வெட்பங்கள் தெரியாது.

ஆனால் நிச்சயம் யூகேயின் உள்நாட்டு அரசியலை பொறுத்தவரை மித-இடது மித-வலதுக்கு இடையே கணிசமான பொருளாதார, சமூக கொள்கை, நடைமுறை வேறுபாடுகள் உண்டு.

ஆனால் வெளிநாட்டு கொள்கையில் எல்லாம் ஒன்றுதான்.

அதே போல் வலு-இடதும், வலு-வலதும் “வந்தேறி-எதிர்பில்” ஒன்றாகி விடுவதையும் காணலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சட்ட ரீதியாக ஜேர்மன் நாட்டு பிரஜை.சகல அலுவல்களும் ஜேர்மன் மொழியில் தான் பார்க்கின்றேன்.பிள்ளைகளும் அதே.
ஆனால்  ஒரு வெள்ளை ஜேர்மன்காரரும் எங்களை ஜேர்மன்காரராக பார்ப்பதில்லை. இதே போல் தான் போலந்து,துருக்கி,ருமேனியாவிலிருந்து வந்தவர்களின் நிலையும்...

அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்களை அவ்ரோ அமெரிக்கன் எண்டுதான் சொல்லீனம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

கந்தன் மரத்தால் வீழ்ந்தான்"

இது. நிகழ்காலம்.   வத்தேறி= குடியேறி.    ஒரு. இந்தியன். இந்தியாவில். எங்கும். வாழலாம்.  அவன்.  வந்தேறியில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

எனக்கு அமெரிக்க அரசியலின் தட்ப வெட்பங்கள் தெரியாது.

ஆனால் நிச்சயம் யூகேயின் உள்நாட்டு அரசியலை பொறுத்தவரை மித-இடது மித-வலதுக்கு இடையே கணிசமான பொருளாதார, சமூக கொள்கை, நடைமுறை வேறுபாடுகள் உண்டு.

ஆனால் வெளிநாட்டு கொள்கையில் எல்லாம் ஒன்றுதான்.

அதே போல் வலு-இடதும், வலு-வலதும் “வந்தேறி-எதிர்பில்” ஒன்றாகி விடுவதையும் காணலாம்.

அவர்கள் மட்டுமில்லை கோசான் 
அவ்வாறு வந்து குடியேறிய நாமும் ஒரு கட்டத்தில் அவர்களுடன் சேர்ந்துதான் போகிறோம் 

நாம் ஒன்றும் பெரிய நியாவதிகள் இல்லை.

எங்கள் வீட்டுக்கு நாமும் பூட்டு வாங்கி பூட்டுகிறோம்தானே? 
அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எங்களையும் எங்களை சார்ந்தவைகளையும் 
பாதுகாக்கிறோம் என்பதுதான் அடிப்படை 

வலதுசாரிகள் பேச்சு  ஒரு சாராரை இலக்கு வைத்து இருக்கிறது 
இடதுசாரிகள் பேச்சு ஒரு சாராரை இலக்குவைத்து இருக்கிறது 

அவர்கள் இலக்கு வைப்பவர்கள் இருக்கும்வரை அவர்கள் பேசியே ஆகவேண்டும் 
அல்லதுபோனால் அவர்களால் வாக்கு வாங்கி வெல்ல முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நான் சட்ட ரீதியாக ஜேர்மன் நாட்டு பிரஜை.சகல அலுவல்களும் ஜேர்மன் மொழியில் தான் பார்க்கின்றேன்.பிள்ளைகளும் அதே.
ஆனால்  ஒரு வெள்ளை ஜேர்மன்காரரும் எங்களை ஜேர்மன்காரராக பார்ப்பதில்லை. இதே போல் தான் போலந்து,துருக்கி,ருமேனியாவிலிருந்து வந்தவர்களின் நிலையும்...

அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்களை அவ்ரோ அமெரிக்கன் எண்டுதான் சொல்லீனம்.

அண்ணை நீங்களோ உங்கள் பிள்ளைகளோ ஒரு போதும் ஜேர்மன் இனமாக முடியாது. 

ஆனால் ஒரு ஜேர்மன் பிரசையாக உங்களுக்கு அவர்களுக்குரிய சகல உரிமையும், நாடாளும் உரிமை உட்பட உண்டல்லவா? அதுதான் மேட்டர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

இது. நிகழ்காலம்.   வத்தேறி= குடியேறி.    ஒரு. இந்தியன். இந்தியாவில். எங்கும். வாழலாம்.  அவன்.  வந்தேறியில்லை.  

