Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் சமச்சீர் அற்ற நீதி - ராஜ் ராஜரத்தினம் கைதும், தமிழீழ நடைமுறை அரசின் அழிவும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் சமச்சீர் அற்ற நீதி

December 11, 2021
 
ராஜரத்தினம் அமெரிக்காவின் சமச்சீர் அற்ற நீதி

ராஜ் ராஜரத்தினம் எழுதியிருக்கும் Uneven Justice: The Plot to Sink Galleon என்ற நூல் உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளறி விட்டிருக்கிறது.

ராஜ் ராஜரத்தினம் யார்? அவருக்கும் தமிழீழ நடைமுறை அரசிற்குமான தொடர்பு என்ன? என்பதை கீழே இணைத்துள்ள பதிவில் இதுவரை வாசிக்காதவர்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளலாம்.

நூலில் அவர் இது குறித்து எதுவும் எழுதவில்லை என்பதை நூல் மதிப்புரைகளினூடாக அறிய முடிகிறது. அதைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது. அதைப் பேசி அவர் மீண்டும் சிறை செல்ல முடியாதல்லவா!

ஆனால் அவர் காலத்தின் பின்னாவது இந்த சதி வலையமைப்புக் குறித்து வெளி வரும் என்று நம்புவோம்.

ராஜ் ராஜரத்தினம் கைதும், தமிழீழ நடைமுறை அரசின் அழிவும்!

அமெரிக்க பங்குச்சந்தை அதிபர் ராஜ் ராஜரத்தினம் நீண்ட கால சிறைவாசத்தை அடுத்து சில நாட்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கா தமிழீழ நடைமுறை அரசை அழிக்க எடுத்த ஒரு முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றுதான் ராஜ் ராஜரத்தினத்தை ஊழல் குற்றவாளியாக்கியமை.

தமிழின அழிப்பு திடீரென்று நடந்த நிகழ்வு அல்ல. அது 2001 இலிருந்து படிப்படியாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட பல நிகழ்வுகளின் கூட்டு விளைவு.

எமது கண்ணுக்கு தெரிந்த நிகழ்வுகள் மட்டுமல்ல எமது அறிவுக்கு புலப்படாத பல விடயங்களும் அதன் பின்னணியில் இருந்ததை நாம் பிற்பாடுதான் அறிய முடிந்தது.

புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக தமிழர் சேனைகளை அழிப்பதனூடாக தமிழீழ நடைமுறை அரசை அழித்தொழிக்கும் நயவஞ்சக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இணைத்தலைமை நாடுகள் – குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா சிங்களத்துடன் இணைந்து வரைந்த திட்டம்தான் புரொஜெக்ட் பெக்கன்.( Project Beacon)

புலத்தில் தமிழ்த்தேசிய செயற்பாடுகளை முடக்குதல், புலிகளின் அனைத்துலக ஆயுத மற்றும் அரசியல் கட்டமைப்புக்களை உடைத்தல், தாயகத்தில் புலிகளை மக்களிடம் இருந்து வேறுபடுத்துதல், இறுதியாக புலிகளை படைத்துறை ரீதியாக அழித்தொழிப்பு செய்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தமிழர் தேசத்திற்கு எதிரான அனைத்துலக நகர்வின் தாக்குதல் திட்டத்தின் பெயர்தான் ” புரொஜக்ட பெக்கன்”

எங்கேயோ அமெரிக்காவில் இருந்த ராஜ் ராஜரத்தினம் என்ற பங்கு சந்தை தொழிலதிபர் திடீரென்று ஊழல் வழக்கில் அமெரிக்காவில் FBI ஆல் குற்றவாளியாக்கப்படுகிறார். விடயம் தெரியாதவர்களுக்கு இது ஒரு சாதாரண விடயம்.
ஆனால் நாம் மொத்தமாக அழித்தொழிக்கப்படப் போகிறோம் என்பதை கட்டியம் கூறிய நிகழ்வு இது.
இது புராஜெக்ட் பெக்கானின் ஒரு பகுதி.

இதன் ஆழ அகலம் தெரியாத யாராலும் இது என்றுமே புரியப்படாது. அதை இங்கு விளக்க இடமும் காணாது. நாள் முழுக்க இருந்து எழுதினாலும் எழுதித் தீராத அரசியல் அது.

புலிகளின் பெரும் பகுதி பணம் இவரது பங்குச் சந்தையினூடாகவே தமிழீழ நடைமுறை அரசின் சுழற்சிக்குட்பட்டிருந்தது.

