Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, இணையவன் said:

புலம்பெயர் தமிழர்களைத் தலைகுனிய வைத்த காட்டுமிராண்டித்தனமான இந்தக் குழப்பச் செயல் கண்டிக்கப்பட வேண்டியது. 

அடுத்த சில வருடங்களில் இந்த குழப்பவாதிகளின் தொகை இன்னும் குறைந்துகொண்டே போகும். அப்போது விசிலடிப்பதற்கு இப்போதிருக்கும் ஆட்களும் இருக்க மாட்டார்கள்.

  • Replies 469
  • Views 32.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எவர் என்ன சொன்னாலும்,எழுதினாலும் இந்த அவலநிலை கவலைக்குரியதே.எம்மவரை நாமே அவமரியாதை செய்வது,எதிரிக்கு மிக்க மகிழ்ச்சி வழங்கும்.எதையும் பேசித்தீர்க்கும் பக்குவம் உள்ள நாடுகளில் வசிப்பவர்கள் அந்த நிலைக்கு மாறாமல் இருப்பது வேதனையே.தாயகத்திலுள்ள அரசியல்வாதிகளைத் தள்ளிவிட்டு தமிழருக்குத் தீர்வு எப்படி வர முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:
முன்னாள் யூனியன் கல்லூரி அதிபர்
கதிர் பாலசுந்தரம்:
 
கனடாவில் திரு. சுமந்திரன் உரையாற்றிய கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன். எனது சக்கர முதுகுப் பக்கத்தில் மண்டப பின்சுவர் நீளத்துக்குப் பல பொலிசார்கள் நின்றார்கள். மண்டப பாதுகாவலர்கள் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தனர். திரு. சாணக்கியனை அடுத்து சுமந்திரன் உரையாற்றிக் கொண்டிருந்தார். எதுவித சலசலப்பும் இல்லை. நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது. பேச்சு முடிகிற நேரம்.
சபையின் பின் வரிசையில் இருந்த ஓரூவர் எழுந்து நின்று ஏதோ கேட்டார். எனக்கு விளங்கவில்லை. இருக்கையில் இருந்த சபை முழுவதும் வினா எழப்பியவரை நோக்கியது. அவர் அருகே நின்ற இன்னொருவர் இரு கைகளையும் உயர்த்தி ஏதோ சத்தம் போட்டார். சபை முழுவதும் எழுந்து நின்று மௌனமாய் அவரை நோக்கியது. இன்னும் சிலர் கைகளை உயர்த்தி குரலெழுப்பினர்.
முதுகுச் சட்டையில் ஆங்கிலத்தில் பாதுகாவலர்கள் என்று எழுதியவர்களை நோக்கினேன். அவர்கள் மௌனமாய் நடப்பதை ரசித்துக்கொண்டு நின்றார்கள். பொலிசாரை நோக்கினேன். அழகான கருநீலச் சட்டைப் பொத்தான்களின் ஓளிவீச்சுகள் கண்களைக் கூசச் செய்தன. அவர்கள் அனைவரும் நட்டுவைத்த பாவைகள் போல பேசாமடைந்தைகளாய் காட்சி தந்தனர்.
அதுதான் கனேடிய ஜனநாயக பேச்சுச் சுதந்திரத்தின் பேரழகு. அதில் சில முதிய இளைஞர்கள் நஞ்சு பாய்ச்சுவதைப் பார்த்து இதயம் வலிபொறுக்காமல் ஓவென்றழுதது. இனவாத சிங்களவர்கள் செய்யத் துடிப்பதை இவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள்.

எங்கள் முட்டாள்தனத்தின் எல்லை, இலங்கையில் தமிழினத்தின் இருப்பை அடியோடு இல்லாதொழிக்கும். 

நாங்கள் இறக்கும்வரை, இதயத்தில் இரத்தம் வடிய அழவேண்டியதுதான்.

4 minutes ago, குமாரசாமி said:

சுமந்திரனோ அல்லது கூட்டமைப்போ அன்று தொடக்கம் ஒழுங்காக நடந்திருந்தால் ஏனிந்த குழப்பங்கள் வருகின்றது?

சுமந்திரனோ கூட்டமைப்போ உத்தமர்கள் இல்லை, வெறும் அரசியல்வாதிகள்தான். 

வெளிநாட்டில் குடியேறிய சமுதாயம் நடந்துகொண்ட விதம் இதைவிட எவ்வளவோ கீழ்த்தரமானது. இதில் துளியளவும் பயனில்லை. மாறாக ஜனநாயக விரோதிகளாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். எங்களுக்கும் அங்குள்ளவர்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. 