அந்த தெலுங்கனை அழித்து 
இந்தியன் என்று எழுதி 
தமிழ் மொழியில் பல திருத்தங்களை செய்யமுடியும் 
இப்படி இன்னும் பல வசதிகள் தமிழ் மொழியில் மட்டும் அல்ல மற்ற மொழிகளிலும் உண்டு 
என்றே நம்புகிறேன். தமிழை படிக்கும்போது அவற்றை நாம் தெளிவாக புரியமுடியும் 

கடல் நீர் சுனாமி மூலம் தரைக்குள் புகுந்தால்? 
பூமியில் ஏற்கனவே இருந்த நீர்தானே? இங்கே வந்தால் வந்தேறியா? வராதஏறியா? 
என்று மலையில் வாழ்பவன் தத்துவம் கூறலாம் 
கடல் நீரால் அனைத்தையும் இழந்த கரையோர மனிதனுக்கு தத்துவம் தேவை இல்லை 
முதலில் அவன் வாழ வாழ்வாதாரம் தேவை. கடல் எங்கு இருக்கிறதோ அங்கு இருந்தால்தான் 
அவனால் வாழ முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

நான் சட்ட ரீதியாக ஜேர்மன் நாட்டு பிரஜை.சகல அலுவல்களும் ஜேர்மன் மொழியில் தான் பார்க்கின்றேன்.பிள்ளைகளும் அதே.
ஆனால்  ஒரு வெள்ளை ஜேர்மன்காரரும் எங்களை ஜேர்மன்காரராக பார்ப்பதில்லை. இதே போல் தான் போலந்து,துருக்கி,ருமேனியாவிலிருந்து வந்தவர்களின் நிலையும்...

அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்களை அவ்ரோ அமெரிக்கன் எண்டுதான் சொல்லீனம்.

நீங்கள் சொல்வது  சரி. ஜேரமனா. 

நீங்கள். சொல்வது. சரி. ஜேர்மனி. தனிநாடு. எனில் பயப்படலாம்.  ஐரோப்பிய ஓன்றியத்திலிருப்பதால்.  ஒரளவு. பாதுகாப்பு உண்டு

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

அவர்கள் மட்டுமில்லை கோசான் 
அவ்வாறு வந்து குடியேறிய நாமும் ஒரு கட்டத்தில் அவர்களுடன் சேர்ந்துதான் போகிறோம் 

நாம் ஒன்றும் பெரிய நியாவதிகள் இல்லை.

எங்கள் வீட்டுக்கு நாமும் பூட்டு வாங்கி பூட்டுகிறோம்தானே? 
அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எங்களையும் எங்களை சார்ந்தவைகளையும் 
பாதுகாக்கிறோம் என்பதுதான் அடிப்படை 

வலதுசாரிகள் பேச்சு  ஒரு சாராரை இலக்கு வைத்து இருக்கிறது 
இடதுசாரிகள் பேச்சு ஒரு சாராரை இலக்குவைத்து இருக்கிறது 

அவர்கள் இலக்கு வைப்பவர்கள் இருக்கும்வரை அவர்கள் பேசியே ஆகவேண்டும் 
அல்லதுபோனால் அவர்களால் வாக்கு வாங்கி வெல்ல முடியாது. 

இவை எல்லாமே குழுவாத அரசியல் மருதர். நாமெல்லோரும் ஏதோ ஒரு வகையில் இந்த சுழலில்தான் இருக்கிறோம். 

நான் ஏன் 1% பணக்காரருக்கு வரி விலக்கு கொடுப்போம் என சொல்லும் கட்சிக்கு வாக்களிப்பதில்லை? ஏனென்றால் நான் அந்த 1% பணக்காரர் குழுவில் இல்லை.

அரசியல் என்பதே குழுவாதம்தான்.

அது ஏழை, பணக்காரன், வேலை உள்ளவன், வேலை இல்லாதவன், சோசல் காசில் இருப்பவன், சோசல் காசுக்கு வரி கொடுப்பவன் என்று எப்போதும் குழுக்களின் நலன் சார்ந்தே ஓடும்.

