Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரதி said:

தமிழினியோ ,தமிழ்கவியோ சிங்களவர்களையோ,அரசையோ புகழ்ந்து எழுதி இருக்க கூடும் ...ஆனால் புலிகளை பற்றி எழுதியது உண்மை...அரசு தரப்பில் இருந்து புலிகளை பற்றிய  நல்ல விடயங்களை மட்டும்  எழுத விடாமல் தடுக்கப்பட்டு இருக்கலாம் .

உண்மையே  பொய்யோ. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து. எழுதுவதை விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஆவணமாக எற்க முடியாது   மேலும் புலிகள் தரப்பில். என்ன நல்ல  விடயங்களுண்டு.?  

18 hours ago, Justin said:

இதற்குப் பேச வேண்டும் - சிங்களவனுடனும் பேச வேண்டும், இந்தியாவுடனும் பேச வேண்டும், அமெரிக்காவுடனும் பேச வேணும். இதைச் செய்யக் கூடியதாக யாரையும் என்னால் அடையாளம் காண முடியவில்லை (கஜேந்திரன், விக்கி குழு தான் இறங்கி வராதே தங்கள் நிலையை விட்டு?).

ஒருபோதும் இல்லை நீங்கள் ஆயிரம் ஆண்டுகள்  இவர்களுடன் பேசினாலும் தீர்வு கிடையாது கிடைக்க உதவவும் மாட்டார்கள் தீர்வுககு ஒரே வழி. நாங்கள்  மத்திய அரசில். அசைக்க முடியாத சக்தியாக மாற வேண்டும் 

  • Replies 469
  • Views 32.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நீங்கள் நான் எழுதியதை வடிவாய் வாசித்தீர்களா?
எங்கே எந்த கருத்தில் போராளிகளையோ அல்லது தலைவரையோ அவமானப்படுத்தி இருக்கிறேன் என காட்ட முடியுமா ?
தலைவர் விமர்சனத்திற்கு அப்பாற் பட்டவர் இல்லை ....தலைவரே என்டாலும் பிழை, பிழை தான். உங்களை போல எல்லாத்துக்கும் தனி நபர் துதி பாட வேண்டிய அவசியம் எனக்கில்லை.
***
 
எங்கண்ணன் காக்கை வன்னியன் ஆகவே இருந்திட்டு போகட்டும் .உங்களுக்கு ஏன் குடையுது ...உண்மையை தெரிந்து கொள்ள அவ்வளவு ஆவல் ....முதலில் 70களின் ஆரம்பத்தில் நடந்த கதையை கேட்போம் ....கேட்டுட்டு வரும் போது சூடு ,சொரணை இருந்தால் காக்கை வன்னியன் கதைக்கு வருவோம் 

உங்கள் அண்ணர் காக்கைவன்னியனா இல்லையா என்பது என் பிரச்சனை அல்ல. 

ஆனால், 

பண்டார வன்னியன் கழுவேற்றப்பட்ட  பின்னர், காக்கை வன்னியன் சொல்வதும் அவன் வால்கள் சொல்வது மட்டுமே வரலாறாக துருத்திக்கொண்டு முன்னிற்கிறது.

அதுதான் என் பிரச்சனை.

1 hour ago, ரதி said:

இருந்து பாருங்கள் இன்னும் கொஞ்ச காலத்தில் வட,கிழக்கு பூரா சிங்களவர்கள் ஆட்சி செய்வார்கள் ...அவர்கள் தான் அந்த மக்களுக்கான உரிமையை சிறுது ,சிறிதாய் பெற்றுக் கொடுப்பார்கள் 

அனுபவம் பேசுகிறததோ.....😂

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kandiah57 said:

இப்பவும் வடக்கு கிழக்கு சிங்களவன் தான்  ஆட்சி செய்கிறார்கள்  

மேலே நீங்கள் எழுதியது உங்களின் கருத்து   மாறாக யோசனை இல்லை 

நான் எழுதியது இன்னும் சில காலத்தில் வட,கிழக்கை பிரதிநிதிப்படுத்தும் தமிழ் எம்பிக்கள் இருக்க மாட்டார்கள் ...தமிழ் மக்களே இவர்களை ப்புறக்கணிப்ப

42 minutes ago, Kandiah57 said:

உண்மையே  பொய்யோ. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து. எழுதுவதை விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஆவணமாக எற்க முடியாது   மேலும் புலிகள் தரப்பில். என்ன நல்ல  விடயங்களுண்டு.?  

