Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்கிலிருந்து தோன்றியவர்கள் அல்லர்: மரபணு ஆய்வில் வெளியான தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Genetic-0122-1024x426.jpg

சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் – மரபணு ரீதியாக பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளனர் என, கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மரபணு தொழில்நுட்பம், மூலக்கூறு அறிவியல் துறை நடத்திய நான்கு வருட ஆய்வை தொடர்ந்து இந்த விடயம் அவதானிக்கப்பட்டது.

வேறு சில அம்சங்களை ஆராயும் போது, இலங்கையின் முக்கிய இனங்கள் பற்றிய இந்த அவதானிப்பு தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக, மேற்படி ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சிங்களவர்களுடன் இலங்கை தமிழர்களை விடவும், இலங்கை முஸ்லிம்கள் பெரிய மரபணு ஒற்றுமையைக் கொண்டுள்ளனர் என்று இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் முஸ்லிம்களை விட சிங்களவர்கள்தான் தமிழர்களுடன் அதிக ஒற்றுமையைக் கொண்டிருப்பார்கள் என்று பரவலாக நம்பப்பட்டது” என, தலைமை ஆராய்ச்சியாளர் டொக்டர் கயானி கல்ஹேன தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் நம்பப்படுவது போல் இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்கிலிருந்து தோன்றவில்லை என்றும், அவர்கள் இந்தியாவில் இருந்து தோன்றியதாகவும் டொக்டர் கயானி கல்ஹேன மேலும் கூறியுள்ளார்.

சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்களுடன் ஒப்பிடுகையில், இந்தியத் தமிழர்கள் 0.4% வித்தியாசத்தைக் காட்டுவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

https://puthithu.com/?p=58434&fbclid=IwAR1s-ZBrCeYa-SRaVflenG8gkX4XjLW3MxlWQEQha-FgIf4pfEum_C-CdfU

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, colomban said:

Genetic-0122-1024x426.jpg

சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்களுடன் ஒப்பிடுகையில், இந்தியத் தமிழர்கள் 0.4% வித்தியாசத்தைக் காட்டுவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

https://puthithu.com/?p=58434&fbclid=IwAR1s-ZBrCeYa-SRaVflenG8gkX4XjLW3MxlWQEQha-FgIf4pfEum_C-CdfU

இலங்கைதமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் மலையாளிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனரேயன்றி, வங்காளிகளுடனோ, அரபிகளுடனோ அல்லது தமிழ்நாட்டு தமிழருடனோ அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இலங்கைதமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் மலையாளிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனரேயன்றி, வங்காளிகளுடனோ, அரபிகளுடனோ அல்லது தமிழ்நாட்டு தமிழருடனோ அல்ல. 

என்ன யூட்டர்.... புதுசா சரித்திரம் சொல்லுறியள்...

மலையாளிகள் - சேர தமிழர்கள்.... அவர்களது மொழி, தமிழில் இருந்து பிரிந்த ஒன்று.

கன்னியாகுமரி மக்கள் பேசும் மொழி நடை.... மலையாளம், தமிழ் கலந்த ஒரு  தமிழ். அதுவே, யாழ்ப்பாணத்தில் உள்ளது போன்ற மொழிநடை..

கடைசி யாழ் மன்னன் சங்கிலி, கன்னியாகுமரியில் குடும்ப தொடர்பு கொண்டவராக இருந்திருக்கிறார்.

உள்ளூர் இஸ்லாமியர்கள், பெரும்பாலும், சாதிய தீண்டாமையினால், மதம் மாறியவர்களாக இருந்தார்கள். கிழக்கு மாகாண இஸ்லாமியர்கள், தமிழக, கேரள பகுதிகளில் இருந்து வந்தவர்கள்.

ரவூப் ஹக்கீம் போன்றோர், சிரிய வம்சாவளி இஸ்லாமியர்கள்.

கொழும்பில், பாகிஸ்தானிய இஸ்லாமியர்கள் பலர் உள்ளனர். தம்மை சிந்தி இனத்தவர்கள் என்பார்கள். இந்தியா சுதந்திரம் பெறும் காலத்தில் நடந்த மோதலில், அண்மையில் இருந்த, இன்னும் பிரித்தானிய ஆளுமையின் கீழ் இருந்த இலங்கைக்கு ஓடி வந்தவர்களே இவர்கள்.

