Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பஹந்துடாவா நீர்வீழ்ச்சியில் நிர்வாண பாலியல் காட்சி ஒளிப்பதிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேரையும் பெயிலில விட்டாச்சு...

அடுத்தது, எந்த நீர்வீழ்ச்சி பக்கம் போகப்போகினம் என்று தகவல் வந்ததும் பகிரலாம்...

புரக்கிராசியார் சேனக பெரேரா, வலன்ரியரா, ஜோடிகளுக்காக வாதாடபோவதாக தெரிவித்துள்ளார்.....

நாட்டிலுள்ள மிக கடுமையான குற்றங்களை விசாரிப்பதை விட்டு, இந்த சின்ன விடயத்தை சிஜடி போலிசார் பூதாகரமாக்குவது தவறு என்கிறார் அவர்.

அவர்கள் தாம் இயற்கை சூழலில் தனிமையில் இருந்ததை தானியங்கி கமராவால் படம் பிடித்திருந்தார்கள். அப்போது யாருமே அங்கு இல்லை.

மேலும் அதை, வயதானவர்களுக்கான வெளிநாட்டு தளம் ஒன்றில் பதிவி ஏற்றியிருந்தார்கள்.

அதைப் பார்த்த யாரோ, பதிவிறக்கி, சில இடங்களில் மறைப்பு செய்து, சமூகவலைத்தளங்களின் போட்டிருக்கிறாரகள்.

போலீசார், அதை வைத்தே விசாரிக்கிறார்கள்.

அது தவறானது. அந்த ஜோடிகள் எதிர்காலத்தை பாழடிக்ககூடாது என்கிறார் புரக்கிராசியார்.

அவர்கள், இவரது கிளைண்டாகினமோ இல்லையோ, இவர் அவர்களது கிளைண்ட் ஆகிட்டார் எண்டது உண்மை.. 😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும், கவலைப்பட வேண்டிய விசயம் என்ன என்றால், ஜோடிகளில், ஆணுக்கு, கோவிட் தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

18 hours ago, சுவைப்பிரியன் said:

இந்த இடம் எங்கை இருக்கு.

யோவ் கூட்டு! இப்ப எல்லாரும் அந்த ஏரியாவிலைதான் கண்ணை புடுங்கி வைச்சுக்கொண்டு நிக்கிறாங்கள்.  இதுக்கை அங்கை போய் என்னத்தை புடுங்கப்போறீர்?:cool:

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2021 at 20:24, குமாரசாமி said:

வீடியோ துண்டற கிளியர் இல்லை....அதாலை பிழம்புக்கு எதிராய் பெட்டிசம் எழுதி நிர்வாகத்துக்கு அனுப்பியிருக்கிறன் 😡

பிழ‌ப்பு வேறு யாரும் இல்லை தாத்தா , ந‌ம்ம‌ நிழ‌லி அண்ணா தான் என்று ப‌ச்சை சொல்லுது ஹா ஹா 😁😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

பிழ‌ப்பு வேறு யாரும் இல்லை தாத்தா , ந‌ம்ம‌ நிழ‌லி அண்ணா தான் என்று ப‌ச்சை சொல்லுது ஹா ஹா 😁😀

பிழம்பு என்று லண்டனில் இருந்து ஒருத்தர் வீல் சேரில் வாழ்வை கழிக்கும் முன்னாள் போராளி கடல் புலி என்று அறிமுகப்படுத்தினார் நீங்கள் சொன்னவுடன் அவரின் போனுக்கு கோல் பண்ணினேன் வேலை செய்யவில்லை ஏதோ  மர்மம் .

8 hours ago, பையன்26 said:

பிழ‌ப்பு வேறு யாரும் இல்லை தாத்தா , ந‌ம்ம‌ நிழ‌லி அண்ணா தான் என்று ப‌ச்சை சொல்லுது ஹா ஹா 😁😀

உஸ்... கம்பெனி ரகசியங்களை வெளியில் பப்ளிக் பண்ணக் கூடாது.😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, பையன்26 said:

பிழ‌ப்பு வேறு யாரும் இல்லை தாத்தா , ந‌ம்ம‌ நிழ‌லி அண்ணா தான் என்று ப‌ச்சை சொல்லுது ஹா ஹா 😁😀

 

