Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒட்டுசுட்டான்னில் விழுந்து வணங்கி கடமையேற்ற அதிபர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டில் கடமைகளைப் பொறுப்பேற்ற பலரும் கைகளை நீட்டி, பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தான் கல்விக்கற்ற பாடசாலைக்கே அதிபராக தெரிவு செய்யப்பட்ட அதிபர், அந்த பாடசாலையின் கட்டிட வாயிலில் தலைதாழ்த்தி விழுந்து வணங்கிய சம்பவமொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் அதிபராக  சின்னப்பா நாகேந்திரராசா, 03.01.2022 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

 தான் கல்விக்கற்ற பாடசாலையைப் பொறுப்பேற்பதற்காக கற்றவர்கள் உற்றவர்கள் புடைசூழ வந்திருந்த அதிபர் பாடசாலையின் கட்டிட வாயிலில் தலைதாழ்த்தி விழுந்து வணங்கியிருந்தார்.சுற்றிநின்றோர் மெய்சிலிர்த்த நேரமிது.

தண்டுவான் அ.த.க.பாடசாலை, கற்சிலைமடு பண்டாரவன்னியன் ம.வி, முத்துஐயன்கட்டு வலதுகரை ம.வி போன்றவற்றின் அதிபராகவும் கடமையாற்றியிருந்தார் .

சிறந்த கலை இலக்கிய செயற்பாட்டாளர் என்பதுடன் செம்மொழிக்குரலோன், பண்டாரவன்னியன் விருது மற்றும் கம்பீரக்குரலோன் போன்ற இன்னுமின்னும் பற்பல விருதுகளையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

image_e472efc41e.jpgimage_27e63de007.jpg

Tamilmirror Online || விழுந்து வணங்கி கடமையேற்ற அதிபர்

  • கருத்துக்கள உறவுகள்

படித்த பாடசாலைக்கே…. அதிபராக வருவது, மிக அரிதாக நடக்கும் செயல்.
அந்த அதிபர், ஆரம்ப நாளில்… பாடசாலைக்கு செய்த நன்றிக் கடனை,
நாமும் பாராட்டுகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

image_27e63de007.jpg

அதிபருக்கு….. பின்னாலை இருக்கிற சாமிப் படத்திலை,
புத்தரை காணேல்லை, அல்லாவை காணேல்லை, இயேசுவை காணேல்லை எண்டு….
சனம் இப்ப, சண்டைக்கு வரப் போகுது. 🤣
 
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அதிபருக்கு.

21 minutes ago, தமிழ் சிறி said:

அதிபருக்கு….. பின்னாலை இருக்கிற சாமிப் படத்திலை,
புத்தரை காணேல்லை, அல்லாவை காணேல்லை, இயேசுவை காணேல்லை எண்டு….
சனம் இப்ப, சண்டைக்கு வரப் போகுது. 🤣
 
முன்னாலை,புத்தரின் அரசமிலை புடைசூழ சிங்கம் கத்தியோடு நிக்குது.🤪

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அதிபருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரிமேலழகர் உரை

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் - தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்; தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் -

271240499_154721380220199_2283070794562193683_n.jpg?_nc_cat=107&ccb=1-5&_nc_sid=8bfeb9&_nc_ohc=7nP5QRx5f-EAX_l-ZEu&_nc_ht=scontent-ham3-1.xx&oh=00_AT8-bxXGzHAwCPsatWGqLNJV0iBojnZncnoMYIFbmU-FCQ&oe=61D8F8F2

Ist möglicherweise ein Bild von 8 Personen und Personen, die stehen

Ist möglicherweise ein Bild von 6 Personen

அந்த பாடசாலை செய்த பலனை  நற்கணமே பெறுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அதிபருக்கு வாழ்த்துக்கள்.. மிகவும் நெகிழ்ச்சியான தருணம்..

