Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரபணு திருத்தப்பட்ட பயிர்களுக்கு பிரிட்டனில் கட்டுப்பாடு தளர்த்த திட்டம்: ஏன்? எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரபணு திருத்தப்பட்ட பயிர்களுக்கு பிரிட்டனில் கட்டுப்பாடு தளர்த்த திட்டம்: ஏன்? எப்படி?

  • பல்லவ் கோஷ்
  • அறிவியல் செய்தியாளர்
3 அக்டோபர் 2021
கூடுதல் வைட்டமின் சி கொண்ட மரபணு திருத்தப்பட்ட தக்காளி.

பட மூலாதாரம்,JIC

படக்குறிப்பு,

கூடுதல் வைட்டமின் சி கொண்ட மரபணு திருத்தப்பட்ட தக்காளி.

இங்கிலாந்தில் மரபணு திருத்தப்பட்ட (Gene Edited) பயிர்களை வணிகரீதியாக உற்பத்தி செய்ய வழிவகுக்கும் வகையில் பிரிட்டன் அரசு இதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த உள்ளது.

மரபான முறையில், புதிய பயிர் வகைகளை உருவாக்கும்போது எப்படி சோதிக்கப்பட்டு, மதிப்பிடப்படுமோ அந்த அளவுக்கே இனி மரபணு திருத்தப்பட்ட பயிர்களும் சோதிக்கப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறிவிட்டதால், இது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளை இனி பிரிட்டன் பின்பற்றவேண்டியதில்லை. இதனால்தான் இந்த கட்டுப்பாடு தளர்வு சாத்தியமாகி உள்ளது.

அதே நேரம், ஸ்காட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து அரசுகள் இனி தாங்களே இந்தக் கட்டுப்பாடு தளர்வு தொடர்பாக முடிவு எடுத்துக்கொள்ளலாம்.

வலுவான, பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத செடிகளை உருவாக்குவது தொடர்பில் விவசாயம், சுற்றுச்சூழல் சார்ந்த குழுக்களுடன் இணைந்து செயல்படப்போவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் ஜார்ஜ் யூஸ்டிஸ் தெரிவித்துள்ளார்.

"இயற்கை அளித்துள்ள மரபணு வளங்களை பயன்படுத்திக்கொள்ளும் வல்லமை மரபணு திருத்தும் தொழில்நுட்பத்துக்கு உண்டு. நாம் எதிர்கொள்ளும் சில பெரிய சவால்களை சமாளிப்பதற்கான கருவி இது," என்று அவர் தெரிவித்துள்ளார்.

மரபணு மாற்றமும், திருத்தமும்

மரபணு மாற்றம் என்று சொல்லப்படுவது வேறு. மரபணு திருத்தம் என்பது வேறு. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை ஒப்பிடும்போது மரபணு திருத்தப்பட்ட பயிர்களில் மரபணுவில் எளிமையான மாற்றங்களே செய்யப்பட்டிருக்கும் என்று விளக்கம் சொல்லப்படுகிறது.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் பெரும்பாலும் கூடுதல் ஜீன்கள் சேர்க்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் அந்த கூடுதல் ஜீன் என்பது முற்றிலும் வேறு உயிரினத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கும். சில நேரங்களில் விலங்குகளின் டி.என்.ஏ. கூட அதில் செலுத்தப்படும்.

மாறாக மரபணு திருத்தப்பட்ட பயிர்களில் பெரும்பாலும் ஜீன்கள் வெட்டி எடுக்கப்பட்டிருக்கும். இது போன்ற மாற்றங்களை மரபான ஒட்டு முறையில், கலப்பின முறையில்கூட செய்ய முடியும். ஆனால், ஒட்டு, கலப்பின முறையில் அதை செய்வதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்றால் மரபணு திருத்த முறையில் சில மாதங்களிலேயே அதை செய்ய முடியும்.

