Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமானுக்கு வேல்முருகன் அட்வைஸ்: ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு உபத்திரம் செய்யாதீங்க!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு வேல்முருகன் அட்வைஸ்: ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு உபத்திரம் செய்யாதீங்க!

 

Published: October 12 2021, 9:50 [IST]

நீட் தேர்வுக்கு எதிரான மசோதா

வனப்பாதுக்காப்பு சட்டம் என்கிற பெயரில் வனங்களையும் அதே போல கடல் வளங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது அதை செய்யக் கூடாது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் எதிர்ப்பு மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது ஏற்புடையதல்ல. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலைக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். ஏழு பேர்களில் ஒருவரான ரவிச்சந்திரனின் தாயார் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் ரவிச்சந்திரனுக்கு பரோலை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். திருச்சி சிறப்பு முகாமில் இருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

வேளாண் கல்லூரியில் மாணவர்கள் 

வேளாண் கல்லூரியில் சேரும் ஆர்வம் மாணவர்களுக்கு தற்போது அதிகரித்து வருகிறது. எனவே விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இடம் கிடைக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் வேளாண் கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் நன்கொடை அதிகம் வசூலிப்பதாக தகவல் வந்துள்ளது. அது போன்று புகார் வந்தால் அந்த கல்லூரிகளின் உரிமத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். கோவை வேளாண் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக இருக்கும் என்னிடமும் மாணவர்கள் புகார் தெரிவித்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும். உயிரை பணயம் வைத்து கொரோனா காலத்தில் தற்காலிக பணியில் செவிலியர்கள் பணியாற்றினர். அவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு சிறு குற்றங்கள் செய்து விடுதலை செய்யப்பட்டவர்கள் பலர் காவலர் பணியிடங்களுக்கு தேர்வாகி உள்ளனர். ஆனால் சிறு சிறு வழக்குகளை காரணம் காட்டி அவர்கள் பணியமர்த்த காவல் துறை உயர் அதிகாரிகள் மறுக்கின்றனர். தற்போது 700பேர் அது போன்று காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.அரசு சிறப்பு ஆணையம் அமைத்து அவர்களை பணியமர்த்த வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement

 

சீமானுக்கு அறிவுரை 

ஏழு தமிழர் விடுதலைக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஏழு தமிழர் விடுதலைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் நாம் தமிழர் உட்பட யாரும் பேச வேண்டாம். வீரம் பேசி என்னுடைய பிள்ளையின் விடுதலையை தடுக்க வேண்டாம். உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்தரம் செய்யாமல் இருங்கள் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருக்கிறார். அதே கோரிக்கையை நானும் வைக்கிறேன்.

 

அண்ணாமலைக்கு சவால் 

வேளாண் சட்டங்கள் குறித்து புரியாமல் பலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். நான் முந்திரி, வாழை உள்ளிட்டவற்றை விவசாயம் செய்யும் விவசாயி. நான் அந்த சட்டங்களை வரிக்கு வரி படித்துள்ளேன். அந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எப்படி எதிரானது என்பது தெரியும். வேளாண் சட்டங்கள் குறித்து அண்ணாமலையுடன் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.

 

அரியலூரில் நிலக்கரி எடுக்கும் திட்டம் 

நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நிலக்கரி எடுக்க பல ஆண்டுகளுக்கு முன்னால் என்.எல்.சி நிர்வாகம் முடிவெடுத்தது. ஆனால் அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அங்கு நிலக்கரி எடுக்க நிலங்களை தர மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க என்.எல்.சி நிர்வாகம் தயாராக இல்லை. ஏக்கருக்கு 1 கோடி ரூபாயும் வீட்டில் ஒருவருக்கு வேலையும் வழங்கினால் மக்கள் நிலங்களை நிச்சயம் தருவார்கள். இவ்வாறு பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

https://tamil.oneindia.com/amphtml/news/chennai/tvk-chief-velmurugan-advises-to-seeman-on-seven-tamil-release-row-435542.html

வேல்முருகன் பேசிய வீடியோ👇

https://tamil.oneindia.com/videos/do-not-interrupt-the-release-of-rajiv-case-issue-says-velmurugan-1865668.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலே வேல்முருகன் சொல்வதை விளங்கி கொள்ள இந்த காணொளியை 5:40 இல் இருந்து பார்க்கவும்.

எழுவர் விடுதலையை விரும்பும் எவரும் இப்படி பேசமாட்டார்கள், பேசுவதை அருகில் இருந்து இரசிக்க மாட்டார்கள்.

 

Edited by goshan_che

34 minutes ago, goshan_che said:

மேலே வேல்முருகன் சொல்வதை விளங்கி கொள்ள இந்த காணொளியை 5:40 இல் இருந்து பார்க்கவும்.

