Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று ஆண்டுகளில் நாற்பதாயிரம் வேலை வாய்ப்பு – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சூளுரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று ஆண்டுகளில் நாற்பதாயிரம் வேலை வாய்ப்பு – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சூளுரை

தமிழ் மக்களுக்கு புலிப் பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள் தற்போது சீனப் பூச்சாண்டியைக் காட்டித் தங்களுடைய போலி அரசியலை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா, உள்ளூர் உற்பத்திகளில் சார்ந்திருகும் பொருளாதாரத்தினை உருவாக்கும் வகையிலே கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடலட்டை போன்ற நீர்வேளாண்மைச் செயற்பாடுகளை வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் விஸ்தரித்து, அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 40,000 நேரடி வேலை வாய்ப்புக்களையும் சுமார் 200 பில்லியனுக்கும் மேற்பட்ட அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்வதையும் இலக்காக கொண்டு செயற்பட்டு வருவதாகவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக பிரதான எதிர்க் கட்சிகளினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக இன்று(21.07.2021) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“எரிபொருள் விலையேற்றம் என்பது அமைச்சர் உதயகம்மன்பிலவின் தனிப்பட்ட தீர்மானம் அல்ல. இந்தத் தீர்மானம் தற்போதைய அரசாங்த்தின் கூட்டுத் தீர்மானமாகும்.
எனவே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது நேரத்தையும் மக்களின் வரிப் பணத்தினையும் வீண் விரயமாக்கும் செயலாகும்.
ஒரு நாட்டின் எரிபொருள் விலையேற்றமானது, அந்நாட்டின் அனைத்துப் பொருட்களினதும் விலையேற்றத்துக்குக் காரணமாகும் என்பதை நான் புதிதாகக் கூறித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
எமது நாடு இன்று பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாடானது எமது நாட்டுக்கு மாத்திரம் நிகழ்ந்துள்ளதொரு நிலையல்ல. கோவிட் – 19 கொரோனா அனர்த்த நிலை காரணமாக முழு உலகமே இன்று பொருளாதார நிலையில் பாரிய பாதிப்புகளை கண்டு வருகின்றன.
கடந்த ஆட்சியின் தூர நோக்கற்ற பொருளாதார கொள்கையானது எமது நாட்டு கஜானாவை துடைத்து வைத்திருந்த நிலையில்தான் நாம் இந்த கோவிட் – 19 கொரோனா அனர்த்தத்திற்கும் முகங் கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
இத்தகைய நிலைமைகளின் முன்பாக எமது மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற சந்தர்ப்பத்தில், எரிபொருளின் விலையேற்றமானது மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதையைப் போன்றதாகிவிட்டது என்பதை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.
அதேநேரம், எரிபொருள் விலையேற்றம் காரணமாக எமது கடற்றொழிலாளர்கள் தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்தையும் இந்த நாட்டின் கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
அதேவேளை, மாண்புமிகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சர் உதயகம்மன்பில் ஆகியோருடன் கலந்துரையாடி 35 ரூபாயினால் அதிகரிக்கப்பட இருந்த மண்ணெண்ணையின் விலையை 7 ரூபாயினால் மாத்திரமே அதிகரிக்கச் செய்துள்ளோம்.
douglas-300x225.jpeg
இலங்கையானது எரிபொருளுக்கென மிக அதிகளவிலான அந்நிய செலாவணியை செலவிடுகின்ற ஒரு நாடு மட்டுமல்ல, எரிபொருள் மூலமாக போக்குரத்து சேவைகள், மின்சார உற்பத்தி, கைத்தொழில் நிலையங்கள் போன்றவற்றை செயற்படுத்துகின்ற ஒரு நாடாகவும் உள்ளது.
இறக்குமதி மீது தங்கியிருக்கின்ற எமது நுகர்வுக் கலாசாரத்தை உற்பத்திகள் மீது தங்கியிருக்கக் கூடிய நுகர்வுக் கலாசாரமாக மாற்றியமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனம் முதற்கொண்டு, இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் வரை இந்த நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தையே வலியுறுத்திள்ளன. அதனையே நாம் செயற்படுத்தி வருகின்றோம்.
கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில், இயன்றளவில் கடற்றொழிலையும் நன்னீர் சார்ந்த வோண்மைத் துறைகளையும் மேலும் மேலும் பரவலாக வளர்த்தெடுத்து உற்பத்திப் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கின்ற நடவடிக்கைகளை இடைவிடாது மேற்கொண்டு வருகின்றேன்.
சாதிக்க துணிந்தவனுக்கு சமுத்திரம் கூட இடுப்பளவு நீராகும். போதிக்க மட்டும் தெரிந்தவனுக்கு இடுப்பளவு நீரும் சமுத்திர நீராகவே தென்படும். கடந்த ஆட்சிக்கு நல்லாட்சி என்று பெயர் சூட்டி தமிழ் மக்களின் தலைகள் மீது மிளகாய் அரைத்தவர்கள் எதை சாதித்தார்கள்?
அடிக்கல் நாட்ட வந்த ஆட்சியாளர்களை கண்டவுடன் குனிந்து கும்பிட்டு பல்லிளித்து மட்டும் நின்றார்கள்.
ஒவ்வொரு வரவு செலவு திடத்தை ஆதரித்து வாக்களிக்கும் போதும் பணப்பெட்டிகளை வாங்கிக்கொண்டு பெட்டிப்பாம்புகளாக கைகட்டி அடங்கிக்கிடந்தார்கள். இந்தவிறகுக் கட்டை விடுதலை வீரர்கள், கிளிநொச்சி புலிநொச்சியாக இருந்த காலத்தில் 75 கள்ள வாக்குகளைப் போட்டதாக ஒப்புக்கொண்டார்கள். அவ்வாறான ஒரு அரசியல்வாதியாக நான் ஒருபோதும் எமது மக்களை ஏமாற்றப் போவதில்லை.
அந்தவகையில், அனைத்து உற்பத்தித் துறைகளும் மேலோங்கும் நிலை விரைவில் ஏற்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
 
