Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலுடன் ஜனாதிபதி ஆலோசனை சபையை சந்திக்கத் தயாராகிறார் சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலுடன் ஜனாதிபதி ஆலோசனை சபையை சந்திக்கத் தயாராகிறார் சுமந்திரன்

ஆர்.ராம்

நாடாளவிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பட்டிலுடன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான ஆலோசனை சபையை சந்திப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தயாராகி வருகின்றார்.

கடந்த 25ஆம் திகதி 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 13ஆவது பிரிவுக்கு ஏற்ப, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆலோசனை சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர அறிவித்திருந்தார்.

முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான இந்த ஆலோசனை சபையின் ஏனைய உறுப்பினர்களாக,  ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ. ஆர்.ஹெய்யந்துடுவ மற்றும் ஓய்வுபெற்ற சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Sumanthiran.JPG

இச்சபையானது, பயங்கரவாத நடவடிக்கைகள் சம்பந்தமாக சிறைத்தண்டனையை அனுபவிக்கும் மற்றும் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் குறித்து கண்டறிதல், விடுதலை செய்தல், பிணை வழங்குதல் உள்ளிட்ட எதிர்காலத் தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு பரிந்துரைகள் மற்றும் ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளது.

இந்நிலையில் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடத்தில் குறித்த சபை ஊடாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது அன்புக்குரியவர்களின் விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கு அமைவாக, முதற்கட்டமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலை மேற்படி சபைக்கு அனுப்ப உள்ளதாகவும், அதன் பின்னர் குறித்த சபையின் அங்கத்தவர்களை நேரில் சந்தித்து பேச்சுக்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் ஏற்கனவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடத்தில் பட்டியலொன்றை வழங்கியுள்ள நிலையில் தற்போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சபையிடத்திலும் அவ்விதமான பட்டியலொன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், இவர்களின் விடுதலை விடயத்தில் சாத்தியமான அனைத்து வழிகளிலும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
https://www.virakesari.lk/article/112219

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளவிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பட்டிலுடன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான ஆலோசனை சபையை சந்திப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தயாராகி வருகின்றார்.

ஐயாவுக்கு பெட்டி ரெடி....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, alvayan said:

ஐயாவுக்கு பெட்டி ரெடி....

இது 2005 இல் மகிந்தவுக்கு வெற்றியை உறுதி செய்வதற்காக வழங்கப் பட்டதாகச் சொல்லப் படும் பெட்டியை விடப் பெரிசாமா?

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Justin said:

இது 2005 இல் மகிந்தவுக்கு வெற்றியை உறுதி செய்வதற்காக வழங்கப் பட்டதாகச் சொல்லப் படும் பெட்டியை விடப் பெரிசாமா?

அப்படி சொல்லப்பட்ட பெட்டியில் இன விடுதலை போராட்டத்தை தொடர்வதற்கான ஒரு காரணம் பிரபாகரன் பக்கம் இருந்திருப்பதை தவிர வேறு எந்த காரணமும் இருந்திருக்க முடியாது,

சுமந்திரனுக்கு ஒரு பெட்டி கிடைப்பதாயிருந்தால் அது என்ன காரணமாயிருக்கலாம் ஜஸ்டின்?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலுடன் ஜனாதிபதி ஆலோசனை சபையை சந்திக்கத் தயாராகிறார் சுமந்திரன்

நல்ல விடயமாக சந்திக்கிறார்.கூடவே மற்றவர்களையும் கூட்டிக் கொண்டு போகாமல் தனியே ஏதேதோ பேசிவிட்டு பின்னர் மற்றவர்களை கூட்டி கதைத்ததை நியாயமாக்க முனைகிறார்.

குறைந்த பட்சம் என்ன கதைக்கப் போகிறார் என்று யாருக்குமே தெரியாது.
 
கூட்டமைப்பில் உள்ளவர்ளும் கையாலாகாதவர்களாகவும் தலையாட்டி பொம்மைகளாகவும் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

கூட்டமைப்பில் உள்ளவர்ளும் கையாலாகாதவர்களாகவும் தலையாட்டி பொம்மைகளாகவும் இருக்கிறார்கள்.

கூட்டமைப்பு மட்டும் அல்ல, புலம் பெயர் அமைப்புகள், நாட்டில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகள் எல்லாவற்றிலும் இதுதான் நிலமை.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு தலைமைத்துவ பண்பு உள்ளவரை காண முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகள் என்றும் வரவேற்கதக்கது.

