Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று முதல், மின்வெட்டு – வெளியானது திடீர் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gurugram: People run out of patience due to frequent power cuts at Sushant  Lok

இன்று முதல், மின்வெட்டு – வெளியானது திடீர் அறிவிப்பு!

நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர மின் துண்டிப்பும், மாலை 6.30 முதல் இரவு 10.30 மணிவரை 45 நிமிடமும் இன்று முதல் அமுலாகும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நேர அளவு நாளாந்த நிலைமையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1267700

Edited by தமிழ் சிறி

  • Replies 70
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

4.49-5.52 வரை இப்ப தான் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

எப்பொழுதும்
தமிழரை  எப்படி  அழிக்கலாம்
தமிழர்  நிலத்தை  எப்படி  அபகரிக்கலாம்
தமிழர் முன்னேற்றத்தை எப்படி ஒடுக்கலாம்........
என்ற சிந்தனை திட்டங்கள்  தவிர...
வேறு முன்னேற்றகரமான திட்டமிடல்கள் மக்கள்  சேவைகள்???????

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

4.49-5.52 வரை இப்ப தான் வந்தது.

இங்கை வன்னியில் நீங்கள் சொன்ன நேரமும் பின் இரவு 8.30 இல் இருந்த 9.15 வரை மீன்டும் மின் வெட்டு இடம் பெற்றுள்ளது.😟

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, சுவைப்பிரியன் said:

இங்கை வன்னியில் நீங்கள் சொன்ன நேரமும் பின் இரவு 8.30 இல் இருந்த 9.15 வரை மீன்டும் மின் வெட்டு இடம் பெற்றுள்ளது.😟

ஓ, ஊருக்கு வந்துவிட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் மின்சாரம், முக்கிய பொருளாதார தட்டுப்பாட்டில் இருந்து மீண்டானாங்கள், அவர்களும் கொஞ்சம் அனுபவித்து தங்கள் அனுபவங்களை பிரதிபலிக்கட்டுமே. 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

ஓ, ஊருக்கு வந்துவிட்டீர்களா?

இப்ப கொஞ்ச நாளா இங்கை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சைக் காலத்திலும் மின்வெட்டா.. இப்போ உயர்தரப் பரீட்சை நடக்கிறதாமே.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

எப்பொழுதும்
தமிழரை  எப்படி  அழிக்கலாம்
தமிழர்  நிலத்தை  எப்படி  அபகரிக்கலாம்
தமிழர் முன்னேற்றத்தை எப்படி ஒடுக்கலாம்........
என்ற சிந்தனை திட்டங்கள்  தவிர...
வேறு முன்னேற்றகரமான திட்டமிடல்கள் மக்கள்  சேவைகள்???????

தமிழர் நிலமா.. அப்படி ஒன்று இருக்கா.. என்று கேட்கும் அளவுக்கு புத்தர் எங்கும் வியாபித்துவிட்டார். மேலும்.. தமிழர் பகுதிகளில்.. சிங்கள இராணுவம் வீடு சாறி மாளிகை கட்டி நிரந்தரமாக் குடியிருக்குது.

இதைப்பற்றி எல்லாம் இப்ப எங்க அரசியல் வியாதிகள் மூச்சும் விடுவதில்லை. சிறிதரன் மட்டும் சொல்லுறார்.. தென்னிலங்கையை விட வடக்குக் கிழக்கில் இராணுவ பிரசன்னம் மிக அதிகம் என்று.

எங்கட சனம்.. பல வகை இராணுவ ஒட்டுக்குழு அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்து பழகின சனம் என்ற படியால்.. சமாளிச்சுக் கொண்டு போகுதுகள் என்று தான் சொல்லனும். தமிழன் தக்கனப் பிழைப்பான். 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

எங்கட சனம்.. பல வகை இராணுவ ஒட்டுக்குழு அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்து பழகின சனம் என்ற படியால்.. சமாளிச்சுக் கொண்டு போகுதுகள் என்று தான் சொல்லனும். தமிழன் தக்கனப் பிழைப்பான். 

சொல்லியும் ஏதும் நடக்கப்போவதில்லை. கேட்பவர்களுக்கு எது நிகழும் என்று ஒரு உறவு இங்கு  சவால் விட்டிருந்தாரே  பாக்கவில்லையா! எங்கட சனம் அப்படியே இருந்து கேட்ப்பாறற்று மடிந்து போக வேண்டும்.  புலம்பெயர்ந்தவர்கள் யாரும் புலம்ப கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றிலிருந்து அண்ணளவாக 2.30 மணி நேரம் மின்வெட்டு நடைமுறைக்கு வந்துவிட்டது. இரவு 7.43 நின்று இரவு 10.15 வரை மின்வெட்டு இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 23/02 மதியம் 12.30-2.30 வரையும் இரவு 7-9.30 வரையும் மின்வெட்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பாடு திண்டாட்டம் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பாடு திண்டாட்டம் தான்.