10 minutes ago, Kapithan said:

அடுத்த சில வருடங்களில் இந்த குழப்பவாதிகளின் தொகை இன்னும் குறைந்துகொண்டே போகும். அப்போது விசிலடிப்பதற்கு இப்போதிருக்கும் ஆட்களும் இருக்க மாட்டார்கள்.

எடுத்ததற்கெல்லாம் புலிக்கொடியைத் தூக்கிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எம்மவர்கள் இல்லாவிட்டாலும் கோத்தபாயாவின் ஆட்கள் செய்வார்கள். ஏற்கனவே ஆரம்பித்துவிட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இணையவன் said:

எங்களுக்கும் அங்குள்ளவர்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. 

இந்த இடைவெளியை அதிகரிக்கவும், புலம்பெயர் தமிழர்கள் எல்லாரும் அடிப்படைவாத தலிபான் நிகர் முட்டாபீசுகள் என்பதை நிறுவவும் சிலர் அதி தீவிர தமிழ் தேசியவாதிகள் என்ற போர்வையில் அனுப்பட்டுள்ளனரோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, இணையவன் said:

சுமந்திரனோ கூட்டமைப்போ உத்தமர்கள் இல்லை, வெறும் அரசியல்வாதிகள்தான். 

வெளிநாட்டில் குடியேறிய சமுதாயம் நடந்துகொண்ட விதம் இதைவிட எவ்வளவோ கீழ்த்தரமானது. இதில் துளியளவும் பயனில்லை. மாறாக ஜனநாயக விரோதிகளாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். எங்களுக்கும் அங்குள்ளவர்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. 

எடுத்ததற்கெல்லாம் புலிக்கொடியைத் தூக்கிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எம்மவர்கள் இல்லாவிட்டாலும் கோத்தபாயாவின் ஆட்கள் செய்வார்கள். ஏற்கனவே ஆரம்பித்துவிட்டனர்.

நேற்றைய குழப்பத்தைப் பார்த்தபின்னர் இந்த்ச் சந்தேகம் எனக்கும் ஏற்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நாங்க யாரு..? 

அங்குள்ள  சனத்திற்கு ஏதாவது நன்மை நடைபெறுவது சிலருக்கு விருப்பமில்லை.

சுமத்திரன்  அரசியலுக்கு வந்து கடந்த பத்து வருடத்தில் பேருக்கு தன்னும் இலங்கைத்தமிழருக்கு நாலு நன்மை பெற்றுக்கொடுத்து இருந்தால் இதே சாணக்கியன் உரையாற்றலின் போது அமைதியாக இருந்து வரவேற்பு கொடுத்தது போல் சுமத்திரனுக்கும் மரியாதை கொடுத்து இருக்கும் என்பதை ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள் ?

முன்பே சொல்லியதுபோல் இவ்வளவு குழப்பத்துக்கும் காரணம் சுமத்திரனின் ஆதரவாளர்கள் தான் பிரச்சனை வரும் என்று தெரிந்தும் சுமத்திரனை பேச அழைத்தது யார் தவறு ?

சுமத்திரனை எதிர்பவர்களை ஒன்றுமே தெரியாத படிப்பறிவற்ற முட்டாள்கள் என்று எண்ணி சாதாரண கேள்விகள் ஒன்றுக்கும் விடையளிக்க திராணியற்று போனதால் தான் இவ்வளவு குழப்பமும் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துதானே மக்கள் கேள்வி கேட்க வருகிறார்கள் தமிழர்களுக்கு அரசியல் சேவை செய்ய என்று வந்தவர்கள் அந்த கேள்விகளுக்கு தகுந்த பதில் அளிப்பது சுமத்திரனின் கடமை அல்லவா ?

முதலில் மக்களுக்கு ஜனநாயகத்துக்கு ஏற்றமாதிரி அரசியல்வாதிகள் நடந்து கொள்ளணும் அதைவிட்டு பாதுகாவலர்கள் போலீஸ் அதிகாரிகள் மூலமாக மண்டபத்தை நிரப்பி கொண்டு அரசியல் செய்ய சொறிலங்கா என்று நினைத்து நடந்து கொண்டால் பிரச்சனை வரும்தானே அதன் பிறகு குத்துது குடையுது என்றால் தன்னும் பரவாயில்லை வந்தவர்கள் குண்டர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்று மேலும் மேலும் வெறுப்பை உமிழ்ந்து எண்ணத்தை அடையப்போகிறீர்கள் ? 