நீங்கள் ஏற்றால் என்ன , ஏற்கா  விட்டால் என்ன  உண்மை இல்லை என்றாகி விடுமா?
புலிகள் மக்களுக்கு நல்லதே செய்யவில்லை என்கிறீர்களாtw_lol: 
 
32 minutes ago, Kapithan said:

உங்கள் அண்ணர் காக்கைவன்னியனா இல்லையா என்பது என் பிரச்சனை அல்ல. 

ஆனால், 

பண்டார வன்னியன் கழுவேற்றப்பட்ட  பின்னர், காக்கை வன்னியன் சொல்வதும் அவன் வால்கள் சொல்வது மட்டுமே வரலாறாக துருத்திக்கொண்டு முன்னிற்கிறது.

அதுதான் என் பிரச்சனை.

அப்ப ஏன் இன்று வரைக்கும் பண்டாரவன்னியனை தூக்கி பிடிக்கிறீ ர்கள்?
 
33 minutes ago, Kapithan said:

அனுபவம் பேசுகிறததோ.....😂

என்ன அனுபவம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

தமிழினியோ ,தமிழ்கவியோ சிங்களவர்களையோ,அரசையோ புகழ்ந்து எழுதி இருக்க கூடும் ...ஆனால் புலிகளை பற்றி எழுதியது உண்மை...அரசு தரப்பில் இருந்து புலிகளை பற்றிய  நல்ல விடயங்களை மட்டும்  எழுத விடாமல் தடுக்கப்பட்டு இருக்கலாம் .

தமிழினிக்கும் தமிழ்க்கவிக்கும்  புலிகள் இல்லாத காலத்திலை தான் ஞானோதயம் பிறந்ததோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

 1) அப்ப ஏன் இன்று வரைக்கும் பண்டாரவன்னியனை தூக்கி பிடிக்கிறீ ர்கள்?
 
2) என்ன அனுபவம் 

1) காக்கை வன்னியனை தூக்கிப்பிடிக்கச் சொல்கிறீர்களா ? 😂

2) 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

நீங்கள் ஏற்றால் என்ன , ஏற்கா  விட்டால் என்ன  உண்மை இல்லை என்றாகி விடுமா?

நீங்கள் உண்மை என்று நினைப்பது எல்லாம் உண்மை என்றாகி விடுமா  ? அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிறையிலிருந்து அரசாங்கம் சொல்வதெல்லாம் எழுதுவது அரசாங்கத்தின் கருத்துகள் ஆகும் நான் மட்டுமல்ல எவரும் எற்க முடியாது விடுதலைப்புலிகளை விரும்பதவர்கள் மட்டும் எற்றுக் கொள்வார்கள் 

4 hours ago, ரதி said:

புலிகள் மக்களுக்கு நல்லதே செய்யவில்லை என்கிறீர்களாtw_lol: 
 
செய்தது எல்லாம் நல்லதே 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

அப்ப ஏன் இன்று வரைக்கும் பண்டாரவன்னியனை தூக்கி பிடிக்கிறீ ர்கள்?
 
பெரும்பாலான தமிழ் மகக்களால். எற்றுக்கொள்ளப்பட்ட மாபெரும் தலைவன் நீங்கள் அவனை தூக்கி பிடிக்கவில்லையா.  ? நீங்கள்   காக்கை வன்னியனையா தூக்கி பிடிக்கீறிர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

அரசு தரப்பில் இருந்து புலிகளை பற்றிய  நல்ல விடயங்களை மட்டும்  எழுத விடாமல் தடுக்கப்பட்டு இருக்கலாம் .

