Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா மீதான தமிழர்களின் அவநம்பிக்கையும் அதிலுள்ள நியாயமும் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனா மீதான தமிழர்களின் அவநம்பிக்கையும் அதிலுள்ள நியாயமும் !

spacer.png

வடக்கிற்கு விஜயம் செய்திருந்த சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தனது உத்தியோகப்பூர்வமான நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று செயற்பட்டிருந்தார்.

முன்னதாக, வடக்கிற்கு வரும்போதே, வன்னிக் கட்டளை தலைமையத்திற்குச் சென்றிருந்தவர் அங்கிருந்து விசேட அதிரடிப்படைகளின் பாதுகாப்புடனேயே யாழ்ப்பாணம் நோக்கி நகர்ந்தார்.

குறிப்பாக, பருத்துறை முனைப்பகுதிக்குச் சென்றவர் அங்கு ட்ரோன் கமராவினை பறக்கவிட்டுமிருந்தார். ஆனால் முனைப்பகுதி கடற்றொழிலாளர்கள் பற்றி அவர் கரிசனை கொண்டிருக்கவில்லை.

அவரது கரிசனை பருத்தித்துறை துறைமுகத்தினை ‘அபிவிருத்தியின் பெயரால்’ எப்படியாவது தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதே திரைமறைவில் இருந்த காரணமாகும் என்கின்றனர் அரசியல் அவதானிகள்.

அதன்பின்னர், பொதுநூலகத்திற்குச் சென்று அங்கும் தமது காலடியைப் பதிப்பதற்காக ஷி ஜின் பிங்கின் புத்தகத்தையும், கொரோனா விழிப்புணர்வுப் புத்தகத்தையும் வழங்கியிருந்தார்.

அதுமட்டுமன்றி, தமிழர்களின் கலாசாரத்திற்கு தன்மை மாற்றிக்கொண்டு வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்திற்கும் சென்றிருந்தார். இவையெல்லம் தமிழ் மக்களை தம் பக்கம் ஈர்த்துக்கொள்வதற்கான முயற்சிகளே ஆகும்.

ஆனால் இந்த முயற்சிகளுக்குப் பின்னால், வடக்கில் தாம் அகலக்கால் வைப்பதே ஒரே நோக்கமாக அவருக்கு இருந்தது.

குறிப்பாக மூன்று தீவுகளில் மேற்கொள்ளப்படவுள்ள புதுப்பிக்க தக்க சக்தி திட்டத்தினை ஒட்டுமொத்த வடக்கு தமிழர்களும் எதிர்க்கின்றபோதும் அதனை நிச்சயமாக முன்னெடுப்போம் என்றே கூறியிருக்கின்றார்.

இதனை விடவும், புளிந்தீவு, குதிரைமலை ஆகிய தீவுகளை ‘வெளிநாட்டு முதலீடுகள்’ என்ற பெயரில் கையப்படுத்துவதற்கான பூர்வாங்க கண்காணிப்பையும் செய்திருக்கின்றார்.

அத்துடன், தமிழர்களின் வரலாற்றுப்பொக்கிசமான பழைய கச்சேரி கட்டடத்தினையும் பார்வையிட்டு அதனையும் மீள் நிர்மாணம் என்ற பெயரில் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதை இலக்காக வைத்து காய்களை நகர்த்தியுள்ளார்.

இதனைவிடவும், கிளிநொச்சி கௌதாரி முனைக்குச் சென்றவர் அங்கு கடலட்டைப் பண்ணையைப் பார்வையிட்டதோடு எதிர்காலத்தில் கடலட்டை இனப்பெருக்கம் உள்ளிட்ட இதர செயற்பாடுகளுக்கான தொழில்நுட்ப கட்டமைப்புக்களை அங்கு ஸ்தாபிப்பது தொடர்பில் கரிசனை கொண்டிருக்கின்றார்.

இதன்பின்னர், மன்னாருக்குச் சென்றவர் வடக்கு மக்களின் தொப்புள்கொடி உறவாக இருக்கும் தமிழகத்திற்கு இடையில் உள்ள எட்டாவது மண்திட்டுவரையில் சென்று திரும்பியிருக்கின்றார். இந்தப் பயணத்திற்கு முழுமையான ஏற்பாடுகளை இலங்கைக் கடற்படையே செய்துள்ளது.

இவ்வாறிருக்க, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் வடக்கில் சீனாவின் பிரசன்னத்தினை விரும்பவில்லை. ஏனென்றால், தமிழர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை எதிர்பார்க்கின்றார்கள். அதற்காக ஜெனிவா வரையில் போரடிக்கொண்டிருக்கின்றார்கள்.

அந்தப்போராட்டத்தனை நீர்த்துப்போகும் செயற்பாட்டில் சர்வதேச தளங்களில் சீனா இலங்கை அரசாங்கத்துடனேயே இணைந்து செயற்படுகின்றது.

அதுமட்டுமன்றி, இலங்கை அரசாங்கத்திற்கு அவ்வப்போது ஏற்படும் சர்வதேச அழுத்தங்கள், பொருளாதார நெருக்கடிகள் என்று அனைத்திலிருந்தும் சீனாவே காப்பாற்றிக் கொண்டும் இருக்கின்றது.

அவ்விதமானதொரு தரப்புடன் நட்பு பாராட்டுவதற்கு தமிழர்கள் தயாராக இல்லை. அதுமட்டுமன்றி தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இதுவரையில் சீனா மௌனம் சாதித்து வருவதோடு, அது உள்நாட்டு விவகாரம் அதில் ஒருநாட்டின் இறைமையைத் தாண்டி தலையீடுகளைச் செய்யப்போவதில்லை என்றும் கூறிவருகின்றது. அவ்விதமான ஒரு நாடு தமிழர்கள் மீது உண்மையான கரிசனையைக் கொண்டிருக்கின்றது என்று எவ்வாறு நம்பலாம்.

