Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விந்து முந்துதல் பிரச்னை: `A, B, C, D, E, F' முறையில் இருக்கு தீர்வு! - காமத்துக்கு மரியாதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

``செக்ஸ் ஆரம்பித்த 2 நிமிடங்களில் இவர்களுக்கு விந்து வெளியேறிவிடுகிறது. ஆனால், அந்த 2 நிமிடங்களுக்குள் ஆண் உச்சக்கட்டம் அடைந்துவிடுவான். அப்படியென்றால், ஏன் ஆண்கள் இதுபற்றி கவலைப்பட வேண்டும் என்று சிலருக்குத் தோன்றலாம். அதற்கான பதில்...''

 

இது தகவல்களின் காலம். ஜஸ்ட் `கறிவேப்பிலை' என்று டைப் செய்து கூகுளில் தேடினால், கறிவேப்பிலை தொடர்பாக எக்கச்சக்க தகவல்கள் வந்து விழும். ஆனால், அவற்றில் எந்தத் தகவல் சரி, எது தவறு என்பதை எல்லோராலும் கண்டுபிடித்துவிட முடியாது. கண்டுபிடிக்கத் தெரிந்தவர்களோ கூகுளில் கறிவேப்பிலை பற்றித் தேடப் போவதில்லை. கறிவேப்பிலையைப் பற்றி எதுவும் அறியாமல் தேடுபவர்கள் அதுபற்றிய தவறான தகவல்களை நம்பிவிட்டால், கறிவேப்பிலையால் கிடைக்கிற நல்ல பலன்களை அனுபவிக்காமல் போய்விடலாம் இல்லையா? இப்போது `கறிவேப்பிலை' இடத்தில் காமத்தை வைத்துப் பாருங்கள். அந்த உணர்வை விரும்பாத மனிதர்கள் இல்லை. இன்றைக்குக் காமம் தொடர்பான தகவல்களும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அளவுக்கு அதிகமான விருப்பமும் எக்கச்சக்க தகவல்களும் உள்ளங்கைக்குள் இருக்கும்போது, அவையே சிலரைத் தவறாக வழிநடத்தி விடலாம். `இது சரியில்லையோ' என்று ஐயுறுபவர்கள்கூட, அதற்கான சரியான தீர்வு கிடைக்காமல் தடுமாறவே செய்வார்கள். காமத்தில் `இது சரியா', `இது தவறா' என்று தடுமாற வைக்கின்ற பல ஐயங்கள் இருக்கின்றன. அவற்றில் இரண்டை பற்றித்தான் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ள இருக்கிறோம். ஒன்று செக்ஸ் நிலைகள் எனப்படுகிற பொசிஷன்ஸ், இரண்டாவது விந்து முந்துதல்... இதற்காக பாலியல் மருத்துவர் காமராஜிடம் பேசினோம்.

 

``தாம்பத்திய உறவில் பொசிஷனைப் பொறுத்து குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடலாம், அல்லது சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம், ஆர்கஸம் அதிகம் கிடைக்கும் என்பது போன்ற பல்வேறு நம்பிக்கைகள் இன்றைய தம்பதிகளிடம் இருக்கின்றன. பொசிஷனைப் பொறுத்து குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட முடியும் என்று சொல்லிவிட முடியாது. உறவின் முடிவில் பிறப்புறுப்புகள் இணைந்து, உயிரணுவும் கருமுட்டையும் இணைந்தால், அது கருவாகத்தான் செய்யும். அப்படியென்றால், பொசிஷனைப் பொறுத்து சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா என்றால், ஒரேயொரு நிலையில் மட்டும் அது உதவும்'' என்றவர், அதுபற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

