Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மரக்கறி கூழ் அல்லது சூப் ..

Featured Replies

இரண்டு வாரங்களுக்கு முன் திங்கள் காலை எழும்பி உடல் எடை எவ்வளவு உள்ளது என்று பார்த்தால் இரண்டு கிலோ கூடி 74 கிலோ வாக காட்டியது.

வார இறுதியில் நல்லா சாப்பிட்டு விட்டேன் என நினைத்து தொடர்ந்து சில நாட்களுக்கு மரக்கறி தான் என்று முடிவெடுத்து இந்த மரக்கறி கூழை செய்துள்ளேன்.

செய்முறை வலு சிம்பிள்.

கீரை (Spinach), புரக்கோலி (broccoli), கரட், முட்டைகோவா, பீற்றூட், காளான், Basil இலை,செலரி (celery) ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டி, பின் அவற்றுடன் சிவத்த கடலை (Red beans), இளம் சோழம் (baby corn) கலந்து crock pot எனப்படும் மெதுவாக சமைக்கும் (slow cooker) இல் போட்ட பின் ஒரு லீட்டர் சோடியம்/ உப்பு கலக்காத மரக்கறி broth இனை விட்டு 8 மணித்தியாலங்கள் வேக வைத்து இந்த கூழை செய்துள்ளேன்.

இரவு குக்கரை போட்டு விட்டு காலை எழும்பி வரும் போது எல்லாம் நன்றாக வேகி மிகுந்த சுவையுடன் கூழ் தயராகி இருந்தது.

பிள்ளைகளும் விரும்பி உண்டனர். மூன்று நாட்கள் மதிய உணவாக இதை மட்டுமே உண்டேன்.

இந்த திங்கள் எடையை அளக்கும் போது 3 கிலோ குறைந்து இருந்தது.

அடுத்த முறை இவற்றுடன் பாண் துகள்களும் (bread scrums) மிளகுத் தூளும் கலந்து செய்ய நினைத்துள்ளேன்.

20220120_212751.jpg

20220121_140253.jpg

Edited by நிழலி
ஒரு மரக்கறி சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்

இதை அப்படியே  கிறைண்டரில்  போட்டு  அரைத்தும்  குடிக்கலாம்  ராசா

நாம  இதையெல்லாம்  கரைச்சுக்குடிச்சு😜  காய்ந்து🤣  வந்து கன  காலம்

நிறையை  கரைப்பது எம் போன்ற ரோசக்காறர்களுக்கு😜  சின்ன  விடயம்

அதை மீண்டும்  முருக்கமரத்தில் ஏறாமல்  பார்ப்பது   தான்  சவால்???

Edited by விசுகு

  • தொடங்கியவர்
23 hours ago, விசுகு said:

அதை மீண்டும்  முருக்கமரத்தில் ஏறாமல்  பார்ப்பது   தான்  சவால்???

ஒவ்வொரு வார இறுதியிலும் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிடும் 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, விசுகு said:

இதை அப்படியே  கிறைண்டரில்  போட்டு  அரைத்தும்  குடிக்கலாம்  ராசா

நாம  இதையெல்லாம்  கரைச்சுக்குடிச்சு😜  காய்ந்து🤣  வந்து கன  காலம்

நிறையை  கரைப்பது எம் போன்ற ரோசக்காறர்களுக்கு😜  சின்ன  விடயம்

அதை மீண்டும்  முருக்கமரத்தில் ஏறாமல்  பார்ப்பது   தான்  சவால்???

இங்கு வெள்ளைக்காரன்  கடந்தவார  களோபரம் கொத்தமல்லி தழை யூஸ் பார்த்துக்கொண்டு இருக்க கொழுப்பு கரையுதாம் .

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இப்படியே செய்து கொஞ்சம் தூளும் போட்டு சாம்பாறாக்கிவிடுவோம்.

தனியே இதை மட்டும் குடித்தால் ஒரு மணி நேரத்தில் ஆளை கொல்லும் பசி வந்திடுமே?

செய்முறைக்கு பாராட்டுக்கள் நிழலி.

  • தொடங்கியவர்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

நாங்கள் இப்படியே செய்து கொஞ்சம் தூளும் போட்டு சாம்பாறாக்கிவிடுவோம்.

தனியே இதை மட்டும் குடித்தால் ஒரு மணி நேரத்தில் ஆளை கொல்லும் பசி வந்திடுமே?

செய்முறைக்கு பாராட்டுக்கள் நிழலி.