சிங்களவர்கள், வங்களாளிகள் தொடர்பு கொண்டவர்கள். 

அவர்களது மொழி, சமஸ்கிருதம், பாலி, தமிழ் கலந்த ஒரு கலவை.

ஆரிய மொழி கலப்பு என்று புளுடா, விட்டுக்கொண்டு இருக்கின்றனர். மஹாவம்சம் போலவே..... கப்சா...

உண்மையில், பெரும்பாலான தமிழர்கள், இஸ்லாமியர்கள், தமிழ்மொழிக்கான வாய்ப்பு இல்லாத நிலையில், சிங்கள மொழியில் படித்து, தம்மை சிங்களவர்களாக கருதி வாழ்கின்றனர்.

இன்று புலம் பெயர்ந்த தமிழர்கள், வம்சாவளியினர் இவ்வாறு ஒரு தடுமாறுதலுக்கு உள்ளாகி இருந்தாலும், தோலின் நிறம், அந்த தடுமாறுதலுக்கு ஒரு எல்லை யினை வகுத்து விடும்.

ஆனால் இலங்கையில் தோல் நிற பிரச்னை இல்லாததாலும், தமது பாதுகாப்பு காரணமாகவும், பல தமிழர்கள், தம்மை சிங்களவர்களாகவே காட்டி கொண்டு வாழ்கின்றனர். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இலங்கைதமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் மலையாளிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனரேயன்றி, வங்காளிகளுடனோ, அரபிகளுடனோ அல்லது தமிழ்நாட்டு தமிழருடனோ அல்ல. 

எந்த ஆதாரம் மூலம் இருக்கு உங்களிடம் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கற்பகதரு said:

இலங்கைதமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் மலையாளிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனரேயன்றி, வங்காளிகளுடனோ, அரபிகளுடனோ அல்லது தமிழ்நாட்டு தமிழருடனோ அல்ல. 

கற்பகத்தார்! இது எழுதேக்கை நீங்கள் இருக்கிற இடத்திலை எத்தினை மணி? 7063-f7437c7ded1c1514e778c26308e735dfce6411a7.gif

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

இலங்கைதமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் மலையாளிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனரேயன்றி, வங்காளிகளுடனோ, அரபிகளுடனோ அல்லது தமிழ்நாட்டு தமிழருடனோ அல்ல. 

இலங்கைத்தமிழரும் முஸ்லிம்களும் சிங்களவரும் மலையாளிகள் என்றே மேலே எழுதியிருக்குறேன்.

1 hour ago, Nathamuni said:

என்ன யூட்டர்.... புதுசா சரித்திரம் சொல்லுறியள்...

மலையாளிகள் - சேர தமிழர்கள்.... அவர்களது மொழி, தமிழில் இருந்து பிரிந்த ஒன்று.

கன்னியாகுமரி மக்கள் பேசும் மொழி நடை.... மலையாளம், தமிழ் கலந்த ஒரு  தமிழ். அதுவே, யாழ்ப்பாணத்தில் உள்ளது போன்ற மொழிநடை..

கடைசி யாழ் மன்னன் சங்கிலி, கன்னியாகுமரியில் குடும்ப தொடர்பு கொண்டவராக இருந்திருக்கிறார்.

உள்ளூர் இஸ்லாமியர்கள், பெரும்பாலும், சாதிய தீண்டாமையினால், மதம் மாறியவர்களாக இருந்தார்கள். கிழக்கு மாகாண இஸ்லாமியர்கள், தமிழக, கேரள பகுதிகளில் இருந்து வந்தவர்கள்.

நீங்களும் அதையே சொல்லிவிட்டு பிறகு இராவுல் ஹக்கிமிடமும் மகாவம்சத்திடமும் சரணடைந்து விட்டீர்களே?

1 hour ago, பெருமாள் said:

எந்த ஆதாரம் மூலம் இருக்கு உங்களிடம் ?

