Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 6/10/2021 at 11:43, vasee said:

https://www.smh.com.au/business/banking-and-finance/apra-unveils-loan-curbs-for-new-customers-as-housing-risks-grow-20211006-p58xlt.html

https://www.corelogic.com.au/news/impact-macro-prudential-policies-housing-market

APRA புதிய விதிமுறைமகளுக்கமைய assessment rate 2.5% இலிருந்து 3.0% அதிகரிக்கவுள்ளது, அதாவது அவுஸ்ரேலியாவில் முன்னர் வீட்டுக்கடன் பெறுபவர்கள உதாரணமாக 3.25% வட்டிவீதத்தில் கடன் பெறுபவர்களின் கடன் பெறும் தகுதி (3.25% + 2.5 ) 5.75% கணிக்கப்படும், புதிய நடைமுறையில் 6.25% கணிக்கப்படும். 

பங்கு சந்தையில் வங்கிகளின் பங்கு விலை குறைவு ஏற்படலாம்.

Commonwealth bankம் Westpacம் owner occupiedற்கான வீட்டுகடனின் நிலையான வீதத்தை 0.1% அதிகரித்துள்ளார்கள்.. அதே நேரம் அவர்களின் பங்குகளின் பெறுமதியும் குறைந்துள்ளது.. இந்த மாதம் முடிவதற்கிடையில் வங்கிகள் தமது நிதியாண்டு அறிக்கையை வெளியிடும்.. அப்பொழுது பங்குகளின் நிலவரத்தில் மாற்றம் வருமா தெரியவில்லை.. 

https://www.google.com.au/amp/s/amp.9news.com.au/article/d9484124-5ac4-4103-a2b1-87b4d65e807b

Edited by பிரபா சிதம்பரநாதன்
செய்தியின் மூல இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது
  • Like 1
  • Replies 665
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிரிப்டோ கரன்சி எனக்கு நீண்ட நாளாக அறிமுகம் ஆனாலும் சென்ற மாதம்தான் ஒரு 150 யூரோ முதலீடு செய்தேன் ஆரம்பத்தில் 0.0000034 என ஒரு நாணயத்தை வாங்கி காத்திருப்புக்குப் பின்பு 0.00005490 என்னும் அளவுக்குக் கூடியது வித்த வகையில் ஒரு 150 யூரோ இலாபம் அதுக்குப் பின்புதான் பிரச்சனை கண்டதையெல்லாம் வாங்கிப்போட்டால் லாபம் சம்பாதிக்கலாம் என நினைச்சு வாங்கியவிடத்தில் கால்வாசி அடிபட்டுட்டு. பின்பு கொஞ்சம் இலாபம் வந்தது பிற்காயின் விலை அதிகரிக்குது என இருந்த 300 யூரோவை அதில் போட இலாபம் என்பது கண்ணுக்குத் தெரிந்தது ஆனால் கணக்குக்கு வரவில்லை காரணம் 56000 த்தை பிற்காயின் தாண்டியதால எனது பணம் அதுக்குப் புழுதியாகத் தெரிந்தது. பின்பு அதை வித்திட்டு யூ எஸ் டி ரீ ஆக வைத்திருக்கிறேன் எங்காயாவது சந்தர்ப்பம் கிடைத்தால் இறக்கிப்பார்க்கலாம் என.

சரி அதைவிடுங்கோ வீ ஆர் ஏ  எனும் காயின் வாங்கும்போது அரைமனத்தில வாங்கினேன் இப்போ அது கொங்சம் ஏறி நிற்குது ஒருத்தன் சொல்லுறான் அண்ணை அவசரப்பட்டு விற்காதையுங்கோ இன்னும் ஏறும் என பாப்பம்

இன்னுமொரு விடையம் இதில் கூடய அளவு ஈடுபாடு காட்டவேண்டாம் பிறகு கசிணோ விளையாட்டாக மாறிவிடும்.

முக்கிய தகவல்

இன்னுமொருதர்

ரோபோ ஒன்றைச் செற் பண்ணிவைத்திருக்கிறார் 5000 யூரோகளை முதலிட்டு, ஒருநாளைக்கு 25 டாலர் தருகுது நீங்கள் ஒப்போ இதலை போடவேண்டாம் இப்பதான் ரோபோவைச் செற்பண்ணிணான் ஒருமாதத்துக்குப் பின்பு சொல்லுறன் இலாபமா நட்டமா என அதுக்கு பிறகு நீங்கள் செற் பண்ணுங்கோ என எதோ சின்ன வீடு செற் பண்ணுமாப்போல் சொல்லுறான் நல்லா வந்தால் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம் என நினைக்கிறன்.

மீண்டும் சொல்லுறன் ஆயிரம் தடவை யோசிச்சுச் செய்யுங்கோ இது கசிணோ விளையாட்டு மாதிரி இரவு பகலாக நித்திரை கொள்ளவும் விடாது. 

  • Like 2
Posted

கிரிப்டோ நல்ல முதலீடு தான் ,நான் doge coin  0.09 $ வாங்கினேன் அது கிட்டதட்ட .50$ வரை ஏறி இப்போது இறங்கி இருக்கிறது ,நான் குறைந்த விலையில் வாங்கி இருந்ததனால் லாபமே, இப்போது shiba inu coin வாங்கி உள்ளேன் ,ஒரு 50யூரோ. / பவுண்/ டொலர் நட்டம் ஆனால் கூட பரவாயில்லை போனால் போகட்டும் என மன நிலை இருப்போர்  50 ற்கு இதை வாங்கி பாருங்கள் 0.1ற்கு இந்த வருட இறுதியில் வரும் என்கிறார்கள் 

  • Like 1
Posted
On 18/10/2021 at 02:53, vasee said:

இல்லை, ஆனால் CFD  வர்த்தகம் செய்த ,செய்கின்ற அனுபவம் உண்டு. இது option விட பல மடங்கு leverage உண்டு. 1:500 என்ற விகிதத்தில், உதாரணமாக உங்கள் வைப்பு $500 ஆக இருந்தால், $25000 வரை வியாபாரம் செய்யலாம் உங்கள் இழப்பு $500 தாண்டினால் நீங்கள் நட்டத்தினை ஈடு செய்ய ( Margin call) பணம் முதலிட வேண்டும் (Actual margin), தவறினால் கணக்கினை மூடி விடுவார்கள்.