சிறுநீர்ப்பைக்கும் ஆசன வழிக்கும் இடையில்தான் கர்ப்பப்பை இருக்கும். பெரும்பாலான பெண்களுக்குக் கர்ப்பப்பையானது லேசாக முன்னோக்கி சிறுநீர்ப்பை மீது சாய்ந்திருக்கும். சில பெண்களுக்கு மட்டும் கர்ப்பப்பை பின்னோக்கி சாய்ந்திருக்கும். இதை `retroverted uterus' என்போம். திருப்தியான தாம்பத்திய உறவு இருந்து, கூடவே உடலிலும் எந்தப் பிரச்னையும் இல்லாத சில தம்பதிகளுக்கும் குழந்தை பிறக்காது. அந்தப் பெண்களுக்கு இப்படி கர்ப்பப்பை சற்று பின்னோக்கி சாய்ந்திருக்கலாம். அப்படிப்பட்டவர்கள், மிருகங்கள்போல பின்புறமாக இருந்து உறவுகொண்டால் கரு தங்க வாய்ப்பிருப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மற்றபடி, அவரவர் விருப்பப்படி முன்புறமோ, பின்புறமோ, ஒருக்களித்து அணைத்தவாறோ, ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்தபடியோ என தம்பதியர்க்கு எதெல்லாம் விருப்பமான பொசிஷனாக இருக்கிறதோ அப்படியெல்லாம் தாம்பத்திய உறவு கொள்ளலாம். பொசிஷன்கள் இருவருக்கும் செளகர்யமாக இருக்க வேண்டும், அவ்வளவுதான்'' என்றவர் பொசிஷன்களுக்கும் உச்சக்கட்டத்துக்குமான தொடர்பு பற்றியும் பேசினார்.

Couple (Representational Image)
 
Couple (Representational Image) Photo by Loc Dang from Pexels

``ஆண் மேற்புறமாக இருக்கையில், பெரும்பாலான பெண்கள் உச்சக்கட்டம் அடைவதில்லை. இதுவே பெண் மேற்புறமாக இருந்தால் இருவருக்குமே உச்சக்கட்டம் கிடைக்கும். பொசிஷன்களில் இதுதான் பெஸ்ட். ஏனென்றால், இதன்மூலம்தான் பெண்ணின் முழு பெண்ணுறுப்பையும் தூண்டி இருவரும் உச்சக்கட்டத்தை அனுபவிக்க முடியும். செக்ஸில் ஆண் - பெண் சமநிலை இந்த பொசிஷனில்தான் இருக்கிறது. இதை ஆண்கள் அனைவரும் புரிந்து, ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

வாசகர்கள் கேள்வி: `விந்து முந்துதல்' என்கிற ஒரு பிரச்னையைப் பற்றி `uravugal@vikatan.com' மெயில் ஐ.டி-க்கு பல ஆண்கள் தங்கள் கேள்வியை அனுப்பி வைத்திருந்தார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் தீர்வு சொல்கிறார் டாக்டர் காமராஜ்.