ஏதோ நம்மால முடிஞ்சது வஞ்சகமில்லாம சுத்த தமிழில்:

https://ta.m.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழர்_பற்றிய_மரபியற்_கற்கை

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கற்பகதரு said:

நீங்களும் அதையே சொல்லிவிட்டு பிறகு இராவுல் ஹக்கிமிடமும் மகாவம்சத்திடமும் சரணடைந்து விட்டீர்களே?

இன்று ரொம்ப குழப்பி இருக்கிறீர்கள்...

சரி விடுங்க... 🙄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

எந்த ஆதாரம் மூலம் இருக்கு உங்களிடம் ?

23 minutes ago, கற்பகதரு said:

ஏதோ நம்மால முடிஞ்சது வஞ்சகமில்லாம சுத்த தமிழில்:

https://ta.m.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழர்_பற்றிய_மரபியற்_கற்கை

விக்கிபீடியாவுக்கை போய் ஆரும் என்னவும் எழுதலாம். அதெல்லாம் உண்மையான வரலாற்று தகவல் கிடையாது.

உதாரணத்துக்கு நானும் விக்கியர்ரை பீடியாவுக்கு போய் கற்பகம் எண்டவர் கக்கக்க போ காக்கைவன்னியன் தம்பி எண்டு எழுதலாம் கண்டியளோ? 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

விக்கிபீடியாவுக்கை போய் ஆரும் என்னவும் எழுதலாம். அதெல்லாம் உண்மையான வரலாற்று தகவல் கிடையாது.

உதாரணத்துக்கு நானும் விக்கியர்ரை பீடியாவுக்கு போய் கற்பகம் எண்டவர் கக்கக்க போ காக்கைவன்னியன் தம்பி எண்டு எழுதலாம் கண்டியளோ? 😎

நீங்கள் கண்டதும் திண்டதும் எழுத நானும் எனது பட்டாளமும் விரல் சூப்பிக்கொண்டு இருப்பம் எண்டா கனவு காணுறியள்? விக்கிப்பீடியாவில நீங்களும் எழுதிவியள் எண்டுறியள், இருக்குறதும் பிழை எண்டுறியள், பிறகு எதுக்கு விக்கிப்பீடியாவில எழுதாமல் இங்க வந்து குப்பை கொட்டுறியள்? விக்கிப்பீடியாவில இருக்கிறது பிழை எண்டால் திருத்தி எழுத பல்லாயிரம் பொதுசனம் எங்கே எண்டு கண்ணுக்குள்ள எண்ணை விட்டு பார்த்துக்கொண்டு இருக்கினம். ஆதாரம் இல்லாமல் விக்கிப்பீடியாவில எதுவும் நிலைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

இலங்கைதமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் மலையாளிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனரேயன்றி, வங்காளிகளுடனோ, அரபிகளுடனோ அல்லது தமிழ்நாட்டு தமிழருடனோ அல்ல. 

5 hours ago, கற்பகதரு said:

ஏதோ நம்மால முடிஞ்சது வஞ்சகமில்லாம சுத்த தமிழில்:

https://ta.m.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழர்_பற்றிய_மரபியற்_கற்கை

இலங்கைத் தமிழர் பற்றிய மரபியற் கற்கை

இலங்கைத் தமிழரின் கலாச்சாரத்தினதும் மொழியியலினதும் தனித்தன்மை, மரபியற் கற்கை என்பன தென்னிந்தியாவிலுள்ள இந்தியத் தமிழருடன் தொடர்பு கொண்டுள்ள அதேவேளை இலங்கை தீவிலுள்ள ஏனைய இனக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புள்ளது என்பதை தெரிவிக்கின்றது. வேறுபட்ட கற்கைகள் இலங்கைத் தமிழர், சிங்களவர், இந்திய இனக்குழுக்களுக்கு இடையிலான தொடர்பின் பல்வகைக் கோணங்களை காட்டுகின்றன.