விளைவு தமிழின அழிப்பிற்கான நேரம் வந்த போது இவர் குற்றவாளியாக்கப்பட்டார்.

எனவே இலங்கை/ இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் ‘தீர்ப்பு’ களின் – ‘நீதி’ களின் பின்னணியில் மிகப் பெரிய அரசியல் இருக்கின்றன. – அதுவும் “உலக” அரசியல்.

புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் புலிகள் மேற்குலகத்திற்கு அடிபணிந்து போயிருந்தால் ராஜ் ராஜரத்தினம் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருக்க மாட்டார்.
யோசிக்கத் தலை கிறுகிறுக்கும் தியரி இது.

வண்ணத்துப்பூச்சி விளைவு போன்ற பல நுண்ணதிர்வுகள் தமிழின அழிப்பில் கடந்து சென்றதை இப்போது புரிந்து கொள்ளலாம்.

ஆனால் இது எதுவும் தெரியாமல் புலிகளையே குற்றவாளிகளாக முன்னிறுத்தும் அற்பர்களால் நிரம்பி வழிகிறது தமிழ் அரசியல் பரப்பு.

தலைவர் போராடும் தேசிய இனங்கள் சார்ந்து எத்தகைய ஒரு பகடையாட்டத்தை ஆடினார் என்பதும்/ அவர் ஏன் நந்திக்கடல் நோக்கி நகர்ந்தார் என்பதற்குமான வரலாற்று சான்றுகள் இவை.

சிலரின் சந்தேகத்திற்காக இந்த பின்னிணைப்பு.

ராஜ் ராஜரத்தினம் உத்தியோகபூர்வமாகக் கைது செய்யப்பட்டது ஒக்டோபர் 2009.
ஆனால் அவரது நிறுவனத்தையும் அவரையும் குற்றவாளிகள் என எப்பிஐ விசாரணையை முடுக்கிவிட்டு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து முடக்கியது 2006 இல். நீண்ட விசாரணையின் பின் 2009 இல் கைது செய்தார்கள்.

ராஜ் ராஜரத்தினத்தின் பங்குச் சந்தை தமிழீழ நடைமுறை அரசின் நிதி சுழற்சிக்கான ஒரு குறிப்பிடத்தக்க மையமாக இருந்த போதும் அது வெளிப்படையான ஒன்றல்ல.

ஆனால் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகி புலிகள் உள்ளக/ வெளியக அனைத்து நிகழ்ச்சி நிரலையும் நுட்பமாக ஊடறுத்து தமிழீழ நடைமுறை அரசை அங்கீகரிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை தோற்றுவிக்க முயன்றார்கள்.

அதன் ஒரு கட்டமாக 2004 இல் சுனாமி மீள் கட்டுமான நிதியை ராஜ் ராஜரத்தினத்திடமிருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கினூடாக பெற்றுக் கொண்டார்கள். தொடர்ந்து 2005 /2006 இலும் அமெரிக்காவில் பதிவு பெற்ற ராஜ் ராஜரத்தினத்தின் வங்கிக் கணக்கிலிருந்து பல மில்லியன் டொலர்கள் தமிழீழ நடைமுறை அரசின் ஒரு அங்கமான தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்கிற்கு வந்து சேர்ந்தன.

இது புராஜெக்ட் பெக்கான் கூட்டணிக்கு – குறிப்பாக அமெரிக்காவிற்குப் பேரதிர்ச்சி.

ஏனென்றால் சுனாமி கட்டுமான நிதிக்கான உதவி வழங்கலுக்காக ஒரு மாநாடு அப்போது அமெரிக்காவில் நடந்த போது புலிகளின் நடைமுறை அரசிற்கு அங்கீகாரம் வழங்குவது போல் ஆகிவிடும் என்பதற்காக புலிகளுக்கு விசா வழங்க மறுத்திருந்தது அமெரிக்கா.

இதுவே புரிந்துணர்வு உடன்படிக்கையில் புலிகளின் சம தரப்பு அங்கீகாரத்தைக் குலைத்த முதல் சம்பவம்.

அமெரிக்கா இவ்வளவு நுட்பமாகக் காய் நகர்த்திய போதும் புலிகள் அதை முறியடித்து அமெரிக்காவில் பதிவு பெற்ற வங்கிக் கணக்கினூடாக உத்தியோகபூர்வமாக நிதியைக் கையாளத் தொடங்கிய போது ராஜ் ராஜரத்தினம் இலக்கு வைக்கப்பட்டு குற்றவாளியாக்கப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டது 2009 இலேயே ஒழிய அவர் 2006 இலேயே குற்றவாளியாக இனங் காணப்பட்டு விசாரணை வளையத்திற்குள் வந்து விட்டார்.

