Jump to content

புலம்பெயர் தமிழர்களிடம் ஒத்துழைப்பு கோரும் ஜனாதிபதி கோட்டபாய


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளக பொறிமுறையொன்றின் கீழ் தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குமாறு புலம் பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். 

242269062_468366034152162_15834314317546

242298441_1711468915703991_1429259919693

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக்கொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸை சந்தித்து கலந்துரையாடி போதே இதனை தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களிடம் ஒத்துழைப்பு கோரும் ஜனாதிபதி கோட்டபாய  | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மணிநேரமாகியும் ஒரு சத்தத்தையும் காணல ஏனோ🤔🤔🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு மணிநேரமாகியும் ஒரு சத்தத்தையும் காணல ஏனோ🤔🤔🤔

சனம் கூடி கூடி பேசுது. இன்னும் முடிவு எடுக்கல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

சனம் கூடி கூடி பேசுது. இன்னும் முடிவு எடுக்கல.

 அவசரமா முடிவ எடுத்திடாதீங்க அந்த மனுசன் இஞ்ச வந்து இது பெளத்த நாடு பழயங் என்று சொல்லிடுவான் வாப்பா😋😋😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 அவசரமா முடிவ எடுத்திடாதீங்க அந்த மனுசன் இஞ்ச வந்து இது பெளத்த நாடு பழயங் என்று சொல்லிடுவான் வாப்பா😋😋😄

 

அவருக்கு புரியுது? எங்க எதை  விடலாம் என்று?😪

நாம தான்  அங்குள்ளவனைப்பற்றி இங்குள்ளவன் பேசக்கூடாது  என்கிறோம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

 

அவருக்கு புரியுது? எங்க எதை  விடலாம் என்று?😪

நாம தான்  அங்குள்ளவனைப்பற்றி இங்குள்ளவன் பேசக்கூடாது  என்கிறோம்?

பேசுங்க பேசுங்க ஆனால் பேசி பேசியே நாட்கள் வருடங்களாக ஓடுகின்றன. 🙄🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பேசுங்க பேசுங்க ஆனால் பேசி பேசியே நாட்கள் வருடங்களாக ஓடுகின்றன. 🙄🙄

 

கூப்பிடுவதற்கான தகுதியை அல்லது  தருணத்தை ஏற்படுத்துவதே முதல் வெற்றி  தானே?

காலில்  விழுந்தவர்களை  அவர்  கணக்கே எடுக்கவில்லை  என்பதும் தெரிகிறது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று யாருமே இல்லை.. நாட்டை விட்டு ஓடித்தப்பிய புலிகளை தவிர என்றவர்.. எப்படி புலம்பெயர்ந்த தமிழர்களை இனங்கண்டு.. அழைப்பு விடுத்தார்.

ஒருவேளை அவரே இனங்கண்ட புலிகளோடு பேச அழைக்கிறாரோ..??!

சொறீலங்காவின் எந்த உள்ளகப் பொறிமுறையும் தமிழர்களுக்கு தீர்வைத் தராது. வெளியார் மத்தியஸ்த்துடனான.. வெளியார் பங்களிப்புடனான.. ஐநா மேற்பார்வையில் அமையும்.. சுதந்திர தமிழீழத்துக்கான தேர்தல் நடத்துவதன் மூலமே.. தமிழர் பிரச்சனைக்கு முடிவு கட்ட முடியும்.

கோத்தாவின் இந்தப் பேச்சு.. சொறீலங்காவை பொருண்மிய.. பூகோளச் சிக்கலில் இருந்து மீட்கும் உள்நோக்கம் கொண்டதே அன்றி.. புலம்பெயர் தமிழர்களை இனங்காணவே மறத்த கோத்தா அவர்களை புலிகள் என்ற கோத்தா எப்படி.. இப்படி ஒரு கூவல் கூவுவார். ஆக இதன் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு..