ஆனால், அவை இதய சுத்தியுடன் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அவை மூடிய அறைகளுக்குள் காதும் காதும் வைத்தால் போல் இடம்பெற வேண்டிய அவசியம் நிச்சயம் இல்லை.

பேச்சு வார்த்தைகள், ஆலோசனைகள் நேரடியாக எல்லாரும் பார்க்கக்கூடிய மாதிரி நேரலையில் ஒலிபரப்பு செய்யப்பட்டால் சகல தரப்பினருக்கும் ஒரு நம்பிக்கை பிறக்கும். 

சில தரப்பினர் தமக்குள் இரகசியமாக உரையாடி, பல்வேறு விடயங்களை பேசிவிட்டு இதுதான் பரிகாரம் என்று மக்களிடம் திணிக்க ஏதுவித அவசியமும் இல்லை. அது யாராக விளங்கினாலும் சரி.

மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த, நாட்டை வளப்படுத்த நவீன தொடர்பாடல் தொழில்நுட்பத்தை சரியான முறையில் அனுகூலமாக பயன்படுத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

அப்படி சொல்லப்பட்ட பெட்டியில் இன விடுதலை போராட்டத்தை தொடர்வதற்கான ஒரு காரணம் பிரபாகரன் பக்கம் இருந்திருப்பதை தவிர வேறு எந்த காரணமும் இருந்திருக்க முடியாது,

சுமந்திரனுக்கு ஒரு பெட்டி கிடைப்பதாயிருந்தால் அது என்ன காரணமாயிருக்கலாம் ஜஸ்டின்?

நீங்கள் சொல்லும் இராச தந்திரப் பெட்டி பற்றி வெவ்வேறு அபிப்பிராயங்கள் இருக்கலாம்! - என்னப் பொறுத்தவரை "சர்வதேசம் கேட்கும்" என்ற தவறான எதிர்பார்ப்பினால் மக்கள் மீது போட்டுக் கொண்ட மண்ணே அந்தப் பெட்டிக்குள் இருந்தது.

ஆனால், நான் கேட்டதன் அர்த்தம், சுமந்திரன் சம்பந்தன் பெட்டி வாங்கியதாக இங்கு எழுதும் யாருமே அது பற்றி எந்த குட்டிச் சுவர் ஊடக செய்தி ஆதாரம் கூடத் தருவதில்லை! ஆனால், புலிகள் பெட்டி வாங்கியதாக ஒரு வதந்தியைக் கண்டாலே "ஆதாரபுருஷர்களாக" மாறி ஆதாரம் கேட்பர்!

எனவே இரண்டும் ஆதாரங்கள் இல்லாத ஒரே மாதிரியான புழுகுகள் என்று காட்டவே அப்படி கேட்டேன்.

மற்ற படி சுமந்திரனுக்கோ சம்பந்தனுக்கோ பெட்டி வாங்கி வருமானம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லையென்பதே எனக்குத் தெரிந்த வரையில் நிலைமை. அதெல்லாம், சுரேஷ், செல்வம் எ.பி கால விளையாட்டுக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

மற்ற படி சுமந்திரனுக்கோ சம்பந்தனுக்கோ பெட்டி வாங்கி வருமானம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லையென்பதே எனக்குத் தெரிந்த வரையில் நிலைமை. அதெல்லாம், சுரேஷ், செல்வம் எ.பி கால விளையாட்டுக்கள்!

கனடிய  தமிழரசு கட்சி தலைவர் கேட்ட கணக்கு வழக்கை உங்க ஆள் சுமத்திரன் கொடுத்துவிட்டாரா ?

கனடாவில் சேர்க்கப்பட்ட பணத்துக்கு உங்க ஆளிடம் கணக்கு கேட்ட தமிழரசு ஆட்களிடமே கேஸ் போடுவேன் என்று மிரட்டியது பொய் கதையா ?

சம்பந்தனுக்கு கொழும்பில் சிங்கள அரசால் கொடுக்கப்பட்ட மாளிகை வீடு எதற்காக இலவசமாக கொடுக்கப்பட்டது ?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

சம்பந்தனுக்கு கொழும்பில் சிங்கள அரசால் கொடுக்கப்பட்ட மாளிகை வீடு எதற்காக இலவசமாக கொடுக்கப்பட்டது ?

அசந்து தூங்க🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

கனடிய  தமிழரசு கட்சி தலைவர் கேட்ட கணக்கு வழக்கை உங்க ஆள் சுமத்திரன் கொடுத்துவிட்டாரா ?