இந்த காணொளியில் இவ்வகை வர்த்தகமே செய்கிறார்கள். இப்போது leverage 1:500 என்பதை 1:30 ஆக அரசு(ASIC) மாற்றி விட்டது.

முன்பு சிறிய நிறுவனங்களின் பங்குகளை வர்த்தகம் செய்த போது option காலாவதியாகும் விபரங்களை வைத்து வர்த்தகம் செய்ததுண்டு (Anchoring Bias).

https://www.investopedia.com/terms/a/arbitrage.asp

பொதுவாக leverage கூடும்போது ஆபத்தும் அதிகரிக்கும்.

பங்குகள் வாங்கி விற்ற அளவில் குறுகிய காலத்தில் போட்ட அளவின் 1+ மடங்கினை கடந்த வருடத்தில் எடுத்திருந்தேன் .

Option la கால் வைச்சு குறிப்பிட்ட அளவில் நட்டம்.. யாராவது இது சம்பந்தமான அறிவு  உள்ளவர்களிடம் கேட்க வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/10/2021 at 22:23, vasee said:

எனது அனுபவத்தின் அடிப்படையில் CFD யில் கவனமாக இருக்கிறேன். CFD முறையில் ஈடுபடும் 70% என் போன்ற சில்லறைகள் (அட அதான் retail investors🤣) நட்டம் அடைவதாக பேச்சு.

யூகேயில் கிரிப்டோவை CFD யில் வாங்க முடியாது. போன வருடம் சம்மர் டைம் அரசு இந்த கட்டுப்பாட்டை கொண்டு வந்தது.

Commodities இல் ஏனைய பங்குகளில் CFD செய்யலாம். 

இணைப்புக்களுக்கு நன்றி. வாசிக்க/பார்க்கவே லீவு எடுக்க வேணும் போல இருக்கு🙏🏾.

4 hours ago, அபராஜிதன் said:

பங்குகள் வாங்கி விற்ற அளவில் குறுகிய காலத்தில் போட்ட அளவின் 1+ மடங்கினை கடந்த வருடத்தில் எடுத்திருந்தேன் .

Option la கால் வைச்சு குறிப்பிட்ட அளவில் நட்டம்.. யாராவது இது சம்பந்தமான அறிவு  உள்ளவர்களிடம் கேட்க வேண்டும்..

எனக்கும் இந்த விளக்கத்தை அறிய ஆவல் பார்க்கலாம். 

7 hours ago, அபராஜிதன் said:

கிரிப்டோ நல்ல முதலீடு தான் ,நான் doge coin  0.09 $ வாங்கினேன் அது கிட்டதட்ட .50$ வரை ஏறி இப்போது இறங்கி இருக்கிறது ,நான் குறைந்த விலையில் வாங்கி இருந்ததனால் லாபமே, இப்போது shiba inu coin வாங்கி உள்ளேன் ,ஒரு 50யூரோ. / பவுண்/ டொலர் நட்டம் ஆனால் கூட பரவாயில்லை போனால் போகட்டும் என மன நிலை இருப்போர்  50 ற்கு இதை வாங்கி பாருங்கள் 0.1ற்கு இந்த வருட இறுதியில் வரும் என்கிறார்கள் 

அண்மையில் ஷிபா வில் கொஞ்சம் லாபம் பார்த்தேன். அதை வித்த பின் மேலும் கூடியது. லாபம்+முன்னைய முதல் முழுவதையும் TRX இல் போட்டுள்ளேன். பார்க்கலாம்🤞.

Technically graph ஐ பார்க்க கூடியவர்கள் இருந்தால் டிப்ஸ் ஐ பகிரவும். 

20 hours ago, Elugnajiru said:

மீண்டும் சொல்லுறன் ஆயிரம் தடவை யோசிச்சுச் செய்யுங்கோ இது கசிணோ விளையாட்டு மாதிரி இரவு பகலாக நித்திரை கொள்ளவும் விடாது. 

🙏🏾 அருமையான ஆலோசனை.

இழக்க முடியுமானாதை மட்டுமே போடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரி இன்னுமொரு விடையம்

கிரிப்டோவில் காசு போட்டால் போட்டது போட்டதுதான்  அது யூ எஸ் டி டியில் வரவு வைக்கப்பட்டிருக்கும் அதைக் காசாக்கவேண்டுமானால் யாருக்காவது யூ எஸ் டி ரியை விற்கவேண்டும்

அதைவிட ஒரு நல்ல விடையம் இருக்கு Revolut bank கில்  ஒரு கணக்கைத் திறந்து அதற்கு நீங்கள் வேண்டிய கரன்சியில் உங்களது USDTயை மாற்றலாம்.பிரச்சனப்பிடவேண்டியதில்லை.

அபரா,

SHIBA/USDT வை நான் ஆரம்பத்தில் வாங்கி அது 0.00005400 வரை ஏறியது நல்ல காசு பாத்திட்டேன் இப்போ அது இறங்குமுகம். ஆனால் பைனான்ஸ் இணையத்தளத்தி காசு சம்பாதிச்சுக்கொடுக்கும் காயிஙளில் முதல் பத்து இடத்தில் இப்போதும் இருக்கு.

முட்டாள்தனமாக நான் பணம் சம்பாதிக்க முற்பட்டு பத்து மில்லியன் காயிஙளாக இருந்த எனது சீபா இனு ஆறு இல்லியனுக்குக் குறைந்துவிட்டது. இனிமே தொட்டுப்பார்க்கும் எண்ணம் இல்லை.

ஆனால் "bainance" இணையத்தளத்தி காசு சம்பாதிச்சுக்கொடுக்கும் காயிஙளில் முதல் பத்து இடத்தில் இப்போதும் இருக்கு.

முட்டாள்தனமாக நான் பணம் சம்பாதிக்க முற்பட்டு பத்து மில்லியன் காயிஙளாக இருந்த எனது SHIBA/USDT ஆறு  மில்லியனுக்குக் குறைந்துவிட்டது. இனிமே தொட்டுப்பார்க்கும் எண்ணம் இல்லை.

சரி விடையத்துக்கு வருகிறேன் 

பைனான்ஸ்சில் இப்போது இலாபமீட்டும் காயின் எனப் பட்டியலிடுவார்கள் அதில் இருபத்து நாலு மணிநேர உயர்வு / தாழ்வு என வரும் அதைக்கவனித்தால் மெழுகுதிரி இடையில் நின்றால் கவனமாக முதலீடு செய்து ஓரிரு மணி நேரத்திலோ நிமிடக்கணக்கிலோ வித்துக் காசு பாக்கலாம் ஆனால் ஆக அடிமட்டத்திலிருந்து திடீரென உயரும் காயினில் முதலீடு செய்யவேண்டாம். அடிச்சுக்கொண்டு போயிடும். இப்போ NU/USDT எனும் காயின் சிலநேரம் ஏறும்போல இருக்கு ஆனால் அவதானம்.