ஆனால் இவற்றில் எல்லாம் ஒரு குழுவில் இருந்து இன்னோர் குழுவுக்கு போகலாம். யார் கண்டது நாளைக்கு நான் 1% பணக்காரர் குழுவில் சேர்ந்து விடலாம்.

ஆனால் இனத்தூய்மைவாதம் அப்படி அல்ல. அது ஒரு மாற்ற முடியாத லேபல். ஆகவேதான் குழுவாத அரசியல்கள் எல்லாவற்றிலும் மிக ஆபத்தான குழுவாத அரசியலாக இனத்தூய்மைவாதம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

அந்த தெலுங்கனை அழித்து 
இந்தியன் என்று எழுதி 
தமிழ் மொழியில் பல திருத்தங்களை செய்யமுடியும் 
இப்படி இன்னும் பல வசதிகள் தமிழ் மொழியில் மட்டும் அல்ல மற்ற மொழிகளிலும் உண்டு 
என்றே நம்புகிறேன். தமிழை படிக்கும்போது அவற்றை நாம் தெளிவாக புரியமுடியும் 

கடல் நீர் சுனாமி மூலம் தரைக்குள் புகுந்தால்? 
பூமியில் ஏற்கனவே இருந்த நீர்தானே? இங்கே வந்தால் வந்தேறியா? வராதஏறியா? 
என்று மலையில் வாழ்பவன் தத்துவம் கூறலாம் 
கடல் நீரால் அனைத்தையும் இழந்த கரையோர மனிதனுக்கு தத்துவம் தேவை இல்லை 
முதலில் அவன் வாழ வாழ்வாதாரம் தேவை. கடல் எங்கு இருக்கிறதோ அங்கு இருந்தால்தான் 
அவனால் வாழ முடியும். 

நீங்கள் சொல்வது.200% உண்மை.  தமிழ். படிபிக்க தொடங்கினால். நானும். வந்து. உங்களிடம்  படிக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இவை எல்லாமே குழுவாத அரசியல் மருதர். நாமெல்லோரும் ஏதோ ஒரு வகையில் இந்த சுழலில்தான் இருக்கிறோம். 

நான் ஏன் 1% பணக்காரருக்கு வரி விலக்கு கொடுப்போம் என சொல்லும் கட்சிக்கு வாக்களிப்பதில்லை? ஏனென்றால் நான் அந்த 1% பணக்காரர் குழுவில் இல்லை.

அரசியல் என்பதே குழுவாதம்தான்.

அது ஏழை, பணக்காரன், வேலை உள்ளவன், வேலை இல்லாதவன், சோசல் காசில் இருப்பவன், சோசல் காசுக்கு வரி கொடுப்பவன் என்று எப்போதும் குழுக்களின் நலன் சார்ந்தே ஓடும்.

ஆனால் இவற்றில் எல்லாம் ஒரு குழுவில் இருந்து இன்னோர் குழுவுக்கு போகலாம். யார் கண்டது நாளைக்கு நான் 1% பணக்காரர் குழுவில் சேர்ந்து விடலாம்.

ஆனால் இனத்தூய்மைவாதம் அப்படி அல்ல. அது ஒரு மாற்ற முடியாத லேபல். ஆகவேதான் குழுவாத அரசியல்கள் எல்லாவற்றிலும் மிக ஆபத்தான குழுவாத அரசியலாக இனத்தூய்மைவாதம் இருக்கிறது.

100%

இந்த இனத்தூய்மைவாதம் தேசியம் என்பது மட்டும் அல்ல 
இப்போது சில பெண்கள் பேசும் "பெண்ணியம்" என்பது கூட 
தெளிவு இல்லாதுபோனால் மிக ஆபத்து ஆனவை 
ஆண்மீகம் என்ற தூய்மையே எவ்வளவு ஆபத்தாக இருக்கிறது இப்போது?

அதுக்கு முக்கிய காரணம் 80% மக்களுக்கு உண்மையில் தெளிவு இல்லை 
தாமாக சிந்திக்கும் அறிவும் இல்லை.

இந்த திரியிலேயே சிலரின் கருத்துக்களை பார்க்கும்போது அது தெளிவாக 
தெரிகிறது. சீமானை எதோ ஒரு காரணத்தில் எதிர்க்க ஆசைப்படுகிறார்கள் ஆனால் 
ஏன் என்றேஅவர்களுக்கு தெரியவில்லை.