எழுவர் விடுதலையை விரும்பும் எவரும் இப்படி பேசமாட்டார்கள், பேசுவதை அருகில் இருந்து இரசிக்க மாட்டார்கள்.

 

இந்த பேச்சை கேட்டு கோட்டபாயவும் மகிந்தவும் கிலி பிடிச்சு போய் உள்ளார்களாம் தெரியுமா? இந்த  பேச்சோட தமிழருக்கு விடிவுதான் இனி. 😂

  • கருத்துக்கள உறவுகள்

பேசாட்டில் ஏழுபேரையும் விட்டுடுவினமாம். சிரிப்பாய்க்கிடக்குது. அதை யாழிலும் ஒருசிலர் ஆமோதிக்கினம்

பேசாமல் அந்த ஏழுபேருக்கும் விசம் வைச்சுக் கொல்லச்சொல்லுங்கோ. தூக்குத் தண்டனை கிடைத்ததுமே அவர்களைத் தூக்கில போட்டிருந்தால் ஒரே ஒரு தண்டனையுடன் விசயம் முடிஞ்சிருக்கும் ஆனால் அவர்களை இதுவரைக்கும் ஆயிரம் தடவைக்குமேல் கசாகடிச்சி**** *****

Edited by நிழலி
அநாகரீக சொற்கள், ஒருமையில் எழுதிய சொற்கள் ஆகியன நீக்கப்பட்டன

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

பேசாட்டில் ஏழுபேரையும் விட்டுடுவினமாம். சிரிப்பாய்க்கிடக்குது. அதை யாழிலும் ஒருசிலர் ஆமோதிக்கினம்

பேசாமல் அந்த ஏழுபேருக்கும் விசம் வைச்சுக் கொல்லச்சொல்லுங்கோ. தூக்குத் தண்டனை கிடைத்ததுமே அவர்களைத் தூக்கில போட்டிருந்தால் ஒரே ஒரு தண்டனையுடன் விசயம் முடிஞ்சிருக்கும் ஆனால் அவர்களை இதுவரைக்கும் ஆயிரம் தடவைக்குமேல் கசாகடிச்சி**** *****

விடுகிறார்களோ இல்லையோ, விடுவதை இயலுமானவரை இல்லாதொழிக்கும் இந்த வேலை தேவைதானா?

அறிவை நீண்ட நாள் பரோலில் விட்டுள்ளார்கள் அல்லவா?

இதுவரை நடக்காத விசயம்தானே இது?

இது அதுக்கும் சேர்த்து ஆப்படிக்காதா?

இந்த கருத்தை அற்புதம்மாள் நிலையில் இருந்து பாருங்கள்.

ரஜீவ் கொலை என்பது முழு இந்தியாவையும் கொதி நிலைக்கு கொண்டு போன விடயம்.

அதன் பலாபனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம்.

ஆகவே இதை இந்தியர்கள் மறப்பது எமக்கு இப்போ இருப்பதை விட ஒரு படி மேலே உள்ள நிலைதான்.

ஆனால் அதை மறக்கவிடாமல், ராகுலுக்கு தெரியும், சோனியாவுக்கு தெரியும் என பேசுபவர்.

நிச்சயம் ஈழத்தமிழர், எழுவர் நல்லா இருக்கவேணும் எனச் சிந்திப்பவராக இருக்க முடியாது.

தலைவரே அதை துன்பியல் நிகழ்வு என்றுதான் கூறினார். இப்படி எக்காளமிடவில்லை.

நேற்று துரை முருகன் இப்படி பேசுகிறார். நாளைக்கு சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என அண்ணாமலை ஆளுநரை சந்திக்கிறார். இருவரும் ஒரே திட்டத்தின் இரு அங்கங்கள் என்பது வெள்ளிடமலை.

 

  • கருத்துக்கள உறவுகள்

"..இந்த நிலையில் ஏழு தமிழர் விடுதலைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் நாம் தமிழர் உட்பட யாரும் பேச வேண்டாம். வீரம் பேசி என்னுடைய பிள்ளையின் விடுதலையை தடுக்க வேண்டாம். உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்தரம் செய்யாமல் இருங்கள் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருக்கிறார்"

இது மிகவும் நியாயமான கோரிக்கை தானே?

இந்த ஏழு ஜீவன்களை மட்டுமல்ல, இலங்கையில் அரசியல் கைதிகளாக இருக்கும் தமிழர்களுக்கும் கூட தமிழ் அரசியல் தரப்பிலிருக்கும் உசார் மடையர்களால் தான் அதிக ஆபத்து!

