Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”யுத்தத்தை வென்றேன்- அவ்வாறே அனைத்தையும் வெல்வேன் – அஞ்ச மாட்டேன்” - கோட்டாபய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

”யுத்தத்தை வென்றேன்- அவ்வாறே அனைத்தையும் வெல்வேன் – அஞ்ச மாட்டேன்”

October 24, 2021

spacer.png

உலகின் இரசாயன உர உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு வகையில் தூண்டுதல்களை மேற்கொள்வதன் மூலம் தடைகளை மேற்கொண்டாலும், அவை எவற்றுக்கும் தாம் அஞ்சப் போவதில்லை என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

உடுபந்தாவ – புன்னெஹெபொல சேதனப் பசளை தயாரிக்கும் மத்திய நிலையம் மற்றும் சேதனப் பசளை பயிர்ச்செய்கை இடங்களைப் பார்வையிடுவதற்கு ஜனாதிபதி, இன்று (23.10.21) முற்பகல் சென்றிருந்த போதே, இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

பசளை தயாரிக்கும் மத்திய நிலையத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி, சேதனப் பசளை உற்பத்தி செய்யப்படும் விதத்தைப் பார்வையிட்டதோடு, உற்பத்திகளின் தரத்தைப் பேணுவதற்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைமைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

பின்னர் பயிர்ச்செய்கை நிலத்துக்கு சென்ற ஜனாதிபதி , அங்கு பயிரிடப்பட்டிருந்த மரக்கறிகள் மற்றும் ஏனைய பயிர்கள் தொடர்பாக தனது அவதானத்தைச் செலுத்தினார். உரத்தைப் பயன்படுத்தி மண்ணை வளப்படுத்தும் முறையையும் பார்வையிட்டார்.

மண் புழுக்களைப் பயன்படுத்தி கொம்போஸ்ட் உரம் தயாரிக்கப்படும் இந்த மத்திய நிலையத்தின் மூலம், மாதாந்தம் 12 தொன் உரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

13 ஏக்கர் கொண்ட தென்னை பயிரிடப்பட்டுள்ள நிலப்பரப்பில், பப்பாளி, வாழை, கொடித்தோடை போன்ற பழங்களும் கோவா, பீட்ரூட், பட்டாணி போன்ற மரக்கறிகளுடன் மஞ்சள் மற்றும் முன்மாதிரி நெல் பயிர்ச்செய்கையும் சேதனப் பசளையைப் பயன்படுத்திப் பயிரிடப்பட்டுள்ளன.

”விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்காக, அரசியல் தலைவர்கள் எடுக்காத கடினமான தீர்மானங்களை எடுப்பதற்கு நான் தயார். அன்று யுத்தத்தை முன்னெடுக்க வேண்டாம் என்று பலர் கேட்டுக்கொண்டனர். ஆனாலும், 30 வருட யுத்தத்தை நிறைவு செய்தது போல் எந்தவிதத் தடைகள் ஏற்பட்டாலும், பசுமை விவசாயத்தை வெற்றிகொள்வேன்.” என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தமக்குத் தேவை வாக்குகள் அல்ல, பொதுமக்களுக்கு சரியானதைச் செய்வதாகும் என்றும் சரியானதைச் செய்வதற்காகப் பயப்படாது தீர்மானங்களை மேற்கொண்டு, மக்களின் தேவைகளை மாத்திரம் கண்டறிவதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உலகின் இரசாயன உர உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு வகையில் தூண்டுதல்களை மேற்கொள்வதன் மூலம் தடைகளை மேற்கொண்டாலும், அவை எவற்றுக்கும் தாம் அஞ்சப் போவதில்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்கள் தம்மைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கே ஆகும் என்றும் குறிப்பிட்டார்.

சேதன உரத்தைப் பயன்படுத்திப் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக ஜனாதிபதி இவ்விஜயத்தை மேற்கொண்டார்.

அதன் பின்னர், உடுபந்தாவ பிரதேச சபை வளாகத்தில் உள்ள கழிவு மீள்சுழற்சி மத்திய நிலத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

 

https://globaltamilnews.net/2021/167627

 

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கு எதை உதாரணமாக காட்டுவது என்டு விவஸ்தை இல்லாமல் கிடக்கு.

Screenshot-2021-10-24-21-45-06-445-org-m

  • கருத்துக்கள உறவுகள்

கொத்தாவின் இந்த முயற்சி வெற்றியடைய நான் வாழ்த்துகிறேன் காரணம் இராசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகளது ஆதிக்கம் இலங்கைத்தீவில் வாழும் அனைத்துமக்களையும் நோயாளிகளாக்கிவிட்டது.