இவை எல்லாவற்றையும் விடவும், அண்மையில் சீனாவிலிருந்து வருகை தந்திருந்த உரக்கப்பலை சீனாவுக்கு ஆதரவான, சீனா முழுமையாக நம்புகின்ற, ஒத்துழைப்புக்களை வழங்கின்ற ராஜபக்ஷ அரசாங்கம் நிராகரித்தபோது அதன் பிரதிபலிப்பு சீனாவை முழுமையாக தோலுரித்திருந்தது.

குறிப்பாக, மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இட்டதோடு, உரக்கப்பலுக்கான இழப்பீட்டினையும் கோரியிருந்தது சீனா.

இந்தச் செயற்பாடுகள் சீனா இலங்கையின் உண்மையான நண்பனா என்ற கேள்வியை மட்டுமல்ல, சீனாவைச் சார்ந்துள்ள ராஜபக்ஷ அரசாங்கத்திற்கே இந்த நிலைமையென்றால் ஏனையவற்றை பேசிப் பயனில்லை என்ற தோற்றப்பட்டை அம்பலமாக்கியுள்ளது.

ஆக, சீனா இலங்கை அரசாங்கத்தினை மட்டுமல்ல, தமிழர்களையும் தனது நலன்களுக்காவே அரவணைக்கிறது. அரவணைக்க முயல்கின்றது. இந்த விடயத்தில் தமிழர்கள் விழிப்பாக இருக்கின்றார்கள்.

அதனால் தான் தமிழ் மக்களின் ஆணைபெற்ற சுமந்திரன் போன்ற மக்கள் பிரதிநிதிகள் சீனா வடக்கு, கிழக்கில் காலடி பதிப்பதை விரும்பவில்லை என்று பகிரங்கமாகவே தெரிவித்துள்ளனர்.

மக்கள் பிரதிநிதிகளின் கருத்தினை வடக்கு,கிழக்கில் உள்ள எந்தவொரு தமிழ் மகனும், மகளும் எதிர்க்கவில்லை. எதிர்க்கப்போதுமில்லை. ஏனென்றால் அவர்களுக்கு சீனாவின் ஆபத்து பற்றி ஏலவே அறிந்திருக்கின்றார்கள். அவநம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள். அதிலொரு நியாயமும் உள்ளதல்லவா.

-பெனிற்லஸ்-

https://athavannews.com/2021/1259369

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே, கட்டுரையாளர்.... கையோட..... தலைப்பில் சீனாவுக்குபதில் இந்தியா என்று சிறு மாற்றம் செய்து இன்னும் ஒரு பெரிய கட்டுரை எழுதலாம். 🤗

  • கருத்துக்கள உறவுகள்

“””குறிப்பாக குறிப்பாக மூன்று தீவுகளில் மேற்கொள்ளப்படவுள்ள புதுப்பிக்க தக்க சக்தி திட்டத்தினை ஒட்டுமொத்த வடக்கு தமிழர்களும் எதிர்க்கின்றபோதும்.“”

முழுப் பொய். 

ஆதவன் இந்தியாவுக்கு கால் கழுவ விரும்பினால் தாராளமாகக் கழுவலாம். அதற்காக ஒட்டுமொத்த தமிழரையும் துணைக்கு இழுக்க வேண்டியதில்லை. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்

சீனா எமக்கு எப்போ நம்பிக்கை தந்தது?

நாம் அதை எப்போ நம்பினோம்?

இப்போ அவநம்பிக்கை வர?

சீனா எப்போதுமே ஒற்றையாட்சி இலங்கை என்பதையே கொள்கையாக கொண்ட நாடு.

இப்போ இலங்கை தமிழரையும் அதை ஏற்குமாறு வலியுறுத்தி அதற்கு பதிலாக அபிவிருத்தி பிஸ்கெட்டை தூக்கி போடுகிறது.

இதை இலங்கை தமிழர் ஏற்று கொள்ளும் காலம் வரலாம்.

அப்படி வந்தால் இலங்கையில் இந்தியாவுக்கான கதவுகள் முற்றாக சாத்தப்பட்டு விடும்.

இலங்கையில் இந்தியாவுக்கு அதிகம் கால அவகாசம் இல்லை. 

விரைந்து தமிழருக்கு ஒரு காத்திரமான நிர்வாக அலகை பெற்று கொடுத்து அதன்மூலம் இலங்கையில் தனது வகிபாகத்தை இந்தியா மீள நிறுவாத பட்சத்தில், 

இலங்கை தமிழரும், அதன் வழியாக ஒட்டு மொத்த இலங்கையும் சீனாவின் வட்டத்துள் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இது சுந்தந்திர இந்தியாவின் மிக பெரும் இராஜதந்திர தோல்வியாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

இந்தியா, இலங்கையில் தோல்வி கண்டு நீண்ட காலம்.

அஞ்சாப்பில படிச்ச, வந்த பின் காப்போம் மீன் வகை தான் இந்தியா, இலங்கையில்.

வந்த சீனன் போகான்.... ம்.... வடக்கே பூர நிக்குறான். அதிகாரம் கொழும்பில் இருப்பதால், தமிழர்கள் செய்ய எதுவும் இல்லை. 

இந்தியாவை நம்பி, சீனாவுக்கோ, சிங்களத்துக்கோ எதிராக போராட்டம் செய்யவும் முடியாது. 

வரவிட்ட இந்தியா, அனுபவிக்க தான் போகிறது.

தமிழருக்கோ, ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன, நமோக்கொரு கவலை இல்லை... பாட்டு தான்.

ஜாலியா பாடுவோம்.... காரணம் நமக்கு... இழக்க எதுவுமே இல்லை.