அண்மையில் "அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யலாம்!" என்று ஒரு பேச்சுக்கேனும் அரச தரப்பில் சொல்லப்பட்ட போது, உருத்திரகுமாரன் அறிக்கையில் சொன்னது இது: "மன்னிப்பைக் குப்பையில் போடுங்கள், யாரை யார் மன்னிப்பது?" 

இப்படிப் பட்ட உசார் மடையர்களை என்ன தான் செய்வது? 😎

  • கருத்துக்கள உறவுகள்

எழுவர் விடுதலையென்பது இந்திய ஜனாதிபதியின் கையில் மட்டுமே தங்கியுள்ளது.

அரசியல்கட்சிகளின் மேடை பேச்சுக்கள் ஆவேச முழக்கங்கள் முடிவில் அவர்கள் சோடா குடிக்க உதவுமேயன்றி அவர்களின் விடுதலைக்கு சாதகமாகவும் அமையாது பாதகமாகவும் அமையாது.

ஏனெனில் ஜனாதிபதியோ ஆளுனரோ எழுவர் விடுதலை விஷயத்தில்  அரசியல்கட்சிகள் பொதுமக்கள் கருத்தை கணக்கில்கூட எடுப்பதில்லை, அப்படி எடுத்திருந்தால் என்றோ அவர்கள் விடுதலை சாத்தியமாகியிருக்கும்.

தேர்தல்கள் நெருங்கும்போது மட்டும் மாநில அரசு முடிவெடுக்கலாம்  ஆளுனர் ஜனாதிபதி முடிவெடுக்கலாம் மத்திய அரசு  முடிவெடுக்கலாம் என்று ஆளுக்காள் அடுத்தவர் பக்கம் பந்தை திருப்பிவிட்டு அரசியல் விளையாட்டு காண்பிப்பார்கள்.

என்றைக்கு அவர்கள் விடுதலைபற்றி பேசபடுகிறதோ உடனே தமிழக காங்கிரசை சேர்ந்தவர்களே ராஜீவ் காந்தியின் தியாகம், அவர்கூட இறந்த மக்கள் மீதான திடீர் பாசம் என்று குறுக்கே வந்து நின்று தடைபோடுகிறார்கள்.

இவர்களை விடுதலை செய்தால் காங்கிரஸ் தேசிய அளவில் பாஜக தேச துரோகமிழைத்துவிட்டது என்று பிரச்சாரம் பண்ணி   ஆட்சியை கைபற்றிவிடுமோ என்று பாஜக பயந்து நிற்கிறது.

தமிழக உணர்வுகளை தேசிய கட்சிகள் கணக்கில் எடுப்பதில்லை ஏனென்றால் அண்ணா காலத்திலிருந்து காலம் காலமாக திராவிட கட்சிகளே தமிழகத்தை ஆள்கின்றன. காங்கிரசோ பாஜகவோ தமிழகத்தின் ஆளும் கட்சியாக வர ஒருபோதும் வாய்ப்பில்லை.

போதாக்குறைக்கு இந்தி எதிர்ப்பு, இந்தி தெரியாது போடா போன்ற முழக்கங்கள், வடமாநில பான்பராக் பாக்கு வாயர்களுக்கு தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதையே ஏற்க மறுக்கும் மனநிலையில் உள்ளவர்களாகவே வைத்திருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த எழுவர் விடுதலைக்காக அன்று தொடக்கம் அதிகமாக போராடுவது நாம் தமிழர்கட்சியினர் மட்டுமே.

இந்திய அரசியல் மேடைகளில் வன்முறை/கடும் சொல் பேச்சுக்கள் எல்லாம் சர்வ சாதாரணம்.

இங்கே இரண்டொருவர்களுக்கு வேண்டா பொண்டாட்டி தொட்டால் குற்றம் பட்டால் குற்ற மனப்பான்மை.🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

மேலே வேல்முருகன் சொல்வதை விளங்கி கொள்ள இந்த காணொளியை 5:40 இல் இருந்து பார்க்கவும்.

எழுவர் விடுதலையை விரும்பும் எவரும் இப்படி பேசமாட்டார்கள், பேசுவதை அருகில் இருந்து இரசிக்க மாட்டார்கள்.

 

மொத்தமாக 523 செக்கன் உரை.. அதில் 12 செக்கன் ராஜீவ் கொலை குறித்த ஆவேசம். 

  • கருத்துக்கள உறவுகள்

அவுக இலங்கைத் தமிழரை முழங்காலிலில முட்டி போட வெச்சாங்க..
 இவுக மொத்த ஆளுங்களுக்கும் சாயா குடுத்தாங்க...
 கேம் இன்னும் நடந்துக்கினு தான் இருக்கு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.