உண்மையை ஒப்புக்கொணடாமைக்கு நன்றிகள் இது ஒன்றே  போதும்  இவர்களுடைய எழுத்துக்கள் அரசினுடைய வழிநடத்தலுடன்  எழுதப்பட்டவை என்று உறுதி செய்வதற்கு எனவே… இதனை விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஆவணமாக எவருமே எற்க முடியாது 

12 hours ago, Kandiah57 said:

உண்மையே  பொய்யோ. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து. எழுதுவதை விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஆவணமாக எற்க முடியாது   மேலும் புலிகள் தரப்பில். என்ன நல்ல  விடயங்களுண்டு.?  

ஒருபோதும் இல்லை நீங்கள் ஆயிரம் ஆண்டுகள்  இவர்களுடன் பேசினாலும் தீர்வு கிடையாது கிடைக்க உதவவும் மாட்டார்கள் தீர்வுககு ஒரே வழி. நாங்கள்  மத்திய அரசில். அசைக்க முடியாத சக்தியாக மாற வேண்டும் 

மத்திய அரசில் அசைக்க முடியாத சக்தியாக எப்படி மாறுவது? 

மத்திய வங்கியில் Tresor ஆக மறிவிட்டால் அசைக்க முடியாதல்லவா! 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

வழிக்கு வந்திட்டிங்கள் இங்கேயிருந்து  காசை தூக்கி எறிந்தால் அங்கேயிருப்பவர்கள் தங்கள் உயிரை துச்சமாய் மதித்து உங்களுக்கு பேர் சொல்ல ஒரு நாடு எடுத்து தரோணும் ...அந்த நாட்டில் நீங்கள் போய் இருக்க போவதும் இல்லை ...உங்கள் பணத்திற்கு அவர்கள் உயிர் சமன் இல்லையா?
 
போராளிகளின் உயிர்கள்  விலைமதிக்க முடியாதவை. வடிவாக வாசியுங்கள்! நான் எழுதியது புலம்பெயர் தமிழர்களின் பேராதரவும், பண உதவியுமே போராட்டத்தை இவ்வளவுக்கு வளர்ச்சி அடைய செய்ததென்றே!!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

மத்திய அரசில் அசைக்க முடியாத சக்தியாக எப்படி மாறுவது? 

மத்திய வங்கியில் Tresor ஆக மறிவிட்டால் அசைக்க முடியாதல்லவா! 

நல்ல கேள்வி   துல்பன். 

1..தனியா    வடக்கு,கிழக்கில் தேர்தலில் போட்டியிடமால்.  இலங்கை முழுவதும் போட்டியிட வேண்டும்   ஒரு பொதுவான அணியை உருவாக்கி நாம் இலங்கை தமிழர் என்ற முழக்கத்துடன்  அனைத்து தமிழர்களையும் இணத்து எவ்வளவு கூடுதல் பாராளுமன்ற உறுப்பினர்களை எடுக்க முடியுமே....எடுக்க முயற்சிகள் செய்ய வேண்டும் தமிழர்கள்  இலங்கை என்று கவனம் செலுத்தும்போது. சிங்களவர். வடக்கு,கிழக்கை  கவனம் செலுத்துவது குறையலாம்.  

2...முஸ்லிம் கிழக்கு பல்கலைக்கழகத்தை உருவாக்கிய அசாத்   ஐனதிபதி கமிஷன் முன்பே சாட்சி அளத்தபோது. வங்கியில் பெரும்தொகை பணம் இருந்ததும் அது கையளப்பட்டமுறை பற்றி கூறும்போது மூன்று...நான்கு குழந்தைகள் உள்ள வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு  ஒரு குழந்தைக்கு 7500 ரூபாய் வீதம் மாதந்தக்கொடுப்பனவு  செய்யப்பட்டதாக கூறினார்   இதனை பல ஆண்டுகளாக செய்துள்ளனர் இதன் மூலம் அவர்களின் மக்கள் தொகைகூட...பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையும். கூடியுள்ளது.  இதனை தமிழ் மக்களும் பின்பற்றினாலே எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் 

3.. வேலைவாய்ப்புகளை சுயாதீனமாய். விண்ணப்பிக்கவும் அவற்றிலிருந்து. திறமைசாலிகள்……………… தெரிவுசெய்யப்படுபவர்கள்  எனில்    டக்ளஸ் அங்கஜன் போன்றேரின். செல்வாக்கு இல்லாமல் போய்விடும்   எனவே தமிழர் கட்சி பலமடையும் வாய்ப்பு எற்படும்  

4...தமிழர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 30....40....50........70...