அப்பன்! உந்த விசயத்திலை நாங்கள் இரண்டு பேரும் சொக்கத்தங்கங்கள்.....கள்ள பெயரிலை வந்து குத்தி முறியவேண்டிய அவசியமில்லை....😁
உண்மை பேசி உத்தமனாக வாழ் 😎

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பழக்கமிது

image_0d51233186.jpg

சின்னையா செல்வராஜா

மலைப்பாங்கான பிரதேசங்களுக்குச் செல்லும் போது, அதற்கேற்ற ஆடைகளை அணிந்துசெல்லவேண்டும். அங்கிருப்பவர்கள் என்னதான் கோடைக்காலமாக இருந்தாலும், குளிர்காலத்துக்குரிய ஆடைகளை அணிந்திருப்பர். அவ்வளவுக்கு அங்கு வீசும் காற்று சாரலுடன் சேர்ந்து முகத்தில் பட்டுத்தெறிக்கும் போது ‘ஜில்’ என்று இருக்கும்.

நீர் வீழ்ச்சிகளில் இருந்து பரந்துவரும் தூவானம் முகங்களில் பட்டால், உடலே சிலிர்க்கும். அங்கிருக்கும் நீர்நிலைகளில் கை,கால்களை வைத்தால் சுரென இழுக்கும் அந்தளவுக்கு குளிர் நிறைந்திருக்கும். அவ்வளவு இயற்கை ரம்மியத்தை கொண்டிருக்கும் ஒவ்வொரு நீர்வீழ்ச்சிகள், நீர்நிலைகளில் அழகுதான்.

அங்கு செல்கின்ற சிலர், வழுக்கிவிழுந்து மரணித்துள்ளனர். இன்னும் சிலர், தன்னுயிரை மாய்த்துக்கொள்கின்றனர். காதலில் தோல்வியடைந்த பலரும், வாழ்வின் விரக்தியில் இருக்கும் பலரும், வாழ்க்கையே பூஜ்ஜியமாகிவிட்டது என நினைத்து, தங்கள் உயிர்களை மாய்த்துக்கொள்கின்றனர். இவையெல்லாம், அந்த நீர்வீழ்ச்சி, நீர்நிலையில் இருக்கும் அழகையே கொன்றுவிடுகின்றனர்.

எத்தனை உயிர்களை இந்த நீர்வீழ்ச்சியும் நீர்நிலைகளும் தன்னகத்தை இழுத்துக் கொண்டுள்ளன எனக் கேள்விப்படும் பலரும், அந்தப் பக்கங்களுக்கே செல்லமாட்டார்கள். ஆனால், இவையெல்லாம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்குத் தெரியாது. அதனால், அவர்கள் இயற்கையை ரசித்து மகிழ்வர்.

அவ்வாறெல்லாம் பெயர்பெற்று போனதுதான் பலாங்கொடை, பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சி. ஆனால், அவ்விடத்துக்குச் சென்ற ஆணொருவரும், பெண்ணொருவரும் நிர்வாணமாக இருந்து பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடும் காட்சிகளும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் அண்மையில் பரவியிருந்தன. அவை, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் பார்வையையும் இழுத்துவிட்டது.

image_bbb1d812ee.jpg

பாலியல் தொடர்பிலான காட்சிகள் அடங்கிய காணொளிகள், புகைப்படங்களை இணையத்தளங்களில் பார்ப்பது, இந்த கொரோனா முடக்க காலத்தில் அதிகரித்துவிட்டது.

பிரபலங்கள் கூட, பாலியல் காட்சிகளை தரவேற்றி, பெருந்தொகையில் சம்பாதித்துகொள்கின்றனர். அந்தவகையில், பஹந்துடாவாவில் பல கோணங்களில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த அந்த ஜோடியின் காட்சிகளை பார்க்கும் போது, கண்களை மூடிக்கொண்டாலும் காட்சிகள் கண்முன்னே, நிழலாய் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அந்தளவுக்கு அலங்கோலமானது.

விடயம் வெளிச்சத்துக்கு வந்ததன் பின்னர், இலங்கை பொலிஸ் கணினிப்பிரிவு அவற்றை முழுமையாக அகற்றியுள்ளது. ஆகையால், அக்காட்சிகளை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் இனியும் இல்லை. எனினும், இவ்வாறு உடம்பில் ஒரு துண்டு துணியில்லாம் நிர்வாணமாக இருந்து பாலியல் செயல்களில் ஈடுபட்டு, ஒளிநாடாவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்த ஜோடியை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மஹரகமவில் வைத்து கைதுசெய்யப்பட்ட அந்த ஜோடியில் ஆணுக்கு 34 வயதும் அப்பெண்ணுக்கு 25 வயதும் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அவ்விருவரின் உடல் அமைப்புகளைப்  பார்க்குமிடத்து, ஆண் 25 வயதான தோற்றத்தை கொண்டவராவும் பெண்ணே 34 வயதான தோற்றத்தை கொண்டவராகவும் காணப்படுகின்றனர்.