ஊட்டச் சத்து அதிகம் இருக்கும் வகையில், அதிகம் விளையக் கூடிய வகையில், தீவிர பருவநிலை விளைவுகளைத் தாங்கி நிற்கும் வகையில் பயிர்களை உருவாக்க இந்த மரபணு திருத்த முறையைப் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

ஒரு மரபணு திருத்தப்பட்ட கோதுமைப் பயிர் இது. இயற்கையில் ஒரு முறை மட்டுமே நிகழ்ந்துள்ள, தானியத்தின் அளவை பெரிதாக்கும் ஒரு திடீர் மற்றத்தை இந்த மரபணு திருத்தம் நிகழ்த்தியுள்ளது.

பட மூலாதாரம்,JIC

படக்குறிப்பு,

ஒரு மரபணு திருத்தப்பட்ட கோதுமைப் பயிர் இது. இயற்கையில் ஒரு முறை மட்டுமே நிகழ்ந்துள்ள, தானியத்தின் அளவை பெரிதாக்கும் ஒரு திடீர் மற்றத்தை இந்த மரபணு திருத்தம் நிகழ்த்தியுள்ளது.

ஆனால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு வைக்கப்பட்டுள்ள அதே அளவு கட்டுப்பாடுகளை, விதிகளை மரபணு திருத்தப்பட்ட பயிர்களுக்கும் வைத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

இந்த விதிகளின்படி மரபணு திருத்தப்பட்ட பயிர்களை பல ஆண்டுகளுக்கு களப்பரிசோதனைக்கும், உணவுப் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கும் உட்படுத்த வேண்டும்.

அதன் பிறகு புதிய வகைகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு உறுப்பு நாடுகள் வாக்களிக்கவேண்டும் என்பது அதைவிட பெரிய தடை.

இந்த அணுகுமுறை, பெரிய சிக்கல்களையும், முயற்சிகளையும் உடையது மட்டுமல்ல, நிறைய செலவு பிடிப்பதும்கூட என்று உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் நினைக்கின்றன. இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் மரபணு மாற்றப்பட்ட, திருத்தப்பட்ட எந்த ஒரு பயிரும் உருவாக்கப்பட்டதில்லை.

மரபணு மாற்றப்பட்ட, மரபணு திருத்தப்பட்ட பயிர்கள் தொடர்பாக தனித்தனி சட்டங்களை உருவாக்குவதில் இருந்து இந்த மாற்றத்தைத் தொடங்குகிறது வெஸ்ட்மின்ஸ்டர் அரசங்கம்.

முதல் படியாக, மரபான கலப்பின முறையில் உருவாக்க முடிகிற மாற்றங்களை மரபின திருத்தம் மூலம் செய்த பயிர்களை வயல்களில் பரிசோதனை செய்ய விஞ்ஞானிகள் உரிமம் பெறவேண்டும் என்ற விதி இந்த ஆண்டு ரத்து செய்யப்படும்.

அதைவிட ஒரு முக்கியமான மாற்றம் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படும். இதன் மூலம் வழக்கமாக புதிய ரகத்தை உருவாக்குவதற்கு உள்ள வழிமுறை என்னவோ, அதே வழிமுறையைப் பின்பற்றியே எளிமையான மரபணு திருத்தங்களை மேற்கொள்ள வழி செய்யும் சட்டம் கொண்டுவரப்படும்.

எல்லாவகை உயிரினங்களுக்கும் மரபணு மாற்றுவதற்கான கட்டுப்பாடுகள் தொடர்பான அணுகுமுறையை நீண்ட கால நோக்கில் அமைச்சர்கள் மறுபரிசீலனை செய்வார்கள். மரபணு திருத்தப்பட்ட, மாற்றப்பட்ட விலங்களுகளை உருவாக்கி, வணிக ரீதியாக உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை அனுமதிப்பது போன்றவை இந்த கட்டத்தில் இடம் பெறக்கூடும். இதனால் விலங்குகளின் உற்பத்தித் திறன், சில நோய்களை, வெப்பமான தட்பவெட்ப நிலையை தாங்கும் திறன் ஆகியவை அதிகரிக்கக்கூடும்.