நல்ல அரசியல்வாதிக்கு அழகு தன்னை எதிர்க்க வந்தவனையும் தன்னுடைய  ஆதரவாளன் ஆக்குவது .

இங்கு நடப்பது அந்தக்கால இயக்க சண்டைகள் போன்றது பேருக்கு ஜனநாயகத்தை சொல்லி அழுவது ஒரு பேஷன் ஆகிவிட்டது .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

சுமத்திரன்  அரசியலுக்கு வந்து கடந்த பத்து வருடத்தில் பேருக்கு தன்னும் இலங்கைத்தமிழருக்கு நாலு நன்மை பெற்றுக்கொடுத்து இருந்தால் இதே சாணக்கியன் உரையாற்றலின் போது அமைதியாக இருந்து வரவேற்பு கொடுத்தது போல் சுமத்திரனுக்கும் மரியாதை கொடுத்து இருக்கும் என்பதை ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள் ?

முன்பே சொல்லியதுபோல் இவ்வளவு குழப்பத்துக்கும் காரணம் சுமத்திரனின் ஆதரவாளர்கள் தான் பிரச்சனை வரும் என்று தெரிந்தும் சுமத்திரனை பேச அழைத்தது யார் தவறு ?

சுமத்திரனை எதிர்பவர்களை ஒன்றுமே தெரியாத படிப்பறிவற்ற முட்டாள்கள் என்று எண்ணி சாதாரண கேள்விகள் ஒன்றுக்கும் விடையளிக்க திராணியற்று போனதால் தான் இவ்வளவு குழப்பமும் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துதானே மக்கள் கேள்வி கேட்க வருகிறார்கள் தமிழர்களுக்கு அரசியல் சேவை செய்ய என்று வந்தவர்கள் அந்த கேள்விகளுக்கு தகுந்த பதில் அளிப்பது சுமத்திரனின் கடமை அல்லவா ?

முதலில் மக்களுக்கு ஜனநாயகத்துக்கு ஏற்றமாதிரி அரசியல்வாதிகள் நடந்து கொள்ளணும் அதைவிட்டு பாதுகாவலர்கள் போலீஸ் அதிகாரிகள் மூலமாக மண்டபத்தை நிரப்பி கொண்டு அரசியல் செய்ய சொறிலங்கா என்று நினைத்து நடந்து கொண்டால் பிரச்சனை வரும்தானே அதன் பிறகு குத்துது குடையுது என்றால் தன்னும் பரவாயில்லை வந்தவர்கள் குண்டர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்று மேலும் மேலும் வெறுப்பை உமிழ்ந்து எண்ணத்தை அடையப்போகிறீர்கள் ? 

இந்த  கூட்டத்தை குழப்பியதை நீங்கள்  ஏற்றுக்கொள்கிறீர்களா அல்லது கண்டிக்கிறீர்களா ? 

இதற்கு மிகவும் சுருக்கமாக ஏற்றுக்கொள்கிறேன் அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை என  பதிலைக் கூறுங்கள். மிகுதிக்கு பின்னர் வருகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

இந்த  கூட்டத்தை குழப்பியதை நீங்கள்  ஏற்றுக்கொள்கிறீர்களா அல்லது கண்டிக்கிறீர்களா ? 

இதற்கு மிகவும் சுருக்கமாக ஏற்றுக்கொள்கிறேன் அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை என  பதிலைக் கூறுங்கள். மிகுதிக்கு பின்னர் வருகிறேன். 

ஜனநாயகம் ஜனநாயகம் என்று சொல்பவர்கள் முதலில் ஜனநாயகவாதிகள் போன்றா நடந்து கொண்டீர்கள் ?

இதற்க்கு பதிலை  சொல்லுங்கள் உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

மத்திரன்  அரசியலுக்கு வந்து கடந்த பத்து வருடத்தில் பேருக்கு தன்னும் இலங்கைத்தமிழருக்கு நாலு நன்மை பெற்றுக்கொடுத்து இருந்தால் இதே சாணக்கியன் உரையாற்றலின் போது அமைதியாக இருந்து வரவேற்பு கொடுத்தது போல் சுமத்திரனுக்கும் மரியாதை கொடுத்து இருக்கும் என்பதை ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள் ?

2009 க்கு பின் நாடு வந்து மகிந்த கட்சியில் வாக்கு கேட்டவர் அல்லவா சாணாக்ஸ்?