350px-Sri_Lankan_Tamil_Genetic_Admixture
இலங்கைத் தமிழரின் மரபியல் கூட்டுக்கலவை - கலாநிதி. கெளதம் கே. சாட்ரியா

1995இல் கலாநிதி. கெளதம் கே. சாட்ரியாவின் மரபியல் கூட்டுக்கலவை கற்கையின்படி, இலங்கைத் தமிழர் சிங்களவர்களுடன் நெருங்கிய தொடர்பும் குறைந்தளவு தொடர்பை வங்காளி மக்களுடனும் இந்தியத் தமிழர்களுடனும் கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றது. அவரின் கற்கை இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர்களுடனான தொடர்பைவிட (16.63% +/- 8.73) சிங்களவர்களுடன் பாரிய தொடர்பை (55.20% +/- 9.47) கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றது. ஆனால், சிங்களவர் தென்னிந்திய தமிழர்களுடன் பாரிய தொடர்பையும் (69.86% +/- 0.61), அதற்கடுத்து வட இந்திய வங்காளியினருடன் தொடர்பு (25.41% +/- 0.51). கொண்டிருப்பதாக கண்டார். இலங்கைத் தமிழரும் சிங்களவரும் 55% பொது மரபணுத்தொகுப்பை பகிர்கின்றனர். அவர்களுக்கும் சுதேசிகளான வேடுவர்களுக்குமான தொடர்பு தொலைவில் காணப்படுகின்றது.[1] இலங்கைத் தமிழருக்கும் சிங்களவருக்குமான இந்த நெருங்கிய தொடர்பானது, இரு சனத்தொகைக்குமான வரலாற்று, மொழியியல், கலாச்சார நெருங்கிய தொடர்பானது 2000 வருடங்களுக்கு மேலானது.[1]

350px-Sinhalese_Genetic_Admixture_TA.png
சிங்களவரின் மரபியல் கூட்டுக்கலவை - கலாநிதி. கெளதம் கே. சாட்ரியா

குறிப்புக்கள்தொகு
  1.  1.0 1.1 Kshatriya, G.K. (1995). "Genetic affinities of Sri Lankan populations". Human Biology (American Association of Anthropological Genetics) 67 (6): 843–66. பப்மெட்:8543296.

இவற்றையும் பார்க்கதொகு

மேலே கற்பகத்தரு  சொல்றார்  இப்படி 

5 hours ago, கற்பகதரு said:

இலங்கைத்தமிழரும் முஸ்லிம்களும் சிங்களவரும் மலையாளிகள் என்றே மேலே எழுதியிருக்குறேன்.

நீங்கள் தந்த இணைப்பில் எங்கு மலையாளி தொடர்பு உள்ளது ?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் விக்கிபீடியா சிங்களவர்களின் புளுகு ஆள் எழுதியிருக்கார் அதிலும் மலையாளி தொடர்பை காணவில்லை ஆனால் கற்பகத்தார் சிங்களவனை விட பலமடங்கு வரலாற்று பொய்யை இந்த திரியில் அவுட்டு விடுறார் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

முதலில் விக்கிபீடியா சிங்களவர்களின் புளுகு ஆள் எழுதியிருக்கார்

உங்கள் தமிழீழ புளுகை இப்போது எங்கேயும் காணோமே? என்னாச்சு?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

உங்கள் தமிழீழ புளுகை இப்போது எங்கேயும் காணோமே? என்னாச்சு?

மலையாள தொடர்பு என்று நீங்கள் தான் இங்கு எழுதியது தந்த  ஆதாரத்தில் அப்படியொண்டையும் காணவில்லை பொய்யான தகவலை பரப்புவதுதான் உங்கள் நோக்கமா ? 

அல்லது சொந்த இனத்தையே கரித்துக்கொண்டு ..........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

மலையாள தொடர்பு என்று நீங்கள் தான் இங்கு எழுதியது தந்த  ஆதாரத்தில் அப்படியொண்டையும் காணவில்லை பொய்யான தகவலை பரப்புவதுதான் உங்கள் நோக்கமா ? 

அல்லது சொந்த இனத்தையே கரித்துக்கொண்டு ..........................