On 4/1/2022 at 16:35, தமிழ் சிறி said:

அதிபருக்கு….. பின்னாலை இருக்கிற சாமிப் படத்திலை,
புத்தரை காணேல்லை, அல்லாவை காணேல்லை, இயேசுவை காணேல்லை எண்டு….
சனம் இப்ப, சண்டைக்கு வரப் போகுது. 🤣
 
மதசின்னங்கள் ஏன் இல்லை என்று கேட்பதை விடுத்து பாடசாலையில் ஏன் மதசின்னங்கள் என்று கேட்க வைப்பதுதான் கல்வி..அரசின் கல்வி நிறுவனங்கள் மதசார்பு அற்ற கல்வியை வழங்கவேண்டும்…

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

மதசின்னங்கள் ஏன் இல்லை என்று கேட்பதை விடுத்து பாடசாலையில் ஏன் மதசின்னங்கள் என்று கேட்க வைப்பதுதான் கல்வி..அரசின் கல்வி நிறுவனங்கள் மதசார்பு அற்ற கல்வியை வழங்கவேண்டும்…

ஶ்ரீலங்கா… பாடசாலைகளிருந்து,
புத்தர் படத்தை எடுப்பதிலிருந்து  ஆரம்பிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

ஶ்ரீலங்கா… பாடசாலைகளிருந்து,
புத்தர் படத்தை எடுப்பதிலிருந்து  ஆரம்பிக்க வேண்டும்.

உண்மை.. பெளத்த மதவெறிகொண்டுதான எங்களை அளிக்க நிக்குரான்.. முஸ்லீம் மதவெறி கொண்டுதான் உலகை அளிக்க நிக்குரான் அடிப்படை வாதி.. இந்து மதவெறிகொண்டுதான் இந்தியாவில் ஆர் எஸ் எஸ்.. ஆக மொத்தம் எந்த மதமா இருந்தாலும் மதவெறி கொடூரமானது.. மேற்கத்தைய நாடுகள் போல அரச கல்வி நிறுவனங்களில் மதச்சார்பற்ற கல்வி கொண்டுவந்தால் மூன்றாம் உலக நாடுகளில் நிறைய அழிவுகள் பாதியாகும்..

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாட்டில் மதச் சார்பற்ற கல்வி?

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

https://www.gov.uk/national-curriculum/other-compulsory-subjects

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மை.. பெளத்த மதவெறிகொண்டுதான எங்களை அளிக்க நிக்குரான்.. முஸ்லீம் மதவெறி கொண்டுதான் உலகை அளிக்க நிக்குரான் அடிப்படை வாதி.. இந்து மதவெறிகொண்டுதான் இந்தியாவில் ஆர் எஸ் எஸ்.. ஆக மொத்தம் எந்த மதமா இருந்தாலும் மதவெறி கொடூரமானது.. மேற்கத்தைய நாடுகள் போல அரச கல்வி நிறுவனங்களில் மதச்சார்பற்ற கல்வி கொண்டுவந்தால் மூன்றாம் உலக நாடுகளில் நிறைய அழிவுகள் பாதியாகும்..

நான் பள்ளிக்கூடம் போன நாள் தொடக்கம்.......பள்ளிக்கூடம் என்னை கழுத்தை புடிச்சு வெளியிலை தள்ளும் வரைக்கும் காலமை  தேவாரம் படிக்காமல் வகுப்புக்குள்ளை உள்ளுட்டதே கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

எந்த நாட்டில் மதச் சார்பற்ற கல்வி?

மதம் போதிக்கசப்படவில்லை.

மதம் பற்றிய கல்வி அறிவே புகட்டப்படுகிறது.

நிச்சயமாக, uk இன் அரச மற்றும் அரசு சார்ந்து இருக்கும் பாடசாலைகளில், எல்லா முக்கிய மதங்கள்  பற்றிய கல்வி அறிவு கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

மதம் போதிக்கசப்படவில்லை.

மதம் பற்றிய கல்வி அறிவே புகட்டப்படுகிறது.

நிச்சயமாக, uk இன் அரச மற்றும் அரசு சார்ந்து இருக்கும் பாடசாலைகளில், எல்லா முக்கிய மதங்கள்  பற்றிய கல்வி அறிவு கிடைக்கும்.