இந்தியாவுக்கு இழக்க அதிகம் உண்டு. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

என்னக்கு இன்னும் விளங்கவில்லை,  ஏன் கிந்தியாவின் தோல்வியை பற்றி நாம் கவலை கொள்ள வேண்டும் என்று.

எமது position மாற வேண்டும்.

நாம் பிழைக்க வேண்டும், அடு ஹிந்தியை அழிவில் வந்தால் கூட எமக்கு பிரச்சனை இல்லை.

கிந்தியாவின் இப்போதை முனைப்பு, ஈழத்தமிழ் குழு அடையாளத்தை அழிப்பது, அதற்கு சிங்கத்துக்கு பக்கமாக இருந்து ஆயுத எதிர்பு வராமல், தமிழ் இன/ தேச  கட்டமைப்பை அழிப்பு அழித்து சிங்கள;அஃதை நிரந்தரமனா செல்லப் பிள்ளையாக ஆகி கொள்வது.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Nathamuni said:

இந்தியா, இலங்கையில் தோல்வி கண்டு நீண்ட காலம்.

அஞ்சாப்பில படிச்ச, வந்த பின் காப்போம் மீன் வகை தான் இந்தியா, இலங்கையில்.

வந்த சீனன் போகான்.... ம்.... வடக்கே பூர நிக்குறான். அதிகாரம் கொழும்பில் இருப்பதால், தமிழர்கள் செய்ய எதுவும் இல்லை. 

இந்தியாவை நம்பி, சீனாவுக்கோ, சிங்களத்துக்கோ எதிராக போராட்டம் செய்யவும் முடியாது. 

வரவிட்ட இந்தியா, அனுபவிக்க தான் போகிறது.

தமிழருக்கோ, ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன, நமோக்கொரு கவலை இல்லை... பாட்டு தான்.

ஜாலியா பாடுவோம்.... காரணம் நமக்கு... இழக்க எதுவுமே இல்லை.

இந்தியாவுக்கு இழக்க அதிகம் உண்டு. 

இல்லை இந்தியாவுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் இலங்கை சுய விருப்பில் கையொப்பம் இட்ட ஒப்பந்தம்.

அதில் இந்தியாவின் பிராந்திய நலன் பற்றிய இலங்கையின் வாக்குறுதியும் அடக்கம். ஒப்பந்த்தத்தின் annex இல், அடக்கப்பட்ட ஜே ஆர், ராஜீவ் பரிமாற்ற கடிதம் இப்படி ஆரம்பிக்கிறது,

1. Conscious of the friendhsip between our two countries stretching over two millenia and more, and recognizing the importance of nurturing this traditional friendship, it is imperative that both Sri Lanka and India reaffirm the decision not to allow our respective territories to be used for activities prejudicial to each other's unity, territorial integrity and security.

ஆகவே இந்தியாவின் நலனுக்கு விரோதமாக இலங்கையின் நிலப்பரப்பை பாவிக்காமல் இருப்போம் என்பது இலங்கை கொடுத்துள்ள ஒரு இரு தேச உடன்படிக்கை வாக்குறுதி.

இதை பயன்படுத்தி - இலங்கை முழுவதும் சீனாவின் பிடிக்குள் போக முன்னம், (மேற்கின் தயவோடு) தலையிட இந்தியாவுக்கு இன்னும் கால அவகாசம் உண்டு. Buts it’s a fast vanishing time window. 

21 minutes ago, Kadancha said:

கிந்தியாவின் இப்போதை முனைப்பு, ஈழத்தமிழ் குழு அடையாளத்தை அழிப்பது, அதற்கு சிங்கத்துக்கு பக்கமாக இருந்து ஆயுத எதிர்பு வராமல், தமிழ் இன/ தேச  கட்டமைப்பை அழிப்பு அழித்து சிங்கள;அஃதை நிரந்தரமனா செல்லப் பிள்ளையாக ஆகி கொள்வது.

இது ஒரு முட்டாள்தனமான வெளியுறவு கொள்கை என்பதை இந்தியாவுக்கு நாம் உணர்த்த வேண்டும்.

சீனா இலங்கை தமிழரை உரிமையை கொடுத்து வளைக்கவில்லை, மாறாக சலுகையை கொடுத்து, தமிழ் தேசிய அடையாளத்தை, அரசியலை அழித்து ஒற்றையாட்சிக்குள் தள்ளவே விழைகிறது.

இது நடந்தபின் சிங்களத்துக்கு இந்தியாவின் செல்ல பிள்ளையாக இருக்க வேண்டிய தேவை இல்லை.

முழு தீவுமே பாகிஸ்தான் போல் இன்னொரு 100% சீன சார்பு நிலமாகிவிடும்.

இந்த ஆபத்தை உணர்ந்து தமது natural and historical allies ஆகிய தமிழரின் கரங்களை வட கிழக்கிலாவது இந்தியா பலப்படுத்த வேண்டும்.

இந்தியாவுக்கு நாம் சொல்ல வேண்டிய செய்தி இதுதான்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

இல்லை இந்தியாவுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் இலங்கை சுய விருப்பில் கையொப்பம் இட்ட ஒப்பந்தம்.

அதில் இந்தியாவின் பிராந்திய நலன் பற்றிய இலங்கையின் வாக்குறுதியும் அடக்கம். ஒப்பந்த்தத்தின் annex இல், அடக்கப்பட்ட ஜே ஆர், ராஜீவ் பரிமாற்ற கடிதம் இப்படி ஆரம்பிக்கிறது,

1. Conscious of the friendhsip between our two countries stretching over two millenia and more, and recognizing the importance of nurturing this traditional friendship, it is imperative that both Sri Lanka and India reaffirm the decision not to allow our respective territories to be used for activities prejudicial to each other's unity, territorial integrity and security.