எழுதித் தீராத கதைகள் இவை.

இதை இன்னும் அழுத்தமாகப் புரிந்து கொள்ள புலிகள் மீதான மேற்குலகின் தடை சிறந்த ஒரு உதாரணம்.

புலிகள் இலங்கையின் அரச தலைவர்களைப் படுகொலை செய்ததாகக் சிங்களம் குற்றம் சுமத்திய போதோ/ ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததாக இந்தியா குற்றம் சுமத்திப் புலிகளை தடை செய்த போதோ மேற்குலகம் புலிகளைத் தடை செய்யவும் இல்லை, யாரையும் கைது செய்யவும் இல்லை.

ஆனால் ஒரு சமாதான காலத்தில் புலிகளைத் தடை செய்த மேற்குலகம் ஒரு நாடு மிச்சமில்லாமல் புலிகளின் பிரதிநிதிகளை (தமிழர் ஒருங்கிணைப்புக் குழு) தொடர்ச்சியாக கைது செய்து சிறையில் தள்ளினார்கள்.

தமிழீழ நடைமுறை அரசை அழித்தொழிக்கும் புராஜெக்ட் பெக்கானின் மிக முக்கியமான நடவடிக்கை இது.

இவையெல்லாம் வேலுப்பிள்ளை பிரபாகரனை மண்டியிட வைக்கும் என்று அவர்கள் நம்பினார்கள்.

ஒரு விடுதலைப் போராட்டத்தை/ ஒரு தேசிய இனத்தின் இறைமையை தமது நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்க வைத்து அடிபணிய வைப்பதனூடாக ஒரு புதிய வரைபடத்தை வரைய முயன்ற உலக பயங்கரவாதத்தின் சதியை உணர்ந்து, அடி பணிய மறுத்து அவர் வேறு ஒரு வரைபடத்தை வரைந்தார்.

அதுதான் போராடும் தேசிய இனங்களின் வருகையை எதிர்பார்த்து நந்திக்கடலில் காத்துக் கிடக்கிறது.

பரணி கிருஷ்ணரஜனி

https://www.ilakku.org/the-unbalanced-justice-of-america/

மக்களின் காதில பூவைக்கும் இந்த காதிலபூ கந்தசாமி யாரப்பா?  

இப்படியே மூட்டை மூட்டையா  பொய்களை அவிழ்தது விடுவதே ஒரு பொழுது போக்கா போச்சு அல்லது இது தான் பொழைப்போ?  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

மக்களின் காதில பூவைக்கும் இந்த காதிலபூ கந்தசாமி யாரப்பா?  

இப்படியே மூட்டை மூட்டையா  பொய்களை அவிழ்தது விடுவதே ஒரு பொழுது போக்கா போச்சு அல்லது இது தான் பொழைப்போ?  

தேள் வடிவ தாக்குதலாளிகளின் எச்சத்தில்  ஒன்று சில உண்மைகளையும் பொய்கலையும்  கலந்து பூ வைத்து இருக்கிறார்.

Project Beacon எனும்பெயர் இவருக்கு மட்டும் சொல்லப்பட்டு இருக்குது போல் இல்லை நமக்குத்தான் மறதி வியாதி பிடித்துவிட்டதோ ? எல்லாம் நாசமறுந்த தற்கொலைபெட்டியை படித்ததில் இருந்து வயதாகி போனது போல் உணர்வு .🤣

  • கருத்துக்கள உறவுகள்+
29 minutes ago, பெருமாள் said:

ம்ம்ம்...

மேற்கண்ட கட்டுரையில் உள்ளது உண்மையா பொய்யா? யாரேனும் தெளிவுபடுத்துவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

சமஸ்ரி முறையை ஏற்றிருந்தால் இன்று தமிழினத்தின்/வடக்கு கிழக்கின்/இலங்கையின் நிலை எப்படி இருந்திருக்கும் ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

சமஸ்ரி முறையை ஏற்றிருந்தால் இன்று தமிழினத்தின்/வடக்கு கிழக்கின்/இலங்கையின் நிலை எப்படி இருந்திருக்கும் ? 