U.K. இல் இஸ்லாமிய யூத கத்தோலிக்க( கத்தோலிக்கராக இருந்தால் மட்டுமே அனுமதி) பாடசாலைகள் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, MEERA said:

U.K. இல் இஸ்லாமிய யூத கத்தோலிக்க

அப்படியானவை, பொதுவாக முற்றாக அல்லது பகுதியாக  அரசு சாரதாவை.

அரசு சார்ந்து இருந்தால், national curriculam கட்டாயம் இருக்கவேண்டும்.

அதில் ஒன்று மதம் அல்லது சமயக்  கல்வி.

ஆயினும், தனிமனித சுதந்திரத்தை வைத்து, சில் இடங்களில் national  curruiculam இல் இருந்து விதி விலக்கு அளிக்கப்படும்.   

https://www.gov.uk/government/collections/national-curriculum

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் எங்கெல்லாம் அரசாங்கம் சமயத்துக்கு அனுசரணை வழங்குகின்றதோ, அங்கெல்லாம் வறுமையும், யுத்தமும், பாகுபாடும், பெண் அடிமைத்தனமும் அதிகமாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

உலகில் எங்கெல்லாம் அரசாங்கம் சமயத்துக்கு அனுசரணை வழங்குகின்றதோ, அங்கெல்லாம் வறுமையும், யுத்தமும், பாகுபாடும், பெண் அடிமைத்தனமும் அதிகமாக இருக்கும். 

நூறு வீதம் உண்மையான கருத்து.. எமது நாளாந்த வாழ்வில் செய்திகள் தொலைக்காட்சிகள் ஊடாக தினமும் அவதானிப்பதுதான்..

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கத்தோலிக்க பாடசாலைகள் என்றால் ஒழுக்கமாய் இருக்கும் என்று அதில் தங்கட பிள்ளைகளை சேர்ப்பதற்காய் மதம் மாறின தமிழர்களும் இருக்கிறார்கள் ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, zuma said:

உலகில் எங்கெல்லாம் அரசாங்கம் சமயத்துக்கு அனுசரணை வழங்குகின்றதோ, அங்கெல்லாம் வறுமையும், யுத்தமும், பாகுபாடும், பெண் அடிமைத்தனமும் அதிகமாக இருக்கும். 

ஏனுங்க சார் சீனா கியூபாவில எல்லாம் என்ன மாதிரி? அடிமைத்தனம் பாகுபாடு வஞ்சகம் பஞ்சம் ஏதுமே இல்லையா?

மதத்தை முன்னிலைப்படுத்தாத அல்பேனியாவில் பஞ்சமோ பஞ்சம்
ஜேர்மனியிலும் மதம் முன்னிலைப்படுத்தப்படுகின்றது
அமெரிக்காவிலும் இருக்கென்று நினைக்கின்றேன்...

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

ஏனுங்க சார் சீனா கியூபாவில எல்லாம் என்ன மாதிரி? அடிமைத்தனம் பாகுபாடு வஞ்சகம் பஞ்சம் ஏதுமே இல்லையா?

மதத்தை முன்னிலைப்படுத்தாத அல்பேனியாவில் பஞ்சமோ பஞ்சம்
ஜேர்மனியிலும் மதம் முன்னிலைப்படுத்தப்படுகின்றது
அமெரிக்காவிலும் இருக்கென்று நினைக்கின்றேன்...

ஐயா தங்களுக்கு தமிழை  கிரகித்தலில் பிரச்சனைகள்  ஏதும் இருக்கின்றதா ?. அரசாங்கம், அதிகமாக என்பன எனது கருத்தின் முக்கிய வார்த்தைகள்( Key words) ஆகும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, zuma said:

ஐயா தங்களுக்கு தமிழை  கிரகித்தலில் பிரச்சனைகள்  ஏதும் இருக்கின்றதா ?. அரசாங்கம், அதிகமாக என்பன எனது கருத்தின் முக்கிய வார்த்தைகள்( Key words) ஆகும்

ஓம்... எனக்கு கிரகித்தல்லை  பிரச்சனை இருக்கு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.