ஆகவே இந்தியாவின் நலனுக்கு விரோதமாக இலங்கையின் நிலப்பரப்பை பாவிக்காமல் இருப்போம் என்பது இலங்கை கொடுத்துள்ள ஒரு இரு தேச உடன்படிக்கை வாக்குறுதி.

இதை பயன்படுத்தி - இலங்கை முழுவதும் சீனாவின் பிடிக்குள் போக முன்னம், (மேற்கின் தயவோடு) தலையிட இந்தியாவுக்கு இன்னும் கால அவகாசம் உண்டு. Buts it’s a fast vanishing time window. 

மனைவியிடம் அடி, உதை வாங்கி ஆஸ்பத்திரில படுத்துக்கிடக்கும் கணவனிடம் (😜) கலியாண செர்டிபிகேட்டை காட்டி, நீ இன்னும், அந்த பொம்பிளையை வைச்சு காப்பாத்த வேணும் எண்டு சொல்லுற மாதிரி இருக்குது.

இந்தியா, கையெழுத்து வைத்த அந்த உடன்படிக்கையை மதித்திருந்தால் நாமும், சீனாவுக்கு எதிராக, வடக்கே வராதே என்று போராடி இருப்போமே.

உங்கள் நம்பிக்கையை ஏன் கெடுப்பான்... எனக்கெண்டால், நம்பிக்கை இல்லை. இந்தியா எந்த அறிகுறியும் காட்டவில்லை. மாறாக சீனா பூந்து விளையாடுது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kadancha said:

என்னக்கு இன்னும் விளங்கவில்லை,  ஏன் கிந்தியாவின் தோல்வியை பற்றி நாம் கவலை கொள்ள வேண்டும் என்று.

இது இந்தியாவின் தோல்வி பற்றிய கவலை அறவே அல்ல.

இது எமக்கு உரிய ஏதுவான தெரிவு எது என்பது பற்றிய கேள்வி.

1. இந்தியாவை புறம் தள்ளி அமெரிக்கா வராது

2. சீனா எம்மை இப்பொ இருக்கும் நிலையில் வைத்திருக்கே விரும்புகிறது

இந்த நிலையில் எமக்கு முன் உள்ள ஒரே வழி,

இந்தியா+அமெரிக்கா கூட்டை இலங்கைக்குள் விரைவாகவும், ஆழமாகவும் இழுத்து விட்டு நாம் முடிந்தளவு நன்மை அடைவதுதான்.

இதில் இந்தியா பற்றிய கரிசனை ஏதும் இல்லை, கரிசனை முழுவதும் purely selfish - தமிழர் நலன் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

மனைவியிடம் அடி, உதை வாங்கி ஆஸ்பத்திரில படுத்துக்கிடக்கும் கணவனிடம் (😜) கலியாண செர்டிபிகேட்டை காட்டி, நீ இன்னும், அந்த பொம்பிளையை வைச்சு காப்பாத்த வேணும் எண்டு சொல்லுற மாதிரி இருக்குது.

இந்தியா, கையெழுத்து வைத்த அந்த உடன்படிக்கையை மதித்திருந்தால் நாமும், சீனாவுக்கு எதிராக, வடக்கே வராதே என்று போராடி இருப்போமே.

உங்கள் நம்பிக்கையை ஏன் கெடுப்பான்... எனக்கெண்டால், நம்பிக்கை இல்லை. இந்தியா எந்த அறிகுறியும் காட்டவில்லை. மாறாக சீனா பூந்து விளையாடுது.

மீண்டும் மீண்டும் சொல்கிறேன். சர்வதேச அரசியல், இராஜதந்திரம் என்பது emotions, நம்பிக்கையை விட சுய இலாபம்(self interest), pragmatism (நடைமுறை சாத்தியம்) என்பவற்றை கொண்டே தீர்மானிக்க பட வேண்டும்.

எமது guiding principle - இலங்கை தமிழரின் சுய நலன் ஆக மட்டுமே இருக்க வேண்டும்.

யாரை இலங்கைக்குள் மேலும் இழுத்து விட்டால் அது நாம் ஒரு கெளரவமான தீர்வை பெற அதிக சாத்தியம் உள்ளதோ - அவர்களை இழுத்து விட வேண்டும்.

அதே சமயம் இன்னொரு சிறு அமைப்பு சீனாவுடனும் கதைக்க முயலாலாம்.

இலங்கையில் தமிழருக்கு ஒரு கெளரவமான தீர்வு வர

1. இந்தியா+மேற்கு உள்ளே வருவது

2. நாடு முழுவதும் சீனாவின் கையில் போவது

இந்த இரெண்டில் எது அதிக வாய்பானது என பார்த்தால் எமோசனல் ஆகாமல், cold and calculative ஆக முடிவுகளை எடுக்கலாம். 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

மீண்டும் மீண்டும் சொல்கிறேன். 

இந்தியா அதுக்கு சரிப்பட்டு வராது.... மேற்கு வந்தாலுமே, இந்தியா வராது. அது அடைந்த அனுபவம் அப்படி.... 🤗

உங்கள் நம்பிக்கையை ஏன் கெடுப்பான்... எனக்கெண்டால், நம்பிக்கை இல்லை. 😁

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

மீண்டும் மீண்டும் சொல்கிறேன். 

இந்தியா அதுக்கு சரிப்பட்டு வராது.... மேற்கு வந்தாலுமே, இந்தியா வராது. அது அடைந்த அனுபவம் அப்படி.... 🤗

உங்கள் நம்பிக்கையை ஏன் கெடுப்பான்... எனக்கெண்டால், நம்பிக்கை இல்லை. 😁

இதில், விருப்பு, வெறுப்பை தள்ளி வைத்து விட்டு பார்க்க நீங்கள் தவறுவதாக எனக்கு படுகிறது.