பாலியல் மருத்துவர் காமராஜ்
 

டாக்டர் பதில்: சொன்னால் நம்ப மாட்டீர்கள். `விந்து முந்துதல்' பிரச்னை உலகத்திலிருக்கிற 70 சதவிகித ஆண்களுக்கு இருக்கிறது. செக்ஸ் ஆரம்பித்த 2 நிமிடங்களில் இவர்களுக்கு விந்து வெளியேறிவிடுகிறது. ஆனால், அந்த 2 நிமிடங்களுக்குள் ஆண் உச்சக்கட்டம் அடைந்துவிடுவான். அப்படியென்றால், ஏன் ஆண்கள் இதுபற்றிக் கவலைப்பட வேண்டும் என்று சிலருக்குத் தோன்றலாம். அதற்கான பதில், ஆண் விந்து முந்தும்போதே உச்சக்கட்டத்தை அடைந்துவிடுவான். ஆனால், அவன் மனைவிக்கோ தொடர்ந்து 14 நிமிடங்கள் தாம்பத்திய உறவுகொண்டால்தான் உச்சக்கட்டம் அடைய முடியும் என்கின்றன பல ஆராய்ச்சி முடிவுகள். இன்னொரு விஷயத்தையும் தெரிந்துகொள்ளுங்கள். தொடர்ந்து 14 நிமிடங்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு மனைவியை உச்சக்கட்டம் அடைய வைப்பதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு. பெரும்பான்மை ஆண்களால் இது முடியாது. இந்த இடத்தில்தான், `விந்து முந்துதல்' என்கிற ஆண்களின் பிரச்னை தம்பதியரின் பிரச்னையாகிறது. `தன்னுடைய மனைவியைத் திருப்தி செய்ய முடியவில்லை' என்கிற எண்ணம் ஆணுக்கு வந்துவிடும். சில நாள்கள், சில வாரங்கள், சில மாதங்கள் என்று பொறுத்துக்கொள்கிற மனைவி, ஒருகட்டத்தில் தாம்பத்திய உறவைச் சலிப்புடன் தவிர்க்கப் பார்ப்பார் அல்லது தலையெழுத்தே என்று உடன்படுவார். ஒருசிலர் வார்த்தைகளால் தங்கள் உணர்வை வெளிப்படுத்திவிடலாம்.

சரி, இந்தப் பிரச்னைக்கு தீர்விருக்கிறதா என்றால், இருக்கிறது. `விந்து முந்துதல்' பிரச்னைக்கு மருத்துவரைச் சந்தித்து அதற்கான மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்ளுங்கள். கூடவே A, B, C, D, E, F என்ற முறையையும் கையாளுங்கள். A என்பது பெண்ணுறுப்பின் உள்ளேயுள்ள மேல் பகுதி. இந்த இடத்தைத் தூண்டலாம். B என்பது மார்பகம். இதைத் தூண்டினாலும் 2 முதல் 3 சதவிகிதப் பெண்கள் உச்சக்கட்டத்தை அடைந்துவிடுவதாக ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. C என்பது கிளிட்டோரிஸ். ஆணுறுப்புக்கு இணையானது. பெண்ணுறுப்புக்குள் மேல் பகுதியில் இருக்கும். D என்பதும் பெண்ணுறுப்பின் மேல் பகுதியினுள்ளே இருப்பதுதான். இந்தப் பகுதியைத் தூண்டுவதன் மூலம் உங்கள் இணையர் உச்சக்கட்டம் அடைந்தால் அந்தப் பகுதி லேசாக வீக்கமடையும் என்று ஆராய்ச்சிகள் கண்டுபிடித்திருக்கின்றன. அடுத்து E. இந்த ஸ்டெப்பில் தம்பதியர் பிறப்புறுப்புகள் இணைய வேண்டும். கடைசியாக F. இது, இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நான் சொல்லியிருக்கிற மனைவி கணவனுக்கு மேலிருக்கும் நிலை. விந்து முந்துதல் நிகழ்ந்தாலும் நான் மேலே சொன்னவற்றில் E-யைத் தவிர்த்து மற்ற ஐந்து முறைகளின் மூலம் உங்கள் வாழ்க்கைத்துணைக்கு உச்சக்கட்டம் வரவழைத்து திருப்திப்படுத்திவிடலாம். உங்களுக்கு `விந்து முந்துதல்' காரணமாக வருகிற குற்றவுணர்ச்சியும் சரியாகிவிடும்.