என அதிகரிக்க முடியுமாயின்.  சிங்களவரின். ஒரு கட்சி. பலமுடையதாகின்.  மற்றையது.  பலவீனமாக இருக்கும்  இச்சந்தர்ப்பத்தில். தமிழ் கட்சி பலமான  எதிர்கட்சியாக அமையும்   சிங்களவரின் கட்சி.  சம வலுவுடைதாயின்   தமிழர்  கட்சி  ஆதரவு கண்டிப்பாக தேவைப்படும்   பேரம் பேசவும் விரும்பிய சட்டங்களை உருவாக்கவும். ...மாகாணங்களுக்கு மாற்றங்கள் செய்ய முடியாத கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டங்களை உருவாக்கவும் முடியும் இப்படி பலமுறை ஆட்சி அமையுமாயின்.  படிப்படியாக மாகாண சபைகளை பலமுடையதாக்கலாம்.  

5...மத்தியில் பலமில்லாமல்.  தனியாக மாகாண சபை தீர்வை பெறும் போது. அடுத்த முறை ஆட்சி அமைக்கும் கட்சி  இல்லாமல் செய்யும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. 

6..பாலஸ்தீன மக்களின் இன்றைய மக்கள் தொகை 50 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை விட மூன்று மடங்குகள் அதிகம். எனவே அவர்களை அழிக்க முடியாது   எங்களது. நிலை இதற்கு நேர் எதிர்மறையாகவே உள்ளது 

7...அமெரிக்கா,கனடா ,இந்தியா ...ஐக்கியநாணயசபை...இவைகளை நம்பி எந்தப் பிரயோஜனமில்லை     

8...நாங்களே’ எங்களை பலப்படுத்த வேண்டும்    புலி ஆதரவு புலி எதிர்ப்புகள்   இவற்றை தவிர்த்து  எப்படி ஒரு தீர்வைப் பெறலாம் எனக் கருத்து பரிமாற்றம் செய்வோமாயின் ஒரு உறுதியான தீர்வு சாத்தியம் தான்    

9..ஒவ்வொருவரும் தங்கள் விரும்புவர்களுக்கு மூன்று..நான்கு குழந்தைகள் இருப்பின் உதவுவது எங்கள் மக்கள் தொகையை அதிகரிக்கும் 

இது செயற்களமில்லை ஆனாலும் இதனை பார்க்கும் செயல்ப்படும....வாய்ப்புகள் உண்டு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, tulpen said:

மத்திய அரசில் அசைக்க முடியாத சக்தியாக எப்படி மாறுவது? 

பல தடவைகள் மத்திய அரசில் தமிழ் பலம் பொருந்தியதாக காட்டப்பட்டு விட்டது.அதை  துர்பிரயோகம் செய்தது எம்மவர்களே.
சென்ற தேர்தலை விட அன்று தொடக்கம் ஆட்சியில் அமர வைக்கும் கட்சியை தீர்மானித்தவர்கள் தமிழர்களே.

10 hours ago, குமாரசாமி said:

பல தடவைகள் மத்திய அரசில் தமிழ் பலம் பொருந்தியதாக காட்டப்பட்டு விட்டது.அதை  துர்பிரயோகம் செய்தது எம்மவர்களே.
சென்ற தேர்தலை விட அன்று தொடக்கம் ஆட்சியில் அமர வைக்கும் கட்சியை தீர்மானித்தவர்கள் தமிழர்களே.

நீங்கள் கூறியதில் உண்மை உள்ளது. தமிழ் மக்களின் ஒத்துழைப்புடனும் அர்பணிப்பிலும் உருவான பலம் தமிழர்களாலேயே துஷ்பிரயோகம் செய்யப்பட்டது உண்மையே. 

அந்த நீண்ட கால தவறான முன்மாதிரி இனியும் பின்பற்ற முடியாது.  அது  மாற்றப்பட வேண்டுமென்பதே அனைவரினதும் ஒட்டு மொத்த விருப்பமும். 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kandiah57 said:

நல்ல கேள்வி   துல்பன். 