நிச்சயமா மேற்கு வந்தாலும் இந்தியா வராது என்பது அவ்வளவு தர்க்கமான பார்வையாக எனக்கு தெரியவில்லை.

தனியே மேற்கு இறங்குகிறது என்றால் இந்தியாவோடு மினெக்கெடுங்கள் என சொல்ல எனக்கு என்ன பைத்தியமா?

உலக பூகோளாஅரசியல் அணி பிரிப்பு 

அணி 1 - ஜப்பான்+ அவுஸ்+நியூசி+யு எஸ்+ கனடா+ யூகே+ ஈயூ இவை 

அணி 2 - ரஸ்யா  

அணி3 -  சீனா 

இதில் அணி1 vs அணி2 சண்டையில் இந்தியா நடு நிலையும்

அணி 1 vs அணி 3 சண்டையில் இந்தியா அணி 1 இன் பக்கமும் சாய்கிறது.

இதில்

1 vs 2 முறுகல் ஐரோப்பாவிலும்

1 vs 3 முறுகல் ஆசிய பசுபிக் பிராந்தியத்திலும் நிலவுகிறது.

இந்த முறுகலின் அங்கமாக அணி 1 இலங்கையில் தலையிட்டால், நிச்சயம் அதில் இந்தியாவின் பங்களிப்பு இருக்கும்.

சொல்கேய்ம் டெல்லி போய் வந்தது முதல், அண்மையில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் அமரிக்கா போன சுமந்திரனை அங்கே சந்தித்தது வரை கோடுகாட்டும் செய்தி இதுதான்.

இந்தியாவையும், அமேரிக்கவையும் திறைமையான கையாண்டு - உள்ளே இழுத்து விட்டு காரியம் சாதிப்பதில்தான் எமக்கான தீர்வின் சாவி உள்ளது.

இல்லை சீனாவிடம் போனால் அது மறைமுகமாக, இல்லை நேரடியாகவே இலங்கையின் கால்களின் விழுவதற்கு சமம்.

13, மாகாணசபை, தேசியம், சுயநிர்ணயம், காணி, பொலீஸ் அதிகாரம் எல்லாத்தையும் பரணில் ஏற கட்டிவிட்டு, தமிழர்கள் முழுக்க முழுக்க வியாழேந்திரன், முரளிதரன், டக்ளஸ், அங்கயன், பாணி அரசியலுக்குள், மிக நெருக்கமாக அதிகாரம் கொழும்பில் குவிந்த ஒற்றையாட்சிக்குள், தம்மை திருப்தி படுத்தி கொள்ள வேண்டியதுதான்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

நீங்கள் சொல்வது தியரி.

இன்றைய நிலை: சீனா உள்ளே, இந்தியா வெளியே 

இந்தியாவின் பக்கத்தில் உள்ள நாடுகளில் எந்த நாடாவது, இந்தியா மேல் நம்பிக்கை வைக்கக்கூடிய அளவுக்கு, இந்தியா நடந்துள்ளது என்ற கேள்விக்கு பதில் இருந்தால், இந்தியாவை, ஏன் நம்ப முடியாது என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும்.

ஒரே கேள்விதான்.

உள்ள வந்துவிட்ட சீனாவை, எப்படி வெளியே அனுப்புவது?

சும்மா வந்திருந்தால் கழுத்தைப் பிடித்து விரட்டலாம்.

கந்து வட்டிக்கு, ஈடு எடுத்து உள்ள வந்திருக்கும் சீனாக்காரன்.... போறேன்.... வட்டியுடன் வை காசை என்பர்களே.

புலிகளை ஒதுக்கினால்.... தாம் பூரலாம் என்று நினைத்திருக்கலாம். இனி என்ன... ஆறுதலாக போகலாமே என்று இருக்க... சீனா புகுந்து விட்டது.

இதை தான் சொல்வது கறையான் புத்தெடுக்க கருநாகம் உள்ள புகுந்த கதை.

முக்கிய விசயம் என்னவெண்டால்: இந்தியாவிலும் பார்க்க படைவலிமை கொண்ட சீனா உள்ள இருக்குது. அது வடக்கே பூர முயல்கிறது. 

இதை இந்தியா எப்படி கையாளப்போகின்றது?

இந்தியா அணில் ஏற விட்டு விட்டு, அமெரிக்காவில் போய் நின்று அண்ணாந்து பார்த்துக்கொண்டு நிக்கிறது போலவே எனக்கு படுகிறது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இல்லை இந்தியாவுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் இலங்கை சுய விருப்பில் கையொப்பம் இட்ட ஒப்பந்தம்.

அதில் இந்தியாவின் பிராந்திய நலன் பற்றிய இலங்கையின் வாக்குறுதியும் அடக்கம். ஒப்பந்த்தத்தின் annex இல், அடக்கப்பட்ட ஜே ஆர், ராஜீவ் பரிமாற்ற கடிதம் இப்படி ஆரம்பிக்கிறது,

1. Conscious of the friendhsip between our two countries stretching over two millenia and more, and recognizing the importance of nurturing this traditional friendship, it is imperative that both Sri Lanka and India reaffirm the decision not to allow our respective territories to be used for activities prejudicial to each other's unity, territorial integrity and security.

ஆகவே இந்தியாவின் நலனுக்கு விரோதமாக இலங்கையின் நிலப்பரப்பை பாவிக்காமல் இருப்போம் என்பது இலங்கை கொடுத்துள்ள ஒரு இரு தேச உடன்படிக்கை வாக்குறுதி.

இதை பயன்படுத்தி - இலங்கை முழுவதும் சீனாவின் பிடிக்குள் போக முன்னம், (மேற்கின் தயவோடு) தலையிட இந்தியாவுக்கு இன்னும் கால அவகாசம் உண்டு. Buts it’s a fast vanishing time window. 