கரிக்காட்டில் கல்லா நிறையாது எல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்

மேலே பெருமாள் இணைத்த ஆய்வு 1995 இல் அப்போது வழக்கத்திலிருந்த முறைகளைக் கையாண்டு செய்யப் பட்டிருக்கிறது. முடிவில் தவறுகள் இல்லை, ஆனால் அவர்களால் இந்தியாவின் எந்தப் பிரதேசத்தோடு தொடர்பு இருக்கிறது என்பதைச் சொல்ல முடியாது - எனவே ஆய்வு முடிவில் அது உள்ளடங்கவில்லை!
 ஆனால் இன்னும் granular ஆக 2013 இல் வெளிவந்த ஆய்வு நவீன முறைகளைக் கையாண்டு செய்யப் பட்டிருக்கிறது.

இந்த இரண்டாவது ஆய்வில் பயன்படுத்தப் பட்டிருப்பது எங்கள் கலங்களில் இருக்கும் சிறுமணிகள் (mitochondria) எனும் அமைப்பினுள் இருக்கும் டி.என்.ஏ. இது ஏன் முக்கியம்? ஆணின் விந்து பெண்ணின் முட்டையைக் கருக்கட்டும் போது, முளையம் உருவாகிறது. அந்த முளையத்தின் மிகப் பெரும்பான்மையான சிறுமணிகள் தாயின் முட்டையிலிருந்தே வருகின்றன. முளையம் வளர்ந்து , பிறந்து இன்னொரு மனிதனாகும் போது அந்த மனிதனின் உடலில் இருக்கும் சிறுமணிகள் அனேகமாக எல்லாமே தாயிடமிருந்து வந்தவையாகவே இருக்கும். எனவே, ஆதிப் பரம்பரை தேடும் ஆய்வில் இந்த தாய்வழிச் சிறு மணிகளின்  டி.என்.ஏ (mtDNA) தான் ஏற்றுக் கொள்ளப் பட்ட நியமமாக இப்போது இருக்கிறது.

இனி கீழுள்ள படத்தைப் பாருங்கள்:

Figure 5

அங்கே TS Jaf என்று இருப்பது யாழ்ப்பாணத் தமிழ். இந்தியாவின் எந்தப் பகுதியோடு யாழ்ப்பாணத்தமிழர்கள் நெருக்கமாக இருக்கிறார்கள் என்று பார்க்கும் போது, மூன்று இந்தியப் பிரதேசங்கள் நெருக்கமாக வருகின்றன: அவை, NI-Tri-Tha (தற்போதைய உத்தரகாண்ட்), WI-Cas-Guj (குஜராத்), SI-Cas-Coc (கேரளா) என்பன. புள்ளிகளிடையேயான தூரங்களை ஒப்பிட்டால், தமிழ் நாட்டை விட (SI-Tri-Pan) யாழ் தமிழர்கள் வட இந்தியாவோடும், கேரளாவோடும், குஜராத்தோடும் நெருக்கமாக இருப்பதாகவே தெரிகிறது! 

இந்த இணைப்பில் சென்று முழு ஆய்வையும் வாசிக்கலாம்:

https://www.nature.com/articles/jhg2013112

 பி.கு: எனவே, எம்மிடையே இனத்தூய்மை பேசுவோர் இரு முனை கூரான கத்தியை வைத்து விளையாடும் வேலையைத் தான் செய்கின்றனர். இனத்தூய்மையை பிழையான வழியில் நோண்ட ஆரம்பித்தால், நம் மூக்கே ஒரு நாள்  வெட்டு வாங்க வேண்டி வரும்!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

அவரின் கற்கை இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர்களுடனான தொடர்பைவிட (16.63% +/- 8.73) சிங்களவர்களுடன் பாரிய தொடர்பை (55.20% +/- 9.47) கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றது. ஆனால், சிங்களவர் தென்னிந்திய தமிழர்களுடன் பாரிய தொடர்பையும் (69.86% +/- 0.61), அதற்கடுத்து வட இந்திய வங்காளியினருடன் தொடர்பு (25.41% +/- 0.51). கொண்டிருப்பதாக கண்டார். இலங்கைத் தமிழரும் சிங்களவரும் 55% பொது மரபணுத்தொகுப்பை பகிர்கின்றனர். அவர்களுக்கும் சுதேசிகளான வேடுவர்களுக்குமான தொடர்பு தொலைவில் காணப்படுகின்றது.