அப்போ வெண்டிருந்தால் இப்போ இவர் மட்டகளப்பின் அங்கயன்?

இப்போதும் முழுக்க முழுக்க சுமந்திரனின் அரசியலை அடி ஒற்றியே நடக்கிறார்.

அப்போ சாணாக்ஸ்சை குழப்பாமல், ஆபிரகாமை மட்டும் குழப்ப ஏதும் விசேட காரணங்கள் இருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nunavilan said:
முன்னாள் யூனியன் கல்லூரி அதிபர்
கதிர் பாலசுந்தரம்:
 
கனடாவில் திரு. சுமந்திரன் உரையாற்றிய கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன். எனது சக்கர முதுகுப் பக்கத்தில் மண்டப பின்சுவர் நீளத்துக்குப் பல பொலிசார்கள் நின்றார்கள். மண்டப பாதுகாவலர்கள் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தனர். திரு. சாணக்கியனை அடுத்து சுமந்திரன் உரையாற்றிக் கொண்டிருந்தார். எதுவித சலசலப்பும் இல்லை. நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது. பேச்சு முடிகிற நேரம்.
சபையின் பின் வரிசையில் இருந்த ஓரூவர் எழுந்து நின்று ஏதோ கேட்டார். எனக்கு விளங்கவில்லை. இருக்கையில் இருந்த சபை முழுவதும் வினா எழப்பியவரை நோக்கியது. அவர் அருகே நின்ற இன்னொருவர் இரு கைகளையும் உயர்த்தி ஏதோ சத்தம் போட்டார். சபை முழுவதும் எழுந்து நின்று மௌனமாய் அவரை நோக்கியது. இன்னும் சிலர் கைகளை உயர்த்தி குரலெழுப்பினர்.
முதுகுச் சட்டையில் ஆங்கிலத்தில் பாதுகாவலர்கள் என்று எழுதியவர்களை நோக்கினேன். அவர்கள் மௌனமாய் நடப்பதை ரசித்துக்கொண்டு நின்றார்கள். பொலிசாரை நோக்கினேன். அழகான கருநீலச் சட்டைப் பொத்தான்களின் ஓளிவீச்சுகள் கண்களைக் கூசச் செய்தன. அவர்கள் அனைவரும் நட்டுவைத்த பாவைகள் போல பேசாமடைந்தைகளாய் காட்சி தந்தனர்.
அதுதான் கனேடிய ஜனநாயக பேச்சுச் சுதந்திரத்தின் பேரழகு. அதில் சில முதிய இளைஞர்கள் நஞ்சு பாய்ச்சுவதைப் பார்த்து இதயம் வலிபொறுக்காமல் ஓவென்றழுதது. இனவாத சிங்களவர்கள் செய்யத் துடிப்பதை இவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள்.

அண்மையில் தேர்தல் காலத்தில் தற்போதைய கனேடிய அரசின் பிரதமர் தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றபோது அவரையே பேசமுடியாதபடி குழப்பினார்கள் ஒரு சில எதிர்ப்பாளர்கள். இந்த நிலைமையில்சு மந்திரன் எல்லாம் எந்த மூலைக்கு... 

என்னை பொறுத்தவரை எதிர்ப்பு காட்டியது தவறாக தெரியவில்லை. பேராசிரியர் பீரிஸ் மாவீரர் தினத்தை நினைவுகூறுவது நல்லிணக்கத்துக்கு முரணானது, சட்ட விரோதமானது என தெரிவிக்கின்றார். இப்படியான நிலையில் சுமந்திரன் வெளிநாட்டில் உள்ள எங்களுக்கு அரசியல் பாடம் எடுத்து என்ன புடுங்க முடியும்?

நாங்கள் என்னதான் ஐக்கிய இலங்கை என சென்றாலும் பெரும்பான்மை சிங்கள எண்ணம் இதய சுத்தியுடன் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

காடைத்தனமான செயலகள் கண்டிக்கபட வேண்டும். 
தலைவர் தன்னுடய விரோதியாக இருந்தாலும் நன்கு உபசரித்து அனுப்புவார்.
அவர்களது கருத்தையும் செவிமடுப்பர்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

நாங்க யாரு..? 

அங்குள்ள  சனத்திற்கு ஏதாவது நன்மை நடைபெறுவது சிலருக்கு விருப்பமில்லை.