காமத்தின் உள்ளும் புறமும் பற்றித்தான் இந்தத் தொடரில் பேசப் போகிறோம்; தெரிந்துகொள்ளப் போகிறோம்; காமத்துக்கும் வக்கிரத்துக்கும் இடையேயான வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ளப் போகிறோம்; கூடவே தாம்பத்திய உறவில் காமம் சார்ந்து சந்திக்கிற சிக்கல்களுக்கு நிபுணர்களுடன் இணைந்து தீர்வுகளையும் தேடவிருக்கிறோம். உங்கள் துணையிடம்கூட பகிரத் தயங்குகிற பிரச்னைகளுக்கான பதில்கள் நிச்சயம் இருக்கும். இந்தத் தொடரின் வழி உங்கள் அந்தரங்க கேள்விகளை அனுப்ப விரும்புகிறவர்கள் uravugal@vikatan.com என்ற மின்னஞ்லுக்கு அனுப்பலாம்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு மிக்க நன்றி :cool:

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய தகவலுக்கு மிக்க நன்றி.😝

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, சுவைப்பிரியன் said:

பிந்திய தகவலுக்கு மிக்க நன்றி.😝

யூ மீன் காலம்சென்ற..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

பிந்திய தகவலுக்கு மிக்க நன்றி.😝

ரெம்ப பிந்தீட்டு போல..😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

ரெம்ப பிந்தீட்டு போல..😁

புலவரே  நான் திண்ணையில் இணைத்த லிங்கை ஒருக்கா பாருங்கோ.உங்கள் ஊருக்கு போவது சம்பந்தமானது.

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் பதில்: சொன்னால் நம்ப மாட்டீர்கள். `விந்து முந்துதல்' பிரச்னை உலகத்திலிருக்கிற 70 சதவிகித ஆண்களுக்கு இருக்கிறது. செக்ஸ் ஆரம்பித்த 2 நிமிடங்களில் இவர்களுக்கு விந்து வெளியேறிவிடுகிறது. ஆனால், அந்த 2 நிமிடங்களுக்குள் ஆண் உச்சக்கட்டம் அடைந்துவிடுவான். அப்படியென்றால், ஏன் ஆண்கள் இதுபற்றிக் கவலைப்பட வேண்டும் என்று சிலருக்குத் தோன்றலாம். அதற்கான பதில், ஆண் விந்து முந்தும்போதே உச்சக்கட்டத்தை அடைந்துவிடுவான். ஆனால், அவன் மனைவிக்கோ தொடர்ந்து 14 நிமிடங்கள் தாம்பத்திய உறவுகொண்டால்தான் உச்சக்கட்டம் அடைய முடியும் என்கின்றன பல ஆராய்ச்சி முடிவுகள். இன்னொரு விஷயத்தையும் தெரிந்துகொள்ளுங்கள். தொடர்ந்து 14 நிமிடங்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு மனைவியை உச்சக்கட்டம் அடைய வைப்பதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு. பெரும்பான்மை ஆண்களால் இது முடியாது. இந்த இடத்தில்தான், `விந்து முந்துதல்' என்கிற ஆண்களின் பிரச்னை தம்பதியரின் பிரச்னையாகிறது. `தன்னுடைய மனைவியைத் திருப்தி செய்ய முடியவில்லை' என்கிற எண்ணம் ஆணுக்கு வந்துவிடும். சில நாள்கள், சில வாரங்கள், சில மாதங்கள் என்று பொறுத்துக்கொள்கிற மனைவி, ஒருகட்டத்தில் தாம்பத்திய உறவைச் சலிப்புடன் தவிர்க்கப் பார்ப்பார் அல்லது தலையெழுத்தே என்று உடன்படுவார். ஒருசிலர் வார்த்தைகளால் தங்கள் உணர்வை வெளிப்படுத்திவிடலாம்.....!

 

இது பிரச்சினை ஆனாலும் பெரிய பிரச்சினை இல்லை......!

அது வெறும் ட்ரெய்லர்தான் 2 நிமிடம் ஓடும். ஆனால் அதுவே திரைப்படமல்ல. படம் 2 மணித்தியாலம் ஓடும்..... அது உடனே வெளியேறினால் கணக்க யோசிக்க கூடாது. காதல் கதை பேசி, கட்டித்தழுவி பொப்கோர்ன் ஸ்நாக்ஸ் ஐஸ்கிரீம் எல்லாம் சாப்பிட மணியடித்து திரை விலகி மெய்ன் பிக்சர் ஆரம்பமாகும்.....அப்ப கன்னியென்றாலும், கட்டியவள் என்றாலும் 2 முறைக்கு மேல் எவரெஸ்ட் ஏறி இறங்கலாம்.....என்ன மனசைத் தளரவிடக்கூடாது.....உடல் அரைப்பங்குதான் மிகுதியை மனம்தான் செலுத்தும்.....!