கிரைண்டரில் போட்டு அரைத்தால் அரை மணித்தியாலத்தில் பசி வந்துவிடும் என்றுதான் மரக்கறிகளை வேக வைத்த நிலையிலேயே சாப்பிடுகின்றேன். ஒரு 3 மணித்தியாலங்களுக்கு தாக்குப் பிடிக்கும்.

  • தொடங்கியவர்

என் சின்ன வயதில் எங்கள் ஊரில் இருக்கும் போது, சிவக்கொழுந்து என்று ஒரு அப்பு இருந்தார். மெலிந்த உலர்ந்த தேகம், ஒட்டி உலர்ந்த வயிறு. காற்றடித்தாலே பறந்து போய் விடுவாரோ என்று அஞ்சக்கூடிய உடலமைப்பு. தட்டத் தனியாக ஒரு மரங்களுடனான காணியில் குடிசை போட்டு வாழ்ந்து கொண்டு இருந்தார். 

என்னை எல்லோரும் சிவக்கொழுந்து அப்பு என்றும் ஒரு பட்டம் வைத்து கூப்பிடுவார்கள். அவ்வளவு மெலிவு நான்.வயிறு ஒட்டிப் போய் இருக்கும்.இடுப்பளவே 24 இஞ்ச் தான்.  ஆரு நக்கல் அடித்தாலும் பரவாயில்லை, நான் விரும்பிய என் மச்சாளே கோபம் வந்தால், "ஏய் சிவக்கொழுந்து" என்று என்னை நக்கல் அடிப்பாள். கண்ணீர் முட்ட வந்து நிற்கும்.

ஆனால் இப்ப... நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு, கொழுத்து.. என்ன செய்தால், எதை உண்டால் உடம்பு மெலியலாம் என்று ஒரே யோசனை. அப்ப சிவக்கொழுந்து என்று நக்கல் அடிச்சதுக்கு கவலைப்பட்டது போய், இப்ப அப்படி வருவதற்கு ஆசைப்படுகின்றது மனம்.

எப்படி இருந்தனீ ஏன் இப்படி கொழுத்து போய்ட்டாய் என்று மச்சாள் அப்படியே யூ டேர்ன் அடிக்கும் நிலையை என்னவென்பது.

  • கருத்துக்கள உறவுகள்

மெலியிறத்துக்கு மரக்கறி சூப் நல்லதுதான்.....ஆனால் பசி அடங்குவதற்கு ஒரு கோப்பை சோறு சாப்பிடவேணும்........!  😁

  • கருத்துக்கள உறவுகள்

ஒரேயடியாக உடம்பை டயட்டில் போடாமல் கிழமையில் ஒரு  நாள் விரும்பியதை சாப்பிட்டால் அவா  அடங்கி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, நிழலி said:

நானும்  எல்லா  அவதாரமும்  எடுத்து  விட்டேன்🤣

சிறு  வயதில் மிகவும்  ஒல்லியாக  இருப்பேன்

இவனுக்கு  வயத்துக்குள்ள  கறையான் இருக்குதாக்கும்  (கனக்க  சாப்பிட்டும்  ஒன்றும் இல்லாததால)

என்றும்  பெயரெடுத்துள்ளேன்

இப்ப கறையானை  நானே  கூப்பிட்டு  உள்ள விடலாமா  என்று  யோசிக்கின்றேன்😂

ஆனால் நான் அனுப்புகிற ஊத்துகிறதை  பார்த்தா  கறையானே ஓடிடும்??😂

  • தொடங்கியவர்
8 minutes ago, nunavilan said:

ஒரேயடியாக உடம்பை டயட்டில் போடாமல் கிழமையில் ஒரு  நாள் விரும்பியதை சாப்பிட்டால் அவா  அடங்கி விடும்.

ஒரு நாள் எல்லாம் சரிப்பட்டு வராது... கிழமையில் 2.5 நாட்கள் விரும்பியதை சாப்பிடுகின்றேன்😂.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎01‎-‎02‎-‎2022 at 16:05, நிழலி said:

இரண்டு வாரங்களுக்கு முன் திங்கள் காலை எழும்பி உடல் எடை எவ்வளவு உள்ளது என்று பார்த்தால் இரண்டு கிலோ கூடி 74 கிலோ வாக காட்டியது.

வார இறுதியில் நல்லா சாப்பிட்டு விட்டேன் என நினைத்து தொடர்ந்து சில நாட்களுக்கு மரக்கறி தான் என்று முடிவெடுத்து இந்த மரக்கறி கூழை செய்துள்ளேன்.

செய்முறை வலு சிம்பிள்.