 TRX/USDT இப்போது ஏறுது விருப்பமானால் வித்துக்காசு பாக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நான் ஊரில் போய் செட்டில் ஆக இருப்பதால் இருக்குற காசபோட்டு சொந்தமா ஒரு வீடுவாங்கி வீட்டு ஏஜென்சிக்காரனிடம் விட்டிட்டு ஊருக்கு போய் செட்டில் ஆகிற ஜடியாவில் இருப்பதால் வீட்டு ஏஜென்ஸிக்காரனிடம் கொடுத்தால் 

*வாடகைக்கு இருப்பவன் காசு கட்டாமல் பிரச்சினை விட்டால் அவனை எழுப்பவதை அதனால் வரும் பிரச்சினைகளை வீட்டு ஏஜென்சிக்காறன் பாத்துக்கொள்ளுவானா அல்லது ஓனர் நான் தான் வரணுமா?

*ஏஜென்சிக்காறன் வீட்டில் வாடகைக்கு இருப்பவனிடம் வாங்கும் காசைவிட எவ்வளவு குறைவா எங்களுக்கு தருவான்..? அதிலும் ஏதும் சுத்துமாத்துவிடுவானோ ஏஜென்சி..?

*ஏஜென்சிக்காறன் வாடகைக்கு ஆளை இருத்திவிட்டு எங்களுக்கு யாரையும் இருத்தவில்லை அதனால் காசு இல்லை என்று பொய் சொல்ல சான்ஸ் இருக்கா..?

இதெல்லாம் தெரிஞ்ச ஆரும் இருந்தா எனக்கு கொஞ்சம் சொல்லுங்கப்பா.. மண்டை சுத்துது யோசிச்சு யோசிச்சு காசை என்னத்தில பாதுகாப்பா முதலிடலாம் வருமானத்தோட எண்டு பாத்ததில கடைசியா தேறின ஒரே ஒப்சன் இதுதான்.. ஆனா அதிலும் இந்த ஏஜென்சி செக்சன் எனக்கு விளங்கேல்ல.. ஆரேன் கெல்ப்பண்ணுங்கப்பா..

கூடவே பங்கு வியாபாரத்தில் கொஞ்சம் கொஞ்சம் வாங்கி ரெஸ்ற் பண்ணி பாத்து ஊரிலபோய் சும்மாதான இருப்பன் இதை செய்யலாம் எண்டு பாத்தா முதல் ஸ்டெப்

Step 1: find a good online broker

இதுலயே ஸ்ரக் ஆகி நிக்குரன்.. ஆரும் நல்ல பாதுகாப்பான நம்பிக்கையான புரோக்கர் லிங் தாங்கப்பா..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் கண்ணை மூடிக்கொண்டு 4000 பவுண்சைத் தொலைத்துவிட்டு நிற்கிறேன். என்ன செய்வது நட்டப்பட்டுத்தான் அனுபவத்தைப் பெறவேண்டி இருக்கு .

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Elugnajiru said:

மெழுகுதிரி இடையில் நின்றால் கவனமாக முதலீடு செய்து ஓரிரு மணி நேரத்திலோ நிமிடக்கணக்கிலோ வித்துக் காசு பாக்கலாம்

நன்றி. இந்த மெழுகுதிரியை எப்படி பார்ப்பது என்பதை யாராவது எளிய முறையில் விளங்க படுத்தினால் நல்லம். எல்லாம் தியரியை வாசிக்கும் போது விளங்குது ஆனால் அதை வைத்து கணிக்கும் போது சரியாக வருவது கஸ்டமாயிருக்கு.

TRX 0.15 வரை போக கூடும் என்கிறார்கள். Take profit, stop loss போட்டு விட்டு பார்த்து கொண்டிருக்கிறேன்😎.

58 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நானும் கண்ணை மூடிக்கொண்டு 4000 பவுண்சைத் தொலைத்துவிட்டு நிற்கிறேன். என்ன செய்வது நட்டப்பட்டுத்தான் அனுபவத்தைப் பெறவேண்டி இருக்கு .

பிட்காயினிலா போட்டனிங்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான் ஊரில் போய் செட்டில் ஆக இருப்பதால் இருக்குற காசபோட்டு சொந்தமா ஒரு வீடுவாங்கி வீட்டு ஏஜென்சிக்காரனிடம் விட்டிட்டு ஊருக்கு போய் செட்டில் ஆகிற ஜடியாவில் இருப்பதால் வீட்டு ஏஜென்ஸிக்காரனிடம் கொடுத்தால் 

*வாடகைக்கு இருப்பவன் காசு கட்டாமல் பிரச்சினை விட்டால் அவனை எழுப்பவதை அதனால் வரும் பிரச்சினைகளை வீட்டு ஏஜென்சிக்காறன் பாத்துக்கொள்ளுவானா அல்லது ஓனர் நான் தான் வரணுமா?

*ஏஜென்சிக்காறன் வீட்டில் வாடகைக்கு இருப்பவனிடம் வாங்கும் காசைவிட எவ்வளவு குறைவா எங்களுக்கு தருவான்..? அதிலும் ஏதும் சுத்துமாத்துவிடுவானோ ஏஜென்சி..?

*ஏஜென்சிக்காறன் வாடகைக்கு ஆளை இருத்திவிட்டு எங்களுக்கு யாரையும் இருத்தவில்லை அதனால் காசு இல்லை என்று பொய் சொல்ல சான்ஸ் இருக்கா..?

இதெல்லாம் தெரிஞ்ச ஆரும் இருந்தா எனக்கு கொஞ்சம் சொல்லுங்கப்பா.. மண்டை சுத்துது யோசிச்சு யோசிச்சு காசை என்னத்தில பாதுகாப்பா முதலிடலாம் வருமானத்தோட எண்டு பாத்ததில கடைசியா தேறின ஒரே ஒப்சன் இதுதான்.. ஆனா அதிலும் இந்த ஏஜென்சி செக்சன் எனக்கு விளங்கேல்ல.. ஆரேன் கெல்ப்பண்ணுங்கப்பா..