இது ஒரு முட்டாள்தனமான வெளியுறவு கொள்கை என்பதை இந்தியாவுக்கு நாம் உணர்த்த வேண்டும்.

சீனா இலங்கை தமிழரை உரிமையை கொடுத்து வளைக்கவில்லை, மாறாக சலுகையை கொடுத்து, தமிழ் தேசிய அடையாளத்தை, அரசியலை அழித்து ஒற்றையாட்சிக்குள் தள்ளவே விழைகிறது.

இது நடந்தபின் சிங்களத்துக்கு இந்தியாவின் செல்ல பிள்ளையாக இருக்க வேண்டிய தேவை இல்லை.

முழு தீவுமே பாகிஸ்தான் போல் இன்னொரு 100% சீன சார்பு நிலமாகிவிடும்.

இந்த ஆபத்தை உணர்ந்து தமது natural and historical allies ஆகிய தமிழரின் கரங்களை வட கிழக்கிலாவது இந்தியா பலப்படுத்த வேண்டும்.

இந்தியாவுக்கு நாம் சொல்ல வேண்டிய செய்தி இதுதான்.

அதை நாம் ஏன்  சொல்ல வேண்டும்? 

எமக்கு  இழப்பதற்கு ஏதுமில்லை. ஆகையால் கவலைப்பட ஏதுமில்லை. எனவே இந்திய நலன் சார்ந்து  யோசிக்க வேண்டிய  தேவை எமக்கு இல்லை.

இந்தியா என்கிற நாடு  அழிவதுதான் தென்னாசியாவிற்கு நன்மையானது. 

இந்தியா அழிந்து உடையட்டும். 

அழியட்டும்

அழியட்டும்

அழியட்டும்.

😡

43 minutes ago, goshan_che said:

இதில், விருப்பு, வெறுப்பை தள்ளி வைத்து விட்டு பார்க்க நீங்கள் தவறுவதாக எனக்கு படுகிறது.

நிச்சயமா மேற்கு வந்தாலும் இந்தியா வராது என்பது அவ்வளவு தர்க்கமான பார்வையாக எனக்கு தெரியவில்லை.

தனியே மேற்கு இறங்குகிறது என்றால் இந்தியாவோடு மினெக்கெடுங்கள் என சொல்ல எனக்கு என்ன பைத்தியமா?

உலக பூகோளாஅரசியல் அணி பிரிப்பு 

அணி 1 - ஜப்பான்+ அவுஸ்+நியூசி+யு எஸ்+ கனடா+ யூகே+ ஈயூ இவை 

அணி 2 - ரஸ்யா  

அணி3 -  சீனா 

இதில் அணி1 vs அணி2 சண்டையில் இந்தியா நடு நிலையும்

அணி 1 vs அணி 3 சண்டையில் இந்தியா அணி 1 இன் பக்கமும் சாய்கிறது.

இதில்

1 vs 2 முறுகல் ஐரோப்பாவிலும்

1 vs 3 முறுகல் ஆசிய பசுபிக் பிராந்தியத்திலும் நிலவுகிறது.

இந்த முறுகலின் அங்கமாக அணி 1 இலங்கையில் தலையிட்டால், நிச்சயம் அதில் இந்தியாவின் பங்களிப்பு இருக்கும்.

சொல்கேய்ம் டெல்லி போய் வந்தது முதல், அண்மையில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் அமரிக்கா போன சுமந்திரனை அங்கே சந்தித்தது வரை கோடுகாட்டும் செய்தி இதுதான்.

இந்தியாவையும், அமேரிக்கவையும் திறைமையான கையாண்டு - உள்ளே இழுத்து விட்டு காரியம் சாதிப்பதில்தான் எமக்கான தீர்வின் சாவி உள்ளது.

இல்லை சீனாவிடம் போனால் அது மறைமுகமாக, இல்லை நேரடியாகவே இலங்கையின் கால்களின் விழுவதற்கு சமம்.

13, மாகாணசபை, தேசியம், சுயநிர்ணயம், காணி, பொலீஸ் அதிகாரம் எல்லாத்தையும் பரணில் ஏற கட்டிவிட்டு, தமிழர்கள் முழுக்க முழுக்க வியாழேந்திரன், முரளிதரன், டக்ளஸ், அங்கயன், பாணி அரசியலுக்குள், மிக நெருக்கமாக அதிகாரம் கொழும்பில் குவிந்த ஒற்றையாட்சிக்குள், தம்மை திருப்தி படுத்தி கொள்ள வேண்டியதுதான்.

உங்கள் ஆசையை ஏன் கெடுப்பான்.😌

(கிந்தியா புடுங்கும், வெட்டி வீழ்த்தும் என்று   நம்புவதற்கு நான் என்ன கிறுக்கனோ..🤪)

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

இதை இந்தியா எப்படி கையாளப்போகின்றது?

இப்போ நீங்கள் பொயிண்ட்டுக்கு வந்துள்ளீர்கள்.

28 minutes ago, Nathamuni said:

நீங்கள் சொல்வது தியரி.

இன்றைய நிலை: சீனா உள்ளே, இந்தியா வெளியே 

இந்தியாவின் பக்கத்தில் உள்ள நாடுகளில் எந்த நாடாவது, இந்தியா மேல் நம்பிக்கை வைக்கக்கூடிய அளவுக்கு, இந்தியா நடந்துள்ளது என்ற கேள்விக்கு பதில் இருந்தால், இந்தியாவை, ஏன் நம்ப முடியாது என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும்.

ஒரே கேள்விதான்.

உள்ள வந்துவிட்ட சீனாவை, எப்படி வெளியே அனுப்புவது?

சும்மா வந்திருந்தால் கழுத்தைப் பிடித்து விரட்டலாம்.