மரபணு திருத்தத்தின் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த கன்று அதிக வெப்பத்தை தாங்கக்கூடியது, அதிகம் பால் தரும் பசுவாக ஆகக்கூடியது.

பட மூலாதாரம்,ACCELIGEN

படக்குறிப்பு,

மரபணு திருத்தத்தின் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த கன்று அதிக வெப்பத்தை தாங்கக்கூடியது, அதிகம் பால் தரும் பசுவாக ஆகக்கூடியது.

இது தொடர்பாகப் பேசிய வேல்ஸ் அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர், "மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் தொடர்பாக தற்போது வேல்சில் உள்ள விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யும் திட்டம் ஏதும் எங்களுக்கு இல்லை. மரபணு மாற்றம் தொடர்பான எங்களுடைய முன்னெச்சரிக்கை அணுகுமுறை தொடரும். பிரிட்டன் அரசாங்கத்தைப் போல அல்லாமல், மரபணு திருத்தத்தையும் மரபணு மாற்றமாகவே நாங்கள் தொடர்ந்து அணுகுவோம். ஐரோப்பிய நீதிமன்றம் 2018ல் வகுத்த நெறிமுறை இது," என்றார்.

https://www.bbc.com/tamil/science-58780519

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை சுத்தி இங்கை சுத்தி கடசியிலை சாப்பாட்டில் கை  வைத்து விட்டார்கள் இந்த gmo  மூலம் ஏட்படவுள்ள அழிவு  ஏராளம் என்று சொல்லியும் மக்களின் உணவு தேவைக்கு என்று சட்டங்கள் மீறப்படுது .

Non gmo தயாரிப்பை பார்த்து வாங்கவேணும் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஆனால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு வைக்கப்பட்டுள்ள அதே அளவு கட்டுப்பாடுகளை, விதிகளை மரபணு திருத்தப்பட்ட பயிர்களுக்கும் வைத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

இப்போ யூகே Genetically modified பயிர்களுக்கு அனுமதி அளிக்காவிடினும் Gene editing செய்ய்யப்பட்ட பயிர்களுக்கு வழங்கப்படும் அனுமதியானது காலக்கிரமத்தில் GM உணவையும் உள்வாங்கும் என ஒரு சாரார் அஞ்சுகிறார்கள்.

எஸ் என் பி+ கிரீன் கூட்டு ஆட்சியில் இருக்கும் வரை ஸ்கொட்லாந்தில் இது நடைமுறைக்கு வராது என நினைக்கிறேன், வேல்ஸ்சும் சந்தேகமே.

இதன் சாதக பாதங்களை கடந்த வெள்ளி கிழமை Radio 4 Today நிகழ்சியில் அலசினார்கள். ஆர்வம் உள்ளவர்கள் catchup இல் கேட்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

பிரிக்ஸிட் வெண்ட உடனையே சொன்னவஙகள் அமெரிக்க மரபணுமாற்றப்பட்ட குப்பை சதையை இறைச்சி எண்டு தலையில கட்டப்போறாங்கள் எண்டு… இப்ப மரக்கறியிலும் கைவச்சுட்டாங்க… ஜரோப்பிய ஒன்றியத்தில இருக்கும் வரைக்கும் இந்த கட்டுப்பாடு இருந்ததால் ஆரோக்கியமான உணவு சந்தைக்கு வந்தது.. இனி கான்சர் கொஸ்பிட்டல்ல ஒரு துண்டு போட்டு வைக்கவேணும்போல 

2 hours ago, ஏராளன் said:

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு வைக்கப்பட்டுள்ள அதே அளவு கட்டுப்பாடுகளை, விதிகளை மரபணு திருத்தப்பட்ட பயிர்களுக்கும் வைத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