ஆனால் விவசாயத்தில் ஈடுபடுவோர் இது தெரியாமல் குய்யோ முறையோ எனக்கூக்குரலிடுகினம் இதில் சாணாக்கியனும் உள்ளடக்கம்.

இதில் விவசாயிகளது தப்பு எதுவுமில்லை இந்தியாவில் சுவாமிநாதனின் பச்சைப்புரட்சி கொண்டுவந்ததால் பஞ்சாப்பிலிருந்து இப்போ புற்றுநோய் இரயில் வாரம் ஒரு முறை போவதுபோல். மருந்துகளையும் உரங்களையும் அறிமுகப்படுத்தியது அரசே அதை ஒழுங்குபடுத்தாது விட்டதும் அரசே. 

இயற்கைசார் விவசாயம் செய்து அங்ககச்சான்றிதழ் பெற்றால் வெளிநாடுகளில் அதன் மவுசு சொல்லிமாளாது.

வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தை வென்ற எமக்கு கொரோனாவை துடைத்தழிப்பது மிகச் சுலபம் என்று அலை 1 இன் போது அளந்த கதை தெரிந்ததே.

யுத்தம் கோத்தாவால் வெல்லப்பட்டது என்பது மாயை. 25 நாடுகள் உலக வல்லரசுகள் உட்பட இணைந்து செய்த யுத்தத்தை அவர்கள் தான் முடித்து வைத்தார்கள். ஆனால் வெற்றியில் குளிர்காய்வது என்னவோ மகிந்த கோத்தா கும்பல்.. குடும்பம் தான் அதிகம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆ சாமி அவர்களே,

இதில் என்ன வேடிக்கை என்றால்  1994 காலத்தில் உங்களது இரண்டாவது படம் தமிழர்களது பணத்தைத் தென்னிலங்கைக்குக் கொண்டுபோகாது உள்ளூரிலேயே அப்பணம் மக்கள் மத்தியில் சுழற்சியில் ஈடுபட உதவியதை நினைவுபடுத்துகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Elugnajiru said:

கொத்தாவின் இந்த முயற்சி வெற்றியடைய நான் வாழ்த்துகிறேன் காரணம் இராசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகளது ஆதிக்கம் இலங்கைத்தீவில் வாழும் அனைத்துமக்களையும் நோயாளிகளாக்கிவிட்டது.

ஆனால் விவசாயத்தில் ஈடுபடுவோர் இது தெரியாமல் குய்யோ முறையோ எனக்கூக்குரலிடுகினம் இதில் சாணாக்கியனும் உள்ளடக்கம்.

இதில் விவசாயிகளது தப்பு எதுவுமில்லை இந்தியாவில் சுவாமிநாதனின் பச்சைப்புரட்சி கொண்டுவந்ததால் பஞ்சாப்பிலிருந்து இப்போ புற்றுநோய் இரயில் வாரம் ஒரு முறை போவதுபோல். மருந்துகளையும் உரங்களையும் அறிமுகப்படுத்தியது அரசே அதை ஒழுங்குபடுத்தாது விட்டதும் அரசே. 

இயற்கைசார் விவசாயம் செய்து அங்ககச்சான்றிதழ் பெற்றால் வெளிநாடுகளில் அதன் மவுசு சொல்லிமாளாது.

வெற்றியடைய வாழ்த்துக்கள்.

இது ஒரு நல்ல முயற்சிதான் ஆனால் தேர்ந்தெடுத்த காலம் தவறானதால் கண்டனத்திற்குள்ளாகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, கிருபன் said:

”யுத்தத்தை வென்றேன்- அவ்வாறே அனைத்தையும் வெல்வேன் – அஞ்ச மாட்டேன்”

கிந்திய உதவியுடன் யுத்தத்தை மட்டும் வென்றீர்கள். உண்மைதான் ஆனால் இதை இன்னும் எத்தனை காலத்திற்கு சொல்லிக்கொண்டு திரிவீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