இலங்கை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் மரபணுவியல் ஒற்றுமை 55% சதவீதமாம்.அதே சிங்களவர்களுக்கு தென்னிந்திய தமிழர்களுடன் தொடர்ப்பு 70% தமாம். ஆனால்.. இலங்கைத் தமிழர்களுக்கும்.. தென்னிந்திய தமிழர்களுக்கும் தொடர்ப்பு வெறும் 16% சதவீதமாம். 

மேலும் சிங்களவர்களுக்கு 25% சதவீதம் தானாம் வங்காளித் தொடர்ப்பு.. அதாவது வடக்கிந்தியத் தொடர்ப்பு.

தமிழர்களுக்கு அது எத்தனை சதவீதம் என்று சொல்லேல்ல.

சரி.. இந்த ஆய்வு நடுநிலையானதா.. திறனாய்வுக்கு உள்ளானதா என்பதை எல்லாம் விட்டிட்டு பார்த்தாலும்..

விஜயன்.. கும்பல்.. வடக்கிந்தியர்கள் அல்ல.  வேடுவர்களே தங்கள் மூதாதை என்ற சிங்களத்தின் கருத்தியலும் அடிபட்டுப் போகுது.

அதுசரி மகாவம்சப்படி.. சிங்களவர்கள் சிங்கத்துக்கு மிக நெருக்கமா இருந்திருக்கனுமே.. அதையும் காணம்.

ஆக.. சிங்களவர்கள் எனப்படுவோர்.. இன்றைய தெலுங்கர்கள் எனப்படும்.. முன்னைய தமிழர்கள் ஆவர். இன்றைய ஈழத்தமிழர்கள்.. முன்னைய சேர நாட்டுக்காரர்கள் தாம் அதிகம். சோழ நாட்டு தமிழகத் தமிழ் கலப்பு அதில் உண்டு.  ஆக சிங்களவர்களிடம்.. வட இந்தியத் தொடர்பு.. அசோகன்.. விஜயன் கதை.. இலங்கை சிங்களவர்களுக்கே பூர்வீகமானது என்பதெல்லாமே அடிபட்டுப் போகுது. 

ஏனெனில்.. சிங்களவர்களுக்கு முன் தென்னிந்தியாவை மையப்படுத்தி.. சேர நாட்டிலும்... தமிழகத்திலும் தமிழர்கள் வாழ ஆரம்பித்துவிட்டனர். தமிழர்களின் பரம்பல்.. வடக்கே.. சரஸ்வதி நதிவரையும்.. கிழக்கே... வங்கம் வரையும்.. விரிந்தே இருந்துள்ளது. சோழர் காலத்தில்.. அது இன்னும் பரம்பலடைந்துள்ளது.

இவை எல்லாத்தையும் கருத்தில் கொண்டால்.. சிங்களவர்களின் தோற்றம் தமிழர்கள் சார்ந்தது என்பது வெளிப்படையாவதோடு.. தென்னிந்திய நாயக்க.. தெலுங்கர் தமிழர் கூட்டமே.. சிங்களவர்கள் என்ற தொல்பியல் மனித இனப்பரம்பல் ஆய்வுக்கு அமைய மரபணு ஆய்வு சரி நிகர்ப்படுத்திச் செல்கிறது. 

ஆனால்.. இந்த ஆய்வை மையப்படுத்தி.. தமிழர்களை சிங்களவர்களாகக் காட்டும் வலுவற்ற உக்தி கையாளப்பட்டிருப்பது.. இந்த ஆய்வின் நடுநிலைத் தன்மை.. திறனாய்வை கேள்விக்கு உட்படுத்துகிறது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

மேலும் சிங்களவர்களுக்கு 25% சதவீதம் தானாம் வங்காளித் தொடர்ப்பு.. அதாவது வடக்கிந்தியத் தொடர்ப்பு.

தமிழர்களுக்கு அது எத்தனை சதவீதம் என்று சொல்லேல்ல.

28%. 

விசித்திரமாக, சிங்களவர்களை விட நாங்கள் சிங்கம் தனகின மக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.