ஒரே கலவரமாய் இருந்திருக்கும் அந்த பெரிய  மனிதனை இப்பவே இப்படி கிழிப்பவர்கள் என்ன ஆட்டம் போட்டு இருப்பார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

ஒரே கலவரமாய் இருந்திருக்கும் அந்த பெரிய  மனிதனை இப்பவே இப்படி கிழிப்பவர்கள் என்ன ஆட்டம் போட்டு இருப்பார்கள் .

கொஞ்சம் நிதானமாக யோசிப்போமே..?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரை எப்படியோ தெரியவில்லை.

பாதி தெரிந்தவர்களால் புனையப்பட்டிருக்கலாம்.

ஆனாலும் எமது உண்மையான தோல்வி 2006 இலேயே தொடங்கிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இது புளுகோ சோடிப்போ கிடையாது. அமெரிக்காவினதும் மேற்குலகினதும் நடவடிக்கைகளை 1998 இல் இருந்து அவதானித்து வந்தால் புரிந்திருக்கும்.

ஆனையிறவு வீழ்ச்சியை தொடந்து யாழ் குடா மீள் வீழ்ச்சிக்கு உட்படும் நிலை இருந்த போது.. அதனை தடுக்க.. பி 52 ஐ அனுப்பிய அமெரிக்காவுக்கு வழிவிட்ட அண்டை நாடு.. 2009 இல் என்ன செய்தது என்பதையும் அறிவார்கள் மக்கள்.

அமெரிக்காவின் நகர்வுகள்.. தமிழீழ நிழல் அரசை மட்டுமல்ல.. தமிழீழ விடுதலைப் புலிகள் வெற்றிகர போர் வடிவங்களை அழிப்பதிலும் குறியாக இருந்தது. 

ஆனால்.. ஒரு சிறு தீவுக்குள் இருந்த.. புலிகளை அழித்தாலும் அமெரிக்கா.. ஆப்கானித்தான் உள்ளிட்ட வேறு தளங்களில் படுதோல்வியையே சந்தித்துள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

எங்களுக்கு கிடைத்தது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

எங்களுக்கு கிடைத்தது என்ன?

உதென்ன கப்பித்தான் இப்பிடி கேட்டிட்டியள்? 

எங்களுக்கு இந்த பொன்னான அரசியல்-இராணுவ சர்வதேச ஆய்வாளர் நெடுக்காலபோவான் கிடைத்ததே உந்த அமெரிக்காவை 90களில் இருந்து அவர் ஆய்வு செய்த காரணத்தால் தானே? எத்தனை விடுதலைப்போராட்டங்களையும் இந்த வரப்பிரசாதத்துக்காக காவுகொடுக்கலாம் கண்டியளோ?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அமைப்பு பயங்கரவாத பட்டியலுக்குள் கொண்டு வரப்பட்டது 1997.
ராஜரத்தினம் பங்கு வர்த்தகத்தில் மோசடியிலீடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பட்டது 2011.
ஏற்கனவே அமெரிக்காவில் தடையிலிருக்கும் ஒரு அமைப்புக்கு நிதி ஆதாரமாக செயற்பட்டார் என்பதற்காகதான் ராரத்தினம் கைது செய்யப்பட்டிருந்தால் அதை பகிரங்கமாக அறிவிக்க அமெரிக்கா  ஒரு போதும் தயங்கியிருக்காது.

தனக்கு தேவையில்லையென்று கருதும் தன்னால் முடக்கப்பட்ட தீவிரவாத அமைப்புக்களின் நிதி தொடர்பாடல் ஆயுத கடத்தல்  அமைப்பு விடயங்களை அது பகிரங்கமாகவே அறிவித்து வந்துள்ளது.

புலிகள் அழிவிற்கும் எம் போராட்டத்தின் முடக்கத்திற்கும் பலரும் பலவேறு காரணங்களை பர பரப்பிற்காக அப்பப்போ எடுத்தியம்பிக்கொண்டே வந்துள்ளார்கள் அவர்கள் வரிசையில் இவர்களும் ஒன்று என்று எடுத்துக்கொண்டு போக வேண்டியதுதான்.

புலிகள் சம்பந்தமான நிதி நடவடிக்கைகளின் பின்னணியில் இருந்தவர்கள் விபரம் புலிகள் அமைப்பிலிருந்த பல தளபதிகளுக்குகூட தெரியாது அப்படியிருக்கும்போது ராஜரத்தினம் இந்தளவு தூரம் அதுவும் அமெரிக்காவில் தடையிலிருக்கும் போதே அமெரிக்காவிலிருந்தபடி புலிகளுக்கு நிதி பங்காற்றினார் என்பதை எங்கிருந்து கட்டுரையாளர் அறிந்தார்?