கந்து வட்டிக்கு, ஈடு எடுத்து உள்ள வந்திருக்கும் சீனாக்காரன்.... போறேன்.... வட்டியுடன் வை காசை என்பர்களே.

புலிகளை ஒதுக்கினால்.... தாம் பூரலாம் என்று நினைத்திருக்கலாம். இனி என்ன... ஆறுதலாக போகலாமே என்று இருக்க... சீனா புகுந்து விட்டது.

இதை தான் சொல்வது கறையான் புத்தெடுக்க கருநாகம் உள்ள புகுந்த கதை.

முக்கிய விசயம் என்னவெண்டால்: இந்தியாவிலும் பார்க்க படைவலிமை கொண்ட சீனா உள்ள இருக்குது. அது வடக்கே பூர முயல்கிறது. 

இதை இந்தியா எப்படி கையாளப்போகின்றது?

இந்தியா அணில் ஏற விட்டு விட்டு, அமெரிக்காவில் போய் நின்று அண்ணாந்து பார்த்துக்கொண்டு நிக்கிறது போலவே எனக்கு படுகிறது.

மேலே நீங்கள் கூறிய எதிலும் எனக்கு முரண்பாடில்லை.

29 minutes ago, Nathamuni said:

இதை இந்தியா எப்படி கையாளப்போகின்றது?

இந்தியாவின் முன்னே உள்ள தெரிவுகள் இரெண்டுதான்.

1. பாகிஸ்தானை இழந்தது போல ஒட்டுமொத்த இலங்கையையும் சீனாவிடம் இழத்தல்.

2. அமெரிகாவின் முகவராக, இல்லை கூலிப்படையாக இலங்கைக்குள் மீளவும் புகுதல்.

இந்திய நலனை தூக்கி குப்பையில் போடுவோம். அதில் எமக்கு ஒரு அக்கறையும் இல்லை.

எமது சுய நலனை முன்வைத்து பார்த்தால் - இந்தியாவை தெரிவு 2 நோக்கி தள்ள வைப்பது எமக்கு அவசியம்.

20 minutes ago, Kapithan said:

அதை நாம் ஏன்  சொல்ல வேண்டும்? 

ஏனென்றால் எமக்கு தீர்வு வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

எமக்கு  இழப்பதற்கு ஏதுமில்லை. ஆகையால் கவலைப்பட ஏதுமில்லை.

இல்லை. நாம் இப்போ வாளாவிருந்தால் எமது நிலத்தில் இனப்பரம்பல் முற்றாக தலைகீழாக மாற்றி அமைக்கப்பட்டு.

இலங்கையில் தமிழர் பெரும்பான்மை மாவட்டங்களாக யாழும் மட்டும் மட்டுமே இருக்கும் நிலை உருவாக்கும். 

அதன் பின் தீர்வுக்கு தேவையே இராது.

ஆகவே நாம் இழக்க நிறைய இருக்கிறது.

24 minutes ago, Kapithan said:

இந்தியா என்கிற நாடு  அழிவதுதான் தென்னாசியாவிற்கு நன்மையானது. 

இது எனது விருப்பமும்தான்.

ஆனால் இந்தியா அழிய முதல் இலங்கையில் தமிழ் இனம் கிட்டதட்ட வழித்தொழிக்க பட்டு விடும் (கால அளவு).

அதன் பின் இந்தியா அழிந்தால் என்ன அழியாவிட்டால் என்ன.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kapithan said:

ந்தியா அழிந்து உடையட்டும். 

அழியட்டும்

அழியட்டும்

அழியட்டும்.

அரசியலில் நிரந்த எதிரியும் இல்லை, பகைவனும் இல்லை. நிரந்தர நலன்கள் மட்டுமே.

இமோசனல் ஆகாமல் எமது நலனை மட்டும் focus பண்ணி சிந்திப்போம். 

Be cunning, calculative and think what is in our best interest.

எனது ஆசை

86-90 ஜே ஆர் செய்ததை போல் இந்தியாவை/மேற்கை வைத்து எமது வேலையை செய்வோம்.

அதை தயவு செய்து யாரும் கெடுக்க வேண்டாம்🤣.

Diplomacy is the art of letting someone else have your way.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

இந்தியாவை இன்னுமா நம்புகிறீர்கள்..? 

🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

இந்தியாவை இன்னுமா நம்புகிறீர்கள்..? 

🤣😂

ஹா..ஹா… நம்பிக்கை…

கடவுளையே இருக்கோ இல்லையோ எண்டு யோசிக்கும் நான் இந்தியாவையா நம்ப போகிறேன்😜.

ஜே ஆர் எப்போதாவது இந்தியாவை நம்பினாரா? இல்லை.

ஜே ஆர் இந்தியாவை தனது நலனுக்கு ஏற்பபாவித்தாரா? ஆம் மிக திறமையாக.

இதே போல் தமிழராலும் முடியுமா ? ஆம் என நம்புகிறேன்.

நான் தமிழரால் இப்படி வெட்டி ஆட முடியும் என நம்புகிறேன்.

தமிழரின் ஒன்றுபட்ட ஆற்றலை நம்புகிறேன்.

நீங்கள் எப்படி ? 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

யுத்தம் ம்முடிந்து 12 ஆண்டுகள் இந்தியா இலங்கைத் தமிழருக்கு அரசியல், பொருளாதார ரீதியில் என்ன செய்தது? 

பதில்; ஒன்றுமேயில்லை. 

நிலைமை அப்படியிருக்கையில், வைக்கோற் பட்டடை நாய் மாதிரி இந்தியாவிற்காக சீனாவின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை ஏன் புறக்கணிக்க வேண்டும் ? 

இந்தியா இதுவரை எமக்கு அழிவுகளை மட்டுமே தந்தது. இதனை நினைவில் வைத்திருங்கள். 