😔

கந்தையர்,

உங்களுக்கு சுமந்திரன் மீது பிரச்சனையா அல்லது இலங்கையில் இருக்கும் தமிழர்களுடன் பிரச்சனைய..?

இதே சிந்தனையோட்டத்தின் விளைவாக 2005ல் கிடைத்த மிக அருமையான சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு, இன்று நடுத்தெருவில் நிற்கிறோம். நினைவில் வைத்திருங்கள்.

😔

எதிர்ப்பு காட்டியவர்கள் கொஞ்சம் நாகரீகமாக நடந்து இருக்கலாம். தம்மை ரவுடிகளாக வெளிப்படுத்தி இருக்க தேவை இல்லை. தமிழ்வின் போன்ற சில செய்தி தளங்கள் இதை பிரபலப்படுத்தி மகிழ்வது நீங்கலாக ஒரு தரமான ஊடகம், கனேடிய ஊடகம் போன்றவை இப்படியான சம்பவத்தை ஜனநாயகம், பேச்சு சுதந்திரம், நாகரிகம் போன்றவற்றை மலினப்படுத்தும் சம்பவமாகவே பார்க்கும். இதனால் எதிர்ப்பாளர்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவானவர்கள் உரையாற்றியவர் மட்டும் நல்லவர் எனும் தோற்றப்பாடு ஏற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

2009 க்கு பின் நாடு வந்து மகிந்த கட்சியில் வாக்கு கேட்டவர் அல்லவா சாணாக்ஸ்?

அப்போ வெண்டிருந்தால் இப்போ இவர் மட்டகளப்பின் அங்கயன்?

இப்போதும் முழுக்க முழுக்க சுமந்திரனின் அரசியலை அடி ஒற்றியே நடக்கிறார்.

அப்போ சாணாக்ஸ்சை குழப்பாமல், ஆபிரகாமை மட்டும் குழப்ப ஏதும் விசேட காரணங்கள் இருக்குமா?

காரணம் சிம்பிள் திருவாளர் ஆபிரகாமின் வாயால் வந்த வினை இவ்வளவும் .

சுரேஷ் பிரேமசந்திரனை போட என்று பலர் காத்திருந்தவர்கள் ஆனால் தமிழரின் எதிர்கால நன்மை கருதி அதே சுரேசை கூட்டமைப்புக்குள் அதே காத்திருந்தவர்களால்  மாலை போட்டு வன்னிக்கு அழைத்தது வரலாறு .சாணக்கியர் அடுத்த சுரேஷ் ஆகலாம்தானே ?

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

இந்த இடைவெளியை அதிகரிக்கவும், புலம்பெயர் தமிழர்கள் எல்லாரும் அடிப்படைவாத தலிபான் நிகர் முட்டாபீசுகள் என்பதை நிறுவவும் சிலர் அதி தீவிர தமிழ் தேசியவாதிகள் என்ற போர்வையில் அனுப்பட்டுள்ளனரோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

வோவ்..வோவ் ஹோல்ட் ஒன் கோசான்: முன் யோசனையற்ற தீவிர தமிழ்தேசியர்கள்  முட்டாபீசுகள் தான்! இதை சிங்களவன் "அண்டர்கவர் ஆட்களை" அனுப்பித் தான் தோற்றம் காட்ட வேணுமென்று நீங்கள் சந்தேகித்தால்..உங்களுக்கு யாழில் இவ்வளவு நாளும் கருத்தாடிய பிறகும் விசயம் விளங்கவில்லையோ என நினைக்க வைக்கிறது! 🤔

27 minutes ago, பெருமாள் said:

முதலில் மக்களுக்கு ஜனநாயகத்துக்கு ஏற்றமாதிரி அரசியல்வாதிகள் நடந்து கொள்ளணும் அதைவிட்டு பாதுகாவலர்கள் போலீஸ் அதிகாரிகள் மூலமாக மண்டபத்தை நிரப்பி கொண்டு அரசியல் செய்ய சொறிலங்கா என்று நினைத்து நடந்து கொண்டால் பிரச்சனை வரும்தானே அதன் பிறகு குத்துது குடையுது என்றால் தன்னும் பரவாயில்லை வந்தவர்கள் குண்டர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்று மேலும் மேலும் வெறுப்பை உமிழ்ந்து எண்ணத்தை அடையப்போகிறீர்கள் ? 

வந்தவர்களில் இப்படி நடந்து கொண்டோர் - இங்கேயும் சரி, அவுசிலும் சரி- குண்டர்களே, ரௌடிகளே! படிப்பு இருக்கா இல்லையா என்பது தெரியாது!

