Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு... மரண சான்றிதழ் வழங்கப்படும் என, ஐ.நா மன்றில் ஜனாதிபதி தெரிவிப்பு- உறவுகள் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் ஜனாதிபதி தெரிவிப்பு- உறவுகள் கண்டனம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு... மரண சான்றிதழ் வழங்கப்படும் என, ஐ.நா மன்றில் ஜனாதிபதி தெரிவிப்பு- உறவுகள் கண்டனம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

p11.jpg p22.jpg

என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1240472

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டனரா? கோத்தாபயவிடம் கேட்கிறார் சுரேஷ்!

by கதிர் September 22, 2021

காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டனரா? கோத்தாபயவிடம் கேட்கிறார் சுரேஷ்!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழை வழங்க இலங்கை ஜனாதிபதி முன்வந்திருப்பதன் மூலமாக, காணாமலாக்கப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனரென்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளாரா? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுத்துவருகின்றேன்” என்று, ஐ.நா. பொதுச் செயலாளருடனான சந்திப்பின்போது இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளாரென்று அவரது ஊடக அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. எனவே, அவர் இலங்கை திரும்பியவுடனேயே இத்தகைய அறிவிப்பை முதலில் திட்டவட்டமாக, பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.

இலங்கை அரசின் தகவல்படி வடக்கு கிழக்கில் 16ஆயிரம் பேர் வரையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பெருமளவிலானோர் இலங்கையின் முப்படைகளாலும் பொலிஸாராலும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களே. காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதிவேண்டி கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக உறவுகள் போராடிவருகின்றனர்.

ஆனால், தனது ஆட்சிக்காலத்தில் அவர்களை ஒருமுறையேனும் பேச்சுக்கு அழைத்திராத இலங்கை ஜனாதிபதி, உள்ளகப் பொறிமுறையில் பேச்சில் ஈடுபடப்போகின்றேன் என்று அறிவித்துள்ளார்.இலங்கை ஜனாதிபதி ஐ.நா. பொதுச்செயலாளரையும் சர்வதேசத்தையும் இதன்மூலம் ஏமாற்ற முற்பட்டுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது. ஆனால், ஐ.நா. பொதுச்செயலாளரோ அல்லது சர்வதேச சமூகமோ காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி அறியாமலில்லை என்பதை முதலில் இலங்கை ஜனாதிபதி புரிந்துகொள்ளவேண்டும்.

காணாமலாக்கப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் என்பதை இலங்கை ஜனாதிபதி முதலில் பகிரங்கமாக அறிவிக்கட்டும். அதன்பின்னர் இலங்கை அரச படைகளாலும் பொலிஸாராலும் காணாமலாக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளமை பற்றி நாம் சர்வதேசத்திடம் நீதி கோருவோம். – என்றார்.

 

https://newuthayan.com/875-3/

  • கருத்துக்கள உறவுகள்

காணாமற்போனவர்கள் தொடர்பாக எதனையும் மறைப்பதற்கில்லை – அரசாங்கம்

 
Kilinochchi-Missing-Persons-Relations-Ra
 
 

காணாமற்போனவர்கள் தொடர்பாக எதனையும் மறைப்பதற்கில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிணைந்த செயற்பாடுகளே அவசியம் என்றும் இலங்கையர் என்ற ரீதியில் இவ்வாறான துர்ப்பாக்கிய சம்பவம் மீண்டும் ஏற்படாத வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதே இறுதியான பதிலாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது, மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமற்போனவர்களுக்கு விரைவாக மரணச்சான்றிதல் வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆனால் காணாமல் போனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், காணாமற்போனவர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்கின்றனர். உண்மையிலேயே இவர்களுக்கு என்ன நடந்தது என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்?

இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர்,  “காணாமற் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை என்னால் திட்டவட்டமாக கூறமுடியாது. இதனைக் கண்டறிவதற்காக இலங்கையில் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி வெளி நாடுகளிலுள்ள புலம்பெயர் டயஸ்போராக்களுக்கு – நாட்டை நேசிப்பவர்களுக்கு பகீரங்க அழைப்பொன்றை விடுத்தார். அதாவது நாம் ஒன்றிணைந்து இதுகுறித்து பேச்சுவாரத்தை நடத்துவோம். தீர்மானங்களை மேற்கொள்வோம் இவர்கள் எமது நாட்டு பிரஜைகள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொலை நோக்குடனான சாதகமான நிலைப்பாடாகும். நேற்றும் பாராளுமன்றத்தில் இது குறித்து பேசப்படடது.

