Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியாவில் காணாமல்போன 4 வயது சிறுமி 18 நாட்களின் பின் உயிருடன் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் காணாமல்போன 4 வயது சிறுமி 18 நாட்களின் பின் உயிருடன் மீட்பு

மேற்கு அவுஸ்திரேலியாவில்  18 நாட்களாக காணாமல்போன 4 வயது சிறுமி நன்கு பூட்டப்பட்ட வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 16 ஆம் திகதி மேற்கு அவுஸ்திரேலியாவில் கார்னார்வோன் நகருக்கு அருகில் உள்ள ஒரு முகாம் பகுதியில்  கிளியோ ஸ்மித் என்ற சிறுமி  தனது குடும்பத்தின் கூடாரத்திலிருந்து காணாமல் போனார், 

Cleo Smith: Missing 4-year-old found alive in Australia - BBC News

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய நபர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டு  புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ஒக்டோபர் 16 ஆம் திகதி அன்று கிளியோ ஸ்மித் கூடாரத்தில் தனது தங்கையுடன் தூங்கி கொண்டு இருந்தாள். 

கூடாரத்தின் இரண்டாவது அறையில் உறங்கி கொண்டிருந்த அவரது தயார் காலையில் எழுந்தபோது, கிளியோவை காணவில்லை. கூடாரத்தின் கதவு திறந்திருந்தது.

இந்நிலையில் பொலிஸில் கிளியோ காணமல் போயுள்ளதாக பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டது. கிளியோ தானாக கூடாரத்தை விட்டு வெளியேறி இருக்க மாட்டாள் என தாய் கூறியதை அடுத்து  கடத்தல் அச்சம் ஏற்பட்டது.

இதனையடுத்து மாநிலத் தலைநகரான பேர்த்தில் இருந்து 100 அதிகாரிகள் கொண்ட பணிக்குழு பாரிய வான், தரை மற்றும் கடல் வழியாக தேடுதலில் ஈடுபட்டனர்.

சனத்தொகை குறைவாக உள்ள பகுதிகளில் தேடல் நடவடிக்கைக்கு  உளவு விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

கிளியோவின் இருப்பிடம் பற்றிய தெரிவித்தால் ஒரு மில்லியன்  7.5 இலட்சம் அமெரிக்க டொலர்  சன்மானம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Ellie Smith holds a picture of Cleo, sitting beside partner Jake Gliddon

இறுதியாக கிடைத்த தகவலுக்கமைய கிளியோ இருக்கும் இருப்பிடத்தை அறிந்து பொலிஸார் அங்கு சென்றனர். 

குறித்த வீட்டில் ஒரு அறையில் கிளியோ இருந்துள்ளாள். அவளை தூக்கி உனது பெயர் என்ன என்று கேட்டபோது அவள் கிளியோ என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவள் காப்பாற்றப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாள். கிளியோ மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறாள்.

கிளியோவை கடத்தி வைத்திருந்த வீட்டில் வசித்த ஒருவர் சமீபத்தில் நாப்கின் வாங்குவதை அண்டை வீட்டுக்காரர் பார்த்ததாக ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Cleo Smith

இந்நிலையிலேயே கிளியோ கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளாள்.

கிளியோ கண்டுபிடிக்கப்பட்ட செய்தி அவுஸ்திரேலியல் மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

விளக்கமறியிலில் உள்ளவருக்கு கிளியோ ஸ்மித்  குடும்பத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

சுமார் 5,000 பேர் வசிக்கும் கார்னார்வோனில் உள்ள அவரது குடும்ப வீட்டிலிருந்து கிளியோ கண்டுபிடிக்கப்பட்ட வீடு ஆறு நிமிட பயணத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 

https://www.virakesari.lk/article/116537

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளை..... கொலிடே போன இடத்தில் இருந்தே கடத்துகிறார்கள்...

பிரிட்டனில் இருந்து போர்த்துகல் போன இடத்தில் மூன்று வயது சிறுமியை கடத்தினார்கள்.

இன்று வரை கிடைக்கவிலலை.....

  • கருத்துக்கள உறவுகள்

கிளியோவை கடத்தியவர்… கடையில் “நாப்கின்” வாங்கியதையும், அயலவர்கள்  கவனித்துள்ளார்கள்.