கூடவே பங்கு வியாபாரத்தில் கொஞ்சம் கொஞ்சம் வாங்கி ரெஸ்ற் பண்ணி பாத்து ஊரிலபோய் சும்மாதான இருப்பன் இதை செய்யலாம் எண்டு பாத்தா முதல் ஸ்டெப்

Step 1: find a good online broker

இதுலயே ஸ்ரக் ஆகி நிக்குரன்.. ஆரும் நல்ல பாதுகாப்பான நம்பிக்கையான புரோக்கர் லிங் தாங்கப்பா..

வீடு

லண்டன் நிலவரத்தை சொல்கிறேன். நீங்கள் மிக மட்டமான ஏனெஜ்சியிடம் போகதவரைக்கும் இப்படி நடக்க குறைவு. ஏற்கனவே இந்த துறையில் வீடு வாடகைக்கு விட்டு இருப்பவர்கள் நிச்சயம் ஒரு நல்ல எஸ்டேட் ஏஜெண்டை பரிந்துரைப்பார்கள்.

சிலர் rent guarantee அதாவது வாடைக்கு ஆள் வருதோ இல்லையோ ஏஜென்சி வாடகை தரும் என்ற ஏற்பாடும் தருவார்கள். ஆனால் அப்படியானவர்களின் கொமிசன் அதிகமாய் இருக்கும்.

அது உங்களுக்கு சரி வராவிடில் லோக்கல் கவுன்சில்கள் உங்களிடம் வீட்டை வாடைக்கு எடுக்க தயாராய் இருப்பார்கள். ஆனால் அவர்கள் தரும் வாடகை மாக்கெட் ரேட்டில் 10% அளவில் குறைவாய் இருக்கும். அவர்கள் கொண்டு வரும் ஆட்களும் குழப்படிகாரராய் அமையலாம். ஆனால் ஏஜெண்ட் பீஸ் இல்லை, நீண்டகால rent guarantee மற்றும் சில கவுன்சில்களில் வீட்டை வாடைக்கு விட முன் திருத்தி எடுக்க grant உம் கிடைக்கும்.

ஊருக்கு போவதாகின் மிக நல்ல ஐடியா நீங்கள் செய்ய நினைப்பது. எனக்கு தெரிந்த பலர் வாடைக்கு விட்டு விட்டு அமெரிகா, இலங்கை, அவுஸ், ஸ்பெயின் போயுள்ளார்கள். 

எப்போதும் வீடு நல்ல கொண்டிசனில், வாடைக்கு கிராக்கி உள்ள இடத்தில் இருந்தால் - கவுன்சிலிடம் போகாமல் எஜென்சி மூலம் கொடுப்பது லாபம்.

ஆனால் வருடம் அல்லது இரெண்டு வருடம் ஒரு முறை வந்து பாக்கிற மாரி இருங்கோ. எப்பவும் உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டை.

தவிரவும் மருத்துவ இதர செலவுக்கு இலங்கையில் காசில்லை என்றால் நாயும் சீண்டாது. ஆகவே எப்போதும் அடுத்த பிளேன்னில் ஏற தயாராகவே அங்கே போக வேண்டும் என்பது என் கருத்து. 

நான் 80 (இருந்தால்) க்கு மேல் ஊரில் இருக்க விரும்பமாட்டேன். கேர் ஹோமில் இருந்து யாழில் வந்து அறழை கதையள் கதைக்க வேண்டியதுதான் (இப்பவே அதுதானே🤣). 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

Step 1: find a good online broker

இதுலயே ஸ்ரக் ஆகி நிக்குரன்.. ஆரும் நல்ல பாதுகாப்பான நம்பிக்கையான புரோக்கர் லிங் தாங்கப்பா..

யோவ் புலவரே என்னையா இது பொது வெளில வச்சி புரோக்கர் லிங் கேட்கிறீங்க🤣.

இப்ப எல்லாமே ஆன் லைனில்தானே. உங்களுக்கு traditional brokers வேண்டும் என்றால்  https://www.hl.co.uk Hargreaves Lansdown நல்லம். அவர்களும் ஒன்லைன் அப் எல்லாம் வச்சிருக்கினம்.

ஆனால் coinbase, binance, eToro போன்றவற்றையும் டிரை பண்ணலாம்.

புதிதாக தொடங்குபவர்கு நான் etoro வை பரிந்துரைப்பேன். User friendly. கொமிசன் இல்லை. ஆனால் இதை நம்பி ஏமாற வேண்டாம். Spread மிக அதிகமாக இருக்கும். அதாவது ஒரு பங்கின் விலை .10 என்றால் அவர்கள் .11 இல்தான் விற்பார்கள். பங்குகள் ஏறி கொண்ண்டிருக்கும் போது இந்த spread மேலும் அதிகரிக்கும்.

அதே போல் ஆட்டொமேடிக்கா take profit, stop loss ஐயும் செட் பண்ணவும் கூடும்: அதையும் பார்த்து எமக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும்.

ஈடோர்ரொவில் 100,000 டாலருக்கு ஒரு விளையாட்டு கணக்கு தருவார்கள். முதலில் அதில் விளையாடி பாருங்கள். அதில் கொஞ்சம் பிடிப்பு வந்ததும் நிஜத்தில் 50$ க்கு செய்து பாருங்கள்

அதே போல் copy trading உம் செய்யலாம். அங்கே நல்லா உழைக்கும் ஒருவரை அப்படியே கொப்பி பண்ண ஒரு 1000 டொலரை போடுவது. நீங்கள் ஏதுவும் செய்யவேண்டியதில்லை. அவர் லாபம் என்றால் நீங்களும் லாபம். அவர் நட்டம் என்றால் நீங்களும் நட்டம்.

அதே போல் binance இல் அடிப்படை கணக்கு, பெரிய லெவலில் செய்பவர் கணக்கு எண்டு இரெண்டு இருக்கு. ஆனால் இது கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச். இங்கே ஸ்டொக் வாங்க முடியாது.

மிக முக்கியமாக வாசியுங்கள். வசி தரும் வீடியோக்கள் போல தேர்ந்து எடுத்து பாருங்கள். ஒரு நிறுவனத்தை பற்றி முழுமையாக ஆராயுங்கள். 