இதைச் சுட்டிக் காட்டி அடையப் போவது எதை: இந்த ரௌடிகளை அடுத்த தலைமுறைத் தமிழர்கள் மேல் மூச்சுக் காற்றே படாதவாறு ஒதுக்கி வைக்க வேண்டும்! இவர்களுக்கும் தமிழர் தீர்வுக்கும் தொடர்பேயில்லாமல் செய்ய வேண்டும்! இது மிக முக்கியம்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்த உஷார் மடையர்கள் சுமந்திரனை பேசவிடாமல் செய்தது வெற்றி என்று குதிக்கின்றார்கள். ஆனால் இது ஒன்றுக்கும் உதவாது. 

ஜனநாயக முறையில் எதிர்ப்பைக் காட்டி கேள்விகளைக் கேட்டிருக்கவேண்டும். முக்கியமாக ஒரு தேசிய இனமான தமிழ் மக்கள் இப்போது வெறும் சிறுபான்மைக் குழுவாக அழைக்கப்படுவதை சுமந்திரனும், கூடச் சென்ற அரசியல் சட்ட நிபுணர்களும் ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்டிருக்கவேண்டும். ஆனால் “வீ வோன்ற் ரமிலீலம்” என்பதற்கு அப்பால் எதுவும் தெரியாதவர்கள் சண்டித்தனத்தை மட்டும்தானே காட்டமுடியும்!

ஜனநாயக முறையில் கேள்வி கேட்டிருக்கலாம். சவாகச்சேரியில் கேள்வி கேட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினரை கேள்வி கேட்கவடாமல் உட்காரும் என்ற சோன்வர்தான். அதுமட்டுமல்ல வவுனியாவில் ஊடகவியலாளரை மிரட்டும் வகையில்  அதட்டி அடக்கியவர். மக்கள் தன்னைச்சூழ்ந்து நின்று கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக சிறிலங்காவின் அதிடிரப்படை சூழவர தேர்தல் பிரச்சாரம் செய்தவர்தான் சுமத்திரன். ஆகவே சுமத்திரனிடம் கேள்வி கேட்க விரும்பிபோது பேச்சு முடிந்தபின் கேள்விகளைக் கேட்கச்சொன்னார். எழுத்தில்தருமாறு கோரினார்.எழுத்தில் கேள்விகள் கெடுக்கப்பட்டால்சங்கடமான கேள்விகளைத் தவிர்த்து விட்டுப் பதில் சொல்லியிருப்பார்;அதுமட்டுமன்றி பேச்சு முடிந்ததும் நேரம் காணாது என்று எல்லோருக்கும் அல்வா கொடுத்து விட்டு போயிருப்பார். காலைக்கதிர் வித்தியாதரனை வைத்து கனடாப்பயணம் வெற்றிகரமாக முடிந்தது என்று தலைப்புச் செய்தியும் போடவைப்பார். சுமத்திரனின் இந்த்திருகுதாள சுத்துமாத்துகளை அறிந்த  மக்கள் அவரை கேள்விக்குப் பதில்சொல்லுமாறு வலியுறுத்தினர். இதே நிலையில் கஜேந்திரகுமாரோ அல்லது வேறு எந்த அரசியல்வாதியோ நின்றிருந்தால்  மக்கள் அமைதியாகப் பேச்சைக்கேட்டபின் கேள்விகளைக் கேட்டிருப்பர். நேற்றைய சம்பவத்தில் கூட சாணக்கியனை அமைதியாகப் பேசவிட்ட மக்கள் சுமத்திரனை பேசவிடாமல் தடுத்து கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள் என்றால்சுமத்திரனை மக்கள் நன்கு எடைபோட்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.அது சரி கேள்விகேட்டது  தமிழரசின் மாவை அணியா?சிறதரன் அணியா?அல்லது தமிழ்த்தேசியவாதிகளா?அல்லது எல்லோருமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

😂நான்கு றௌடிகளை  "மக்கள்" என்று நீங்கள் லேபல் போட்டது ஆச்சரியமாக இருக்கிறது! மேலே இன்னொரு செய்தி இணைப்பிலும் "கனடாத் தமிழர் ஆர்ப்பாட்டம்" என்று கொமெடி விட்டிருக்கிறார்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

வந்தவர்களில் இப்படி நடந்து கொண்டோர் - இங்கேயும் சரி, அவுசிலும் சரி- குண்டர்களே, ரௌடிகளே! படிப்பு இருக்கா இல்லையா என்பது தெரியாது!