இந்த விதிகளின்படி மரபணு திருத்தப்பட்ட பயிர்களை பல ஆண்டுகளுக்கு களப்பரிசோதனைக்கும், உணவுப் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கும் உட்படுத்த வேண்டும்.
அதன் பிறகு புதிய வகைகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு உறுப்பு நாடுகள் வாக்களிக்கவேண்டும் என்பது அதைவிட பெரிய தடை.
இந்த அணுகுமுறை, பெரிய சிக்கல்களையும், முயற்சிகளையும் உடையது மட்டுமல்ல, நிறைய செலவு பிடிப்பதும்கூட என்று உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் நினைக்கின்றன. இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் மரபணு மாற்றப்பட்ட, திருத்தப்பட்ட எந்த ஒரு பயிரும் உருவாக்கப்பட்டதில்லை.
மரபணு மாற்றப்பட்ட, மரபணு திருத்தப்பட்ட பயிர்கள் தொடர்பாக தனித்தனி சட்டங்களை உருவாக்குவதில் இருந்து இந்த மாற்றத்தைத் தொடங்குகிறது வெஸ்ட்மின்ஸ்டர் அரசங்கம்.
முதல் படியாக, மரபான கலப்பின முறையில் உருவாக்க முடிகிற மாற்றங்களை மரபின திருத்தம் மூலம் செய்த பயிர்களை வயல்களில் பரிசோதனை செய்ய விஞ்ஞானிகள் உரிமம் பெறவேண்டும் என்ற விதி இந்த ஆண்டு ரத்து செய்யப்படும்.
அதைவிட ஒரு முக்கியமான மாற்றம் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படும். இதன் மூலம் வழக்கமாக புதிய ரகத்தை உருவாக்குவதற்கு உள்ள வழிமுறை என்னவோ, அதே வழிமுறையைப் பின்பற்றியே எளிமையான மரபணு திருத்தங்களை மேற்கொள்ள வழி செய்யும் சட்டம் கொண்டுவரப்படும்.
எல்லாவகை உயிரினங்களுக்கும் மரபணு மாற்றுவதற்கான கட்டுப்பாடுகள் தொடர்பான அணுகுமுறையை நீண்ட கால நோக்கில் அமைச்சர்கள் மறுபரிசீலனை செய்வார்கள். மரபணு திருத்தப்பட்ட, மாற்றப்பட்ட விலங்களுகளை உருவாக்கி, வணிக ரீதியாக உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை அனுமதிப்பது போன்றவை இந்த கட்டத்தில் இடம் பெறக்கூடும். இதனால் விலங்குகளின் உற்பத்தித் திறன், சில நோய்களை, வெப்பமான தட்பவெட்ப நிலையை தாங்கும் திறன் மரபணு திருத்தத்தின் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த கன்று அதிக வெப்பத்தை தாங்கக்கூடியது, அதிகம் பால் தரும் பசுவாக ஆகக்கூடியது.
இது தொடர்பாகப் பேசிய வேல்ஸ் அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர், "மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் தொடர்பாக தற்போது வேல்சில் உள்ள விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யும் திட்டம் ஏதும் எங்களுக்கு இல்லை. மரபணு மாற்றம் தொடர்பான எங்களுடைய முன்னெச்சரிக்கை அணுகுமுறை தொடரும். பிரிட்டன் அரசாங்கத்தைப் போல அல்லாமல், மரபணு திருத்தத்தையும் மரபணு மாற்றமாகவே நாங்கள் தொடர்ந்து அணுகுவோம். ஐரோப்பிய நீதிமன்றம் 2018ல் வகுத்த நெறிமுறை இது," என்றார்.

https://www.bbc.com/tamil/science-58780519

https://www.bbc.com/tamil/science-58780519

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பிரிக்ஸிட் வெண்ட உடனையே சொன்னவஙகள் அமெரிக்க மரபணுமாற்றப்பட்ட குப்பை சதையை இறைச்சி எண்டு தலையில கட்டப்போறாங்கள் எண்டு… இப்ப மரக்கறியிலும் கைவச்சுட்டாங்க… ஜரோப்பிய ஒன்றியத்தில இருக்கும் வரைக்கும் இந்த கட்டுப்பாடு இருந்ததால் ஆரோக்கியமான உணவு சந்தைக்கு வந்தது.. இனி கான்சர் கொஸ்பிட்டல்ல ஒரு துண்டு போட்டு வைக்கவேணும்போல 

ஐரோப்பிய யூனியனில் பல மின்சார விளக்குகளை கூட தடை செய்து விட்டார்கள். ஏனெனில் பின் விளைவுகள் அதிகமாம்.
 