அதேநேரம், மாற்று எரிபொருட்கள் தொடர்பிலும் எமது அரசு அதிக அவதானம் செலுத்தி வருகின்றது.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக எமது நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுதான் வருகின்றன. கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் மூன்று தடவைகள் அங்கு எரிபொருள் விலை ஏற்றப்பட்டுள்ளது.
இத்தகைய நிலையில் இந்தியா பெற்றோலிய எரிபொருள் மற்றும் உள்நாட்டு எதனோல், உயிரி இயற்கை எரிவாயு திரவ இயற்கை எரிவாயு மற்றும் ஹைட்ரஜன் எரிபொருட்கள் அடங்கிய இயற்கை எரிபொருளைக் கொண்ட கலப்பு பிளக்ஸ் இயந்திரங்களின் பாவனையை வாகனங்களுக்கென ஊக்குவித்து வருகின்றது. இந்த முறைமையனது தற்போது அமெரிக்கா, கனடா, பிரேசில் போன்ற நாடுகளில் பாவனையில் உள்ளது. அவை தொடர்பாகவும் நாம் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://thinakkural.lk/article/128616

 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

தமிழ் மக்களுக்கு புலிப் பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள் தற்போது சீனப் பூச்சாண்டியைக் காட்டித் தங்களுடைய போலி அரசியலை தக்

புலி பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள் யார்?
சீனா பூச்சாண்டி காட்டி அரசியல் செய்பவர்கள் யார்?

தமிழ் அரசியல் வாதிகள் புலிகளுக்கு ஆதரவாகவும் சீனாவுக்கு எதிராகவும் பேசுகிறார்கள்...

மற்றவர்கள் புலிகளுக்கு எதிராகவும் சீனாவுக்கு ஆதரவாகவும் பேசுகின்றனர் ..


பிறகு எப்படி புலி பூச்சாண்டி ?

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, கிருபன் said:

தமிழ் மக்களுக்கு புலிப் பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள் தற்போது சீனப் பூச்சாண்டியைக் காட்டித் தங்களுடைய போலி அரசியலை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா, உள்ளூர் உற்பத்திகளில் சார்ந்திருகும் பொருளாதாரத்தினை உருவாக்கும் வகையிலே கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எரியிற  பெரிய கொள்ளிக்கட்டை மற்றவர்களை பார்த்து  சொல்லுது அவர்களும் எரியும் கொள்ளிக்கட்டை என்று .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

மூன்று ஆண்டுகளில் நாற்பதாயிரம் வேலை வாய்ப்பு – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சூளுரை