ராஜரத்தினம் முடக்கப்பட்டால் தமிழீழ ஒட்டுமொத்த போராட்டமும் முடக்கப்படும் நிலைக்குவர புலிகள் அமைப்பு சர்வதேச ரீதியில் ஓரிருவரில் தங்கியிருந்த அமைப்பு அல்ல.

எனக்கென்னமோ தமது ஆய்வு திறமைகளை காண்பிக்க வெளியில வந்த ராஜரத்தினத்தை தேவையற்ற சிக்கல்களில் மாட்டி மீண்டும் உள்ளே அனுப்பதான் இதுபோன்ற கட்டுரையாளர்கள் முயற்சிக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

ஊடகங்கள் என்று  ஆரம்பித்துவிட்டால் அதை பலர் பார்க்கவேண்டும் அதற்கு பரபரப்பு வேண்டும் நியாயம்தான்,  அதற்காக எவர் தலையையும் உருட்டி பரபரப்பு தேடகூடாது அது ஒருவகையான படுகொலைக்கு சமம்.

Edited by valavan
ஒருவரி சேர்ப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

எங்களுக்கு கிடைத்தது என்ன?

அமெரிக்காவை நம்பி நந்திக்கடலுக்கு மாண்டது தான். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

ம்ம்ம்...

மேற்கண்ட கட்டுரையில் உள்ளது உண்மையா பொய்யா? யாரேனும் தெளிவுபடுத்துவீர்களா?

1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்தக் கட்டுரை எப்படியோ தெரியவில்லை.

பாதி தெரிந்தவர்களால் புனையப்பட்டிருக்கலாம்.

ஆனாலும் எமது உண்மையான தோல்வி 2006 இலேயே தொடங்கிவிட்டது.

கட்டுரையில் கூறப்பட்டது போல் 2006க்குள் விசாரணை வலையத்துக்குள் வந்தவர் ஆனால் தமிழர் புனர்வாழ்வு கழகத்துக்கு பணம் கண்ணிவெடி அகற்றும் நாய்களுக்கு பயிற்சி எனும் முறையில் கொடுக்கப்படும்போது அந்த நிறுவனம் தடைபட்டியலில் இருக்கவில்லை .2004ல் சுனாமியின்போதும் உதவியிருந்தார் சிங்களவருக்க்கும் சேர்த்தே உதவினார் .

2006க்கு விசாரணை வளையத்துக்குள் போன நேரம் சட்ட ரீதியாக அவரின் மீது அல்லது அவரின் நிறுவனம் மீது எதுவும் செய்ய முடியவில்லை  ராஜ் மனைவி ஆசா பப்லு இந்தியா பஞ்சாபி  இவரின் நண்பி என்று உள்ளே புகுந்த பெண்ணே முக்கிய சாட்சி  படம் கீழே 

Roomy Khan was sentenced to a year in prison for insider trading.

இந்தியா டெல்லி பெண் 2007ல் ரெட்ணத்தின்  அனைத்து போன் கோல்களும் கான் மூலம் வேலையிடத்து போகும் வரும் அனைத்து தரவுகளையும் FBI யால்  டப்  செய்யப்பட்டன முக்கிய அரச சாட்சியாக கான் இருந்தவர் ஆனாலும் பேருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை ரெட்ணத்தின்  நிறுவனத்தில் வேலை காரணமாகவாம் ஆனால் உலகிலே உள் வீட்டு வர்த்தகத்துக்கு நீண்டகால தண்டனை இந்த வழக்கில்தான் ...........................................மேல் உள்ள செய்திகளை கோர்வை படுத்தி பார்க்கவும் https://qz.com/india/354179/the-indian-woman-who-helped-crack-wall-streets-biggest-insider-trading-case-is-applying-to-business-school/

பக்கத்தில் உள்ள கனவு வல்லரசின் உண்மைமுகம் வெளியில் வரும் .