கீரை (Spinach), புரக்கோலி (broccoli), கரட், முட்டைகோவா, பீற்றூட், காளான், Basil இலை,செலரி (celery) ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டி, பின் அவற்றுடன் சிவத்த கடலை (Red beans), இளம் சோழம் (baby corn) கலந்து crock pot எனப்படும் மெதுவாக சமைக்கும் (slow cooker) இல் போட்ட பின் ஒரு லீட்டர் சோடியம்/ உப்பு கலக்காத மரக்கறி broth இனை விட்டு 8 மணித்தியாலங்கள் வேக வைத்து இந்த கூழை செய்துள்ளேன்.

இரவு குக்கரை போட்டு விட்டு காலை எழும்பி வரும் போது எல்லாம் நன்றாக வேகி மிகுந்த சுவையுடன் கூழ் தயராகி இருந்தது.

பிள்ளைகளும் விரும்பி உண்டனர். மூன்று நாட்கள் மதிய உணவாக இதை மட்டுமே உண்டேன்.

இந்த திங்கள் எடையை அளக்கும் போது 3 கிலோ குறைந்து இருந்தது.

அடுத்த முறை இவற்றுடன் பாண் துகள்களும் (bread scrums) மிளகுத் தூளும் கலந்து செய்ய நினைத்துள்ளேன்.

20220120_212751.jpg

20220121_140253.jpg

slow குக்கர்  அதிக கரெண்ட் இழுக்காதோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

slow குக்கர்  அதிக கரெண்ட் இழுக்காதோ?

வைரலாகப் பரவும் ”ஸ்லோ குக்கர்” சமையல்!

வைரலாகப் பரவும் ”ஸ்லோ குக்கர்” சமையல்!

ஸ்லோ குக்கர்'  மூலம் சமைக்கப்படும் உணவுகளில் பயன்படுத்தப்படும் காய்கறிகள், மற்றும் இறைச்சிகளிலுள்ள சத்துக்கள் அப்படியே  கிடைக்கிறது என தெரியவந்துள்ளது. குறைவான உணவை உட்கொண்டு அதன் மூலம் அதிக சத்துக்களை பெறும் உணவு முறைகளில் ஸ்லோ குக்கர் செய்முறைகளையே அதிகம் பரிந்துரை செய்கின்றனர். ஆனால் இன்னும் கோயம்புத்தூர் தொழில் அதிபர்களின் கண்களில் படாத காரணத்தாலே என்னவோ ஸ்லோ குக்கர் விலை நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகாத வகையில் உள்ளது. இருப்பதிலேயே விலைக்குறைவான 'ஸ்லோ குக்கர்' நான்காயிரத்துக்கு விற்கிறது. ஆனால் நம் வீட்டிலுள்ள இன்டக்சன், மைக்ரோவேவ் அவன் போன்றவற்றுடன் ஒப்பிட்டால் பல மடங்கு குறைவான  மின்சாரமே தேவைப்படுகிறது. உடல்நலத்துக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்கிற எண்ணமுள்ளவர்கள் இந்த அடுப்பை வாங்கலாம்.

ஸ்லோ குக்கரின் மூலம் செய்யப்படும் ஆட்டு எலும்புச்சாறு (போன் ப்ராத்)  பல்வேறு பயன்களை கொண்டுள்ளது. நம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் இதிலுள்ள சத்துக்கள் வெகுவாக பயன்படுகின்றன. எலும்புகளை இணைக்கும் மூட்டுக்களுக்கு, ரத்தத்தை சுத்திகரிக்கும் ஈரலுக்கு, ரத்தம் உற்பத்தியாகும் எலும்பு மஜ்ஜைகளுக்கு, உணவை செரிமானம் செய்து சத்துக்களை பிரிக்கும் குடலுக்கு என எலும்பு சாறு கொடுக்கும் பயன்கள் அலாதியானவை. ஆட்டுக்கறியை விட குறைவான விலையில் கிடைக்கும் ஆட்டு எலும்புகளை கொண்டு ஸ்லோ குக்கரில் சாறு செய்யும் வெகு சிம்பிள் ரெசிப்பி  இதோ-

1/4 கிலோ ஆட்டு எலும்பு

சின்ன வெங்காயம் - 10  ( சின்ன வெங்காயம் என்றால் 10 பெரிய வெங்காயம் என்றால் ஒன்று போதும் )

பூண்டு      - 5  (பெரிய பல்)

தக்காளி  - 2 ( அரிந்து கொள்ளவும் ) 

மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

மல்லித்தழை - சிறிதளவு

உப்பு -  அரை தேக்கரண்டி போதும்

இவற்றை ஸ்லோ குக்கருடன் வரும் கல்லால் ஆன பாத்திரத்தில் இட்டு நீர் ஊற்றவேண்டும். சரியாக எலும்புகள் மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றுவதுதான் போதுமான அளவு. லோ - ஹை - வார்ம் ஆகிய மூன்று ஆப்ஷன்களில் லோ ஆப்ஷனில் 8 மணி நேரம் வைக்க வேண்டும்.  