கனடாவில் சேர்க்கப்பட்ட பணத்துக்கு உங்க ஆளிடம் கணக்கு கேட்ட தமிழரசு ஆட்களிடமே கேஸ் போடுவேன் என்று மிரட்டியது பொய் கதையா ?

சம்பந்தனுக்கு கொழும்பில் சிங்கள அரசால் கொடுக்கப்பட்ட மாளிகை வீடு எதற்காக இலவசமாக கொடுக்கப்பட்டது ?

212 பன்னிபிட்டிய பஸ் கணக்கா? அது தொடர்பாக நக்கீரரே நேரடியாக அந்த அம்மணியிடம் கேட்டு அந்த அம்மணி "எனக்கு சுவர்" இல்லை என்ற சுருதி மங்கிய CMR பேட்டியை நீங்கள் கடந்து மறந்து போய் விட்டீர்களென நினைக்கிறேன்!😂 ஆதாரமில்லாமல் அவதூறு செய்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க யாருக்கும் உரிமை இருக்கிறது, சுமந்திரனுக்கு இல்லையோ?

எதிர்கட்சி தலைவராக இருந்தவர், இலங்கையின் சீனியர் அரசியல் தலைவர்களுள் ஒருவர், ஊழல் வாதியென்று இனவாதியான சிங்களப் பேர்வழிகளே விரல் நீட்டிக் பேசாத சம்பந்தருக்கு அரசு ஒரு வீட்டைக் கொடுத்தது! இதில் முறைகேடிருந்தால் உங்கள் அப்புக் காத்து பொன்னம்பலத்தாரே ஒரு வழக்குப் போட்டிருக்கலாம்! ஏன் போடவில்லை? எல்லாம் சம்பந்தன் சில சலுகைகளுக்கு உரித்துடையவர் என்ற புரிதல் தான். இதெல்லாம் இலங்கையில் இந்தியாவில் ஒரு பெரிய மேட்டரா? 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

எல்லாமே சொதப்பல் முயற்ச்சி பண்ணுங்க வெள்ளையடிப்பது  எப்படி என்று .

9 minutes ago, Justin said:

எதிர்கட்சி தலைவராக இருந்தவர், இலங்கையின் சீனியர் அரசியல் தலைவர்களுள் ஒருவர், ஊழல் வாதியென்று இனவாதியான சிங்களப் பேர்வழிகளே விரல் நீட்டிக் பேசாத சம்பந்தருக்கு அரசு ஒரு வீட்டைக் கொடுத்தது!

கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவில் பிக்குகளால் உடைக்கப்படும்போது ஆழ்ந்த நிஷ்டையில் உங்க ஆள் இருந்ததுக்கு  கிடைத்த பரிசு கொழும்பு வீடு என்கிறார்களே அது பொய்யா ?

கோத்தபாயவின் ஆணைக்குழு: நித்திரை விட்டெழுந்த சம்மந்தன்திருவாய் மலர்ந்தார்

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

எல்லாமே சொதப்பல் முயற்ச்சி பண்ணுங்க வெள்ளையடிப்பது  எப்படி என்று .

இதில் எது சொதப்பல் என்று சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.

அந்த அம்மணி நிச்சயமில்லாத ஒரு கற்பனையை தேர்தல் நேரம் அவிழ்த்து விட்டார் என்பது மட்டும் தான் இது வரையில் நிரூபணமான விடயம்.

சுமந்திர சங்காரம் என்று வந்தால் நீங்கள் தார்பேணியோடு வருவீர்கள் என்பது தெரியும். சுமந்திரனிடம், சம்பந்தனிடம் சீரியசான குறைபாடுகள் உண்டு! ஆனால், ஊழல், பண மோசடி அந்தக் குறைபாடுகளில் இல்லையென்று என்னால் கூற முடியும், வேறு பலரும் இதை அறிவர். உங்கள் சுமந்திரப் பகை புரிந்து கொள்ளக் கூடியதே, ஆனால் நியாயமான குறைபாடுகளைப் பேசுங்கள் என்பதே கோரிக்கை! 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

கேள்விகளுக்கு பதில் தெரியாவிடின் ஒத்துகிறேன்  என்று சொல்லிவிடுங்க  அதென்ன தார் பேணி ?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

கேள்விகளுக்கு பதில் தெரியாவிடின் ஒத்துகிறேன்  என்று சொல்லிவிடுங்க  அதென்ன தார் பேணி ?

பதில் தெரியும்! மேலே மெனக்கெட்டு 2 பந்தி எழுதியிருக்கிறேன்! வாசிக்க வேண்டியது கேள்வி கேட்டவரின் கடமை .