உலகம் உசாராகத்தான்… இருக்குது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்

கிளியோ அதிஸ்ட்டமானவள். நிறைய குழந்தைகள் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களாகவே உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ குழந்தை காப்பாற்றப்பட்டு விட்டாள் அது போதும்.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

கிளியோவை கடத்தியவர்… கடையில் “நாப்கின்” வாங்கியதையும், அயலவர்கள்  கவனித்துள்ளார்கள்.

உலகம் உசாராகத்தான்… இருக்குது. 🙂

முதலில் நாப்கின் விற்ற பெண்தான் தகவல் கொடுத்தார்கள் என்றார்கள் இப்ப அயலவர் என்று கதை மாறுகிறது ஆனாலும் சிறுவர்களை கடத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கணும் அதுவும் மக்கள் முன்னிலையில் .

  • கருத்துக்கள உறவுகள்

கூடாரம் அடித்து தங்கி இருக்கினம் . அங்கேயாவது பிள்ளைகளோடு ஒன்றாய் படுப்போம் என்று இல்லை...ஒரு பயமில்லாமல் அடுத்த அறைக்குள் படுத்து இருக்கினம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, ரதி said:

கூடாரம் அடித்து தங்கி இருக்கினம் . அங்கேயாவது பிள்ளைகளோடு ஒன்றாய் படுப்போம் என்று இல்லை...ஒரு பயமில்லாமல் அடுத்த அறைக்குள் படுத்து இருக்கினம் 

பிள்ளையளை தனிய விட்டு பழக்கவேணுமாம்......உங்கை  லண்டனிலை தானே ஆக மோசம். பிள்ளைக்கு ஒரு வயது ஆக முதலே தாய் வேலை வெட்டியெண்டு அலைய வெளிக்கிட்டுடுவினமாம்😁

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nunavilan said:

கிளியோ அதிஸ்ட்டமானவள். நிறைய குழந்தைகள் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களாகவே உள்ளனர்.

உண்மைதான்.. பொலீஸாருக்குதான் முழுப்பாராட்டுதல்களும்..

இந்த விடயத்தில் மீடியா ஒரு பக்கம் உதவியது என்றாலும் கூட, தேவையில்லாத உண்மைக்கு புறம்பான செய்திகளையும் பரப்புவதை தடுக்க முடியவில்லை. இந்த 18 நாட்களும் ஒரு தவறும் செய்யாத பெற்றோர் கூட சந்தேகத்துடனேயே பார்க்கப்பட்டார்கள்.. 

இப்பொழுது அந்த சிறுமியை நிம்மதியாக இருக்கவிடாமல் பத்திரிக்கையாளர்கள் துரத்துகிறார்கள்.. 

அந்த சிறுமி இப்பொழுது சிரித்தபடி இருந்தாலும், இதனால் அந்த சிறு உள்ளத்தில் ஏற்பட்ட உளவியல் பாதிப்பையோ, எப்பொழுதும் மறக்கமுடியாத நிகழ்வாக இது இருக்கப்போகிறது என்பதை விளங்காமல் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றபடி செய்திகளை வெளியிடுகிறார்கள்.. அவ்வளவுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

நான்  இதில் இணைக்கப்படட செய்தியைப் பார்த்தே என் கருத்து எழுதினேன்  

  • கருத்துக்கள உறவுகள்
On 5/11/2021 at 00:39, பெருமாள் said:

முதலில் நாப்கின் விற்ற பெண்தான் தகவல் கொடுத்தார்கள் என்றார்கள் இப்ப அயலவர் என்று கதை மாறுகிறது ஆனாலும் சிறுவர்களை கடத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கணும் அதுவும் மக்கள் முன்னிலையில் .

காசுப் பரிசு  எண்ட படியால, நான், நீ எண்டு அடிபடுகினம்....

போர்த்துக்கலில் கடத்தி, காணாமலே போன, மடலீன் விடயத்தில் பார்த்தோமே..... பத்திரிகையாளர் தீரத்தை....

வர்ஜின் குறூப் ஓனர்.... ரிச்சட் ஒரு மில்லியன் பரிசு அறிவித்தார்.

அது மட்டுமல்ல..... ஊரில்.... மை போட்டு பார்கிற மாதிரி..... உங்கையும்.... உருளைக் கண்ணாடிக்குள்ள தேடலாம் என்ற நம்பிக்கை இருந்ததையும் பார்த்தோமே.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.