1..தனியா    வடக்கு,கிழக்கில் தேர்தலில் போட்டியிடமால்.  இலங்கை முழுவதும் போட்டியிட வேண்டும்   ஒரு பொதுவான அணியை உருவாக்கி நாம் இலங்கை தமிழர் என்ற முழக்கத்துடன்  அனைத்து தமிழர்களையும் இணத்து எவ்வளவு கூடுதல் பாராளுமன்ற உறுப்பினர்களை எடுக்க முடியுமே....எடுக்க முயற்சிகள் செய்ய வேண்டும் தமிழர்கள்  இலங்கை என்று கவனம் செலுத்தும்போது. சிங்களவர். வடக்கு,கிழக்கை  கவனம் செலுத்துவது குறையலாம்.  

2...முஸ்லிம் கிழக்கு பல்கலைக்கழகத்தை உருவாக்கிய அசாத்   ஐனதிபதி கமிஷன் முன்பே சாட்சி அளத்தபோது. வங்கியில் பெரும்தொகை பணம் இருந்ததும் அது கையளப்பட்டமுறை பற்றி கூறும்போது மூன்று...நான்கு குழந்தைகள் உள்ள வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு  ஒரு குழந்தைக்கு 7500 ரூபாய் வீதம் மாதந்தக்கொடுப்பனவு  செய்யப்பட்டதாக கூறினார்   இதனை பல ஆண்டுகளாக செய்துள்ளனர் இதன் மூலம் அவர்களின் மக்கள் தொகைகூட...பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையும். கூடியுள்ளது.  இதனை தமிழ் மக்களும் பின்பற்றினாலே எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் 

3.. வேலைவாய்ப்புகளை சுயாதீனமாய். விண்ணப்பிக்கவும் அவற்றிலிருந்து. திறமைசாலிகள்……………… தெரிவுசெய்யப்படுபவர்கள்  எனில்    டக்ளஸ் அங்கஜன் போன்றேரின். செல்வாக்கு இல்லாமல் போய்விடும்   எனவே தமிழர் கட்சி பலமடையும் வாய்ப்பு எற்படும்  

4...தமிழர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 30....40....50........70...

என அதிகரிக்க முடியுமாயின்.  சிங்களவரின். ஒரு கட்சி. பலமுடையதாகின்.  மற்றையது.  பலவீனமாக இருக்கும்  இச்சந்தர்ப்பத்தில். தமிழ் கட்சி பலமான  எதிர்கட்சியாக அமையும்   சிங்களவரின் கட்சி.  சம வலுவுடைதாயின்   தமிழர்  கட்சி  ஆதரவு கண்டிப்பாக தேவைப்படும்   பேரம் பேசவும் விரும்பிய சட்டங்களை உருவாக்கவும். ...மாகாணங்களுக்கு மாற்றங்கள் செய்ய முடியாத கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டங்களை உருவாக்கவும் முடியும் இப்படி பலமுறை ஆட்சி அமையுமாயின்.  படிப்படியாக மாகாண சபைகளை பலமுடையதாக்கலாம்.  

5...மத்தியில் பலமில்லாமல்.  தனியாக மாகாண சபை தீர்வை பெறும் போது. அடுத்த முறை ஆட்சி அமைக்கும் கட்சி  இல்லாமல் செய்யும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. 

6..பாலஸ்தீன மக்களின் இன்றைய மக்கள் தொகை 50 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை விட மூன்று மடங்குகள் அதிகம். எனவே அவர்களை அழிக்க முடியாது   எங்களது. நிலை இதற்கு நேர் எதிர்மறையாகவே உள்ளது 

7...அமெரிக்கா,கனடா ,இந்தியா ...ஐக்கியநாணயசபை...இவைகளை நம்பி எந்தப் பிரயோஜனமில்லை     

8...நாங்களே’ எங்களை பலப்படுத்த வேண்டும்    புலி ஆதரவு புலி எதிர்ப்புகள்   இவற்றை தவிர்த்து  எப்படி ஒரு தீர்வைப் பெறலாம் எனக் கருத்து பரிமாற்றம் செய்வோமாயின் ஒரு உறுதியான தீர்வு சாத்தியம் தான்    