அதென்னடாப்பா சூளுரை?யாருக்கு எதிராக

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாதவூரான் said:

அதென்னடாப்பா சூளுரை?யாருக்கு எதிராக

டக்ளசு ஐயா சூளுரைத்தால் அதனை கேலிசெய்வது அழகல்ல. அவரது சூளுரையைக் கேட்டு வேலையற்றிருக்கும் இளைஞர்களின் குடும்ப வாக்குகள் அனைத்தும் டக்ளசு ஐயாவுக்குப் போய், அவர் அடுத்த சனாதிபதியாக வந்துவிடுவாரோ என்று மகிந்த குடும்பமே கலங்கிப்போய் இருக்கிறதாம்.😲

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

புலி பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள் யார்?
சீனா பூச்சாண்டி காட்டி அரசியல் செய்பவர்கள் யார்?

தமிழ் அரசியல் வாதிகள் புலிகளுக்கு ஆதரவாகவும் சீனாவுக்கு எதிராகவும் பேசுகிறார்கள்...

மற்றவர்கள் புலிகளுக்கு எதிராகவும் சீனாவுக்கு ஆதரவாகவும் பேசுகின்றனர் ..


பிறகு எப்படி புலி பூச்சாண்டி ?

 

அதாவது புலி மற்றும் சீனாவின் நோக்கு  ஒன்றே???

இலங்கையை  துண்டாடுவது ?  அல்லது முற்றாக அடைவது???

மகிந்த  இவருக்கு மட்டும்   தான்  உண்மையை  சொல்வார்  போலும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, வாதவூரான் said:

அதென்னடாப்பா சூளுரை?யாருக்கு எதிராக

சூளுரை எண்டது அவருக்கு பழக்க தோசத்திலை வந்திட்டுது😁

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் இல்லை என்றால் நான் அரசியலில் இருக்கமாட்டேன்..

மத்தியில் கூட்டாட்சி.. மாநிலத்தில் சுயாட்சி..

இப்படி.. புலிகளை வைச்சு பூச்சாண்டி காட்டிக்கொண்டு.. சிங்களக் கூடாரத்துக்குள் ஒதுங்கின குள்ள நரிகள் எல்லாம்.. இப்ப வெளில வந்து ஊளையிடுகுதுங்க.

சரி அதுகிடக்கட்டும்.. 40,000 வேலை வாய்ப்பு வரட்டும்.. இப்ப கொரோனா காலத்தில் வேலை இழந்த 4 இலச்சம் பேருக்கு வேலை எங்கையப்பு... நரைத்த தாடிக்கார குத்தியரே. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

இந்தியாவிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுதான் வருகின்றன. கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் மூன்று தடவைகள் அங்கு எரிபொருள் விலை ஏற்றப்பட்டுள்ளது.

ஒரு பிச்சைக்காரன் மற்றொரு பிச்சைக்காரனைப்பார்த்து தன்னை தேற்றிக்கொள்க்கிறார்.

15 hours ago, கிருபன் said:

அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 40,000 நேரடி வேலை வாய்ப்புக்களையும் சுமார் 200 பில்லியனுக்கும் மேற்பட்ட அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்வதையும் இலக்காக கொண்டு செயற்பட்டு வருவதாகவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.

நந்த சேனாவின் அடுத்த ஜனாதிபதி ஆசைக்கு துண்டு விரிக்கிறார். இவருக்கு புலியை விட்டால் பேசுவதற்கு ஒன்றுமில்லை, புலியால் தனக்கு அரசியலில்  ஒரு தளம் கிடைத்ததை எப்படி எளிதில் மறப்பாரவர்? வெகு விரைவில் துண்டை சுருட்டிக்கொண்டு ஓடும் காலம் வரும் அப்போ பேசுவோம் இவரோடு.  இப்போ உளறட்டும் விடுங்களவரை. இது அந்தாளோடு கூடப்பிறந்தது. எதுக்கெடுத்தாலும் சம்பந்தமில்லாமல் புலிகளை இழுத்து தன்னை ஒரு கதாநாயனாக நிறுத்த முயற்சிக்கிறார். இவர் தூஷிக்கும்போதெல்லாம் புலிகளின் புகழ் எகிறிக்கொண்டே போகும். இன்று சிங்களமக்கள் சிலரே உணருகின்றனர், இன்னும் சில நாளில் வெளிப்டையாகப் பேசுவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.