வடக்கை பிரதிநிதித்துவம் செய்யும் எமது சகோதர உறுப்பினர்கள் இதுகுறித்து சாதகமாக கருத்து தெரிவித்தனர். திட்டவட்டமாக உதாரணத்திற்கு X என்ற நபர் காணாமற்போனார் என்று வைத்துக்கொள்வோம். இவருக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு பதிலளிக்கக்கூடிய அளவுக்கு எமக்கு தெளிவில்லை.

இதனை எந்தவகையிலும் மறைக்கக்கூடிய விடயமல்ல.எந்த சந்தர்ப்பத்திலாவது சரியான தகவல் வெளிப்படலாம். நாம் அதனை அறிந்துகொள்ள முடியும். சில சந்தர்ப்பத்தில் காணாமற்போனவர்கள் சிலர் வெளிநாடுகளில் அரசியல் புகழிடம்பெற்று வாழ்கின்றனர். இது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அல்ல.

தமது பிள்ளைகள் காணமற்போயிருப்பதாக பெற்றோர் கண்ணீர் விடும் காட்சியை ஒவ்வொரு வருடமும் நாம் காண்கின்றோம். இவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகள். அதனால், நாம் இதுதொடர்பில் பொறுப்புடன் செயற்படவேண்டியுள்ளது.

அதனால் அதில் எதனையும் மறைப்பதற்கில்லை. இதுதொடர்பில் ஒன்றிணைந்த செயற்பாடுகளே அவசியம். இலங்கையர் என்ற ரீதியில் இவ்வாறான துர்பாக்கிய சம்பவம் மீண்டும் ஏற்படாத வகையில் செயற்படுவதே இறுதியான பதிலாகும்” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

நன்றி – அரசத் தகவல் திணைக்களம்

காணாமற்போனவர்கள் தொடர்பாக எதனையும் மறைப்பதற்கில்லை – அரசாங்கம் – Athavan News

  • கருத்துக்கள உறவுகள்

'போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டார்கள் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டாரா?'

22 செப்டெம்பர் 2021, 10:26 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டானியோ கூட்டரேஷ் உடன் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம்,PMD SRI LANKA

 
படக்குறிப்பு,

ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டானியோ கூட்டரேஷ் உடன் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கூட்டரேஷிற்கும், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை, இலங்கை தமிழர் அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இலங்கையின் உள்ளகப் பிரச்னைகள் நாட்டுக்குள்ளேயே உள்ளக பொறிமுறையினுடாக தீர்க்கப்பட வேண்டும், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் வழக்கு விசாரணைகளின் பின்னரே விடுவிக்கப்படுவர், காணாமல் போனோருக்கு அவர்களது மரண சான்றிதழை வழங்குதல் போன்ற ஜனாதிபதியின் கருத்து தற்போது கடும் விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் கூட்டத்தில் பங்குப்பற்றுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி, ஆன்டோனியோ கூட்டரேஷை கடந்த 19ம் தேதி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் குறித்து, தமிழர்கள் தமது விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

போர் முடிவடைந்த 12 வருடங்கள் கடந்துள்ள நிலையில், காணாமல் போனோர் தொடர்பில் எவ்வித சாட்சியங்களும் இல்லாமையினாலேயே, அரசாங்கம் மரண சான்றிதழை வழங்க எண்ணியதாக அரசு தரப்பு கூறுகிறது. தமிழர்கள் மட்டுமளளது சிங்களவர்களும் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அரசு தரப்பு கூறுகிறது.

''காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டுள்ளார்கள்?" - சுரேஷ் பிரமேசந்திரன்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரண சான்றிதழை வழங்குவதாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்தின் ஊடாக, காணாமல் ஆக்கப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதனை, இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக கூற வேண்டும் எனவும் அவர் கோருகின்றார்.

போரில் காணாமல் ஆக்கப்பட்டோர்

பட மூலாதாரம்,ISHARA S. KODIKARA / GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப்படம்

அவ்வாறு இலங்கை அரசாங்கம் இதனை திட்டவட்டமாக கூறும் பட்சத்தில், பல வருடங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது போராட்டங்களை கைவிடுவதற்கான சாத்தியம் உள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் மூன்றரை வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், உயிரிழந்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அழைத்து, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஏன்ன நேர்ந்தது என்பது தொடர்பில் பேசுவதற்கு ஜனாதிபதி இதுவரை முன்வரவில்லை என சுரேஷ் பிரேமசந்திரன் குறிப்பிடுகின்றார்.

''ராணுவத்திடம் ஒப்படைத்தவர்கள், கொலை செய்யப்பட்டார்களா?" - எஸ்.சிறிதரன்

இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவதென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

எஸ்.சிறிதரன்

பட மூலாதாரம்,SHIRIDARAN'S FACEBOOK

 
படக்குறிப்பு,

எஸ்.சிறிதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், நாடாளுமன்றத்தில் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக நாட்டின் அதி உத்தம ஜனாதிபதி கூறுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் விடையா என அவர் கேள்வி எழுப்புகின்றார்.

ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கூற வேண்டும் என அவர் அரசாங்கத்தை கோருகின்றார்.

அத்துடன், அனைத்து கொலைகளையும் அரசாங்கமே செய்து விட்டு, அது தொடர்பில் அரசாங்கமே விசாரணை நடத்துவது என்றால், அதில் என்ன நியாயம் உள்ளது என அவர் கேள்வி எழுப்புகின்றார்.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் என்பவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவிக்கின்றார்.

2008ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையான காலம் வரை, முள்ளிவாய்க்காலில் கலைக்கப்பட்ட சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்கண்ட சாட்சியமாக ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு கண்டகண்ட சாட்சியமாக ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டுவிட்டார்களா? அதற்காகவா மரண சான்றிதழ் வழங்கப்படுகின்றது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

''ஐநா தமிழர்களின் கோரிக்கை கண்டுக்கொள்ளப்படவில்லை'' - அனந்தி சசிதரன்

அனந்தி சசிதரன்
 
படக்குறிப்பு,

அனந்தி சசிதரன்

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பின் கோரிக்கையை ஐநாவில் எந்தவொரு தரப்பும் கண்டுக்கொள்ளவில்லை என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமும், வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவிக்கின்றார்.

யுத்தத்தை நடத்தி, இன அழிப்பை மேற்கொண்ட அரசாங்கத்திடமே, பொறுப்புக்கூறலை கையளித்திருப்பது என்பது, பாதிக்கப்பட்ட தமக்கு பாரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

மனித உரிமை விடயத்தில் நீதி கிடைக்காத நிலையிலேயே, தாம் ஐக்கிய நாடுகள் சபையை நாடியதாகவும் அவர் கூறுகின்றார்.

எனினும், ஐக்கிய நாடுகள் சபை தமக்கான நீதியை பெற்றுத்தரவில்லை என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவிக்கின்றார்.

''ஜனாதிபதியின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது?'' - எஸ்.கஜேந்திரன்

ராணுவத்திடம் சரணடைந்த பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என உறவினர்கள் தேடிக் கொண்டிருக்கும் போது, ஐநா பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

எஸ்.கஜேந்திரன்
 
படக்குறிப்பு,

எஸ்.கஜேந்திரன்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக ஜனாதிபதி, ஐநா செயலாளரிடம் கூறிய கருத்தை, தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய போதே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என உறவினர்கள் தேடிக் கொண்டிருக்கும் போது, ஜனாதிபதி இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறுகின்றார்.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக கட்நத செப்டம்பர் மாதம் ஜெனீவாவில் இந்த அரசாங்கம் உறுதியளித்திருந்ததாகவும், அந்த உறுதிமொழி இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மரண சான்றிதழ் வழங்கும் முடிவு ஏன்? - இலங்கை அரசு விளக்கம்

Ramesh pathirana'

பட மூலாதாரம்,RAMESH PATHIRANA'S FB

போர் முடிவடைந்த 12 வருடங்கள் கடந்துள்ள நிலையில், காணாமல் போனோர் தொடர்பில் எவ்வித சாட்சியங்களும் இல்லாமையினாலேயே, அரசாங்கம் மரண சான்றிதழை வழங்க எண்ணியதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார். பிபிசி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யுத்தத்தின் போது பலருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அவர் கூறினார்.

தமிழர்கள் மாத்திரமன்றி, சிங்களவர்களும் இவ்வாறு காணாமல் போனவர்களில் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.

நீண்ட காலமாக இதற்கு தீர்வு இல்லாமையினால், உறவினர்களின் உரிமைகள் இல்லாது போவதாகவே அரசாங்கம் கருதுகின்றது எனவும் அவர் கூறுகின்றார்.

இதன்படி, காணாமல் போனோருக்கான சாட்சியங்கள் இல்லாதவர்களுக்கு, மரண சான்றிதழை வழங்குவதே சரியானது என காணாமல் போனோர் அலுவலகமும் பரிந்துரை செய்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறான காரணங்களினாலேயே, அரசாங்கம் இவ்வாறான தீர்மானத்தை எட்டியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-58649314