ஒரு பெண்ணால் உள்ளே போனவர் இன்னுமொரு பெண்ணால் Kim Kardashian மூலம் தண்டனை காலத்துக்கு முன்பே வெளியில்வர பரிந்துரைக்கப்பட்டார் https://www.forbes.com/sites/lisettevoytko/2019/09/10/how-kim-kardashian-helped-get-ex-billionaire-raj-rajaratnam-out-of-jail/?sh=46aedffc7a5f

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, valavan said:

புலிகள் சம்பந்தமான நிதி நடவடிக்கைகளின் பின்னணியில் இருந்தவர்கள் விபரம் புலிகள் அமைப்பிலிருந்த பல தளபதிகளுக்குகூட தெரியாது அப்படியிருக்கும்போது ராஜரத்தினம் இந்தளவு தூரம் அதுவும் அமெரிக்காவில் தடையிலிருக்கும் போதே அமெரிக்காவிலிருந்தபடி புலிகளுக்கு நிதி பங்காற்றினார் என்பதை எங்கிருந்து கட்டுரையாளர் அறிந்தார்?

சுனாமியின் போது புனர்வாழ்வு கழகத்தினூடாக ஒரு மில்லியன் டாலர்(தொகை சரியாக நினைவில்லை) வழங்கியிருந்தார்.

இதைவைத்தே இப்போ சும்மா இருப்பவரை கோர்த்துவிட துடிக்கிறார்கள் போல இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, valavan said:

புலிகள் சம்பந்தமான நிதி நடவடிக்கைகளின் பின்னணியில் இருந்தவர்கள் விபரம் புலிகள் அமைப்பிலிருந்த பல தளபதிகளுக்குகூட தெரியாது அப்படியிருக்கும்போது ராஜரத்தினம் இந்தளவு தூரம் அதுவும் அமெரிக்காவில் தடையிலிருக்கும் போதே அமெரிக்காவிலிருந்தபடி புலிகளுக்கு நிதி பங்காற்றினார் என்பதை எங்கிருந்து கட்டுரையாளர் அறிந்தார்?

புலிகள் தளபதிகளுக்கு எல்லாம் நிதிச் செயற்பாடு குறித்து அறிவிப்புச் செய்து கொண்டிருப்பதில்லை.

ராஜரத்தினம்.. தமிழீழ மக்களுக்கான நிதியை நிர்வகிப்பதில் ஈடுபட்டிருப்பார்.. குறிப்பாக முதலீடுகளில் நிதியை வைப்பதில். அவரின் செயற்பாடு அமெரிக்காவுக்குள் மட்டுப்பட்டிருந்தது என்பது அவரைப் பற்றி அறிந்தவர்கள் நம்பக் கூடிய விடயமல்ல. அமெரிக்கா பின்லேடனின் காசையும் தான் வரவேற்றிருந்தது ஒரு காலத்தில். இப்போது கூட பின்லேடனின் குடும்பத்தினர் அமெரிக்காவில் பலவகை முதலீடுகளை செய்தே உள்ளனர். இதனை எல்லாம் அமெரிக்கா பகிரங்கமாக ஒப்புக்கொள்ளுமாக்கும்..??!

அமெரிக்காவை ஏதோ பால்குடி பபா கணக்கில் எண்ணக் கூடாது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

இந்தியா டெல்லி பெண் 2007ல் ரெட்ணத்தின்  அனைத்து போன் கோல்களும் கான் மூலம் வேலையிடத்து போகும் வரும் அனைத்து தரவுகளையும் FBI யால்  டப்  செய்யப்பட்டன முக்கிய அரச சாட்சியாக கான் இருந்தவர் ஆனாலும் பேருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை ரெட்ணத்தின்  நிறுவனத்தில் வேலை காரணமாகவாம் ஆனால் உலகிலே உள் வீட்டு வர்த்தகத்துக்கு நீண்டகால தண்டனை இந்த வழக்கில்தான்

இவரைவிட உள்வீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு பிடிபட்டவர்கள் குறைந்த தண்டனைகளுடன் வெளியே வர இவருக்கு மாத்திரம் மிகவும் கூடுதலான தண்டனை.

இவரும்சரி இவரின் தகப்பனாரும் சரி தமிழ்தேசியத்துக்கு மிகவும் ஆதரவானவர்கள்.

இவரின் தகப்பனாருடன் 2-3 தடவைகள் பயணித்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

ம்ம்ம்...

மேற்கண்ட கட்டுரையில் உள்ளது உண்மையா பொய்யா? யாரேனும் தெளிவுபடுத்துவீர்களா?

20% உண்மை மீதி பொய் என்பது என் அனுமானம்.

ராஜ் புலிகளுக்கு உதவியதும். கொழும்பில் பல முதலீடுகளை வேறு பெயர்களில் செய்து  , தேவை பட்டால் அவற்றை ஒரேயடியாக கைகழுவி இலங்கைக்கு யுத்தத்தில் பொறுத்த நேரத்தில் மீள முடியா பொருளாதார நெருக்கடியை கொடுக்க அவர் மூலம் ஒரு திட்டம் இருந்தது எனவும் அறிகிறேன்.