சீமானின் "தேசியவாதம்" என்பது எமக்கு எதிராக திரும்பும் ஆபத்து இருப்பதாக நீங்கள் வைக்கும் 
வாதத்தை பொய் என்று சீமானின் அரசியலுக்கு  முடிவு வரும் வரை எம்மால் மறுக்க முடியாது
(உங்கள் (லா) வாத திறமையால் அப்படி ஒரு செக் வைக்கிறீர்களோ தெரியவில்லை)
இவ்வாறான தர்க்க ரீதியான வாதங்கள் மட்டுமே சீமானின் ஆதரவாளராக்களையும் சிந்திக்க தூண்டும் 
அவர்களுக்கு ஒரு அச்சுறுத்தல் கொடுக்கும் ... நாம் சறுக்கிவிடுவோமோ? எனும் ஒரு நிலையை உருவாக்கும்.

மாறாக ஏன் ஒருவர் மீது ஒருவர் சேறடிக்கும் மனநிலையில் இருந்துகொண்டு 
மற்றவர்களுக்கு இடது சாரிக்கு நடிக்கிறார்கள் என்றே புரியவில்லை 
ஏற்கனவே இங்கு இருக்கும் சொந்த இனத்தவனை மிதித்துக்கொண்டு    
வந்தவனுக்கு வாழ்வுகொடுக்க போகிறார்களாம் ...... அவர்களை வந்தவர்கள் என்று சொன்னால் 
அவர்கள் மனது வலிக்குமாம்........ஆதலால் இனி நின்றவர்கள் என்று கூறுகிறார்களாம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஒரு தொலுக்கன். தமிழ்நாட்டுகு.  இடம்பெயர்தால். வத்தேறியா?.  இல்லையோ?. எனக்கு. இது. புரியவில்லை.  தெரிந்தவர்கள்.  விளக்கம் தரவும்

விளக்கம் கேட்டுள்ளீர்கள். 

விளக்கம் கொடுத்தவருக்கு விளக்கு வைக்க வேண்டிய நிலை வரும் ஆபத்து இருந்தாலும் துணிந்து இறங்குகிறேன்🤣.

சில உதாரணங்களை பார்ப்போம்.

1. கொக்கிளாயில் 1980 களின் பின் குடியேறிய சிங்கள மக்கள். 

இவர்கள் வந்தேறிகளா? ஆம்.

எப்படி வந்தார்கள்? அடத்தாக, தமிழரை துரத்தி விட்டு, திட்டமிட்டு குடியேற்ற பட்டார்கள்.

2. கொழும்பில் 1983 க்கு பின் குடியேறி பம்பலபிட்டி-மொரட்டுவையை தமிழ் கூறு நல்லுலகு ஆக்கியோர்.

இவர்கள் வந்தேறிகளா? ஆம்.

எப்படி வந்தார்கள்? தமது தன் முனைப்பில்.

3. 70களில் இருந்து யூகேயில் குடியேறிய ஐரோபியர்.

இவர்கள் வந்தேறிகளா? ஆம்.

எப்படி வந்தார்கள்? ஈயு சட்டத்தின் படி, தன் முனைப்பில்.

4. தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கு சாதி மக்கள்.

இவர்கள் வந்தேறிகளா? ஆம்.

எப்படி வந்தார்கள்? படைகொண்டு, வியாபரமாக, பலவழிகளில் கிட்டதட்ட 600 ஆண்டுகளுக்கு முன் இருந்து தொடர்சியாக.

——-//———//

கேள்விகள்

1. வந்தேறிகளை எப்போதும் வரவேற்க வேண்டுமா? இல்லை. நிகழ்காலத்தில் வருவதை குறைக்க, நிறுத்த வேண்டும் என்பது ஒரு நியாயமான அரசியல்தான்.

2. அப்போ வந்தேறிகளை எப்படி கையாள்வது?

பிரெக்சிற் கையாண்டது போல. இதுவரை வந்தவர்களை வாழ விடுவது. அவர்கள் பிரித்தானிய பிரசை ஆக விரும்பின் அவர்களை பிரிதானிய பிரசை ஆக்கி இந்த மண்ணில் முழு பங்குதாரர் ஆக்குவது.

3. தொடர்ந்தும் வருவோரை எப்படி தடுப்பது? அதுவும் பிரெக்சிற் போலத்தான். சட்டத்தை மாற்றி வரும் வழியை அடைப்பது.