கிரிப்டோவில் முதலில் mining என்றால் என்ன, proof of work என்றால் என்ன போன்ற அடிப்படைகளை விளங்கி கொள்ளுங்கள். நாம் மைன் பண்ணும் அளவுக்கு தேவையில்லை ஆனால் அடிப்படை விளங்கினால் நல்லம். அதே போல் மேலே எழுஞாயிறு சொன்ன tether பற்றியும் அறியுங்கள். 

பாய்ஸ் படத்தில் செந்தில் சொன்னது போல knowledge is wealth. அதை அடைந்து கொண்டால் பின்னர் அதை காசக்குவது அவ்வளவு கடினமாக இராது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதெல்லாம் தெரிஞ்ச ஆரும் இருந்தா எனக்கு கொஞ்சம் சொல்லுங்கப்பா.. மண்டை சுத்துது யோசிச்சு யோசிச்சு காசை என்னத்தில பாதுகாப்பா முதலிடலாம் வருமானத்தோட எண்டு பாத்ததில கடைசியா தேறின ஒரே ஒப்சன் இதுதான்.. ஆனா அதிலும் இந்த ஏஜென்சி செக்சன் எனக்கு விளங்கேல்ல.. ஆரேன் கெல்ப்பண்ணுங்கப்பா..

இப்போது EV (Electric vehicles)ஸ்ரொக் எல்லாமே சிப் இல்லாமல் விழுந்து போயுள்ளது.

சிப் நிலவரம் சரியாகும் போது நிச்சயம் பல மடங்கு கூட வாய்ப்புள்ளது.

இது நீண்ட காலம்.

அதைவிட பெனி ஸ்ரொக்கில் கொஞ்சம் நல்லதாக தெரிவு செய்து ஒவ்வொன்றிலும் ஆயிரம் என்று 5-6 ஐ வாங்கி விடலாம்.

சகல ஸ்ரொக்கையும் ஆரம்பத்தைப் பார்த்தால் எல்லாமே பெனிஸ்ரொக் தான் .

வந்தா மலை போனா மயிர்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, goshan_che said:

நன்றி. இந்த மெழுகுதிரியை எப்படி பார்ப்பது என்பதை யாராவது எளிய முறையில் விளங்க படுத்தினால் நல்லம்.

இந்த மெழுகுதிரி என்பது, சந்தையில் வாங்குபவர்களும், விற்றுபவர்களும்,  குறிப்பிட்ட நேர இடைவெளியில் முட்டி மோதி, எவரின் விலை இறுதியாக தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிக்கிறது.

இது எப்போதுமே இறந்த கால தரவு என்பதால், குறிப்புட கால இடைவெளியை, நிமிடம், மணிகள், நாட்கள், வாரங்கள், மாதங்கள்  என்று    பார்ப்பவர் வகைப்படுத்தலாம்.

சிவப்பு நிற மெழுகு திரி, விற்பவர்கள் ஒங்கி விட்டதை குறிக்கும். பச்சை நிறம் வாங்குபவர் ஓங்கி விட்டார்கள்.

 தடித்த மெழுகு திரியின் மேலேம், கீழும் சற்று கோடாக இருப்பவை, முறையே அதி கூடிய விலை, அதி குறைந்த விலை. தடித்த மெழுகு திரிரில் இருக்கும் விலைவாசிகளே பெரும்பான்மையான வாங்குதல்கள்  (பச்சை நிறம்),  விற்பனைகள் (சிவப்பு நிறம்) நடை பெற்று இருக்கிறது.

அதனால், சிவப்பு நிற மெழுகு திரி நேர இடைவெளியில், வாங்குதல்கள் நடைபெற இல்லை என்பது அல்ல, வாங்குதல்கள் நடைபெற்று இருக்கிறது, ஆனால், விற்றுபவர்கள் விலையை தஹிர்மானிப்பதில் ஓங்கி விட்டார்கள்.   

இதை நீங்கள், livecharts.co.uk இணைய தளத்தில், எதாவது ஓர் சந்தையை தெரிவு செய்து, பொறுமையாக அவதானியுங்கள், உங்களுக்கு புரியும்.

சிலவேளை, சிவப்பாக ஆரம்பித்து, பச்சையாக மாறும், மறு வளமாகவும் நடக்கும். முட்டி, மோதி ஒன்றை ஒன்று ஓங்குவதற்கு நடைபெறும் போராட்டத்தையும் உணரலாம்.  

முக்கியமாக, மெழுகு திரி, சந்தையின் முட்டி மோதும் உணர்வை (emotions) மற்றும் போக்கை காட்டுவது. 

அனால், எப்படி கணக்கு பார்ப்பது என்பது வேறு விடயம், முழு chart உடன் தொடர்பு பட்டத, technical analysis.
 
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நானும் கண்ணை மூடிக்கொண்டு 4000 பவுண்சைத் தொலைத்துவிட்டு நிற்கிறேன். என்ன செய்வது நட்டப்பட்டுத்தான் அனுபவத்தைப் பெறவேண்டி இருக்கு .

நீங்கள் Bitcoinல் போட்டிருந்தால் நட்டப்படமாட்டீர்கள் என நினைக்கிறேன்.. இப்பொழுது மறுபடியும் Bitcoin மதிப்பு ஏறத்தொடங்கிவிட்டது.. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் Bitcoinல் போட்டிருந்தால் நட்டப்படமாட்டீர்கள் என நினைக்கிறேன்.. இப்பொழுது மறுபடியும் Bitcoin மதிப்பு ஏறத்தொடங்கிவிட்டது.. 

காரணம், bit coin முதலாவது ETF (exchange traded funds) trade பண்ண,   19 அல்லது 20 ஆம் திகதி US regulators அனுமதித்து விட்டார்கள்.

தாறுமாறாக ஏறியது. 

ஆனாலும், bit coin இல் systemic ரிஸ்க் இருக்கிறது.

ஆனால், இன்வெஸ்டிங் மற்றும் டிரேடிங் என்பது கிளினிக்கில் ஆக உணர்வுகளுக்கு இடம் அளியாமல் செய்வது. 

என்னிடம், அவளவு நேரம் இல்லை. இயலுமானவரை எழுதுகிறேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, Kadancha said:

இந்த மெழுகுதிரி என்பது, சந்தையில் வாங்குபவர்களும், விற்றுபவர்களும்,  குறிப்பிட்ட நேர இடைவெளியில் முட்டி மோதி, எவரின் விலை இறுதியாக தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிக்கிறது.