மஹரகமவை சேர்ந்த ஆணும், எல்பிட்டியைச் சேர்ந்த பெண்ணுமே இவ்வாறு, நாடே முடக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில், மரங்களையும் நீர்வீழ்ச்சியையும் சாட்சிகளாக வைத்து, தூவானம் வெற்று மேனிகளில் பட்டு சிலிர்க்க அந்தரங்கங்களை அம்பலமாக்கி, ஊர் சிரிக்கச் செய்துள்ளனர்.

பலபிட்டியவைச் சேர்ந்த அந்தப் பெண், மஹகரம பிரதேசத்தில் தங்கியிருந்து, இவ்வாறு அவ்வப்போது, நிர்வாணமாக பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடும் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் தரவேற்றியுள்ளார் என்றும் இதுவரையிலும் 50க்கும் குறைவான அவ்வாறான வீடியோக்களை ஒளிப்பதிவுச் செய்து ஏற்றியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

சமூகவலைத்தளங்களின் ஊடாக வீடியோக்களை ஏற்றி சம்பாதிக்கும் முறைமையை பலரும் கையாண்டு வருகின்றனர். பலவற்றை பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கிறது. இன்னும் சிலவற்றை குடும்பத்தினருடன் இருந்து பார்க்கவே முடியாது. சில, நேரத்தை வீணாடிக்கும் செயற்பாடாகவே உள்ளது.

வெளிநாடுகளில் (prank) அதாவது குறும்பு, சேட்டை எனும் தலைப்புகளில், வீடியோக்கள் தரவேற்றம் செய்யப்படுகின்றன. இந்தியாவில் அதிகரித்துவிட்டது. அதில் பல, சமூகத்துக்கு நல்ல பல கருத்துகளை சொல்பவையாக சில வீடியோக்கள் இருந்தாலும், உணவுகளில் எச்சில் துப்பி கொடுப்பது, உடலமைப்பை விமர்சிப்பது, கைகளை ஓங்கி சண்டைப்பிடித்துக்கொள்வது, கோபத்தை ஏற்படுத்தும் வகையிலான வசனங்களுக்கு பஞ்சமே இல்லை.

சமூகத்துக்கு நல்ல கருத்துகளை சொல்லபோய். இறுதியில், கொடூரமான காட்சிகளை அவை காண்பிக்கின்றன என்பது வேதனையளிக்கிறது. சில செனல்களில், சிறுவர்களை வைத்து இவ்வாறு குறும்பு செய்யப்படுகின்றது. அவையெல்லாம் தவிர்க்கப்படவேண்டும்.

சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை ஏற்றி சம்பாதிக்கும் சிலரின் பின்னால் பலரும் சென்று, அவர்களை பார்த்து  ‘போலச் செய்தல்’ போல பின்பற்றுவதையும் அவதானிக்கமுடிகின்றது.ஒவ்வொரிடத்திலும் ஒவ்வொரு திறமைகள் இருக்கின்றன. அத்திறமைகளை வெளிக்காட்டவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை.

கொரோனா வைரஸ் காலத்தில் முடக்கத்துக்கு வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பலரும், அலைபேசியே கெதியென கிடக்கின்றனர். அவ்வாறானவர்கள் எழுதில் வீழ்த்தவேண்டுமாயின் வீடியோவே சிறந்ததோர் ஆயுதமாகும்.