நிகழ்காலத்தில் உள்ளே வரும் வந்தேறிகளை எப்படி தடுப்பது? 

கடந்தகாலத்தில் உள்ளே வந்துவிட்ட வந்தேறிகளை எப்படி நடத்துவது என்ற இரெண்டுக்குமே பிரெக்சிற் நல்ல உதாரணம்.

இப்போ உங்கள் கேள்விக்கு வருவோம்.

தமிழகத்தில் 600 வருடமாகவோ, 6 மாதமாகவோ இருக்கும் தெலுங்கன் வந்தேறியா ? ஆம்

அவனை எப்படி கையாள்வது?

அவனையும், தமிழ் நாட்டவன் என்ற அடைப்புக்குள் எடுத்து, ஆளும் அதிகாரம் உட்பட்ட அதிகாரங்களில் பங்குதாரனாக்குவது.

தொடர்ந்து வரப்போகும் தெலுங்கனை எப்படி தடுப்பது?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி. மாநிலங்களிடையே குடிபெயர்வை தடுப்பதன் மூலம். சில வட கிழக்கு மாநிலங்களுக்கு இந்த உரிமை உண்டு என நினைக்கிறேன்.

வந்தேறிகளின் வரவை குறைக்க வேண்டும் என்ற அரசியல் முழுக்க முழுக்க மோசமானது அல்ல.

பிரெக்சிற்றும், அவிஸ்ரேலிய அரசும் செய்வது இந்த அரசியலைதான்.

ஆனால் வந்து விட்டவர்களை இரெண்டாம் தரமாக நடத்த வேண்டும் என்ற அரசியல்தான் மிலேச்சதனமானது, ஆபத்தானது.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Maruthankerny said:

100%

இந்த இனத்தூய்மைவாதம் தேசியம் என்பது மட்டும் அல்ல 
இப்போது சில பெண்கள் பேசும் "பெண்ணியம்" என்பது கூட 
தெளிவு இல்லாதுபோனால் மிக ஆபத்து ஆனவை 
ஆண்மீகம் என்ற தூய்மையே எவ்வளவு ஆபத்தாக இருக்கிறது இப்போது?

அதுக்கு முக்கிய காரணம் 80% மக்களுக்கு உண்மையில் தெளிவு இல்லை 
தாமாக சிந்திக்கும் அறிவும் இல்லை.

இந்த திரியிலேயே சிலரின் கருத்துக்களை பார்க்கும்போது அது தெளிவாக 
தெரிகிறது. சீமானை எதோ ஒரு காரணத்தில் எதிர்க்க ஆசைப்படுகிறார்கள் ஆனால் 
ஏன் என்றேஅவர்களுக்கு தெரியவில்லை.

சீமானின் "தேசியவாதம்" என்பது எமக்கு எதிராக திரும்பும் ஆபத்து இருப்பதாக நீங்கள் வைக்கும் 
வாதத்தை பொய் என்று சீமானின் அரசியலுக்கு  முடிவு வரும் வரை எம்மால் மறுக்க முடியாது
(உங்கள் (லா) வாத திறமையால் அப்படி ஒரு செக் வைக்கிறீர்களோ தெரியவில்லை)
இவ்வாறான தர்க்க ரீதியான வாதங்கள் மட்டுமே சீமானின் ஆதரவாளராக்களையும் சிந்திக்க தூண்டும் 
அவர்களுக்கு ஒரு அச்சுறுத்தல் கொடுக்கும் ... நாம் சறுக்கிவிடுவோமோ? எனும் ஒரு நிலையை உருவாக்கும்.

மாறாக ஏன் ஒருவர் மீது ஒருவர் சேறடிக்கும் மனநிலையில் இருந்துகொண்டு 
மற்றவர்களுக்கு இடது சாரிக்கு நடிக்கிறார்கள் என்றே புரியவில்லை 
ஏற்கனவே இங்கு இருக்கும் சொந்த இனத்தவனை மிதித்துக்கொண்டு    
வந்தவனுக்கு வாழ்வுகொடுக்க போகிறார்களாம் ...... அவர்களை வந்தவர்கள் என்று சொன்னால் 
அவர்கள் மனது வலிக்குமாம்........ஆதலால் இனி நின்றவர்கள் என்று கூறுகிறார்களாம். 

