Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2022 at 07:33, விளங்க நினைப்பவன் said:

கோஷான் சே சொன்னதால் உங்களது பயண கட்டுரை கண்டேன் nice   கொரோனா கட்டுபாடுகள் எப்போது எடுப்பார்கள் என்று பார்த்திருந்து இலங்கைக்கு பறந்திருக்கிறீர்கள்

உண்மைதான்.. எனது தந்தை சில வருடங்களாக கேட்டுக்கொண்டிருந்த விடயங்களை நிறைவேற்ற, COVID கட்டுப்பாடுகள் எடுத்த உடனே பறந்து போய் வேலையை முடித்து ஒரு மாதம் நின்று விட்டு வந்துவிட்டேன்😊

இப்பொழுது நிலமை சரியாக இல்லாதநிலையை பார்க்கும் பொழுது நல்லகாலம் போய் வேலையை முடித்து கொடுத்தமையால் ஒரு மன அமைதி இருந்தாலும் சிலவற்றை யோசிக்கும் பொழுது கவலைப்படுவதும் உண்டு..

அங்கே உள்ளவர்களில் கல்வியை கற்று இரண்டு degree இருந்தாலும் அதற்கேற்ற வேலை இல்லை.. இன்னும் சிலர் O/L படிப்பையே நிறுத்துகிறார்கள்..

 பலவிதமான கோலங்களில் அங்கே உள்ள சமுதாயம் வளர்ந்து வருகிறது.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • 4 months later...
  • Replies 92
  • Views 8.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    அரிவிவெட்டுக்கு வன்னேரிக்கு போன பொழுது, அங்குள்ள வன்னேரிக்குளமும் அதன் அருகே ஆள் அரவமற்று இருக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விடுதி ஒன்றும்!   அங்கே பூவரசைப் பார்த்து ஒரு பரவசம்..சிறுவ

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    ஒரு இரவுப்பொழுதில் ஆரியகுளத்திற்கு ஒரு நடை!! யாருமற்ற அந்த இரவு நேரத்தில் மணிக்கூட்டு கோபுரத்தை காவல் செய்யும் இந்த மூன்றுமன்னர்களுடன் ஒரு பொழுது!!! உன்னதமான ஊடக சுதந்திரத்திற்கா

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    யாழ்ப்பாண ஆஸ்பத்திரியை மேம்படுத்தும் நோக்கில் கட்டப்படும் கட்டடங்களையும் பார்த்துக்கொண்டு மண்டைதீவு வழியால் சென்ற பொழுது மண்டைதீவில் ஆஸ்பத்திரி கட்டும் யாழ் இணைய திரி ஒன்றும் நினைவில் வந்து போனது!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2022 at 06:00, ரதி said:

ஏதாவது புத்தக கடைக்கு போயிருந்தீர்களா?...ஏதாவது புது நூல்கள் வந்திருக்கா ?  
 
ரதி.. எதிர்பாராத விதமாக இந்த ஆடிக் கடைசியில் யாழ்ப்பாணம் போயிருந்தேன். அப்பொழுது எனக்கு கிடைத்த ஒரு சிறிய இடைவெளியில் நான் போன இடம் இந்தப் புத்தகசாலைதான்(குயின்சி புத்தக சாலை- KKS வீதியில் உள்ளது)

48485010-4-A1-D-425-B-9508-685-F5-B5-E45

உங்களது ரசனை எனக்கு தெரியாது ஆனால் வெளிநாட்டில் இருந்து எழுதும் தமிழ் எழுத்தாளர்கள் தொடங்கி, உள்ளூர் எழுத்தாளர்கள், வேற்று மொழி எழுத்தாளர்களின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்கள்(தமிழ் மொழி பெயர்ப்பு), வேற்று மொழியில் பலராலும் போற்றப்பட்ட நூல்களின் தமிழ் மொழி பெயர்ப்புகள் என நிறைய உள்ளது. என்னைப் பொறுத்த வரை, இப்போதைக்கு இது நல்லதொரு புத்தகசாலை. 