வருங்கால பிரிட்டிஷ் சந்ததியினருக்கு வாழ்த்துக்கள்.😁

childhood-obesity.png?height=259&width=400

  • கருத்துக்கள உறவுகள்

இனி மரக்கறியும் சாப்பிடேலாது ….பார்க்க வடிவாய் இருந்தால் வேண்ட கூடாது 

  • கருத்துக்கள உறவுகள்

மரபணு மாற்றப் பட்ட உணவுகளால் சில பாதிப்புகள் உண்டு (ஒவ்வாமை, சில மருந்துகள் வேலை செய்யாமல் விடுதல் போன்றன). ஆனால், ஒட்டு மொத்தத்தமாக நன்மைகளே அதிகம்: போசணை அதிகம், செயற்கை உரங்கள் அதிகம் பாவிக்கப் படுவதில்ல, விலை மலிவு. 

விஞ்ஞான அடிப்படையில்லாத ஊடகங்களில் மரபணு மாற்றப் பட்ட உணவுகள் பற்றி வரும் அனேக தகவல்கள் அடிப்படையற்றவை - மக்களைப் பயப்படுத்தும் செய்திகள்.

மனித வரலாற்றில் பல்லாயிரம் ஆண்டுகளாக தாவரங்களிலும், விலங்குகளிலும் மரபணுக்கள் மனிதனால் மாற்றப் பட்டே வந்திருக்கின்றன. காட்டுத் தாவரங்கள், விலங்குகளிலிருந்து தேர்ந்தெடுத்தல் (selective breeding) மூலம்  வந்தவை தான் தற்போதைய உணவுப் பயிர்களும், கால்நடைகளும்! 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

ஓகானிக் / மரபணு மாற்றம் இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றா?

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Justin said:

மரபணு மாற்றப் பட்ட உணவுகளால் சில பாதிப்புகள் உண்டு (ஒவ்வாமை, சில மருந்துகள் வேலை செய்யாமல் விடுதல் போன்றன). ஆனால், ஒட்டு மொத்தத்தமாக நன்மைகளே அதிகம்: போசணை அதிகம், செயற்கை உரங்கள் அதிகம் பாவிக்கப் படுவதில்ல, விலை மலிவு. 

என்ன அந்த நன்மைகள் என்று சொன்னால் நல்லது 

(வழக்கமான கொள்ளுபாடு அல்ல தெரிந்து கொள்ள கேட்கிறேன் )

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரதி said:

ஓகானிக் / மரபணு மாற்றம் இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றா?

இரண்டும் வெவ்வேறு ரதி. இனோகானிக் உரங்கள் பாவிக்காமல், வேறு இரசாயனங்களும்  பாவிக்காமல் வளர்ப்பவை தான் ஓகானிக். சாதாரண மரக்கறி/ கால்நடைகளை இப்படி வளர்க்கலாம் - ஆனால் சந்தையில் விலை அதிகம்.

மரபணு மாற்றப் பட்ட (GMO) என்பது சில ஜீன்கள் மாற்றி அவற்றை வளர்ப்பது. இதை பற்றி அதிகம் பயமூட்டும் கதைகள் இயற்கை விவசாய முறைகளை முன்னிறுத்துவோரால் பரப்பப் படுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

என்ன அந்த நன்மைகள் என்று சொன்னால் நல்லது 

(வழக்கமான கொள்ளுபாடு அல்ல தெரிந்து கொள்ள கேட்கிறேன் )

ஓம். மேலே சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்: ஆனால் விரிவாக:

1. பிரதான நன்மை: அதிக செயற்கை உரம் தேவையில்லை. ஏனெனில் மரபணு மாற்றம் சாதாரண நிலைகளிலேயே வளர்ச்சியைக் கூட்டும். இதனால், இலங்கையில் செயற்கை உரத்தால் உருவாவதாகக் கருதப் படும் CKD போன்ற பாதிப்புகள் குறையும்.