நான் சீமானை எதிர்க பல காரணங்கள் உண்டு அவற்றை நான் மீண்டும் பட்டியலிட தேவையில்லை. 

ஆனால் நான் உள்ளே வந்து விட்ட வந்தேறிகளுக்கு எதிரான அரசியலை எதிர்ப்பது முழுக்க முழுக்க சுயநலத்தில்தான்.

நான் இங்கே செட்டில் ஆகி விட்ட வந்தேறி.

கொள்கையளவில் எனக்கும் ஒரு ஆங்கிலேயனுக்கும் ஒரு உரிமை வேறுபாடும் இல்லை. இருவரும் பிரித்தானியர்.

நாளைக்கு  என்னை நீ இரண்டாம்தர பிரஜை என்று சொல்லி விட்டால்?

அதை விட மோசமா, மக்கள் ஆதரவு இருந்தும் என் அடுத்த சந்ததியில் ஒருவரை நீ பிரதமர் ஆக முடியாது என்று சொல்லி விட்டால்?

ஆகவே வந்து விட்ட வந்தேறிகளுக்கு எதிரான அரசியலை பிரித்தானியாவில் எதிர்க்க வேண்டியது என் அதிமுக்கிய பொறுப்பு. எனது முதலாவது குழு அரசியல் நிலை இதுதான்.

ஒரே அரசியலை பிரித்தானியாவில் எதிர்த்தும், தமிழ் நாட்டில் ஆதரித்தும் நிலைப்பாடு எடுப்பது போக்கிரிதனமாக இருக்கும்.

இதுதான் நான் எடுக்கும் அரசியல் நிலைப்பாட்டின் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நான் சட்ட ரீதியாக ஜேர்மன் நாட்டு பிரஜை.சகல அலுவல்களும் ஜேர்மன் மொழியில் தான் பார்க்கின்றேன்.பிள்ளைகளும் அதே.
ஆனால்  ஒரு வெள்ளை ஜேர்மன்காரரும் எங்களை ஜேர்மன்காரராக பார்ப்பதில்லை. இதே போல் தான் போலந்து,துருக்கி,ருமேனியாவிலிருந்து வந்தவர்களின் நிலையும்...

அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்களை அவ்ரோ அமெரிக்கன் எண்டுதான் சொல்லீனம்.

அதே போல இங்கே அமெரிக்காவில், இத்தாலிய அமெரிக்கன், ஆசிய அமெரிக்கன், இசுபானிய அமெரிக்கன், ஜேர்மானிய அமெரிக்கன் என்று பலரும் பிரபலமாக இருக்கிறோம். Trump ஜேர்மானிய அமெரிக்கர் வழி வந்தவர். அவர் மனைவி சொல்வேனிய அமெரிக்கன் என்று வைக்கிபீடியா சொல்கிறது.

https://en.m.wikipedia.org/wiki/Melania_Trump

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

லிபராசன் ஒபேரேசன் காலத்தில் இருந்து மக்கள் இராணுவம் வரும் திசைக்கு 
எதிராகத்தான் ஓடிக்கொண்டு இருந்தார்கள் (நாங்களும் ஓடினோம்)
இது மண்ணுக்கு கீழே வாழும் மண் புழுக்களுக்கு தெரியாமல் இருந்தால் வியப்பில்லை 

கோழியின் செட்டைக்குள் குஞ்சுகள் ஒதுங்கும் 
பாயும் கழுகுக்கு பாசமா புரியும்? 

 மக்கள் விரும்பியே முள்ளிவாய்க்காலில் கோழியின் செட்டைக்குள் பதுங்கி இருந்து செத்தார்கள்! 😎ஏற்றுவதற்கு எ.எஸ்.எf கப்பல் வந்த போதும் காயக்காரர் கூட கழுகிடம் போக விரும்பவில்லையாம்! அமெரிக்காவில் இருந்து கணணித் திரையில் பார்த்த போது அப்படித் தான் மருதருக்குத் தெரிந்திருக்கிறது!

(இதை நான் இங்கு ஆரம்பிக்கவில்லை! திரித்த வரலாறு எழுத நீங்களே தொடக்கியிருக்கிறீர்கள்! for the record!)