அந்த ஆயுதத்தை மேலே குறிப்பிட்ட ஜோடி, பலாங்கொடை பஹந்துடாவாவில் தவறாக பயன்படுத்தியுள்ளது. இது இளம் சமூதாயத்தினரை தீய வழிக்கு இழுத்துச் செல்லும். ஆகையால், வீடியோக்களை பார்ப்பவர்கள் தேர்ந்தெடுத்து பார்க்கவேண்டும். ஏற்றுவோர், பல கோணங்களிலும் சிந்தித்து ஏற்றவேண்டும். இல்லையேல், ஜோடி மட்டுமன்றி, குடும்பமும் சமூகமும் ஏன், நாடே நிர்வாணமாகிவிடும் என்பது மட்டுமே உண்மையாகும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/என்ன-பழக்கமிது/91-280246

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்தான பதிவு........ஆனால் எல்லாம் "செவிடன் காதில் ஊதிய சங்கு"தான்.......!  🤭

நன்றி கிருபன்......!  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

மரங்களையும் நீர்வீழ்ச்சியையும் சாட்சிகளாக வைத்து, தூவானம் வெற்று மேனிகளில் பட்டு சிலிர்க்க அந்தரங்கங்களை அம்பலமாக்கி, ஊர் சிரிக்கச் செய்துள்ளனர்.

இல்லையே. ஊரை வாயை பிளந்து பார்க்க வைத்தார்கள். இளசுகளை உருக்கி, உருகி பார்க்க வைத்தார்கள்.
 

நடுவயதுக்கும், பழசுகளுக்கும் ஏக்கமும், கோபமும் , தாமும் இப்படைய அனுபவிப்பதத்திற்கு, சம்மோக, கலாசார, பொருளாதார சூழ்நிலைகள் அனுமதிக்கவில்லை என்று. 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாணமாக பாலியல் உறவு ; ஜோடிக்கு சிறை தண்டனை

image_a51bc26ab3.jpg

பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக  பாலியல் செயற்பாடுகளில்  ஈடுபட்டு , அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவெளியிட்டனர்  ஜோடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .

பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில்  அவ்விருவரும் ஆஜராகியிருந்தனர். இதன் போதே, தலா 10 ஆயிரத்து 800 ரூபாவும் நான்கு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட மூன்று மாதங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது 

மஹரகமையைச் சேர்ந்த 34 வயதான ஆணும், எல்பிட்டியைச் சேர்ந்த 25 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர் 

வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாச பயணிகள்   குடும்பங்களுடன் சென்று நீராடும் அந்த நீர்வீழ்ச்சிக்கு கீழிருக்கும் நீர் நிலையில் வைத்தே, நிர்வாணமாக பாலியலில் ஈடுபடும் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.   

அவ்விருவரும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அத்துடன் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில்  ஏற்றுக் கொண்டுள்ளனர். 
 

 

https://www.tamilmirror.lk/மலையகம்/நிர்வாணமாக-பாலியல்-உறவு-ஜோடிக்கு-சிறை-தண்டனை/76-282081

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2021 at 09:19, suvy said:

நல்ல கருத்தான பதிவு........ஆனால் எல்லாம் "செவிடன் காதில் ஊதிய சங்கு"தான்.......!  🤭

நன்றி கிருபன்......!  

எனக்கொரு சந்தேகம் சுவி அவர்களே! இந்தியாவின் கயூரகோவிலில் இருக்கும் பாலியல் சிற்பங்கள் பலநூற்றாண்டுகளாக தொடர்ந்தும் உள்ளது, அதற்கான பாடல்களும் உள்ளன, பல அறிஞர்களும், பெரியோர்களும் போற்றியும் வருகிறார்கள், பல நாட்டவர்களும் அதனைத் தரிசித்துள்ளார்கள். அதனால் எந்த நாடு நிர்வாணமடைந்தது.??🤔 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Paanch said:

எனக்கொரு சந்தேகம் சுவி அவர்களே! இந்தியாவின் கயூரகோவிலில் இருக்கும் பாலியல் சிற்பங்கள் பலநூற்றாண்டுகளாக தொடர்ந்தும் உள்ளது, அதற்கான பாடல்களும் உள்ளன, பல அறிஞர்களும், பெரியோர்களும் போற்றியும் வருகிறார்கள், பல நாட்டவர்களும் அதனைத் தரிசித்துள்ளார்கள். அதனால் எந்த நாடு நிர்வாணமடைந்தது.??🤔 

சம்பந்தப்பட்டவர்களே தாம் செய்தது குற்றம் என ஏற்றுக்கொண்டதால் உங்களின் வினா கிடப்பில் போடப்படுகின்றது பாஞ்ச்......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

சம்பந்தப்பட்டவர்களே தாம் செய்தது குற்றம் என ஏற்றுக்கொண்டதால் உங்களின் வினா கிடப்பில் போடப்படுகின்றது பாஞ்ச்......!   😁

Bildergebnis für Simylis

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.