சர்வதேச அழுத்தம் இன்னும் இன்னும் சொறீலங்கா மீது அதிகரிக்கச் செய்யப்படுதல் வாயிலாக மட்டுமே.. அதுவும் இன்றைய பொருண்மிய நெருக்கடி காலத்தில் அமைந்தால் மட்டுமே.. ஏதாவது அரைகுறையாவது கிடைக்க வாய்ப்பை ஏற்படுத்த சந்தர்ப்பம் அமையும். மற்றும்படி,..

இலவு காத்த கிளிகளாக வேண்டியதுதான்.. கோத்தா - மகிந்த கும்பலின் பசப்பை நம்பினால். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கோ...அவர் இன்னமும் பேரப்பிள்ளையை பாக்கேல்லை...அலுவல் முடிஞ்சவுடனை சுயரூபம் தெரியும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்சார சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது இலங்கை மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனு விசாரணையின் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகரால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போதே, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இதனை தெரிவித்தார். பாராளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பு மூலம் மட்டுமே சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இதன்போது தெரிவித்தார். எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, குறித்த சரத்துக்கள் திருத்தப்பட்டால் சட்டமூலம் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/303069
    • குர்பாஸ், இப்ராஹிம், பாறூக்கி ஆகியோரின் அபார ஆற்றல்களுடன் உகண்டாவை வீழ்த்தியது ஆப்கான் 04 JUN, 2024 | 12:20 PM (நெவில் அன்தனி) கயானா, ப்ரொவிடன்ஸ் விளையாட்டரங்கில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவடைந்த ஆப்கானிஸ்தானுக்கும் உகண்டாவுக்கும் இடையிலான 9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் சி குழு போட்டியில் ஆப்கானிஸ்தான் 125 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது. ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்றாஹிம் ஸத்ரான் ஆகியோரின் அதிரடி அரைச் சதங்களும் பஸால்ஹக் பாறூக்கியின் 5 விக்கெட் குவியலும் ஆப்கானிஸ்தானின் வெற்றியை மிகவும் இலகுவாக்கின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், ஆரம்ப வீரர்களின் அதிரடி துடுப்பாட்ட உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களைக் குவித்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகிய இருவரும் 154 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். இந்த இணைப்பாட்டமானது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப விக்கெட்டுக்கான இரண்டாவது அதிசிறந்த இணைப்பாட்டமாகும். இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜொஸ் பட்லர் ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற 2022 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் பகிர்ந்த பிரிக்கப்படாத 170 ஓட்டங்களே ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மிகச் சிறந்த ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாகும். ரஹ்மானுல்லா குர்பாஸ் 45 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 76 ஓட்டங்களையும் இப்ராஹிம் ஸத்ரான் 46 பந்துகளில் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 70 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களை விட மொஹமத் நபி ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ப்றயன் மசாடா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கொஸ்மஸ் கிவுட்டா 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 185 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உகண்டா 16  ஓவர்களில்  சகல விக்கெட்களையும் இழந்து 58 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் ரொபின்சன் ஒபுயா (14), ரியாஸாத் அலி ஷா (11) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக்கி 5 ஓவர்களில் 9 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் சார்பாக பதிவான சிறந்த பந்துவீச்சுப் பெறுதி இதுவாகும். அவரைவிட நவீன் உல் ஹக் 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ராஷித் கான் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: பஸால்ஹக் பாறூக்கி https://www.virakesari.lk/article/185283
    • தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.மணி 13703 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகன் மூன்றாமிடமும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா நான்காமிடமும் பெற்றுள்ளனர்.     விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 221257 பெற்று பெற்று பின்னடவை சந்தித்துள்ளார். முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 228091 வாக்குகளுடன் முதலிடத்திலும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 96485 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் கவுசிக் 44712 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.      
    • ஒரு பாரம்பரிய பத்திரிகையாம் வீரகேசரி இப்படி தமிழை  வதைக்குது .
    • இந்தப் போட்டியில் என்னை ஒருத்தரும் வெல்லமாட்டினம் போல இருக்கு! வென்றால் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் நன்றி!
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.