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

தமிழீழம் தோற்றதற்கு காரணம் புலிகளின் அரசியலோ, வளங்கள் இல்லாததோ அல்ல, மாறாக,  புலி வால்களின் பொய்யும், பிரட்டும், நேர்மையின்மையும், மற்றவரின் அழிவில் தாம் வாழ வழி காணும் சுயநலமுமே காரணம். இவர்களே அனைத்தையும் அழித்தவர்கள். எல்லா வால்களும் இப்போது புலி வாந்தி எடுப்பதற்கு மட்டும் தான் பொருத்தம்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நான் சீமானை எதிர்க பல காரணங்கள் உண்டு அவற்றை நான் மீண்டும் பட்டியலிட தேவையில்லை. 

ஆனால் நான் உள்ளே வந்து விட்ட வந்தேறிகளுக்கு எதிரான அரசியலை எதிர்ப்பது முழுக்க முழுக்க சுயநலத்தில்தான்.

நான் இங்கே செட்டில் ஆகி விட்ட வந்தேறி.

கொள்கையளவில் எனக்கும் ஒரு ஆங்கிலேயனுக்கும் ஒரு உரிமை வேறுபாடும் இல்லை. இருவரும் பிரித்தானியர்.

நாளைக்கு  என்னை நீ இரண்டாம்தர பிரஜை என்று சொல்லி விட்டால்?

அதை விட மோசமா, மக்கள் ஆதரவு இருந்தும் என் அடுத்த சந்ததியில் ஒருவரை நீ பிரதமர் ஆக முடியாது என்று சொல்லி விட்டால்?

ஆகவே வந்து விட்ட வந்தேறிகளுக்கு எதிரான அரசியலை பிரித்தானியாவில் எதிர்க்க வேண்டியது என் அதிமுக்கிய பொறுப்பு. எனது முதலாவது குழு அரசியல் நிலை இதுதான்.

ஒரே அரசியலை பிரித்தானியாவில் எதிர்த்தும், தமிழ் நாட்டில் ஆதரித்தும் நிலைப்பாடு எடுப்பது போக்கிரிதனமாக இருக்கும்.

இதுதான் நான் எடுக்கும் அரசியல் நிலைப்பாட்டின் காரணம்.

உங்களுக்குப் பிழைக்கத் தெரியாது, சொல்கிறேன் கேளுங்கள்:

1. ஊரில் சிங்களவனை எதிர்க்கும் போது நீங்கள் பாசிச எதிர்ப்பு விடுதலை வீரனாகத் தோன்ற வேண்டும்!

2. புலம்பெயர்ந்த இடத்திற்கு நீங்கள் வரும் போது (நீங்கள் வரும் வழியைப் பொறுத்து!) உங்களுக்கு எல்லைக் கதவு திறந்தே இருக்க வேண்டும்! வந்த பின்னர் இடைக்கால நிவாரணத்திலிருந்து உங்களுக்கு எல்லாம் அரசு மக்கள் வரிப்பணத்தில் தர வேண்டும்! (இடது சாரி, முழு சோசலிஸ்ட்!😎)

3. உங்களுக்கு விசா, பிரஜாவுரிமை கிடைத்ததும், புலம்பெயர் நாட்டில் உங்களுக்கு சம உரிமை வேண்டும்!  (சம உரிமை வாதி, கொஞ்சம் சென்ட்றிஸ்ட்! center-left)

4. இந்தியாவில் தமிழ் நாட்டைப் பற்றிப் பேச முயலும் போது, முழு இனத்தூய்மை வேண்டி நீங்கள் வலது சாரியாக மாறி விட வேணும்!🤣

5. யாராவது வந்து இந்த முரண்பாடு பற்றிக் கேள்வி கேட்டால், உடனே "நான் எப்பவுமே வலது சாரி தான், நானும் ரௌடி தான்!" என்று தலையைச் சுத்தி விட்டுப் போய்க்கொண்டே இருக்க வேணும்!

 இதையெல்லாம் செய்யா விட்டால் நீங்கள் பிழைக்கத் தெரியாதவர்! 

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் அம்மையார் ராதிகா வந்த போதும் இப்படித்தான் சொன்னார்கள்.. இப்ப ஆள் அட்ரஸே இல்லை.

இதுதான் தமிழீழ அரசியல்.....

6 hours ago, goshan_che said:

நான் சீமானை எதிர்க பல காரணங்கள் உண்டு அவற்றை நான் மீண்டும் பட்டியலிட தேவையில்லை. 