😡

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படி இருந்தாலும் இப்போ நாம் முழு விச்சுடன் சீனாவை எதிர்ப்பது புத்திசாலித்தனம் இல்லை.அப்படி  எதிர்க்கச் சொல்லி பத்தி எழுதுபவர்கள் இந்திய வால் பிடிகளே.இந்தியா ஒரு போதும் எம்மை வாp விடாது.அந்த நாடு அழியும் நாளே எமக்கு தீபாவளி.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

தீவு முழுவதும் ஒரே கருத்தில் இன மத பேதமின்றி நம்பும் ஒரே விடயம், இந்தியா மேல் நம்பிக்கை வைக்க காரணம் எதுவும் இல்லை.

14 minutes ago, goshan_che said:

ஹா..ஹா… நம்பிக்கை…

கடவுளையே இருக்கோ இல்லையோ எண்டு யோசிக்கும் நான் இந்தியாவையா நம்ப போகிறேன்😜.

ஜே ஆர் எப்போதாவது இந்தியாவை நம்பினாரா? இல்லை.

ஜே ஆர் இந்தியாவை தனது நலனுக்கு ஏற்பபாவித்தாரா? ஆம் மிக திறமையாக.

இதே போல் தமிழராலும் முடியுமா ? ஆம் என நம்புகிறேன்.

நான் தமிழரால் இப்படி வெட்டி ஆட முடியும் என நம்புகிறேன்.

தமிழரின் ஒன்றுபட்ட ஆற்றலை நம்புகிறேன்.

நீங்கள் எப்படி ? 

கோஷான், நீங்கள் யாழ்களத்தின் பொறுமையின் சிகரம். தெளிவாக புரியும்படி Kinder Garten பிள்ளைகளுக்கு படிப்பிப்பது போல் விளங்கப்படுத்த பிறகும், “அ” என்பது  தமிழ் எழுத்தா ஆங்கில எழுத்தா என்பது போன்ற கேள்விகளுக்கு கூட பொறுமையுடன் பதிலளிக்கும் உங்கள் கற்பித்தற் திறமையை ரசிக்கிறேன்.🙏🏻 ரசிக்க மட்டும் தான் என்னால் முடியும். அதைக் கற்றுக்கொள்ளும் பொறுமையோ திறமையோ எனக்கில்லை. Schade 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, tulpen said:

உங்கள் குசும்பு!! 😁

ரசிக்க மட்டும் தான் என்னால் முடியும்.! 

கோசன் சொல்வது புரிகிறது.

ஆனால் இந்தியாவிற்கு நாம் எந்தளவுக்கு தேவையானவர்கள் என்பது, எமக்கு இந்தியா எந்தளவுக்கு தேவையானது என்பதிலும் பார்க்க முக்கியமானது.

ஏனெனில்..... இந்தியா இழக்க அதிகம் உண்டு.

நாம் இழக்க எதுவும் இல்லை.

அதனை இந்தியா புரியாத வரையில், சீனாவின் பரவலை தடுக்க முடியாது.

இடையே புலிகள் காலம் தவிர்த்து, போர்த்துக்கேயன் வந்த காலத்தில் இருந்து 520 வருசமா அடிமை வாழ்வு தான்.

பழகிவிட்டது.

ஆகவே.... இந்தியா எமக்கு தீர்வுப் பிச்சை போட வேண்டும் என்று எதிர்பார்பதிலும் பார்க்க, அது கழுத்தை கிடக்குது..... முதலில் உங்கள் முதுகை, பாதுகாப்பை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதே நமது நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்பது எனது பார்வை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, சுவைப்பிரியன் said:

எது எப்படி இருந்தாலும் இப்போ நாம் முழு விச்சுடன் சீனாவை எதிர்ப்பது புத்திசாலித்தனம் இல்லை.அப்படி  எதிர்க்கச் சொல்லி பத்தி எழுதுபவர்கள் இந்திய வால் பிடிகளே.இந்தியா ஒரு போதும் எம்மை வாp விடாது.அந்த நாடு அழியும் நாளே எமக்கு தீபாவளி.

நிச்சயமாக இப்படி எழுதுபவர்களும், இந்த கட்டுரை எழுதியவரும் இந்திய வால்பிடிகளே.

அதே போல் நாம் சீனாவை ஒதுக்க வேண்டிய அவசியமும் இல்லை. நிச்சயமாக அவர்களுடனும் பேச முயல வேண்டும்.

Let’s keep all options open, and use the one that’s most helpful to our cause.

30 minutes ago, Nathamuni said:

தீவு முழுவதும் ஒரே கருத்தில் இன மத பேதமின்றி நம்பும் ஒரே விடயம், இந்தியா மேல் நம்பிக்கை வைக்க காரணம் எதுவும் இல்லை.

நிச்சயமாக. 

இலங்கையில் இப்போ இந்தியாவிற்கு நண்பர்கள் எவரும் இல்லை.

ஆனால் இப்போதும் நேரம் முழுவதுமாக பிந்தி விடவில்லை. 

தமிழருக்கு ஒரு நேர்மையான தீர்வை கொடுப்பதன் மூலம் இந்தியா தன் ஆளுமையை மீள நிலை நிறுத்த முடியும்.

இத்தனை கசப்பான அனுபவங்களின் பின்பும், ஒரு நல்ல தீர்வை இந்தியா பெற்று தந்தால் (தந்தால்) இந்தியாவுடன் உறவை புதுப்பிக்க பெரும்பாலான ஈழ, புலம்பெயர் தமிழர்கள் தயாராகவே உள்ளார்கள் என்பது என் அபிபிராயம்.

இதை இந்திய கொள்கை வகுப்பாளர் உணர வேண்டும். நாம் உணர்த்த வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.