9..ஒவ்வொருவரும் தங்கள் விரும்புவர்களுக்கு மூன்று..நான்கு குழந்தைகள் இருப்பின் உதவுவது எங்கள் மக்கள் தொகையை அதிகரிக்கும் 

இது செயற்களமில்லை ஆனாலும் இதனை பார்க்கும் செயல்ப்படும....வாய்ப்புகள் உண்டு 

கந்தையா, உங்களுடைய ஆலோசனைகளோடு முரண்பட பெரிதாக எதுவுமில்லை. ஆனால் அனேகமானவை நப்பாசைத்தனமானவையே ஒழிய , நடைமுறைப்படுத்தக் கூடியவையல்ல.

உதாரணமாக 2

1. சனத்தொகை அதிகரித்தல்: தமிழர்கள், சிங்களவர்கள் இருவரதும் சராசரி பிறப்பு வீதம் 2 இலும் குறைவு. இதன் காரணம் பணமில்லாமை மட்டுமல்ல. பெண்கள் படித்து முழு நேரத்தொழில் செய்யவும் ஆரம்பித்து விட்ட சமூகத்தில் மூன்று நான்கு பிள்ளைகளைப் பெற்று விட்டு தொழிலைக் கைவிட்டு இருக்க விரும்பாமை ஒரு காரணம். இது உலகம் முழுவதும் சமூக அபிவிருத்தி ஏற்படும் போது நிகழும் மாற்றம். இஸ்லாமியர் - மதம் காரணமாகவும், பெண்களின் தொழில் முன்னேற்றங்களை சட்டை செய்யாமலும் இருப்பதால் - அவர்களின் பிறப்பு வீதம் அதிகம். இதே தொப்பியை தமிழர்கள் போட்டுக் கொள்வரென்று நான் நம்பவில்லை.

2. சுயாதீனமாக, தகுதி அடிப்படையில் மட்டும் விண்ணப்பம் செய்து வேலை பெறும் நிலை இலங்கையில் இல்லை. வருமா என்றால், ஒட்டு மொத்த ஊழல் சிஸ்ரம் மாறினால் மட்டுமே இது சாத்தியம். நான் இந்த ஊழல் அமைப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள முனைய வேண்டுமென கருதுகிறேன். எந்த தமிழ் அரசியல் வாதிகள் மூலமும் தமிழர்கள் வேலைகளைப் பெற்றுக் கொள்ளட்டும் - முன்னேறட்டும். இதன் அர்த்தம் அவர்கள் அந்த அரசியலாளர்களை வெற்றி பெற வாக்களிக்க வேண்டுமென்றில்லை.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, tulpen said:

அந்த நீண்ட கால தவறான முன்மாதிரி இனியும் பின்பற்ற முடியாது.  அது  மாற்றப்பட வேண்டுமென்பதே அனைவரினதும் ஒட்டு மொத்த விருப்பமும். 

அதுதானே.......நீங்கள் விரும்புறதை அங்கஜனும் டக்ளஸ் அண்ணரும் செய்யினம் எல்லோ..
பிறகேன் எல்லா இடத்திலையும் ரெஞ்சன்? :grin:

8 hours ago, குமாரசாமி said:

அதுதானே.......நீங்கள் விரும்புறதை அங்கஜனும் டக்ளஸ் அண்ணரும் செய்யினம் எல்லோ..
பிறகேன் எல்லா இடத்திலையும் ரெஞ்சன்? :grin:

டக்லஸும் அங்கயனும், அதி தீவிர தமிழ் தேசியவாதிகள் பெற்றெடுத்த குழந்தைகள்.