பௌர்ணமி முடிந்து தேய்பிறை வந்தாலும் பவர் 2 நாளைக்கு நீடிக்கும்.....விந்து வெளியேறியபின்னும் விறைப்பு 1 ,  2 நிமிடம் நீடிக்கும் விவேகமான பெண் அதற்குள் தன் இச்சையை பூர்த்தி செய்து கொள்ளுவாள்.....!

 

கன்னியை புணரும் காளை 

சிம்மமாய் கர்ச்சித்து எழ 

துலா விழுந்தாலும் துவள வேண்டா --- ஆங்கே 

கடகமும் தேளும் போல் 

காலால் ஊர்ந்து வாலால் கீறி 

குறங்கிடை கிடாய் போல் உரசி  

கையால் தனுசெடுத்து

விரலால் சரம் தொடுத்து 

மகரம்போல் உதைத்து 

மிதுனம் போலிரு கும்பம் கவிழ்க்க 

மஞ்சளோடு குங்குமமும்

கலந்த குட்டையில் கோடி 

மீன்கள் புரண்டு களிக்கும் காண் .......!

 

காமமோகக் கவிராயரின் தனிப்பாடலில் தவறிய பாடல் ........!   😂

(பாடல் கற்பனை).

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

இது பிரச்சினை ஆனாலும் பெரிய பிரச்சினை இல்லை......!

அது வெறும் ட்ரெய்லர்தான் 2 நிமிடம் ஓடும். ஆனால் அதுவே திரைப்படமல்ல. படம் 2 மணித்தியாலம் ஓடும்..... அது உடனே வெளியேறினால் கணக்க யோசிக்க கூடாது. காதல் கதை பேசி, கட்டித்தழுவி பொப்கோர்ன் ஸ்நாக்ஸ் ஐஸ்கிரீம் எல்லாம் சாப்பிட மணியடித்து திரை விலகி மெய்ன் பிக்சர் ஆரம்பமாகும்.....அப்ப கன்னியென்றாலும், கட்டியவள் என்றாலும் 2 முறைக்கு மேல் எவரெஸ்ட் ஏறி இறங்கலாம்.....என்ன மனசைத் தளரவிடக்கூடாது.....உடல் அரைப்பங்குதான் மிகுதியை மனம்தான் செலுத்தும்.....!

பௌர்ணமி முடிந்து தேய்பிறை வந்தாலும் பவர் 2 நாளைக்கு நீடிக்கும்.....விந்து வெளியேறியபின்னும் விறைப்பு 1 ,  2 நிமிடம் நீடிக்கும் விவேகமான பெண் அதற்குள் தன் இச்சையை பூர்த்தி செய்து கொள்ளுவாள்.....!

உதுக்குத்தான் சிங்கன் சுவியண்ணை வேணுங்கிறது .....👌

  • கருத்துக்கள உறவுகள்

சுவி ஐயா 
என்னும் இளமையான நீங்கள்
மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை
காலையில் குளித்துவிட்டு
ஆனமுகத்தான் பாடலை போட்டு விட்டு 
உக்காந்து யாழை திறந்தால் உங்கள் பதிவு.
வாசித்து விட்டு அப்படியே விரைத்து போய் விட்டேன் 
மறுபடி போய் குளித்து விட்டு வந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு இருக்கு......
சுவியண்ணையிட்ட🤭

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு இருக்கு......
சுவியண்ணையிட்ட🤭

அவர் ஒரு காம .....தேனு🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.