இதை அறிந்து அமெரிக்கா அவரை வழைத்திருக்கலாம். 

அதற்காக அவர் insider trading செய்யவே இல்லை. முற்று முழு நிரபராதி என்பது எந்தளவு உண்மை என்பதும் கேள்வி குறியே. ஆனால் அவர் அவரை சூழ இருந்த ஏனை ஆசியர்களால்தான் அதிகம் காட்டி கொடுக்கப்படார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஆனால் அவர் அவரை சூழ இருந்த ஏனை ஆசியர்களால்தான் அதிகம் காட்டி கொடுக்கப்படார்.

இந்திய பெண்மணி என்று நேரடியாக சொல்லுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் புலிகள் மேற்குலகத்திற்கு அடிபணிந்து போயிருந்தால் ராஜ் ராஜரத்தினம் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருக்க மாட்டார்.
யோசிக்கத் தலை கிறுகிறுக்கும் தியரி இது.

இந்த சின்ன விசயம் இத்தனை ஆண்டுக்கு பிறகும் ஏன் தலையை கிறுகிறுக்க வைக்கிறது எண்டுதான் புரியவில்லை.

ராஜ் மட்டும் இல்லை இன்னும் பலதும் இழக்கப்பட்டிருக்காது.

அஞ்சுவதற்கு மட்டும் அல்ல அடங்குவதற்கு அடங்காமையும் பேதமையே.

இனி கதைச்சு ஒரு பலனுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அடங்காமையும் பேதமையே.

அடங்கி இருந்தால் என்ன நடந்து இருக்கும் என்னுள் இருக்கும் பாரிய கேள்வி ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்திய பெண்மணி என்று நேரடியாக சொல்லுங்க.

அவர் உள்ளே இருக்கும் போது ஒரு பேட்டி அதில் இவரையும் இன்னும் பலரையும் காட்டி இருந்தார்.

யுகேயின் அதி உயர் பள்ளியான டலிச் கல்லூரியில் படித்தார். இவர் தங்கி இருந்த ஹாஸ்டல் அறை கூட பெரும் புள்ளிகள் முன்னர் இருந்த அறை.

வாழ்க்கை விசித்திரமானது என்பது உண்மைதான்.

Just now, பெருமாள் said:

அடங்கி இருந்தால் என்ன நடந்து இருக்கும் என்னுள் இருக்கும் பாரிய கேள்வி ?

என்னிடமும் எதிர்காலத்தை கணிக்கும் crystal ball இல்லை. ஆனால் நிலமை இப்போ இருப்பதை விட பலமடங்கு நன்றாக இருந்திருக்கும் (நாம் அடங்கும் படலத்தை ராஜதந்திரமாக கையாண்டிருந்தால்) என்பது என் எண்ணம்.

பாலா அண்ணையின் எண்ணமும் இதுவாகவே இருந்ததாக அறிகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

என்னிடமும் எதிர்காலத்தை கணிக்கும் crystal ball இல்லை. ஆனால் நிலமை இப்போ இருப்பதை விட பலமடங்கு நன்றாக இருந்திருக்கும் (நாம் அடங்கும் படலத்தை ராஜதந்திரமாக கையாண்டிருந்தால்) என்பது என் எண்ணம்.

பாலா அண்ணையின் எண்ணமும் இதுவாகவே இருந்ததாக அறிகிறேன்.

முன்பு ஒரு திரியிலும்  இதே கேள்விக்கு சுருக்கமா ஒரே கலவரமாய் இருக்கும் என்று பதில் போட்டு இருந்தேன் காரணம் இந்தியா எனும் நாடு இருக்கும்வரை இலங்கையை அமைதியாக இருக்க விடமாட்டார்கள் காரணம் தமிழ்நாடு வருடமொன்றுக்கு 5000ஆயிரம் கோடிக்கு மேல் மத்திய அரசுக்கு அள்ளிக்கொடுக்கும் தங்கவாத்து பறிபோகக்கூடாது எனும் நோக்கம்  அதுவும் gst எனும் வரி விதிப்புக்கு முன்னரான தரவு  என்றால் பார்த்துகொள்ளுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்+
37 minutes ago, பெருமாள் said:

கட்டுரையில் கூறப்பட்டது போல் 2006க்குள் விசாரணை வலையத்துக்குள் வந்தவர் ஆனால் தமிழர் புனர்வாழ்வு கழகத்துக்கு பணம் கண்ணிவெடி அகற்றும் நாய்களுக்கு பயிற்சி எனும் முறையில் கொடுக்கப்படும்போது அந்த நிறுவனம் தடைபட்டியலில் இருக்கவில்லை .2004ல் சுனாமியின்போதும் உதவியிருந்தார் சிங்களவருக்க்கும் சேர்த்தே உதவினார் .