ஆனால், "எனக்குப் பிடித்த பதில் உனக்குத் தெரியாது" என்று பெருமாள் சொன்னால் அது உண்மை - உங்களுப் பிடித்த பதில் என்னிடம் இல்லை!  😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

ஆனால் நியாயமான குறைபாடுகளைப் பேசுங்கள் என்பதே கோரிக்கை! 

உங்கள் ஆள் பாதுகாப்பு இல்லாமல் லண்டன் தமிழ் மக்களை சந்திக்க முடியுமா ?

நிறைய கேள்விகள் இருக்கு  அசம்பாவிதம் எதுவும் நடக்காது .

Just now, Justin said:

ஆனால், "எனக்குப் பிடித்த பதில் உனக்குத் தெரியாது" என்று பெருமாள் சொன்னால் அது உண்மை - உங்களுப் பிடித்த பதில் என்னிடம் இல்லை!  😂

பெரியவர் நீங்கள்  ஒருமையில் விழிப்பேனா ?

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

உங்கள் ஆள் பாதுகாப்பு இல்லாமல் லண்டன் தமிழ் மக்களை சந்திக்க முடியுமா ?

நிறைய கேள்விகள் இருக்கு  அசம்பாவிதம் எதுவும் நடக்காது .

🤣இப்ப சூம் தானே வசதி? சூமில் செய்யுங்கள்!

அவுசில் பேப்பர் இல்லாமல் இருந்த றௌடிகளை முகத்துக்குத் துணி கட்டி அனுப்பி ரகளை பண்ணிய பிறகு நேரடியாக பெருமாள் போன்ற ஆட்களை சுமந்திரன் சந்திக்க மாட்டாரென நினைக்கிறேன், அவரைக் குறை சொல்ல முடியுமா?😂  

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

பெருமாள் போன்ற ஆட்களை சுமந்திரன் சந்திக்க மாட்டாரென நினைக்கிறேன், அவரைக் குறை சொல்ல முடியுமா?

என்ரை பெருமாளே உனக்கிந்த கேடுகெட்ட வசவா ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம் ஓம் நமோ ஸ்ரீ வேங்கடேசாய நமஹ.

🤣

லண்டன் நேரம் 2 நாளை சந்திப்போம் இப்போதைக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

கூட்டமைப்பு மட்டும் அல்ல, புலம் பெயர் அமைப்புகள், நாட்டில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகள் எல்லாவற்றிலும் இதுதான் நிலமை.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு தலைமைத்துவ பண்பு உள்ளவரை காண முடியவில்லை.

பொன்னான நேரங்களிலெல்லாம் எமது பக்கம் பந்துகள் இருந்த போதெல்லாம் நல்ல தலைவன் இல்லாததால் வெகு சுலபமாக தமிழர் பிரச்சனைகளை புறந்தள்ளிவிட்டு போய்விட்டார்கள்.

திரும்பதிரும்ப ஒரே பிழையை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

3 hours ago, ஈழப்பிரியன் said:

பொன்னான நேரங்களிலெல்லாம் எமது பக்கம் பந்துகள் இருந்த போதெல்லாம் நல்ல தலைவன் இல்லாததால் வெகு சுலபமாக தமிழர் பிரச்சனைகளை புறந்தள்ளிவிட்டு போய்விட்டார்கள்.

திரும்பதிரும்ப ஒரே பிழையை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஈழப்பிரியன் எமது அரசியல்வாதிகள் மட்டுமல்ல நீங்கள் சொன்ன நல்ல தலைவன் உயிருடன் இருக்கும் போதே புலிகளும் பல பொன்னான சந்தர்பங்களை உதறிதள்ளி சென்ற வரலாறு உண்டு. அதன் பலனையே இப்போது அனுபவிக்கிறோம். 

போராட்டத்தில் இழக்கப்பட்டதெலஙாம் தமிழ் மக்களில் வளங்களே. தமிழ் மக்கள் பெற்ற பிள்ளைகளான போ ராளிகளின் அர்பணிப்பு தியாகம் அத்தனையும் வீணாக்கப்பட்டதற்கு புலிகளின் அரசியல் முடிவுகளும் காரணம். ஆகவே அரசியல்வாதிகள் மீது மட்டும் குற்றம் காண வேண்டியதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன்- நான் சொன்ன கணக்கும் சேர்த்தால் தீர்வு ஒரு 500 தரம், அரசியல் கைதிகள் விடுதலை ஒரு 500 தரம்.. ஆகமொத்தம் 1000ம் தரம்… சியேர்ஸ் சுமந்து… 🤜🤛🥂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.