2. பூச்சித் தாக்கங்கள் சில ஜி.எம்.தாவரங்களில் இருக்காது - இதனால் இழப்பு இல்லை, எனவே விளைச்சல் அதிகம், விலை அதற்கேற்ப குறைவு.

3. கடைசியாக, சில ஜி.எம்.ஓ தாவரங்களில் போசணை அதிகரிக்கப் பட்டிருக்கிறது - Golden rice  என்ற நெல் வகையில் சில போசணைச் சத்துக்களை அதிகரித்திருக்கிறார்கள். ஆபிரிக்கா போன்ற போசணைக் குறைபாடுகள் உள்ள நாடுகளில் இந்த அரிசிக்கு நல்ல பயன்பாடு உண்டு! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Justin said:

2. பூச்சித் தாக்கங்கள் சில ஜி.எம்.தாவரங்களில் இருக்காது - இதனால் இழப்பு இல்லை, எனவே விளைச்சல் அதிகம், விலை அதற்கேற்ப குறைவு.

பூச்சி  புளுக்கள் தாக்காத காய்கனிகளினாலேயே தானே இப்ப உள்ள பிரச்சனையள்.
எல்லாம் பாக்க வடிவாய் இருக்கும். சாப்பிட வயிறும் நிறையும். ஆனால் உடம்புக்கு தேவையான விட்டமின்கள் தேவையெண்டால் சொல்லுங்கோ அதுக்கு குளிசையள் விக்கிறம்.:cool:
அய்யே....ஐயோ...😜

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

பூச்சி  புளுக்கள் தாக்காத காய்கனிகளினாலேயே தானே இப்ப உள்ள பிரச்சனையள்.
எல்லாம் பாக்க வடிவாய் இருக்கும். சாப்பிட வயிறும் நிறையும். ஆனால் உடம்புக்கு தேவையான விட்டமின்கள் தேவையெண்டால் சொல்லுங்கோ அதுக்கு குளிசையள் விக்கிறம்.:cool:
அய்யே....ஐயோ...😜

பூச்சி புழுக்கள் விற்றமின்களை அதிகரிக்குமா தெரியவில்லை. ஆனால் பூச்சி புழுக்களால் பயிர்களுக்கு வரும் அழிவினால் வரும் நட்டத்தை நுகர்வோரின் தலையில் கட்டி விடுவர். பூச்சி புழுக்களுக்கு எதிராக சக்தி வாய்ந்த மருந்தடிக்க இயலாத ஓர்கானிக் மரக்கறிகளின் விலை கூட இதுவும் ஒரு காரணம். 

இதனால் தான் ஜி.எம்.ஓ உணவுகள் சில விலை குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்

Gene editing மற்றும் Gene modification இதில் பரமணு திருத்தம் பற்றி தலைப்பு.. மரபணு மாற்று பற்றி கருத்துப்பரிமாறல்... எது...சரி..??!

Gene editing is different from genetic modification (GM), as it does not result in the introduction of DNA from other species.

(https://www.reuters.com/world/uk/regulations-gene-edited-crops-be-eased-england-2021-09-28/)

Genetically modified vs. gene editing - Wells Fargo

இயற்கை முறையில் மரபணுக் கலப்பு.. செயற்கை முறை மரபணு மாற்றம்.. செயற்கை முறை மரபணுத் திருத்தம்.. இதில் இயற்கை முறை மரபணுக் கலப்பு.. இயற்கைச் சூழலுக்கும்.. மக்களுக்கும் அதிக பாதிப்பில்லாமல்.. இருக்கும் என்பதை நம்பலாம். மற்றைய இரு செயற்கை முறைகளிலும் நன்மை தீமை இரண்டும் கிட்டத்தட்ட சம அளவில் உண்டு. 

Information on technological differences. Information provision by... |  Download Scientific Diagram

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.