2006க்கு விசாரணை வளையத்துக்குள் போன நேரம் சட்ட ரீதியாக அவரின் மீது அல்லது அவரின் நிறுவனம் மீது எதுவும் செய்ய முடியவில்லை  ராஜ் மனைவி ஆசா பப்லு இந்தியா பஞ்சாபி  இவரின் நண்பி என்று உள்ளே புகுந்த பெண்ணே முக்கிய சாட்சி  படம் கீழே 

Roomy Khan was sentenced to a year in prison for insider trading.

இந்தியா டெல்லி பெண் 2007ல் ரெட்ணத்தின்  அனைத்து போன் கோல்களும் கான் மூலம் வேலையிடத்து போகும் வரும் அனைத்து தரவுகளையும் FBI யால்  டப்  செய்யப்பட்டன முக்கிய அரச சாட்சியாக கான் இருந்தவர் ஆனாலும் பேருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை ரெட்ணத்தின்  நிறுவனத்தில் வேலை காரணமாகவாம் ஆனால் உலகிலே உள் வீட்டு வர்த்தகத்துக்கு நீண்டகால தண்டனை இந்த வழக்கில்தான் ...........................................மேல் உள்ள செய்திகளை கோர்வை படுத்தி பார்க்கவும் https://qz.com/india/354179/the-indian-woman-who-helped-crack-wall-streets-biggest-insider-trading-case-is-applying-to-business-school/

பக்கத்தில் உள்ள கனவு வல்லரசின் உண்மைமுகம் வெளியில் வரும் .

ஒரு பெண்ணால் உள்ளே போனவர் இன்னுமொரு பெண்ணால் Kim Kardashian மூலம் தண்டனை காலத்துக்கு முன்பே வெளியில்வர பரிந்துரைக்கப்பட்டார் https://www.forbes.com/sites/lisettevoytko/2019/09/10/how-kim-kardashian-helped-get-ex-billionaire-raj-rajaratnam-out-of-jail/?sh=46aedffc7a5f

இவரோட மொத்தம் ரண்டு பேர் பிடிபட்டவங்கள் எண்டு வாசிச்சனான், எங்கையோ! அவங்கள் ரண்டு பேரும் முன்னரே வெளியில் வந்துவிட (அவங்கள்தான் கருணாக்கள் என்டும் கதை இருக்கு. உறுதியில்லை) இவர் மட்டும் உள்ளுக்கு இருந்தவராம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

முன்பு ஒரு திரியிலும்  இதே கேள்விக்கு சுருக்கமா ஒரே கலவரமாய் இருக்கும் என்று பதில் போட்டு இருந்தேன் காரணம் இந்தியா எனும் நாடு இருக்கும்வரை இலங்கையை அமைதியாக இருக்க விடமாட்டார்கள் காரணம் தமிழ்நாடு வருடமொன்றுக்கு 5000ஆயிரம் கோடிக்கு மேல் மத்திய அரசுக்கு அள்ளிக்கொடுக்கும் தங்கவாத்து பறிபோகக்கூடாது எனும் நோக்கம்  அதுவும் gst எனும் வரி விதிப்புக்கு முன்னரான தரவு  என்றால் பார்த்துகொள்ளுங்கள் .

அந்த தங்க வாத்து ஒரு நாளும் பறிபோகாது என்று நம்பும் நிலைக்கு இந்தியாவை நாம் இட்டு வந்திருந்தால்? (இதைதான் ஒரு காலத்தில் அண்ணாத்துரை இந்தியாவுக்குள் செய்தார்).

கஸ்டம் என்கிறீர்களா? நிச்சயமாக.

அரசியலை/இராஜதந்திரத்தை போல் கஸ்டமான துறை எதுவுமில்லை.

* என்னை விட்டால் கிழித்திருப்பேன் என்பதல்ல. அன்றும், இன்றும் இதை செய்யும் நிலையில் என் போன்ற தட்டச்சு வீரர்கள் இருக்கவில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.