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி சகோதரி..........!  👍

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

large.248A52E2-B722-48FF-B76F-BF2533BD4E06.jpeg.e22f6ad49dee1fc15eb0fab764bfe01a.jpeg

ஆலமர நிழலில் இளைப்பாற இம்முறை புத்தனை முந்திவிட்ட சித்தன் சிவன்…

நான் அறிய இந்த இடத்தில் எந்த சிலையும் இருந்ததில்லை. இம்முறை கண்டதால் ஒரு ஆச்சரியம்.. 

  • கருத்துக்கள உறவுகள்

"புத்தனை முந்தி விட்ட சிவன்" நல்லாயிருக்கு........!   👍

  • கருத்துக்கள உறவுகள்

யார் மக்களுக்கு முதலில் அருள் புரிவது என்று கடவுள்மார்களுக்கு  போட்டி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

large.9BE98BF2-F09D-4A1A-BBD7-5267AA65A325.jpeg.035d04efef038027eb0b4f58dc68bc35.jpeg

அலரி மலரும் ஆயுதமும் அருகருகே…பார்வைக்கு மட்டும்..

  • இணையவன் changed the title to இரண்டு வருடங்களின் பின் தொடரும் பயணங்களும் நினைவில் நின்றவைகளும்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

large.DB8B79D5-E4C9-4AA7-9DDF-F3910274A948.jpeg.2d25ca9dd06225e91b1b75cd7fd02113.jpeg

பொல்லாத மனிதர்களிடமிருந்து ஒதுங்கி தனித்திருக்கும் மரமும் மாதாவும் தான் ஒருவருக்கொருவர் துணை…

யாழ் மாவட்டம் எத்தனை அழகிய கடற்கரைகளை உடையது என்பதற்கு இந்த இடமும் ஒரு உதாரணம்.. 

எத்தனை அழகான அமைதியான இடம்.. 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

large.DB8B79D5-E4C9-4AA7-9DDF-F3910274A948.jpeg.2d25ca9dd06225e91b1b75cd7fd02113.jpeg

பொல்லாத மனிதர்களிடமிருந்து ஒதுங்கி தனித்திருக்கும் மரமும் மாதாவும் தான் ஒருவருக்கொருவர் துணை…

யாழ் மாவட்டம் எத்தனை அழகிய கடற்கரைகளை உடையது என்பதற்கு இந்த இடமும் ஒரு உதாரணம்.. 

எத்தனை அழகான அமைதியான இடம்.. 

இது எந்த இடம் பிரபா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/2/2023 at 02:23, ஈழப்பிரியன் said:

இது எந்த இடம் பிரபா.

தாளையடி அங்கிள்.. அந்த நீலக்கடலும் அலைகளும்.. தென்னை மரங்களும்.. மனதிற்கு சந்தோஷத்தை தரும். வேறு வசதிகள் இல்லை.. ஆனாலும் இந்த இடம், அதன் அமைதி என்னை மீண்டும் மீண்டும் அங்கே போக வைக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

தாளையடி அங்கிள்.. அந்த நீலக்கடலும் அலைகளும்.. தென்னை மரங்களும்.. மனதிற்கு சந்தோஷத்தை தரும். வேறு வசதிகள் இல்லை.. ஆனாலும் இந்த இடம், அதன் அமைதி என்னை மீண்டும் மீண்டும் அங்கே போக வைக்கிறது. 

தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2023 at 20:20, பிரபா சிதம்பரநாதன் said:

large.DB8B79D5-E4C9-4AA7-9DDF-F3910274A948.jpeg.2d25ca9dd06225e91b1b75cd7fd02113.jpeg

பொல்லாத மனிதர்களிடமிருந்து ஒதுங்கி தனித்திருக்கும் மரமும் மாதாவும் தான் ஒருவருக்கொருவர் துணை…

யாழ் மாவட்டம் எத்தனை அழகிய கடற்கரைகளை உடையது என்பதற்கு இந்த இடமும் ஒரு உதாரணம்.. 

எத்தனை அழகான அமைதியான இடம்.. 