இதைச் சுட்டிக் காட்டி அடையப் போவது எதை: இந்த ரௌடிகளை அடுத்த தலைமுறைத் தமிழர்கள் மேல் மூச்சுக் காற்றே படாதவாறு ஒதுக்கி வைக்க வேண்டும்! இவர்களுக்கும் தமிழர் தீர்வுக்கும் தொடர்பேயில்லாமல் செய்ய வேண்டும்! இது மிக முக்கியம்!

உங்கள் கருத்துகள்  இன்னும் சுமத்திரனுக்கு எதிரான எதிர்ப்பு  முறையை தூண்டுமே  ஒழிய குறைக்காது .

இங்கு அங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் இங்குள்ளவர்களும் குறைந்தபட்சம் ஒரு லைனில் ஓடணும் ஆனல் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இங்குள்ள புலப்பெயர் மக்களை கோப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாய் இருக்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

காரணம் சிம்பிள் திருவாளர் ஆபிரகாமின் வாயால் வந்த வினை இவ்வளவும் .

சுரேஷ் பிரேமசந்திரனை போட என்று பலர் காத்திருந்தவர்கள் ஆனால் தமிழரின் எதிர்கால நன்மை கருதி அதே சுரேசை கூட்டமைப்புக்குள் அதே காத்திருந்தவர்களால்  மாலை போட்டு வன்னிக்கு அழைத்தது வரலாறு .சாணக்கியர் அடுத்த சுரேஷ் ஆகலாம்தானே ?

இல்லையே பெரும்ஸ்,

ஆபிரகாம் மேச்சல் தரைக்கு போனால் சாணாக்கியனும் போறா.

சாணாக்கியனை மகிந்தவிடம் இருந்து தமிழரசுக்கு கூட்டி வந்தவரும் ஆபிரகாம்.

இருவரும் சேர்ந்துதான் P2P நடத்தினார்கள்.

இப்போ வெளிநாட்டு பயணமும் இருவரும் சேர்ந்தே.

ஆகவே ஆபிரகாம் தமிழர் விரோத/துரோக அரசியல் செய்தால் அதில் தோள் கொடுத்து நிற்பவர் சாணாக்ஸ்.

ஆனால் அவரை மட்டும் ஏன் குறி வைக்க வில்லை.

பிகு

சாணக்கியனும் மதத்தால் கிறிஸ்தவர்தான். ஆனால் பெயரில் வித்தியாசம் இல்லை. எனவே பலருக்கு இது தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

உங்கள் கருத்துகள்  இன்னும் சுமத்திரனுக்கு எதிரான எதிர்ப்பு  முறையை தூண்டுமே  ஒழிய குறைக்காது .

இங்கு அங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் இங்குள்ளவர்களும் குறைந்தபட்சம் ஒரு லைனில் ஓடணும் ஆனல் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இங்குள்ள புலப்பெயர் மக்களை கோப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாய் இருக்கினம் .

ஓம். நிகழ்ச்சி நிரல் கொடுக்கப் பட்டு, பிளான் போட்டு சிங்களவன் தான் எங்களுக்கு ஆப்பு வைக்க வேணும்! ஏனென்றால் எங்களிடம் இருக்கும் புலம்பெயர் கொடிபிடிக்கும் றௌடிகளால் எமக்கு ஒரு பாதகமும் இல்லை! - நம்புகிறேன்!😎

இன்றைக்கு சந்தோசமான நாள் உங்களுக்கோ , எனக்கோ இல்லை! கோத்தா போன்ற ஆட்களுக்கு மட்டும் தான்! இது புரிகிறதா?  

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

நான்கு றௌடிகளை  "மக்கள்" என்று நீங்கள் லேபல் போட்டது ஆச்சரியமாக இருக்கிறது! மேலே இன்னொரு செய்தி இணைப்பிலும் "கனடாத் தமிழர் ஆர்ப்பாட்டம்" என்று கொமெடி விட்டிருக்கிறார்கள்! 

அப்படிப்பார்த்தால் சுமத்திரனின் கூட்டத்திற்கு வந்திருந்தது 2 ஆதவாளர்களா?(மக்களா) கூடுதலான ஆரவாளர்களும் குறைந்தளவு உங்கள் கருத்தின்படியான ரவுடிகளும் என்றால்  பாதுகாலர்கள் இருந்த சூழலில் கூட்டம் குழப்பட்டிருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

சாணக்கியனும் மதத்தால் கிறிஸ்தவர்தான். ஆனால் பெயரில் வித்தியாசம் இல்லை. எனவே பலருக்கு இது தெரியாது. 