  • கருத்துக்கள உறவுகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்காமல் மரணசான்றிதழ் வழங்குவதை ஐநா ஆதரித்தால் அது வரலாற்று தவறு- கஜேந்திரகுமார்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்காமல் மரணசான்றிதழ் வழங்குவதை ஐநா ஆதரித்தால் அது வரலாற்று தவறு- என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்
Gajendrakumar-Ponnambalam-300x227-1.jpg
இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இராணுவத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு( எதுவித நீதி பொறுப்புக்கூறலும் இன்றி ) மரண சான்றிதழ் வழங்க போவதாக ஐநா பொது செயலாளரை சந்தித்த பின்னர் ஜனாதிபதி கோத்தாபாய தெரிவித்திருக்கிறார்.
ஐநாவின் அடிப்படை நியாயப்பாடுகளையே கேலிக்குள்ளாக்கும் இந்த செயல்பாடுகளை ஐநா ஆதரிக்குமானால், அது ஒரு வரலாற்று தவறாகவே பதியப்படும். பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக நாம் நிச்சயம் அந்த அநீதியை எதிர்ப்போம்.
“காணமற்போனவர்கள் இறந்துவிட்டதாக மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும், இந் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
அது எந்த நடவடிக்கை? நியுயோரக்குக்குச் செல்வதற்கு முன்னர், பழையவற்றை மறந்து விடுங்கள். உங்களுடைய அன்புக்குரிவர்களை தேடுவதில் காலத்தை வீணடிக்காதீர்கள் என்று காணமற்போனவர்களின் உறவினர்களுக்கும், அவர்களைப் பிரதிநிதித்துப்படுத்துகிற அமைப்புகளுக்கும் தெனாவட்டுடன் கூறியிருக்கிறார். அவ்வாறாயின் இப்போது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? காணாமற் போனவர்கள் என்ன காரணங்களுக்காக பாதுக்காப்புப்படையினரால் கொல்லப்பட்டார்கள்? என்பதைனை விசாரிக்கமால், வெறுமனே மரணச் சான்றிதழ்களை விநியோகிக்கப் போகிறார். இவ்வாறு பாதுகாப்புப் படைகளுக்கு தண்டனை விலக்கு வழங்கும் நடவடிக்கைக்கு ஐக்கியநாடுகள் சபை ஒப்புதல் வழங்க வேண்டும் என ஜனாதிபதி எதிர்பார்க்கிறார். இந்நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு வழங்குமேயானால், அதனை எந்தவித தயக்கமுமின்றி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நாம் எதிர்புத் தெரிவிப்போம். ஏனெனில் இது ஐநா சபையின் எல்லாவிதமான கொள்கைகளுக்கும் முரணானது. அவ்வாறு ஐ.நா.சபை நடந்துகொள்ளுமேயானால் இது வரலாற்றில் தவறானதாகவே பதியப்படவேண்டியது.”
 

https://thinakkural.lk/article/139088

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவாவது செத்து போனவர்களுக்கு மரண சான்றிதழ்கள் கொடுக்கிறார்கள் என்று  இல்லை ..செத்தவர்களை திரும்பி கொடுக்க அவர்கள் என்ன கடவுளா 😑

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

இப்பவாவது செத்து போனவர்களுக்கு மரண சான்றிதழ்கள் கொடுக்கிறார்கள் என்று  இல்லை ..செத்தவர்களை திரும்பி கொடுக்க அவர்கள் என்ன கடவுளா 😑

இராணுவத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு எப்படி மரணசான்றிதள் கொடுப்பது?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இராணுவத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு எப்படி மரணசான்றிதள் கொடுப்பது?

மரண சான்றிதழ் கொடுப்பதன் மூலம் ஆமி அவர்களை கொலை செய்து விட்டார்கள் என்று அரசு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுப்பதாகும் ...அதை வேண்டாம் என்று சொல்கிறீர்களா 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

மரண சான்றிதழ் கொடுப்பதன் மூலம் ஆமி அவர்களை கொலை செய்து விட்டார்கள் என்று அரசு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுப்பதாகும் ...அதை வேண்டாம் என்று சொல்கிறீர்களா 

விதானையார் வேலை எப்ப எடுத்தநீங்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

செத்தவர்களை திரும்பி கொடுக்க அவர்கள் என்ன கடவுளா 😑

செத்தவர்களை கடவுள் ஒருபோதும் திருப்பி கொடுக்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

இப்பவாவது செத்து போனவர்களுக்கு மரண சான்றிதழ்கள் கொடுக்கிறார்கள் என்று  இல்லை ..செத்தவர்களை திரும்பி கொடுக்க அவர்கள் என்ன கடவுளா 😑

காணாமல் போன,  
ஒரு பிள்ளையின்...  தாயாகவோ, தந்தையாகவோ ... இருந்து, 
இதனை அணுகும் போது... அதன் வலி, மிகக் கொடுமையானது.

அதனை... நாம், விவாதம் பண்ணி.. கடந்து போவது வேதனைக்குரியது. 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை அப்புகாத்துமரும் இராஜதந்திரிகளும் வெளியில் வந்து எப்போது அறிக்கைவெளியிடுவினம்?

முள்ளை முள்ளாலைதான் எடுக்கவேணும் என்பதிலை எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது.

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.