எட்டு மணி நேரம் கழித்து அப்படியே எடுத்து நன்றாக வடிகட்ட வேண்டும். வெந்த எலும்புகளும் மற்றவையும் இனி தேவையில்லை. இப்போது சுத்தமான எலும்புச்சாறு ரெடி. நன்றாக மூடக்கூடிய பாட்டிலில் மூடி பிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். தினமும் 200 மிலி குடித்து வந்தால் மிகவும் நல்லது. தேவைப்பட்டால் சூடுபடுத்தி மிளகு தூவி குடிக்கலாம்.  

ஆர்த்தட்டிஸ் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு அதற்கனெ எடுக்கும் மருந்துகள் கொடுக்கும் பயனை விட அதிக பயன் கொடுக்ககூடியது இந்த எலும்புச்சாறு. காய்கறிகளில் இருந்து கிடைக்கும் கால்சியம் நமது உடலில் சேர்வதில்லை. அவை நமது உடலால் செரிக்க முடியாமல் வெளியேறிவிடுகின்றன. ஆனால் இறைச்சிகளில் இருந்து கிடைக்கும் கால்சியமானது நம் உடலில் இணைந்து விடுகின்றன. காரணம் அவை ஏற்கனவே வேறொரு உடலில் ஏற்கும்படி மாற்றப்பட்டுவிட்டவை. எனவே கால்சியம் குறைபாடு போக்கவும், சீரண உறுப்புகள் சீராக இயங்கவும் இந்த எலும்புச்சாறு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. 

ஸ்லோ குக்கர் என்னிடம் இல்லையே அல்லது இப்போதைக்கு வாங்க முடியாதே என்கிறீர்களா? உங்களுக்கென்றே இருக்கிறது ஒரு அதர் ஆப்ஷன். உங்களின் இன்டக்‌ஷன் அடுப்பையே ஸ்லோ குக்கராக மாற்றலாம். இப்போது வரும் செகன்ட் ஜெனரேஷன் இன்டக்‌ஷன்கள் எவ்வளவு டிகிரி வைக்கவேண்டுமோ அதை டிஸ்ப்ளையில் தெரியும் வகையில்தான் வருகின்றன. எனவே இருப்பதில் குறைவான அளவு ( 50 வாட்ஸ் முதல் 80 வரைதான் வைக்க வேண்டும்) வைத்து தண்ணீர் அளவை மட்டும் 300 மிலி சேர்த்து ஊற்றி வைத்துவிடலாம். கால அளவு இதிலும் அதே 8 மணி நேரத்தை மெயின்டெயின் செய்ய வேண்டும். இடையில் அவ்வப்போது பார்த்து தண்ணீர்  சுண்டி இருந்தால் ஊற்ற வேண்டும். அவ்வளவுதான்!

2 hours ago, ரதி said:

slow குக்கர்  அதிக கரெண்ட் இழுக்காதோ?

மற்றையதை விட மின்சக்தி  மலிவானது சிலோ குக்கர் என்கிறார்கள் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு விருப்பமானதை விரும்பின நேரத்திலை எப்பவும் அளவோடை சாப்பிடுவன். அதாலை சாப்பாட்டு விசயத்திலை எந்தப்பிரச்சனையுமில்லை.வயித்துக்கு வஞ்சகம் செய்யிறதுமில்லை...

காய்ஞ்ச மாடு கம்பிலை விழுந்தமாதிரி அமுக்கிப்போட்டு அடுத்த நாள் சாம்பாரை அரைச்சுக் குடிக்க எனக்கென்ன விசரே? 😎

4 hours ago, ரதி said:

slow குக்கர்  அதிக கரெண்ட் இழுக்காதோ?

கசவாரங்கள்,நப்பியளை பாத்திருக்கிறன்.....ஆனால் இப்பிடியொரு....... ஓ மை காட்...😷

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2022 at 22:59, suvy said:

மெலியிறத்துக்கு மரக்கறி சூப் நல்லதுதான்.....ஆனால் பசி அடங்குவதற்கு ஒரு கோப்பை சோறு சாப்பிடவேணும்........!  😁

சோறு தான் முக்கியம் அமைச்சரே சோறு இல்லையே  நாம் காலி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.