 அதாவது நடைமுறை சாத்தியமான வழிகளை நிரகரித்து அதி தீவிர தேசியம், தனிநாடு என்று பேசியவர்களல் சிதைக்கபட்ட தமிழர் உரிமை போராட்டத்தால் மக்களுக்கு ஏற்பட்ட துர்பாக்கிய நிலையை தமக்கு சாதகமாக பாவிக்கும் பயனாளிகளே இந்த இருவரும்.  அந்த வகையில் அந்த இருவரும் உங்களை போன்ற அதி தேசியவாதிகளால் உருவாக்கப்பட்டவர்களே. 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎01‎-‎12‎-‎2021 at 21:59, குமாரசாமி said:

தமிழினிக்கும் தமிழ்க்கவிக்கும்  புலிகள் இல்லாத காலத்திலை தான் ஞானோதயம் பிறந்ததோ?

புலிகள் இருக்கும் போதே கொஞ்சமாவது அறிவு இருந்திருக்கும் ...அப்பவே வெளிப்படுத்தி இருந்தால் உயிர் இருந்திருக்காது

On ‎02‎-‎12‎-‎2021 at 00:25, Kapithan said:

1) காக்கை வன்னியனை தூக்கிப்பிடிக்கச் சொல்கிறீர்களா ? 😂

2) 😂

நீங்கள் தூக்கி பிடிக்கவில்லை என்று இங்கே யார் அழுதது🙂 

On ‎02‎-‎12‎-‎2021 at 02:01, Kandiah57 said:

நீங்கள் உண்மை என்று நினைப்பது எல்லாம் உண்மை என்றாகி விடுமா  ? அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிறையிலிருந்து அரசாங்கம் சொல்வதெல்லாம் எழுதுவது அரசாங்கத்தின் கருத்துகள் ஆகும் நான் மட்டுமல்ல எவரும் எற்க முடியாது விடுதலைப்புலிகளை விரும்பதவர்கள் மட்டும் எற்றுக் கொள்வார்கள் 

நீங்கள் அவர்களின்  நூலை வாசிக்கவில்லை என்று தெரியுது ...போய் முதலில் வாசியுங்கோ 
 
On ‎02‎-‎12‎-‎2021 at 02:01, Kandiah57 said:

செய்தது எல்லாம் நல்லதே 

ஓ ! வன்னியில் போய் சொல்லி பாருங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎02‎-‎12‎-‎2021 at 03:11, Kandiah57 said:

உண்மையை ஒப்புக்கொணடாமைக்கு நன்றிகள் இது ஒன்றே  போதும்  இவர்களுடைய எழுத்துக்கள் அரசினுடைய வழிநடத்தலுடன்  எழுதப்பட்டவை என்று உறுதி செய்வதற்கு எனவே… இதனை விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஆவணமாக எவருமே எற்க முடியாது 

மேலே எழுதியது தான் .அவவின் நூலை வாசித்திருந்தால் இப்படி எழுதி இருக்க மாட்டீர்கள்...அவ என்ன எழுதியிருந்தார் வாசிக்காமலே கருத்துரைக்க உங்களாலும் ,உங்களுக்கு பச்சை  குத்தினவர்களாலுமே முடியும் ....போய் வாசித்துட்டு வாங்கோ ...தொடர்ந்து உரையாடுவோம்  
 
On ‎02‎-‎12‎-‎2021 at 02:15, Kandiah57 said:

பெரும்பாலான தமிழ் மகக்களால். எற்றுக்கொள்ளப்பட்ட மாபெரும் தலைவன் நீங்கள் அவனை தூக்கி பிடிக்கவில்லையா.  ? நீங்கள்   காக்கை வன்னியனையா தூக்கி பிடிக்கீறிர்கள் ?

யாரை தூக்கி பிடிக்க வேண்டும் என்பது எனது தனிப்படட விருப்பம் 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

மேலே எழுதியது தான் .அவவின் நூலை வாசித்திருந்தால் இப்படி எழுதி இருக்க மாட்டீர்கள்...அவ என்ன எழுதியிருந்தார் வாசிக்காமலே கருத்துரைக்க உங்களாலும் ,உங்களுக்கு பச்சை  குத்தினவர்களாலுமே முடியும் ....போய் வாசித்துட்டு வாங்கோ ...தொடர்ந்து உரையாடுவோம்  
 
யாரை தூக்கி பிடிக்க வேண்டும் என்பது எனது தனிப்படட விருப்பம் 

என்னிடம் அந்த புத்தகம் உண்டு. இரு தடவை வாசித்துள்ளேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.