இது எப்போதுமே இறந்த கால தரவு என்பதால், குறிப்புட கால இடைவெளியை, நிமிடம், மணிகள், நாட்கள், வாரங்கள், மாதங்கள்  என்று    பார்ப்பவர் வகைப்படுத்தலாம்.

சிவப்பு நிற மெழுகு திரி, விற்பவர்கள் ஒங்கி விட்டதை குறிக்கும். பச்சை நிறம் வாங்குபவர் ஓங்கி விட்டார்கள்.

 தடித்த மெழுகு திரியின் மேலேம், கீழும் சற்று கோடாக இருப்பவை, முறையே அதி கூடிய விலை, அதி குறைந்த விலை. தடித்த மெழுகு திரிரில் இருக்கும் விலைவாசிகளே பெரும்பான்மையான வாங்குதல்கள்  (பச்சை நிறம்),  விற்பனைகள் (சிவப்பு நிறம்) நடை பெற்று இருக்கிறது.

அதனால், சிவப்பு நிற மெழுகு திரி நேர இடைவெளியில், வாங்குதல்கள் நடைபெற இல்லை என்பது அல்ல, வாங்குதல்கள் நடைபெற்று இருக்கிறது, ஆனால், விற்றுபவர்கள் விலையை தஹிர்மானிப்பதில் ஓங்கி விட்டார்கள்.   

இதை நீங்கள், livecharts.co.uk இணைய தளத்தில், எதாவது ஓர் சந்தையை தெரிவு செய்து, பொறுமையாக அவதானியுங்கள், உங்களுக்கு புரியும்.

சிலவேளை, சிவப்பாக ஆரம்பித்து, பச்சையாக மாறும், மறு வளமாகவும் நடக்கும். முட்டி, மோதி ஒன்றை ஒன்று ஓங்குவதற்கு நடைபெறும் போராட்டத்தையும் உணரலாம்.  

முக்கியமாக, மெழுகு திரி, சந்தையின் முட்டி மோதும் உணர்வை (emotions) மற்றும் போக்கை காட்டுவது. 

அனால், எப்படி கணக்கு பார்ப்பது என்பது வேறு விடயம், முழு chart உடன் தொடர்பு பட்டத, technical analysis.
 
நன்றி கடைஞ்ச்சா… அந்த சைட்டில் போய் அவதானிக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 20/10/2021 at 22:09, goshan_che said:

எனது அனுபவத்தின் அடிப்படையில் CFD யில் கவனமாக இருக்கிறேன். CFD முறையில் ஈடுபடும் 70% என் போன்ற சில்லறைகள் (அட அதான் retail investors🤣) நட்டம் அடைவதாக பேச்சு.

யூகேயில் கிரிப்டோவை CFD யில் வாங்க முடியாது. போன வருடம் சம்மர் டைம் அரசு இந்த கட்டுப்பாட்டை கொண்டு வந்தது.

Commodities இல் ஏனைய பங்குகளில் CFD செய்யலாம். 

இணைப்புக்களுக்கு நன்றி. வாசிக்க/பார்க்கவே லீவு எடுக்க வேணும் போல இருக்கு🙏🏾.

எனக்கும் இந்த விளக்கத்தை அறிய ஆவல் பார்க்கலாம். 

அண்மையில் ஷிபா வில் கொஞ்சம் லாபம் பார்த்தேன். அதை வித்த பின் மேலும் கூடியது. லாபம்+முன்னைய முதல் முழுவதையும் TRX இல் போட்டுள்ளேன். பார்க்கலாம்🤞.

Technically graph ஐ பார்க்க கூடியவர்கள் இருந்தால் டிப்ஸ் ஐ பகிரவும். 

🙏🏾 அருமையான ஆலோசனை.

இழக்க முடியுமானாதை மட்டுமே போடுங்கள்.

https://finance.yahoo.com/chart/TRX-USD#eyJpbnRlcnZhbCI6ImRheSIsInBlcmlvZGljaXR5IjoxLCJ0aW1lVW5pdCI6bnVsbCwiY2FuZGxlV2lkdGgiOjgsImZsaXBwZWQiOmZhbHNlLCJ2b2x1bWVVbmRlcmxheSI6dHJ1ZSwiYWRqIjp0cnVlLCJjcm9zc2hhaXIiOnRydWUsImNoYXJ0VHlwZSI6ImNhbmRsZSIsImV4dGVuZGVkIjpmYWxzZSwibWFya2V0U2Vzc2lvbnMiOnt9LCJhZ2dyZWdhdGlvblR5cGUiOiJvaGxjIiwiY2hhcnRTY2FsZSI6ImxpbmVhciIsInBhbmVscyI6eyJjaGFydCI6eyJwZXJjZW50IjoxLCJkaXNwbGF5IjoiVFJYLVVTRCIsImNoYXJ0TmFtZSI6ImNoYXJ0IiwiaW5kZXgiOjAsInlBeGlzIjp7Im5hbWUiOiJjaGFydCIsInBvc2l0aW9uIjpudWxsfSwieWF4aXNMSFMiOltdLCJ5YXhpc1JIUyI6WyJjaGFydCIsIuKAjHZvbCB1bmRy4oCMIl19fSwic2V0U3BhbiI6e30sImxpbmVXaWR0aCI6Miwic3RyaXBlZEJhY2tncm91bmQiOnRydWUsImV2ZW50cyI6dHJ1ZSwiY29sb3IiOiIjMDA4MWYyIiwic3RyaXBlZEJhY2tncm91ZCI6dHJ1ZSwiZXZlbnRNYXAiOnsiY29ycG9yYXRlIjp7ImRpdnMiOnRydWUsInNwbGl0cyI6dHJ1ZX0sInNpZ0RldiI6e319LCJzeW1ib2xzIjpbeyJzeW1ib2wiOiJUUlgtVVNEIiwic3ltYm9sT2JqZWN0Ijp7InN5bWJvbCI6IlRSWC1VU0QiLCJxdW90ZVR5cGUiOiJDUllQVE9DVVJSRU5DWSIsImV4Y2hhbmdlVGltZVpvbmUiOiJFdXJvcGUvTG9uZG9uIn0sInBlcmlvZGljaXR5IjoxLCJpbnRlcnZhbCI6ImRheSIsInRpbWVVbml0IjpudWxsLCJzZXRTcGFuIjp7fX1dLCJzdHVkaWVzIjp7IuKAjHZvbCB1bmRy4oCMIjp7InR5cGUiOiJ2b2wgdW5kciIsImlucHV0cyI6eyJpZCI6IuKAjHZvbCB1bmRy4oCMIiwiZGlzcGxheSI6IuKAjHZvbCB1bmRy4oCMIn0sIm91dHB1dHMiOnsiVXAgVm9sdW1lIjoiIzAwYjA2MSIsIkRvd24gVm9sdW1lIjoiI2ZmMzMzYSJ9LCJwYW5lbCI6ImNoYXJ0IiwicGFyYW1ldGVycyI6eyJ3aWR0aEZhY3RvciI6MC40NSwiY2hhcnROYW1lIjoiY2hhcnQiLCJwYW5lbE5hbWUiOiJjaGFydCJ9fX19