ஆனால் நான் உள்ளே வந்து விட்ட வந்தேறிகளுக்கு எதிரான அரசியலை எதிர்ப்பது முழுக்க முழுக்க சுயநலத்தில்தான்.

நான் இங்கே செட்டில் ஆகி விட்ட வந்தேறி.

கொள்கையளவில் எனக்கும் ஒரு ஆங்கிலேயனுக்கும் ஒரு உரிமை வேறுபாடும் இல்லை. இருவரும் பிரித்தானியர்.

நாளைக்கு  என்னை நீ இரண்டாம்தர பிரஜை என்று சொல்லி விட்டால்?

அதை விட மோசமா, மக்கள் ஆதரவு இருந்தும் என் அடுத்த சந்ததியில் ஒருவரை நீ பிரதமர் ஆக முடியாது என்று சொல்லி விட்டால்?

ஆகவே வந்து விட்ட வந்தேறிகளுக்கு எதிரான அரசியலை பிரித்தானியாவில் எதிர்க்க வேண்டியது என் அதிமுக்கிய பொறுப்பு. எனது முதலாவது குழு அரசியல் நிலை இதுதான்.

ஒரே அரசியலை பிரித்தானியாவில் எதிர்த்தும், தமிழ் நாட்டில் ஆதரித்தும் நிலைப்பாடு எடுப்பது போக்கிரிதனமாக இருக்கும்.

இதுதான் நான் எடுக்கும் அரசியல் நிலைப்பாட்டின் காரணம்.

சொந்த வீட்டுக்கும் வாடகை வீட்டுக்கும் வித்தியாசம் தெரியல்ல தங்களுக்கு.

சீமான் சொந்த வீட்டு அரசியல் செய்கிறார். நீங்கள் சொந்த வீட்டை பறிகொடுத்திட்டு.. வாடகை வீட்டு விளக்கம் கொடுக்கிறீர்கள். அவ்வளவும் தான். 

7 hours ago, குமாரசாமி said:

நான் சட்ட ரீதியாக ஜேர்மன் நாட்டு பிரஜை.சகல அலுவல்களும் ஜேர்மன் மொழியில் தான் பார்க்கின்றேன்.பிள்ளைகளும் அதே.
ஆனால்  ஒரு வெள்ளை ஜேர்மன்காரரும் எங்களை ஜேர்மன்காரராக பார்ப்பதில்லை. இதே போல் தான் போலந்து,துருக்கி,ருமேனியாவிலிருந்து வந்தவர்களின் நிலையும்...

அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்களை அவ்ரோ அமெரிக்கன் எண்டுதான் சொல்லீனம்.

ஆனால் இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து ஜேர்மன் குடியுரிமை பெற்ற உங்களது பிள்ளைகள் ஜேர்மனியில் அதி உயர்பதவிகளுக்கு போவதற்கு தகுதி இருந்தும், அப்பதவிகளுக்கு  வரக்கூடாது என்று அவரது பூர்வீகத்தை மட்டும் காரணமாக காட்டி யாராவது ஒரு ஜேர்மன் அசியல்வாதி பொது வெளியில் இனவெறியாக பேச முடியுமா? அப்படி பேசினால் அந்த அரசியல்வாதியை நீங்கள் ஆதரிப்பீர்களா? நிச்சயம் ஆதரிக்க மாட்டீர்கள். ஏனென்றால் அதனால் பாதிக்கப்பட போவது உங்கள் சோந்த பிள்ளை என்பதால்.

இது தான் எமது உரிமைளை வலியுறுத்தும் உண்மை தமிழ் தேசியத்திற்குத் சீமானின் இனவெறி தமிழ் தேசியத்திற்கும் இடையே உள்ள இடைவெளி.  

1 hour ago, nedukkalapoovan said:

கனடாவில் அம்மையார் ராதிகா வந்த போதும் இப்படித்தான் சொன்னார்கள்.. இப்ப ஆள் அட்ரஸே இல்லை.

இதுதான் தமிழீழ அரசியல்.....

இது ராதிகா தேர்தலில் வெற்றி பெற்ற போது எடுத்த விடியோ என்று நினைக்கிறேன். நெடுக்கர் நீங்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்றாலும் இப்படி தான் வெற்றியை மகிழ்சியுடன் கொண்டாடுவீர்கள். ஆகவே இதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.