மரங்களைச் சுற்றி சீமந்து/தார் போடுவது நீண்டகால நோக்கில் அவற்றிற்கு நன்மை செய்யுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2023 at 02:53, ஏராளன் said:

மரங்களைச் சுற்றி சீமந்து/தார் போடுவது நீண்டகால நோக்கில் அவற்றிற்கு நன்மை செய்யுமா?

மரத்தை வெட்டுவதை விட இப்படி போட்டுள்ளது பரவாயில்லை என்றே நினைக்கிறேன்

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_5267.jpeg.add2347ff7a69a9a8804b66cc2408741.jpeg

யாழ் மாவட்டத்தில் இந்தப் பழைய காவல் அரன் போன்ற கோபுரம் எங்கே உள்ளது எனக் கூறுங்கள் பார்ப்போம்..

இந்த முறை போன பொழுது இந்த இடத்திற்குப் போக முடிந்தது. இங்கே நின்றிருந்த நேரம் முழுவதும் இனம்புரியாத கவலை மனதில் எழுந்ததை மறுக்க முடியாது. 

மிகவும் பின்தங்கிய இடமாக மாறிவிட்டது ஆனாலும் எங்களது வரலாற்றில் முக்கியமான கடற்கரைகளில் இதுவும் ஒன்று. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

large.IMG_5267.jpeg.add2347ff7a69a9a8804b66cc2408741.jpeg

யாழ் மாவட்டத்தில் இந்தப் பழைய காவல் அரன் போன்ற கோபுரம் எங்கே உள்ளது எனக் கூறுங்கள் பார்ப்போம்..

இந்த முறை போன பொழுது இந்த இடத்திற்குப் போக முடிந்தது. இங்கே நின்றிருந்த நேரம் முழுவதும் இனம்புரியாத கவலை மனதில் எழுந்ததை மறுக்க முடியாது. 

மிகவும் பின்தங்கிய இடமாக மாறிவிட்டது ஆனாலும் எங்களது வரலாற்றில் முக்கியமான கடற்கரைகளில் இதுவும் ஒன்று. 

என்ன தங்கச்சி அடிக்கடி காணாமல் போகிறீர்கள்?

பழைய வெளிச்சவீடு என்று எண்ணுகிறேன்.

ஊர்காவற்துறையாக இருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2023 at 15:23, ஈழப்பிரியன் said:

இது எந்த இடம் பிரபா.

இந்த இடத்தை கூகிளில் தேடிபிடித்து படம் போட்டு ராஜவன்னியன் அண்ணா  நாலு பக்கம் ஓடினவர் .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

யாழ் மாவட்டத்தில் இந்தப் பழைய காவல் அரன் போன்ற கோபுரம் எங்கே உள்ளது எனக் கூறுங்கள் பார்ப்போம்..

பெருமாள் கொசுறு தகவல் தந்தும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை நீங்களே சொல்லிவிடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

கோவளம் வெளிச்ச வீடு (கோபுரம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன தங்கச்சி அடிக்கடி காணாமல் போகிறீர்கள்?

பழைய வெளிச்சவீடு என்று எண்ணுகிறேன்.

ஊர்காவற்துறையாக இருக்குமோ?

காணாமல் போகவில்லை. இடையிடை வருகிறனான்.

ஆனால் எங்களது அலுவலகத்தில் எனது பகுதி offshore போகிறது அதனால் கொஞ்சம் வேலைப்பளு, அத்துடன் தந்தையின் உடல்நிலை மற்றும் எனது தனிப்பட்ட project ஒன்றும் நிறைவடையாமல் இழுத்தடித்துக் கொண்டு போனதால் ஒரு சலிப்பு 😒

இந்தக் கோபுரம் வடமராச்சியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளது🤔

21 hours ago, பெருமாள் said:

இந்த இடத்தை கூகிளில் தேடிபிடித்து படம் போட்டு ராஜவன்னியன் அண்ணா  நாலு பக்கம் ஓடினவர் .

அப்படியா?? ஆனால் நான் கூகிளில் எடுக்கவில்லை😀. புகைப்படம் எடுப்பது எனது பொழுதுபோக்கு.. 