இது ஒரு வியாபார ஆலோசனை அல்ல அத்துடன் எனக்கு இந்த வகை நாணயங்கள் பரிட்சயமுமில்லை, எனது பார்வையில் TRON USD (TRX-USD)

தற்சமயம் விலை நடவடிக்கையை consolidation என்பார்கள் (Ascending wedge).பொதுவாக இந்த சமயம் எந்த வாங்கல் விற்றல் நடவடிக்கைகள் செய்யமாட்டார்கள்.

விலை இடைவெளி ஆரம்பத்தில் அதிகமாக இருக்கும் போகப்போக இடைவெளி குறைந்து ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும் பின்னர் அது ஒரு ஸ்பிரிங் போல் மேல் பக்கமாகவோ அல்லது கீழ் பக்கமாகவோ உடைத்து கொண்டு வெளியேறும் அதனை Ascending wedge என்பார்கள். பொதுவாக Ascending wedge கீழ் உடைத்து கொண்டு வெளியேறும், மறுவளமாக சில சமயம் மேல்புறமாகவும் உடைத்து வெளியேறும்.

மேலால் உடைத்தால் (11 C) வாங்குவார்கள் கீழாக விலை சென்றால் (9.5 C) விற்பார்கள். மேலே தரப்பட்ட யாகூ வர்த்தக இணைப்பை அழுத்தி பார்க்கவும்.

ஆனால் இங்கு Break out trade செய்வது சாதகமல்ல, அனால் Support and resistance trade செய்வதுதான் மிகவும் பொருத்தம்.

விலை 8.3 C பகுதியை அண்மித்தால் அங்கு வாங்கலாம் Stop loss 7.5 C, விலை 12 C அணுகினால் அங்கு விற்கலாம் Stop loss 12.8 C. Short trade signal bearish engulfing candle, Long trade signal Bullish engulfing candle.

உதாரணமாக இந்த ஒளிப்பதிவை இணைத்துள்ளேன், இது எனது சனல்தான், ஆனால் பதிவுகள் போடுவதில்லை, பொதுவாக எனது நண்பர்களுக்கு மின்னசலில் அனுப்பும் பதிவை ஒளிப்பதிவாக்கி தரவேற்றினேன் அதனை யாரும் பார்பதில்லை அத்துடன் அதில் முழுமையாக ஈடுபாடு காட்டமுடியவில்லை.

Edited by vasee
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Support உடைக்கப்படும்போது அந்த பகுதி  Resistance ஆகும்.

How-to-Trade-with-Support-and-Resistance

மறுவளமாக Resistance உடைக்கும் போது அது பின்னர் Support ஆகும். இது பொதுவாக Trending market எனும் நிலையில் ஏற்படும்.

இந்த நாணயத்தில் தற்போதுள்ள நிலையினை Ranging market support & resistance என கருதுகிறேன். இதற்கமைவாகவே இந்த கணிப்பீட்டை வைத்துள்ளேன். எனது கருத்து தவறாக இருக்கலாம்.

Support and resistance levels example

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மன்னிக்கவும் மேலே இணைத்த இணைப்பில் விபரங்கள் அழிந்து விட்டமையால் இந்த ஒளிப்பதிவை இணைத்துள்ளேன்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது வசிக்கு மட்டும் அநேகமாக புரியும் என்று நினைக்கிறன்.

நீங்கள், trend லைன் உம், fibonaanchi   பின் இழுப்பும் அதன் நீட்சியும் ஒருங்கும் புள்ளிகளை கொண்டா trade ஐ திறப்பது பற்றி முடிவு செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kadancha said:

இது வசிக்கு மட்டும் அநேகமாக புரியும் என்று நினைக்கிறன்.

நீங்கள், trend லைன் உம், fibonaanchi   பின் இழுப்பும் அதன் நீட்சியும் ஒருங்கும் புள்ளிகளை கொண்டா trade ஐ திறப்பது பற்றி முடிவு செய்வது?

இல்லை கடன்சா, அதிக சாத்திய கூறுகளை கொண்ட முக்கிய வலயங்களை தீர்மானித்து ( high probability key level)  அப்பகுதியில் விலை என்ன செய்கிறது என்பதை பொறுத்து trading setup தீர்மானிப்பதுண்டு.

ஆகக்குறைந்தது Risk Reward ratio 1:2, அதாவது $100 இழப்பு ஏற்படலாம் அல்லது இலாபம் $200 இற்கு மேலாக இருக்குமாறு உறுதி செய்வது.

trend லைன் break out உறுதி செய்வதற்காகப்பயன்படுத்துவதுண்டு, ஆனால் இப்போது முழுவதுமாக fibonaanchi ஐ பயன்படுத்துவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

TRX  இல் பல தடவை 8.0 C இல் ஒரு கோட்டினை கீறினிலால் விலை கடந்த காலத்தில் பல தடவை 8.0 C தாண்டி மேல் வர முயன்று தோற்றுள்ளது (Resistance) பின்னர் அந்த கோட்டினை உடைத்து விலை அதிகரித்த பின், கீழே செல்ல முயன்று தோற்றுள்ளது (Support).

தற்போதைய முக்கிய Resistance 12.0 C உள்ளது ஆனால் மூன்று தடவை 10.0 C உடைக்கமுயன்று தோற்றுள்ளது, ஆனால் ஏற்கனவே 8.5 C இல் ஒரு தடவையும் பின்னர் 8.0 C பகுதியில் (Re - Test in low volume successfully)  செய்துள்ளது இதன் மூலம் 12.0 C தான் அடுத்த இலக்காக இருக்கலாம் (break out upside ).

அப்படி மேலே போகாமல் விலை கீழிறங்கினால் 8.0 C மீண்டும் தொட முயற்சிக்கலாம். ஆகவே இந்த இரண்டு பகுதிகளும் முக்கியமான பகுதியாகவுள்ளது.