பனை ஓலை, விசிறி இருக்குத் தானே….
வாங்கி, விசிறிக் கொண்டு இருக்க….
கை   “மசில்ஸும்,  மொத்தமாய் வரும்.
ஒரு கல்லிலை… இரண்டு  “மாங்கோ” 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

பனை ஓலை, விசிறி இருக்குத் தானே….
வாங்கி, விசிறிக் கொண்டு இருக்க….
கை   “மசில்ஸும்,  மொத்தமாய் வரும்.
ஒரு கல்லிலை… இரண்டு  “மாங்கோ” 😂

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை “வா” என்று அழைத்துவிட்டு, இப்படி விசிறியை கொடுப்பது நியாயமா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, MEERA said:

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை “வா” என்று அழைத்துவிட்டு, இப்படி விசிறியை கொடுப்பது நியாயமா? 😂

எப்பொழுதும்  அப்படித்தானே  செய்கிறார்கள்

என்ன இப்ப தெரிகிற  மாதிரி வந்திட்டுது???🤣

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கும் 24/02 மதியம் 12.30-2.30 வரையும் இரவு 7-9.30 வரையும் மின்வெட்டாம்.😢

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஏராளன் said:

நாளைக்கும் 24/02 மதியம் 12.30-2.30 வரையும் இரவு 7-9.30 வரையும் மின்வெட்டாம்.😢

 

சேடம் இழுக்க  தொடங்கிட்டது என்று  அர்த்தம்???😡

  • கருத்துக்கள உறவுகள்
On 23/2/2022 at 21:50, விசுகு said:

 

சேடம் இழுக்க  தொடங்கிட்டது என்று  அர்த்தம்???😡

சே.. இது யார் சொன்ன கதை? அப்பிடி ஒரு பிரச்சனையுமில்லை.  இந்தியா கையில வைச்சு தாங்கு தாங்கென்று தாங்குது இலங்கையை. தனியானவர் வந்து இதற்கு விளக்கம் தருமாறு வினயமாக வேண்டுகிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
On 23/2/2022 at 15:45, ஏராளன் said:

நாளைக்கும் 24/02 மதியம் 12.30-2.30 வரையும் இரவு 7-9.30 வரையும் மின்வெட்டாம்.😢

இல்லத்தரசிகள் சின்ன திரை சீரியல் பார்க்கும் நேரமா போட்டு தாக்குகினம் ..

போகட்டும் காலையில் சட்னி சாம்பார் வைக்க மிக்சி கிரைண்டர் ஓட விட கொடுக்கினமே சந்தோச படுவோம் தோழர்..👍

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் 25/02/2022 மதியம் 11.15am - 2pm வரையும் மாலை 4.45pm - 7.15pm வரையும் மின் தடை ஏற்பட்டது.
நாளையும் 26/02/2022 மதியம் 11am - 1.30pm வரை மின் தடை ஏற்படும் என தெரியவருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தினசரி மின்வெட்டு ஆனால் திருமலை நகரப்பகுதியில் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2022 at 07:31, satan said:

சே.. இது யார் சொன்ன கதை? அப்பிடி ஒரு பிரச்சனையுமில்லை.  இந்தியா கையில வைச்சு தாங்கு தாங்கென்று தாங்குது இலங்கையை. தனியானவர் வந்து இதற்கு விளக்கம் தருமாறு வினயமாக வேண்டுகிறேன்!

இன்றை வரைக்குமாக எங்க ஊரில் மின் வெட்டு இல்லை இதை நான் சொன்னால் நம்பமாட்டீர்கள் இலங்கை முழுமையாக மின் தடைப்படும் போது உங்க ஊர்ல மட்டும் மின்சாரம் என கேட்பீங்க. 

நம்மவர்கள் முதலீட்டுக்கும் மாற்றினத்தவர் முதலீட்டுக்குமான வித்தியாசமானது அது. நம்மவர்கள் வெளிநாட்டில் உள்ள பணக்காரர்கள் முதலிடுவது கல்யாண மண்டபமும்,ஏசி பூட்டிய தியேட்டர்,ஹோட்டல் இதுவும் பயன்படுகிறது வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.ஆனால் அத்தியாவசியமான சேவைக்குள் அடங்காதவை

மாற்று இனத்தவரோ உமியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து இலங்கை மின்சார சபைக்கு வழங்க அது எமது மக்களுக்கும் கிடைக்கிறது🤓🤓😎

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மதியம் 11am -1.30pm வரை மின்தடை இருந்தது.
நாளை மின்தடை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நாளையும் எமது பகுதியில் 28/02/2022 மதியம் 11.15am - 2pm வரையும் இரவு 7.15pm - 9.15pm வரையும் மின் தடை ஏற்படும் என தெரியவருகிறது.

இன்று முழு நாளும் மின்தடை ஏற்படவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.