13 hours ago, நிலாமதி said:

கோவளம் வெளிச்ச வீடு (கோபுரம்)

 கோவளம் கடற்கரையில் வெளிச்சக்கூடு இல்லை

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விளங்க நினைப்பவன் said:

பெருமாள் கொசுறு தகவல் தந்தும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை நீங்களே சொல்லிவிடுங்கோ.

நானும் ஒரு தகவலை தருகிறேன். 

வன்னிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் நுழைவு வாயிலாக இருக்கும் 4 ஊர்களில் இதைப் போல காவல் அரண்களை கட்டியுள்ளார்கள். பூநகரி அதில் ஒன்று. மிகுதி 3 ஊர்களில் ஒன்றில் இந்தக் காவல் அரண் உள்ளது. 

எங்களது வரலாற்றில் முக்கியமான இடம்😁

Edited by பிரபா சிதம்பரநாதன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருதங்கேணி 😎

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2023 at 14:01, பிரபா சிதம்பரநாதன் said:

large.IMG_5267.jpeg.add2347ff7a69a9a8804b66cc2408741.jpeg

யாழ் மாவட்டத்தில் இந்தப் பழைய காவல் அரன் போன்ற கோபுரம் எங்கே உள்ளது எனக் கூறுங்கள் பார்ப்போம்..

இந்த முறை போன பொழுது இந்த இடத்திற்குப் போக முடிந்தது. இங்கே நின்றிருந்த நேரம் முழுவதும் இனம்புரியாத கவலை மனதில் எழுந்ததை மறுக்க முடியாது. 

மிகவும் பின்தங்கிய இடமாக மாறிவிட்டது ஆனாலும் எங்களது வரலாற்றில் முக்கியமான கடற்கரைகளில் இதுவும் ஒன்று. 

வெற்றிலைக்கேணிக்கும் ஆழியவளைக்கும் எல்லையாக அமைந்து இருப்பது இந்த வெளிச்ச வீடு  இதனை அங்குள்ளவர்கள் கோரி என்றும் அழைப்பார்கள். போத்துக்கேயரால் 18ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. நீங்கள் குறிப்பிடுவதுபோல் இது முக்கியமான இடமும்கூட.... அருமையான பயணங்களும் நினைவு..... உங்களுடன் நானும் பயணித்திருந்தது போல இருந்தது.   

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நானும் ஒரு தகவலை தருகிறேன். 

வன்னிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் நுழைவு வாயிலாக இருக்கும் 4 ஊர்களில் இதைப் போல காவல் அரண்களை கட்டியுள்ளார்கள். பூநகரி அதில் ஒன்று. மிகுதி 3 ஊர்களில் ஒன்றில் இந்தக் காவல் அரண் உள்ளது. 

எங்களது வரலாற்றில் முக்கியமான இடம்😁

தகவலுக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழரசு said:

வெற்றிலைக்கேணிக்கும் ஆழியவளைக்கும் எல்லையாக அமைந்து இருப்பது இந்த வெளிச்ச வீடு  இதனை அங்குள்ளவர்கள் கோரி என்றும் அழைப்பார்கள். போத்துக்கேயரால் 18ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. நீங்கள் குறிப்பிடுவதுபோல் இது முக்கியமான இடமும்கூட.... அருமையான பயணங்களும் நினைவு..... உங்களுடன் நானும் பயணித்திருந்தது போல இருந்தது.   

மிக்க நன்றி.

இது வெற்றிலைக்கேணியில் உள்ளது. 

பாழடைந்த நிலையில் உள்ளது. 

அந்த இடத்தில் நிற்கும் பொழுது எல்லாவற்றையும் நினைத்து பெருமூச்சு ஒன்று எழுவதை தடுக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

மிக்க நன்றி.

இது வெற்றிலைக்கேணியில் உள்ளது. 

பாழடைந்த நிலையில் உள்ளது. 

அந்த இடத்தில் நிற்கும் பொழுது எல்லாவற்றையும் நினைத்து பெருமூச்சு ஒன்று எழுவதை தடுக்க முடியவில்லை.

பல நினைவுகள் வந்து போகிறது அதேசமயம் ஆழ்மனசு ஆறாத ரணமாக இருக்கிறது 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.