சாணக்கியர் கிறிஸ்துவம் என்பது பலருக்கும் தெரியும் பாஸ்  உங்களுக்கு நேரம் கிடைத்துவிட்டது போல் உள்ளது இன்று சண்டே இன்றும் வீட்டுக்குள் நில்லாமல் மொனிற்ரருக்குள் தலையை ஒட்டிக்கொன்று நிக்க முடியாது இந்த திரி ஆக்டொபஸ்  போல் பலப்பக்கமும்  பாய்ந்து பற்றிக்கொண்டு போகும் வாழ்த்துக்கள் மூன்றுகால் காரர்களுக்கும் நான்கு கால்காரர்களுக்கும் உங்களுக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

வோவ்..வோவ் ஹோல்ட் ஒன் கோசான்: முன் யோசனையற்ற தீவிர தமிழ்தேசியர்கள்  முட்டாபீசுகள் தான்! இதை சிங்களவன் "அண்டர்கவர் ஆட்களை" அனுப்பித் தான் தோற்றம் காட்ட வேணுமென்று நீங்கள் சந்தேகித்தால்..உங்களுக்கு யாழில் இவ்வளவு நாளும் கருத்தாடிய பிறகும் விசயம் விளங்கவில்லையோ என நினைக்க வைக்கிறது! 🤔

கொஞ்சம் உசார் மடையர்கள்தான். ஆனால் மனதால் இனத்துக்கு தீங்கு எண்ணாதவர்கள். 

👇இதை கூட விளங்கி கொள்ளமுடியாதவர்களா? ஆகவேதான் சில agent provocateurs இவற்றை தூண்டி விடுகிறார்களோ என எண்ணுகிறேன்.

5 minutes ago, Justin said:

இன்றைக்கு சந்தோசமான நாள் உங்களுக்கோ , எனக்கோ இல்லை! கோத்தா போன்ற ஆட்களுக்கு மட்டும் தான்! இது புரிகிறதா?  

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புலவர் said:

அப்படிப்பார்த்தால் சுமத்திரனின் கூட்டத்திற்கு வந்திருந்தது 2 ஆதவாளர்களா?(மக்களா) கூடுதலான ஆரவாளர்களும் குறைந்தளவு உங்கள் கருத்தின்படியான ரவுடிகளும் என்றால்  பாதுகாலர்கள் இருந்த சூழலில் கூட்டம் குழப்பட்டிருக்காது.

வீடியோக்களைப் பார்த்தாலே இது தெரியவில்லையா?  அவுசில் றௌடிகளின் அட்டகாசம், பிரான்சில் மாவையின் கூட்டத்தில் புகைக்குண்டு வீச்சு, இவற்றின் பிறகு தான் பாதுகாப்பு வைத்துக் கூட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையால், பல ஆர்வமுள்ள மக்களும் போவதைக் குறைத்துக் கொண்டனர். எஞ்சியிருப்பது சில ஆதரவாளர்களும், சில றௌடிகளும்! 

அப்ப றௌடிகள் கனடாத் தமிழர் என்பது கொமெடி தானே?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

சாணக்கியர் கிறிஸ்துவம் என்பது பலருக்கும் தெரியும் பாஸ்  உங்களுக்கு நேரம் கிடைத்துவிட்டது போல் உள்ளது இன்று சண்டே இன்றும் வீட்டுக்குள் நில்லாமல் மொனிற்ரருக்குள் தலையை ஒட்டிக்கொன்று நிக்க முடியாது இந்த திரி ஆக்டொபஸ்  போல் பலப்பக்கமும்  பாய்ந்து பற்றிக்கொண்டு போகும் வாழ்த்துக்கள் மூன்றுகால் காரர்களுக்கும் நான்கு கால்காரர்களுக்கும் உங்களுக்கும் .

சந்திப்பம் பாஸ்.

சாணாக்கியனின் உறவுகள் சிலரை எனக்கு நெடுநாள் கொண்டு தெரியும். ஆகவே அவர்கள் மதம் எனக்கு இப்போ தெரிந்த விடயம் அல்ல. ஆனால் பெயரில் கிறிஸ்தவ சேர்க்கை இல்லாததால், சுமந்திரன் செய்யும் அதே அரசியலை செய்யும் அவர் குறிவைக்க படுவதில்லையோ என்பது என் சந்தேகம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.