அன்று யுத்தத்தை முன்னெடுக்க வேண்டாம் என்று பலர் கேட்டுக்கொண்டனர். ஆனாலும், 30 வருட யுத்தத்தை நிறைவு செய்தது போல் எந்தவிதத் தடைகள் ஏற்பட்டாலும், பசுமை விவசாயத்தை வெற்றிகொள்வேன்.” என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சர்வதேசநாடுகள் இலங்கையில் இஷ்டம்போல் கோல் போட தடையாயிருந்த புலிகளை அழிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது, அழித்தார்கள். இவர் அதில் பெருமை பேசி அரச கட்டில் ஏறினார். கொஞ்ச காலம் போக இவரே உண்மையை ஒப்புக்கொள்வார். இவர் ஒன்றும் இயற்கை பசளையை ஊக்குவிக்க இந்த ஏற்பாடு செய்யவில்லை, இறக்குமதிக்கு பணமில்லை, ஒப்புக்கொள்ள மனமில்லை, மாற்றியடிக்கிறார். அவர் அப்படிச் செய்வதென்றால் அரசகட்டில் ஏறியவுடன் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். தேவை வந்தபின் அறிமுகப்படுத்துவாராம், அதுதான் அவரின் வழி தனிவழிப்பறி. வேறு வழியில்லாமல் விவசாயிகள் எடுக்கும் முயற்சியை தனதாக்க ஓடிப்போய் பார்வையிடுகிறார், மட்டுமல்லாமல் சொந்தம் வேறு கொண்டாடுகிறார்.  எப்பவும் எதிலும் அடுத்தவன் பணம், புகழை, உழைப்பு  தனது  என பிடுங்கி பழகிப்போச்சு. தொட்டிலிற் பழக்கம் சுடுகாடு வரைக்கும் தொடரும் இவரோடு.

  • கருத்துக்கள உறவுகள்

சேதன பசளை என்பது கண்டிப்பாக ஆரோக்கியமானதுதான், ஆனால் அந்த பசளை முறையை படிப்படியாகவே ஒரு நாடு முழுவதும் அறிமுகபடுத்த வேண்டும், ஒரே காலபகுதியில் சடுதியாக அறிமுகபடுத்தினால் உணவு பற்றாகுறை வேலை வாய்ப்பின்மை விலைவாசி உயர்வு எல்லாமே வேகமாக தலைவிரித்தாடும்.

உள்ளூர் உற்பத்திகளை கொண்டு நாட்டை வளபடுத்துதல் நல்ல விஷயம்தான் ஆனால் ஒரே பொழுதில் அதை அமுலாக்க நினைத்தால் மக்களின் வெறுப்பை சம்பாதித்து ஆட்சியே கவிழும் அபாயம் உண்டு, அந்நாட்களில் ஸ்ரீமாவோ ஆட்சியிலும் உள் நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கபோனதால்தான் மக்கள் கோபத்தினால் ஜே ஆரிடம் ஆட்சியை இழந்தார் என்று சொல்வார்கள்.

எதுக்கெடுத்தாலும் யுத்தத்தை தொடாதீர்கள் கோத்தபாய, அதுவும் இதுவும் ஒன்றல்ல. வெளிநாட்டு ரசாயன பசளைகள் இன்றி விவசாயத்தை வென்றெடுக்க முனைகிறீர்கள், அதே வெளிநாட்டு உதவியின்றியா யுத்தத்தை வென்றெடுத்தீர்கள்?

இந்த பசளை விசயம்போல் உள்நாட்டு வளங்களை மட்டும் வைத்தே நீங்கள் யுத்தம் செய்திருந்தால் ஓரிரு வருடங்களிலேயே புலிகளின் படையணிகள் தரைவழியாகவே  கொழும்புவரை வந்திருக்கும், நீங்களுட்பட பல சிங்கள இனதுவேச அரசியல்வாதிகள் புலிகளிடம் சிறைபட்டுகூட இருக்கலாம்.

அதனால் பொருத்தமானதை மட்டும் பொருத்தமான இடங்களில் பேசுங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, valavan said:

எதுக்கெடுத்தாலும் யுத்தத்தை தொடாதீர்கள் கோத்தபாய,

மக்களை ஏமாற்றுவதற்கு கையாளும் தந்திரம் அது. அதுவும் வெகு விரைவில் நீத்துப்போகும், அதோடு அந்தப்பேச்சை எடுப்பதற்கே மாத்தையா அஞ்சுவார் பாருங்கள். மக்கள் வெகு விரைவில் எதிர்த்து கேள்வி கேட்பர், பதிலிறுக்க முடியாமல் ஐயா விழி பிதுங்குகேக்கை தெரியும், வீர வசனம் பேசியதன் விளைவு.

  • கருத்துக்கள உறவுகள்

சேதனப் பசளை நல்லது, ஆனால் 2009 இற்கு பின்னர் அளவற்ற இரசாயண உர பாவனைகளுக்கு பழக்கப்பட்ட நிலங்கள் திடீரென சேதன பசளைக்கு சரியான விளைச்சலை கொடுக்க மாட்டாது. சில வருடங்களுக்கு விவசாயிகளுக்கு நட்டம் தான் ஏற்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.