குறிப்பாக 10.0 C பகுதியில் கடைசி இரண்டு முயற்சியின் போதும் அதிகளவான முந்தய முற்சியினை விட ஒப்பீட்டளவான எண்ணிக்கையில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது, அதாவது அதிகளவான வழங்கல் காணப்படுகிறது, இந்த தகவல் எந்தளவிற்கு பொருத்தமாகவிருக்கும் என்பது தெரியாது.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, vasee said:

இல்லை கடன்சா, அதிக சாத்திய கூறுகளை கொண்ட முக்கிய வலயங்களை தீர்மானித்து ( high probability key level)  அப்பகுதியில் விலை என்ன செய்கிறது என்பதை பொறுத்து trading setup தீர்மானிப்பதுண்டு.

இதை பற்றி எங்காவது இணைய தளத்தில் இருக்கிறதா?

google இல் தேடுதல் தரும் இணைய இணைப்புகளை எல்லாவற்றையும் நம்ப முடியாது.

இது உங்களின் secrets of trade ஆகா இருப்பதால், முற்று முழுதாக மறுக்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.  
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடன்சா நீங்கள் கூறிய மாதிரி Fib rejection short trade எடுக்கலாம், signal bearish engulfing candle at 50.0 fib, profit target 9.0 C, இரண்டாவது target 8.0 C, stop loss 11.0 C

ஆனால் இதன் சாத்திய கூறு குறைவாக இருக்கும் ஏனெனில் விலை இப்போது பக்க வாட்டாக நகருகிறது.

இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் மட்டுமே, தவறாக இருக்கலாம்.

2 minutes ago, Kadancha said:

இதை பற்றி எங்காவது இணைய தளத்தில் இருக்கிறதா?

google இல் தேடுதல் தரும் இணைய இணைப்புகளை எல்லாவற்றையும் நம்ப முடியாது.

இது உங்களின் secrets of trade ஆகா இருப்பதால், முற்று முழுதாக மறுக்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.  
 
Support & Resistance trade மிகவும் அடிப்படையான மிக சாதாரண உத்தி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, vasee said:

Support & Resistance trade மிகவும் அடிப்படையான மிக சாதாரண உத்தி.

நான், எனது சொந்த பணத்தை முதல் இட்டு சோதனையாக நேரடியாக செய்த போது , trend ஐ  அவதானித்து குறுகிய, மத்திய  நேர shorting, longing செய்யும் போது, என்னை அறியாமலே    support & resistance ஐ பாவிக்க தொடங்கினேன்.

morning star, hanging man, marching போன்றவற்றையும், இப்படி இருக்கிறது என்று தெரியாமல், பாவிக்க தொடங்கினேன். 

அனால், நான் கேட்பது high probability key level பற்றியது.

இன்று, gold விழுந்தது, பிடித்தீர்களா?

1 hour ago, vasee said:

ஆகக்குறைந்தது Risk Reward ratio 1:2, அதாவது $100 இழப்பு ஏற்படலாம் அல்லது இலாபம் $200 இற்கு மேலாக இருக்குமாறு உறுதி செய்வது.

முதல் இழந்த போது பெரிதாக இருந்தது. 

அனால், தன பின் இழப்பு, வரவு, எல்லாம் ஒரே உணர்வு. இலாபம் வர வேண்டும் என்பதே இலக்கு.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பவற்றை விரைவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டோம் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். அதேபோன்று, பாராளுமன்றத்தில் சட்டமூலங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 வரையான சட்டங்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றார். கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மாநாடொன்றின் போதே கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/313651
    • வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை! மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி இன்று (13) மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, காந்திபூங்கா முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வேலையற்ற பட்டதாரிகளின் அரச நியமனத்தினை உறுதிப்படுத்து, காட்டாதே காட்டாதே பாரபட்சம் காட்டாதே, அழிக்காதே அழிக்காதே எங்களது கனவுகளை அழிக்காதே,வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலைவேண்டும் போன்ற பல்வேறு கோசங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்தபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த அரசாங்க ஆட்சியின்போது ஜுலை மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தபோது அன்றைய கிழக்கு மாகாண ஆளுனர் வழங்கிய உறுதிமொழியையடுத்து போராட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்திய போதிலும் இதுவரையில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் 2000 இற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ள போதிலும் அவர்களுக்கான நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென இங்கு பட்டதாரிகளினால் கவலை தெரிவிக்கப்பட்டது. பல்வேறு கனவுகளுடன் தாங்கள் பட்டங்களை பூர்த்திசெய்தபோதிலும் இன்று வரையில் தமது கனவுகள் கனவுகளாகவே போகும் நிலை காணப்படுவதாகவும் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் பட்டங்களை முடித்துள்ளபோதிலும் இதுவரையில் தமது வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார். -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://tamil.adaderana.lk/news.php?nid=197241
    • வாழ்த்துகள்.......அது சரி வேறு பொது ஊடகங்களில் இவரை தெலுங்கர் என மாறுகால் மாறுகை வாங்குகின்றார்களே!!!  ஏன் என்று யாருக்காவது தெரியுமா?  
    • 13 DEC, 2024 | 05:35 PM   முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தினை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.  யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.  வட்டுவாகல் பாலம் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு செய்யப்படாமல் காணப்படுகிறது. சுனாமி அனர்த்தத்தின் போதும்  இறுதி யுத்தத்தின் போதும், பாலம் சேதமடைந்த நிலையில், அதனை முழுமையாக புனரமைப்பு செய்யப்படாமல், தற்காலிகமாக திருத்தப்பட்டிருந்தது.  மக்கள் பயன்பாட்டில் உள்ள ஆபத்தான பாலமாக வட்டுவாகல் பாலம் காணப்படுவதுடன், மழை காலங்களில் பாலத்திற்கு மேலாக வெள்ளம் பாய்ந்தோடுவதால், பாலத்தின் ஊடான போக்கு வரத்து தடை செய்யப்பட்டு இருக்கும்.  அதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதனால்  குறித்த பாலத்தினை புதிதாக கட்டி தருமாறு பல ஆண்டு காலமாக முல்லைத்தீவு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்  இந்நிலையிலையே கடற்தொழில் அமைச்சர், வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழில் வைத்து கூறியுள்ளார்.  https://www.virakesari.lk/article/201182
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.